Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் கொண்டாடாக் கூடாத நாள், தீபாவளி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கொண்டாடாக் கூடாத நாள், தீபாவளி.

 

திராவிடர், வம்சத்தில் வந்த தமிழர்,

நரகாசுரன் என்னும் திராவிடனை, அழித்ததை... நாமே, பட்டாசு கொழுத்தி... இனிப்புப் பலகாரம் செய்து கொண்டாடலாமா?

 

எந்த இனமும், தன் மூதாதையரை... அழித்த்துக்கு, மகிழ்ச்சி கொள்ளுமா?

 

ஆரிய‌ன், எப்ப‌டியும்... கொண்டாடிவிட்டுப் போக‌ட்டும். அது, அவ‌னின்... வெற்றியை... குறிக்கும் தின‌ம்.

த‌மிழ‌னாகிய‌... திராவிட‌ன், கொண்டாடுவ‌த‌ற்கு... எந்த‌, அடிப்ப‌டைக் கார‌ண‌மும்... இல்லை என்றே க‌ருதுகின்றேன்.

 

மற்றும்... கார்த்திகை மாதத்தில், மாவீரர் நாளும்... அனுட்டிக்கப் படும் நேரங்களில், இந்தப் பண்டிகையை... அறவே வெறுக்கின்றேன்.

 

உங்கள்... கருத்துக்களையும், பதியுங்கள். வாசிக்க.... ஆவலாக உள்ளேன்.

 

தமிழ் சிறியா இதை எழுதியது???!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில் ‘ தீபாவளிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்ததாக எனக்குத்தெரியவில்லை, பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு இரண்டும் தான் கொண்டாடுவது வழக்கம்.

 

தீபாவளிக்கு புது உடுப்பு, கோயிலுக்குப்போறதோடு சரி, அதுவும் ‘கெளரிகாப்பு விரதகாலம். அதனால் பெரும்பாலும் கோயிலோடுதான் நேரம் போகும்.

 

அடுத்து ‘திராவிட, ஆரியர் என்று பிரிப்பதில் எனக்கு எந்த உடன்பாடும் எப்போதும் இருந்ததில்லை.

 

இராவணன் ‘திராவிடன் ‘என்று கூறியபோது.  இல்லை இராவணன் ‘பிராமணன்’ என்று குறிப்பிட்டார் ஒரு பெரியவர்.

 

 

தீபாவளி என்பதை விட இன்று ‘தமிழ்ச்செல்வன் அண்ணாவின் நினைவுநாள் என்பதுதான்’ நினைவில் ஊறிப்போய்க்கிடக்கிறது. அதனால், விடுமுறையென்றாலும் கூட எந்த விதக் கொண்டாட்டங்களும் இல்லை!.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறியா இதை எழுதியது???!!!!!

 

ஏன்... சபேசன், ஆச்சரியமாகக் கேட்கிறீர்கள்.

நானே... தான், எழுதினேன்.

எனக்கு, மதப் பற்றை விட... இனப் பற்று, சற்று அதிகம். :)

எனக்குத் தெரிந்து வடஇந்தியர்கள் இந்நாளை அரக்கனை அழித்த நாளாகக் கொண்டாடுவதில்லை.  நேற்று எனது அலுவலகத்தில் ஒரு வடஇந்தியர் விளக்கப்படுத்தினார்.  அவர்களுடைய புதுவருடம்தான் தீபாவளியாம்.  அதுமட்டுமின்றி, அவர்களுடைய தீபாவளி மூன்றாம் திகதியாம்.   இது எவ்வாறு அரக்கனை அழித்த நாளாக மாறியது என ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதே சிறந்தது.  உங்களுக்குத் தெரிந்த இந்தியர்களை கேட்டறிந்துவிட்டு இங்கு வந்து பதிந்தால் நாமும் அறிந்து கொள்ளலாம்.   

இராவணனை வெற்றி கொண்டு இராமன் அயோத்தி திரும்பிய நாளாகத்தான் இதை வட இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள்.

இராவணன் மீது மதிப்பு வைத்திருக்கின்ற தமிழ் மண்ணில் இந்தக் கதை சரிவராது என்பதனால், நராகசுரன் பற்றி சொல்லப்பட்டிருக்கலாம்.

FB இல் எனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தவர்களுக்காக,
 
என் சகோதரியின் அவல நிலையை video காட்சியாக பார்த்த பின்பும், எப்படி உங்களால் தீபாவளி கொண்டாட முடிகிறது?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

FB இல் எனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தவர்களுக்காக,
 
என் சகோதரியின் அவல நிலையை video காட்சியாக பார்த்த பின்பும், எப்படி உங்களால் தீபாவளி கொண்டாட முடிகிறது?

 

 

 

இதை நீங்கள் அங்கேயே கேட்டிருக்கலாமே?!.

உண்மையில் நான் மதத்தால் ஒரு கத்தொலிக்கனாய் இருந்தாலும் நான் மணம் முடித்தது இந்து துணைவியையே................தமிழர்களின் பண்பாட்டு மதமாகிய இந்து மதத்தின் அனைத்து விழாக்களையும் என் வீட்டில் கொண்டாடுவேன் ,மரக்கறியும் சாப்பிடுவேன் . :)  :icon_mrgreen: ......தீபாவளி என்னும் பண்டிகை மட்டுமே என்னால் இது வரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ....அதுவும் இந்த நாள் இந்த சூழலில் .............................எப்போது அரக்கன் என்னும் மகிந்தவும் ,அவனது பட்டாளங்களும் அழிந்து எமக்கு விடிவு கிடைக்கிறதோ அன்றே எமது தீபாவளி .[தீப ஒளி]

Thamilthangai க்கு

"இதை நீங்கள் அங்கேயே கேட்டிருக்கலாமே?!."

