Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளார்.

Featured Replies

ஏன் சினிமா மோகமும் சாதியும் உங்கள் மக்களிடம் இல்லையோ? கூப்பிடு தொலைவில் வன்னியில் மக்கள் கூட்டம் கூட்டமாக அவலக்குரலெடுத்து செத்துக்கொண்டிருக்கையில் யாழ்பாணத்தில் நீங்கள் தேரிழுத்து திருவிழா நடத்தினீர்கள் தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மடிந்து கொண்டிருந்தான். தமிழ்நாட்டில் மாணவர் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது யாழ்பாணத்தில் வடக்கின்பெரும் போர் என்று கிரிக்கெட் விழையாடிக்கொண்டிருந்தீர்கள்.  எந்த ஒரு அடிப்படைத்தகுதியும் உங்களுக்கு கிடையாது தமிழக மக்களை விமர்சிக்க என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி ஐயா ...............பச்சை முடிந்துவிட்டது .

  • Replies 112
  • Views 7.7k
  • Created
  • Last Reply

ஏன் சினிமா மோகமும் சாதியும் உங்கள் மக்களிடம் இல்லையோ? கூப்பிடு தொலைவில் வன்னியில் மக்கள் கூட்டம் கூட்டமாக அவலக்குரலெடுத்து செத்துக்கொண்டிருக்கையில் யாழ்பாணத்தில் நீங்கள் தேரிழுத்து திருவிழா நடத்தினீர்கள் தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மடிந்து கொண்டிருந்தான். தமிழ்நாட்டில் மாணவர் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது யாழ்பாணத்தில் வடக்கின்பெரும் போர் என்று கிரிக்கெட் விழையாடிக்கொண்டிருந்தீர்கள்.  எந்த ஒரு அடிப்படைத்தகுதியும் உங்களுக்கு கிடையாது தமிழக மக்களை விமர்சிக்க என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

அண்ணா, அவர் தான் ஒரு மலையாளி என ஏற்கனவே ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். உண்மை பொய் எனக்கு தெரியாது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130051&p=942083

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே யாழ்பாணத்தவரின் நடவடிக்கைக்கு ஒரு மலையாளியை எப்படி வையல்லாம்? :)

சண்டமாருதன் உங்கள் கருத்துப்படி பார்த்தா வன்னியில் போர்நடந்த போதே யாழ்மக்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்ட்ய்விட்டார்கள் என்றல்லவா தெரிகிறது? அவர்களே விரும்பாத தனி நாட்டை அவர்களிடம் ஏன் திணிக்கிறீர்கள்? நாட்டாமை தீர்ப்ப மாத்திச்சொல்லு!

தீக்குளித 15 பேருக்கும் தலை வணங்குரேன். அதே நேரம்

8 கோடி பேர்வாழும் நாட்டில் 30 வருடத்தில் 15 பேர்தானே இதில் இந்தளவு ஈடுபாடு காட்டியுள்ளனர். ஏனையோர் ஒன்றில் எம்மை வைத்து பிழைத்தனர் அல்லது கவனியாதிருந்தனர். இதுதான் உண்மை. இந்த 7.8 கோடிதான் நமக்கு விடிவுதர மத்ய அரசை அழுத்குமாம். இந்த 7.8 கோடியையும் நாம் திருத்தி தேசிய உணர்வூட்டி, சினிமா மோகத்க்தில் இருந்து விடிவித்து வர, யாழ்ப்பாணத்தில் தமிழர் அல்லாதோர் சனத்தொகை 70% தாண்டியிருக்கும்.

அதுதானே ஒரு மலையாளியாய் [அந்த வடிவத்தில் ] கேட்கிறார் பதில் சொல்லுங்கப்பா ..................தமிழ்நாட்டுதமிழர் என்றாலும் தமிழீழ தமிழர் எண்டாலும் அவ்ருக்கு தமிழ் தான் பிரச்சனையாக்கும் .....யாராவது பறையுங்கப்பா ........ :D  :D

அதுதானே யாழ்பாணத்தவரின் நடவடிக்கைக்கு ஒரு மலையாளியை எப்படி வையல்லாம்? :)

சண்டமாருதன் உங்கள் கருத்துப்படி பார்த்தா வன்னியில் போர்நடந்த போதே யாழ்மக்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்ட்ய்விட்டார்கள் என்றல்லவா தெரிகிறது? அவர்களே விரும்பாத தனி நாட்டை அவர்களிடம் ஏன் திணிக்கிறீர்கள்? நாட்டாமை தீர்ப்ப மாத்திச்சொல்லு!

தீக்குளித 15 பேருக்கும் தலை வணங்குரேன். அதே நேரம்

8 கோடி பேர்வாழும் நாட்டில் 30 வருடத்தில் 15 பேர்தானே இதில் இந்தளவு ஈடுபாடு காட்டியுள்ளனர். ஏனையோர் ஒன்றில் எம்மை வைத்து பிழைத்தனர் அல்லது கவனியாதிருந்தனர். இதுதான் உண்மை. இந்த 7.8 கோடிதான் நமக்கு விடிவுதர மத்ய அரசை அழுத்குமாம். இந்த 7.8 கோடியையும் நாம் திருத்தி தேசிய உணர்வூட்டி, சினிமா மோகத்க்தில் இருந்து விடிவித்து வர, யாழ்ப்பாணத்தில் தமிழர் அல்லாதோர் சனத்தொகை 70% தாண்டியிருக்கும்.

