Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன் கண்ட சித்திரக்கவி

Featured Replies

தமிழன் கண்ட சித்திரக்கவி
 

TM-1.jpg

 

 

தமிழர்களது அழிந்து கொண்டுவரும் கலைகளில் ஒன்றான சித்திரக் கவி பற்றி ஆராய்வது எங்கள் முன்னே உள்ள தேவையை உணர்த்தி நிற்கின்றது . இந்த சித்திரக் கவி எப்படிப்பட்டது என்று பார்பதற்கு முதல் , சித்திரக் கவி என்றால் என்ன என்பதும் அதன் ஆதிமூலத்தையும் நாம் பார்க்க வேண்டும் .

தமிழ் மொழியில் உள்ள ஐந்து வகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றில் , அணி இலக்கணத்தை விளக்குமுகமாக எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும் . இந்தத் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் அண்ணளவாக பனிரண்டாம் நூற்றாண்டுகளாகும் ( (1133-1150) . இந்த தண்டியலங்காரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டு ( பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் ) சொல்லணியியலில் சித்திரக் கவி பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன .

எங்களால் உருவாகப்பட்ட அனைத்துக் கலை வடிவங்களுமே இலக்கியத்தை மையபடுத்தியே சுற்றிச் செல்கின்றன . எப்படி என்றால் , ஒரு இலக்கியத்தைக் கேட்பதாலும், எழுதுவதாலும், பேசுவதாலும், உணருவதாலும், காட்சியாக வரைவதாலும், காட்சியாகக் காண்பதாலும் மனித மனத்தை மகிழ்ச்சி அடையச் செய்ய இயலும் ஒரு கவிதையை இசையோடு இனிமையாகப் பாடினால் அதைக் கேட்பவர் மகிழ்ச்சி அடைகின்றார் . இதன் மூலம் இலக்கியம் இசையோடு கலந்து விடும் கலையாகி விடுகிறது.

அதேபோல் ஒரு கவிதையை அபிநயம் பிடித்து நடனம் ஆடினால், அது நாட்டியக் கலையாக அமைந்து விடுகிறது. அதே கவிதை தரும் பொருளை, இருவர் உரையாடும் நாடகக் காட்சியாக மாற்றி நடித்தால் நாடகக் கலை உருவாகி விடுகிறது. இதையே திரைப்படமாக , அசையும் படமாக , தொலைக்காட்சித் தொடராக , காட்சிப் படமாகவும் ஆக்கவும் முடியும் . இவ்வாறாக இலக்கியமானது மற்றய கலைகளுக்கு மையமாகவும், மற்ற கலைகள் இலக்கியத்தைச் சார்ந்து அமைவனவாகவும் விளங்குகின்றன.

இலக்கியத்தில் இடம் பெறும் மொழியே, சொல்லே, எழுத்தே ஓவியம் போல அமைந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அவ்வாறு எழுத்துகள் செய்யுளுக்குள்ளேயே ஓவியமாக மடங்கி நிற்கும் முறையே, அமைப்பே சித்திரகவி என்று வகைப்படுத்திக் கொள்ளலாம் .

ஒரு கவிதைக்குள் , எழுத்துகள் மடங்கி, மடங்கி நின்று ஓவியமாக அமைவதை சித்திரகவி என்று சொல்லலாம் . உதாரணமாகப் பின்வரும் பகுதியைப் பார்ப்போம் .

 

eohn.jpg

 

இந்தப் படத்திலே , "பாப்பா" என்ற சொல்லு நெடுக்கு வாட்டிலும், குறுக்கு வாட்டிலும் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட படத்தில் ஆறு இருமுனை அம்புக்குறிகள் காட்டப் பட்டுள்ளன . இதன் மூலமாக 12 முறை பாப்பா என்ற சொல்லை நீங்கள் எடுக்க முடியும். இது ஒருவகையான வடிவ விளையாட்டாகும் ஆனால் . இந்த விளையாட்டைக் கவிதைக்குள் செய்வது, சித்திரகவி எனப்படுகிறது.
 