அங்கேயேயும் கேட்டிருந்தேன், அங்கே மட்டும் கேட்டிருந்தால் அது வெறும் கண்டனமாகவே இருக்கும், இங்கேயும் கேட்டதால். அவர்கள் எனது நியாயமான கோபத்தை புரிந்திருப்பார்கள்.

பி.கு

எனது fb நண்பர்கள் பலர் யாழ் வாசகர்கள்.

உங்கள் வாழ்துகள்...
அவள் நிர்வாணத்தை
மறைக்கும் என்றால்........!
நன்றி !
J.சதிஸ்

சற்று பெரிய இணைப்பு நேரம் இருந்தால் வாசியுங்கள்.

 

தமிழன் கொல்லப்பட்ட தீபாவளி நாளை தமிழர்களே கொண்டாடுவது வெட்கம்.

அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதனைக் குடிக்கிற மூடர்கள் இருக்கிறார்கள்.

அது போலவே ஆதியில் இல்லாது பாதியில் வந்த தீபாவளிப் பண்டிகையை தமிழர்கள் அது தமிழ்ப் பண்டிகை என நினைத்துக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்?

* வடநாட்டு குஜராத்திகள், மார்வாரிகள் தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள் எனக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு தீபாவளி புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள்.

* வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்கு உரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள்

* தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால நாளே தீபாவளியாகும்.

* இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை தூக்கிச் சென்று சிறை வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை போரில் கொன்றுவிட்டு, சீதையை மீட்டுக் கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, வீடுகளில் விளக்கேற்றிக் கொண்டாடினர்.

* சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியைத் தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்துக்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள். நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கிக் கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்கத் திருவுள்ளம் கொள்கிறார்.

ஆனால் நரகாசுரனை கொல்வது விஷ்ணுவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே விஷ்ணு பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச் சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறு அவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுவது போல் பாசாங்கு செய்கிறார். அதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து விஷ்ணுவின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறாள்.

உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்” என்கிறான் நரகாசுரன்.

காத்தல் கடவுள் எனப் போற்றப்படும் மகாவிஷ்ணு எடுத்த ஒவ்வொரு அவதாரமும் அசுரர்களைக் கொல்வதற்காகவே என புராணங்கள் புகல்கின்றன.

1) மச்ச (மீன) அவதாரதம்

குதிரை முகம் கொண்ட ஹயக்கிரீவன் என்னும் அசுரன் வேதங்களை அபகரித்துக்கொண்டான். வேதங்களின் உதவியால்தான் பிரம்மன் படைக்கும் தொழிலைச் செய்து வருகிறார். அதைக் கெடுக்கவே ஹயக்கிரீவன் அவ்வாறு செய்தான். வேதங்களைக் கொண்டுபோய்த் தன் வாயில் மறைத்து வைத்திருப்பதை அறிந்த மச்சமூர்த்தி, ஹயக்கிரீவனோடு போரிட்டு அவனைக் கொன்று, வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் கொடுத்தார்.

2) கூர்ம (ஆமை) அவதாரம்

ஒரு நாள் துர்வாசர் மகாவிஷ்ணு கொடுத்த மாலையைத் தேவேந்திரனுக்குக் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக வாங்கி யானையின் பிடரி மீது வைக்க, அது நழுவிக் கீழே விழுந்தது. அந்தத் தெய்வீக மலர் மாலையை யானை தன் காலால் மிதித்தது. அதனைக் கண்ட முனிவர் கடும் கோபத்துடன், ” தேவேந்திரா, மகாவிஷ்ணுவின் அருளினால்தான் நீ இந்தப் பதவியும், சிறப்பும் பெற்றிருக்கிறாய். அதை மறந்து, மகாலட்சுமி கொடுத்த மலர் மாலையை இழிவு படுத்தி விட்டாய். அதனால், நீ இலட்சுமி கடாட்சத்தையும், தேவே பதவியையும் இழப்பாய்” என்று சாபம் இட்டார்.

துர்வாச முனிவர் இட்ட சாபத்தினால் தேவலோகம் முழுவதும் இருண்டது. தேவலோகத்திலிருந்த அனைவருக்கும், தேவேந்திரனால் சாபம் உண்டானது. தேவர்கள் அனைவரும் தமது பலம் முழுவதையும் இழந்தார்கள்.

அப்போது, அசுரர்களின் பலம் அதிகமாகியது. இதனால் தேவலோகத்திலிருந்து தேவேந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் அடைக்கலம் புகுந்தனர்.

பிரம்மனாலும் அவர்களின் துயரைத் தீர்க்க முடியவில்லை. அனைவரும் விமோசனம் வேண்டிப் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

மகாவிஷ்ணு, “தேவேந்திரா, அசுரர்களுடன் போரிட்டு அழிக்கும் சக்தி உங்களிடம் இல்லை. அதனால், நீங்கள் அசுரர்களுடன் சமாதானமாகி, திருப்பாற்கடலைக் கடைந்து, தேவ அமிர்தம் எடுத்து உண்டால் பலம் உண்டாகும். சாகா வரம் கிடைக்கும். பிறகு நீங்கள் இழந்ததைப் பெறலாம்” என்று யோசனை கூறினார்.

அமிர்தம் கடைவதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட்டனர். தேவர்கள் பாம்பின் தலையைப் பிடிக்க, அசுரர்கள் “நாங்கள் கேவலமானவர்கள் இல்லை. பாம்பின் வாலை நாங்கள் பிடிக்க மாட்டோம். ” என்று வீரம் பேசினார்கள்.

அவர்கள் விருப்பப்படி, தேவர்கள் பாம்பின் வாலையும், அசுரர்கள் தலையையும் பிடித்துப் பாற்கடலைக் கடைந்தபோது, மந்தார மலை பாற்கடலில் அமிழ்ந்து மூழ்கியது.

