Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இளைஞன் ஒருவர் பிரித்தானியாவில் Sheffield பகுதியில் குத்திக் கொலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட Thavisha Lakindu Peiris, 25 என்பவரே அவரின் காருக்கு அருகில் பிட்சா வழங்கல் செய்து கொண்டிருந்த போது குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

தனது புதிய வேலையில் சேர முன் அவர் மேற்கொண்ட இறுதி பிட்சா வழங்கலின் போதே இச்சம்பவம்.. நடந்துள்ளது.

 

இவர் heffield Hallam University இல் IT துறையில் பட்டம் பெற்றவராவார்.

 

Sheffield stab victim killed on final pizza delivery.

http://www.bbc.co.uk/news/uk-england-south-yorkshire-24739725

 

 

(இதே பகுதியில் முன்னர் வாழ்ந்த போது...  நாங்களும் முன்னர் சில இடங்களில்.. பகுதி நேர.. வேலை செய்திருக்கிறம். ஆனால் அந்த மக்கள் சிலரிடம் இருந்து இப்படியான ஒரு ஆபத்து வரும் என்பதை அறிந்திருக்கவே இல்லை. நிறவெறி கொஞ்சம் இருந்தாலும்.. வெளியில் காட்டாமல்.. நட்பாகப் பழகுவார்கள்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கும், எனக்கும் இடையே எண்ணில்லாத கோடுகள் கீறப்படுகின்றன!

 

புனிதம் பூத்த புத்த பகவான் கூடக் கோடுகள் கீறுகின்றான்!

 

பரந்த உலகில், உனக்கும் எனக்கும் இடையேயுள்ள கோடுகள் உருக்குலைய,

 

என்னைப்போலவே நீயும், உன் தாயும், கனவுகள் சுமந்திருப்பீர்கள்!

 

அந்த வகையில், உனக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில்... குத்திக் கொலை செய்யும் அளவிற்கு, நிறவெறி உள்ளது ஆபத்தானதும், வருந்தத் தக்கதுமான செய்தி.
நாளை எவர் மீதும்... இத்தாக்குதல் நடக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு காரணங்கள் அறியப்படாத.. கோரக்கொலை என்று கூறும் பொலிஸார் இதன் பின்னணியில் நிறவெறி இருந்ததா என்பதை இன்னும் உறுதிசெய்யவில்லை.. தமிழ்சிறீ அண்ணா. ஆனால் இந்தப் பகுதியில் கொஞ்சம் நிறவெறி இருக்குது. இந்தளவுக்கு ஆபத்தானதாக அது இருக்கிறதா என்பதை விசாரணைகள் தான் வெளிப்படுத்தனும். :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மட்டை போடுபவரா?

ஏதாவது சிங்கள காடை குழுக்களில் இருக்கிறாரா?

வழிப்பறி கொள்ளையாக கூட இருக்கலாம்.

மட்டை போடுவதற்கும், காடைக் குழுக்களில் இருப்பதற்கும் தமிழனாகப் பிறந்து இருக்கவேண்டும்!

அவர் நேர்மையான கடின உழைப்பாளியாக இருந்தார் என்றும், IT Consultant ஆக வேலை கிடைத்ததனால் தனது கடைசி வேலை shift இல் கடைசிக் கஸ்ரமருக்கு pizza delivery செய்யச் சென்றபோதே கொலை செய்யப்பட்டிருந்தார் என்றும் செய்திகள் சொல்லுகின்றன.

அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது நிறவெறிதாக்குதலே இல்லை இது உள்வீட்டு பிரச்சிணை போல் உள்ளது .

சிங்களவர்களில் பெரும்பாலோர் நல்ல பிள்ளைக்கு நடிக்கும் கூட்டங்கள் உள்ளுக்குள் இருக்கும் மிருககுணம் வெளியில் இலகுவாக காணமுடியாது.

