Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு தீர்மானம் - சம்மந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01_05_2012_May_Day_Sampanthan_Ranil_afte

அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பவடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்றிற்கு சம்மந்தன் கருத்து தெரிவிக்கும் போது இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடமாகாண மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கான முழுமையான தீர்வு கிடைப்பதற்காகவும் அபிவிருத்திகள் கிராமிய ரீதியாக சென்றடைவதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பவடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் கொள்கையின் பொருட்டும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவுமே செயற்படுவதாக தென்னிலங்கையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை பரப்பும் இயந்திரங்கள் இல்லை என்பதை புரிந்தக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை வடக்கில் காணப்படுகின்ற இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள சம்பந்தன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுனர்கள் சிவில் பிரதிநிகளாக இருக்க வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை பரப்பும் இயந்திரம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.sankathi24.com/news/34443/64//d,fullart.aspx

எதிர்பார்த்தது தானே...??  

இதை 2009 ல் செய்து இருந்தால்  முகாம்களில் இருந்து மக்கள் கஸ்ரப்பட்டு இருக்க வேண்டி வந்து இருக்காது...  பலர் அதன் பின் காணாமல் போவதை கூட தடுத்து இருந்து இருக்க முடியும்...  

அப்ப எல்லாம் முகாம் பக்கம் கூட போகாது இருந்த கூட்டமைப்பு இண்டைக்கு அரசோடு சேருவது  அவர்களின் இயல்புக்கு பொருத்தமானது...  

சம்பந்தருக்கு சாத்த எல்லாரும் வெளிக்கிட்டு வாங்கொ.

தமிழ் தேசியம் எண்டால் என்ன எண்டு ஒருக்கா கூட்டமைப்பு அறிஞர்கள் விளங்கப்படுத்துங்கோ... ??? 

அறிஞ்சர்கள் வேணுமெண்டால் கூட்டமைப்பை நாடாதேங்கோ.

தமிழ் தேசியமேண்டால் யாழ் களத்தில தமிழர்கள் எல்லாம் சுத்தி நின்று சம்பந்தருக்கு அடிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் புலிகளின் கொள்கைக்கு எப்ப சார் பரப்புரை செய்தனீங்க..???! நீங்களா அப்படி ஒரு நினைப்பை சிங்களவனிட்ட வளர்த்ததற்கு புலிகள்.. தமிழ் மக்கள் என்ன செய்ய முடியும்.

சம்பந்தன் கிழக்கை கைவிட்டது போல.. வடக்கை தானாகவே மகிந்தவிடம் ஒப்படைக்கத் தயாராகி விட்டார்.

ஆனால்.. மக்கள் மனங்களில்.. மாறாத வடுவாக.. இந்த சிங்கள அரசின் கோர முகம் உள்ளது. சம்பந்தன் எனியும் ஜனநாயகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது..! மக்கள் நிச்சயம் இவர்களின் நகர்வுகளுக்கு எதிர்ப்புக்காட்டும் நிலைமை விரைவில் வரும். :icon_idea:

சம்பந்தன் நினைக்கிறார்.. தான் மகிந்தவுடன் இணைந்து செயற்பட்டால் மகிந்த மனம் இரங்கி இராணுவத்தை அகற்றுவார் என்று. அது வெறும் பகற் கனவு. இராணுவத்தை சர்வதேச அழுத்தங்களால் அன்றி வேறு எதனாலும் அகற்ற முடியாது. இந்த மாகாண சபை தேர்தலே.. புலம்பெயர் மக்கள் எடுத்த சர்வதேச அளவில் கொண்டு வந்த அழுத்தங்களால் நிகழ்ந்த ஒன்று. இன்றேல்.. அதனையும் சம்பந்தன் கண்டிருக்க முடியாது..!

எனவே இந்த முள்ளமாரி அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து.. தாயக மக்களும் புலம்பெயர் மக்களும் தமக்கான அரசியலை.. சர்வதேச அரசியலை தாங்களாகவே நகர்த்திச் செல்வது தான் சரியான மாற்று வழியாகும். அதற்கு ஒத்துழைப்பு நல்கக் கூடிய தலைவர்களை உள்வாங்கிக் கொள்வதும் நன்றே. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ithuthaan poRukkith thanamaana arasiyal enpathu.

