Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ கோரிக்கையை சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும்கைவிட்டிருந்தனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு காரர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் தடவைகளை விட வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களை சந்திப்பது ஏனுங்க?.

புலம் பெயர் தமிழர்களின் ரத்த உறவுகள் தான் தமிழீழத்தில் வாழ்பவர்கள். பண உதவி முதற்கொண்டு பலவற்றை செய்கிறார்கள்.கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர் பலத்தை காட்டுங்கள் என எனது பெற்றோரை அன்பாக கேட்டது போல் நிச்சயமாக ஏனையோரும் கேட்டிருப்பார்கள். சொல்லி இருப்பார்கள். அம்மக்களுக்கு ஒரு பாதகமான முடிவை கேட்டிருப்பார்களா?

ஒரு முடிவை திணிப்பதற்கும் அன்பாக கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?

இது கூட்டமைப்பு எல்லோரையும் ஒற்றுமையாக கொண்டு செல்ல விரும்புவதின் அடையாளம். புலம் பெயர் மக்கள் உட்ப்ட. சங்கரியையும் சித்தரையும் சேர்த்தவர்கள் உங்களையா வெட்டி விடப்போகிறார்கள்?

ஆனால் நீங்கள் நடைமுறைசாத்தியமில்லாத கோரிக்கைகளை வைக்கும் போது நிலத்தலைமைகள் ஆமாம் சாமி போட முடியாது.

வாஸ்தவமான வார்த்தைகள். நிலத்து மக்கள் மீது கண்மூடித்தனமான அன்பு தேவையில்லை.

அவர்களும் மனிதர்களே, அவர்களும் இனமானம் உடையோரே, அவர்களும் புத்திசாலிகளே, அவர்களும் சரியான தலைவர்களை தெரிவுசெய்யுமளவுக்கு அரசியல் ஞானம் உடையவரே எனறு புரிந்து அவர்களிற்கு என்ன வேண்டும் எனறு அவர்களையும் அவர்களின் தலைமையையும் மதிக்க கர்ருக்கொண்டலே போதும்.

அவர்களை ஏதோ எமது அசையா சொத்துக்கல் போல பாவித்து, நமது கனவை அவர்கள்

செத்து பெற்றுத்தர வேண்டும் என்று அதிர்பார்க்க கூடாது. எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும். ஒரு மலையாலியாள் இவ்வலவுதான் முடியும். :)

Dash அண்ணா கேட்கும் போது  சாமான்ய தமிழன் என்று கூறி விட்டு இப்பொழுது மலையாளி என ஒப்புக்கொள்கிறீர்கள். :o

தேவையற்ற விதண்டாவாதம் செய்வது எனது நோக்கமல்ல. தமிழீழம் என்பது எமது எல்லோருடைய அதி உன்னத விருப்பம் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் தற்போதைய நிலையில் அதை நினைத்து கூட பார்க்க முடியாத அதல பாதாளத்தில் நாம் இருப்பதை கள உறவுகள் சிலர் ஏன் விளங்கிகொள்ள மறுக்கிறார்கள். தற்போது எந்த பேரம்பேசும் பலமும் இல்லாத நிலையில் சர்வதேசத்தை அனுசரித்தே எமது கோரிக்கைகளை வெற்றி கொள்ள முடியும் என்ற நிலையில் அவர்களுடன் ராஜதந்திர ஈதியில் தொடர்புகள் நல்லுறவுகளை வளர்த்து எம்மால் பெறக்கூடியதற்போதை நிலையில் சாத்தியாமான அனுகூலங்கள்  அனைத்தையும் சிங்கள அரசிடம் இருந்து பெற்று அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதே நம்முன்னால் உள்ள தெரிவு.இவ்விடயம் மிக தெளிவாக கறுப்பு வெள்ளையாக எல்லோருக்கும்  தெரிந்து விடயம் .இதை புரிந்து கொள்ள பெரிய அரசியல் அறிவு தேவையில்லை. தமிழீழத்திற்காக அத்திவாரத்தை நாம் போடுவோம்  தமிழீழத்தை அடுத்த சந்ததி பார்க்கட்டும் என்று விடுதலை புலிகள் நினைத்து தமது வேலைதிட்டங்களை நகர்த்தியிருந்தால் இன்று நிலைமேயே வேறாக இருந்திருக்கும். எண்ணற்ற மனித உயிர்கள் காப்பாற்றபட்டிருப்பதோடு, விடுதலை புலிகளின் திறமையான தளபதிகள், மற்றும் புலிகளின் தொழில்நுட்ப, பொருளாதார வல்லுனர்கள் இன்று எமக்கு தலைமை தாங்கும் பெருமையான நிலையில் நாம் வாழ்ந்திருக்போம். 