தற்போதைய நிலையில் மாணவர் விசாவில் வந்து கள்ளமாக ஒழித்து நிற்கிறார்கள் இலங்கை முன்நாள் வாழைதோட்ட பாதாள உலக கோஸ்டி அவர்களுக்கு கோத்தாவால் பிரச்சினை அண்ணனை கோத்தா போட்டு தள்ளியிட்டான் நான் படிச்சுக்கொண்டிருந்தனான் திரும்பி COLOMBO போக ஏலாது என்ற கதைகளுடன் அசேலம் அடிக்கிறார்கள் பின்பு தமது நெற்வேர்க்கை விரிவு படுத்துகிறார்கள் இதில் வேடிக்கை என்னவென்றால் கோத்தாவினுடைய ஆட்களும் இதே கதைகளுடன் லண்டனில் உள் இறங்கியுள்ளார்கள் . அப்படி உள்வந்தவன் இங்கு ஏற்கனவே கல்யாணமாண தமிழ்பிள்ளை சங்கீதம் சொல்லிகுடுப்பவர் காதல் வலையில் வீழ்த்தி புருசன் காரண் திருகோணமலை நகரபகுதி தங்களுடைய நெற்வேர்க் மூலமாய் ஆளை போட்டு தள்ளியாச்சு இதில் குற்றம்சாட்டபட்டவர் தமிழ் பொண்ணுதான் சிங்களவன் இங்கும் தப்பியிட்டாண் .இனி என்ன புருசனை போட்ட உத்தமி என்று சர்வதேச பொலிஸ் அவவை தேடுது கோத்தாவின் ஆள் படம் வேணுமென்றால் தனிமடலில் போடுகிறேன்.எனவேதான் சிங்களவர்கள் முழுபூசனிக்காயை கிரிபத்துக்குள் புதைப்பாங்கள் நடந்த கொலை வேறு சில அறிகுறிகளை காட்டியவண்ணம் உள்ளது. 

 

இதுதான் சர்வதேச பொலிசின் லிங் http://www.interpol.int/Wanted-Persons/(wanted_id)/2013-55425

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உலகம் தெரியாத அப்பாவியாய் எடுத்தவுடன் எம்மினத்தவர் மீது பழி போடவேண்டாம் . https://www.facebook.com/photo.php?fbid=1377691622450296&set=a.1377691602450298.1073741825.100006284136333&type=1&theater https://www.facebook.com/nipul.thewarapperuma.5இவரை ஞாபகம் இருக்கா? பின்னால் நின்று உதைப்பதில் வீரர் மூன்று நான்கு பெயர்களில் அசேலம் இவர் மீது கள்ள மட்டை கேஸ் brent police ல் உள்ளது வேணுமென்றால் நேரேயே போன் அடித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் .இல்லையா queensbury underground station க்கு பக்கத்தில் இருக்கும் நம்மவரிடம் இவரை பற்றி விசாரித்து பாருங்கள் அப்ப தெரியும் மன்னிக்கவேணும் உங்களுடன் இந்த விடயத்தில் முரண் பட்டமைக்கு.

Posted Yesterday, 06:18 AM
பிருத்தானிய செஞ்சிலுவை சங்கத்தின் தொண்டன் கறொம் சேக், ஜானதிபதியின் கையாளாகிய  பிரதேச சபை தலைவராலும் சகாக்களாலும் கொலை செய்யப்பட்டு அவரின் நண்பி வன்முறைப்படுத்தப்பட்ட மரணம் பற்றி இளவரசர் சாள்ஸ் இலங்கை போகும் போது அங்கு விளக்கம் கேட்பார் என்பது செய்தி. ஆனைக்கு பானையாகக்கும்  முயற்சியாக,  இங்கிலாந்தில் படிக்கும் போது அங்கு பீட்சா வீடுகளுக்கு எடுத்து செல்லும் தொழில் செய்து வந்த சிங்கள  இளைஞன் ஒருவன் சென்ற கிழமை கொலை செய்யப்பட்டதை இலங்கை இங்கிலாந்தில் கேள்வி கேட்கிறது. இந்தக் கொலை இங்கிலாந்தில் வழிப்பறி கொள்ளையர்களால் நடந்த திருட்டுக்கொலை. ஆனையை பானையாக்கும் இலங்கை, இதில்  நிரூபிப்பது, பிரதேச சபைகளில் இருப்பவர்களும், ஜனாதிபதிக்கு வேண்டியவர்களும்,  இங்கிலாந்தின் தெருக்களில் வ்ழிப்பறி நடத்தும் கொள்ளையர்களுக்கு சமமானவர்கள் என்பதா?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113806&p=953082

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உலகம் தெரியாத அப்பாவியாய் எடுத்தவுடன் எம்மினத்தவர் மீது பழி போடவேண்டாம் . https://www.facebook.com/photo.php?fbid=1377691622450296&set=a.1377691602450298.1073741825.100006284136333&type=1&theater https://www.facebook.com/nipul.thewarapperuma.5இவரை ஞாபகம் இருக்கா? பின்னால் நின்று உதைப்பதில் வீரர் மூன்று நான்கு பெயர்களில் அசேலம் இவர் மீது கள்ள மட்டை கேஸ் brent police ல் உள்ளது வேணுமென்றால் நேரேயே போன் அடித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் .இல்லையா queensbury underground station க்கு பக்கத்தில் இருக்கும் நம்மவரிடம் இவரை பற்றி விசாரித்து பாருங்கள் அப்ப தெரியும் மன்னிக்கவேணும் உங்களுடன் இந்த விடயத்தில் முரண் பட்டமைக்கு.

