Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஞ்சிய இரவும் நஞ்சே !!

Featured Replies

நந்தவனங்களை கடந்திருக்கிறேன் சிந்தை சிதறவில்லை. நினைவும் மனமும் நிறையவில்லை. ஆனால் என்றோ உரசிச் சென்ற அவள் சேலையின் வாசம் ஏன் மூக்கின் நுனியில் இன்னும் எஞ்சியிருக்கிறது. கூடினால் ஓடிவிடும் உடலால் கொண்ட மோகம். அணையாமலே எரிந்து கொண்டிருக்கிறது  உள்ளத்தில் அவள் சேலை தீண்டிய சின்னஞ் சிறிய நெருப்பு. எண்ணக் கதுப்புகளில் அணைய விரும்பி அவள் தீண்டிச் சென்ற இந்தக் கரங்களை தடவிப் பார்க்கிறேன்.....இனிமையான அந்த இறந்த காலத்தை இந்தக் கவிகள் இன்னமொருமுறை மீட்டுத் தருகிறது

விசும்பின் வெண்துளிகள் பூமியைப் நிரப்பும் இன்னிலவுப் பொழுதில், சுனையில் நனைந்து பூக்கள் புணைந்து நெற்றித் தரள நீர் உருளும் அவள் இளமேனி அழகை அள்ளிப் பருகி,
இடை தழுவி
இமை மூடி
இதழ் ஒற்றி
இன்பம் துய்க்காமல்
இன்னும் ஏன் ஊடலோ?

மஞ்சத்தில் துஞ்ச ...
நெஞ்சம் கெஞ்சும் அஞ்சுகம் அவள் தஞ்சம்.
கோபம் விஞ்ச எஞ்சிய இரவும் நஞ்சே !!

 

 

அந்த முத்தொள்ளாயிரப்  பாடல் இதுதான்

 

யான் ஊடத் தான் உணர்ந்த யான் உணரா விட்டதன் பின்
தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் – தேனூறு
கொய் தான் வழுதி குளிர் சாந்து அணி அகலம்
எய்தாது இராக் கழிந்த வாற

 

 

விளக்கம்:
நான் பொய்க்கோபம் கொண்டு ஊடினால் அவன் என் பொய்க்கோபம் தீர்க்க தக்க சமாதனம் கூறி ஊடலைப் போக்க முன்வருவான். ஆனால் நான் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஊடலைத் தொடருவேன். இதனைக் கண்ட அவன் பிறகு என்னோடு ஊடல் கொள்ளுவான். நான் அவனைத் தேற்ற முற்படுவேன். ஆனால் அவன் அதற்க்குச் செவி சாய்க்க மாட்டான். இப்படியாக தேன் சிந்தும் வாச மலர்களை சூடிய எம் மன்னனின் சந்தனம் பூசிய மார்புகளில் தழுவி இன்பம் அடையாது வீணாக இந்த இரவுப் பொழுது கழிகிறதே !!

 

குறிப்பு: களவு கொள்ளும் கவிக் கானகத்தின் தொடர்ச்சியாக எழுதப்பட்டது..

Edited by ஆதித்ய இளம்பிறையன்

அருமை.
 
 
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
 
 
- திருவள்ளுவர்
  • தொடங்கியவர்

 

அருமை.
 
 
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
 
 
- திருவள்ளுவர்

 

 

நீண்ட ஊடலுக்குப் பின் செய்யும் ஓர் இறுக்கமான தழுவல் மாதிரி இதயத்தை உடைக்கும் உணர்வு வேறேதும் கிடையாது !!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கு அமுதென்று பேர்.. அருமை அண்ணா.. நன்றி அண்ணா பகிர்விற்கு..

