Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணொளி : இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லமாட்டார்

Featured Replies

சற்று நேரத்திற்கு முன்னதாக , வெளியாகியுள்ள அறிக்கையின் படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லமாட்டார் என்று அறியப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையின் சுட்டறிக்கை ஒன்றை ஆதாரம் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது.

 

தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தம் காரணமாகவும், காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரின் அழுத்தம் காரணமாகவுமே இம் முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9937:2013-11-09-16-21-26&catid=1:latest-news&Itemid=18

Edited by சிறிலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

 

உழைத்த

தம்மை  வருத்திய

அனைத்து இதயங்களுக்கும் நன்றிகள்

இலங்கை மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளமாட்டார்'
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 நவம்பர், 2013 - 16:01 ஜிஎம்டி
131109105214_manmohan_304x171_ap_nocredi

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் அவர்களே தலைமை தாங்குவார் என்று பிடிஐ செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி, இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசாங்க வட்டாரங்கள் கூறியதாக வந்துள்ள இந்தச் செய்திகளின்படி, இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

ஞாயிறன்று பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து இலங்கை ஜனாதிபதிக்கு அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்ற இந்த முடிவு குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பினரும் இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று கேட்டிருந்தனர்.

அதேவேளை திமுக தலைவர் கருணாநிதி, பிரதமரின் இந்த முடிவு தமக்கு ஓரளவு ஆறுதல் தருவதாகக் கூறியுள்ளார். அந்த மாநாட்டில் இந்தியா முழுமையாக கலந்துகொள்ளக் கூடாது என்பதுதான் தமது கோரிக்கை என்றும், ஆனாலும் பிரதமரின் முடிவு தமக்கு ஓரளவாவது ஆறுதலைத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131109_chogmmanmohan.shtml

1425610_229129997263631_221000479_n.jpg

 

(facebook)

 

பி.கு: பொதுநலவாய மாநாடு நடக்கும் வரை மன்மோகன் சிங்கை நம்ப முடியாது. இறுதி நாள் தான் உண்மை தெரியும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்... மகிழ்ச்சியான செய்தி.
இந்தியப் பிரதமர், இலங்கைக்கு செல்லக் கூடாது என்று....
தின‌மும்... போராடிய‌, அனைத்து... த‌மிழ‌க‌ உற‌வுக‌ளுக்கும்.... எப்ப‌டி, ந‌ன்றி சொல்வ‌து... என்று தெரிய‌வில்லை.
என‌து... வாழ்வில், மிக்க‌ ம‌கிழ்ச்சியான‌... த‌ருண‌ங்க‌ளில், இதுவும்... ஒன்று.
 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இந்தியா கலந்து கொள்ளுமா? இல்லையா?

மன்மோகன் சிங் போகாததன் காரணம் திரு. விக்னேஸ்வரன் அவரை வடக்கு மாகாணத்திற்கு வருமாறு அழப்புவிடுத்தது தான்.....இலங்கைஅரசு அவரை வடக்கு செல்ல அனுமதிக்காததின் காரணமாவே அவரின் இலங்கை பயணம் பிசுபிசுத்து போனது. 

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131101_manmohanvicky.shtml

Edited by thanga

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங் போகாததன் காரணம் திரு. விக்னேஸ்வரன் அவரை வடக்கு மாகாணத்திற்கு வருமாறு அழப்புவிடுத்தது தான்.....இலங்கைஅரசு அவரை வடக்கு செல்ல அனுமதிக்காததின் காரணமாவே அவரின் இலங்கை பயணம் பிசுபிசுத்து போனது. 

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131101_manmohanvicky.shtml

 

ஒகோ.... அரசியல், அப்படியும்... போகுதா....

முன்னாள் நீதியரசரும், இந்நாள் வட மாகாண முதல்வருமான விக்னேஸ்வரனின்...

சாணக்கியத்திற்கு கிடைத்த வெற்றியாக... நான் கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்: மன்மோகன் சிங் அவர்களே! யாழ்ப்பாணம் வருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டீர்களே! :(

 

மன்மோகன் சிங்: நான் என்ன செய்வது சம்பந்! உங்கள் தொப்புக்கொடிகள் என்னைத் தடுத்திராவிட்டால், நான் வந்து வடக்கையும் கிழக்கையும்கூட இணைத்துத் தந்திருப்பேன்!. :icon_mrgreen: 

மன்மோகனின் வருகையால் இலங்கை அரசு கவலைப்படவேண்டும்: மனோ

 

பொதுநலவாய மாநாட்டிற்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருவது  தொடர்பில் இலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில், இலங்கை வந்து மன்மோகன் வெளிப்படுத்தும் நிலைப்பாடுகளை பார்த்து, மன்மோகன் சிங் வாராமலேயே இருந்திருக்கலாம் என்று இலங்கையரசு கூறவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்வது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பொதுநலவாய மாநாட்டிற்கு மன்மோகன் சிங் வருவதை தமிழகத்தில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் ஒட்டுமொத்தமாக கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில் கடைசியாக வருகின்ற இந்திய செய்திகளின்படி, இந்திய பிரதமர் இலங்கை வந்து பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள  முடிவு செய்துள்ளார் என்றே தெரியவருகிறது.  