இந்த சித்திரக் கவியின் வகைகளை இதன் ஆதி மூலமான தண்டியலங்கரத்தில் ஒரு நூற்பா வடிவத்தில் நாங்கள் காணலாம் ,

 

கோமூத் திரியே, கூட சதுக்கம்,

மாலை மாற்றே, எழுத்து வருத்தனம்,

நாக பந்தம், வினாவுத் தரமே,

காதை கரப்பே, கரந்துறைச் செய்யுள்,

சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம்,

அக்கரச் சுதகமும் அவற்றின் பால

(தண்டியலங்காரம்-97)

 

அதாவது , கோமூத்திரி , கூடச் சதுக்கம் , மாலைமாற்று , எழுத்து வருத்தனம் , நாக பந்தம் , வினாவுத்தரம் , காதை கரப்பு , கரந்துறைப்பாட்டு , சக்கர பந்தம் , சுழிகுளம் , சருப்பதோ பத்திரம் , அக்கரச் சுதகம் , என்று பன்னிரெண்டு வகைப்படும் . இந்த பன்னிரெண்டு வகையான சித்திரக் கவிகளுக்குமே விதிமுறைகள் உள்ளன . அவற்றை ஒவ்வன்றாக நாங்கள் பார்க்கலாம் .

 

01 கோமூத்திரி :

ஒரு பசுமாடு வீதியில் நடந்து செல்லும் பொழுது சிறுநீர் கழிப்பதைப் பார்த்து இருப்பீர்கள் . அந்த மாடு இயற்கையான முறையிலே சிறுநீரைக் கழித்து இருந்தால் அந்தச் சிறு நீர் வளைவு வளைவாக தரையில் பட்டிருக்கும். அதாவது மேல் மேடு ஒன்று - கீழ்ப்பள்ளம் ஒன்று என அந்த வளைவு அமையும். அதுவே இரண்டு மாடுகள் சிறுநீர் கழிப்பதாக இருந்தால் இரு எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அந்தக் கவிதையை அமைப்பது கோமூத்திரி என்னும் சித்திரகவியாகும். (கோ = பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்). கோ மூத்திரி சித்திரக் கவிதை எழுதும் பொழுது பின்வருமாறு எழுதப் படவேண்டும் .

"கவிதையின் முதலடியில் உள்ள எழுத்துகளும், இரண்டாம் அடியில் உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக அமையும் முறையில் சித்திரக்கவி எழுதப் படவேண்டும்". உதாரணமாக ,

பருவ மாகவி தோகன மாலையே

பொருவிலாவுழை மேவன கானமே - (முதல் அடி)

மருவு மாசைவி டாகன மாலையே

வெருவ லாயிழை பூவணி காலமே - (இரண்டாம் அடி)


பொருள் :

தோழி ஒருவள் தனது தலைவிக்குப் பின்வருமாறு கூறுகின்றாள் “தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம் இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன. மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள் இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால் உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே”

இதை சித்திரக் கவியாக வரைந்தால் பின்வருமாறு அமையும் ,

(1)
முதல் அடி

 

gqlc.jpg

 

இரண்டாம்அடி

 

(2)
முதல் அடி

 

gqlc.jpg

 

(3)
முதல் அடி
இரண்டாம் அடி

 

7gbj.jpg

 

02 கூடச் சதுக்கம்:

ஒரு சித்திரக் கவியில் அமைந்துள்ள கவிதையில் இறுதி அடியில் அமைந்துள்ள எழுத்துக்கள் யாவும் முன்பாக அடியில் உள்ள அடிகளில் இருந்து இயற்ரப்பட்டல் அது கூடச் சதுக்க சித்திரக் கவி என்று வரையறை செய்து கொள்ளலாம் (கூடம் = மறைவு; சதுக்கம் = மறைவான நிறைவு அடியை உடையது) உதாரணமாக ,


