Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொமன் வெல்த்தின் கதாநாயகன் கெலும் மக்ரே..

Featured Replies

1470201_411718185624407_571339363_n.jpg

வடக்கில் வசந்தம் வீசுகிறதென்றால் வழியில் எதற்கு தடை போட வேண்டும்..?

இந்த ஆண்டு கொமன் வெல்த்தின் கதாநாயகன் யார் என்று கேட்டால் அது சனல் 4 நிருபர் கெலும் மக்ரேதான் என்று துணிந்து கூறலாம்.

அப்படிக் கூறுவதற்கான அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன, 2009 வன்னிப்போரில் சிறீலங்கா எவ்வளவு மடைத்தனமான தவறுகளைப் புரிந்து இப்போது கையறு நிலையில் நிற்கிறதோ.. அதைவிட பெரிய தவறை கெலும் மக்ரே விடயத்தில் இழைத்திருக்கிறது.

சரியாக நடந்திருந்தால்.. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன் வெல்த் கதாநாயகனாகியிருப்பார்… பாவம் தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சிறீலங்கா அனுப்பி அந்த வாய்ப்பை பறிகொடுத்தார்.

கெலும் மக்ரே சிறீலங்காவில் இறங்கும்வரை கதாநாகனாக இருந்தவர் கனேடிய பிரதமர் ஸ்ரெபன் கார்பரேதான் ஆனால் கெலும் மக்ரே சிறீலங்காவில் இறங்கியவுடன் அவருடைய புகழையும் விஞ்சிவிட்டார்.

மறுபுறம் கனேடிய பிரதமர் சிறீலங்கா மீது வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சரியானவையே என்பதை நேற்று தமிழர்கள் பேசினார்கள் இன்று உலகமே பேச ஆரம்பித்துவிட்டது.

எப்படியோ கெலும் மக்ரேவுடைய புகழை வானுயர கொண்டு சென்ற பெருமை தூரப்பார்வை செத்துப்போன சிங்கள இனவாதத்தையே சாரும்.

நாடகத்தின் முதற் காட்சியில்.. பிரிட்டன் நிருபர் குழுவில் இருந்த காரணத்தால் கெலும் மக்ரேக்கு பலத்த சங்கடத்துடன், வீசா வழங்கியது சிறீலங்கா..

அது முதலாவது கோணல்.. முதற் கோணல் இப்போது முற்றும் கோணலாகியிருக்கிறது..

வீசா வழங்கிய பின்னர் ஒருவரை நாட்டின் அந்தப்பகுதிக்கு போகக்கூடாது இல்லை இந்தப்பகுதிக்கு போக முடியாதென தடுக்க முடியாது.. அது வீசா நடைமுறைக்குற்றம்.

ஆனால் வீசாவை வழங்கிவிட்டு சிங்கள ஆட்சியாளர் அடுத்தடுத்து இழைத்த தவறுகள் அவர்களை வாழைப்பழத் தோலில் சறுக்கியது போல சர்ர்..ரென பாதாளம் நோக்கி இழுத்துச் சென்றது..

வடக்கிற்கு புறப்பட்ட மேலை நாடுகளில் நிருபர் குழுவை ஐந்து மணி நேரம் சோதனைச்சாவடியில் தடுத்து வைத்து, முதலில் தாம் யார் என்பதை புரிய வைத்தார்கள்.

அதன் மூலம் பொதுநலவாயத்தின் முகத்தில் வாரி எடுத்த கரியை பொதக்கென அப்பியது சிறீலங்கா..

இந்த நாட்டிடமா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாயத் தலைமையை கொடுக்கப் போகிறீர்கள் சீமான்களே..?

அடுத்த பெரும் தவறாக கொழும்பில் இருந்து வடக்கே செல்லும் விமான சேவைகளுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது, காரண காரியம் இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியானது.

இப்படித்தானே.. அன்று வன்னிக்கு போகவிடாமல் செஞ்சிலுவைச்சங்கத்தையும், ஐ.நா குழுவையும் திட்டமிட்டு தடுத்தீர்கள்.. அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு..?

வடக்கில் வசந்தம் வீசுகிறதென்றால் வழியில் எதற்கு தடை போட வேண்டும்..?

