Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் தியாகு ஜயாவின் போராட்ட செய்தி உடனுக்குடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
thiyaku-seithy-1-20131014-150.jpg

இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார். சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார். இனியும் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இனியும் பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

  

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8CzLRpP7x0M

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=j9K3-GqpLAU

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=qKCpJ5mW0tg

 

 

thiyaku-seithy-1-20131014-450.jpg

 

 

எந்த நேரமும் தோழர் தியாகு கைது செய்யப்படும் நிலை

கொமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி 14 நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தோழர் தியாகுவின் உண்ணா விரத போராட்ட பந்தலை காவல் துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். எந்த நேரமும் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் தோழர் கைது செய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் தோழரின் ஆதரவாளர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர். தோழருக்கு ஆதரவு வழங்கி வருகின்றது மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு. இவர்கள் தோழர் தியாகுவின் தியாகத்தை மதித்து கடிதம் மூலம் தொடர்பும் கொண்டுள்ளனர்.

 

http://www.youtube.com/watch?list=UUxtXEUHS6NoVkFwtOw4R-8w&v=CLvvu7ds2tc&feature=player_embedded

http://www.youtube.com/watch?feature=player_embedded&list=UUxtXEUHS6NoVkFwtOw4R-8w&v=e_bDGWBquV8

 

thiyaku-seithy-2-20131014-800.jpg

 

 

thiyaku-seithy-3-20131014-800.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=94999&category=TamilNews&language=tamil

  • Replies 111
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா! உங்கள் விழிப்புணர்வை நாம் எல்லோரும் மதிக்கின்றோம். உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்.


சென்னை: "இலங்கையில், நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய முடிவுகளை எடுப்போம்,'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

""இலங்கையில், அடுத்த மாதம், நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது,'' என, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர், தியாகு,உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது, என, தி.மு.க.,வும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன்சிங்கை, நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், தி.மு.க.,தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுவது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய நல்ல முடிவை எடுப்போம், தியாகுவின் உண்ணாவிரத்தை கைவிட, அவரை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்தில் கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=826822

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! உங்கள் விழிப்புணர்வை நாம் எல்லோரும் மதிக்கின்றோம். உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்.

 

இந்த ஜயாவின் உடல் நிலை மிகவும் கவலைக் கிடன் தாத்தா....ஆனால் கொண்ட கொள்கையில் அப்படியே இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவின் எண்ணம் எது என அறிந்த எந்த மனிதனும்
தன் உயிரைப் பணயம் வைக்ககூடாது

 

அண்ணன்  தியாகு அவர்கள் தன் போராட்டத்தைக் கைவிட்டு
ஹிந்தியர்களின் முகத்தில் அவலத்தை ஏற்படுத்தவேண்டும்

 

அகிம்சைக்கும் காந்திக்கும் ஹிந்தியர்களுக்கும் இன்று எந்தவிதத் தொடர்பும் இல்லை

 

முள்ளை முள்ளால் எடுப்பதே இன்றைய ஜனநாயகம்

 

வேண்டாம் ஐயா தியாகு அவர்களே

உங்கள் உயிர் எங்களுக்கு இன்னும் பல வருடங்களுக்குத் தேவை

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு உயிரைக் காப்போம்! இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தோழர் தியாகுவின் உயிரைக் காப்போம் எனவும், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் அக்டோபர் 11 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை

P1120602-copy-300x225.jpg

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, “இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம்” சார்பில் வழக்கறிஞர் பாவேந்தன் தலைமையேற்றார். இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்க அமைப்பாளர் தோழர் மதியவன் தொடக்கவுரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தொழிற்சங்கத் தலைவர் திரு. கோ.வி.சிவராமன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் செல்வி, தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. இரா.அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி உரையாற்றினார்.

த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன், த.இ.மு. சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

தஞ்சை

DSC_0257-copy-300x198.jpg

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 10.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன் தலைமையேற்றார்.

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு துரை.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தோழஎ ஜெ. கலந்தர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் தோழர் பாரி, திராவிடர் விடுதலை கழகம் மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாஸ், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர் திரு. மதுபூர் ஆ.மைதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.

