Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கார்த்திகை தீபம் - விளக்கீடு - 17.11.2013

Featured Replies

இந்த இணைப்பு சமய நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமானது! நன்றி

 

 

 

 

திருச்சிற்றம்பலம்

deepam.jpg.pagespeed.ce.w9bXozHemL.jpg

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நன்நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். இத் திருநாள் இந்த வருடம் 17.11.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைவதாக கணிக்கின்றது.

 

கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் திருவிளக்கேற்றி வழிபடுவதனால் கார்த்திகை தீபம் எனப் பெயர் பெற்றது. கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றது. அன்றைய தினம் திருவண்ணாமலை அழற் சோதி மலையாய், அருணாசலமாய், சோணகிரியாய் இலங்கும். [அருணம், சோணம் - சிகப்பு நிறம்]

"ஆடிப்பாடி அண்ணாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே" என்கின்றனர் அப்பர் சுவாமிகள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது. 

திருவண்ணாமலை புண்ணிய பூமி. ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள்,  தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலை. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி தரும் மலை. உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம், பௌர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும்.

அடி முடி காணமுடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிர்க்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தைத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. அவ் ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவங் கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராஹ் அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.

அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் ருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாககாட்டிச்சியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

யோக நெறியால் அன்றிக் காணமுடியாத தெய்வ ஒளியைக் திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.

காந்த மலையிலே கலியுக தெய்வம் அருள்மிகு ஐயப்பனின் மகர ஜோதி!
திருவண்ணாமலையிலே அவர்தம் ஐயனின் அண்ணாமலை ஜோதி!

arunaasalam.jpg.pagespeed.ce.kWk80reaP_.

மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் எழுந்தருளுவதாக ஐதீகம். 

இச்சோதியானது பல மைல்களுக்கு அப்பால் பல நாட்கள் ஒளிவீசும். இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும் செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும்.  ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவாண்ணாமலை ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது.

திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.  "உடம்பெனு மனையகத்து உள்ளமே தகழியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற் கடம்பமர் காளைத்தாதை கழலடி காணலாமே." 

அன்றைய தினம் பக்த கோடிகள் ஜோதியைக் கண்டு சேவிப்பதால் பஞ்ச மூர்த்திகளின் அருட்கடாட்சத்தால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று, மெய்ஞான சிந்தையுடையவர்களாக விளங்குவர் என்பது உட்பொருள். இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

தீபம் ஏற்றி வழிபட முடியாத சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பானை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். ஜோதி மயமாய் ஒளி வடிவினனாகிய இறைவனை உணர்த்தும். சொக்கப்பனாகிய சிவனை ஒளி வடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை எனப் பெயர் பெற்றது. 

im0708_deepam2005.jpgசிவபெருமான் கோயில் கொண்டுள்ள ஆயிரத்தெட்டு முக்கிய ஸ்தலங்களில் காசி, சிதம்பரம், திருவாருர், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து க்ஷேத்திரங்களும் பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகக் கொண்டாடப்படுகின்றன. பிருத்வி, அப்பு, தேயு, வாயு,ஆகாசம் ஆகியவை பிருத்வி பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகும். 

உலகத்திலேயே புண்ணியத் தலங்களுள் காசிக்குப் போவதே தலையாயப் புண்ணியமாக கருதுவர். திருவாரூரில் பிறந்தலே  முத்தி கிடைக்கும்என்பர். ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடி மனதால் நினைத்தாலே புண்ணியம் தரும் ஸ்தலம் ஒன்று உலகில் உள்ளதென்றால் அது அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலைதான்.

பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில், ''வேலின் நோக்கிய விளக்க நிலையும்'' என்பதற்குக் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்பது பொருள். பண்டைக் காலம் தொட்டே கார்த்திகை விழா ஒரு பெரும் பண்டிகையாக நம்மவர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள். பழைய காலங்களில் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு, களிகொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு. ஆகவே, மேற்கூறியதிலிருந்து கார்த்திகை விழா நமது ஆணவ இருளைப் போக்கி ஞான ஒளியைப் பெருக்குவதற்கு உகந்த விழாவாகும் என்பது விளங்குகிறது.

அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது. அக்கினிப் பிரவேசம் சீதா பிராட்டியை புனிதவதி எனக் காட்டியதாக இராமயணம் உலக்குக்கு உணர்த்தியது. ஹோமத்தில் எழுகின்ற அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம். கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர்.

தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும். கார்த்திகைமாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28-ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.

இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.

im0902-79_thiruvannamalai.jpgசிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய்-ஆறுமுகக்குழந்தையாய்- தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.

சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி" உங்களுக்கு மங்களம் உண்டாகுக! உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று திருவாய் மலர்ந்தருளினார். இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது. 

வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகினனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள். இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்துவது போலாகும். பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.

எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாடவேண்டும் என்று அனந்தனைப் பணிந்த் கேட்டான். திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில்,' கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார். 

ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும் அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்துகொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது. 

இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம் பழனி, திருச்செந்தூர் முதலிய கோயில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப்போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள்.  வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள். கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்: கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந: பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா. இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம். 

தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர். கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள். அனைவருக்கும் பேரருள் கிட்டுவதாகுக. 

திருச்சிற்றம்பலம் 

 
 

 

இன்று கார்த்திகை விளக்கீடு.

முற்றிலும் சிங்கள ஊரில் வளர்ந்த எனக்கு 83 இன் பின் தான் இப்படியான ஒரு நாளே இருப்பது தெரிந்தது.

யாழ்ப்பாணத்தில் எம் விசாலமான வீட்டின் முன் சுட்டிகளில் தேங்காய் எண்ணெய் விட்டு அம்மா தன் மடியில் வைத்து சுருட்டிய துணிகளை திரிகளாக்கி விளக்குகளை கொளுத்தி இருப்போம்.

வாழை மரத்தின் தண்டினை கேட்டுக்கு வெளியே நிறுத்தி அதனை சின்னதாக குடைந்து எண்ணெய் ஊற்றி துணி அடைத்து அதில் நெருப்பை வார்த்து கொளுந்து விட்டு எரிய விட்டு இருப்போம். தேங்காய் எண்ணெய் தீபற்றி எரியும் போது வரும் அருமையான மணத்தில் தீப்பந்தமாக கொளுந்து விட்டு எரியும் வாழைத் தண்டு.

இடையிடையே செருகி இருந்த விளக்குகளின் தீ நாக்குகள் வெளிச்சத்தினை உச்சரிக்கும்.

எம் ஊர் தெரு முழுதும் இருக்கும் முற்றங்களில் விளக்குகளும் வாழைத் தண்டுகளும் பேரொளியாக எரிந்து கொண்டு இருக்கும் அழகே தனி. அதன் போது எழும் எண்ணெய் வாசம் ஆயுள் முடிந்த பின்னும் தொடரும் வாசனை.

இரவின் ரம்மியமான கறுப்பு இருட்டு, எம் வீட்டு வாசல்களில் சிட்டிகளிலில் இருந்து சிந்தும் ஒளிச் சிதறல்களில் குளித்து எழும். இருட்டும் போரொளியும் கலக்கும் இரவுகளை எம் விளக்கீடுகள் தந்துகொண்டு இருந்தன

அன்று நாம் வாழ்ந்தோம். எந்தையும் தாயும் மகிழ்ந்து கலவி கொண்ட மண்ணில் நாம் வாழ்ந்தோம். எமக்கென்று எமக்கேயான ஒரு வாழ்க்கை இருந்தது.

அந்த வாழ்க்கையை மீண்டும் எம் மண்ணில் விதைப்போம். எம்மால் முடியும் எம் தெருக்களில் எம் மக்களின் விளக்குகள் மீண்டும் எரியும் காலத்தினை படைக்க.

மீண்டும் எழுவோம்... காலங்கள் தோற்பதில்லை.

மாவிலி சங்கிலி வருசம் ஒருக்கா வந்து போ என்று அம்மா வீட்டு கதவுக்கு குறி வைச்ச மிகுதி மாவில்.. வாழை பழமும் சர்க்கரையும் பிசைந்து சுடும் புளிச்சல் பணியாரமும் மறக்க முடியாத றொட்டிதான்.