நீங்கள் தனிநாட்டில் இருந்து இறங்கி சமஸ்ட்டி பெற்றுவிடலாம் என்று முனைகின்றீர்கள் ஆனால் சிங்களவர்கள் ஆலமரத்துக்கு கீழ இருந்து சொம்பை வைத்து தீர்ப்பு சொல்லும் பஞ்சாயத்து அதிகாரத்தைக் கூட தரத்தயாராக இல்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலைதான் மீள மீள தனிநாடு என்ற இடத்திற்கு தமிழர்களை கொண்டுசெல்கின்றது. தனிநாடுதான் எமக்குத் தீர்வு என்பது தமிழனின் விருப்பத்துக்கு அப்பால் சிங்களவர்களே காரணமாக இருக்கின்றனர்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் என்று பிரிப்பதை கைவிடுங்கள். தமிழர்கள் அவ்வளவுதான். தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக எந்தக் கட்சியும் ஒன்றுசேரவில்லை. ஈழத்தில் இயக்கங்கள் ஒன்றுசேரவில்லை. 8 கோடியில் 15 பேரா என்று கேட்கின்றபோது 45 லட்சம் தமிழர்களில் கடசியாக போராட்டத்தை சுமந்தது 3 லட்சம் பேர்தான். இக்கரைக்கு அக்கரை பச்சை. எங்கும் தமிழர்கள் பிரதேசமாக சாதியாக ஊராக மதமாக பிரிந்துதான் கிடக்கின்றனர். இதற்குள் புள்ளிவிபரங்கள் கணக்குகள் எல்லாம் கொண்டு எதையும் நிறுவ முடியாது மாறாக வேற்றுமைகளை வளர்க்கவே முடியும்.

தமிழர்களின் பொதுவான ஒற்றுமை அற்ற தன்மைகளும் காரணிகளும் ஏக தமிழருக்கும் பொருந்தும். அதில் தமிழ்நாட்டுத்தமிழன் ஈழத்தமிழன் என்றெல்லாம் கிடையாது. தமிழன் என்றால் எங்கும் சிதைவுபட்ட பிளவுபட்ட முரண்பாடுகளைக்கொண்ட ஒன்றுபடமுடியாத நிலையில்தான் வரலாறு தெரிந்த காலந்தொட்டு இருக்கின்றார்கள். இருந்தபோதும் இதற்குள்ளாகத்தான் போராட்டமோ விடுதலையோ உரிமையே அதற்கான முனைவுகளையோ மேற்கொள்ள முடியும்.

இலங்கையிலோ இல்லை இந்தியாவிலோ தமிழர்கள் அடிமைநிலையிலேயே இருக்கின்றனர். அதன் தன்மைகள் வேறாக இருக்கலாம். தமிழகத்தில் தமிழன் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுப்பது என்னுமொருவகையில் தன்னை விடுதலை செய்யும் முனைவையும் கொண்டுள்ளது. நாம் அவர்களை எமக்காக விடுதலை பெற்றுத்தரவேண்டும் என்று எதிர்பாரக்கமுடியாது. நாம் என்ன செய்யவேண்டுமோ அதை செய்வதே பொருத்தமானது. அவர்கள் எடுக்கும் எந்த முயற்சிக்கும் நொட்டை சொட்டை சொல்வது பிரயோசனமற்றது. அதற்கான தகுதியும் எமக்கில்லை.

தமிழகத் தமிழன் அவனுக்குத் தெரிந்தவகையில் குரல் கொடுக்கட்டும் தாயகத் தமிழன் தன்னாலானதை முனையட்டும் புலம்பெயர்தமிழன் உலக அரங்கில் எப்படி குரல் கொடுக்க முடியுமோ அப்படி கொடுக்கட்டும். இப்படியாக மூன்று விதமாக இருக்கும் முனைவுகளுக்குள் எந்த சர்ச்சையும் தேவையிலை. இதில் ஒருவன் மற்றவனை எதிர்பார்த்து தன் கடமையை செய்யாமல் நொட்டை சொட்டை விமர்சனங்கள் என்பதை செய்வது பிரயோசனமற்றது.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் என்று பிரிப்பதை கைவிடுங்கள். தமிழர்கள் அவ்வளவுதான். தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக எந்தக் கட்சியும் ஒன்றுசேரவில்லை. ஈழத்தில் இயக்கங்கள் ஒன்றுசேரவில்லை. 8 கோடியில் 15 பேரா என்று கேட்கின்றபோது 45 லட்சம் தமிழர்களில் கடசியாக போராட்டத்தை சுமந்தது 3 லட்சம் பேர்தான். இக்கரைக்கு அக்கரை பச்சை. எங்கும் தமிழர்கள் பிரதேசமாக சாதியாக ஊராக மதமாக பிரிந்துதான் கிடக்கின்றனர். இதற்குள் புள்ளிவிபரங்கள் கணக்குகள் எல்லாம் கொண்டு எதையும் நிறுவ முடியாது மாறாக வேற்றுமைகளை வளர்க்கவே முடியும்.

இரவு பகலாக யாழில் சாதி, வடக்கு- கிழக்கு, தீவு-ஊர், மேட்டுக்குடி-ஓட்டுகுடி, முஸ்லீம்- இந்து, பெண்களுக்கு உரிமை, புலம்- வெளிநாடு, இணக்க அரசியல்- புலி அரசியல், கூட்டமைப்பு- செயலாளர் நாயகம் என்று, இருக்கும் மூளையை வறுத்து பிரிவினைக்கு அலகு தேடிவர்களுக்கு ஆமி போட்டதை தவிர ஒரு வாக்கு வெளியே போகாமல் கூட்டமைப்புக்கு தாயக மக்கள் வாக்களித்த பின்னரும் அரசியல் புரிய மாட்டேங்கிறது. சொந்த பெயர் என்றால் கொஞ்சம் வெட்கம் வரும். 

வடக்கில் சரித்திரம் காணாத அளவு ஆமிகளே கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்ததால் இனி காலியில் கூட்டமைப்பு தேர்தலில் நிற்க்கப்போவதாக கூறுகிறது.  

சந்திரனைப் பார்த்து நாய்கள் குலைக்கலாம். ஆனலபரசியல் விளகம் சூனியம் என்ற அமாவாசை இரவுக்குள் நின்று கொண்டு வெருண்டு குலைக்கும் நாய்கள் பரிதாபம்.  2004 இல் சுனாமி வருவதை கண்டு விட்டு சிலர் ஓடித்தப்பின்னார்களாம். சிலர் அங்கேயே நின்று வேதாந்தம் பேசிவிட்டுக்கு வீடு திரும்பவில்லை. அது நேர காலத்தை அறியாமல் பேசிய அரசியல். விமல் வீரவன்சாவும் தேர்தல் நடக்குமா என்றுதான் சவால் விட்டவர். தமிழக மாணவர்கள் அதை நடத்துவித்திருக்கிறார்கள். "தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள்" என்ற பொன்சேக்கா சேர JVP கூடக்கிடைக்காமல் புதுக்கட்சி திறந்திருக்கிறார். 