சிதம்பரம்

Photo0072-copy-300x225.jpg

Photo0077-copy-300x225.jpg

சிதம்பரம், வடக்கு வீதி தலைமை அஞ்சலகம் முன்பு காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் மூத்த நகர்மன்ற உறுப்பினர் – தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர் திரு. ஆ.இரமேஷ் தலைமைத் தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் துணை பொதுச் செயலாளர் திரு. உ.கண்ணன், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் திரு. வ.க.செல்லப்பன், ம.தி.மு.க குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு. பா.ராசாராமன், நாம் தமிழர் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. செ.புகழேந்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் திரு. பழமலை, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் நிறைவுறையாற்றினார். த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் நன்றி தெரிவித்து பேசினார்.

தமிழக உழவர் முன்னணி, சிதம்பரம் சிறுதொழில் முனைவோர் அமைப்பு, மனித உரிமைகள் கழகம், தமிழக மாணவர் முன்னணி உளளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டனர்.

பெண்ணாடம்

1291108_444612438981119_317844805_o-copy

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் தலைமையேற்றார்.

மனித நேயப் பேரவை அமைப்பாளர் திரு.பஞ்சநாதன், விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் திரு. விடுதலைகாசி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. ஜோதிவேல், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி தோழர் தி.ஞானப்பிரகாசம், த.தே.பொ.க. முருகன்குடி செயலாளர் தோழர் கனகசபை, தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு. இராமகிருட்டிணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.இ.மு தோழர் மணிமாறன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் ஆயம் தோழர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மதுரை

DSC02876-copy-300x225.jpg

DSC02896-copy-300x225.jpg

மதுரை தலைமை அஞ்சலகம் முன்பு தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில், காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தோழர் ஆரோக்கியமேரி தமையேற்றார். புரட்சி கவிஞர் பேரவை திரு. மறவர்கோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திரு. முதல்வன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் விடுதலைச்செல்வன், ஆதித்தமிழர்ப் பேரவை தோழர் செல்வம், தமிழ்நாடு மாணவர் இயக்கம் தோழர் திவ்யா, தமிழ் தமிழர் இயக்கம் தோழர் பரிதி, தமிழ்நீதி வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் இராசேந்திரன், வழக்கறிஞர் பகத்சிங், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தமிழ்ப்புலிகள் அமைப்புத் தோழர் பேரறிவாளன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு உரையாற்றினார்.

த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

ஓசூர்

2013-10-11-17.24.58-300x225.jpg

ஓசூர் இராம் நகரில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். மேநாள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் தோழர் ஒப்புரவாளன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் ராஜா, மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. குமரேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், த.க.இ.பே. அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் செம்பருதி உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

திருச்சி

திருச்சி காதிகிராப்ட் சந்திப்பு அருகில் மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தலைமையேற்றார்.

தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் நிலவழகன், புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் தோழர் ம.ஐயப்பன், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஆரோக்கியசாமி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் சினி விடுதலைஅரசு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. கலியப்பெருமாள், பெரியார் பாசறை தோழர் அன்பழகன், தமிழ்நாடு மக்கள் கட்சி வழக்கறிஞர் கென்னடி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அமைப்புக் குழு உறுப்பினர் கவிஞர் இராசாரகுநாதன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் தோழர் பிரபு, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்புத் தோழர் வெங்கடேசன், தோழர் வெட்டுபெருமாள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன் , தோழர் வெ.க.லட்சுமணன் ஆகியோர் உரையாற்றினர்.

http://kannotam.com/site/?p=3561

 

ஐயா! உங்கள் விழிப்புணர்வை நாம் எல்லோரும் மதிக்கின்றோம். உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்.

சென்னை: "இலங்கையில், நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய முடிவுகளை எடுப்போம்,'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

""இலங்கையில், அடுத்த மாதம், நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது,'' என, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர், தியாகு,உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது, என, தி.மு.க.,வும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன்சிங்கை, நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், தி.மு.க.,தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுவது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய நல்ல முடிவை எடுப்போம், தியாகுவின் உண்ணாவிரத்தை கைவிட, அவரை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்தில் கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=826822

 

இது தான் அந்த கடிதம்.

1375721_555198867887405_2105259042_n.jpg

 

(facebook)

 

ஆனால் இது போராட்டத்தை முடக்குவதற்காக பொய்யாக மன்மோகன் சிங்கால் கூறப்பட்டும் இருக்கலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி மாணவர்கள் முன்னிலையில் இன்று மதியம் 1 மணிக்கு தோழர் தியாகு உண்ணாவிரத்த்தை கைவிட்டு மாற்று வடிவ போராட்டத்தை கையிலெடுக்கவுள்ளார்.