2 3 4 5 6 7 8 9 10 11 1
மு க ந க/ ந ட் ப து/ ந ட் பு அ ன் று/ நெ ஞ் ச த் து

அ க ந க/ ந ட் ப து/ ந ட் பு
1 2 3 4 5 6 7 8 9 10 11


இது ஒரு திருக்குறளாகும் . இந்தக் குறளில் கீழடியில் உள்ள 11 எழுத்துகளும் முன்னடியில் இருந்து பெறப்பட்ட எழுத்துகளால் இயற்றப் பட்டதாகும் .

03 மாலைமாற்று :
 

maalai%20maRRu.jpg

 

மாலை மாற்று (Palindrome) என்பது எந்தத் திசையிலிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் என்று நாங்கள் வரையறை செய்து கொள்ளலாம் . தமிழ் மொழியில் விகடகவி, திகதி, குடகு போன்ற சொற்கள் மாலை மாற்றுகள் ஆகும். உதாரணமாக ,

பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூ நீறு நாளைவா பூ


பொருள் :

தலைவியைக் கூடி மகிழ வந்த தலைவனைத் தோழி
தடுத்ததாக இப்பாடல் அமைகிறது.

“ பூப்பு அடையாதவளை அடைய விரும்பிய மேகமே ! நீ
பூமழை பொழிய வந்தாயோ ! பூவும் நீறும் கொண்டு நாளை
வா ! இன்று அவள் பூப்பு அடைந்திருக்கிறாள்.”

இப்பாடல் தலைவி கூடி மகிழும் அளவிற்கு உடல் அளவில்
உரியவளாக இல்லை. அதனை மறைமுகமாகத் தலைவனுக்கு
உணர்த்த மேகத்தை அழைத்துச் சொல்வதாகத் தோழி
பேசுகிறாள்.

இதை விட ஒரு எளிமையான பாடல் ஒன்று ,

தேரு வருதே மோரு வருமோமோரு வருமோ தேரு வருதே

பொருள் :

வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.

தமிழரின் பக்தி இலக்கியங்களில் இந்த மாலை மாற்று ஒன்று வருகின்றது . திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலை மாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன. அவற்றில் உள்ள ஒரு பாடல் இவ்வாறு சொல்கின்றது ,

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகாகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

இதன் பொருள் :

யாம் ஆமா-யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா
நீ ஆம் மாமா-நீ பெரிய ஆன்மா, பரமாத்மா
யாழ் ஈ காமா-யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே
காணாகா-இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று
காணாகா-இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று
காழீயா-சீர்காழியானே
மாமாயா நீ-அம்மை அம்மை ஆம் நீ
மாமாயா-(இப்படி) பெரிய மாயமானவனே

04 எழுத்து வருத்தனம் :

வருத்தனம் என்றால் வளருதல் என்று நாங்கள் பொருள் கொள்ளலாம் . ஒரு
கவிதையில் பல கருத்துகள் சொல்லப்பட்டதாகக் கொள்வோம். அதில் முதற்கருத்து ஒரு சொல்லின் அடிப்படையாய் அமைகிறது என்று எடுத்துக் கொண்டால், அந்தச் சொல்லில் சில எழுத்துகளை மேலும் மேலும் சேர்த்துப் பொருள் பெறுவது எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்ற சித்திரகவியாகும். இதை எளிய முறையில் சொலவதானால் ,
மதுரை என்பது ஓர் ஊரின் பெயர். அதில் ரை எழுத்து மறைந்தால் குடிக்கும் கள் கிடைக்கும். அதனோடு ந என்ற எழுத்து சேர்ந்தால் நமது என்ற உடமைச் சொல் கிடைக்கும். இவ்வகையில் கிடைத்த சொற்கள் மதுரை, மது, நமது என்பனவாகும்.