  • கருத்துக்கள உறவுகள்

தலைவிதான் பெரும்பாலும் ஊடுவாள்.
தலைவன் இவ்வூடலைத்தீர்த்து வைக்க முயற்சிப்பான்
 

தன்னால் முடியாதவிடத்து வாயில் என்றழைக்கப்படும்
பாணன், விறலி,கூத்தர்,ஏவலர் செவிலி,காமக்கிழத்தி

என இன்னும் பலரையும் உதவிக்கு அழைப்பான்.
இவர்கள் மூலமாகத் தலைவியின் ஊடலைத் தீர்த்து
இருவரும் இன்றிணைவர்.

 

நன்றி ஆதித்ய இளம்பிறையன்  .

  • கருத்துக்கள உறவுகள்

----

மஞ்சத்தில் துஞ்ச ...

நெஞ்சம் கெஞ்சும் அஞ்சுகம் அவள் தஞ்சம்.

கோபம் விஞ்ச எஞ்சிய இரவும் நஞ்சே !!

-----

 

கவிதை நன்றாக.... உள்ளது. ஆதித்யன்.

இது.... நெடுக்கரின் கண்ணில் படக் கூடாது என்பதே... என் பிரார்த்தனை. :D  :lol:

  • தொடங்கியவர்
 

 

தமிழுக்கு அமுதென்று பேர்.. அருமை அண்ணா.. நன்றி அண்ணா பகிர்விற்கு..

 

தமிழ் என் உயிருக்கு நேர் !!

 

தலைவிதான் பெரும்பாலும் ஊடுவாள்.
தலைவன் இவ்வூடலைத்தீர்த்து வைக்க முயற்சிப்பான்
 

தன்னால் முடியாதவிடத்து வாயில் என்றழைக்கப்படும்
பாணன், விறலி,கூத்தர்,ஏவலர் செவிலி,காமக்கிழத்தி

என இன்னும் பலரையும் உதவிக்கு அழைப்பான்.
இவர்கள் மூலமாகத் தலைவியின் ஊடலைத் தீர்த்து
இருவரும் இன்றிணைவர்.

 

நன்றி ஆதித்ய இளம்பிறையன்  .

 

பெண்கள் ஊடினால்தானே கரம் தழுவ வாட்டமாக இருக்கும். :)

 

 

கவிதை நன்றாக.... உள்ளது. ஆதித்யன்.
இது.... நெடுக்கரின் கண்ணில் படக் கூடாது என்பதே... என் பிரார்த்தனை. :D  :lol:

 

நெடுக்கர் அளவுக்கதிகமாக மனித அவயங்களை ஆய்ந்துவிட்டார் என்று நினைகிறேன். அதனால்தான் இந்த வெறுப்போ என்னவோ ?

 

இப்படியாக தேன் சிந்தும் வாச மலர்களை சூடிய எம் மன்னனின் சந்தனம் பூசிய மார்புகளில் தழுவி இன்பம் அடையாது வீணாக இந்த இரவுப் பொழுது கழிகிறதே !! // தலைவிக்கு இது நியாயமான கவலை  :wub:  . இது ஆம்பிளையளுக்கு எங்கை தெரியப் போகுது  :lol:  :lol:  ?? ஆக்கதுக்குப் பாராட்டுக்கள் இளம்பிறையனாரே  :)  :)  .

  • தொடங்கியவர்

இப்படியாக தேன் சிந்தும் வாச மலர்களை சூடிய எம் மன்னனின் சந்தனம் பூசிய மார்புகளில் தழுவி இன்பம் அடையாது வீணாக இந்த இரவுப் பொழுது கழிகிறதே !! // தலைவிக்கு இது நியாயமான கவலை  :wub:  . இது ஆம்பிளையளுக்கு எங்கை தெரியப் போகுது  :lol:  :lol:  ?? ஆக்கதுக்குப் பாராட்டுக்கள் இளம்பிறையனாரே  :)  :)  .

 

நன்றி கோ.

  • தொடங்கியவர்

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

அருமையான இந்தப் பாடல் வரிகள் சொல்லும் செய்திகள் ஆயிரம்.. ..