கள உறவுகளே உங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்கையில் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் எவ்வாறு உங்களுக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்பதை பலர் அனுபவரீதியாக உணர்ந்திருப்பீர்கள். இதே போல தானே இனம் அல்லது நாடு சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளும் அமைகின்றன.  இங்கு கூட்டமைப்பையோ,சீமானிலோ அவதூறு தெரிவிப்பது அர்த்தமற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

Dash அண்ணா கேட்கும் போது சாமான்ய தமிழன் என்று கூறி விட்டு இப்பொழுது மலையாளி என ஒப்புக்கொள்கிறீர்கள். :o

விடுங்க துளசி,

500 வருடங்களுக்கு முதல் அவர்களும் தமிழ் சேரர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் எந்த ஒரு கட்டத்திலும் தமிழீழத்தைக் கைவிடவில்லை. அதேவேளை தமிழீழத்திற்கான மாற்று வழித்தடத்தில்.. தமிழ் மக்கள் தாம் விரும்பும் வடிவில் உரிமை பெற்று வாழத்தக்க வழிமுறைகளையும் புலிகள் சர்வதேசத்தின் முன் காட்டாமலும் விடேல்ல..! அதற்காக அவர்கள் தமிழீழத்தை கைவிட்டு விட்டதாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. மேலும்.. புலிகள் ஒருபோதும் சிங்களவர்களுக்கு பயந்து.. தமிழீழத்தைக் கைவிடேல்ல. ஆனால் இன்று சுமந்திரனும்.. சம்பந்தனும்.. சிங்களக் கொடியை தூக்கிப் பிடிப்பதும்.. சிங்கள கிரிக்கெட் அணியோடு மட்டைப்பந்தாடுவதும்.. தமிழீழத்தை கைவிட்டிட்டம்.. மாகாண சபைகள் போதும் என்பது போல.. புலிகள் ஒன்றையும் எப்போதும் செய்ததில்லை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக்கோரிக்கையைக் கைவிட வேண்டும் என இந்தியா வற்புறுத்தியபடியால் தான் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கையளிக்க முன்வரவில்லை என்பதுதான் உண்மை.

தினக்கதிர் ஆசிரியர் அடிக்கடி கட்டுரை எழுத வெளிக்கிட்டு சறுக்கி விழுகின்றார்.
 
விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தான் தான் உருவாக்கினேன் என்றும் கூறுவார். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்பது இப்போதைக்குச் சாத்தியமா என்பதற்கும், அது எமக்கு அவசியம்தானா என்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பது யதார்த்தாமானாலும் கூட அதை அடைவதைத்தவிர வேறு வழியும் எமக்கு இருக்கப்போவதில்லை. தமிழீழம் சாத்தியமில்லை என்று எப்போது எண்ணத் தொடங்குகிறோமோ அன்றைக்கே அதை அடைவதற்கான செயற்பாடுகளையும் கைவிட்டு விடுகிறோம். தமிழீழம் நோக்கிய எமது பயணத்தில் இப்போதைக்கு தடங்கல்கள் வந்திருக்கலாம். ஆனால் பயணம் நின்றுவிடக்கூடாது. மாகாணசபை கூட எமது பயணத்தின் ஒரு படிக்காட்டாகத்தான் இருக்க வேண்டும்.

புலத்திலிருப்பவர்களுக்கும் தாயகத்திலிருப்பவர்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை, புலத்திலிருப்பவர்கள் பேசத் தேவையில்லை என்கிற வாதம் மிகவும் ஆபத்தானது. எம்மை அடக்கியாளும் பேரினவாதம் எதிர்பார்ப்பதும் இதைத்தான். தாயகத்தில் சுதந்திரம் மறுக்கப்பட்டு தினம் தினம் ஆக்கிரமிப்பிற்குள் வாழ்ந்துவரும் எமது மக்களின் குரல் வெளியே வரக்கூடாது என்பதில் பேரினவாதம் மிகத் தெளிவாக இருக்கிறது. சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளின் வருகைகளின்போதும்கூட எம்மக்கள் கடுமையான கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுகிறார்கள். ஆக தாயகத்தில் நடக்கும் கொடுமைகளை வெளியே கொண்டுவந்து சர்வதேசத்தின் பார்வையை எம்மீது திருப்ப வைத்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே. இன்னும் சொல்லப்போனால் இனி உங்களால் எதுவுமே செய்யமுடியாது, உங்களின் தலமையை அழித்து உங்களை முற்றாக அடிமைகளாக்கியிருக்கிறோம் என்ற சிங்களத்தின் அடாவடித்தனத்தின் முன்னால், எங்களை வாழவிட்டாலே போதும் என்று அடங்கியிருந்த தாயகத்தமிழினம் இன்று தலை நிமிர்ந்திருப்பதுகூட புலத்தில் நடந்துவரும் செயற்பாடுகளால்த்தான் என்றால் அது மிகையாகாது. தாயகத்தின் எழுச்சிக்கு புலம்பெயர் தமிழனின் செயற்பாடு மிகவும் அவசியமானது. அதேபோல தாயகத்தில் எடுக்கப்படும் அரசியல் என்பது புலம்பெயர் தமிழன் ஒவ்வொருவனதும் வாழ்வுடனும்  சம்பந்தப்பட்டது. ஏனென்றால் நாங்கள் வானத்திலிருந்து குத்தித்து "புலம்பெயர் தமிழர்" என்கிற முத்திரையை வலுக்கட்டாயமாக குத்திக்கொண்டவர்கள் அல்லர். மாறாக சிங்களப் பேரினவாதத்தின் நேரடி அடக்குமுறைக்கு முகம்கொடுத்து தயாகத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் அல்லது தாமாக வெளியேறியவர்கள். ஆகவே புலம்பெயர் தமிழன் பேசக்கூடாது என்கிற நிலைப்பாடு நிச்சயம் பேரினவாதத்தின் நலன் சார்ந்து பார்க்கப்படவேண்டியது.

