Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைப்பொழுதும்..வண்ணாத்திப்பூச்சிகளும்..கவிதைகள் நிறைந்த தேனீரும்...சில நினைவுகளும்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியாணம் காட்சியெண்டு களத்திலை இறங்கிறதை விட்டுட்டு..........சனம் இப்பவும் கவிதையும் கண்ணீருமாய் திரியுதுகள்..... :D

  • Replies 55
  • Views 5.6k
  • Created
  • Last Reply

கவிதைகள் மிக அருமை. தொடருங்கள், சகோதரா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1424461_10151823820824891_1120948777_n.j

 

விழித்துக்கிடக்கும் இரவுப்பொழுதுகளில் நினைவுகளின் சாளரங்களூடு புகுந்துவிடுகின்றன நம்காதல் ஞாபகங்கள்...

உயிர் உயிர் உயிர்க்க எத்தனை தடவைகள் காதல் செய்திருப்போம்....

உன்னுடன் சேர்ந்து நடந்த வீதிகள் சுமந்திருக்கின்றன நீயும் நானும் பேசிய நூறாயிரம் கதைகளை....

ஏந்த யாருமற்று கன்னங்களை தாண்டி உதிர்ந்து விழும் கண்ணீரை எடுத்துசெல்கிறது காற்று....

மழைபொழியாமலே நீர்கசியும் இரவுகளில் கன்னங்களில் பிசுபிசுக்கின்றன முன்னர் நீ கொடுத்த முத்தத்தின் ஈரங்கள்...

அறைமுழுவதும் பெருமூச்சையும் விசும்பல்களையும் உண்டு பசியாறிக்கிடக்கிறது தனிமை....

கண்ணீரும் கவிதைகளும் அடிக்கடி ஒன்று கலக்கும் மை கரைந்த காகிதத்தாள்களில் சிந்தி இருக்கின்றன உன் பிரிவின் வலிகள்...

எல்லாமே கடந்து சென்ற பின்னாலும் மனதை நிறைக்கின்றது எனக்காய் நீ தந்த இறுதிப்புன்னகையின் ஓலம்...

மழைவிட்டும் காற்றுடன் எஞ்சியிருக்கும் ஈரலிப்பாய் வாழ்க்கை முழுதும் ஓட்டிக்கிடக்கின்றன கடந்துபோன காதலின் வாசனைகள்...

வெளியெங்கும் பரவிக்கிடங்கும் நீ சிந்திய முத்தங்களுடன் 

கலைய மறுத்துத் தொடர்கின்றன எப்போதும் உன் நினைவுகள்...

 

12/11/2013

 

‘காதலின் நினைவுகளில் பசுமையானதே தேங்கி நிற்கும்!!..எத்தனை காயங்கள் கடந்தாலும், தொடர்ந்தாலும்...’காதல் காதலாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறது!. ‘ உண்மையான காதல் ஏன் பிரிவுகளைச்சந்திக்கின்றது என்பதற்கு விடை தெரியவில்லை!. இருப்பினும்!......ஒன்று புரிகின்றது. ‘இத்தகைய ‘காதல் கவிதைகள் கிடைப்பதற்காக இருக்கலாம்!...

மிகவும் ரசித்தேன் உங்கள் ஒவ்வொரு வரிகளிலும் ஒளிந்திருக்கும் காதலை!... இன்னும் எழுதுங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் காட்சியெண்டு களத்திலை இறங்கிறதை விட்டுட்டு..........சனம் இப்பவும் கவிதையும் கண்ணீருமாய் திரியுதுகள்..... :D

 

இறங்கியாச்சு... :D

 

1390639_259343867549468_1793230130_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் மிக அருமை. தொடருங்கள், சகோதரா!!

 

நன்றி அக்கா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘காதலின் நினைவுகளில் பசுமையானதே தேங்கி நிற்கும்!!..எத்தனை காயங்கள் கடந்தாலும், தொடர்ந்தாலும்...’காதல் காதலாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறது!. ‘ உண்மையான காதல் ஏன் பிரிவுகளைச்சந்திக்கின்றது என்பதற்கு விடை தெரியவில்லை!. இருப்பினும்!......ஒன்று புரிகின்றது. ‘இத்தகைய ‘காதல் கவிதைகள் கிடைப்பதற்காக இருக்கலாம்!...