கியூபா விட்ட ஒரு சின்ன சேட்டைக்கு அணுஆயுத போருக்கு தயாரானால் வா என்று அழைக்கும் மனநிலை படைத்தவர்கள்தான் மேற்குநாடுகள். இந்தியாவுக்கு இந்த முறை காணி பொலிஸ் அதிகாரம் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால் காங்கிரஸ் இனி வெளிநாடுகளில் முகம் காட்டமாட்டது.  

ஒட்டுக்குழுக்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவர்கள் இலங்கை அரசை அனுசரித்துச் செல்பவர்கள். உதாரணமாக மதிப்புக்குரிய டக்ளஸ் தேவானந்தா மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா பிள்ளையான் கே பி என்று ஒரு பட்டியல் தொடரும். சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கும் போது இவர்கள் கைகட்டி நிற்பார்கள்

மதிப்புக்குரிய தேவானநதாவை தெரிந்த அரசியல்வாதிகளுக்கு அவரின் அதி மதிப்புக்குரிய குருவானவர் அங்கயன் இராமநாதனை அறிந்திருக்காமையும்,   யார் எந்தக் கட்சியில் என்பது தெரியாதுமாதிரி "விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா பிள்ளையான் கே பி" என்று தங்கள் கருத்துக்களை குமைக்க முயல்வதும் எழுதஒன்றும் கிடைக்கத்த வங்குரோத்தைத்தான் காட்டுகிறது. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள் குறித்து தவறான புரிதலுக்கு வருந்துகின்றேன்.

ஒட்டுக்குழுக்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவர்கள் இலங்கை அரசை அனுசரித்துச் செல்பவர்கள். உதாரணமாக மதிப்புக்குரிய டக்ளஸ் தேவானந்தா மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா பிள்ளையான் கே பி என்று ஒரு பட்டியல் தொடரும். சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கும் போது இவர்கள் கைகட்டி நிற்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களை அழிக்கும்போது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நின்றதைப்போல.

புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுக்குழுக்கள் கிடையாது. அவர்கள் இந்திய இல்ங்கை ஆக்கிரமிப்பு வளயத்துக் அப்பல் வாழ்கின்றவர்கள். கல்வி பொருளாதாரம் அனைத்திலும் ஏனைய தமிழர்களை விட உயர்ந்த இடத்திலும் பாதுகாப்பான இடத்திலும் இருப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடம் ஆதாரம் இவற்றின் அடிப்படையி்ல் இவர்கள் நாட்டாமைகள். அல்லது நாட்டாமைக்குழுக்கள். ஒட்டுக்குழு வேறு நாட்டாமைக்குழு வேறு.

நாட்டாமைகள் எப்போதும் கேள்வி கேட்கவும் தீர்ப்பு சொல்லவும் தீர்ப்பை மாற்றி சொல்லவும் கடமைப்பட்டவர்கள். உண்ணாவிரதமிருந்தால்  ஏன் உண்ணாவிரதமிருக்க முற்படுகின்றார்கள் என்பது நாட்டாமைகளை பொறுத்தவரை அப்பாற்பட்ட விசயம். அவார் சாவாரா மாட்டாரா? அவர் சாப்பிடுவாரா மாட்டாரா? இப்படியான ஆராய்ச்சிகள் செய்வது நாட்டாமைகளின் இயல்பு. தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மாண்டார்கள் அத்தியாகங்கள் குறித்து நாட்டாமைகளிடம் கருத்தை எதிர்பார்க்க முடியாது. வேணுமானால் எந்த எண்ணையை பாவித்தார்கள் எப்படி தீவைத்தார்கள் என்ற ஆராய்ச்சிகளை கேட்கலாம்.

அத்தோடு நான் முன்பு புலிகளுக்கு விசிலடித்தேன். பின்பு புலிகள் தோற்ற போது டக்ளசுக்கு விசிலடித்தேன். இப்போ டக்ளசும் தோற்ற போது யாருக்காக பம்முவது என்பதில் சிறிது குழப்பி உள்ளேன். ஆனால் எனக்கு விசிலடிக்க தெரியும் போது யாரும் என்னை அசைக்க முடியாது.

  • தொடங்கியவர்

அதுதானே யாழ்பாணத்தவரின் நடவடிக்கைக்கு ஒரு மலையாளியை எப்படி வையல்லாம்? :)

சண்டமாருதன் உங்கள் கருத்துப்படி பார்த்தா வன்னியில் போர்நடந்த போதே யாழ்மக்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்ட்ய்விட்டார்கள் என்றல்லவா தெரிகிறது? அவர்களே விரும்பாத தனி நாட்டை அவர்களிடம் ஏன் திணிக்கிறீர்கள்? நாட்டாமை தீர்ப்ப மாத்திச்சொல்லு!

தீக்குளித 15 பேருக்கும் தலை வணங்குரேன். அதே நேரம்

8 கோடி பேர்வாழும் நாட்டில் 30 வருடத்தில் 15 பேர்தானே இதில் இந்தளவு ஈடுபாடு காட்டியுள்ளனர். ஏனையோர் ஒன்றில் எம்மை வைத்து பிழைத்தனர் அல்லது கவனியாதிருந்தனர். இதுதான் உண்மை. இந்த 7.8 கோடிதான் நமக்கு விடிவுதர மத்ய அரசை அழுத்குமாம். இந்த 7.8 கோடியையும் நாம் திருத்தி தேசிய உணர்வூட்டி, சினிமா மோகத்க்தில் இருந்து விடிவித்து வர, யாழ்ப்பாணத்தில் தமிழர் அல்லாதோர் சனத்தொகை 70% தாண்டியிருக்கும்.

ஆகவே நாங்கள் அங்கு போராடுகிறவனையும் போராடாதே எமக்கு ஆதரவு வேண்டாம் என்று சொல்லுவோம். என்ன சாணக்கியம்.