நாங்கள் பணம் அனுப்புகிறோம், நீங்கள் போராடுங்கள் என்று யாரும் கூறவில்லை. எந்தவைகையான போராட்டம் என்பது தருணத்திற்கேற்பவும், நடக்கும் அடக்குமுறைக்கேற்பவும் தாயகத்துத் தமிழனால் எடுக்கப்பட வேண்டிய முடிவு. அதற்காகப் போராடாமல் விடுங்கள் என்றோ, அல்லது புலம்பெயர் தமிழரின் அறிவுரை வேண்டாமென்பதோ ஆரோக்கியமானதல்ல. தாயகத்துத் தமிழனின் எந்தவித போராட்டத்திற்குமான ஆதரவு புலம்பெயர் தமிழனிடமிருந்தே வரவேண்டும். அப்போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி வியாப்பிக்க வைக்கும் பொறுப்பு அவர்களுடையதே. புலம்பெயர் தமிழனின் ஆதரவில்லாமல் தாயகத்து மக்களின் எந்தவித போராட்டமும் வெற்றியளிக்கப்போவதில்லை.

வெறும் மாகாணசபை எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கப்போவதில்லை. அது பிராந்திய ஏகாதிபத்தியவாதத்தினதும், சிங்களப் பேரினவாதத்தினதும் திட்டமிட்ட உலகை ஏமாற்றும் பொம்மை. ஆனால் அதில் கூறப்பட்ட விடயங்களை அமுல்ப்படுத்துவதற்கே சிங்களம் தயாரில்லை. அதை அமுல்ப்படுத்துங்கள் என்று கேட்கும் தேவைகூட இந்தியாவுக்கு இல்லை. இப்படியான ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு எப்படி தாயகத் தமிழனின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கப்போகிறீர்கள்.

எமது உரிமை என்பது எம்மை ஆக்கிரமித்து நிற்பவன் தானாகப் பார்த்து எமக்குத் தருவதல்ல, மாறாக நாம் எமக்கு எடுத்துக்கொள்வது. புலம்பெயர் தமிழன் பேசக்கூடாதென்பதும், ஆக்கிரமிப்பாளன் தானாகத் தருவதை வாங்கிக்கொள்ளுங்கள் என்பதும் வருவது ஒரே இடத்திலிருந்துதான். 

மது உரிமை என்பது எம்மை ஆக்கிரமித்து நிற்பவன் தானாகப் பார்த்து எமக்குத் தருவதல்ல, மாறாக நாம் எமக்கு எடுத்துக்கொள்வது. புலம்பெயர் தமிழன் பேசக்கூடாதென்பதும், ஆக்கிரமிப்பாளன் தானாகத் தருவதை வாங்கிக்கொள்ளுங்கள் என்பதும் வருவது ஒரே இடத்திலிருந்துதான். 

நீங்கள் சொல்லாமல் விட்ட ஒரு விடயத்தையும் இங்கே சேர்க்க வேண்டும்... 

இண்டைக்கு இலங்கை பிரச்சினை சர்வதேச நிலையை அடைந்து இருப்பதின் காரணமே புலம்பெயர்ந்த சமூகம்...   இண்டைக்கு இலங்கையில் பிரச்சினைக்கு தீர்வு எனும் போக்கு காட்டும் அரசின் தேவையும் கூட  இந்த புலம்பெயர்ந்த சமூகத்தால் ஏற்படுத்த பட்டது... 

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாளாதிருந்தால்  மகிந்தவின் எண்ணம் இலகுவாக ஈடேறும் என்பதுதான் உண்மை...  

புலம்பெயர்ந்த சமூகம் தமிழீழம் கோராதிருந்தால்  இந்த மாகானசபையை கூட மகிந்த கொடுக்க முன் வந்து இருக்க மாட்டான் என்பதும்  வெறும் மாநகராட்ச்சியுடன் தீர்வு மட்டுபடுத்த பட்டு இருக்கும் என்பதும்  புரியாதவர்களோடு நேரவிரையம் தான் சாத்தியம்...

தற்பொழுது

எங்குமே

தேவையற்று

செய்பவர்களை  இழுத்துவைத்த அறுத்து

நேரவிரயமாக்குவதே எங்கும்  நடக்கிறது.

ஏதாவது செய்பவர்கள்

ஏதாவது செய்பவனைப்பார்த்து

ஒரு போதும் கை நீட்ட மாட்டார்கள்

நேரத்தின் பெறுமதியும்

செயலின் வலியும்

அதன் சுமையும்

செய்தவர்களுக்கு

செய்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்

எந்த செயலிலும் பிழைபிடித்து  வாழ்வது  என்பதும்

ஒரு மன நோய்தான்...... :(  :(  :(

இவைகள் எல்லாம் வீட்டு ஒதுக்கி அண்ணன் சீமான் வழியில் முன் நகர்வோம் இலக்கு ஒன்றே பணம் .

கூட்டமைப்பு ..புலிகள் எல்லாம் முடித்து போன கதை அண்ணன் சீமானே ஈழத்தின் விதை மண்டியிடாது மானம் இந்தியாக்கு மட்டும் குனித்து நிக்கும் வாழ்க தேசியம் .

நக்கீரன் சார்பா எழுதினா பலே மாறி எழுதினா பிழைப்புவாதம் மொத்தத்தில் ஈழ தமிழன் பாவம் :(

சும்மா கதைகளை அவித்து விடாமல் பாதிக்க பட்டவைகளின் ஆதாரங்களை கொண்டு வந்து இணையுங்கோ.... !  