மிகவும் ரசித்தேன் உங்கள் ஒவ்வொரு வரிகளிலும் ஒளிந்திருக்கும் காதலை!... இன்னும் எழுதுங்கள்!

 

நன்றி அக்கா உங்கள் கனிவான வரிகளுக்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1383800_10151829466994891_829389266_n.jp

 

 

ஆவியாகி இன்னமும் பொழிவதற்காய் சிலிர்த்துக்கொண்டே இருக்கும்
ஒரு மாலைப்பொழுது எமை நனைத்த மழைத்துளிகள்..

காதலுடன் உன்னையும் என்னையும் நனைத்த அப்பெரு மழையை
ஈரம் சொட்டச்சொட்ட வாழ்த்திப்பாடிக்கொண்டிருந்தன பெயர் தெரியாத சில பறவைகள்..

இமைகளை மூடி வழிந்த மழை நீரை ஒதுக்கக்கூட 
இணைந்திருந்த கரங்களைப்பிரிக்க மனமின்றி நெடுந்தூரம் நடந்தோம்... 

மழைத்துளிகளை சிந்திக்கொண்டிருந்த மஞ்சல்ப்பூக்களில் 
பெருகி வழிந்துகொண்டிருந்தது உன் வெள்ளைப் புன்னகை..

அப்பெருமழையை ஏந்திக்கொண்டிருந்த தெருமரங்கள் எல்லாம் 
நம் பேரன்பின் கதகதப்பில் லயித்துக்கிடந்தன..

வெளியே கசிந்துகொண்டிருக்கும் சின்ன மழைச்சத்தத்தில்
நினைவுகள் அதிர்கின்றன..

ஒரு வசந்த
காலத்தில் பொழிந்த அப்பழைய மழையின் 

ஈரம் உலராத நினைவுகள் காயவே இல்லை.

 

15/11/2012

Edited by சுபேஸ்

சுபேஸ்.... கவி வரிகள் உணர்வுகளையும் வலிகளையும் அதன் வலுக்குறையாமல் வெளிப்படுத்துகின்றன.

அருமை... ! தொடர்ந்து எழுதிக் கொண்டேயிரு நண்பா. எழுத்தும் ஒரு பெரும் ஆறுதல்தான்.

 

ஆனால் ஒரு விடயத்தை சொல்லவேண்டும்...

சில கவிதைகளைப் படிக்கும்போதில் ஒரேமாதியானவையாக இருப்பதுபோல் உணர்வு ஏற்படுகின்றது.

ஒரே உணர்வோடு எழுதப்பட்டதால் அப்படித் தோன்றலாம். கொஞ்சம் மாறுதலாக எழுதினால் இன்னும் நன்றாயிருக்கும். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

 உங்களுடைய கவிதைகளின் அதீத சோகங்களின் பிரதிபலிப்பு என்னை உங்கள் கவிதைகளின் பக்கம் அண்டவிடாது செய்கின்றன சுபேஸ்.

ஒரு வசந்தகாலத்தில் பொழிந்த அப்பழைய மழையின் 

ஈரம் உலராத நினைவுகள் காயவே இல்லை.

 

 

வெளியெங்கும் பரவிக்கிடங்கும் நீ சிந்திய முத்தங்களுடன் 
கலைய மறுத்துத் தொடர்கின்றன எப்போதும் உன் நினைவுகள்..

 

 

காயங்கள் தாங்கிய பிறை நிலாவுடன் 
கடந்து செல்கிறது உன் அருகற்ற இன்னுமொரு நீள இரவு....
 
 
 
மனதை லயிக்க வைக்கும் வரிகள்


 தொடருங்கள் சுபேஸ் :)

Edited by அபராஜிதன்

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10150522_10152113862769891_2381017749020

 

 

 

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10371687_10152203432209891_6446617695855

 

Edited by சுபேஸ்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10410552_747864788597091_451994679875871

 

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10475516_10152246547864891_6790422822541
துயர்தீராத வெளியில்
என் குரல் அமிழ்ந்துபோகாமல்
தாங்கிச்செல்லும் வண்ணாத்துப்பூச்சி நீ...

என் இரவுப்பாடலின்
சுவடுகள் வழி பாயும் நதி நீ......