யாராவது இங்கே கூட்டமைப்பு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் பிழை, சமஸ்ட்டி கேட்பது தவறு என்று சொல்லவில்லையே. கூட்டமைப்பு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. வடமாகாண சபை அதிகாரம் அற்றது என்று சொல்லிக் கொண்டே அங்கே அமைச்சுப் பதவிகளுக்கு போட்டி நடக்கிறது. மக்களிடம் ஆதரவு உடையோர் ஒதுக்கப்படுகிறார்கள். தேவையற்ற விதத்தில் தமிழ்நாட்டு மக்கள் மீதும் தலைவர்கள் மீதும் , இந்திய மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் எதிர்பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இதில் இடையில் இருக்கும் உங்களைப் போன்றோர், புலம், தமிழ் நாடு என்று இருக்கும் ஆதரவுத் தளங்களை முரண்பட வைத்து செயல் இழக்கப் பிரச்சாரம் செய்கிறீர்கள்.இதற்கு அடி எடுத்துக் கொடுத்தவர் விக்கினேசுவரன். இவை அனைத்தும் கூட்டமைப்பின் தலைவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் சமயோசிதமாக நடவைக்கைகள் எடுத்து மேலும் இத் தகைய அறிக்கைகளையும் பேட்டிகளையும் விக்கினேசுவரன் விடாது பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இடையில் உங்களைப் போன்றவர்களைக் கவனித்து அடையாளம் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

காலையில்  வந்து பார்த்ததும்  சந்தோசத்தில் எழுதுகின்றேன்

தியாகு அண்ணா  என்ன  காரணத்துக்காக தனது   போராட்டத்தை ஆரம்பித்தாரோ

அது யணாழில்  நடந்திருக்கிறது.

அதுவே  அவருடைய  வெற்றியை சொல்லி  நிற்கிறது

இந்தத்திரி

எழுதாது ஒதுங்கியிருந்தோரை

தள்ளியிருந்தோரை

கருத்துக்களத்தில் பல விடயங்களில் முரண்பட்டவர்களை

இங்கு ஒன்றாக்கி  வைத்துள்ளது.

அந்தவகையில் மிகவும் சந்தோசமான செய்தி  இது எனக்கு இன்று. 

ஐயா நாரதர் ஐயா நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது .உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ...........உண்ணாவிரதம் இருப்பதற்கும் ,தூக்குப்போட்டு தற்கொலை செய்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றுபவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் அளிப்பது கவலை அளிக்குது. :D

என்னாச்சு உணர்ச்சி கவிஞருக்கு...??   கூலா இருக்கிறார்...  பச்சை தண்ணி அள்ளி ஊத்தினது மாதிரி...?? 

என்னாச்சு உணர்ச்சி கவிஞருக்கு...??   கூலா இருக்கிறார்...  பச்சை தண்ணி அள்ளி ஊத்தினது மாதிரி...?? 

இல்லை அண்ணா பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கிறேன் .......அதனால் கொஞ்சம் கூலாக இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் . :D  :D

புகைப்படம்.
1390499_528700177208085_1724462509_a.jpg
தமிழினத்தின் சாபக்கேடு தியாகிகளை மறப்பது ! Sampath Kasinathan Ramesh Babu A கொளத்தூரில் உள்ளவர்கள் இந்த செய்தியை உடனே பகிரவும் மனதை பாதித்த செய்தி அனைவரும் க...ட்டாயம் படியுங்கள்! தெரிந்தால் தகவல் கொடுக்கவும் நேற்று கொளத்தூரில் உள்ள எனது அழகு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்தேன். அப்படி மாற்றி அமைக்கும் போது தேவை இல்லாத பொருட்களை அங்கயே வைத்து விட்டு சென்றேன். அதை இன்று பழைய பொருட்கள் வாங்கும் கடையில் போட்டு விடலாம் என்று என்னுடைய அழகு நிலைய பணிப்பெண்ணிடம் அந்த வேலையை ஒப்படைத்தேன், அவளும் ஒரு முதியவரை அழைத்து வந்து பழைய பொருட்களை எல்லாம் கொடுத்தாள்.அதன் மதிப்பு 80 ரூபாய் என சொன்னவர், அவரிடம் உரூபாய் 60தான் இருந்ததென கூறி மீதி கொடுக்க வேண்டிய 20 ரூபாயை பிறகு கொடுக்கிறேன் ,இப்போது பணம் இல்லை என சொல்லி விட்டு சென்றார்! யார் அவர் தெரியுமா ? ? ? ? ? என் இனம் செத்து மாள்வதை காண பொறுக்காமல் அதை தடுக்க,என் உயிரை தருகிறேன் என்று தனதுயிரை தீக்கிரையாக்கினவீரத் தமிழன் "முத்துக் குமாரின் " தந்தை அவர்! இந்த இனத்திற்காக தன் மகன் கொடுத்த உயிரை கொச்சைப்படுத்த விரும்பாமல் தமிழக அரசு கொடுத்த லட்சங்களை வேண்டாம் என்று சொல்லி பணத்தை தூக்கி எரிந்தவர்தான் இந்த தந்தை. ஆனால் இன்று இவரது நிலை ? ? ? ? வயதான அவர் வெயிலிலும் மழையிலும் வீணாக போகும் பொருட்களை வாங்கி விற்கும் நிலை !!!!!!!!!!!!!!!!!!!! அவரது தொடர்பு என்னை கேட்டதற்கு,அவரிடம் அலைபேசி இல்லை என்றார்! இந்த நிலையிலும் தன்னை தமிழ் உணர்வாளர்களும்,கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை என பதிவு செய்யவே இல்லை அந்த தன்மானத் தந்தை! முத்துக்குமரனின் தியாகத்தை பேசும் நாம் ,அவனது வயதான பெற்றோருக்கு என்ன செய்தோம் இது வரை! இனியாவது செய்வோமா?""