இதோ ஒரு உதாரணம் ,

"ஏந்திய வெண்படையு முன்னால் எடுத்ததுவும்
பூந்துகிலு மால்உந்தி பூத்ததுவும் - வாய்ந்த
உலைவில் எழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் தாமரையென் றாம்."


பொருள் :

திருமால் சங்கு ஆயுதத்தை உடையவர். அவர் முன்னொரு காலத்தில் கோவராத்தன மலையை கைவிரலால் தூக்கினார். அவர் பொன்னாடை அணிபவர், அவரின் தொப்புழ்க் கொடியில் பிரம்மா இருக்கிறார்.

சொல் வளருதல்:

(1) ஏந்திய வெண்படை
(திருமாலின் வெள்ளை
ஆயுதம்) கம்பு (சங்கு)

(2) (கம்பு என்பதில் ஒரு எழுத்து
நீங்க கம் (தலை) என்பது
கிடைக்கும். கம்

(3) முன்னால் எடுத்தது
(கோவர்த்தன மலையைத்
திருமால் குடையாகப்
பிடித்தார்)

(ந என்ற எழுத்து வர நகம்
(மலை) கிடைத்தது.) (ந) கம் (மலை)

(4) பூந்துகில்
(திருமால் உடுத்தும் ஆடை)
(க என்ற எழுத்து மேலும்
இணைய கநகம் (பொன்)
கிடைத்தது.) கநகம்
(பொன்னாடை)

(5) மால் உந்தி பூத்தது
(திருமால் தொப்பூழ்க்
கொடியில் தாமரை பூக்க
அதில் பிரம்மா இருப்பார்)
(கோ என்ற எழுத்து மேலும்
வர கோகநகம் (தாமரை)
கிடைத்தது.) கோகநகம் 

இதில் எழுத்து வளருதலாக வந்த தலை, மலை, பொன், தாமரை ஆகியன செய்யுளின் இறுதியடியில் சொல்லப் பெற்றுள்ளன. இறுதியடியில் சொல்லப் பெற்ற இவற்றை எழுத்தடைவாக - எழுத்துப் பெறுதலாக - எழுத்து வருத்தனமாகக் கொண்டு இங்கு நாங்கள் சித்திரகவியாகக் காண முடிகிறது.

தொடரும்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் ஒருமுறை பார்த்தவுடன் எல்லாம் குழம்பிப் போச்சு. ஆனாலும் இதுபற்றி அறிய ஆவல்கொண்டிருந்தேன்.  தமிழர்களின் அறிவும் ஆற்றலும் இப்பொழுது எங்கே என்றுதான் தெரியவில்லை. எத்தனை நுட்பமாகச் சித்திரக் கவிதை வடிக்கப்பெற்றிருக்கிறது.பகிர்தலுக்கு நன்றி.தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பழம்பெருமைவாய்ந்ததும், இலக்கியச் செழுமை கொண்டதும்,எல்லாவற்றுக்கும்வளைந்து கொடுப்பதும்,(சித்திரக்கவிமுதல் ஹைக்கூவரை),பல மொழிகளை உருவாக்குவதும்,பல மொழிகளைப்உருவாக்கினலும் தனித்தன்மையுடன்னும் இளமையுடனும் கன்னித்தமிழாக இருப்பதும்,பிறமொழிச் சொற்களை இலகுவாக உள்வாங்குவதும் ,உள்வாங்கப்பட்ட சொற்கள் தமிழ் சொற்களாகவே மாற்றமடையச் செய்யக்கூடிய வளமிக்க மொழி என்பது உண்மையிலும் உண்மை. இந்த மொழியின் சொந்தக்காரன் என்பதில் ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியின் வளமென்பது, அது எவ்வாறு வளைந்து, நெழிந்து கொடுக்கின்றது என்பதாலேயே அளவிடப்பட வேண்டும்! அவ்வாறு பார்க்கையில், தமிழைப்போல், கவிதை மொழி எங்கும் இல்லையென்றே சொல்வேன்!