என்னிடம் பேசாமலே கிடக்கும்
சொற்களின் தீராத்தாகம் நீ...

என் மெளனத்தின் சுவர்களில்
நேசத்தின் நிறத்தோடு படரும் கவிதை நீ....

நினைவுகள் எழுந்தாடும் பழையதன் தடத்தில்
தட தடக்கும் ரயில் நீ...

எல்லாத்திசைவழியும்
எனை நிறைக்கும் காலத்தின் வெளி நீ...

பகலோடு இரவும் பனிதீரா நகரத்தில்
அன்பும் பாடலும் காற்றாக இசைய
அழகு சிலிர்த்தெழும் இரவுக்கோலத்தில்
நினைவுகளின் வழியாக
நிறுத்தி வைத்திருக்காய்
உனதிருப்பை என்னிடம்...

உன் பெயர் சொல்லி மலரும்
என் இதயத்திடம்
இனித் தீர்வதாயில்லை
பிரியங்களில் சிந்திக்கிடக்கும்
கவிதைப்பக்கங்கள்
...
 
13/06/2014
  • கருத்துக்கள உறவுகள்

வண்ணாத்திப் பூச்சி கவிதைகள்
அந்த பூச்சி போலவே அழகு
அழகு அழகாய் பறக்கிறது.

 

10475516_10152246547864891_6790422822541
....

நினைவுகள் எழுந்தாடும் பழையதன் தடத்தில்

தட தடக்கும் ரயில் நீ...

 

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். அப்படியே மனநிலையினை வெளிப்படுத்துகின்றன...

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

156199_10150715389144891_33325168_n.jpg?

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10290635_10152136961584891_1955618353759

தனித்தலையும் ஒரு
பறவையைப்போல நான்
என் இருப்பின்
வேர்களாய் 
உன் ஞாபகங்கள்

விலகிப் போன பின்னும் 
விட்டுப் பிரியா
துயரத்தின் வாசத்தில்
ஒட்டியிருக்கிறது
நம் ஆதிக்காதல்

நியாபகச்சூட்டிடமிருந்து 
ஒளிந்து கொள்வது 
அத்தனை சுலபமில்லையெனும் போது
உன் பிரிவின் கூரலகால்
கிழிகிறது என் இதயம்

காத்திருப்பின் ஆடை சுமந்து
நீயும் நானும்
அமர்ந்துபேசும்
மஞ்சல் நிறபூக்கள் உதிர்ந்துகிடக்கும்
யாருமற்ற இருக்கைகளிடம் கேள்..

அவை
உன்னிடம் கொடுப்பதற்காக
மழை நேர தேனீர்போல
எப்போதும் என்னிடம் இருக்கும்
எல்லையற்று நீண்ட அன்பையும்
ஆகாயத்தையும்
சொல்ல சில கதைகளையும்
முடிந்துவிட்ட பிரியத்தின்
கடைசி சொட்டில்
அடைகாத்து வைத்திருக்கும்...

நமக்கான பயணங்களில்
இசையொழுகிய தருணங்களை
லயித்தபடி
மழைக்காற்றின் ஈரம்போல
நான் சுமந்திருப்பேன் காதலை
மழையை 
முற்றும் உறிஞ்சிய நிலம்போல
நீ வெடித்துக்கிட
அன்பின் வறட்சியில்...

 

20/02/2014

எல்லா கவிதையிலும் இடத்தையைம் பொழுதையும் விவரிக்கும் விதம் மிக அழகாக இருக்கிறது. :)

மற்றபடி நான் சொல்லிகொடுத்ததுபோல தொடர்ந்து எழுதுங்கள், சந்தேகமென்றால் தயக்கம் வேண்டாம். என் பால்ய சிஷ்யபிள்ளை சகாறா போல உங்களுக்கும் வளமான எதிர்காலம் உண்டு :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைகளைப் படிக்கும்போது நான் மூட்டை கட்டி வைத்த சோகங்கள் அனைத்தும் முடிச்சவிழ்ந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. தம்பி சுபேஸ் உங்களுக்கு அபாரமான கிறமை உண்டு. சோகத்துக்குள் மூழ்கிப் போகாமல் மூச்சடக்கி வெளியே வந்து பாருங்கள் உலகில் காதலை விடவும் இன்னும் பல அபாரமான சக்திகள் உண்டு. வேதனைகள்தான் சாதனையின் ஆரம்பம். கவிதைவரிகள் மிக அழகாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைகளைப் படிக்கும்போது நான் மூட்டை கட்டி வைத்த சோகங்கள் அனைத்தும் முடிச்சவிழ்ந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. தம்பி சுபேஸ் உங்களுக்கு அபாரமான கிறமை உண்டு. சோகத்துக்குள் மூழ்கிப் போகாமல் மூச்சடக்கி வெளியே வந்து பாருங்கள் உலகில் காதலை விடவும் இன்னும் பல அபாரமான சக்திகள் உண்டு. வேதனைகள்தான் சாதனையின் ஆரம்பம். கவிதைவரிகள் மிக அழகாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

