Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐங்கரநேசனுக்கும் எமக்கும் இனி எவ்வித தொடர்புமில்லை! மாவைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கடிதம்!!

Featured Replies

 

 


TNAயின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக் கட்சியின் அமைச்சரவையே- நாளையஅமர்வை ஏனையகட்சிகள் பகிஸ்கரிக்குமா?

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97528/language/ta-IN/article.aspx

அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு - சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ. - கடிதம் இணைப்பு

GTMN

Audio

 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக்கட்சியின் அமைச்சரவையே. அதனை பங்காளிக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரவை முடிவு தொடர்பாக கூட்டமைப்பின் பேரினி விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பொய்யானது. அது வெறுமனே சிலவேளைகளில் தமிழரசுக்கட்சியினது அமைச்சரவையாக இருக்கலாம் எனவும் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார். 
 
இதனிடையே நாளைய அமைச்சரவை பதவியேற்பு மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வுகளை தங்கள் கட்சி பகிஸ்கரிக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இன்றிரவு தமது கட்சியின் மத்திய குழு ஒன்று கூடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
 
அதே வேளை தங்கள் சகோதரர் சர்வேஸ்வரனிற்கு அமைச்சு கோருவதாக வெளியிடப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த அவர் அதற்காக சர்வேஸ்வரன் தகுதிகளை கொண்டிருக்கவில்லை என அர்த்தப்படாதெனவும் தெரிவித்தார். தங்கள் கட்சியின் நிலைப்பாடாக முல்லைத்;தீவில் தொடரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்ற திட்டங்கள் தொடர்பாக பேசுவதற்கு ஏதுவாக தமது கட்சிக்கு அமைச்சரவை வழங்கப்பட்டால் அது முல்லைதீவில் தெரிவானவர்களிற்கே வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே சம்பந்தனிடம் தெரிவித்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதனிடையே தமது கட்சியை சேர்ந்த பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுப்பதான அறிவிப்பு வெளியிலிருந்து கட்சிகளை உடைக்குமொரு தமிழரசுக்கட்சியின் சதியே எனவும் அவர் தெரிவித்தார்.
 
வடமாகாண சபை அமைச்சரவை விபரம் எனக்கூறி பட்டியலொன்று நேற்று மாலையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. அதில் பொன்னுத்துரை ஜங்கரநேசன் விவசாய அமைச்சராகத் தெரிவு செய்யப்படடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் 'ஐங்கரநேசன் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் முடிவு மட்டுமே என்பதுடன், அது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சம்மதத்துடன் நடைபெறவில்லை' எனவும் சுரேஸ் மேலும் தெரிவித்தார்.
 
கௌரவ மாவை.சோ. சேனாதிராசா, பா.உ,
பொதுச்செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
மாட்டின் வீதி
யாழ்ப்பாணம்
10.10.2013

அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பபட்டு தழிரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வடமாகாணசபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பொ.ஐங்கரநேசன் என்பவர் தனிப்பட்ட முறையில் வடமாகாணசபைக்கான அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாகவும் தனக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்த அமைச்சுப் பதவியானது தமிழரசுக் கட்சியினுடைய தலைமையின் பரிந்துரையின் பேரில், முதலமைச்சரினால் தனக்குத் தனிப்பட்டரீதியில் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதுவே உண்மையுமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான என்னுடன் பொ.ஐங்கரநேசன் அவர்கட்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பாக தமிழரசுக் கட்சியோ முதலமைச்சரோ எவ்விதக் கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ள வில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஒரு அமைச்சுப் பதவியை நீங்கள் வழங்க விரும்பினால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்குமாறு நான் கோரியிருந்தபோதிலும் என்னுடன் எவ்விதக் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படாமல், முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே திரு பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளபடி, அவருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் எதிர்காலத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெளிவு படுத்துவதுடன் அவர் கூறியது போன்றே அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பானது தனிப்பட்ட முறையில் அவருக்கு வழங்கப்பட்டதென்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு எந்தவிதமான அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எதிர்காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஓர் அமைச்சுப் பதவியை வழங்கியதாக தவறானதும் பொய்யானதுமான பரப்புரைகளைச் செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்வதுடன் செய்ய மாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.
நன்றி.
இப்படிக்கு
சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ.,
செயலாளர் நாயகம்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
 