 

'யாமறிந்த மொழிகளிலே 'தமிழ் மொழி' போல் இனிதாவது எங்கும் காணோம்!

 

இணைப்புக்கு நன்றிகள் கோமகன்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுக்கு ஒருத்தர் தமிழைக் கற்று அனுபவபூர்வமாக உணர்ந்து சில கவிதைகள் படைப்பது என்றால் அது ஒரு குருகுல வாசத்தால் மட்டுமே முடியலாம். அதற்கும்கூட  தக்க குருவானவர் கிடைக்கவும் வேண்டும்.

அப்படியான  குரு , மாணாக்கர்  பரம்பரைக்கு  இனிமேல் சாத்தியமா என்றால் அது துர்பலமே.

 

தமிழனாய் பிறந்ததால் பெருமையுடன்  தலை நிமிர்கிறோம்,  

தமிழை மறந்து, இழந்து வாழ்வதால் தலைகுனிகிறோம்! !

அந்தக் காலத்தில் கவி படைத்தலையே முழுநேரத் தொழிலாகவும் சிந்தனையாகவும் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட  அறிஞர்கள்,கவிஞர்கள்,புலவர்களை  அரசர்களே மதித்து தம் பூரண ஆதரவையும் வழங்கிய காலம் அது. :wub:  இப்ப அப்பிடியா கோ...??? எழுதுறவனுக்குஏப்பிடி எங்கடா ஆப்படிக்கிறது என்று திரியுறாங்கள்....! :lol::rolleyes: இந்த விசித்திரத்தில..................... :)

 

உங்கள் தேடலுக்கும் பகிர்தலுக்கும் ஆக்கபூர்வமான படைப்புக்கும் என் பாராட்டுக்கள்! :)

  • தொடங்கியவர்

கோமகன் ஒருமுறை பார்த்தவுடன் எல்லாம் குழம்பிப் போச்சு. ஆனாலும் இதுபற்றி அறிய ஆவல்கொண்டிருந்தேன்.  தமிழர்களின் அறிவும் ஆற்றலும் இப்பொழுது எங்கே என்றுதான் தெரியவில்லை. எத்தனை நுட்பமாகச் சித்திரக் கவிதை வடிக்கப்பெற்றிருக்கிறது.பகிர்தலுக்கு நன்றி.தொடருங்கள்.

 

உங்களைப் போல் எனக்கும் இதில் குழப்பங்கள் உண்டுதான் . அனால் தேடல்கள் இருந்தால் முடியாதது எதுவும் இல்லை . தொடருடன் தொடர்ந்து இருங்கள் பல விடயங்கள் உள்ளன .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

 

  • தொடங்கியவர்

பழம்பெருமைவாய்ந்ததும், இலக்கியச் செழுமை கொண்டதும்,எல்லாவற்றுக்கும்வளைந்து கொடுப்பதும்,(சித்திரக்கவிமுதல் ஹைக்கூவரை),பல மொழிகளை உருவாக்குவதும்,பல மொழிகளைப்உருவாக்கினலும் தனித்தன்மையுடன்னும் இளமையுடனும் கன்னித்தமிழாக இருப்பதும்,பிறமொழிச் சொற்களை இலகுவாக உள்வாங்குவதும் ,உள்வாங்கப்பட்ட சொற்கள் தமிழ் சொற்களாகவே மாற்றமடையச் செய்யக்கூடிய வளமிக்க மொழி என்பது உண்மையிலும் உண்மை. இந்த மொழியின் சொந்தக்காரன் என்பதில் ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படலாம்.

 

இவ்வளவு கடினமான கால கட்டங்களைக் கடந்தும் தமிழின் மொழியாழுமை அழியவில்லை, அதுதான் தமிழின் சிறப்பு . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புலவர் :) :) .