 

அனேகமானவர்களின் நிலை சிவப்பு எழுத்தில் காட்டப் பட்டுள்ளது போல் இருப்பதனால் தான் பச்சைகளை மட்டும் இட்டுச் செல்வது வளக்கமாகி விட்டது..பார்த்தும் பார்க்காதது போல் செல்லத் தோணுது..சில இடங்களில் எங்களை மீறிய சோகங்களை பொது வெளியில் கொட்டி விடுவோமோ என்ற ஒரு வித அச்ச உணர்வு... சிலர் எழுத்திலாவது கொட்டுவார்கள்.எல்லாருக்கும் அப்படி நிலை வாய்ப்பதும் இல்லை.பொது வெளிகளில் கொட்டி விடவும் முடியாது..

Edited by யாயினி

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிய பறவைகள்.. 

 

10671461_10152528293114891_3853695483825


வக்கிரங்களை வாரியெடுத்து
சாகசக்காற வெளியில்
நீதியின் சாம்பல் மேடுகளில்
பூத்துத் திளைக்கும் உலகே..!

காற்று ரணமாய்க் கிழிக்கையில்
எடுத்துச்செல்ல இயலாத பெருந்துயரத்தை - தம்
மெலிந்த சிறகுகளில் சுமந்திருக்கும்
பறவைகளின் கதையை
எந்தக்காலத்தின் அறைகளுக்குள்
ஒளித்து வைக்கப்போகிறாய் ...?

சாக்காட்டுத் தேசங்களிலிருந்து
துயர் கசியும் பறவைகளின் பாடலை
யாரேனும் உணர்ந்ததாய் தெரியவில்லை,
அன்பின் பாடல்களைக்கேட்டறியா
செவிட்டு மனிதர்களுக்கிடையில
ஒடுக்கப்படும் தேசங்களின் பாடல் மோதி அலைகிறது...

எம் நிழல்களில் உழல்வனவோ
விடுதலையை தொலைத்த
வெம்மையின் எச்சங்களாயிருக்கையில்,
அழுதழுது கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்க
வெயில் நதியில் மிதக்கும்
கைவிடப்பட்ட தேசங்களின் மனிதர்களிற்காக
ஒரு துளி நிழலை எங்கே பெறுவோம்..?

தீயெரித்த வனமொன்றில் சிதறிய பறவைகள் நாம்
எம் தாயிருந்த கூடும் அற்றுப்போன போது
பொருளற்ற இருட்பாடல்களை பின்னிக்கொண்டு
அதனிடையே நெடுந்தூக்கத்தில் உறைந்து போனோம்..

எங்கள் கூடுகள் பற்றியும்
கூரிய சொண்டுகள் கவ்விய
எம் குஞ்சுகள் பற்றியும்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை..
கிளையில்லை,
ஆகாயமில்லை,
ஒரு கூண்டு கூட இல்லை..
எம் பழைய முகங்கள் எதிலும் இல்லை,
குருதி தோய்த்து வரைந்தவை எல்லாம்
பட்டுப்போன வனமொன்றில்...

தேய்ந்தழியக் காத்திருக்கும்
நோய் கொண்ட வரலாற்றுடன்
காலங்காலமாய் கடந்துவந்த வாழ்வின்
அடையாளங்கள் எதுவுமின்றி
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
தொலைந்துதான் போவோமோ..?