அத்தோடு நான் முன்பு புலிகளுக்கு விசிலடித்தேன். பின்பு புலிகள் தோற்ற போது டக்ளசுக்கு விசிலடித்தேன். இப்போ டக்ளசும் தோற்ற போது யாருக்காக பம்முவது என்பதில் சிறிது குழப்பி உள்ளேன். ஆனால் எனக்கு விசிலடிக்க தெரியும் போது யாரும் என்னை அசைக்க முடியாது

நான் பலஇடத்திலும் சொல்லியுள்ளேன் என்னைப்பொறுத்தவரை எல்லோரையும் தமிழனாகவே அணுகுகின்றேன். அது புலியாக இல்லை வேறு இயக்கமாக எதுவாகவும் இருக்கலாம். #சூழ்நிலைக்கேற்ப கருத்துக்கள் என்னிடம் மாறிக்கொண்டே இருக்கின்றது. அதில் மாற்றம் இருக்காது.

-அபிவிருத்திகள் தொடர்பாக டக்ளசை சுட்டிக்காட்டி கருத்து எழுதியுள்ளேன்

-கருணாமீதான வெறுப்புக்கருத்துக்களுக்கு பிரதேசவாதப்பின்னணியையும் பிரச்சனைகளையும் கொண்டு மறுப்புக் கருத்து எழுதியுள்னன்

-கே பியின் முன்னாள் புலிகளின் மறுவாழ்வு செஞ்சோலை மீதான ஈடுபாட்டை முன்வைதது அதை ஆதரித்து கருத்து எழுதியுள்ளேன்

- புனர்வாழ்வு மனிதாபிமான உதவிகளுக்கான அமைப்பே அவசியம் தவிர நாடுகடந்த அரசு அல்ல என்ற அடிப்படையில் இதன் ஆரம்ப காலத்தில் இருந்த நக அரசுக்கு எதிராக கருத்து எழுதி வருகின்றேன்.

- புலிகளின் போராட்ட காலத்தில் அவர்களின் முயற்ச்சிக்கு எதிராக கருத்துக்கள் வைத்தது கிடையாது இறுதி யுத்தம் அதன் பின்னரான நிலைப்பாடுகளில் கருத்து மாற்றங்கள் தாராளமாக இருக்கின்றது. இது இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், புலிகளை வைத்து பிழைப்பு நடத்த முற்படும் புலம்பெயர் நிலை. புலிகளின் சார்ப்பு கோஸ்டிகளின் முரண்பாடுகள் என சம்பவங்களுக்கு சம்பவங்கள் கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்கும். அதே நேரம் மாவீரர் மற்றும் அவர்கள் தியாகங்கள் அர்பணிப்புகள் குறித்து எனது கருத்தின் எல்லை என்ன என்பதில் எனக்கு போதுமான தெளிவு உண்டு.

டக்ளஸ் தோற்றது வென்றது குறித்தெல்லாம் என்னிடம் எந்த அபிப்பிராயமும் கிடையாது. தேர்தல் குறித்து எனது பார்வையில் சிங்களப்பேரினவாதம் தன்னை புதுப்பித்தக்கொண்டுள்ளது அவ்வளவுதான். 

கூட்டமைப்பு குறித்து எப்போதும் நம்பிக்கையோ நல் அபிப்பிராயமோ இருந்ததில்லை. கூட்டமைப்பை பொறுத்தவரை புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையோ நல் அபிப்பிராயமோ அவசியமும் இல்லை.

இன்னாரை ஆதரிப்பது இன்னாரை எதிர்ப்பது என்ற எந்த அடிப்படையும் எனக்கு கிடையாது. சம்பவங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்கும். டக்களசின் அபிவிருத்தி வேலைகளை ஆதரித்து கருத்தெழுதும்போது ந க அரசு போன்றவர்கள் நாற்காலியில் குந்தியிருந்து அடயாளம் தேடுவதற்குப் பதிலாக அபிவிருத்தி புனர்வாழ்வில் ஈடுபடவில்லை , தாயக மக்களுடன் தொடர்பற்றஒரு அரசியல் எவ்வளவு அபத்தமானது என்ற சுட்டிக்காட்டலும் இருக்கும்.  ஏன் ஒன்றை எதிர்க்கின்றேன் ஏன் ஒன்றை ஆதரிக்கின்றேன் என்ற தெளிவு எனக்கிருக்கின்றது. இதையெல்லாம் விசிலடிப்பு என்று நீங்கள் கருதினால் தாராளமாக கருதிவிட்டுப்போங்கள். எனக்கு அதால் எந்த நட்ட லாபமும் இல்லை.

எனக்கு எதிர்பார்ப்பும் இல்லை நண்பனும் இல்லை பகைவனும் இல்லை. சந்தர்ப்பம்  சூழ்நிலை சம்பவங்களுக்கேற்ப எனது கருத்தை பதிந்துகொண்டே இருப்பேன். யார் விரும்புகினம் யார் வெறுக்கினம் என்பது பற்றி எல்லாம் எனக்கு அக்கறை கிடையாது.

சண்டமாருதன்: யாழில் இப்படி குழப்பமாக இருக்க கூடாது.... சாகும்வரையும் ஒரே ஆளுக்கு ஜே..ஜே சொல்லி கடைசியிலே செத்தும் போகனும்...தப்பினா போச்சு..நீர் துரோகி

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமில்லை, ஒரு கொள்கை இன்னும் 1000 வருடங்களுக்கு நடைமுறை சாத்தியமற்றது எண்டு தெரிஞ்சாலும், அதையே பிடிச்சுகொண்டு தொங்கணும். இத்தனை பேர் செத்தது இதுக்காக தானே. இன்னும் இருப்பவரையும் கொல்லுவோம் எண்டு சொல்லணும்.

  • தொடங்கியவர்

புலம்பெயர் அமைப்புக்கள் எதாவது கூட்டமைப்பு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்ட்டி என்னும் கோரிக்கை முன் வைப்பதைக் கண்டித்து அறிக்கை எதாவது விட்டதா?

பிறகேன் கோசன் குத்தி முறியிறார்? சமஸ்டியை நீங்கள் பெற்றுக் கொடுக்கப் போறியள். பிரச்சினை முடின்சிடும்.

புலத்தில் இருந்தும் தமிழ் நாட்டில் இருந்தும் கத்தி ஒன்றும் ஆகப் போவதில்லைத்தானே.