வேரும் இல்லாமல் விதையும் இல்லாமல் விண் தூவுகின்ற மழையும் இல்லாமல் பூந்தோட்டம் பூக்குமா !!??
ஆம். காதல் என்ற பூந்தோட்டம் பூக்கும். அன்பு கொண்ட நெஞ்சில் எல்லாமே சாத்தியம்... மண்ணும் மாமலையும் விண்ணும் பொன்னும் பொருளும் எதுவுமே இவர்களுக்கு பொருட்டே இல்லை. ஈதல் இரத்தல் இந்த இரண்டிலும் இன்பம் இங்கு மட்டுமே.

 

முத்தொள்ளயிரப் பாடல் இதுதான்

அன்னையும் கோல்கொண்டு அழைக்கும் அயலாரும்
என்னையும் அழியும் சொல் சொல்லுவார் - உள்நிலையை
தெங்குஉண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண் தேர் வளவன் திறத்து


தாயாரும் என்னை தடி கொண்டு அடிக்கிறாள். ஊராரும்  என் உள்ளம் வருந்த பழி கூறுகிறார்கள். ஆனால் அவனை நான் பார்த்தது கூட இல்லை. எல்லாம் எதனால்?? அவன் பின்னே என் மனம் சென்றதனால் !!  தன நிலைமையை ஒரு அருமையான உவமையால் விளக்குகிறாள்.

தென்னை மரத்தில் தேங்காய் குரும்பையாக வளர்கின்ற போதே தேரை நோய் பற்றிக் கொள்ளும்.அதனால் தேங்காய் வளர்ச்சி குன்றும். இங்கு தேரை தேங்காயை உண்பதில்லை. ஆனால் உலகத்தார் தேரை உண்ட தேங்காய் என்று ஒதுக்கி தள்ளுவர். பாவம் தேரை தேங்காய் திண்ணாமலேயே தின்றதாக பழி ஏற்கிறது. என் நிலையும் அப்படித்தான் .

திரும்பவும் அந்தப்  பாடல் வரிகளை ஒரு முறை வாசியுங்கள் ..

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

Edited by ஆதித்ய இளம்பிறையன்

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி

                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

 

 

 

 

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே...!
 
 
http://www.youtube.com/watch?v=c_XFgobCGzA
 
 
என்னே அதிசயம் இன்று என் மனத்தைப் பறித்த அதே வரிகள் இங்கே அதுவும் இன்றே..!!
 
 
 
.
 

 

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் இலக்கிய வளம் வேறு எந்த மொழிகளிலும் இல்லை. நன்றி ஆதித்திய இளம்பிறையன் பகிர்தலுக்கு.


 

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே...!
 

 
 
என்னே அதிசயம் இன்று என் மனத்தைப் பறித்த அதே வரிகள் இங்கே அதுவும் இன்றே..!!
 
 
 
.
 

 

பூப்பதுசரி ஈசன். பூக்கள் வாசனையாக உள்ளனவா???? :D

 

 

அருமை ஆதித்யன். வாசித்து நயக்கும்படி மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்! :)

பகிர்வுக்கு மிக்க நன்றி :)

பூப்பதுசரி ஈசன். பூக்கள் வாசனையாக உள்ளனவா???? :D

 

வாசனையில் உலகமே மறந்தது.

  • தொடங்கியவர்

 

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே...!

என்னே அதிசயம் இன்று என் மனத்தைப் பறித்த அதே வரிகள் இங்கே அதுவும் இன்றே..!!

 

 

மேலே உள்ள முத்தொள்ளாயிர பாடலுக்கு "இவள்" என்ற வார்த்தை பொருந்துமே என்று தான் மாத்தினேன் :) அதையும் கண்டுபிடித்து விட்டீர்களே :) !! உங்கள் கருத்துக்கு நன்றி ஈசன்.

சுமேரியர்,  கவிதை உங்கள் வரவுக்கு நன்றி.