அச் சமயத்தில் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்துக் கடலுக்குள் புகுந்து தன முதுகால் மலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி ஒரு தங்கக் கலசத்தில் தேவ அமிர்தத்தை ஏந்தியவாறு தோன்றினார். அசுரர்கள் வேகமாகச் சென்று, தேவர்களை முந்திக்கொண்டு அக்கலசத்தைப் பறித்துக் கொண்டார்கள்.

அப்போது, மகாவிஷ்ணு மோகினி என்ற அழகான பெண் உருவம் எடுத்து, அசுரர்களை மயக்கி, அமிர்தத்தைத் தேவர்களுக்கே பங்கிட்டுக் கொடுத்து அசுரர்களை ஏமாற்றினார்.

அமிர்த பானத்தை அருந்திய தேவர்கள் புதிய பலமும் சாகாவரமும் பெற்று, அசுரர்களை வென்று அவர்களைப் பாதாள லோகத்துக்கு ஓடும்படி விரட்டிவிட்டு, மீண்டும் தேவ லோகத்தைக் கைப்பற்றினார்கள்.

வராக (பன்றி) அவதாரம்

ஒரு சமயம், மகரிஷிகள் (முனிவர்கள் ) நால்வர் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் செல்லும்போது, ஏழாவது நுழைவாயிலில் காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் அந்த மகரிஷிகளைத் தடுத்தார்கள். எந்த நேரத்திலும் பகவானைத் தரிசிக்கும் அருளைப் பெற்ற அந்த ரிஷிகள் கோபமடைந்து, “நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்” என்று சாபமிட்டார்கள்.

மகாவிஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், ” இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானதுதான். இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து, பின் நம் அருளினால் நம்மையே அடைவார்கள் ” என்று கூறினார்.

கசிப முனிவருக்கும் அதிதிக்கும் மூன்று பிள்ளைகள். முதலில் பிறந்தவன் இரண்யகசிபு. அடுத்துப் பிறந்தவன், இரண்யாட்சன். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவமிருந்து ‘எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது’ என்று வரம் பெற்று, மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான். இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களைப் பிடித்துக் கொன்று வந்தான்.

பூலோகம் நீர்ப் பிரளயத்தில் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் ஒன்று உருவாகிச் சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.

பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது. இச் சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து, அசுர லோகத்தில் சுகமாக இருந்தான்.

அப்போது நாரதர் அங்கே தோன்றி, ” இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக்கொண்டு நீரில் மூழ்கியிருக்கும் பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார் ” என்று சொன்னார். உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான்.

வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன் கதாயுதத்தால் அடித்தான். இருவருக்கும் கடும் போர் உண்டானது.

இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத் தலையின்மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின்மீது விழுந்து மடிந்தான். தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்.

நரசிம்ம அவதாரம்

தன் தம்பி இரண்யாட்சன் வராகமூர்த்தியால் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த இரண்யகசிபு கொதித்தெழுந்தான். தேவர்களுக்கு மகாவிஷ்ணு துணையாக இருப்பதால், அவரைக் கொன்று விட்டால், தேவர்களை இலகுவாக வெல்ல முடியும் என்று தீர்மானித்தான்.

தேவர்களுக்கும், விஷ்ணுவுக்கும் பலத்தை அளிப்பது பூலோகத்தில் நடத்தப்படும் யாகங்கள்தான் என்பதை அறிந்த இரண்யகசிபு, எங்கெங்கு யாகங்கள் நடத்தப்படுகின்றனவோ, அந்த இடங்களை எல்லாம் நாசமாக்கினான். முனிவர்களை அடித்து வதைத்தான். இதனால், தேவர்கள் அனைவரும் அவதியுற்று, பூலோகத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள்.

இரண்யகசிபு பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும் வரம் அளித்தார்.

இரண்யன் ஆணவம் மிகுந்து, தேவர்களையெல்லாம் அடிமைகளாக்கி, மூன்று உலோகங்களையும் ஆட்சி செய்து வந்தான்.

தேவாதி தேவர்கள் எல்லாம் அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தார்கள். துன்பத்தைத் தாங்க முடியாமல், தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் வெகு விரைவில் இரண்யனைக் கொன்று அவர்களைக் காப்பாற்றுவதாக அருளினார்.

தேவேந்திரன் இரண்யனைப் பழிவாங்க நினைத்து, இரண்யனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளைச் சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ்ணுவின் மகிமைகளை அறிய வைத்தான்.

இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ்ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன்.

அனைவரும் இரண்யனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான்.

“தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷ்ணுவேதான்” என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரண்யன், ” அந்த ஹரி எங்கே இருக்கிறான் ? ” என்று கேட்டான்.

அதற்கு பிரகலாதன் “எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் ” என்று ஒரு தூணைக் காட்டினான்.

இரண்யன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, மகாவிஷ்ணு, சிங்க முகமும், மனித உடலும்கொண்ட நரசிம்ம அவதாரத்தில் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார்.

அவரைத் தாக்கப் பாய்ந்தான் இரண்யன். நரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடல்களை உருவி மாலையாக அணிந்து கொண்டார். இரண்யன் இறந்துபட்டான்.

வாமன அவதாரம்

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் பலி என்ற அசுரன் தாக்கப்பட்டான். மற்ற அசுரர்கள் அவனை உயிர் பிழைக்கச் செய்தார்கள். அசுர வம்சத்து முனிவர்களும், அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியரும் அவனுக்குப் பழைய தேக பலத்தையும், சக்தியையும் அளித்தார்கள்.