வானம் பொழிகிறது...

பூமி விளைகிறது

உமக்கு ஏன் கொடுக்க வேண்டும் கப்பம் ????

.

.

.

.

.

.

.

ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என்பது மக்களின் வரிப்பணத்தையே சார்ந்து உள்ளது. எனவே கப்பம் கட்டுவது நமது ஜனநாயக கடமை...

அடிச்சொம்லல பல்டி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அரசுடன் சேர்ந்து செயற்படுவதாயின் டக்கிலஸ் போல சேந்து அரசியல் செய்திருக்கலாம் பின்னர் எதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ? அதில வேற உசுப்பேத்தும் பேச்சு ....
 
தமிழ்நாட்டு தமிழர்களுக்கு கருணாநிதி சாபக்கேடு என்றால் ஈழ தமிழர்களுக்கு சம்பந்தன்  :(

நீங்கள் புலிகளின் கொள்கைக்கு எப்ப சார் பரப்புரை செய்தனீங்க..???! நீங்களா அப்படி ஒரு நினைப்பை சிங்களவனிட்ட வளர்த்ததற்கு புலிகள்.. தமிழ் மக்கள் என்ன செய்ய முடியும்.

சம்பந்தன் கிழக்கை கைவிட்டது போல.. வடக்கை தானாகவே மகிந்தவிடம் ஒப்படைக்கத் தயாராகி விட்டார்.

ஆனால்.. மக்கள் மனங்களில்.. மாறாத வடுவாக.. இந்த சிங்கள அரசின் கோர முகம் உள்ளது. சம்பந்தன் எனியும் ஜனநாயகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது..! மக்கள் நிச்சயம் இவர்களின் நகர்வுகளுக்கு எதிர்ப்புக்காட்டும் நிலைமை விரைவில் வரும். :icon_idea:

சம்பந்தன் நினைக்கிறார்.. தான் மகிந்தவுடன் இணைந்து செயற்பட்டால் மகிந்த மனம் இரங்கி இராணுவத்தை அகற்றுவார் என்று. அது வெறும் பகற் கனவு. இராணுவத்தை சர்வதேச அழுத்தங்களால் அன்றி வேறு எதனாலும் அகற்ற முடியாது. இந்த மாகாண சபை தேர்தலே.. புலம்பெயர் மக்கள் எடுத்த சர்வதேச அளவில் கொண்டு வந்த அழுத்தங்களால் நிகழ்ந்த ஒன்று. இன்றேல்.. அதனையும் சம்பந்தன் கண்டிருக்க முடியாது..!

எனவே இந்த முள்ளமாரி அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து.. தாயக மக்களும் புலம்பெயர் மக்களும் தமக்கான அரசியலை.. சர்வதேச அரசியலை தாங்களாகவே நகர்த்திச் செல்வது தான் சரியான மாற்று வழியாகும். அதற்கு ஒத்துழைப்பு நல்கக் கூடிய தலைவர்களை உள்வாங்கிக் கொள்வதும் நன்றே. :icon_idea:

அண்ணா நீங்கள் சொல்வது போல ஒத்துழைக்க கூடிய ஒரு தலைவர் சொல்லுங்க நாட்டில் இப்ப புலம்பெயர்த்த்வர் நாங்கள் அனைவரையும் துரோகி பட்டியலில் கொண்டுவந்து நெடுநாள் ஆகிட்டு அப்படி இல்லை என ஓர்மத்துடன் வெளியில் வந்தவர்கள் அரசியலில் காணாமல் போய் ஆண்டுகள் ஆகிட்டு நினைவில் கொள்ளுங்கள் இனி எவர் வந்தாலும் இணக்க அரசியல் கதைப்பதை தவிர வேறு தெரிவு இருக்காது என்பது எனது கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை எதிர்க்கத் துணிவற்ற சுயநல அரசியல்வாதிகள் தேடுவது தான்.. இணக்க அரசியல்... ஒப்படைப்பு அரசியல். இவையளப் போல.. தலைவரும் போராளிகளும் சிந்தித்திருந்தால்.. ஆயுதங்களை ஒப்படைச்சிட்டு.. இணக்க அரசியல் செய்து கொண்டிருந்திக்கலாம். இனம் அப்படியே அடிமைப்பட்டுக் கிடந்திருக்கும்..!