 

வீட்டு வாசலளில் எரியும் வாழைக் குத்திகளை தட்டி விழுத்தி பெரிசுகளிட்ட திட்டு வாங்குறதும் அப்ப ஒரு ஆனந்தம்தான்!!  :D 

 

முள்ளுக் கிழுவைத் தடிகள் வெட்டி.. அதிலே பந்தம் சுற்றி, கிணற்றடி.. குப்பைக் கிடங்கு.. காளி கோவில்.. மாட்டுமால்… எண்டு ஓடியோடி வளவு முழுக்கப் பந்தங்கள் குத்தியதும் இன்னும் நெஞ்சில் பசுமரத்தாணியாய்…!!! 

 

பழசை நினைக்கத் தூண்டியது உங்கள் பதிவு. நன்றி அலை!!

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தப் படத்தை பார்த்த பின் கொஞ்சமாவது திருப்தியாய் இருக்கும் என்று நினைக்கிறன்...பார்த்து மகிழுங்கள்.சர்வாலய தீபம்.(விளக்கீடு.)

 

558667_669347796432372_2089892550_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அப்பவே 'அட்வான்ஸ்' !

 

தென்னம் மட்டையை, மூன்றாகப் பிளந்து, அந்தப் பிளவுகளுக்கு நடுவில, ஒரு பெரிய தேங்காய்ச் சிரட்டையை (தேங்காயோட) வைச்சு, அதுக்குள்ள வெள்ளைத் துணியையும், தேங்காய் எண்ணையும் விட்டு, வீட்டு வெளிவாசல்ல நட்டுக் கொழுத்தி விடுவம்!

 

ஏன் செய்கிறோம் என்ற கேள்வியெல்லாம் அப்போது வந்ததில்லை!

 

நிழலி சொன்னமாதிரி அந்த 'வாசம்' நன்றாகப் பிடித்திருந்தது! :D

 

நன்றிகள், அலை!

  • கருத்துக்கள உறவுகள்

வீதிகள் எங்கும் வெளிச்சம் தெரிய யார்வீட்டுப் பந்தம் அதிக நேரம் எரியும் என்று அக்கம் பக்க  எம் வயதுக்கரருடன் போட்டிவேறு. நினைவுபடுத்தியமைக்கு நன்றி அலை. விளக்கீட்டுக்கு சமய வர்ணம் பிற்காலத்தில் பூசப்பட்டிருப்பினும் எமக்கே தெரியாத ஒரு தமிழரின் கொண்டாட்டமாகவோ அல்லது இயற்கை வழிபாடாகவோதான் கார்த்திகை விளக்கீடு இருக்கும்.

  • தொடங்கியவர்

கருத்திட்ட நிழலி, சோழியன், யாயினி, புங்கை, சுமோ ஆகியோருக்கு நன்றி :) பசுமையான நினைவுகள்!

நாங்களும் மதில் நெடுக சுட்டி வைத்து கொழுத்திவாசலில்  வாழைத்தண்டில் பாதித் தேங்காய் வைத்து விளக்கு கொழுத்துவோம் ,

சாமி ஊர்வலமாக எமது வீட்டை தாண்டும் போது பல அரை தாவணிகளும் வருவதால் ஜெகஜோதியாய் இருக்க அந்த ஏற்பாடு .

இணைப்பிற்கு நன்றி அலை .

விளக்கீடு : கொழும்புத்துறைக்குப் போய் இருட்டில சிட்டிகளுக்கு உப்புத்துவிறது , அதை பெட்டையள் காட்டிக் குடுத்திடுவாள்கள். :D என்ன இனிமையான வாழ்வு அது :rolleyes:

  • தொடங்கியவர்

நாங்களும் மதில் நெடுக சுட்டி வைத்து கொழுத்திவாசலில்  வாழைத்தண்டில் பாதித் தேங்காய் வைத்து விளக்கு கொழுத்துவோம் ,

சாமி ஊர்வலமாக எமது வீட்டை தாண்டும் போது பல அரை தாவணிகளும் வருவதால் ஜெகஜோதியாய் இருக்க அந்த ஏற்பாடு .

இணைப்பிற்கு நன்றி அலை .

 

 

:lol: அண்ணியும் அவர்களில் ஒருவரோ அர்ஜுன் அண்ணா? கருத்துக்கு நன்றி!!