பிறகெப்படி சனம் சாகும் எண்டு எழுதிறார் , விளங்கேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இருவருக்கு சாத்தியமில்லாதது மற்றும் பலருக்கு சாத்தியமானது. எனவே சாத்தியமற்றது என்று நம்புவர்கள்.. சாத்தியமானதை செய்யுங்கோ. அதைவிட்டிட்டு.. இங்க வகுப்பெடுத்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். முதலில் நீங்கள்  சாத்தியமானது என்று நினைப்பதை நடைமுறைப்படுத்திட்டு.. அடுத்தவனுக்கு சாத்தியமில்லை என்ற வகுப்பை எடுக்கலாம். அதைவிட்டிட்டு.. உங்களால் முடியாதது.. மற்றவனாலும் முடியாது.. சரணடைதலே சாத்தியம் என்ற மிகவும் பிற்போக்கான கருத்தியலோடு.. எதிரிக்கு அவனின் மனித இன விரோத அணுகுமுறைகளுக்கு நீதிச் சாயம் பூச விளையும் உங்களைப் போன்றவர்கள்.. தத்துவம் பேசக் கூட இலாய்க்கில்லாதவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்..!

உங்களை எல்லாம் மக்கள் இனங்கண்டு.. அடிச்சு விரட்டி கன காலம் ஆயிட்டுது..! எனியும் உந்த புலுடாக்கள் மக்களிடம் எடுபடாது. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில இருந்து கொண்டு தனிநாடு தனிநாடு எண்டு புணியவான்கள் கத்த, அதை சாக்காக வைத்து அர்சு மாகாண கொசு அடிக்கும் அதிகாரம் தாரதையும் இழுத்தடிக்கும். உலகத்துக்கும்தனிநாட்டு பூச்சாண்டி காட்டும். இது நிலத்து அவலத்தை நீட்டிக்கும். அதுதான் கோசான் கத்துறார்.

அரசு இப்போ மலை என நம்பி இருப்பது புலத்து வியாபாரிகள் செய்யும் தனிநாட்டு விளம்பரத்தைதானாம்.

இதை செய்யும் படி சிலருக்கு கொழும்பில் இருந்தே கொந்திராத்தும் கொடுக்கப்படிருக்காம்.

இவை நான் கேள்விபட்ட விசயங்கள். ஆதாரம்மெல்லாம்மில்லை.

அது மட்டுமில்லை, ஒரு கொள்கை இன்னும் 1000 வருடங்களுக்கு நடைமுறை சாத்தியமற்றது எண்டு தெரிஞ்சாலும், அதையே பிடிச்சுகொண்டு தொங்கணும். இத்தனை பேர் செத்தது இதுக்காக தானே. இன்னும் இருப்பவரையும் கொல்லுவோம் எண்டு சொல்லணும்.

கொல்வது கொண்டது நாம் அல்ல அவர்கள் எம்மை கொன்றதானால் அதை தடுக்க நாம் முயற்சித்தோம் முயற்சிக்கிறோம் .எந்த பிரச்சனைக்காய் ஆயுதத்தை கையில் எடுத்தோமோ .அந்த பிரச்சனையின் பின் வந்த விளைவுகளையே தூக்கி பிடிக்கிறீர்கள் .இப்போ அந்த பிரச்சனை கண்ணுக்கு தெரியவில்லை ..............ஆனால் ஆரம்பத்தில் என்ன பிரச்சனை இருந்ததோ அது இன்னும் தீர்வதாய் தெரியவில்லை ........ஆகவே தீர்வை எதிர் நோக்கி நிற்கும் நிலையில் சோறும் ,கரண்டும் ,தண்ணியும் ,..................தந்து உங்கள் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று சொல்கிறார்கள் ....................கேவலம் அதற்காகவா நாம் போராடினோம் .......[விரிவாக எழுத தேவை இல்லை .இதை உங்களுக்கு விளங்க கூடிய திறமை இருக்கு ஆனால் அது உங்களுக்கு விருப்பமில்லை ]
 
புரியலையா .............................ரூம் போட்டு யோசிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை ................எனனில் இதற்கு மேல் விலாவாரியாக விளங்கப்படுத்த நீங்கள் கேரளா காரன் இல்லை ஒரு தமிழன் ..................படுத்திருந்து யோசித்து பாருங்கள் . :D  :D
  • தொடங்கியவர்

இப்படி நானும் கேள்விப்பட்டனான் சிலபேருக்கு காசு கொடுக்கப்படிருக்காம் , புலத் தமிழரையும் , தமிழ் நாட்டுத் தமிழரையும் சாட்டி , சிங்களம் ஒண்டும் கொடுக்காது எண்டு எழுத .

ஒரு கல்லில  இரண்டு மாங்காய்.

சிங்களம் செய்வதை நியாயப்படுதுவது ஒன்று, அத் தோடு புலத் தமிழரையும் தமிழ் நாட்டுத் தமிழரையும் குரல் கொடுக்க முடியாமல் செய்வது இரண்டு.

இந்த வேலையைச் செய்வதற்க்கு சிலருக்கு சிறிலங்கா மற்றும் இந்திய உளவு அமைப்புக்கள் காசு கொடுத்து அனுப்பி உள்ளதாக.

இவையும் நான் கேள்விப்பட்ட விடயங்கள் , இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை ஆனால் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில இருந்து கொண்டு தனிநாடு தனிநாடு எண்டு புணியவான்கள் கத்த, அதை சாக்காக வைத்து அர்சு மாகாண கொசு அடிக்கும் அதிகாரம் தாரதையும் இழுத்தடிக்கும். உலகத்துக்கும்தனிநாட்டு பூச்சாண்டி காட்டும். இது நிலத்து அவலத்தை நீட்டிக்கும். அதுதான் கோசான் கத்துறார்.

அரசு இப்போ மலை என நம்பி இருப்பது புலத்து வியாபாரிகள் செய்யும் தனிநாட்டு விளம்பரத்தைதானாம்.

இதை செய்யும் படி சிலருக்கு கொழும்பில் இருந்தே கொந்திராத்தும் கொடுக்கப்படிருக்காம்.

இவை நான் கேள்விபட்ட விசயங்கள். ஆதாரம்மெல்லாம்மில்லை.