 
 

 

சபாஸ் சுரேஷ் ,அடுத்த தேர்தலுக்கு EPRLF(ஐங்கரன் )அணி உருவாக வழி வகுத்துள்ளீர்கள் .நீங்களும் மற்றைய கட்சிகளும் வெளியேறினாலும் தமிழரசுக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் .நீங்கள் எல்லோரும் பதவி கேட்டு குழப்புவீர்கள் என்று தெரிந்துதான் மக்கள் தமிழரசுக்காரருக்கு வாக்களித்து அதிகப்படியானவர்களை தெரிவு செய்துள்ளார்கள் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தனிமரம் தோப்பாகாது ஹரி.

 

தமிழரசுக் கட்சிக்கு தற்போது முதியவர்களின் வாக்கு வங்கியே உள்ளது. அத்தோடு, அவர்கள் மக்களுக்கு மத்தியில் சென்று பிரச்சாரம் செய்வதும் இல்லை. அத்தோடு, தனிப்பட்ட ரீதியாகவோ அமைப்பு சார்பாகவோ அதாவது, சனசமூக நிலையங்களோ, சமூக அமைப்புக்கள் மத்தியிலோ தமிழரசுக் கட்சியினர் செல்வதும் இல்லை. அவர்களின் முதுமை விடாது.

 

ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட் ஆகியனவற்றுக்கு பெருமளவிலான இளைய மற்றும் நடுத்தர வயதினரின் வாக்கு வங்கிகள் உள்ளன. அவர்கள், தாம் முன்னர் விட்ட தவறுகளுக்கு பிராயச்சித்தமாக மக்களுக்கு தம்மால் இயன்றளவு உதவிகள் புரிந்து வருகின்றனர்.

 

ரெலோவுக்கு மன்னாரிலும் புளொட்டுக்கு வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்திலும் செல்வாக்கு நிறையவே உள்ளன. அதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்புக்கும் செல்வாக்கு உள்ளன.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுமாயின் அதற்கு தார்மீகமான முழுப்பொறுப்பினையும் சம்பந்தன், மாவை, சுமந்திரன் தற்போது இவர்களுடன் இறுதியாக இணைந்து கொண்ட சி.விக்கினேஸ்வரனும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

தனிமரம் தோப்பாகாது ஹரி.

 

தமிழரசுக் கட்சிக்கு தற்போது முதியவர்களின் வாக்கு வங்கியே உள்ளது. அத்தோடு, அவர்கள் மக்களுக்கு மத்தியில் சென்று பிரச்சாரம் செய்வதும் இல்லை. அத்தோடு, தனிப்பட்ட ரீதியாகவோ அமைப்பு சார்பாகவோ அதாவது, சனசமூக நிலையங்களோ, சமூக அமைப்புக்கள் மத்தியிலோ தமிழரசுக் கட்சியினர் செல்வதும் இல்லை. அவர்களின் முதுமை விடாது.

 

ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட் ஆகியனவற்றுக்கு பெருமளவிலான இளைய மற்றும் நடுத்தர வயதினரின் வாக்கு வங்கிகள் உள்ளன. அவர்கள், தாம் முன்னர் விட்ட தவறுகளுக்கு பிராயச்சித்தமாக மக்களுக்கு தம்மால் இயன்றளவு உதவிகள் புரிந்து வருகின்றனர்.

 

ரெலோவுக்கு மன்னாரிலும் புளொட்டுக்கு வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்திலும் செல்வாக்கு நிறையவே உள்ளன. அதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்புக்கும் செல்வாக்கு உள்ளன.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுமாயின் அதற்கு தார்மீகமான முழுப்பொறுப்பினையும் சம்பந்தன், மாவை, சுமந்திரன் தற்போது இவர்களுடன் இறுதியாக இணைந்து கொண்ட சி.விக்கினேஸ்வரனும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

தமிழரசுக்கட்சி மாதிரி ஆலமரம் தோப்பாக வேண்டியதில்லை. ஒவ்வொரு விழுதும் ஒரு மரமாகிவிடும். 