விளக்கீடு : கொழும்புத்துறைக்குப் போய் இருட்டில சிட்டிகளுக்கு உப்புத்துவிறது , அதை பெட்டையள் காட்டிக் குடுத்திடுவாள்கள். :D என்ன இனிமையான வாழ்வு அது :rolleyes:

 

 

ஏன் உந்த அநியாயம் வாலி??  :lol: கருத்துக்கு நன்றி

இந்த விளக்கீடு ஒரு இனிமையான நினைவுகளை மீட்டு இருக்கு.IMG_0699_zps47bfefd6.jpgIMG_0700_zps7e14afa2.jpg

 

இந்த படங்கள் 2011 ஆண்டு யாழ்ப்பாணதில் எடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ரம்மியமான நாட்கள்.  உதுக்காக  முதலெ இலுப்பைக் கொட்டைகள் எல்லாம் சேகரித்து  வைத்து  ( யாழ்/ இந்து மைதானத்தில் இரு பெரிய இலுப்பைகள் உள்ளன.) எரிக்கத் துவங்கும் போது வாழைக் குத்தியில் பாதித் தேங்காய் வைத்து அதில் இலுப்பைக் கொட்டைகள் போட்டு எரிப்போம். ( அந்த தேங்காய்ச் சொட்டு சாப்பிட நல்ல  சுவையாய் இருக்கும்.) பின்பு  வேறு வைத்து ஒயில் எல்லாம் ஊற்றி இரவிரவாய் எரிப்போம். பின்பு வீதிகளில் செய்யும்  சேட்டைகள் ஏராளம். :rolleyes:  :D

நாங்கள் அப்பவே 'அட்வான்ஸ்' !

 

தென்னம் மட்டையை, மூன்றாகப் பிளந்து, அந்தப் பிளவுகளுக்கு நடுவில, ஒரு பெரிய தேங்காய்ச் சிரட்டையை (தேங்காயோட) வைச்சு, அதுக்குள்ள வெள்ளைத் துணியையும், தேங்காய் எண்ணையும் விட்டு, வீட்டு வெளிவாசல்ல நட்டுக் கொழுத்தி விடுவம்!

 

ஏன் செய்கிறோம் என்ற கேள்வியெல்லாம் அப்போது வந்ததில்லை!

 

நிழலி சொன்னமாதிரி அந்த 'வாசம்' நன்றாகப் பிடித்திருந்தது! :D

 

நன்றிகள், அலை!

 

எங்கள் ஊரிலும் இப்படித்தான் செய்வார்கள்.  எனக்கு இவ்வாறு ஒன்றிரண்டு வருடங்களே ஞாபகத்தில் உள்ளது.  விளக்கீடு முடிந்ததும் திருவெம்பாவை தொடங்கும் என்று நினைக்கிறேன்.  சேமக்கலத்தோடு தேவாரங்கள் பாடிக்கொண்டு வருவதும் ஒரு மகிழ்ச்சியையே தந்தது.

 

மிகவும் ரம்மியமான நாட்கள்.  உதுக்காக  முதலெ இலுப்பைக் கொட்டைகள் எல்லாம் சேகரித்து  வைத்து  ( யாழ்/ இந்து மைதானத்தில் இரு பெரிய இலுப்பைகள் உள்ளன.) எரிக்கத் துவங்கும் போது வாழைக் குத்தியில் பாதித் தேங்காய் வைத்து அதில் இலுப்பைக் கொட்டைகள் போட்டு எரிப்போம். ( அந்த தேங்காய்ச் சொட்டு சாப்பிட நல்ல  சுவையாய் இருக்கும்.) பின்பு  வேறு வைத்து ஒயில் எல்லாம் ஊற்றி இரவிரவாய் எரிப்போம். பின்பு வீதிகளில் செய்யும்  சேட்டைகள் ஏராளம். :rolleyes:  :D

 

எனக்கும் அந்த தேங்காய்ச் சொட்டு மிகவும் பிடிக்கும்.  அந்தத் தேங்காய் சொட்டிற்காக, எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டுப் பேச்சும் வாங்கியிருக்கிறார்கள் எங்கள் அண்ணாமார்கள்.  சில வீடுகளில் இவர்கள் அணைக்கக்கூடாது என்பதற்காக வாசலில் காவலும் இருந்திருக்கிறார்கள்.   :)

  • தொடங்கியவர்

இந்த விளக்கீடு ஒரு இனிமையான நினைவுகளை மீட்டு இருக்கு.IMG_0699_zps47bfefd6.jpgIMG_0700_zps7e14afa2.jpg

 

இந்த படங்கள் 2011 ஆண்டு யாழ்ப்பாணதில் எடுத்தது.