இல்லை கதை தான் எண்டால் தாராளமாய் கதை கதையாம் பகுதீக்கை இணையுங்கோ படிச்சிட்டு வாழ்த்திறன்... 

சும்மா கதைகளை அவித்து விடாமல் பாதிக்க பட்டவைகளின் ஆதாரங்களை கொண்டு வந்து இணையுங்கோ.... !  

இல்லை கதை தான் எண்டால் தாராளமாய் கதை கதையாம் பகுதீக்கை இணையுங்கோ படிச்சிட்டு வாழ்த்திறன்... 

எதை இணைப்பது நீங்க எதை வைத்து அவரை ஆதரிக்கிறியல் எல்லாம் சாம்பல் மேடாகி போனபின் கையை மடக்கி வீரம் பேசி என்ன பயன் கொஞ்ச்சம் எழும்பி இருக்க விடுங்கோ மக்களை மூச்சு விட சிறிது நேரம் கொடுங்கோ முத்துக்குமார் தனது உடலில் தீ மூட்டித்தான் ஒரு இனத்தை எழுப்ப முடிச்சுது அவனும் தனை அழிக்கா விட்டால் எவரும் வந்திருக்க மாட்டினம் இறையாண்மை பேசி ஒரு கரையா போய் இருப்பினம் எங்களுக்கு நாங்களே எவனையும் நம்பி நாங்க ஆயுதம் ஏந்தவில்லை அண்ணன் கட்டி எழுப்பிய போராட்டம் எங்களின் தியாங்களும் அர்ப்பணிப்புகளுடன் சொல்லனா துன்பங்களுடன் வளர்த்த போராட்டம் நேற்று வந்தவன் போனவன் எல்லாம் எங்களை வழிநடத்த நாங்க ஒன்னும் நடிகன் கட்டவுடுக்கு பால் ஊற்றி சூடம் காட்டியவர்கள் அல்ல இரத்தமும் சதையும் பார்த்து வந்தவர்கள் நீங்க தேசியவதியா இருந்துட்டு போங்க எனக்கு என் தலைவனும் மாவீரருமே வழிகாட்டி வேறு எவனும் கொப்பன் கிடையாது அவனுகள் பெற்று தருவார்கள் என் பின்னாடி போகவும் மாட்டன்.

தமிழீழத்திற்கான பயணம் நிற்க போவதில்லை.

அதை கைவிட சொல்ல ஒருத்தருக்கும் இங்கு உரிமை இல்லை.

42,000 இரத்தங்கள் எழும்பி வந்து சொன்னாலே ஒழிய வேறு முகம் காட்ட பயப்படும் ஒருத்தராலும் முடியாது.

மற்றும் போர் வந்தால் தான் மக்கள் இறப்பார்கள் என்று வேறு சுழல் பிரச்சாரம்.

காணாமல் போதல், தூக்கில் போடுதல், வற்புறுத்தி கருத்தடை செய்தல் என்று கொலைகள் தொடர்கிறது அதை பற்றி போலி சேகுவாத்துகள் கதைப்பதில்லை.

இவர்களின் குறி புலம்பெயர் ஈழ ஆதரவாளரை செயலிழக்க செய்தல், தமிழீழ கொடி, கொள்கையை சிதைத்தல்.

இந்த சிறி லங்கா, இத்தாலிய கொங்கிரஸ் பருப்பெல்லாம் வேகாது.

எப்படியோ சாக போறவன் ஈழத்தில் உள்ளவன் தானே நமக்கு என்ன நாங்க நல்லா எண்ணை ஊற்று கொளுத்தி அவிப்பம் வேகாட்டி கருகிபோகடும் நமக்கு என்ன .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ கோரிக்கையை விட்டால் மட்டும் சாவு வராதா?

வெளிநாடுகளிலும் சிறைக்கு சென்று வாடுகிறார்கள், சிறி லங்கா பயங்கரவாதிகளால் வெளிநாட்டு ஆதரவாளர்கள் கொல்ல படவில்லையோ?

எதோ ஒன்றரை இலட்சம் தமிழரை கொன்றவனுக்கு வட்டிலப்பம் சுட்டு கொடுத்து நீங்கள் கொழும்பில் ஹாயா வாழ்ந்தால் சரி. அதற்கு முக்கி முறிகிறீர்கள். உங்களுக்கு அடிமை புத்தி இருந்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

சிறி லங்கா கொலைகாரரின் காலில் நீங்கள் விழுந்து உருண்டு எழும்புவதால் நாங்களும் அப்படியெல்லாம் செய்ய தேவையில்லை.

அடிமைப் புத்தி இல்லையாயின் ஊரில் இருந்தே போராடி இருப்பீர்கள் இப்படி ஓடி வந்து இருக்க மாட்டீர்கள்

அடிமைப் புத்தி இல்லையாயின் ஊரில் இருந்தே போராடி இருப்பீர்கள் இப்படி ஓடி வந்து இருக்க மாட்டீர்கள்

அடிமைப் புத்தியுள்ள்வர்கள் தப்பியும் ஓடுவார்களா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......புதுமை தான் அது.!

தமிழீழ கோரிக்கையை விட்டால் மட்டும் சாவு வராதா?