 

தாங்கள் நிறையத்தான் தேர்தலில் முன்னரும் பின்னரும்  அரசியல் ஆய்வுகள் செய்தனீர்கள். ஆனால் வீட்டு சின்னத்திற்கு 80% மக்கள் வாக்களித்தவர்கள். 

 

மந்திரிப்பதவி ஏற்றார் என்பதற்காக அவரை கட்சியில் நின்று மாவைக்கு ஒரு கடிதம் எழுதுவது போன்ற ஒரு செயலுடன் அவரை இவரால் பதவி நீக்க முடியுமாயின். EPRLF யை கூட்டமைப்பில் வைத்திருப்பது சர்வாதிகாரத்தையும் கூட்டமைப்பில் இணைப்பது போன்றது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின் வாக்கு வங்கியே முதியவர்கள் தான் காலம் செல்ல செல்ல அது குறைந்திடும் கூட்டமைப்பில் இருக்கும் மற்றை நான்கு கட்சிகளும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சியை கலட்டி விட்டு போட்டி போட்டால் நிச்சயம் தமிழ் அரசு கட்சியின் வாக்கு வங்கியை உடைக்கலாம் சுரேஷ் ஒரு சிறந்த பேச்சாளர் இராணுவத்துக்கு எதிராக பல போராட்டங்களை ஜனநாயக வழியில் முன்னின்று நடத்தியவர் ஒரு கட்சியில் யார் அமைச்சராக வேண்டும் என்று அந்த கட்சி தலைமை தான் தீர்மானிக்க முடியுமே ஒழிய சம்மந்தன் விக்கி கும்பல் தீர்மானிக்க முடியாது

சித்தார்த்தன்,  சிவாஜிலிங்கம், ஆனந்தசங்கரி,  மற்றும் பல எலிகள் கூடி மணிகட்ட மாட்டா.

 

V.பொன்னம்பலம் போன்ற சிறந்த பேச்சாளிகள் தேர்தல் வெல்லவில்லை. தர்மலிங்கம் மாதிரி பேசவே தெரியாவர்கள்  தேர்தலில் வென்றார்கள். 

 

அரசு தேர்தலில் 10, 12 சுயேட்சை கட்சிகளை களம் இறக்கியது. போன இடம் தெரியாது.

 

EPRLF தான் மாவை முதலமைச்சராக கூடாது என்று விக்கினேஸ்வரனை கொண்டு வரப்பண்ணியது. மாவை விட்டுக்கொடுத்தார். தனக்கு வரவேண்டிய பதவியை தியாகம் செய்தார்.

 

EPRLF இந்தியாவின் நேரடி தலையீடு இல்லாமல் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாவது கஸ்டம்.  வரதரை தூக்கி நிறுத்தியது போல இனி இந்தியா செய்யவும் மாட்டாது. 

 

 

 

 

Edited by மல்லையூரான்

காலம் பதில் சொல்லும் .பொறுமையாக காத்திருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் காலம் பதில் சொல்லும் பழசுகள் எல்லாம் மண்டைய போட தமிழ் அரசு கட்சியின் வாக்கு வங்கி எங்கே போகுதெண்டு பாப்பம்

சுண்டல், 

 