 

படங்களுக்கு நன்றி நவீனன் 

இது உங்களின் யாழ்ப்பாணத்து வீடா நவீனன்?

மிகவும் ரம்மியமான நாட்கள்.  உதுக்காக  முதலெ இலுப்பைக் கொட்டைகள் எல்லாம் சேகரித்து  வைத்து  ( யாழ்/ இந்து மைதானத்தில் இரு பெரிய இலுப்பைகள் உள்ளன.) எரிக்கத் துவங்கும் போது வாழைக் குத்தியில் பாதித் தேங்காய் வைத்து அதில் இலுப்பைக் கொட்டைகள் போட்டு எரிப்போம். ( அந்த தேங்காய்ச் சொட்டு சாப்பிட நல்ல  சுவையாய் இருக்கும்.) பின்பு  வேறு வைத்து ஒயில் எல்லாம் ஊற்றி இரவிரவாய் எரிப்போம். பின்பு வீதிகளில் செய்யும்  சேட்டைகள் ஏராளம். :rolleyes:  :D

 

 

ம்ம்..... உங்களது பழைய விளையாட்டுக்கள் எல்லாம் மெல்ல மெல்ல வெளிவருகின்றது :lol: . கருத்துக்கு நன்றி சுவி!

எங்கள் ஊரிலும் இப்படித்தான் செய்வார்கள்.  எனக்கு இவ்வாறு ஒன்றிரண்டு வருடங்களே ஞாபகத்தில் உள்ளது.  விளக்கீடு முடிந்ததும் திருவெம்பாவை தொடங்கும் என்று நினைக்கிறேன்.  சேமக்கலத்தோடு தேவாரங்கள் பாடிக்கொண்டு வருவதும் ஒரு மகிழ்ச்சியையே தந்தது.

 

 

எனக்கும் அந்த தேங்காய்ச் சொட்டு மிகவும் பிடிக்கும்.  அந்தத் தேங்காய் சொட்டிற்காக, எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டுப் பேச்சும் வாங்கியிருக்கிறார்கள் எங்கள் அண்ணாமார்கள்.  சில வீடுகளில் இவர்கள் அணைக்கக்கூடாது என்பதற்காக வாசலில் காவலும் இருந்திருக்கிறார்கள்.   :)

 

 

விளக்கீடு முடிய பிள்ளையார் கதை பிறகு தான் திருவம்பாவை தொடங்கும். (திருவெம்பாவை 9 ஆம் திகதி டிசம்பரில் ஆரம்பமாகும்)

 

கருத்துக்கு நன்றி தமிழச்சி

(திருவெம்பாவை 9 ஆம் திகதி டிசம்பரில் ஆரம்பமாகின்றது இவ்வருடம்)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பதிவுக்கு..........

 

 

படங்களுக்கு நன்றி நவீனன்

இது உங்களின் யாழ்ப்பாணத்து வீடா நவீனன்?

இல்லை அலை, எனது உறவினரது வீடு.

  • தொடங்கியவர்

நன்றி  பதிவுக்கு..........

 

 

வரவுக்கு நன்றி விசுகு

  • தொடங்கியவர்

இல்லை அலை, எனது உறவினரது வீடு.

 

 

ஓ............. ஓக்கே

இல்லை அலை, எனது உறவினரது வீடு.

 

இந்த வீடு இருக்கும் இடம் அரியாலையா நவீனன் அண்ணா? :D :D

இல்லை யாழ்வாலி. ஓஓ காவாலி. எனக்கு யாரும் உறவினர்கள் இல்லை அரியாலையில்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கார்த்திகை விளக்கீடு சில ஆண்டுகளுக்கு முன்  இப்படி இருந்தது..

 

 

67018_10153494230375035_1278678955_n.jpg

 

1472828_10153494237525035_1748181725_n.j

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.