இவர்களால் முடியல்லையோ.. ஒன்றில் இவர்கள் விலகனும். இல்லை இவையை முடிக்கிற அத்தியாயத்தை ஆரம்பிப்பதைத் தவிர வேற வழி மக்களுக்கு இருக்காது. எனியும் எனியும் இவை காட்டிக் கொடுக்க வலி நிறைந்த மக்கள் அந்த வலியோடு அவமான அரசியலையும் தமதாக்கி வாழ முடியாது.

இவர்களால் முடியாட்டி.. இளையவர்களுக்கு (களத்திலும் புகலிடத்திலும் சரியான அரசியல் சிந்தனையோடு மக்களும் இளையோரும் உள்ளனர்)  வழிவிட்டு விலகிடனும். சாகப் போற உந்தக் கிழம் கட்டைகளுக்கு இணக்க அரசியலை விட வேற ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. உலகத்தில இளையவர்கள் தான் அதிகம் புரட்சி செய்து விடுதலைகளை மக்களுக்கு சமர்ப்பணமாக்கியுள்ளனர். கிழடுகள் செய்ததில்லை அதை.  உவை இவ்வளவு காலமும் சிங்களவனோடு இணங்கித்தான் வாழ்ந்தவை. உவையட்ட அதை விட வேற ஒரு சிந்தனை வர வாய்ப்பும் இல்லை..! இதுகளால்.. ஒரு இனம் தான் நிரந்தரமாக அழியப் போகுது. அதற்கு இடமளிக்கக் கூடாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

எல்லாப்பக்கங்களிலும் செய்தி எழுதுகிறார்கள். யாழில் இப்படி ஆராயாமல் கூத்தடிக்க பலர் இருப்பதால் போலும். :(

prabhakaran2.jpgநவம்பர் 27ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள உறுப்பினர்களும் இந்திய உயர்ஸ்தானிகர் பிரிவினருக்கும் பேச்சு நடத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தினத்திற்காக மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த வடமாகாண சபைத் தேர்தலின்போது தமது வாக்குறுதிகளில் ஒன்றாக இதனையும் குறிப்பிட்டிருந்தது என இந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த மாவீரர் தின நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள தோராவிலில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மால் குர்ஷித் கடந்த வாரம் இலங்கை வந்திருந்த வேளையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்கு விஜயம் செய்த காலப்பகுதிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புலி ஆதரவு உறுப்பினர்கள் உயர்ஸ்தானிகருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அந்தப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130780

அரசுடன் சேர்ந்து செயற்படுவதாயின் டக்கிலஸ் போல சேந்து அரசியல் செய்திருக்கலாம் பின்னர் எதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ? அதில வேற உசுப்பேத்தும் பேச்சு ....

தமிழ்நாட்டு தமிழர்களுக்கு கருணாநிதி சாபக்கேடு என்றால் ஈழ தமிழர்களுக்கு சம்பந்தன் :(

தோழர் தியாகு விடயத்தில் எதிர்பார்த்த முடிவு வருமானால் டெசொ அமைப்பை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு கடிதம் எழுத எண்ணியுள்ளேன்... அதற்குள் இவருக்கு பொறுக்கவில்லை போலும்..

#

என்ன அவசரம் அண்ணே ?

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் பொறுமை இருந்தால்.. இதனை முழுமையாகக் கேளுங்கள்...

https://soundcloud.com/tamilnet/tnpf-press-meet-on-tnas

Prime responsibility to course correct TNA rests with people: Gajendrakumar.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36744

சிங்களவனை எதிர்க்கத் துணிவற்ற சுயநல அரசியல்வாதிகள் தேடுவது தான்.. இணக்க அரசியல்... ஒப்படைப்பு அரசியல். இவையளப் போல.. தலைவரும் போராளிகளும் சிந்தித்திருந்தால்.. ஆயுதங்களை ஒப்படைச்சிட்டு.. இணக்க அரசியல் செய்து கொண்டிருந்திக்கலாம். இனம் அப்படியே அடிமைப்பட்டுக் கிடந்திருக்கும்..!

இவர்களால் முடியல்லையோ.. ஒன்றில் இவர்கள் விலகனும். இல்லை இவையை முடிக்கிற அத்தியாயத்தை ஆரம்பிப்பதைத் தவிர வேற வழி மக்களுக்கு இருக்காது. எனியும் எனியும் இவை காட்டிக் கொடுக்க வலி நிறைந்த மக்கள் அந்த வலியோடு அவமான அரசியலையும் தமதாக்கி வாழ முடியாது.