சிங்களவர்கள் மகிந்த தங்களுக்கு ஜனநாயக உரிமைகள் தரவில்லை என்று அசைலம் அடித்துவிட்டு தமிழர்களுக்கும் உதைப்பது தெரியாது!

அது கிடக்கட்டும். செய்தியில் குறிப்பிடப்பட்டவர் எதற்காகக் கொல்லப்பட்டார் என்று பொலிஸுக்குத் தெரியாமல் இருக்கும்போது அவர் சிங்களவராக இருப்பதனால் அவர் உள்வீட்டுப் பிரச்சினையால் கொல்லப்பட்டார் என்று பல நூறு மைல்கள் தூரத்தில் உள்ள இலண்டனில் இருந்து புலனாய்ந்திருக்கின்றீர்கள். மெற்றோபொலிரன் பொலிஸ் தமிழர்களுக்குள் புலனாய்வு செய்ய ஆட்கள் வேணுமாம் என்று கேட்கின்றார்கள். நீங்கள் முயற்சிக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் எங்களை மாதிரி அப்பாவி கூட்டம் லண்டனில்வேறு ஒரு சமூகத்தில்கிடையாது எங்களை நாங்களே தாழ்த்திகொள்வதில் எங்களுக்கு நிகர் யாரும் கிடையாது லண்டனில் வாழும் மற்றைய சமூகத்தை விட ஒப்பீட்டளவில் நாங்கள் எவ்வளவோ மேல் மற்றையவர்களுடன் ஒப்பிடும் போது குற்ற செயல்களும் அவ்வாறே .நான் சொன்னது நிறத்துவேசத்திற்க்கு நடந்த கொலை அல்ல என்று மட்டுமே அது உங்களுக்கு விளங்கும் அப்படியென்றால் WATFORD COSTCO ல் நடந்த தமிழர் கொலை முதலில் துவேசம் என்றார்கள் கடைசியில் கிழக்கு ஐரோப்பிய வெள்ளையின கூலிப்படை அதை எதற்க்குள் கொண்டு போய் சேர்ப்பது?

Edited by பெருமாள்

புதிதாக பொலிசின் நிலைமை என்ன என்பது பற்றி தெரியவரவில்லை.

 

 

இலங்கை அரசு தூதரகத்தை விசாரணை செய்யும் படி பணித்த போது அதை பொலிஸ் களவுக் கொலையாக வகுப்பதாகத்தான் அந்த செய்தி சொன்னது.

 

வேறு நோக்கம் கொண்ட கொலையா என சந்தேகப்படும் படியாக எதாவது இல்லாதிருந்தால் ஏன் சில தமிழர் மட்டும் அப்படி சந்தேகப்பட்டேதான் ஆக வேண்டும் என்று வாதிடுவான்? ஏதாவது சிங்கள பத்திரிகைகளில் இதற்கு மாறாக நம்பத்தக்கதாக மாதிரியாக ஏதாவது படித்தார்கள்? அந்த இடத்தில் இனத்துவேசம் இருந்தால் இலண்டன் பொலிசு அது சந்தேகத்துக்குரிய மரணம் என ஏற்றுக்கொள்ளாது. ஆனால் திருடர்கள் இலகுவான இலக்குகளை தேடுகிறவர்கள் என்றதை மட்டும்தான் ஒத்துக்கொள்ளும்.  கிழவிகளை வ்ழிப்பறி செய்யும் கள்வன் ஒருவனை கிழவித்துவேசி என்று பொலிஸ் ஏற்றுக்கொளாது. அவன் மற்றவர்களை கண்டால் பயப்படுகிறான், கிழவிகளை கண்டால் துணிச்சல் அடைகிறான்  என்று மட்டும்தான் எடுத்துக்கொள்வார்கள். 