அவனைப் பெரிய யாகம் ஒன்று செய்ய வைத்தார்கள். அந்த யாகத்திலிருந்து இரதம் ஒன்று வெளியே வர, அதன்மீதேறித் தேவலோகம் சென்ற பலி, இந்திரனை விரட்டியடித்து தேவலோகமான அமராவதியைக் கைப்பற்றினான். மகாபலி என்ற பெயருடன் சக்கரவர்த்தி ஆகினான்.

மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆட்சி மூன்று உலோகங்களிலும் பரவியது. தேவர்கள் தேவலோகத்தைவிட்டு ஓடி மறைந்தார்கள்.

இதை அறிந்த தேவமாத அதிதி வேதனையுற்றுக் கணவர் காசிபரிடம் முறையிட, அவர் மகாவிஷ்ணுவை நினைத்து விரதமிருக்கும்படி கூறினார். அவளும் பன்னிரண்டு நாட்கள் கடுமையான விரதமிருந்தாள்.

மகாவிஷ்ணு காட்சியளித்து, ” தேவமாதாவே, மகாபலிச் சக்கரவர்த்தி பிராமணர்கள் செய்த யாகத்தினால் வலிமையடைந்திருக்கிறான். அதனால், அவனிடமிருந்து தேவலோகத்தை மீட்க, உனக்குப் புத்திரனாக நானே அவதரிப்பேன்” என்று அருளினார். அதன்படி மகாவிஷ்ணு அதிதியின் கருவில், வாமனமூர்த்தியாக அவதரித்தார், வாமனமூர்த்தி தனது குள்ளமான உடலுடன் மகாபலிச் சக்கரவர்த்தியின் அசுவமேத யாகசாலைககுச் சென்றார். மகாபலி அவரை வரவேற்று, உபசரித்து, உட்காரவைத்து அவருடைய பாதங்களைக் கழுவினான். கழுவிய நீரைத் தன் தலைமேல் தெளித்துக்கொண்டான்.

பின் அவரிடம், தன்னை நாடி வந்த நோக்கம் என்ன என்று கேட்டான். எதுவாக இருந்தாலும் தருகிறேன் என்று வாக்குறுதியளித்தான்.

“மகாபலியே, கேட்பது எதுவாக இருந்தாலும் கொடுப்பதாக வாக்களித்து விட்டாய். எனக்கு வேண்டியது, என் கால்களால் அளந்த மூன்று அடி மண்தான். அதைக்கொடு” என்று கேட்டார்.

அதைக்கேட்ட மகாபலி மகிழ்ச்சியுடன், ” மூன்று உலோகங்களையோ, ஓர் இராஜ்யத்தையோ கேட்காமல், மூன்றடி நிலம் கேட்கிறீர்கள். அப்படியே தருகிறேன் ” என்று கூறினான்.

அச் சமயத்தில் சுக்கிராச்சாரியார் குறுக்கிட்டு, ” குள்ளமான உருவத்தில் வந்திருப்பது உன் குலவிரோதி மகாவிஷ்ணுதான்” என்று கூற, மகாபலி பதிலாக “என் குலவிரோதியானாலும், நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் ” என்று கூறிவிட்டுத் தன் மனைவி கொண்டுவந்த நீர் நிரம்பிய கெண்டியிலிருந்து தண்ணீரை ஊற்றித் தாரை வார்த்துத் தானம் கொடுத்தவுடன், வாமனரின் உருவம் வளர்ந்தது, மிகவும் வளர்ந்து பிரம்மாண்டமானது. மகாபலி அவரை அண்ணாந்து பார்த்தான்.

வாமனர் வானத்தை ஓர் அடியாலும், நிலத்தை மறு அடியாலும் அளந்தார். பின், “ஓர் அடியால் விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” என்று கேட்டான். மகாபலி சற்றும் தயங்காமல், ” மகாவிஷ்ணுவே, தங்கள் மூன்றாவது அடியை என் தலைமேல் வையுங்கள்” என்று கூறித் தலை சாய்ந்து, வணங்கி நின்றான். மகாவிஷ்ணு தமது ஒரு பாதத்தை அவன் தலைமீது வைத்து அழுத்த, மகாபலியும் அவனைச் சேர்ந்த அசுரர்களும் பாதாள லோகத்தை அடைந்தார்கள்.

இராம அவதாரம்

விசுவரசு என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சளி என்பாளுக்கு குபேரனும், இரண்டாவது மனைவி கேகயி என்பவளுக்கு இராவணனும் பிள்ளைகளாக பிறந்தனர்.

இராவணனும் கடும் தவம் புரிந்தான். பிரம்மன், அவன் முன் காட்சி அருளினார். இராவணன், அவரிடம் தனக்கு, தேவர்களாலோ, அரக்கர்களாலோ, விலங்குகளாலோ மரணம் நேரக் கூடாது என்ற வரத்தினை பெற்றுக்கொண்டான்.

இவ்வாறு தான் பெற்றுக்கொண்ட தவ வலிமையினால் தேவலோக அரசன் தேவேந்திரனை வென்று அமராவதியை கைப்பற்றினான்.

பூலோகத்தில், இலங்கை முதலில் குபேரனிடம் இருந்தது. குபேரன், தன் தம்பி இராவணன் இலங்கையை விரும்பி கேட்டு விட்டதால் அவனுக்கே அதனை கொடுத்து, இலங்கேசுவரன் என்ற பட்டத்தினையும் சூட்டினான்.

இராவணன், பிரம்மனிடம் சாகாவரம் கேட்டு கொள்ளும் போது தனக்கு ‘மனிதனால்’ மரணம் நேரக் கூடாது எனக் கேட்கவில்லை. இதனைக் கூறிய மகாவிஷ்ணு, தான் இராமவதாரம் எடுத்து இராவணனை அளிப்பதாக அறிவித்தார்.