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • தொடங்கியவர்

அதிகமாக ஊடல், கூடல் பற்றியே எழுதியாச்சு. இன்றைக்கு ஒரு மாறுதலாக வீரத்தை பற்றி எழுதலாம்.

 

Elephant.jpg

 

 

உடல் மண்ணுக்கு

உயிர் தமிழுக்கு இதை

உரக்கச் சொல்வோம் உலகுக்கு !!

 

இனம் ஒன்றாக

மொழி வென்றாக

புது வேலை எடுப்போம் விடிவுக்கு !!

 

இரத்த குளத்தை நிரப்பி நிரப்பி

வெற்றித் தாமரையை பறிப்போம் !!

 

இருவர் படத்தில் வரும் இந்தப் பாடல் வரிகள் நரம்புகளை முறுக்கேரச் செய்யும்.

 

பழங்காலப் போர்க்களங்களில் போர் தொடங்குவதற்கு முன் பறை, பம்பை, திட்டை, தடாரி, முழவு, முருடு, கரடிகை, திண்டி போன்ற கருவிகளை ஒன்று சேர்த்து இசைக்கச் செய்வர். இந்த இசையைக் கேட்டு வீரர்களின் நரம்பு முறுக்கேறி, போர் வெறி பிறக்குமாம். மனிதர்களுக்கே இப்படியெனில் யானைகளுக்கு கேட்கவா வேண்டும்

 

இந்த முத்தொள்ளயிரப் பாடலை கொஞ்சம் கவனியுங்கள். 

 

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்

பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது

செங்கண் மாக்கோதை சினவெம் களியானை

திங்கள்மேல் நீட்டும் தன் கை

 

கொடிய போர்க்களம். வீரம் கொண்ட மன்னர்களின் விரிந்த வெண்தாமரை போன்ற வெண்கொற்றக் குடையை சேரனுடைய பட்டத்து யானை பிடுங்கி எறிந்து நொறுங்கச் செய்கிறது. சினம் சினம்!! பிடித்து எறிந்தும் அதன் கோபம் ஆறவில்லை. சினமிக்க அந்த யானை வானில் தெரியும் வெண் நிலவை பகை மன்னனின் வெண்கொற்றக் குடை   என்று எண்ணிக் கொண்டு அதையும் பிடுங்கி எறிய தன துதிக்கையை நீட்டுகிறதாம் !! என்ன கற்பனை !!

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

இளம்பிறையன் வாசிக்க நன்றாக இருக்கின்றன நீங்கள் தெரிவு செய்து இங்கு இணைக்கும்/ எழுதும் பாக்களும் பொருளும். நின்று நிலைத்து நிறைய வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் மட்டுமே இருக்கின்றது செயல் வடிவில் உடன் வர முடியாத பொழுதுகளில் இருப்பு நகர்கிறது. இருப்பினும் சின்னச் சின்னதாய் நீங்கள் இணைக்கும் , எழுதும் விடயங்களை ஆத்மார்த்தமாக இரசிக்கமுடிகிறது. நன்றிகள் பல.

  • தொடங்கியவர்

இளம்பிறையன் வாசிக்க நன்றாக இருக்கின்றன நீங்கள் தெரிவு செய்து இங்கு இணைக்கும்/ எழுதும் பாக்களும் பொருளும். நின்று நிலைத்து நிறைய வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் மட்டுமே இருக்கின்றது செயல் வடிவில் உடன் வர முடியாத பொழுதுகளில் இருப்பு நகர்கிறது. இருப்பினும் சின்னச் சின்னதாய் நீங்கள் இணைக்கும் , எழுதும் விடயங்களை ஆத்மார்த்தமாக இரசிக்கமுடிகிறது. நன்றிகள் பல.

 

நன்றி வல்வை. உங்கள் வாழ்த்துகள் எனக்கு புத்துணர்வே!!

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பதிவுகள்
தொடருங்கள் ஆதித்ய இளம்பிறையன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.