இந்திய மத்திய அரசின் இந்த முடிவுக்கு பின்னால் பல காரணங்கள்  இருந்தாலும், இன்று இலங்கையில் வாழும் தமிழர்கள் தொடர்பாகவும், தமிழக தமிழர்கள் தொடர்பாகவும் இந்திய பிரதமருக்கு பாரிய கடப்பாடுகள் உள்ளன என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இலங்கையுடனான நட்பை பேணுவதற்காக வரலாறு முழுக்க இந்திய மத்திய அரசு, இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை பலியாக்கியுள்ளது. இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களின் இந்த நிலைப்பாடுகளினால் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களும், ஈழத்தமிழர்களும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வரலாறு இனியும் நீடிக்கக்கூடாது. தமிழகத்திலும், இலங்கையிலும் வாழும் தமிழர்கள், இதற்கு இனியும்  இடம் கொடுக்க முடியாது. எனவே எந்த காரணத்திற்காக, பிரதமர் இலங்கை வரும் முடிவை எடுத்திருந்தாலும் சரி, அவர் இலங்கை வந்து ஆற்றும் காரியங்கள், வெளியிடும் கருத்துகள், ஆகிய அனைத்தும் இலங்கை அரசுக்கு கடும் செய்திகளை தருகின்றவையாகவும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருகின்றவையாகவும் இருக்க வேண்டும். 

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கும் வைபவமாக இந்திய பிரதமரின் வருகை அமைந்திடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை வந்து மன்மோகன் வெளிப்படுத்தும் நிலைப்பாடுகளை பார்த்து, மன்மோகன் சிங் வாராமலேயே இருந்திருக்கலாம் என்று, பொதுநலவாய மாநாடு முடிவடைந்த பின்னர் இலங்கையரசு கவலைப்படும் நிலைமையை இந்திய நடுவண் அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

எதிர்ப்புகளை மீறி இலங்கை வந்தாலும்,  துன்புறும் தமிழ் மக்களின் நலன்களுக்காக தனது பயணத்தை இந்திய பிரதமர் சாணக்கியமாக பயன்படுத்திவிட்டார் என தமிழக மக்களும், இலங்கை வாழ் தமிழ் மக்களும் எண்ணி மகிழும் நிலைமையை இந்திய அரசு ஏற்படுத்த வேண்டும். வாராதீர்கள். வந்தால் இதை செய்யுங்கள் என்று இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தங்கள் பிரமரின் அருகிலிருந்து இதை அவருக்கு எடுத்து சொல்லி காரியமாற்ற வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.  

இந்தியாவுக்கு  வடக்கில் சீன, பாகிஸ்தான் எல்லைகளில் பகைமை நிலவுவதால், தென் முனையில் இலங்கையுடன் நட்பு பேணவேண்டும் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நீண்ட காலமாக  நினைத்து வருகிறார்கள். அதனால்தான் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களை நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கு இந்தியா உடன்பட்டது. 

இதனால் இலங்கையில் இன்று தமிழர்களின் அரசியல் பலம் நாடாளுமன்றத்தில் குறைந்து போனது. கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. முழுமையான அரசியல் தீர்வுக்கான உத்தரவாதம் இல்லாமலேயே, இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளை வழங்கி, சர்வதேச சமூகத்தின் கண்டன நடவடிகைகளிலிருந்தும், இலங்கையை இந்தியா காப்பாற்றியது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  

இலங்கையில், இந்தியாவின் உண்மை நண்பர்கள் தமிழர்கள் தான் என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டிய வேளை இன்று வந்துவிட்டது. எனவே பலத்த  எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை வரும் மன்மோகன் சிங், இலங்கை வந்து ஆற்றும் காரியங்கள், வெளியிடும் கருத்துகள், ஆகிய அனைத்தும் இலங்கை அரசுக்கு கடும் செய்திகளை தருகின்றவையாகவும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருகின்றவையாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கும் வைபவமாக இந்த பிரதமரின் வருகை அமைந்திடக்கூடாது. 