தசரதனுக்கும் கோசலைக்கும் இராமன் பிள்ளையாகப் பிறக்கிறான். இராமன் சீதையை மணக்கிறான். இராமனுக்கு முடிசூட்ட செய்ய விரும்பி அதற்கான ஏற்பாட்டை தசரதன் செய்கிறான். ஆனால் கைகேகி, கூனி என்பாள் பேச்சினைக் கேட்டு தசரதரிடம் தன் மகன் பரதனே நாட்டை ஆளவேண்டும், இராமன் காடு செல்ல வேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றிக் கொண்டாள்.

அதன் படியே இராமன், சீதை, இலட்சுமணன் மூவரும் வனவாசம் சென்றார்கள். பிள்ளைகள் காடு சென்ற அதிர்ச்சி தாங்காமல் தசரதர் உயிர் துறந்தார்.

பின்னர் மூவரும் சித்திர கூடத்தில் இருந்து வெளியேறி தண்டகரன்யத்தில் முனிவர்களுடன் வாழ்ந்து வந்தனர். அப்பகுதிக்கு வந்த இராவணனின் தங்கை சூர்ப்பனகை இராமன் மீது மோகம் கொண்டு அணுகியதால், மூக்கறுபட்டாள்.

தனது தங்கையின் மூக்கை அறுத்த இராமனை பழி வாங்கும் நோக்குடன் சீதையைக் கவர்ந்து வந்து இலங்கையிலே அசோகவனத்திலே இராவணன் சிறை வைத்தான்.

வானரங்களின் உதவியுடன் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்றனர். இராமனின் படைக்கும் இராவணன் படைக்கும் மிக கடும் போர் நடந்து இறுதியில் இராமன் இராவணனை அழித்து, அவனது தம்பி விபீடணனை, இலங்கை வேந்தனாக முடி சூட்டினார்.

எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் அல்லது இயக்கர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும் தேவர்களை மீட்கக் கடவுள் மீன், ஆமை, பன்றி போன்ற அவதாரம் எடுத்ததாகவும் சொல்கின்றன. இவையெல்லாம் அன்றைய ஆரிய – திராவிட இனங்களுக்கு இடையிலான போரைக் குறிக்கும் குறியீடுகள் ஆகும்.

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, உடும்பு போன்றவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் ‘அவிர்ப்பாகம்’ என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். குதிரை, மாடு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் அல்லது அரக்கர்கள் அல்லது இயக்கர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய ‘வீரன்” என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர்களையும் (அசுரர்களை) ஒரு காலத்திலும் தலைதூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமிபாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், உடன்பிறப்பைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்? இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்? பூலோகத்தில் அரசனாக ஆண்டவர்கள் எல்லாம் அசுரர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா?

இராம – இராவண யுத்தம் ஆரிய – திராவிடர் இருசாராருக்கும் இடையிலான மோதல்தான். இப்படி நேரு தான் எழுதிய Discovery of India என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராமன் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும் அரக்கர்களைக் கொன்று ஒழிப்பதாக வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாவும் சொல்கிறான். (ஆரண்ய காண்டம், 10 ஆவது சருக்கம்)

“தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று” என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாம் எழுதிய ‘தமிழர் சமயம்‘ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும் குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும் தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாமெழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு” என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை ) என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி” என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய “தமிழர் மதம்” என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் -

“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் – இராவணன் முதலானோர் நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்”. (வேளாளர் நாகரிகம் – பக்கம் 60)”மறைமலை அடிகள் தமிழர், அதிலும் தனித் தமிழ் வெறியர் அவர் அப்படித்தான் எழுதுவார்” என்று சிலர் சொல்லக் கூடும். அவர்களுக்காக இதோ இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதைத் தருகிறேன். படியுங்கள்.

“தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். (இராமாயணச் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் பக்கம் 587-589)

இவ்வாறு நடைமுறை உண்மைக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்துவராத, முரண்பட்டு இருக்கிற பொய்களை, கலையுரைத்த கற்பனைகளை எல்லாம் மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தமிழர்களைத் தாழ்வுபடுத்தும் இந்தத் தீபாவளியை இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழர்கள் செக்குமாடுகள் போல் கொண்டாடிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?

தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உயர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்!

என்று மகாகவி பாரதியார் மனம் வெந்து சொன்னது இற்றைவரை சரியாகவே இருக்கிறது.

தமிழர்களே சிந்திப்பீர்! ஆரியம் எம்மைத் தாழ்த்தும் தீபாவளியை கொண்டாடாதீர்கள். மீறிக் கொண்டாடுவது எமது தன்மானத்துக்கு இழுக்கு!

நாங்கள் 10 வருடங்களுக்கும் மேலாக தீபாவளி கொண்டாடுவது இல்லை. அப்பா இருக்கும் காலத்திலும் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்திலும் தீபாவளி கொண்டாடியத இல்லை. எக்காரணம் கொண்டு தீபாவளியை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

 

இன்று என் FB இல் கீழே உள்ளதை எழுதியிருந்தேன்.

 

சுர பானம் அருந்தாத நாரகாசுரனுக்கு தமிழனான எனது கண்ணீர் அஞ்சலிகள். ஒருவரை கொலை செய்து அவரது சாவை வெற்றி பண்டிகையாக கொண்டாடும் சைக்கோ ஆக நானும் என் குடும்பமும் இருக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.. ஒருவரின் கொலைக்கு பண்டிகை எடுத்து கொண்டாடும் காட்டுமிராண்டித் தனத்தினை அடியோடு வெறுக்கின்றேன்..