 

  • தொடங்கியவர்

ஒரு மொழியின் வளமென்பது, அது எவ்வாறு வளைந்து, நெழிந்து கொடுக்கின்றது என்பதாலேயே அளவிடப்பட வேண்டும்! அவ்வாறு பார்க்கையில், தமிழைப்போல், கவிதை மொழி எங்கும் இல்லையென்றே சொல்வேன்!

 

'யாமறிந்த மொழிகளிலே 'தமிழ் மொழி' போல் இனிதாவது எங்கும் காணோம்!

 

இணைப்புக்கு நன்றிகள் கோமகன்!

 

வளைந்து நெழிவது மட்டுமல்ல புதிய சொற்களை உள்வாங்கி அதன் அர்த்தங்களைப் பல கோணங்களில் தெரியவைப்பதே ஒரு மொழியின் தொன்மை என்று சொல்வேன் . இதில் உள்ள எழுத்து வருந்தனம் சித்திரக் கவி அதையே சொல்லி நிற்கின்றது . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புன்கையூரான் :) :) .

நன்று கோ. விரிவாக எழுதுகிறீர்கள் தொடருங்கள்.

சித்திரக் கவி படைப்பதற்கு நிறைய தமிழ்ச் சொற்களின் அறிவும், கொஞ்சம் கணித அறிவும், நேரமும் இருப்பின் தாரளமாக கவி வடிக்கலாம் என்றே எண்ணுகிறேன். முயலுவோம்..:)

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • தொடங்கியவர்

இவ்வளவுக்கு ஒருத்தர் தமிழைக் கற்று அனுபவபூர்வமாக உணர்ந்து சில கவிதைகள் படைப்பது என்றால் அது ஒரு குருகுல வாசத்தால் மட்டுமே முடியலாம். அதற்கும்கூட  தக்க குருவானவர் கிடைக்கவும் வேண்டும்.

அப்படியான  குரு , மாணாக்கர்  பரம்பரைக்கு  இனிமேல் சாத்தியமா என்றால் அது துர்பலமே.

 

தமிழனாய் பிறந்ததால் பெருமையுடன்  தலை நிமிர்கிறோம்,  

தமிழை மறந்து, இழந்து வாழ்வதால் தலைகுனிகிறோம்! !

 

ஒருசிலருக்கு அது வாய்த்துள்ளது சுவியர் . தொடருடன் தொடர்ந்து இருங்கள் .தொடரின் இறுதியில் இதைப் பற்றிச் சொல்கின்றேன் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள பதிவு கோமகன் தொடருங்கள்
இதைப் படித்து ஒரு கள உறவாவது ஒரு சித்திரக்கவி படைத்தாலே உங்களுக்கு வெற்றி :)

  • தொடங்கியவர்

அந்தக் காலத்தில் கவி படைத்தலையே முழுநேரத் தொழிலாகவும் சிந்தனையாகவும் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட  அறிஞர்கள்,கவிஞர்கள்,புலவர்களை  அரசர்களே மதித்து தம் பூரண ஆதரவையும் வழங்கிய காலம் அது. :wub:  இப்ப அப்பிடியா கோ...??? எழுதுறவனுக்குஏப்பிடி எங்கடா ஆப்படிக்கிறது என்று திரியுறாங்கள்....! :lol::rolleyes: இந்த விசித்திரத்தில..................... :)

 

உங்கள் தேடலுக்கும் பகிர்தலுக்கும் ஆக்கபூர்வமான படைப்புக்கும் என் பாராட்டுக்கள்! :)

 

உங்களது ஊக்கமே எனது ஆக்கம் . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதை . தொடருடன் தொடர்ந்து இருங்கள் .

 

இப்படியான விடயங்களை தேடித் தேடி இணைக்கும் கோ விற்கு என் நன்றி!. தொடர்ந்து இணையுங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.