இலங்கை வந்து மன்மோகன் வெளிப்படுத்தும் நிலைப்பாடுகளை பார்த்து, அவர் வாராமலேயே இருந்திருக்கலாம் என்று, பொதுநலவாய மாநாடு முடிவடைந்த பின்னர் இலங்கையரசு கவலைப்படும் நிலைமையையும்,  எதிர்ப்புகளை மீறி இலங்கை வந்தாலும்,  துன்புறும் தமிழ் மக்களின் நலன்களுக்காக தனது பயணத்தை இந்திய பிரதமர் சாணக்கியமாக பயன்படுத்திவிட்டார் என தமிழக மக்களும், இலங்கை வாழ் தமிழ் மக்களும் எண்ணி மகிழும் நிலைமையையும் இந்திய நடுவண் அரசு ஏற்படுத்த வேண்டும். இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

7(2053).jpg

இலங்கையை  வந்தடைந்த பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்று அழைத்து வரப்படுவதையும் அவர், பொதுநலவாய அமையத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பணிப்பாளர் அமித்தவ் பன்ரிஜுடன் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம். பட உதவி: சுதத் சில்வா

அப்ப இந்த சிறு பிள்ளைகளை கொண்டு ப்ராக்டிஸ் பண்ணிய இந்தியாவுக்கான  நடனம் நடக்கிறதா .பாவம் பிள்ளைகள் .. :(  :o

அட ஜிங்கை விடுங்கப்பா , சுவாசிலாந்து எப்பப்பா வரும்ம்ம்ம்ம் :D

மன்மோகனின் முடிவு எமக்கு தோல்வியல்ல: அரசு

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர்  மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதது எமக்கு தோல்வியல்ல என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதிருக்க முடிவுசெய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

'மன்மோகன் சிங் வராமல் இருக்க முடிவு செய்திருப்பது எங்களின் மாநாட்டின் வெற்றியைப் பாதிக்காது. அதனை நாங்கள் ஒரு பிரச்சனையாகக் கருதவில்லை' என்றும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

'அவரது முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, நாங்கள் அவரை அழைத்தோம், அவர் வந்திருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம்' என்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். (பிபிசி)

 

 
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமர் அவர்களின் commonwealth மாநாட்டு புறக்கணிப்புக்கு பின்னால் மிகப்பெரிய சுயநல அரசியல் அடங்கி இருகின்றது, எப்பிடியாவது அ தி மு க வுடன் கூட்டணி சேர்ந்து விடவேண்டும் என்று துடியாய் துடிக்கும் காங்கிரஸ் அரசு ஜெயலலிதாவின் சட்டசபை தீர்மானத்தை அடுத்து இந்த முடிவை எடுத்து நல்ல சமிக்கையை காட்டி இருகின்றது அனேகமாக மத்திய தேர்தலின் பின்னரோ முன்னரோ இந்த கூட்டணி அமையலாம் அதற்க்கு ஏற்றால் போல தமிழ் உணர்வாளர்கள் மீது ஜெயலலிதா எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளை கூறலாம்......

உண்மையில் தங்கள் சுயநல அரசியல் லாபத்திற்காக ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வை மீண்டும் ஒருமுறை பயன்படுத்தி இருகின்றார்கள் என்று தான் கூறவேண்டும்.......இந்தியாவை கடந்து வேறு நாடுகளின் நட்புக்களை தேட வேண்டிய ஒரு காலத்தின் கட்டையாத்தில் தமிழர் தரப்பு இருகின்றது இல்லது இன்னும் இன்னும் இந்தியாவும் தமிழக அரசியல் வாதிகளும் தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஈழத்தமிழரை மீண்டும் மீண்டும் பந்த்தாடப்போவது உறுதி.....

  • கருத்துக்கள உறவுகள்
காங்கிரஸ் தனது அரசியல் தளம்பலை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு செல்லாமல் நிவர்த்தி செய்வதோடு ஜெனிவாவில் உரிய நேரத்தில் தமிழர்களின் காலையும் வாருவார்கள் என்பது மட்டும் உறுதி.
 
கூட்டமைப்பு 100 தடவை டெல்லிக்கு ஏறி இறங்கினாலும் இந்தியாவின் மறைமுக திட்டங்கள் மேற் கூறியவை தான்.

the hindu இல் வந்த செய்தி. இன்னொரு திரியில் இணைத்திருந்தேன். இத்திரியில் இணைப்பதே முறை என்பதால் மீள இணைக்கிறேன்.
 