 

கடந்த வருடங்களில் எப்படி எழுதினாலும் வாழ்த்து சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் வாழ்த்து மட்டை ஒன்றை போட்டு விட்டு அதில் என் பெயரையும் என் சம்மதம் இல்லாமல் tag பண்ணுகின்றவர்கள் எவரும் இதனை வாசித்த பின் எனக்கு வாழ்த்து சொல்ல விரும்பவில்லை என்பது மனசுக்கு ஆறுதலாக இருந்தது.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் தனது போராட்டடத்தை நடத்தியிருந்தால், அந்தக் கதையை இப்படித்தான் படித்திருப்போம்.

'பிரபாகரசுரன் பூமியை பாயாக சுருட்டிக் கொண்டு போய் கடற்கரைக்கு பக்கத்தில் வைத்தான். மகிந்த பரமாத்மா பூமாதேவியை காக்க போரிட்டார். பிரபாகரசுரன் பெற்ற வரத்தால், மகிந்த பரமாத்மாவால் அவனை தனித்து வெல்ல முடியவில்லை. அன்னை சோனியாதேவியும் துணைக்கு வந்தார். இருவரும் சேர்ந்து பிரபாகரசுரனை வதம் செய்தனர். பூமாதேவியை மீட்டனர். மீட்கப்பட்ட பூமாதேவி, மகிந்த பரமாத்மா மீது காதல் கொண்டு, அவருடனேயே சேர்ந்து வாழ்ந்தாள்'

நல்ல வேளை! தகவற் தொடர்பில் ஏற்பட்ட புரட்சியும், பத்திரிகைகள், இணையங்கள், முகநூல்கள், ருவிற்றர்கள் என்று ஊடகத் துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியும், வரலாற்றை சரியாக பதிகின்ற நிலையை உருவாக்கித் தந்தன.

எங்கள் பாட்டன் நரகாசுரனுக்கு எங்களின் வீரவணக்கம் உரித்தாகட்டும்!!!

எங்கள் பாட்டன் நரகாசுரனுக்கு எங்களின் வீரவணக்கம் உரித்தாகட்டும்!!!

 

  • கருத்துக்கள உறவுகள்
எங்கள் பாட்டன் நரகாசுரனுக்கு எங்களின் வீரவணக்கம் உரித்தாகட்டும்!!! 

 

சபேசனுக்குப் பாட்டனா? :o

 

அப்படியானால்,எனக்குக் கொள்ளுப்பாட்டனாய் இருக்க வேண்டும்!

 

கொள்ளுப்பாட்டனுக்கு வீர வணக்கம்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாட்டங்கள் மனித மகிழ்ச்சிக்கு அவசியம் தேவை. தவறானவற்றையும் கொண்டாடிப் பழக்கப் படுத்திக் கொண்டபின் தவறென்று புரிந்து புறந்தள்ள முயன்றாலும், அந்நாள் வரும்போது மனம் அமைதியின்றித் தவிப்பதை போலியாகவே மறைக்க முடியும். தொட்டில் பழக்கம் சுடுகாடுவரையில் என்பதுபோல் பழகியவற்றைக் கைவிடுவது என்பது அத்தனை எளிதல்ல. மேலை நாட்டில் சித்திரை முதல்நாளை புதுவருடமாகக் கொண்டாடி வந்தமக்கள் அது தவறென்று புரிந்து நிறுத்திக்கொண்ட போதும், சித்திரை முதல்நாள் கொண்டாட்டத்தை அவர்கள் அடியோடு புறந்தள்ளி விடவில்லை. முட்டாள்கள் தினமாக மாற்றி இன்றும் கொண்டாடி மகிழ்கின்றனர். இதுபோலவே தீபாவளிப் பண்டிகையும் தவறென்று நாங்கள் புரிந்துகொண்ட வேளையில் அதனைக் கொண்டாடிவந்த நாளை அடியோடு புறந்தள்ளி விடாது மாற்றம் கண்டுகொள்ள முடியும்.

 

சபேசன் அவர்களின் பின்னூட்டம் குறும்பாகத் தோன்றினாலும், அவர் தெரிவித்ததுபோல் வரலாற்றைப் புதுப்பித்துக் கொள்ளவது இன்றைய உலகில் சாத்தியமானதே. இன அழிப்பைக்கூட பயங்கரவாத அழிப்பு என்று மேற்குலகம் ஏற்று அதற்கு உதவிபுரிந்ததுதான் யதார்த்தம்.

 

கார்த்திகை மாதம் தலைவர் உதித்த மாதம். அதற்கு ஒரு வரலாறு எழுதி, அதனைத் தமிழர் தீபாவளியாக, பட்டாசும் கொழுத்தி மகிழலாம். அல்லது அதற்கு இணையான ஒரு வரலாற்றை எழுதிவிட்டுக் கொண்டாடலாம். தமிழ் சிறார்களுக்கு இதனைப் பழக்கிவிட்டால் அது சிறப்பாகி வளர்ந்துவிடும். இதற்கு எதிர்ப்பு வரலாம், வரும். தலைவரின் அடியொற்றி வாழும் புலம்பெயர் புலிகளால் நடாத்தப்படும் தமிழாலயங்கள்தானும் இந்த மாற்றங்கள் ஏற்படுத்த முன்வராதா. சிறியளவிலேனும் மாற்றம் ஏற்பட்டாலே போதும் அது வளர்ந்து பரவிவிடும்.