வலி சுமக்கும் பறவைகளே..!
உலகத்தில் எமதிருப்பையும் உரைப்பதற்காய்
தனித்த சிறகுகளுடன் எழுந்தவர்கள் நாங்கள்
எல்லாம் கடந்து விட்டன..
காற்றிப்போ எம் பக்கம் இல்லை,
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி
கடன் வாங்கி நாமும் அழவேண்டும்..

திரையை இழுத்து மூடிக்கொள்ளும் நீதியின்
முகத்தில் மோதிய இயலாமை...
மிகுந்த நம்பிக்கைகள் சிதைந்த ஏமாற்றங்கள்...
குருதியின் சுவை கொண்ட கண்ணீர் ...
வெளிறிய ஆகாயம் அதிரும் ஒப்பாரிகள்...
கனவுகளைப் புசித்துப் பெருகும் இருள்...
காலியான தேநீர்க்கோப்பையிலிருந்து வரும்
இறந்த காலத்தின் வாசனை..
ஏகாந்தத்திலும் அதற்கு அப்பாலும் கசியும்
ஏக்கங்களுடன் அடைபடும் வாழ்க்கை...

என

அகண்ட இவ் வெறுமைவெளிகளை கடக்கையில்
ஒரு சொட்டு சுதந்திரத்தைக்கூட யாசிப்பவர்களுக்கு
இந்த உலகம் மிகத் தனிமையானதுதான்...

ஒ வலி சுமக்கும்
எம் பிரிய பறவைகளே..!
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி
கடன் வாங்கி இனி நாமும் அழவேண்டும்..

Edited by சுபேஸ்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடிபாடுகளினுள் கூடுகட்டும்
பறவை...
--------
10390395_10152623442394891_3362854907660
காலம் இருள்கவிழ்ந்து
ஒரு யுக நீட்சியாய் நகர்கையில்
மூடுண்ட பிசாசு வெளியொன்றினுள்
வாழ்வு வியாபித்திருந்த பொழுதுகளை
ஒருதொகை நினைவுகளை
சுமக்க இயலாமல்
சுமந்திருந்திருக்கிறது
இடிபாடுகளினுள் கூடுகட்டும்
பறவை

சிதைக்கப்பட்ட நிலமொன்றின்
மறக்கப்பட்ட பிரதிநிதி அது
வாழ்வின் மீதான ஆசை
ஏதுமில்லை அதற்கு
ஆயினும் வாழ்தல்
மரணத்தால்
விதிக்கப்பட்டிருக்கிறது..

தோப்பிலிருந்த
பறவைகளை எல்லாம்
பிடுங்கி வீசி எறிந்துவிட்டது
போர் கொட்டிய பாழ்மரணம்
எஞ்சியவையும் சுயம் சிதற
தூரப்பறந்துவிட்டன
கலங்கித்ததும்பும் விழிகளில்
துயரத்தை விரித்து
வாழ்வை தனியான வயலொன்றில்
விதைக்கும்
ராட்சதக்கவலைகளோடிருக்கிறது
அப்பறவை

யாருமில்லாப் பறவைக்கு
கைவிளக்கு வெளிச்சங்களையும்
அணைத்துவிடுகின்றன
மழைக்கால ஒழுக்குகள்
நதியில் விழுந்த துளிகளாய்
கண்ணீரெல்லாம்
வாழ்வு முடியும் திசையின்
தொலைவு வரை
சலிக்காமல் துரத்துகிறது
காலங்களை மீறியதோர் சாபம்

இறுகிப்போன பறவையின்
மெளனம் கலைத்து
மரணம் கைவிட்டுச்சென்ற
காலத்தின் கடைசியிடம்
பேச்சிடைப்பொருளானபோது
கோபக் கவளங்கள் நெஞ்சிறங்க,
அழிவின் அலறல் தெறித்துச்சிதறிய
தோப்பில்
விசமுட்கள் துளைத்த தாய்ப்பறவை
தன்மடியில் இருத்திவைத்து
இறக்குமுன் இட்ட முத்தம்
இரத்தச்சிவப்பென ஒளிர்ந்தது
அதன் அலகுகளில்

கேட்க மட்டுமே பழக்கப்பட்ட நானும்
செவிகளாக மட்டுமாயினேன்
பறவையின் துயரிற்கு...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒளிமிகக்கொண்ட காலம்...

