Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தையில் தமிழர் வாழ்வதைப் போல யாழில் சிங்களவர்களும் வாழ வேண்டும் - ரவி குமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தையில் தமிழர் வாழ்வதைப் போல யாழில் சிங்களவர்களும் வாழ வேண்டும் - ரவி குமார்

[Tuesday, 2013-11-05 08:28:52]
jaffnamap-seithy-20131105.jpg

யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் போன்றே சிங்களவர்களும் வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென யாழ்ப்பாண தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ரவி குமார் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் தமிழர்களை யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறு சிங்கள மக்கள் கோரவில்லை. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் வாழ்வதனைப் போன்று, யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் வாழ ஏற்பாடு செய்யப்பட வேண்டும். போர் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் மீண்டும் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. சிங்கள தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ முடியும். இந்தியாவோ, அமெரிக்காவோ இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டியதில்லை. சிங்கள தமிழ் மக்களினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

நன்றி - செய்தியிணையம்

வெள்ளவத்தையில் தமிழன் வசிக்க யார் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்_ அவன் தனது உழைப்பில் நிலத்தை வாங்கி வசிக்கிறான்.. அதைப்போல யாழில் நிலத்தை முறைப்படி விலையை கொடுத்து வாங்கி குடியிருக்க சிங்களவன் தயார் எனில் ஏன் வீண் பேச்சுகள் வருகிறது?! இந்த ரவி குமார் யாழ்ப்பாணத்துத் தமிழன்தானா?!!  :wub:

இலங்கைக்கு ஒல்லாந்தர் போர்துகிசர் ஆங்கிலயர் வந்த கதைகளை நீங்கள் இன்னமும் நம்பவில்லை போல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டையிலும் தமிழன் வாழ இடமளிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவைகாலில் சிங்களவர்கள் கொடுரம் செய்ததுபோல்.
அம்பாந்தோடையில் மஹிந்த குடுபத்தை வேரோடு புடுங்க தமிழருக்கு இடம் அளிக்க வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

ரவிகுமார் போன்றவர்கள் அடிப்படை அற்றவர்கள். இவர் இப்பதான் நித்திரையால் எழும்பி வந்திருக்கிறார் போல இருக்கு. பேசம முழுத் தமிழரும் புத்த சமயத்துக்கு மாறினால் இந்த நாட்டில பிரச்சினையே இருக்காது எண்டு இந்த வடிகட்டின மு**ள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஈழத்தில் பெளத்தமத்தில் தமிழர்கள் பின்பற்றினார்கள். பொலநறுவை, அனுராதபுரத்தில் தமிழர்கள் விகாரைகளைக் கட்டி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் பல தலித்துக்கள் பெளத்த மதத்தினைப் பின்பற்றுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பாந்தோட்டையிலும் தமிழன் வாழ இடமளிக்கவேண்டும்

அண்ணோய் அம்பாந்தோட்டை முன்னொரு காலத்தில் தமிழர் வாழ்ந்த இடம் தான்... 1950-ல் அங்கு தமிழரது நிலம் தான் அதிகம். மற்றும் ஜா இனத்தவர் அவர்களும் தமிழ் பேசுவார்களாம்.....

அப்படியே காட்டுக்குள்ளால் நடந்து வந்தால் உகனை வரும்,

அப்புறம் உகனையால் நடந்து வந்தால் அப்பாறை வரும்

முன்பு ஈழத்தில் பெளத்தமத்தில் தமிழர்கள் பின்பற்றினார்கள். பொலநறுவை, அனுராதபுரத்தில் தமிழர்கள் விகாரைகளைக் கட்டி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் பல தலித்துக்கள் பெளத்த மதத்தினைப் பின்பற்றுகிறார்கள்.

பௌத்தமா? சமணமா?!!

  • கருத்துக்கள உறவுகள்

தர்மபாலர், போதிதர்மர், தின்னாகர்  போன்ற துறவிகள் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழர்கள். இவர்களில் போதிதர்மர் சீனாவுக்கு போய் தற்காப்புக்கலையை உருவாக்கியவர். தர்மபாலர் உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றான நாளந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர்.

தமிழர்களில் பல புத்த சமயத்தவர்கள் இருந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று இலங்கையில் (மட்டும்) புத்தசமயம் சிங்கள இனவாதத்தின் ஒர் அடையாள்மாக அல்லது எழுச்சியாகவே பார்க்கப்படுகிறது. அரச மரமும் தாதுகோபமும் இருந்துவிட்டால் அது சிங்களவரின் பூமியாகவே கருதப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தமா? சமணமா?!!