விறுவிறுப்பான ஆட்சி செய்ய இளைஞர்கள் தேவை. அமெரிக்கா, பிருத்தானியா, கனடா, அவுசி எங்குமே இன்றைய கால கட்டத்தில் பழையவர்கள் இல்லை. இந்த நாடுகள் சுறு சுறுப்பான அரசியல் தேவையில் இருக்கின்றன. பாரிய பொருளாதார நெருக்கடியை அந்த நாட்டுமக்கள் உணருகின்றார்கள். ஆனால் அது வல்ல இலங்கையின் கதி.  (அவர்கள் சந்திர மண்டல அரிசிக்காக காத்திருப்பவர்கள்). அதனால் தெற்கிலோ வடக்கிலோ இளைஞர்கள் இன்னும் மேலே வரவில்லை. அதுதான் அவர்களின் தேவை. சம்பந்தர் போனால் தமிழரசுக்கட்சியின் தலைமை விக்கினேஸ்வரனுக்கு வரும் சந்தர்ப்பம் கூடவே அல்லாமல் சிறீதரன் வர நிறையக் காலம் இருக்கு. அதற்கான அரசியல் சூழ்நிலைகள் அங்கில்லை. மாவை கூட வரம முடியாது என்பதைத்தான் அவரிடமிருந்து தட்டுண்டு போன முதலமைச்சர் பதவி காட்டுகிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்ற ஒற்றை நாமத்தால் கட்டி வைத்திருந்த கூட்டமைப்பு.. சம்பந்தரின் சாணக்கியத்தின் வீரியத்தில் சிதைந்து சின்னாபின்னமாகி.. தமிழினத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வரும்.. அடுத்த அத்தியாயம் ஆரம்பம்.

 

ஈபி யோ.. ரெலோவோ.. புளொட்டோ.. ஈபிடிபி யோ.. கருணாவோ.. பிள்ளையானோ..கூட்டணியோ.. தமிழரசுக் கட்சியோ..  தமிழ் மக்கள் தனிச்சுச் சந்தித்து வெற்றி பெறுவது என்பது கனவிலும் எனி நடக்காது.. இதனை இவர்கள் புரிந்து கொள்ள மறுத்தால்.. மக்கள் அதனைப் புரிய வைப்பார்கள். அதனை புலம்பெயர் மக்களும் தாயக மக்களும் தமிழக மக்களும்..உணர்த்தி நிற்பார்கள்...!

 

சுரேஸ் மீண்டும்.. மண் கவ்வு அரசியலைத் தேடாமல்.. அதே நேரம் சம்பந்தரின்.. ஏதேச்சதிகாரத்திற்கு அடிபணியாமலும்.. தமிழ் மக்களின் நலனை.. தேசிய தலைவரின் எதிர்பார்ப்பை.. மாவீரர்களின் தியாகங்களை மனதில் இருத்தி செயற்படுதல் வேண்டும். மீண்டும் ஒரு முறை மண்டையன் குழு அரசியல் செய்ய தீர்மானித்தால்  விளைவு.. மோசமாகவே இருக்கும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

என்ன நெடுக்கு பேசுகறீர்கள். தற்போதைய அரசியற் சூழ்நிலையில் ரெலோ, புளட், ஈபிஆர்எல்எஃப் போன்றன மட்டுமல்ல புலிகளின் அரசியற் சித்தாந்தத்தை கொள்பவர்களாலும் தனித்துநின்று எதையும் சாதிக்க முடியாது. விடுதலைப்புலிகளின் வீரத்திற்கும் அவர்களின் தியாகத்திற்கும் மதிப்பு கொடுத்து அவர்கள் பின்னால் மக்கள் எழுச்சியுடன். திரண்டது உண்மை. தாங்களே உருவாக்கிய பலத்தை சரிவர கையாள தெரியாமல் பேச்சு வார்த்தைக் காலத்தில் தவறுகள் பல புரிந்து சறுக்கி வீழ்நது அப்பலத்தை இழந்து தோல்வியை தழுவிய பின் புலிகளின் அரசியலில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதற்கு சாட்சி புலிகளின் அரசியலை முன் நிறுத்திய கஜேந்திரன் அணியின் படு தோல்வி. யதார்த்தம் உணர்ந்த தம்மை தாமே நிர்வகிக்கும,கௌரவமான, அதேவேளை நடைமுறைச்சாத்தியமான தீர்வையே

மக்கள் விரும்புகின்றனர்.தனியே புலியெதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த டக்லசின் சரணாகதி அரசியலையும் மக்கள் நிராகரித்து இராணுவ அதிகார பண பலத்தை பாவித்த அவரின் திமிரை அடக்கியுள்ளனர்.