 

பொலிசின் அறிக்கையை நம்மாமல் இலங்கை அரசு தூதுவராலயத்தில் அறிக்கை கேட்பது சரியாக படவில்லை. இங்கிலாந்து தனது பிரசை கொல்லப்பட்டதற்கு இலங்கை விசாரணை செய்யவில்லை என்ற முறைப்பாடு உறவினர்களிடமிருந்து வந்த்தால்த்தான் வழக்கை கையில் எடுத்தது. ஒரு வெளிநாட்டு தூதுவராலம் தனது பிரசைகள் முறைப்பாட்டில் இறங்கும் வரை அடுத்த நாட்டில் நடந்தவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுகொள்வதுதான் வழமை. பல நாடுகளின் பல பிரஜைகள் வெளியிடத்தில் கொல்லப்பட்டலும் நியாயமான சந்தேகம் இல்லாமல் தமது தூதுவராலயங்களை மினக்கெடுத்த மாட்ட. இதில் இலங்கை அரசு தன்னை கேள்வி கேட்க்க தயாராக வரப்போகும் இளவரசருக்கு எதிராக கடைசி நேரத்தில் தடுபொடிப்பட்டு ஓடி ஆடி ஏதாவது கிடைக்குமா என்று தேடிப்பார்க்கும் போது அதற்கு ஊன்று கோல் கொடுக்க பலர் தமிழர் தங்களை நடுநிலைமை வாதிகளாக காட்டி விதண்ட வாதத்தில் இறங்குகிறார்கள். இந்த நேரத்தில் சந்தேகம் இருந்தால், இலங்கை அரசு தலையிட்டு தங்காலை வழக்கை நிற்பாடியது போல் அல்லாமல், இலண்டன் மாநகர பொலிஸ் சரியான முறையில் வழக்கை மீளாய்வு செய்யும் என்று கூறி இதில் மேலும் மேலும எங்குமே காணாத விதண்டவாத சந்தேகங்களை இல்ங்கிலாந்து இளவரசருக்கு எதிராக விதைக்காமல் விடுவதுதான் நல்லது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் மகிந்த தங்களுக்கு ஜனநாயக உரிமைகள் தரவில்லை என்று அசைலம் அடித்துவிட்டு தமிழர்களுக்கும் உதைப்பது தெரியாது!

 

அவர்களை பிரேமதாசா தன்னுடைய பாதுகாப்புக்கு வாழைதோட்டம் சிங்கராயபுரம் பகுதிகளில் குடியமர்த்தி வைத்திருந்தவர் மகிந்த வந்த பிற்பாடு இந்த அடிதடி பாதாள உலக கூட்டத்தை தேடி தேடி மண்டையில் போட அவர்களின் அநேக குடும்பங்கள் இத்தாலி லண்டன் என வசதிக்கேற்றமாதிரி அசேலம் உங்களின் இடத்தில் கூட ஒரு ஆள் இருக்கிறார் சந்திக்க ஒழுங்கு பண்ணவா? நிறைய சுவாரசியமான கதைகள் அவரிடம் உண்டு பிரேமதாச கொலை சம்பவம் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை மகாநாட்டில் பிரித்தானியப் பிரதிநிதிகளின் கேள்விக்குப் பதில் கேள்வி கேட்கச் செய்யப்பட்ட அனியாயமோ தெரியவில்லை. வேட்டையாடப் படவேண்டியவர்களை இவ்வாறு பாவித்தால் ஒரு கல்லில் இரு மாங்காய்களல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேர் கைது

 

பிரி;த்தானியாவில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீட்சா விநியோகம் செய்த தவிஷ பீரிஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். இவர் பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீட்சா விநியோகத்திற்காக சென்றிருந்த போது தென் யோர்க்ஷயர் பிரதேசத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். தென் யோர்க்ஷயர் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் ஒருவரும், 25 வயதான நபர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியே தவீஷ பீரிஸ் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98386/language/ta-IN/article.aspx

கொலை குற்றம் சுமத்தப்படுள்ள ஒருவரின் பெயர் ஷாம்ராஜே கான் (Shamraze Khan). என்வே இன துவேசம் காரணமாக இருக்காது என்று தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்தால் வழக்கு முடிய எல்லா விடயங்களும் வெளியே வரும். உள்வீட்டுப் பிரச்சினை என்பதெல்லாம் உண்மையில்லை என்று தெரிகின்றது.

இலங்கையர் கொலை குறித்து பிரித்தானிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்படும் - இலங்கை அரசு
[saturday, 2013-11-02 07:44:08]
News Service
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கமரூனிடம் கேள்வி எழுப்பப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கையைச் சேர்ந்த தவிஷ பீரிஸ் என்ற 25 வயது இளைஞர் தென் யோர்க்ஷயர் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். பீட்சா விநியோகத்தில் ஈடுபட்டிருந்த போது குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை துரித கதியில் நடாத்துமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்

http://www.seithy.com/breifNews.php?newsID=96264&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.