Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீ.வி. விக்கினேஸ்வரனும் டக்ளஸ் தேவானந்தவும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது, சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் டக்ளஸ் தேவானந்தவுக்கும் இடையே சில வேற்றுமைகளையும் பல ஒற்றுமைகளையும் மட்டுமே அவதானிக்க முடிகின்றது. அதனால், அந்த இரு மனிதர்கள் குறித்தும் ஆராயப்படவேண்டிய கட்டாயம் தமிழர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

vigneswaran_mahinda_7.jpg

விக்கினேஸ்வரனுக்கு முன்னைய காலத்தில், டக்ளஸ் நீதியரசராகப் பதவி வகிக்காவிட்டாலும், தமிழீழப் போராட்ட களத்தில் ஒரு போராளியாக அறியப்பட்டிருந்தார். அந்தக் காலத்தில் உருவான ஒவ்வொரு போராளியும், அவர்களது தலைவர்களும் ஒரு நீதியரசருக்கு இல்லாத மரியாதைக்கு உரியவர்களாகவே தமிழ் மக்களால் மதிக்கப்பட்டிருந்தனர். அந்தக் கௌரவம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கிடைத்திருந்தது. 

விக்னேஸ்வரன் போலவே டக்ளஸ் தலைவனாக வராமலேயே தமிழ் மாகாணம் ஒன்றின் முதலமைச்சராக வரமுடியாது போயிருந்தாலும், ஒரு குழுவுக்குத் தலைவனாகி, அதன் மூலமாக சுமார் மூன்று சதாப்தங்களாக சிங்கள அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றார். 

இருவர் நிலையிலும் சிறு வேறுபாடு என்னவெனில், டக்ளஸ் தேவானந்தவை தமிழ் மக்கள் புரிந்து கொண்டதனால், அவரால் தமிழ்த் தேசிய தளத்தில் தனக்கான ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. விக்கினேஸ்வரன் மக்களால் அறியப்படுவதற்கு முன்னதாகவே அவர்களது தலைமைக்கு உரித்துடையவராகி, அதனால் பெற்ற செல்வாக்கினை அவர் தெரிந்தே தொலைத்து வருகின்றார். 

வடமாகாண முதல்வராக விக்கினேஸ்வரன் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையிவ் திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட போது, அங்கே டக்ளசும் இருந்தார். இருவரும் கை குலுக்கிப் பரஸ்பரம் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். 

அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அந்த இருவர் முகத்திலும் புன்னகை இருந்தது. தாடி இருந்தது. கண்ணாடி இருந்தது. தமிழர் பாரம்பரிய உடையுடன் பிரமிக்கத்தக்க ஒற்றுமையுடன் அவர்களைப் பார்க்க முடிந்தது. 

தமிழினத்தின் விரோதிகளான கொலைகார ராஜபக்ஷக்களிடம் உறவு வைத்துக்கொண்ட காரணத்தினால் டக்ளஸ் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். தமிழர்களின் நிராகரிப்புக்குள்ளான டக்ளஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக சிங்களத்தின் கைத்தடியாக மாற்றம் பெற்றார். 

இப்போது விக்கினேஸ்வரன் கூறியது போலவே, டக்ளசும் 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்று முழக்கியிருந்தார். இறுதியில், அவருக்கு மிஞ்சியது தாடியும், கண்ணாடியும், சிறு தொகையினரான சமூக விரோதிகளின் கூட்டும் மட்டுமே. தமிழ் மக்களது ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்ட டக்ளஸ் அந்தக் காரணத்திற்காகவே சிங்கள தேசத்தின் அமைச்சராக கௌரவிக்கப்பட்டுள்ளார். சிங்களப் படையின் முழுமையான பாதுகாப்பு தமிழ்த் தேசியத்தின் கோபப் பார்வையிலிருந்து அவரை இப்போதும் காப்பாற்றுகின்றது. 

விக்கினேஸ்வரன் இப்போதுதான் டக்ளஸ் பாணியிலான முழக்கத்துடன் சிங்கள ஆட்சியாளர்களுடன் கை குலுக்க ஆரம்பித்துள்ளார். டக்ளசைப் போலவே, அவரிடமும் தாடியும், கண்ணாடியும், சில கைத் தடிகளும் இருக்கின்றன. கூடவே, தமிழ்த் தேசியத்தின் கோபப் பார்வையும் இருக்கின்றன. இனி, அடுத்த கட்டமாக, தமிழ் மக்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயமும் உருவாகப் போகின்றது. ஏனென்றால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற தமிழ்த் தேசிய விம்பத்தை முகமூடியாக அணிந்து தான் பெற்ற வெற்றியை இப்போது அவர் சிங்களப் போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றும் கேடயமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார். 

சிங்கள ஜனாதிபதியின் முன்பாகப் பதவிப் பிரமாணம் செய்யமாட்டேன் என்ற அவரது வாக்குறுதியையே அவர் தோற்கடித்துவிட்டார். இது தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ்த் தேசிய தளத்திலும் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. 