Edited by tulpen

பாரதியார் பாடல்கள் படித்துவிட்டு இன்று படுக்கைக்கு போகவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கு பேசுகறீர்கள். தற்போதைய அரசியற் சூழ்நிலையில் ரெலோ, புளட், ஈபிஆர்எல்எஃப் போன்றன மட்டுமல்ல புலிகளின் அரசியற் சித்தாந்தத்தை கொள்பவர்களாலும் தனித்துநின்று எதையும் சாதிக்க முடியாது. விடுதலைப்புலிகளின் வீரத்திற்கும் அவர்களின் தியாகத்திற்கும் மதிப்பு கொடுத்து அவர்கள் பின்னால் மக்கள் எழுச்சியுடன். திரண்டது உண்மை. தாங்களே உருவாக்கிய பலத்தை சரிவர கையாள தெரியாமல் பேச்சு வார்த்தைக் காலத்தில் தவறுகள் பல புரிந்து சறுக்கி வீழ்நது அப்பலத்தை இழந்து தோல்வியை தழுவிய பின் புலிகளின் அரசியலில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதற்கு சாட்சி புலிகளின் அரசியலை முன் நிறுத்திய கஜேந்திரன் அணியின் படு தோல்வி. யதார்த்தம் உணர்ந்த தம்மை தாமே நிர்வகிக்கும,கௌரவமான, அதேவேளை நடைமுறைச்சாத்தியமான தீர்வையே

மக்கள் விரும்புகின்றனர்.தனியே புலியெதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த டக்லசின் சரணாகதி அரசியலையும் மக்கள் நிராகரித்து இராணுவ அதிகார பண பலத்தை பாவித்த அவரின் திமிரை அடக்கியுள்ளனர்.

 

உங்களை விட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தேசிய தலைவரின் கீழான விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவத் தோல்வி குறித்தும் அவை தொடர்பான பின்னணிகள் குறித்தும் மக்களுக்கு அதிகம் தெரிகிறது. ஆனால் நீங்கள்... எரிக்சொல்கைம் போன்ற கையாலாகாதவர்களின் நிலையில் நின்று புலிகளை பார்க்கக் காட்ட நினைப்பது தான் கேவலமாகத் தெரிகிறது..!

 

மேலும்.. தேசிய தலைவர் அடையாளப்படுத்திய கூட்டமைப்பையும்.. அங்கத்தவர்களையும் மக்கள் அன்று தேர்ந்தெடுத்தார்கள். இன்று புலிகள் அடையாளப்படுத்தாமலே.. புலிகள் கொண்ட அதே நம்பிக்கையை.. கொள்கையை.. உறுதியைக் கொண்ட உண்மையாக மக்களுக்காக உழைக்கக் கூடியவர்களை கூட்டமைப்பு என்ற அதே தேசிய தலைவரின் அடையாளத்துக்குள்.. மக்கள் தெரிவு செய்யத் தயங்குவதில்லை. இதற்குக் காரணம்.. புலிகளால் தான்.. உண்மையில்.. சிங்கள.. இராணுவ மற்றும் ஒட்டுக்குழு அடக்குமுறைகளுக்குள் இருந்து தம்மை அரசியல் சமூக ரீதியில் விடுவிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் மக்கள் மத்தியில் இருப்பது தான்.

 

கூட்டமைப்பு என்ற அந்த தேசிய தலைவரின் அடையாளத்துக்கு வெளியில் போய்.. முன்னாள் புலிகள் நின்றால் கூடத் தோற்பார்கள். காரணம்.. தேசிய தலைவர் அவர்களையோ வேறு ஆட்களையோ அதற்கு வெளியில் தேர்தல் அரசியலில் அடையாளம் காட்டவில்லை. தேசிய தலைவர் சிங்கள தேசத்தின் தேர்தல் அரசியலில்.. தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்றால் தவிர வேறு வழியில்.. தமது பலத்தை காட்ட முடியாது என்று நம்பித்தான்... தமிழ் தேசியக்  கூட்டமைப்பு என்ற அந்த எண்ணக்கருவுக்கு செயல்வடிவம் கொடுத்தார். ஒரு காலத்தில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட.. தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியைக் கூட தேசிய தலைவர் உயிர்ப்பிக்க விரும்பி இருக்கவில்லை..!