CHOGM: Manmohan writes to Rajapaksa

November 10, 2013

 

Prime Minister Manmohan Singh on Sunday wrote to Sri Lankan President Mahinda Rajapaksa regretting his inability to attend the Commonwealth Heads of Government Meeting (CHOGM) from November 15.

 

Dr. Singh has written a short letter to Mr. Rajapaksa informing him of his decision not to attend the CHOGM meet, sources said.

 

The letter will be delivered to the Sri Lankan President by the Indian High Commission in Colombo, the sources said.

 

However, it is believed that the letter, whose contents were not disclosed, does not talk about the reasons for Dr. Singh skipping the meet.

 

The Prime Minister has decided against undertaking the visit in view of the opposition by parties in Tamil Nadu as well as a section in Congress.

 

External Affairs Minister Salman Khurshid will head the Indian delegation at the CHOGM Summit on November 15-16.

 

Political parties in Tamil Nadu and several other outfits have opposed India’s participation at any level in the CHOGM meet alleging that the Sri Lankan government had committed gross violation of human rights and had no plans to devolve powers to the ethnic Tamils.

 

However, Mr. Khurshid has been favouring Dr. Singh’s presence in the CHOGM scheduled on November 15, maintaining that it was vital as it will reflect India’s interests.

According to MEA, it is also paramount to the nation’s strategic and security interests.

 

Asked if there was a possibility of Vice President Hamid Ansari representing India at the CHOGM if Singh decides not to go, a MEA spokesperson had earlier said that in 10 summit level meetings since 1993, the Prime Minister represented India five times while on four occasions; ministers had headed the Indian delegation.

 

There was one instance of the vice-president representing India.

 

“So what you can summarise from this is that what we have followed in terms of participation in the CHOGM is an approach of something akin to horses for courses.

 

“We focused on what is required for our national interest, our foreign policy priorities and our international obligations. Taking those into account we have our delegations led by different people,” he had said.

 

http://www.thehindu.com/news/national/chogm-manmohan-writes-to-rajapaksa/article5335177.ece?homepage=true

உடையார் போகாட்டியும் தடி போகுது விடுங்கோ :D :D

தமிழ்நாட்டின் காலில் காங்கிரஸ் விழுந்திருப்பதை மறுக்க முடியாது. காங்கிரஸ் தமிழ் நாடு தன்னும் கிடையாத்தா என்ற நப்பாசையில் செயலாற்றியிருக்கிறது. தன்னால் தமிழ் நாட்டில் தனியாக காலெடுத்துவைக்க முடியாது என்பதால் கருணாநிதியின் எதிர்ப்பால் இலங்கை போகாதது மாதிரி படம் காடியிருக்கிறது. பத்திரிகைகள் செய்தியை வெளிவிடமுதல் கருணாநிதிக்கு அறிவித்து கருணாநிதி வாழ்த்துக்கூறியிருக்கிறார்.

 

அசுர வளர்ச்சி கண்டுவந்த நாட்டை தொடர்ந்து காகிரஸ் கொள்ளை அடித்து திவாலாக்கிவிட்டு தேர்தலில் தோல்வி வரப்போகிறது என்ற போது விழித்திருக்கிறது. காலம் கடந்துவிட்டது. நாடு முழுவதும் காட்டும் காங்கிரஸ்  எதிர்ப்பை தமிழ் நாட்டின் மீதி இலங்கை போகாத காரணமாக இறக்கிவைக்கிறது. ஆனால் அதில் கூட இலங்கையை தாஜாபடுத்த தமிழ்நாடு கேட்ட போர்குற்ற காரணத்தை சொல்லாமல் சாடைகாட்டி இலங்கை தன்னை மன்னிக்கட்டும் என்று எதிர்பார்க்கிறது.

 

அதிகார வெறி உச்சத்தில் இருந்த போது உடமபு முழுக்க பழிவாங்கள் பேய்பிடித்து ஆட்ட  நோர்வேயுடன் இணங்கிப் போக மற்த்தது காங்கிரஸ். முள்ளிவாய்க்காலில் தனது போர்க்கப்பல்களை கொண்டுவந்து "வேட்டுக்கள் தீர்க தடையிருந்த வலையத்தில்" தான் செல் அடிதது. செய்த்த இந்த ஈனத்தனத்தால் பழி தீர்த்துமுடிய போர்க்குற்றதை மறைக்க இலங்கையின் காலில் விழவேண்டி வந்தது. 