-ஜோ பிரிட்டோ-

https://www.facebook.com/photo.php?fbid=534838636597232&set=a.218824778198621.53688.100002133006250&type=1&theater

Edited by செங்கொடி

தோழர் தியாகு சென்ட்ரல் அருகே இருக்கும் அரசுப் பொது மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையை எடுத் கொள்ள மாட்டேன் என்று கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார். தோழரின் உடலில் உப்புச் சத்து குறைவாக உள்ளதாகவும், சர்க்கரை அளவும் குறையும் போது, அவர் கோமா நிலைக்கு செல்ல கூடும் என்பதால், அவரின் கை நரம்பில் ஒரு ஊசி சொருகி வைக்கப்பட்டுள்ளது.

கோமா நிலைக்கு செல்வதானால் தலை சுற்றல், அதிகப்படியான வியர்வை போன்ற அறிகுறிகள் தென்படும். அப்படி தென்பட்டால், உடனடியாக கை நரம்பில் உள்ள ஊசி வழியாக சர்க்கரையை அதிகப்படுத்தி கோமா நிலைக்கு செல்ல தடுக்கும் மருந்து கொடுக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மற்றபடி, ஐ.சி.யூ பிரிவில் உள்ளபோதும் , எந்த வித சிகிச்சையோ, மருந்தோ எடுத்துக் கொள்ளாமல், தனது பட்டினிப் போராட்டத்தைத் 15-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் தோழர் தியாகு.

 

(facebook)

Edited by துளசி

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க்காதே ! என்று PASSPORT OFFICE, BSNL OFFICE, IT OFFICE , PF OFFICE அனைத்தையும் பூட்டி சீல் வைப்பு இன்று 15.10.13,அதிகாலை 3மணிக்கு !

8 தோழர்கள் கைது ! சென்னை மாவட்டஇளைஞர்அணி அமைப்பாளர் சசிக்குமார் தலைமையில், தந்தை பெரியார் தி.க.- சென்னை பொற்செல்வன், சங்கர், பழனி, வாசு, அப்பு, ரஞ்சித்குமார் ,வேலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர் !

(facebook)

தோழர் தியாகுவை தமிழருவி மணியன் அவர்கள் நேற்று சந்தித்த போது...

10312_1441345286091775_1507640146_n.jpg

 

(facebook)

960009_339372139542022_642016721_n.jpg

 

(facebook)

தமிழ் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து தனது 15 நாள் உண்ணாநிலை போராட்டத்தை தோழர் தியாகு அய்யா இன்னும் சற்று நேரத்தில் முடித்துக் கொள்கிறார்.

 

(facebook)

காமன்வெல் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கக் கோரி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காமன்வெல்த் அமைப்பில் ஒரு நாடு தொடர்வதற்கு என்னென்ன தகுதிகள் தேவையோ, அவற்றில் ஒன்று கூட இலங்கைக்கு இல்லை; காமன்வெல்த் அமைப்பிலிருந்து ஒரு நாடு நீக்கப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும் இலங்கைக்கு எதிராக உள்ளன. எனவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று பாமக உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். மாணவர்கள் அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், மத்திய அரசோ கேளாக்காதினராய் இருந்து வருகிறது. மாறாக, தமிழர்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்குவது, இலங்கையில் மின் நிலையங்களை அமைத்துத் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இன்னொருபுறம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை வரும் மார்ச் மாதத்திற்குள் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்; தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவத்தினரை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ள நிலையில், அதை ஏற்க முடியாது என்று இராஜபக்சே சவால் விடுகிறார். ஈழத் தமிழர்களுக்கு 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் படி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தும் நிலையில், தமிழர்களுக்கு நில அதிகாரமோ அல்லது காவல்துறை அதிகாரமோ வழங்கப்படாது என்று கூறி இந்திய அரசுக்கு அவமரியாதை செய்திருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

காமல்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் விசயத்தில் முடிவெடுப்பதற்கு முன்பாக தமிழக மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்வேன் என பட்டும்படாமலும் தான் பிரதமர் கூறுகிறாரே தவிர, தமிழர்களின் நலனைவிட இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது எனக்கு முக்கியமல்ல என்று உறுதிபட தெரிவிக்க மறுக்கிறார். எனவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த விசயத்தில் மழுப்பலாக பதிலளிப்பதை விடுத்து, தனது நிலைப்பாட்டை இந்தியா உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இந்த விசயத்தில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது; அம்மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, வரும் 23 ஆம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து, தீர்மானத்தின் நகலைக் கொடுத்து அதில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

 

(facebook)

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

காமல்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என்பதை வலியுறுத்தி அக்.1 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வரும் தோழர் தியாகு அவர்கள் இன்று மதியம் தனது பட்டினிப் போராட்ட வடிவத்தை முடித்துக் கொள்கிறார்.