 

மக்கள் அதனையே இப்போதும்.. எப்போதும் விரும்புகிறார்கள். கஜேந்திரன் என்ற தனி வேட்பாளர் தோற்கவில்லை. அவர் தேசிய தலைமையின் அடையாளத்தை விட்டு வெளியில போனது தான் தோல்விக்குக் காரணம். அதேபோல்.. சுரேஸோ.. சித்தார்த்தனோ.. மாவையோ.. சம்பந்தனோ.. கூட்டமைப்பை  விட்டு வெளியில் போய் வென்று காட்ட நினைத்தால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். இந்த சுரேஸ்.. சித்தார்த்தன்.. சங்கரி எல்லாம் தனிய நின்று தோற்றுப் போன பின் தான் தேசிய தலைவர் மக்களுக்கு அடையாளப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்து மக்கள் முன் வர முடிந்தது..!

 

கஜேந்திரன் மட்டுமல்ல.. கூட்டமைப்பை விட்டு வெளியே போய் தோற்ற சிவாஜிலிங்கம்.. மீண்டும் கூட்டமைப்புக்குள் நின்று வெற்றி பெற்றுள்ளமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

 

மக்கள்.. தேசிய தலைமையின் அத்தனை நகர்வுகளிலும் இப்போதும் நம்பிக்கை கொண்டே உள்ளனர். அதன் இராணுவத் தோல்வி என்பதை மக்கள் சரியாக விளங்கிக் கொள்வதோடு.. அது தலைமையின் சக்திக்கு மீறிய சர்வதேச சதிகளால்.. பலத்தால் நிகழ்த்தப்பட்ட ஒன்று என்பதையும் உணர்கிறார்கள். இருந்தும்.. தேசிய தலைமையின் இலட்சியத்தின் பால் மக்கள் இப்போதும் நம்பிக்கை கொண்டே உள்ளனர். தேசிய தலைவரும் புலிகளும்.. எமது மக்களுக்கு அடையாளப்படுத்திய.. சுயநிர்ணய உரிமை... தாயகக் கோடுபாடு.. சுயாட்சி.. சமஸ்டி.. சிங்கள ஆக்கிரமிப்பை அகற்றல்.. என்ற அந்த மக்கள் உரிமைக்கான.. பதங்களைச் சொல்லித்தான் விக்னேஸ்வரன் கூட வாக்குக் கேட்க முடிந்தது..!

 

தேசிய தலைவரின் மதிநுட்பமான.. தீர்க்கதரிசனம் மிக்க ஒரு வழிகாட்டலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு... என்ற சிந்தனை மக்களிடம் ஆழப் பதிந்துள்ளது. அதனை மீறி.. எவர் நின்றாலும் அவர்கள் தோற்பார்கள்..! அதேபோல்.. கூட்டமைப்பை தேசிய தலைமை விரும்பியதற்கு மாறாக.. தவறாக வழி நடத்த எவர் முனைந்தாலும் அப்போது கூட்டமைப்பும் தோற்கலாம்.. அதை மக்கள் செய்வார்கள். அதனை இன்று கூட்டமைப்புக்குள் இருந்து பதவி மோகம் பிடித்து அலைவோர்.. எதேச்சதிகாரம் பிரயோகிப்போர் புரிந்து கொள்ளத் தவறினால் மக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்..!

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் தேசிய தலைமை தமக்குக் காட்டிய ஒரு வலுவான ஜனநாயக நிறுவமைப்பாகவே நோக்குகிறார்கள். அதை சிதைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது.. இன்று அதன் முதன்மைப் பொறுப்புக்களில் உள்ள.. முன்னாள் இன்னாள் ஒட்டுக்குழு ஆட்களும்.. மிதவாதத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வோரும்.. சட்டம் படித்த.. படித்த மேதைகள் என்போரும்.