இவர்களால் முடியாட்டி.. இளையவர்களுக்கு (களத்திலும் புகலிடத்திலும் சரியான அரசியல் சிந்தனையோடு மக்களும் இளையோரும் உள்ளனர்)  வழிவிட்டு விலகிடனும். சாகப் போற உந்தக் கிழம் கட்டைகளுக்கு இணக்க அரசியலை விட வேற ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. உலகத்தில இளையவர்கள் தான் அதிகம் புரட்சி செய்து விடுதலைகளை மக்களுக்கு சமர்ப்பணமாக்கியுள்ளனர். கிழடுகள் செய்ததில்லை அதை.  உவை இவ்வளவு காலமும் சிங்களவனோடு இணங்கித்தான் வாழ்ந்தவை. உவையட்ட அதை விட வேற ஒரு சிந்தனை வர வாய்ப்பும் இல்லை..! இதுகளால்.. ஒரு இனம் தான் நிரந்தரமாக அழியப் போகுது. அதற்கு இடமளிக்கக் கூடாது..! :icon_idea:

இரண்டு கஜேந்திரனும் கூட்டமைப்பிக்குள் இருந்து இருக்க வேண்டியவர்கள் கட்டாயமும் கூட இவர்கள் செய்த உணர்ச்சி அரசியல் வெளியேற காரணம் ஆனது இன்று நிலைமை என்ன மக்கள் அவர்களை அங்கீகரித்து கூட்டி சொல்லவில்லை என் ? அரசியலுக்கு பொறுமையும் தந்திரமும் முக்கியம் போடப்படும் பட்டியலில் இருந்த சம்மந்தன் தலைவர் ஆனது பொறுமையால் அது ஆனத்தசங்கரியால் முடியவில்லை இதுதான் உண்மை நாங்கள் போராட்ட வாழ்க்கையுடன் அரசியலை ஒப்பிட்டு மாற்றம் நாளைக்கு நடக்க வேணும் என்று நினைப்பது தவறு மெதுவா முக்கிய இடங்களில் முதல் உள்ள நுழைத்து எங்களை வளர்க்க முற்படவேனும் எடுத்தம் கவிட்டம் என்பது அரசியலில் செய்ய முடியாது 30வருடம் மேல் பொறுமை காத்த எமக்கு 3மாதம் முடியவில்லை என்றால் ஏற்க முடியாது மக்களின் கைகளில் தீர்ப்பு இருக்கு நாளை கூட மாற்றி எழுதலாம் என்பது எமது எண்ணம் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு சம்பந்தர் சிங்க கொடி பிடிக்கும் போது தெரிந்திருக்க வேண்டும். இந்தியா சொன்னதை தப்பாமல் செய்யும் கிளிப்பிள்ளை சம்பந்தர். சேர் பொன் ராமநாதனில் இருந்து சம்பந்தர் வரை ஒரே  துதி பாடும் மரபணுக்களை கொண்டவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கஜேந்திரனும் கூட்டமைப்பிக்குள் இருந்து இருக்க வேண்டியவர்கள் கட்டாயமும் கூட இவர்கள் செய்த உணர்ச்சி அரசியல் வெளியேற காரணம் ஆனது இன்று நிலைமை என்ன மக்கள் அவர்களை அங்கீகரித்து கூட்டி சொல்லவில்லை என் ? அரசியலுக்கு பொறுமையும் தந்திரமும் முக்கியம் போடப்படும் பட்டியலில் இருந்த சம்மந்தன் தலைவர் ஆனது பொறுமையால் அது ஆனத்தசங்கரியால் முடியவில்லை இதுதான் உண்மை நாங்கள் போராட்ட வாழ்க்கையுடன் அரசியலை ஒப்பிட்டு மாற்றம் நாளைக்கு நடக்க வேணும் என்று நினைப்பது தவறு மெதுவா முக்கிய இடங்களில் முதல் உள்ள நுழைத்து எங்களை வளர்க்க முற்படவேனும் எடுத்தம் கவிட்டம் என்பது அரசியலில் செய்ய முடியாது 30வருடம் மேல் பொறுமை காத்த எமக்கு 3மாதம் முடியவில்லை என்றால் ஏற்க முடியாது மக்களின் கைகளில் தீர்ப்பு இருக்கு நாளை கூட மாற்றி எழுதலாம் என்பது எமது எண்ணம் .