புரசைவாக்கத்தில் உள்ள உழைக்கும் மக்கள் மாமன்றத்தில் அவரின் பட்டினிப் போராட்டத்தை முடிக்க தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் வந்திருக்கிறார்கள். அனைத்து தோழர்களும், இயக்கத் தலைமைகளும் போராட்டப் பந்தல் நோக்கி விரைகிரார்கள். தோழர்களும் அனைவரும் கலந்து கொள்வோம்

 

1395937_1441366626089641_1282789892_n.jp

 

(facebook)

Edited by துளசி

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே! – அக்டோபர் 17 ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம். நாம் தமிழர் கட்சி அறிவிப்பு.

 

(facebook)

முடிவுக்கு வந்தது தோழர் தியாகுவின் 15 நாள் உண்ணா நிலைப் போராட்டம்!

 

(இந்த இணைப்பில் சென்று வாசியுங்கள்)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130768&p=947968

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகுவை தமிழருவி மணியன் அவர்கள் நேற்று சந்தித்த போது...

10312_1441345286091775_1507640146_n.jpg

 

(facebook)

960009_339372139542022_642016721_n.jpg

 

(facebook)

 

 

படத்தைப் பார்த்தால் ஆள் ஜம்முன்னு இருக்கிறார்.எனக்கு விளங்காதது என்ன என்டால் கோமா நிலைக்குப் போகப் போற ஒருவர் இப்படி இருந்து மற்றவர்களோடு கதைக்க முடியுமா?என்பது தான் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

1395375_385367041596355_1596198502_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1395375_385367041596355_1596198502_n.jpg

 

என்ன நுணா சொல்ல வாறீங்கள்? ஜயா கோமா நிலை வரைக்கும் போனாலும் உட்கார்ந்து கதைக்கும் அளவுக்கு தெம்புடன் இருந்தார் என்று சொல்ல வாறீங்களோ.போட்டிக்கு எழுதுறதை விட்டுட்டு திரிக்கு சம்மந்தமாக எதையாவது எழுதுங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் இருந்தது நீர் அருந்தாமல்.. ஆனால் தியாகு ஐயா உணவு மட்டும் அருந்தாமல் இருந்தார் என நினைக்கிறேன். இடையில் காவல்துறை தூக்கிக்கொண்டுபோனபோது மருத்துவமனையில் உயிர்காப்பு நடவடிக்கை ஏதாவது எடுத்திருக்கலாம். இதனால் அவர் 15 நாட்கள்வரை இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்..

திலீபன் இருந்தது நீர் அருந்தாமல்.. ஆனால் தியாகு ஐயா உணவு மட்டும் அருந்தாமல் இருந்தார் என நினைக்கிறேன். இடையில் காவல்துறை தூக்கிக்கொண்டுபோனபோது மருத்துவமனையில் உயிர்காப்பு நடவடிக்கை ஏதாவது எடுத்திருக்கலாம். இதனால் அவர் 15 நாட்கள்வரை இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்..

காந்தி 17 முறை உண்ணாவிரதம் இருந்தார் 31 நாள் அதிக காலம் இருந்து இருக்கிறார்...

ஆனாலும் காந்தி ஒரு போதும் ஆங்கில அரசுக்கு எதிராக இருந்தது கிடையாது... தனது அன்பிக்குரியவர் யாரோ அவர்களை நோக்கியே உண்ணாவிரதம் இருந்தார்...

 

என்ன நுணா சொல்ல வாறீங்கள்? ஜயா கோமா நிலை வரைக்கும் போனாலும் உட்கார்ந்து கதைக்கும் அளவுக்கு தெம்புடன் இருந்தார் என்று சொல்ல வாறீங்களோ.போட்டிக்கு எழுதுறதை விட்டுட்டு திரிக்கு சம்மந்தமாக எதையாவது எழுதுங்கள்

 

நீங்கள் கருத்து கூறப் பாவிக்கும் படங்களின் திகதிகளையும் அந்த திகதி இணையத்தில் எங்கே இருக்கிறது என்றும் தர முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

உணவு உட் கொள்ளாமல்.... நீர் மட்டும் அருந்தி, 72 நாட்கள் வரை உண்ணாவிரதம் இருந்துள்ளார்கள்.