வெளிநாடுகளிலும் சிறைக்கு சென்று வாடுகிறார்கள், சிறி லங்கா பயங்கரவாதிகளால் வெளிநாட்டு ஆதரவாளர்கள் கொல்ல படவில்லையோ?

எதோ ஒன்றரை இலட்சம் தமிழரை கொன்றவனுக்கு வட்டிலப்பம் சுட்டு கொடுத்து நீங்கள் கொழும்பில் ஹாயா வாழ்ந்தால் சரி. அதற்கு முக்கி முறிகிறீர்கள். உங்களுக்கு அடிமை புத்தி இருந்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

சிறி லங்கா கொலைகாரரின் காலில் நீங்கள் விழுந்து உருண்டு எழும்புவதால் நாங்களும் அப்படியெல்லாம் செய்ய தேவையில்லை.

நீங்கள் பார்த்திங்களா அப்பம் சுட்டதை அல்லது நீங்கதான் முள்ளிவாய்க்காலில் அண்ணையை காப்பற்றி கொண்டுவந்தநியலா இங்கின கதைப்பதன் ஒரு வீதம் செயலில் செய்தது இருப்பியலா 80 வீத நிலமும் எமக்கான நிழல் அரசும் இருந்த போது நீங்க எல்லாம் எங்க போனியல் தேசியம் பேசி பிரபாகரன் விசுவாசியா காட்டி வாழவேண்டிய அவசியம் இல்லை பாருங்கோ இதை எல்லாம் வேலை வெட்டிக்கு போகாமல் சும்மா ஊர் காசில வாழ்றவன் செய்யகிற வேலை அண்ணை வருவார் காசுதங்கோ அடிக்கணும் காசுதங்கோ என்பது முதல் அநாதரவா விடபட்டு உள்ள முன்னாள் போராளிகள் மக்களின் வாழ்க்கை அவர்களின் இயல்வுக்கு எதாவது பண்ணுங்க அப்புறம் அண்ணை வர நீங்க எல்லாம் வெளிகிட்டு போகலாம் வன்னிக்கு கணனியில் பொங்கி நாடு பிடிக்காமல் ஆக்க பூர்வமா மக்களுக்கு செய்யுங்கோ .

எதை இணைப்பது நீங்க எதை வைத்து அவரை ஆதரிக்கிறியல் எல்லாம் சாம்பல் மேடாகி போனபின் கையை மடக்கி வீரம் பேசி என்ன பயன் கொஞ்ச்சம் எழும்பி இருக்க விடுங்கோ மக்களை மூச்சு விட சிறிது நேரம் கொடுங்கோ முத்துக்குமார் தனது உடலில் தீ மூட்டித்தான் ஒரு இனத்தை எழுப்ப முடிச்சுது அவனும் தனை அழிக்கா விட்டால் எவரும் வந்திருக்க மாட்டினம் இறையாண்மை பேசி ஒரு கரையா போய் இருப்பினம் எங்களுக்கு நாங்களே எவனையும் நம்பி நாங்க ஆயுதம் ஏந்தவில்லை அண்ணன் கட்டி எழுப்பிய போராட்டம் எங்களின் தியாங்களும் அர்ப்பணிப்புகளுடன் சொல்லனா துன்பங்களுடன் வளர்த்த போராட்டம் நேற்று வந்தவன் போனவன் எல்லாம் எங்களை வழிநடத்த நாங்க ஒன்னும் நடிகன் கட்டவுடுக்கு பால் ஊற்றி சூடம் காட்டியவர்கள் அல்ல இரத்தமும் சதையும் பார்த்து வந்தவர்கள் நீங்க தேசியவதியா இருந்துட்டு போங்க எனக்கு என் தலைவனும் மாவீரருமே வழிகாட்டி வேறு எவனும் கொப்பன் கிடையாது அவனுகள் பெற்று தருவார்கள் என் பின்னாடி போகவும் மாட்டன்.

வன்னியிலை பாதிக்கப்பட்டது எனது உறவுகளும் தான்...  இங்கு வசதியாக வாழ்ந்த பலர் சொந்தங்களை காக்க காசுகளை அனுப்பி கடன்காறராய்  இங்கு   இருக்கிறார்கள்...     இவைகளை சொன்னால் உங்களை போண்றவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது... 

ஈழத்தில் பாதிக்கப்படுவது ஈழத்தமிழன்.... இதிலை யாருக்கும் சீமான் சொந்தக்காறன் கிடையாது...  எங்களுக்கு குரல் கொடுக்க வேண்டிய எந்த கடமையும் கிடையாது...  காசுக்காகவாவது சீமான் குரல் கொடுக்கிறாரே எனும் எண்ணம் தான் எனக்கு மேலோங்குகிறது... 

காசுக்காக தான் சீமான் குரல் கொடுக்கிறார் எண்று உங்கள் தரப்பால் சொல்லப்பட்டமைக்கு நீங்கள் ஆதாரத்தை இணைத்தால் மகிழ்ச்சி...   ஈழத்தமிழன்  சீமானிடம் கடமைப்படவில்லை  அதற்கான கூலியை வழங்குகின்றோம் எண்று நிம்மதியடைய முடியும்...   

இல்லை எண்றால் செய் நண்றி மறந்த உங்களுக்காக எல்லாம் வருத்த பட மட்டும் தான் முடியும்... 

Edited by தயா

சிறி லங்கன் சவுண்ட் செக் வன்....டு....த்ரீ....

ஹெலோ... மைக் செக்...