புலம்பெயர் மக்கள் தனிநாடு என்று கடந்த 4 வருசமாக் கத்தினம். பிரபாகரன் கடந்த 35 வருசமாக் கத்தினார். அதுக்கு முதல்.. நீங்கள் எல்லாம்.. உங்க பாட்டன் கொப்பாட்டன்.. காலத்தில.. எல்லா உரிமையும் பெற்று சுதந்திர மனிசராத்தானே வாழ்ந்து வந்தனீங்க.

போங்கையா.. போய் போர்வை கிடந்தா போர்த்து மூடிக்கிட்டு.. கனவு காணுங்க.

பிரிட்டிஷ்காரன்.. செய்த அநியாயம்.. பொன்னம்பலம்.. இராமநாதன்கள் பல்லக்கிற ஏறச் செய்த அநியாயத்தால வந்தது.. இன்னும் தொடருந்து என்று சனம் அழுகுது. இவை கொஞ்சப் பேர்.. சம்பந்தனும்.. சுமந்திரனும்.. விக்கியும் பல்லக்கிற ஏறி.. பவனி வந்து.. எல்லாம் வாங்கித்தருவினம் என்று படம்காட்டினம்.

தனிநாடு கேட்காத.. மலையக மக்களே 120 வருசமா அதே லயலத்திலும்.. அதே வறுமையிலும்..கூலியிலும் வாழுதுகள்..!  இந்த நிலையில... இவை பூர்வீகத் தமிழர்களுக்கு சிங்களவனட்ட.. அதிகாரம்.. உரிமை பெற்றுக் கொடுத்திடுவினமாமில்ல. அதுவும் தனிநாட்டை கைவிட்டிட்டு..!

தனிநாட்டை கைவிட்டிட்டம்.. சிங்கக் கொடியை தூக்கிக் காட்டிட்டம்.. ஆனா இன்னும் சிங்களவன் நம்மள நம்பிறானே இல்லை.. என்று.. புலம்பிக்கிட்டு திரியுறதுகள் எல்லாம் புலம்பெயர் தமிழர்களுக்கு வேதாந்தம் படிக்கிறது தான் கொடுமை...! :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

இப்படி நானும் கேள்விப்பட்டனான் சிலபேருக்கு காசு கொடுக்கப்படிருக்காம் , புலத் தமிழரையும் , தமிழ் நாட்டுத் தமிழரையும் சாட்டி , சிங்களம் ஒண்டும் கொடுக்காது எண்டு எழுத .

ஒரு கல்லில  இரண்டு மாங்காய்.

சிங்களம் செய்வதை நியாயப்படுதுவது ஒன்று, அத் தோடு புலத் தமிழரையும் தமிழ் நாட்டுத் தமிழரையும் குரல் கொடுக்க முடியாமல் செய்வது இரண்டு.

இந்த வேலையைச் செய்வதற்க்கு சிலருக்கு சிறிலங்கா மற்றும் இந்திய உளவு அமைப்புக்கள் காசு கொடுத்து அனுப்பி உள்ளதாக.

இவையும் நான் கேள்விப்பட்ட விடயங்கள் , இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை ஆனால் உண்மை.

நாரதர் ஐயா உண்மையிலும் உண்மை ................அவற்றை முறியடிக்க ....................ஆப்பம் தீத்த ஒரு குழு எம்மவரிடம் இருந்து புறப்பட்டிருக்கு என்பதும் உண்மை .....................விரைவில் தெரியவரும் ........... :D

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் நான் ஆயுதபோராட்டம் தொடன்கியதியோ, ஏன் தொடங்கியது என்பதையோ குறைசொல்லவில்லை. அது ஒரு சுற்று, ஓடி முடிந்த்ஹாகி விட்டது. ஆனால் அடிப்படிம்பிரச்சினை அப்படியே இருக்கு. அதை தீர்க்க பழையபடி சம்ஸ்டியை தூக்கிப்பிடிப்பதை தவிர எமகு வேறு வழியில்லை.

நான் சொல்லும் வழியை ஒருக்கா யோசித்து பாருங்கோ

1) நிலத் தமிழரும் கூட்டமைப்பும் தொடர்ந்து சம்ஸ்டி கேட்டுப்போராடுகிறார்கள். தெரிவுக்குழுவில், ஆரளுமன்றத்தில், மாகாணசபையில், தூதுவர்களிடம், இந்த்ஹியாவிடம் இதை வலியுறுத்துகிறார்கள்.

2) தமிழ் நாட்டில் இலங்கை தமிழர்க்கு சமஸ்டி கொடு என்று நெடுமாறன், வைகோ, சீமான், மாணவர்கள் எல்லோரும் ஓரணியில் நின்ரு தம்மால் முடியுமஃனதை செய்து போராடுகிறார்கள்.

3) புலத்தில் இதே போல் எல்லா அமைப்புக்களும்சேர்ந்த்ஹு சம்ஸ்டிக்காக போராடுகிறார்கள். ச்மாந்த்ஹரமாக விசாரணை கோரியும் போராடுகிறார்கள்.

1+2+3 சேரும்போது, நாம் ஒரு நியாயமான தீர்வை பெற சாத்தியம் இருக்கிறது. இந்தியா மற்ரும் மேற்குலகும் நமது கோரிக்கையின்நியாயத்தை காணும்.

ஆனால் 2ம் 3ம் இப்போது வேண்டும் என்றே குறுக்காலும் நெடுக்காலும் ஓடவைக்கப்படுகிறது. இனமானிகள்ம்போல் வேடம் இடும் வியாபாரிகள் வேண்டுமென்றே 2ம் 3ம் தனிநாடு நோக்கி செலுத்துகிறர்கள். இதை காரணம் காட்டி, இந்தியா வையும் மேற்குலகையும் கட்டிப்போடும் அரசு, 1 ற்கு சமஸ்டி இல்லை, கொசுஅடிக்கும் அதிகாரம் கூட கொடுக்காமல் தவிர்க்கப்ம்பாக்கிறது.

தமிழன் சிறி அண்ணை யாழில் பலவருடமாய் உங்கள் கொமெண்டுகளுக்கு நான் விசிறி, இப்படி எழுதி அநியாயமாய் உங்களை களம் இழக்க கூடாது :(

  • தொடங்கியவர்

ஏன் சுழியரான சம்பந்தாராலும்  ,பலமான  இந்தியாவாலும் மகிந்தரிட்ட சமஸ்டியை பெற்றுத் தர ஏலாதோ? பிறகென்னண்டு சனத்துக்கு வாக்குக் கொடுத்து வாக்கு கேட்டவை.