ஈழத்துப் போர் இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது. இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி. ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களை தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் இலட்சத்தீவுகள் மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D

பெளத்தமும் தலித் மக்களும் இந்து சமயச் சாதிய சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து விடுபடப் பெளத்தம் ஒரு மாற்று வழியாகத் தலித் மக்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான அம்பேத்கரினால் பரிந்துரைக்கப்பட்டது. இப்பரிந்துரை அரசியல் சமூக காரணங்களுக்கான ஒரு மேலோட்டமான பரிந்துரை அல்ல. அம்பேத்கர் இளவயதில் இருந்தே பெளத்தத்தை ஆராய்ந்து, அதன் மீது நம்பிக்கை கொண்டு முன்மொழிந்த ஒரு பரிந்துரையே. தலித்துக்கள் மன ரீதியாகத் தம்மை விடுதலை செய்யச் சமய மாற்றம் அவசியம் என்பதை அம்பேத்கர் உணர்ந்து விளக்கினார். அவரின் வழிநடத்தலில் பலர் இந்து சமயத்தைத் துறந்து பெளத்தத்தை ஏற்றனர். இன்றும் அவ்வப்பொழுது பல தலித் சமூக மக்கள் தனியாகவோ, குழுவாகவோ பெளத்தத்தை ஏற்பது தொடர்கின்றது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் போன்றே சிங்களவர்களும் வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென யாழ்ப்பாண தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ரவி குமார் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் தமிழர்களை யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறு சிங்கள மக்கள் கோரவில்லை. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் வாழ்வதனைப் போன்று, யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் வாழ ஏற்பாடு செய்யப்பட வேண்டும். போர் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் மீண்டும் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. சிங்கள தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ முடியும். இந்தியாவோ, அமெரிக்காவோ இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டியதில்லை. சிங்கள தமிழ் மக்களினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

போர் நடந்த காலத்தில்... ஒட்டுக் குழுக்கள் தமிழர்களுக்கு இடைஞ்சலாக, இருந்தார்கள்.

போர் முடிந்த பின்... தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ரவி குமார் போன்றவர்கள், இடைஞ்சல் செய்யப் புறப்பட்டு விட்டார்கள்.

இவரைப் போல்... இன்னும் பல ரவிக்குமார்கள், தமிழர் மத்தியில்... தோன்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

கேடு கெட்ட இனம், நமது இனம்.

கேடு கெட்ட இனம் மட்டுமல்ல பணத்துக்காய் எதுவும் செய்வார்கள். பணத்துக்காக காட்டிக் கொடுக்கப்பட்டுத்தானே இந்நிலைக்கு வந்தோம். புலிகள் இருக்கும் போது வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் வாலை ஆட்டிக் கொண்டு வெளிக்கிட்டு விட்டார்கள்.

இலங்கைக்கு ஒல்லாந்தர் போர்துகிசர் ஆங்கிலயர் வந்த கதைகளை நீங்கள் இன்னமும் நம்பவில்லை போல் இருக்கிறது.

இப்படியானவரகள் கு....ம் போத்து தான் அந்த உண்மை உறைக்கிறது.

இலங்கைக்கு ஒல்லாந்தர் போர்துகிசர் ஆங்கிலயர் வந்த கதைகளை நீங்கள் இன்னமும் நம்பவில்லை போல் இருக்கிறது.

சிலுவையை வளைத்து வைரவர் சூலமாக்கி வழிபட்ட யாழ் மக்களின் உறுதிக்குச் சான்றாக வைரவர் சூலம் உள்ளபோது நம்பாமல் இருப்பேனா?!!

தமிழ் மக்களுக்கு நீதியான உயர்நிலை தன்னாட்சியுடம் கூடிய கூட்டாட்சி  அரசியல் தீர்வு வழங்கபட்டு தமிழ் மக்கள் தமது பிரதேசங்களை தாமாகவே அபிவிருத்தி அடையச்செய்து அதன் பின்னர் அங்கு வேலைவாய்ப்பு தேடி சிங்கள மக்கள் வரும்போது நிச்சயமாக ரவி குமார் அவர்களின் கோரிக்கை சுலபமாக நிறைவேறும். ஆகவே சிங்கள அரசுக்க நெருக்கமாக அவர்களின் விசுவாசியாக இருக்கும் திரு ரவி குமார் அவர்கள் இந்த அறிவுரையை தமது எஜமான் மகிந்தவிற்கு வழங்கலாம்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.