ஒரு சிறி லங்கன் பல்குழல் பீரங்கி முழங்கியது.... இப்போது காணவில்லை.

தெரிந்தது போல் பேசுவார்கள். கேள்வி கேட்டால் படலையை பிச்சு கொண்டு ஓடிவிடுவார்கள்.

ஆக சீமான் மட்டுமே குரல் கொடுத்தார் அவர் என்ன செய்தார் நாங்கள் நன்றி மறக்க எதுவும் செய்யவில்லை அதனால் அவருக்கு நன்றியுடன் இருக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை .

நாங்க ஊதுகுழல் நீங்க பிரேங்கி குழல் ஈழத்தை இருந்து பிடியுங்கோ இதல இருந்தா நமக்கு கஞ்ச்சி யாரு தராது உங்களுக்கு பிழைக்க வலி இருக்கு நமக்கு நாம உழைச்சாத்தான் உண்டு அதல வேலைக்கு போயிட்டன் பாருங்கோ .

நாங்க இங்கின வாறது பொழுது போக உங்க கதைகளை பாருத்து கொஞ்சநேரம் சிரிக்கலாம் எல்லா அறிவாளிகளும் போராட்ட வீர்களும் உள்ள இடம் அசத்தபோவது யாரு நல்ல கூட்டணி நிங்க சிரிச்சு முடில

வன்னியிலை பாதிக்கப்பட்டது எனது உறவுகளும் தான்...  இங்கு வசதியாக வாழ்ந்த பலர் சொந்தங்களை காக்க காசுகளை அனுப்பி கடன்காறராய்  இங்கு   இருக்கிறார்கள்...     இவைகளை சொன்னால் உங்களை போண்றவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது... 

ஈழத்தில் பாதிக்கப்படுவது ஈழத்தமிழன்.... இதிலை யாருக்கும் சீமான் சொந்தக்காறன் கிடையாது...  எங்களுக்கு குரல் கொடுக்க வேண்டிய எந்த கடமையும் கிடையாது...  காசுக்காகவாவது சீமான் குரல் கொடுக்கிறாரே எனும் எண்ணம் தான் எனக்கு மேலோங்குகிறது... 

காசுக்காக தான் சீமான் குரல் கொடுக்கிறார் எண்று உங்கள் தரப்பால் சொல்லப்பட்டமைக்கு நீங்கள் ஆதாரத்தை இணைத்தால் மகிழ்ச்சி...   ஈழத்தமிழன்  சீமானிடம் கடமைப்படவில்லை  அதற்கான கூலியை வழங்குகின்றோம் எண்று நிம்மதியடைய முடியும்...   

இல்லை எண்றால் செய் நண்றி மறந்த உங்களுக்காக எல்லாம் வருத்த பட மட்டும் தான் முடியும்... 

நீங்க எல்லாம் கேள்வி கேட்பவை துரோகி அவன் ஆள் இவன் ஆள் என்று சொல்லும்போது என்ன ஆதாரம் வைத்து சொல்லுறியள் அண்ணே நீங்க உண்மையில் புலியாலா எப்படி நம்புறது கருணா கேபி எல்லாம் மாறும்போது நீங்க எப்படி விசுவாசி என்று நம்புறது என்ன ஆதாரம் இருக்கு சொல்லுங்க .

இங்கின தேசியம் பேசுறது சுகம் லாக் பண்ணிட்டு போனா நிங்க யாரோ நான் யாரோ இணைய உலகு மாயை இங்க சொல்வதும் பேசுவதும் நடந்து விடாது .

நான் யாரை துரோகி எண்டனா...??    

யாழில் நான் எழுதினவைகள் அப்படியே தான் இருக்கு முதலிலை அதை எனக்கு காட்டும் தம்பி...

பிறகு உமது மொக்கையை போடலாம்... 

கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு சிரியுங்கோ!

நீங்கள் என்ன ஈழ மக்களுக்காக செய்தீர்கள்?

அது என் மக்களுக்கும் மண்ணுக்கும் செய்ததை இங்க சொல்லி பெருமை தேடும் அவசியம் இல்லை நான் என்ன செய்தேன் என எனக்கு தெரிந்தால் போதும் நான் நானாகவே இருக்குறேன் என் தேசியமும் என் தலைவனும் ஒருவரா இருக்கும் வரை .

பிறப்பில் இருந்து வெளியேறும் வரை வன்னிமண்ணில் வாழ்த்த பெருமை போதும் எனக்கு ரானுவக்கட்டுபாடு என்பது என்ன வென்று தெரியாது அது போதும் .

நான் யாரை துரோகி எண்டனா...??    

யாழில் நான் எழுதினவைகள் அப்படியே தான் இருக்கு முதலிலை அதை எனக்கு காட்டும் தம்பி...

பிறகு உமது மொக்கையை போடலாம்... 

கேபி பற்றி எழுதியதுக்கு பூனை வெளியில் தெரியுது என சொன்னவர் நீங்கள் ஒரு கிழமை பின்னாடி போங்க .

கேபி பற்றி எழுதியதுக்கு பூனை வெளியில் தெரியுது என சொன்னவர் நீங்கள் ஒரு கிழமை பின்னாடி போங்க .

புலிகள் மீதான காள்புணர்விலை புலம்பெயர் புலிகள் எண்று சொன்ன சொல்லை...   உங்களின் குணம் வெளியில் தெரிகிறது எனும் அடிப்படையிலை சொல்லப்பட்டது... 