 

இவர்களின் இந்த சுய அடையாளங்களுக்காக அல்ல.. கூட்டமைப்பை தலைவர் ஸ்தாபிக்கும் எண்ணக்கருவை விதைத்தார். தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலமாக தமிழ் தேசிய அடையாளம் தன் வலிமையை கொள்கைகளை உலகிற்கும் சிங்களத்திற்கும் காட்டவே அதனை அவர் உருவாக்கினார். அந்த எண்ணகருவின் வெற்றிக்காக உழைத்தோர் பலர். அவர்களை மக்கள் இப்போதும் கெளரவிக்கவே விளைகின்றனர். அதேநேரம் சிதைப்போருக்கு.. சிதைக்க நினைப்போருக்கு நல்ல பாடமும் கற்பிக்கவே செய்கின்றனர்..!

 

சிறீலங்காவின் தேர்தல் அரசியலில் தேசிய தலைமையின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அப்பால் எனி ஒரு அரசியல் என்பதை தமிழ் மக்கள் விரும்பப் போவதில்லை..! அதனை சிங்களக் கட்சிகள் தமிழ் மக்களால் நிராகரிப்பட்டது மட்டுமன்றி... ஈபிடிபி.. பிள்ளையான் குழு.. கருணா குழு.. புளொட் போன்ற அடாவடி.. ஆயுத அரசியல் ஒட்டுக்குழுக்கள்..கண்ட படுதோல்விகள் மூலமும் காட்டி நின்ற்கின்றனர்.

 

இந்தக் கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல்.. புலிகள் இல்லாததால்.. மக்கள் ஒட்டுக்குழுக்களுக்கு வாக்களிக்கின்றனர் ஒட்டுக்குழு அரசியலை வரவேற்கிறார்கள்.. என்று ஒரு மாயைப் படம் காட்ட முனைந்தால்..அதற்கும்.. மக்கள் பதில் சொல்வார்கள்..! ஏலவே 1987 இலும் இப்படியான ஒரு மாயைக்கு மக்கள் முடிவு கட்டி இருந்தனர். எனவே உங்களைப் போன்றோர் உந்த சித்து விளையாட்டு கருத்தியலை விட்டு கள யதார்த்தத்தை சரியாக விளங்கிக் கொண்ட மக்கள் உணர்வுகளை தாயகத்திலும் புகலிடத்திலும் உள்வாங்கிக் கொண்டு கருத்துக்களை முன் வைக்க வேண்டும். அதுதான் தமிழ் மக்களின் பலத்தை இன்னும் இன்னும் அதிகரிக்கச் செய்யும். மாறாக.. ஒட்டுக்குழுக்களின் அராஜக பாசிச அரசியலுக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பதாக காட்ட முனையக் கூடாது. அது அவர்களை மீண்டும் மீண்டும் தவறாகவே வழிநடத்தும். மக்கள் சிந்தனையில் இருந்து அவர்கள் தூரப் போய் துரோகிகள் ஆகும் நிலையே தொடரும்..!  :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பச்சை முடிந்துவிட்டது....மேலே நீங்கள் எழுதியவை இன்றைய களயதார்த்தமும் உண்மையும்....இதுதான் இன்றைய எமது பைபிள்.குரான்,பகவத்கீதை,மகாவம்சம்..... D மேட்டுகுடி..பள்ளக்குடி...தலித்தியம்,அந்த இசம் இந்த இசம் எல்லாத்தையும் இனி உந்த முன்னாள் ஆயுத போராளிகள் இன்னாள்புலத்துத போராளிகள் கைவிடவேண்டும்....

பல வருட போராட்டத்தில் சிங்கள பேரினவாத அரசிடம் அரசியல்,இராணுவ, ராஜதந்திர ரீதியான அனைத்து போராட்டத்திலும். தோல்வியடைந்து அதல பாதாளத்தில் நின்று சர்வதேச நாடுகளின் உதவி மட்டுமே எம்து உரிமைகளை பெற உதவும் என்னும் கையாலகாத நிலையில் இருக்கும் நாம் எப்படி எரிக் சோல்கைமை கையாலகாதவர் என று கூறமுடியும். ஒருவேளை எமது போராட்ட தோல்விக்கும் இந்த வாய்க்கொழுப்பு தான் காரணமோ?

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.