படத்தைப் பார்த்தால் ஆள் ஜம்முன்னு இருக்கிறார்.எனக்கு விளங்காதது என்ன என்டால் கோமா நிலைக்குப் போகப் போற ஒருவர் இப்படி இருந்து மற்றவர்களோடு கதைக்க முடியுமா?என்பது தான்.

 

பசியால் மயக்கம் அடைபவரை வெளியில் பார்த்து தன்னால் கூற முடியும் என்றூ ரதி வாதாடினால் அவர் மேலை நாட்டு மருதுவர்கள் பலரைவிட சிறந்த மருத்துவர். அதில் உண்மை இல்லை என்றால் அது அரசைக் காப்பாற்ற மிக தாழ் நிலைக்குச் சென்று தமிழருக்காக போராடுவோரை இழிவு படுத்தும் செயல்.

 

Severe hypoglycemia[edit]

People with type 1 diabetes mellitus who must take insulin in full replacement doses are most vulnerable to episodes of hypoglycemia. It is usually mild enough to reverse by eating or drinking carbohydrates, but blood glucose occasionally can fall fast enough and low enough to produce unconsciousness before hypoglycemia can be recognized and reversed. Hypoglycemia can be severe enough to cause unconsciousness during sleep. Predisposing factors can include eating less than usual or prolonged exercise earlier in the day. Some people with diabetes can lose their ability to recognize the symptoms of early hypoglycemia.

Unconsciousness due to hypoglycemia can occur within 20 minutes to an hour after early symptoms and is not usually preceded by other illness or symptoms. Twitching or convulsions may occur. A person unconscious from hypoglycemia is usually pale, has a rapid heart beat, and is soaked in sweat: all signs of the adrenaline response to hypoglycemia. The individual is not usually dehydrated and breathing is normal or shallow. Their blood sugar level, measured by a glucose meter or laboratory measurement at the time of discovery, is usually low but not always severely, and in some cases may have already risen from the nadir that triggered the unconsciousness.

Unconsciousness due to hypoglycemia is treated by raising the blood glucose with intravenous glucose or injected glucagon.

 

ரதி தமிழ் நாட்டு அரச வைத்தியர்கள் பரிசோதனையின் போது சொன்ன செய்திகளை படிக்கவில்லையா அல்லது  அரசை காப்பாற்ற தன்னை மலிவாக்குகிறாவா தெரியவில்லை. அவ தமிழ் நாட்டு அரச மருத்துவர்களின் கூற்றுக்களை படிக்கவில்லை என்றதை ஒத்துகொள்கிறாவாக இருந்தால் அது வேறு ஆனால் அவர்களின் கூற்றுகளை படித்த பின்னர் மறுத்துவாதாடுகிறாவாயின் அதில் உள் நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் இருந்தது நீர் அருந்தாமல்.. ஆனால் தியாகு ஐயா உணவு மட்டும் அருந்தாமல் இருந்தார் என நினைக்கிறேன். இடையில் காவல்துறை தூக்கிக்கொண்டுபோனபோது மருத்துவமனையில் உயிர்காப்பு நடவடிக்கை ஏதாவது எடுத்திருக்கலாம். இதனால் அவர் 15 நாட்கள்வரை இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்..

 

இசை அப்படியே அவர் நீர் குடித்துக் கொண்டு உண்ணா விரதம் இருந்தால்/குடிக்காமல் உ.விரதம் இருந்தால் ஏன் அவர் கோமா நிலைக்குப் போகப் போறார் என்று பொய்ச் செய்தி வெளியிடுவான்?...நீரோடு சேர்த்து குளுக்கோசை கொடுக்காமலா இருப்பார்கள்?...அவர் உண்ணா விரதம் இருப்பதும்,விடுவதும் அவருடைய விருப்பம் ஆனால் மற்றவரைப் பேய்ப் பட்ட காட்ட உண்ணா விரதத்தை கையில் எடுக்க கூடாது.
 
பரமேஸ்வரன் உண்ணா விரதம் இருந்த போதும்,விட்ட போதும் இங்கு யாழில் எத்தனை பேர் எத்தனை கதை கதைத்தார்கள்?...அவர்கள் எல்லாம் இப்ப வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள்

நீங்கள் கருத்து கூறப் பாவிக்கும் படங்களின் திகதிகளையும் அந்த திகதி இணையத்தில் எங்கே இருக்கிறது என்றும் தர முடியுமா? 