 

இலங்கை என்ற எருமை மித்தித்த சூடுதான் காங்கிரஸ். இப்போது தமிழ்நாடு என்ற மாடு மிதிக்கிறது. இந்த மிதிப்பில் உலகத்தமிழருக்கு ஏதாவது நெல்லு தேறுமா அல்லது சப்பி தன்னும் தேறாத என்றதை ஐ.நா.வில் காங்கிரசும் சுப்பிர மணிய சாமியும் நடந்து கொள்வதை வைத்துத்தான் சொல்லலாம்.  ஆனலும் இந்த வெற்றிக்கு தமிழகம்தான் உரித்துடையது என்பது மறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முக்கிய காரணம் வரும் நாடாளுமன்றத்தேர்தல். அத்துடன் தமிழகத்து தமிழர்களின் போராட்டங்கள்.

Manmohan To Go To CHOGM In Disguise! - A Satire
By Satya Sagar
10 November, 2013
Countercurrents.org

Countercurrents has in its possession a letter from Indian Prime Minister Manmohan Singh to Sri Lankan President Mahinda Rajapakse explaining why he is not going to attend the upcoming Commonwealth Heads of Government Meeting (CHOGM).

Dear President Mahindar Singh Rajapakse

I hope you don’t mind me calling you Mahindar in an endearing manner like a good Punjabi instead of calling you Mahinda! I know you are pissed off with me for not coming to your CHOGM coronation bash next week. But yaar, what to do, these Dravidian fellows got together and spiked my trip.

I mean all the Dravidians, even from my own Congress Party and not just that poet with dark glasses or that Iron Lady in a Steel Saree. Even my IMF colleague

Chidambaram, a fellow who really admires the way you guys killed so many civilians to get so few terrorists, turned against my visit.

I really wanted to come and tried very hard too but this time nothing worked. For example I offered the poet and his relatives a cut in the the 4 G telecom deal (last time they made millions in the 2 G scam), waiver on customs duty on import of equipment for his TV channels and half the cabinet seats if we win the next elections but fellow didn’t budge!

The poet said ‘if you go to Colombo this time we are all sunk in the next election so there won’t be any telecom deal, TV channels or cabinet berths anyway’. And my own partymen from Dravidistan told me they will not only lose their deposits in the next polls but a few limbs too, if we don’t pay attention to the mood of the people in the state.

My foreign ministry guys (who as you know, also look after your foreign policy interests) initially said I can go to Colombo through Jaffna, especially since this new Chief Minister guy Wig.. whatever his name is.. sent me an invitation. I thought that was a good idea but somebody pointed out it would mean acknowledging there were two capitals on your tiny island, so I dropped the idea like a hot tandoori potato. Tell me what is this Wig.. whatever.. all about? I thought he was one of us but seems to be a tricky fellow!

I am sending in my place my Foreign Minister (who as you know, is also your Foreign Minister), a chap called Salman… not Khan…but Khurshid. I have a special request - please, please treat my guy well.

I know your goons (and I don’t mean good old Goonatilake and Goonaratne of course) have been bashing up Muslims in your country for the last couple of years but my man, he really likes a good single malt after every bad policy decision he makes. Thinking of it, Salman likes a few before he screws up too. Never mind, he is the closest to royalty we have in our cabinet, so be nice to him.

You know, this entire trip of mine to CHOGM would not have been a problem at all if not for those wicked fellows at Channel 4. Especially, that Callum Macbook something, who collected evidence of all the war crimes we helped you commit and cover up back in 2009.

Did you know, this character had the audacity to try and sneak into India by applying for a journalist visa? The cheeky fellow! Our High Commission in London told him bluntly that you can offend Manmohanji and still get a visa but if you get into the wrong books of Mahindarji there is no redemption. But I heard that you have allowed him to come to Colombo for CHOGM… a bit embarassing for me but its OK, you are the Boss!

By the way, have you - at least now- ordered your soldiers and silly generals to switch off their mobiles while killing or torturing your Tamil population? Shows poor training among your chaps- taking videos while murdering people- you should do one or the other, not both at the same time.

By the way, there is a suggestion that I should turn up at CHOGM in disguise, maybe dressed as a turbaned waiter or a doorman at the event. You see, I have a lot of experience with opening doors. For example I opened up the entire Indian economy to the global financial mafia, so playing that role will be a cakewalk for me.

Let me tell you a secret now and don’t let this out on You Tube or Twitter for God’s sake! I think I will actually make it to your Summit. Watch out for a blue turbaned guy who will wink at you as you pass by the entrance to the CHOGM meeting hall- that will be me!!

Yours truly
Manmohan Singh

PM of India

 

http://www.countercurrents.org/sagar101113.htm

1471244_545694728847213_982845210_n.jpg

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.