இந்த எமது சுயசார்பு விளக்கங்கள் அவர்களின் உண்மையான நிலைப்பாட்டைச் சொல்வதாக இல்லை.

அதற்காகவே மேற்படி இணைப்பை அழுத்தி அவர்களின் நிலைப்பாட்டைக் கேளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளோம்.

நாமே நம் நிலைப்பாட்டில் ஒரு விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதும் அதுவே அவர்களின் நிலைப்பாடு என்று காட்டுவதும் அல்ல.. இன்றைய தேவை. அவர்களின் கருத்தை நிலைப்பாட்டை அவர்களே விளக்கக் கேட்பதும் விளங்கிக் கொள்வதுமே இன்றைய தேவை..!

என்னுடைய நிலைப்பாட்டை என்னை விட இன்னொருத்தன் தெளிவா திருத்தமாச் சொல்ல முடியாது. :icon_idea::)

சம்பந்தர் கழுவுற மீனில நழுவுற மீன்.

அவர் தேசியக்கொடியை பிடிச்சு அட்டி காட்டிப்போட்டார் ஆனால் என்ன இப்ப இப்பத்தான் அறிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமா வருது. இதுக்கே கோவிச்சா எப்பிடி என்னும் எவ்வளவு வருமோ?

எனக்கு இன்னொரு வருத்தமும் கூட அதாவது சம்பந்தருக்குப்பிறகு இந்த அமைப்புக்கு தலைமையா வரப்போவது என்ன செய்யும் என்று. 

அப்பொழுதும் இது ஒரு அமைப்பா இருக்குமா? இல்ல சிதரிப்போகுமா? சந்தடிவாக்கில டக்கிளஸ் தேர்தலை வெல்லுமா அல்லது சனங்களே சலித்து மகிந்தவுக்கு வாக்களிக்குங்க்களா? 

சம்பந்தனும் வேண்டாம்.. விக்கியும் வேண்டாம்.. டக்கியும் வேண்டாம்...

எமது மக்கள் விருப்பறிந்த நாங்கள் தான் அவங்களைச் சரியான வழில கூட்டிப் போகனும்.

இதனை தாயக.. தமிழக..புலம்பெயர் புதிய தலைமுறை தன் பொறுப்பாக ஏற்றுச் செய்தால் அன்றி.. உந்தக் கிழடுகளை நம்பி.. ஏற்கனவே அழிஞ்சது போல.. தமிழினம் அழியுமே தவிர வாழாது..! உதுகளுக்கு அரசியலில் இருந்து விடுப்புக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கிவிட்டது. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு படு தோல்வி.. அந்த தேர்தலில் ஜெயிக்கப் போகும் கட்சி.. கட்சி..ஆங்.. கட்சி.. ம்ம்.. பிறகு சொல்லப்படும். அதுவரை கூட்டமைப்பை திட்டுவோம்

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும் வேண்டாம்.. விக்கியும் வேண்டாம்.. டக்கியும் வேண்டாம்...

எமது மக்கள் விருப்பறிந்த நாங்கள் தான் அவங்களைச் சரியான வழில கூட்டிப் போகனும்.

இதனை தாயக.. தமிழக..புலம்பெயர் புதிய தலைமுறை தன் பொறுப்பாக ஏற்றுச் செய்தால் அன்றி.. உந்தக் கிழடுகளை நம்பி.. ஏற்கனவே அழிஞ்சது போல.. தமிழினம் அழியுமே தவிர வாழாது..! உதுகளுக்கு அரசியலில் இருந்து விடுப்புக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கிவிட்டது. :icon_idea:

எங்க கூட்டிப்போவீங்க? முள்ளிவாய்க்காலுக்கு?