தொப்பி அளவாக இருந்த போது நீங்களாக போட்டு கொண்டால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல...  

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், on 01 Oct 2013 - 08:28 AM, said:

நீங்கள் பார்த்திங்களா அப்பம் சுட்டதை அல்லது நீங்கதான் முள்ளிவாய்க்காலில் அண்ணையை காப்பற்றி கொண்டுவந்தநியலா இங்கின கதைப்பதன் ஒரு வீதம் செயலில் செய்தது இருப்பியலா 80 வீத நிலமும் எமக்கான நிழல் அரசும் இருந்த போது நீங்க எல்லாம் எங்க போனியல் தேசியம் பேசி பிரபாகரன் விசுவாசியா காட்டி வாழவேண்டிய அவசியம் இல்லை பாருங்கோ இதை எல்லாம் வேலை வெட்டிக்கு போகாமல் சும்மா ஊர் காசில வாழ்றவன் செய்யகிற வேலை அண்ணை வருவார் காசுதங்கோ அடிக்கணும் காசுதங்கோ என்பது முதல் அநாதரவா விடபட்டு உள்ள முன்னாள் போராளிகள் மக்களின் வாழ்க்கை அவர்களின் இயல்வுக்கு எதாவது பண்ணுங்க அப்புறம் அண்ணை வர நீங்க எல்லாம் வெளிகிட்டு போகலாம் வன்னிக்கு கணனியில் பொங்கி நாடு பிடிக்காமல் ஆக்க பூர்வமா மக்களுக்கு செய்யுங்கோ .

----///---------/////------------/////------------///------

நீங்கள் மூன்றாவது கருத்தில் குத்துகரணம் போடுகிறீர்கள்.

நான் சிங்கள, இந்திய, புலி இராணுவத்தின் கீழ் வாழ்ந்தவன். பல தடவை சிறி லங்கா, இந்திய துப்பாக்கி சூட்டில், எறிகணை, விமான தாக்குதலில் தப்பியவன்.

பதினொரு வயதில் கிரிகெட் விளையாடும்போது சிறி லங்கா விமானம் குண்டுபோட்டு சிதறிய என் நண்பனின் உடல் துண்டுகளை அவனின் பெற்றோர்களிடம் சேர்ந்து உர பைக்குள் அள்ளி போட்டு முன்னுக்கு இருத்தி விளையாட கூட்டி வந்தவனை சைக்கிள் கரியரில் சாக்கு மூட்டையா கொண்டு சென்றவன்.

நானும் வன்னி மண்ணில் விவசாயம் செய்தவன். எனக்கும் என் மண்ணின் மேல் உயிர் தான்.

இராணுவ கட்டுபாடோ, பிரச்சினையோ அல்லது நாட்டு நடப்போ உங்களுக்கு தெரியாமல் பிழையான பகுதியில் கருத்து போடுவதாக தெரிகிறது.

இனி உங்களது அரசியல் கருத்துகளை பார்த்து சிரித்துவிட்டு போகிறேன். நன்றி.

உங்களுக்கு உண்மையில் போராட்டத்திலும்,நாட்டிலும் பற்று இருந்தால் உங்கள் நண்பனது சிதைந்த உடலைக் கண்டதும் பயத்தில் நாட்டை விட்டு ஓடி வந்து இருக்க மட்டீர்கள்.
 
முழுமையாக உதவி செய்பவர்கள் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.உங்களை மாதிரி அரை குறையாய் செய்பவர்கள் தான் எப்ப பார்த்தாலும் நான் இது செய்தனான்.நீ என்ன செய்தாய் என்று அடுத்தவனை பார்த்துக் கேள்வி கேட்பார்கள்.
 
நீங்கள் செய்கிறதை ஒழுங்காய் செய்தால் ஏன் மற்றவரைப் பார்த்து கேள்வி கேட்கப் போறீர்கள்

சபாஷ் ரதி இதை கேட்டா நாங்க துரோகியாம் இது இவர்களின் வழமையான சொல்லாடல் .

அஞ்சரன், on 01 Oct 2013 - 08:28 AM, said:

நீங்கள் பார்த்திங்களா அப்பம் சுட்டதை அல்லது நீங்கதான் முள்ளிவாய்க்காலில் அண்ணையை காப்பற்றி கொண்டுவந்தநியலா இங்கின கதைப்பதன் ஒரு வீதம் செயலில் செய்தது இருப்பியலா 80 வீத நிலமும் எமக்கான நிழல் அரசும் இருந்த போது நீங்க எல்லாம் எங்க போனியல் தேசியம் பேசி பிரபாகரன் விசுவாசியா காட்டி வாழவேண்டிய அவசியம் இல்லை பாருங்கோ இதை எல்லாம் வேலை வெட்டிக்கு போகாமல் சும்மா ஊர் காசில வாழ்றவன் செய்யகிற வேலை அண்ணை வருவார் காசுதங்கோ அடிக்கணும் காசுதங்கோ என்பது முதல் அநாதரவா விடபட்டு உள்ள முன்னாள் போராளிகள் மக்களின் வாழ்க்கை அவர்களின் இயல்வுக்கு எதாவது பண்ணுங்க அப்புறம் அண்ணை வர நீங்க எல்லாம் வெளிகிட்டு போகலாம் வன்னிக்கு கணனியில் பொங்கி நாடு பிடிக்காமல் ஆக்க பூர்வமா மக்களுக்கு செய்யுங்கோ .