சிங்களக் கொடூரங்களுக்குத் தமது உறவுகளைப் பலி கொடுத்தவர்களும், தமது உடலை ஊனமாக்கிக் கொண்டவர்களும், தம்மையே இழந்தவர்களும் நிறைந்த தமிழீழ மண்ணில் விக்கினேஸ்வரன் இனிமேல் அச்சமின்றி நடமாட முடியாது என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் நன்றாகவே பயன்படுத்தப் போகின்றார்கள். புதைகுழியும் மறுக்கப்பட்ட மாவீரர்களும், அவர்களை விதைத்த மறவர்களும் கண் சிவந்து நிற்கின்றார்கள். ஏன்...? சிங்களக் கொடூரன் ராஜபக்ஷ முன்பாகப் பதவிப் பிரமாணம் செய்யக்கூடாது என்று நடைபயணம் மேற்கொண்ட தம்பிராசாவும், ராஜபக்ஷவின் கொடூரக் கரங்களில் தன் கணவனை ஒப்படைத்துவிட்டு, அவரது கதி தெரியாமல் கலங்கி நிற்கும் அனந்தி எழிலனும் விக்கினேஸ்வரனை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்று விக்கினேஸ்வரனும் நம்பப் போவதில்லை. 

இனி, வட மாகாணத்தின் முதலமைச்சர் சிங்களப் படைகளின் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே அமர்ந்திருந்து பதவி வகிக்கப் போகின்றார். அவருக்குப் பாதுகாப்பு நீடிக்க வேண்டுமானால், சிங்களப் படைகள் அங்கே நிலைகொண்டிருக்க வேண்டும். இதுவே, தமிழீழ மக்களது ஜனநாயகம் பெற்ற பெரு வெற்றியாக நீட்சி செறப் போகின்றது.

- இசைப்பிரியா

 

http://www.sankathi24.com/news/34126/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதப்பட்ட சிறுபிள்ளைத்தனமான ஒப்பீடு.  மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது எப்படி என்பதனை சிறப்பாக விளக்கும் ஒர் ஆவணமாக இதைப் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும்!

அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அந்த இருவர் முகத்திலும் புன்னகை இருந்தது. தாடி இருந்தது. கண்ணாடி இருந்தது. தமிழர் பாரம்பரிய உடையுடன் பிரமிக்கத்தக்க ஒற்றுமையுடன் அவர்களைப் பார்க்க முடிந்தது. 

அருமையான ஒப்பீடு. ஒரு வாய், மூக்கு,நெற்றி, இரண்டு கண். காது கை, கால்கள்................

 

உள்ளுகுள் கோமணம் கட்டியிருந்தகளா அல்லது underwear போட்டிருநதவர்களா என்பது தெரியாது போலை. இல்லையென்றால் அதையும் சேர்த்திருந்திருப்பா. :lol:  :lol:  :lol:

 

<_<

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் சந்துக்குள் சிந்து பாடுகிறார்.இவர்களெல்லாம் ஆய்வாளர்கள்?

சங்கதி,பதிவு, ஈழமுரசு போன்றன தற்போது தமிழில்

முன்றாம்தர தளங்களாக உருவெடுத்துள்ளன. அண்மைக்காலங்களில் இத்தளங்களில் இது போன்ற கீழ்த்தரமான கட்டுரைகளே வெளி வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

புல வியாபாரிகளின் ஊடகங்கள் இவை. 2009 லேயே விலைபோய்விட்டனர். தமிழ் நெடும் கூட.

ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பிங்க்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டுரை.

 

சிவராம், இக்பால் அத்தாஸ் போன்றவர்களின் இடத்தினை நிரப்பக்கூடிய ஆய்வாளர்கள் இவர்கள்.

 

இசைப்பிரியா சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டவர். ஏன், அவர் பெயரை எல்லாம் சூட்டி இவ்வாறு எழுதி அவர்களை எல்லாம் கொச்சைப்படுத்துகின்றார்களோ தெரியாது.

 

 

புல வியாபாரிகளின் ஊடகங்கள் இவை. 2009 லேயே விலைபோய்விட்டனர். தமிழ் நெடும் கூட.

எல்லாரும் துரோகிகள் எண்டால் அப்ப யார் நல்லவர்கள்... ??? கூட்டமைப்பும் அதன் ஆதரவாளர்களுமா...??

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் துரோகிகள் எண்டால் அப்ப யார் நல்லவர்கள்... ??? கூட்டமைப்பும் அதன் ஆதரவாளர்களுமா...??

 

முதலில் நீங்கள் சொல்லுங்கள் ஆர்தாம்ல நல்லவய்ய்ய்ங்க?

முதலில் நீங்கள் சொல்லுங்கள் ஆர்தாம்ல நல்லவய்ய்ய்ங்க?

நீச்சயமாக அது நீங்கள் இல்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.