-----

நீதியின் கரங்களை

சிலுவையில் அறைந்தபோது

எழுந்த குரல்களையும் கொன்றனர்

சாத்தான்களின் பிரதிநிதிகள்

சாட்சி சொல்ல அஞ்சும் நிலவும்

ஊமையான நட்சத்திரங்களும்

நாய்கள் குரைக்கும்

நாட்களின் அச்சத்தில்

பகைமையின் வாள்களோடு

வேட்டையாடுகிறது காடு

வீடும் கூடும்

விலைமதிப்பற்ற சுதந்திரமும் போயின

கரையவோ கடக்கவோ முடியாத துயரம்

தீப்படாமலே எரியும் வலி

வேலிகள் அரிக்கப்பட்ட தசாப்தங்கள் கடந்து

வேலிகளே அற்ற நூற்றாண்டில்

வெறுப்புமிழ சொல்லித்தரப்படுகிறது

மிதிபட்டபடியே சேர்ந்து வாழும் ஜனநாயகம்

எந்தவீதியிலும் பயணமில்லை

தொலைந்துபோயினர் வழிப்போக்கர்கள்

இறுகிப்படிந்திருக்கிறது தெருவெங்கும் மெளனம்

இரண்டொரு எறும்புகள் மட்டும்

சுமக்கமுடியாமல் சுமந்து செல்கின்றன

தெருவின் துயரை

வனப்புமிக்கதொரு வம்சம்

வாழ்ந்துபட்ட ஊர்களின்

வீரத்தின் தொல்லெச்சங்களை

உண்டு செரித்திடுமோ காலம்..?

பெருகும் கோடை ஒன்றின்

தகிக்கும் தீராவெக்கையை

கடக்க முடியாமல் தவிக்கும் இனத்தை

கவ்வியிருக்கின்றன

வறுமையின் வேட்டைப்பற்கள்

பசியுமுழும் கண்கள் வழியோடி

இருள் குவிந்த கன்னங்களில் தேங்கும்

கண்ணீரில் பிரதிபலிக்கிறது

இழப்புகளின் நினைவுகளும்

இயலாமையின் சிதறல்களும்

பிள்ளைகளை தொலைத்த தாயொருத்தியின்

குலுங்கும் மார்பிலிருந்து கொட்டும் சோகத்தை

அண்ணணை சுட்டுக்கொன்ற வீதியைக் கடக்கும்

தம்பியின் வலியை

வன்புணர்ந்து கொல்லப்பட்ட மகளின்

புதைகுளியை தாண்டும் தந்தையின்

வெடித்துக்கிளம்பும் துயரை

இனி எந்த மொழியிலும் சொற்கள்

விஞ்சப்போவதில்லை.

மேசைகள் நிறைய

ஈரமூறிய வார்த்தைகளை தூவும் உலகே

தூரமாய்

கோடை விளைந்த வயல்களில் இருந்து

காற்றள்ளி வரும் குரல் கேட்கிறதா..?

துளி ஈரத்தை உன் கொல்லையில் இன்னும்

மிச்சம் வைத்திருப்பாயானால் சொல்

எம் ஒளி மிகக் கொண்ட காலத்தை ஏன் கொன்றாய்..?

மழை இரவொன்றில்

காணாமல்போன நிலவைப்போல

நெருப்புத்தூள்களை உமிழ்ந்துவிட்டு

உறங்கிப்போன எரிமலை ஒன்றைப்போல

எம் ஒளி மிகக்கொண்ட காலம்

இறைமை பேசும் உன் தேசங்களின் தீயில்

இறந்ததெமக்கொரு கனவைப்போல

கருணையின் நிறத்தையும்

அன்பின் வர்ணத்தையும்

அறிவிக்கும் உலகே

மக்களை கொன்ற மன்னனையும்

பிணங்களைப் புணர்ந்த சேனைகளையும்

கண்டுகொள்ளாமல் விட்டபோது

பிணியெல்லாம் பரவிய தேசத்தை மறந்தபோது

இன அழிப்பின் துயர்க்குரலை மறைத்தபோது

ஒரு ஒளி நிறைந்த காலத்தைக் கொன்ற

பழி நிரம்பி உறைந்துபோனது

உன் பாதைகள் எங்கும்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கிறது உங்கள் கவிதைகள். தொகுத்து நூலாக்குங்கள் சுபேஸ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.