----///---------/////------------/////------------///------

நீங்கள் மூன்றாவது கருத்தில் குத்துகரணம் போடுகிறீர்கள்.

நான் சிங்கள, இந்திய, புலி இராணுவத்தின் கீழ் வாழ்ந்தவன். பல தடவை சிறி லங்கா, இந்திய துப்பாக்கி சூட்டில், எறிகணை, விமான தாக்குதலில் தப்பியவன்.

பதினொரு வயதில் கிரிகெட் விளையாடும்போது சிறி லங்கா விமானம் குண்டுபோட்டு சிதறிய என் நண்பனின் உடல் துண்டுகளை அவனின் பெற்றோர்களிடம் சேர்ந்து உர பைக்குள் அள்ளி போட்டு முன்னுக்கு இருத்தி விளையாட கூட்டி வந்தவனை சைக்கிள் கரியரில் சாக்கு மூட்டையா கொண்டு சென்றவன்.

நானும் வன்னி மண்ணில் விவசாயம் செய்தவன். எனக்கும் என் மண்ணின் மேல் உயிர் தான்.

இராணுவ கட்டுபாடோ, பிரச்சினையோ அல்லது நாட்டு நடப்போ உங்களுக்கு தெரியாமல் பிழையான பகுதியில் கருத்து போடுவதாக தெரிகிறது.

இனி உங்களது அரசியல் கருத்துகளை பார்த்து சிரித்துவிட்டு போகிறேன். நன்றி.

பிரச்சினை இதுதான் எனக்கு அரசியல் தெரியாது உண்மை நான் நடைமுறை யதார்த்தபடி வாழ்பவன் சினிமா காட்டி என்னை உயர்த்தி எனக்கு மட்டுமே நாட்டு பற்று இருக்கு நீ என்ன செய்த என கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ஏனெனில் இறுதி காலங்களில் வன்னியின் ஒட்டுமொத்த மக்களும் ஆயுதம் ஏந்தியவர்கள் என்பதை மறக்காமல் இருந்தா இந்த கேள்விகள் கேட்க மாட்டியள் புத்தியா கதைக்கிறம் பிடிகொடுக்காமல் என்று நீங்க நினைத்தா நான் பொறுப்பு அல்ல உங்களை போல நானும் வவுனிக்குளம் தேவாலைய சுப்பர் சொனிக் தாக்குதலை நேரில் பார்த்து அந்த சதைக்குவியலை அள்ளி எடுத்தவன் அன்று தோன்றியது இப்படி சாவதை விட போராடி சாகலாம் என்று அதையும் செய்து பார்த்தோம் இப்ப என் பிழைத்து இருக்குறோம் என்கிற கேள்வியே மேல் எழுகுது ஏனெனில் இங்க சீன் போடுபவன் துவக்கு சத்தம் கேட்கதவன் எல்லாம் நாங்கதான் புலி நாங்கதான் பொறுப்பு என ஐரோப்பில் பண்ணுற அலைப்பறை தாங்க முடில ஒருநாள் இடம்பெயர்வு அனுபவிக்காதவர்கள் எல்லாம் உங்களை மாதிரி ஆக்களுக்கு ஜால்ரா போடலாம் அவைகளை அனுபவித்த எங்களுக்கு உண்மையை தவிர சினிமாத்தனமா எழுதவோ பேசவோ வராது .

நிஜம் அவ்வளவு கொடுமையானது எங்களின் தேவை எல்லாம் இப்ப நாளைய சாப்பாடு என்ன என்பதே உங்களை போல இதில் தேசியமும் வீரவசனமும் உண்மை மறைத்து நாங்கள் இல்லாட்டி புலியும் இல்லை தமிழ் தேசியமும் இல்லை என்கிற நினைப்பில் வாழ வரும்பவில்லை இப்ப என்ன தேவை அதைபற்றி பேசுங்கோ பயன் உள்ளதா இருக்கும் .

புலிகள் மீதான காள்புணர்விலை புலம்பெயர் புலிகள் எண்று சொன்ன சொல்லை...   உங்களின் குணம் வெளியில் தெரிகிறது எனும் அடிப்படையிலை சொல்லப்பட்டது... 

தொப்பி அளவாக இருந்த போது நீங்களாக போட்டு கொண்டால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல...  

உங்களுக்கு நிங்களே ஒரு மாயை உருவாக்கி ஒரு வட்டமும் உருவாக்கி வைத்து இருகுறியல் இங்க இதில் நாங்கள் வந்து என்ன சொன்னாலும் அது உங்களுக்கு எதிரா தெரியும் ஏனெனில் நிங்கள் தலைவருடன் சண்டை களத்தில் நின்றவர் என்பதால் பிள்ளை பாலுக்கு அழ கொண்டை பூ கேட்ட கதையா எதாவது சொல்லிட்டு நீ அவன் ஆள் இவன் ஆள் முதல் சராசரி மனிதனா நிஜ உலகில் வாழுங்கள் அப்புறம் தேசியம் விடுதலை பற்றி பேசலாம் .இப்ப எல்லா தொப்பியும் லச்டிக் வைத்துதான் தைக்கினம் அதால அளவு ஒரு பிரச்சினை இல்லை இழுத்து போடலாம் எங்களுக்கு நாங்களே .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.