ஒண்டுமே செய்ய ஏலாத கொசுக்களான புலம் பெயர் தமிழர் சொல்லியா மகிந்த சமஸ்டியத் தரப் போறார்?

பவர் இல்லாத புலம் பெயர் தமிழரால ஒண்டுமே செய்ய இயலாது, காகம் இருக்கப் பனம் பழம் விழும் எண்டு சொன்னதை மகிந்தவுக்கு திருப்பிச் சொல்ல வேண்டியது தானே?

சுத்தி சுத்தி பொய் சொன்னா , இப்படித் தான் லொஜிக் உதைக்கும்.

சூரியன் நான் ஆயுதபோராட்டம் தொடன்கியதியோ, ஏன் தொடங்கியது என்பதையோ குறைசொல்லவில்லை. அது ஒரு சுற்று, ஓடி முடிந்த்ஹாகி விட்டது. ஆனால் அடிப்படிம்பிரச்சினை அப்படியே இருக்கு. அதை தீர்க்க பழையபடி சம்ஸ்டியை தூக்கிப்பிடிப்பதை தவிர எமகு வேறு வழியில்லை.

நான் சொல்லும் வழியை ஒருக்கா யோசித்து பாருங்கோ

1) நிலத் தமிழரும் கூட்டமைப்பும் தொடர்ந்து சம்ஸ்டி கேட்டுப்போராடுகிறார்கள். தெரிவுக்குழுவில், ஆரளுமன்றத்தில், மாகாணசபையில், தூதுவர்களிடம், இந்த்ஹியாவிடம் இதை வலியுறுத்துகிறார்கள்.

2) தமிழ் நாட்டில் இலங்கை தமிழர்க்கு சமஸ்டி கொடு என்று நெடுமாறன், வைகோ, சீமான், மாணவர்கள் எல்லோரும் ஓரணியில் நின்ரு தம்மால் முடியுமஃனதை செய்து போராடுகிறார்கள்.

3) புலத்தில் இதே போல் எல்லா அமைப்புக்களும்சேர்ந்த்ஹு சம்ஸ்டிக்காக போராடுகிறார்கள். ச்மாந்த்ஹரமாக விசாரணை கோரியும் போராடுகிறார்கள்.

1+2+3 சேரும்போது, நாம் ஒரு நியாயமான தீர்வை பெற சாத்தியம் இருக்கிறது. இந்தியா மற்ரும் மேற்குலகும் நமது கோரிக்கையின்நியாயத்தை காணும்.

ஆனால் 2ம் 3ம் இப்போது வேண்டும் என்றே குறுக்காலும் நெடுக்காலும் ஓடவைக்கப்படுகிறது. இனமானிகள்ம்போல் வேடம் இடும் வியாபாரிகள் வேண்டுமென்றே 2ம் 3ம் தனிநாடு நோக்கி செலுத்துகிறர்கள். இதை காரணம் காட்டி, இந்தியா வையும் மேற்குலகையும் கட்டிப்போடும் அரசு, 1 ற்கு சமஸ்டி இல்லை, கொசுஅடிக்கும் அதிகாரம் கூட கொடுக்காமல் தவிர்க்கப்ம்பாக்கிறது.

தமிழன் சிறி அண்ணை யாழில் பலவருடமாய் உங்கள் கொமெண்டுகளுக்கு நான் விசிறி, இப்படி எழுதி அநியாயமாய் உங்களை களம் இழக்க கூடாது :(

உங்கள் தாயக மக்கள் மீது உள்ள அதே அக்கறையே புலம் பெயர்ந்துவாழ் உணர்வாளர் ,மக்கள் போராளிகள் அனைவர்க்கும் உண்டு என்ற கோணத்தில் சிந்தியுங்கள் .எத்தனை எத்தனை  அனுபவங்கள் ,பேச்சு வார்த்தைகள் ,ஏமாற்றங்கள் ,சூழ்ச்சிகள் ,துரோகங்கள் இவற்றை பாடமாக ,அனுபவமாக கொண்டு எமது இலக்கினை ,தேவையினை அடைவதற்காக முய்யற்சிகள் மேற்கொள்வது தவறா .................போராட்டமும் ,விடுதலைப்பாதையும் பிழையான பாதையில் சென்றதானால் நாம் தோல்வியினை அடைந்தோம் என்று சிந்திப்பவர்கள் ,அதை நியாயப்படுத்த விரும்புபவர்கள் நான் மேல் சொன்ன காரணங்களை ஏன் பிழை என நினைக்கிறார்கள் .என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள் .............ஓட்டு மொத்தத்தில் அப்பட்டமான ஓர் உண்மை நாம் பலமாக இருந்த போதிலேயே எம்மை உலக சக்திகளுடன் நசுக்கிய ,நசுக்க நினைத்த கொடூரமான சிங்கள அரசை நாம் பரந்த விழிப்புணர்வுடன் தற்போது பலம் அற்ற நிலையில் பார்ப்பது அணுகுவது சால சிறந்தது ..........அந்த வகையில் அன்று என்னத்தை பார்த்தோமோ அதையே இப்பவும் பார்க்கிறோம் ..........எம் மக்கள் நாம் ,எம் மண்ணில் மனிதர்களாய் மனித மாண்புள்ளவர்களாய் வாழனும் ................இதை ஏற்படுத்தி தர எந்த சக்தி சரியானது என்பதை தீர்மானிக்கும் அத்தனை பொறுப்பும் எம்மையே சாரும் ....நாமே நகரவேண்டும் ,நகர்த்த வேண்டும் .எனனில் இன்னும் நாம் கண்ட அந்த உண்மையான நேர்மையான சக்தியான தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் சக்தியை காணவில்லை ...............அப்படி கண்டிருந்தால் நீங்கள் இவ்வளவு குத்தி முறிந்திருக்கவேண்டிய தேவையுமில்லை ..............எல்லாம் சாதாரணமாய் நடக்கும் .நன்றிகள் . :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.