 

மல்லை தமிழருவி மணியன் எப்போது போய் இவரை சந்திச்சார் என்று தேடிப் பாருங்கள்.கோமாவிற்கு போன சிலரை நான் பார்த்திருக்கேன்.சிலர் திடீரென் கோமாவிற்கு போவார்கள்.இவர் கோமாவிற்கு போகப் போகிறார் என்று வைத்திய அறிக்கை சொன்னால் எப்படி இவரால் உட்கார்ந்து கதைக்க முடியும்?

மல்லை தமிழருவி மணியன் எப்போது போய் இவரை சந்திச்சார் என்று தேடிப் பாருங்கள்.கோமாவிற்கு போன சிலரை நான் பார்த்திருக்கேன்.சிலர் திடீரென் கோமாவிற்கு போவார்கள்.இவர் கோமாவிற்கு போகப் போகிறார் என்று வைத்திய அறிக்கை சொன்னால் எப்படி இவரால் உட்கார்ந்து கதைக்க முடியும்?

 

அதுதான் பள்ளிக்குடம் போகாமல் கருத்து களத்தில் விடாப்பிடியாக வாதாடுவதற்கும் தொழில்த் மருத்துவம் படித்துவிட்டு வந்து opinion சொல்லுவதற்கும் உள்ள வித்தியாசம்.  ஒன்று சபை ஏறாது என்று தெரிந்து திணிப்பது. மற்றயது காசை காசு என்று பார்க்காகமல் பணம் கொடுத்து வாங்குவது.

 

நான் "ஒப்பிட்ட படங்களை" பற்றித்தான் கேட்டிருந்தான்.  நீங்கள் தோழர் தியாகுவை அறிந்தவாராக இருந்திருக்க வேண்டும். அல்லது, முன்னர் அருச்சுன் சொன்னா மாதிரி இந்த உண்ணாவிரதத்திற்கு பிறகு அவர் யார் என்று தெரியவந்தவராக இருக்க வேண்டும். அதில் இரண்டாவதுதான் உண்மையால் என்றால் நீங்கள் 14ம் நாள் படத்தை மட்டும் பார்த்துவிட்டு எழுதுதும் கருத்தை போடும் குப்பைத்தொட்டியுமேதான் நாறப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் பள்ளிக்குடம் போகாமல் கருத்து களத்தில் விடாப்பிடியாக வாதாடுவதற்கும் தொழில்த் மருத்துவம் படித்துவிட்டு வந்து opinion சொல்லுவதற்கும் உள்ள வித்தியாசம்.  ஒன்று சபை ஏறாது என்று தெரிந்து திணிப்பது. மற்றயது காசை காசு என்று பார்க்காகமல் பணம் கொடுத்து வாங்குவது.

 

நான் "ஒப்பிட்ட படங்களை" பற்றித்தான் கேட்டிருந்தான்.  நீங்கள் தோழர் தியாகுவை அறிந்தவாராக இருந்திருக்க வேண்டும். அல்லது, முன்னர் அருச்சுன் சொன்னா மாதிரி இந்த உண்ணாவிரதத்திற்கு பிறகு அவர் யார் என்று தெரியவந்தவராக இருக்க வேண்டும். அதில் இரண்டாவதுதான் உண்மையால் என்றால் நீங்கள் 14ம் நாள் படத்தை மட்டும் பார்த்துவிட்டு எழுதுதும் கருத்தை போடும் குப்பைத்தொட்டியுமேதான் நாறப்போகுது.

 

ஓ நீங்கள் மெத்தப் படித்த மேதாவி தான்.சம்மந்தம்,சம்மந்தம் இல்லாமல் திரிகளில் நீங்கள் எழுதுவதில் இருந்தே தெரியுது.
 
//நீங்கள் கருத்து கூறப் பாவிக்கும் படங்களின் திகதிகளையும் அந்த திகதி இணையத்தில் எங்கே இருக்கிறது என்றும் தர முடியுமா?//
 
இது நீங்கள் மேலே எழுதியது.அதற்குரிய பதிலைத் தான் நான் தந்தேன்.இதில் எங்கே நீங்கள் "ஒப்பிட்ட படங்களை" பற்றித்தான் கேட்டிருந்தீர்கள்?
 
அந்த வீணாப் போனவரைப் பற்றி என்ட நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.உங்கட நேரத்தையும் தான் நீங்கள் வைத்தியர் அல்லவா? உங்கள் விருப்பப்படி அவர் கோமா நிலைக்கு போற நிலையை அடைந்தார் என்று எழுதி சந்தோசப்பட்டு கொள்ளுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.