கொண்டாட்டங்கள் மனித மகிழ்ச்சிக்கு அவசியம் தேவை. தவறானவற்றையும் கொண்டாடிப் பழக்கப் படுத்திக் கொண்டபின் தவறென்று புரிந்து புறந்தள்ள முயன்றாலும், அந்நாள் வரும்போது மனம் அமைதியின்றித் தவிப்பதை போலியாகவே மறைக்க முடியும். தொட்டில் பழக்கம் சுடுகாடுவரையில் என்பதுபோல் பழகியவற்றைக் கைவிடுவது என்பது அத்தனை எளிதல்ல. மேலை நாட்டில் சித்திரை முதல்நாளை புதுவருடமாகக் கொண்டாடி வந்தமக்கள் அது தவறென்று புரிந்து நிறுத்திக்கொண்ட போதும், சித்திரை முதல்நாள் கொண்டாட்டத்தை அவர்கள் அடியோடு புறந்தள்ளி விடவில்லை. முட்டாள்கள் தினமாக மாற்றி இன்றும் கொண்டாடி மகிழ்கின்றனர். இதுபோலவே தீபாவளிப் பண்டிகையும் தவறென்று நாங்கள் புரிந்துகொண்ட வேளையில் அதனைக் கொண்டாடிவந்த நாளை அடியோடு புறந்தள்ளி விடாது மாற்றம் கண்டுகொள்ள முடியும்.

 

சபேசன் அவர்களின் பின்னூட்டம் குறும்பாகத் தோன்றினாலும், அவர் தெரிவித்ததுபோல் வரலாற்றைப் புதுப்பித்துக் கொள்ளவது இன்றைய உலகில் சாத்தியமானதே. இன அழிப்பைக்கூட பயங்கரவாத அழிப்பு என்று மேற்குலகம் ஏற்று அதற்கு உதவிபுரிந்ததுதான் யதார்த்தம்.

 

கார்த்திகை மாதம் தலைவர் உதித்த மாதம். அதற்கு ஒரு வரலாறு எழுதி, அதனைத் தமிழர் தீபாவளியாக, பட்டாசும் கொழுத்தி மகிழலாம். அல்லது அதற்கு இணையான ஒரு வரலாற்றை எழுதிவிட்டுக் கொண்டாடலாம். தமிழ் சிறார்களுக்கு இதனைப் பழக்கிவிட்டால் அது சிறப்பாகி வளர்ந்துவிடும். இதற்கு எதிர்ப்பு வரலாம், வரும். தலைவரின் அடியொற்றி வாழும் புலம்பெயர் புலிகளால் நடாத்தப்படும் தமிழாலயங்கள்தானும் இந்த மாற்றங்கள் ஏற்படுத்த முன்வராதா. சிறியளவிலேனும் மாற்றம் ஏற்பட்டாலே போதும் அது வளர்ந்து பரவிவிடும்.

 

உண்மைதான் பாஞ்.  ஆனால் தலைவரின் பிறந்தநாள் மாவீரர் நாளுக்கு முதல்நாள் வருவதால் எம்மால் அதனைக் கொண்டாட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

2213 ஆம் ஆண்டு தமிழர் கொண்டாட்டம் - பட்டாசு விழா
-----------------------------------------------------------------------------------

 

பார்வதியும் வேலுப்பிள்ளையும் பூமியில் பேய்கள் ஆண்டுகொண்டிருந்த இலங்கையில் தமிழர்களாக பிறந்தனர். அவர்களிற்கு பிறந்த மகன் தான் பிரபாகரன். ஆரம்பத்தில் அவன் அனைவரிடத்திலும் மிக நல்லவனாகத் பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆக ஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, தீய எண்ணங்கள் அவனை ஆட்கொண்டன. பெரிய அரசியல் புத்திஜீவிகளையும் நாட்டை ஆண்ட பரையும் இகழ்ந்தான், முழு இலங்கையையும் தனதாக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் படித்தான். பேராசையால் பலரை கொன்றும் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.

இதற்கு நடுவில் அவனுடன் பல அரக்கர்கள் சேர்ந்து கொண்டனர். "இலங்கைத்தீவை இரண்டாக பிரிக்காமல் எனது உயிர் போகாது என உறுதி பூண்டான். 

 

அமைதியான தீவை இப்படி அராஐகத்தின் மூலம் அழிக்காதே என பலர் கேட்டுக்கொண்டனர். அவர்களையும் அவன் கொன்றுகுவித்தான்.

 

பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்து தன்னை அழிக்கவே முடியாத ஒரு நிலையை எட்டிவிட்டான்.

 

ஆரம்பித்து விட்டது பிரபாகரனின் அட்டகாசம். முழு இலங்கையையும் அடைய நினைத்து முதலில் யாழ்நகரை முற்றுகையிட்டான். பல மாற்றுக்கருத்தாளர்களை சிறையில் அடைத்தான். சிலர் ஓடி ஒளிந்துக் கொண்டனர், மிஞ்சிய சிலர் மிகக் கவலைக் கொண்டு மகிந்தவிடம் மன்னனிடம் சென்று தங்கள் நிலமையைக் கூறி காப்பாற்றுமபடிக் கேட்டுக் கொண்டனர். "கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்" என்றார் மகிந்த மன்னன்.

 

அனைத்தும் அறிந்த பல நாட்டு வல்லுனர்களை பிரபாகரனிற்கு அறிவுரை சொல்ல மகிந்த மன்னன் அனுப்பி வைத்தான்.

 

அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், பிரபாகரன் காது கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது.

 

மகிந்த மன்னனுக்கு சாரதியாக சோனியா ராணியும் இணைந்துகொண்டார். அண்டை நாட்டு மன்னர்கள் போருக்கு வேண்டிய எல்லாக் கருவிகளையும் கொடுத்து உதவினர்.

 

கடும்போர் தொடர்ந்தது. பிரபாகரன் வெடிமருந்துகள் நிரம்பிய அரக்கர்களை மக்களோடு மக்களாக அனுப்பினான்.

கோபத்தில் வீறுகொண்டெழுந்தான் மகிந்த மன்னன். என் மக்களுக்கா இந்த நிலை என கொதித்தெழுந்தான்.