சிவாஜி ஏற்க்கனவே அங்போய் நிக்கிறார். நீங்களும் போனால், தமிஸ் போர் ஒபாமா கப்பலுடன் நிப்பினம். ஏறி அப்படியே தனிநாட்டுக்கு போடலாம்

மக்கள் உங்கள் பின்னால் வரமாட்டினம் எண்ட துணிவில சொல்லுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசுடன்சேர்ந்து கும்மி அடிக்க போகிறேன் என்று சம்பந்தர்  நேர்மையானவராக இருந்தால் சொல்லி இருக்க வேண்டும். தேர்த்தல் செலவுக்கு காசு புலம் பெயர்ந்தவர்களிடம்  இருந்து. தேர்த்தல் விஞ்ஞாபனத்தில் முள்ளிவாய்க்கால். ஜெனிவாவுக்கு முதல் தரம் போகவில்லை. இனியும் போவார் என யாரும் எதிர் பார்க்க வேண்டாம். மகிந்தவுடன் மூடிய அறையில் பேசியவை இப்போ தெரிந்ந்து விட்டது. டி.எஸ் சேனநாயக்கா காலத்தில் இருந்து சம்பந்தர் போன்றவர்கள் தமிழ் தலைவர்களாக அடிவருடும் போதே  தமிழர் பகுதியில் பலோத்கார  சிங்கள குடியேற்றங்கள் நடைபெற தொடங்கி விட்டது. இனி சம்பந்தர் காலத்தில் சொல்ல வேண்டியதே இல்லை. அம்புட்டு நல்லவரு சம்பந்தர் ஐயா.போர்க்குற்ற விசாரணைகளை சிங்கலவர்கள் சம்பந்தரை வைத்தே மடக்கி விடுவார்கள் கில்லாடி சிங்கள அரசியல்வாதிகள்.ஹக்கீமை  சிங்கள அடிவருடி என  நாங்கள் சொன்னோம்.எங்கள் வீட்டு கோடியிலும் இப்போ ஆள் வந்திட்டுதப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்த்ஹர், சுமந்த்ஹிரன் விக்னேஸ் தான் பிரச்சினை எண்டா அவைய தூக்கி எறிஞ்சுட்டு சுரேச், மாவை, செல்வம் சிவாஜி ஒரு தனி வழி காணலாமே? மாவையை தவிர மற்றவ எல்லாம் கட்சி உடைக்கிர அனுபவம் உள்ள்வைதானே?

அவை தயங்கும் காரணம் - சம்பந்த்ஹரின் நிலைப்பாட்டுக்கே மக்களாதரவுண்டு என்பதே.

”அரசுடன்சேர்ந்து கும்மி அடிக்க போகிறேன் என்று சம்பந்தர்  நேர்மையானவராக இருந்தால் சொல்லி இருக்க வேண்டும்”

சொன்னாரே ஐயா.. சிங்கக் கொடியை தூக்கி ஆட்டிக் காட்டினாரே.. அதுக்குப் பிறகும் புரியாமல் தேர்தல் செலவுக்கு  காசு குடுத்தீங்களா? ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்றும் சொன்னாரே.. புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் சம்மந்தமில்லை என்று சொன்னாரே.. புலி ஆதரவாளர் என்று சொல்ல கஜேந்திரனை தூக்கி எறிந்தாரே.. அதுக்குப் பிறகும் புரியாமல் தேர்தல் செலவுக்கு  காசு குடுத்தீங்களா?

இதுக்கு மேலே அந்தாள் நேர்மையாக என்ன சொல்ல வேண்டும்?

சரி.. இப்ப தெரிஞ்சிட்டுதுதானே.. அடுத்த தேர்தலில் சம்மந்தரை மக்கள் தோற்கடித்து விடுவார்கள்தானே.. அடுத்த தேர்தலுடன் யாவரும் நலம்!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்த்ஹர், சுமந்த்ஹிரன் விக்னேஸ் தான் பிரச்சினை எண்டா அவைய தூக்கி எறிஞ்சுட்டு சுரேச், மாவை, செல்வம் சிவாஜி ஒரு தனி வழி காணலாமே? மாவையை தவிர மற்றவ எல்லாம் கட்சி உடைக்கிர அனுபவம் உள்ள்வைதானே?

அவை தயங்கும் காரணம் - சம்பந்த்ஹரின் நிலைப்பாட்டுக்கே மக்களாதரவுண்டு என்பதே.

சம்பந்தரின் நிலைப்பாட்டுக்கு மக்கள் ஆதரவு என்பது ரொம்ப தப்பு அது தேர்தலுடன் போய்விட்டதாகவே நினைக்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.