ஆகாய வெளியில் பறந்து வந்து பிரபாகரனின் தலையில் ஒரு அடி.  இனி உயிர் தப்ப முடியாது என்று எண்ணிய பிரபாகரன் தா
ன் இறக்கும் இந்நாளை எல்லோரும் காலையில் புத்தாடை உடுத்தி, பட்டாசு கொழுத்தி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

 

 

இதுவே பட்டாசுவிழாவாக கொண்டாடுகிறோம். பட்டாசு விழா நம் மனதில் இருக்கும் பிரிவினையை அகற்றி ஞான ஒளியை ஏற்றும் நாள்...

 

இதை சிங்களவன் கொண்டாட மறந்தாலும் தமிழன் மறக்க மாட்டான்

 

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரையும் நலமே வாழவைக்கும் நோக்கத்துடன் அமிர்தம் எடுப்பதற்கு பாற்கடல் கடையப்பட்டது. கடைந்ததும் முதலில் எழுந்தது கொடிய நஞ்சுதான். புராணக்கதை உண்மை என யதார்த்தமும் நிரூபித்து நிற்கின்றது. இந்த நிரூபண தினத்தைத் தீபாவளியாகக் கொண்டாடுவதற்குச் சீனாவிலிருந்து மலிவாக சீனாவெடி தருவிக்கப்படும் என மகிந்தா உறுதியளித்துள்ளார். :icon_mrgreen:  :icon_mrgreen: 

தீபாவளி கொண்டாடிய பிரிட்டன் பிரதமர்

 

லண்டன் : பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தனது மனைவி சமந்தா கேமரூனுடன் லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கேமரூன் வழக்கமான ஆடை அணிந்திருந்தாலும், சமந்தா இந்தியர்களின் பாரம்பரிய உடையான புடவையில் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினார். 

 

ELARGE_20131105003739294378.jpeg

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு  பெரிதாக இது போன்ற  பண்டிகைகளின் செயல்த்திறன் அல்லது உருவாக்கம் பற்றிய சமய  அறிவு இல்லை

ஆனால் எனக்கு தீபாவளி  சார்ந்து ஒரு கேள்வியுண்டு

தீபாவளிக்கு முதல் நாள்

எம்மை விட்டுச்சென்றவர்களுக்க  (இறந்தவர்களுக்கு)

படைக்கும் பழக்கம் எம்மவரிடையே  உள்ளதே.

இது எதனால்??  எதற்காக???

இதையும் நிறுத்தமுடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு  பெரிதாக இது போன்ற  பண்டிகைகளின் செயல்த்திறன் அல்லது உருவாக்கம் பற்றிய சமய  அறிவு இல்லை

ஆனால் எனக்கு தீபாவளி  சார்ந்து ஒரு கேள்வியுண்டு

தீபாவளிக்கு முதல் நாள்

எம்மை விட்டுச்சென்றவர்களுக்க  (இறந்தவர்களுக்கு)

படைக்கும் பழக்கம் எம்மவரிடையே  உள்ளதே.

இது எதனால்??  எதற்காக???

இதையும் நிறுத்தமுடியுமா??

 

தீபாவளிக்கு முதல் நாள் இறந்தவர்களுக்கு படைக்கும் பழக்கத்தை அறிந்ததும் இல்லை கேட்டதும் இல்லை. எனக்குத் தெரியாது என்பதற்காக பூனைபோல் கண்ணை மூடிக்கொள்ள முயலவில்லை. தீபாவளி அன்று எங்கள் வயிற்றுக்குப் படைப்பதற்காக, முதல் நாளே கொண்டைச் சேவலைப்பிடித்து அடைத்து வைப்பதையும், ஆட்டுக் கிடாயைக் கட்டி வைப்பதையும் கண்டுள்ளேன்.  :) 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லாரும் சேர்ந்து தமிழ் ஆக்கள் எந்த எந்த பண்டிகையள் கொண்டாட கூடாது எண்டு சொன்னியள் எண்டால் நல்லம் . ஒரு பண்டிகையிலை சனம் எல்லாம் ஒண்டாய் இருந்து சந்தோசமாய் இருந்தீச்சினமா எண்டு பாருங்கோ . அவையின்ரை இவையின்ரை எண்டு பிறிச்சு பாராதையுங்கோ . இப்பிடி கதைகிறனிங்கள் என்னத்துக்கு வெள்ளையிளின்ர பண்டிகை கிறிஸ்மஸ் புதுவரிசம் எண்டு  கொண்டாடுறியள் ???

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாரும் சேர்ந்து தமிழ் ஆக்கள் எந்த எந்த பண்டிகையள் கொண்டாட கூடாது எண்டு சொன்னியள் எண்டால் நல்லம் . ஒரு பண்டிகையிலை சனம் எல்லாம் ஒண்டாய் இருந்து சந்தோசமாய் இருந்தீச்சினமா எண்டு பாருங்கோ . அவையின்ரை இவையின்ரை எண்டு பிறிச்சு பாராதையுங்கோ . இப்பிடி கதைகிறனிங்கள் என்னத்துக்கு வெள்ளையிளின்ர பண்டிகை கிறிஸ்மஸ் புதுவரிசம் எண்டு  கொண்டாடுறியள் ???

 

வெள்ளையளின்ட புதுவரிசத்திலை கிறிஸ்மஸ்ஸிலை எங்கள் தமிழனை அவமானப்படுத்தும் கருத்தியல் இருக்கு. எந்த மதத்தின் கொண்டாட்டங்களையும் நாங்கள் கொண்டடுவதில் தப்பில்லை அவை எங்கள் தன்மதிப்பைப் பாதிக்காதவரை.

 

கச்சுப் பெருநாள், நோன்புப் பெருநாள், புத்தர் பிறப்பு எதையும் கொண்டாடுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.