அதைத் தொடர்ந்து யூலைக்கலவர கூத்தாட்ட ரயில் பயண நாடகத்தை அரங்கேற்றியது.

கெலும் மக்ரே சென்ற ரயில் அனுராதபுரத்தைத் தாண்டியதும் மறிக்கப்பட்டது.. அவர் இதே ரயிலில் வருவதை ஆர்பாட்டக்காரருக்கு சொன்னது யார்..?

அதைவிட அவலம் இதுபோலத்தானே யூலைக்கலவரத்தின்போது ரயில் வண்டிகள் மறிக்கப்பட்டு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

வடக்கு ரயில் என்பது கொலை அச்சுறுத்தல் கொண்டது என்ற பயங்கரம் இன்றுவரை மாறவில்லையே.. இனியும் வேண்டுமா.. வடக்கிற்கு ரயில்…?

வடக்கே வாருங்கள் என்று மன்மோகன் சிங்கை அழைத்தார் கூட்டமைப்பு முதல்வர் விக்கினேஸ்வரன்..

மன்மோகன் சிங் வடக்கே வந்திருந்தால் அவரும் இதே ரயில் வண்டியில்தானா வரவேண்டும்..?

இந்தச் சீத்துவக்கேடு தெரியாமல் வடக்கிற்கு ரயில்பாதை போடுகிறதாம் இந்தியா..?

கொழும்பு திருப்ப்பட்ட கெலும் மக்ரே பொதுநலவாய சட்டதிட்டங்களுக்கு மாறாக சிறீலங்கா நடக்கிறது என்று தெரிவித்தார்.

வடக்கே செல்ல கெலும் மக்ரேக்கு விதிக்கப்பட்ட தடை வடக்கும் வன்னிபோல சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் கிடக்கிறது என்ற உண்மையை அம்பலத்தில் போட்டது.

அடுத்து என்ன நடந்தது..

கெலும் மக்ரே அளவு மீறி நடந்தால் அவருக்கு எதிராக தமது கரங்கள் நீளும் என்று கெகலிய ரம்புக்கவெல எச்சரித்தார்.

” அவருடைய பயணத்தைத் தொடர வழி செய்வோம்..” என்று கூற வேண்டிய கெகலியவின் தலைகால் புரியாத கருத்து பொதுநலவாயத்தின் ஜனநாயக பண்பின்மீது விழுந்துள்ள இன்னொரு அடி..

அத்துடன் நின்றார்களா..?

ஐ.தே.க உறுப்பினர் மங்களசமரவீரா கெலும் மக்ரேயை சந்தித்தது தவறு என்று அரசே பகிரங்கமாக கண்டித்தது..

இப்போது அரசின் உப குழுவொன்று சிறீகொத்தாவிற்குள் கற்களை வீசியபடி நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவையெல்லாம் எவ்வளவு நேரத்தில் நடந்தது..

வெறும் 48 மணி நேரத்தில்..

இதற்கெல்லாம் பொறுப்புக் கூறவேண்டிய மகிந்தராஜபக்ஷவோ பீ.பீ.சி நிருபர்களைக் கூட சந்திக்க மறுத்து மறைவாக நிற்கிறார் என்றால் இனவாதத்தின் முன் அவருடைய நிலையும் செல்லாக்காசுதான்.

இதுதான் இலங்கைத் தீவின் இரண்டாயிரமாண்டு கால தீரா தொழு நோய்..

அதற்கு முன்னதாக மகிந்தவிடம் போர்க்குற்றம் பற்றி கடுமையாக விசாரிக்கப்போவதாக பிரிட்டன் பிரதமர் கூறியுள்ளார்.

போயும் போயும் குற்றவாளியிடம் நீதி கேட்கப்போகிறாராம் கமரோன் பாவம் அவரால் வேறென்ன முடியும்.

இப்படி ஆளாளுக்கு அறுபத்து நாலு கருத்துக்களைத் தெரிவித்தாலும் அவை யாவுமே செல்லாக்காசான செப்படி வித்தைகளே…

இப்போது நமது முதற்கேள்வி.. இந்த ஆடுகளத்தின் கதாநாயகன் யார்..

யாருடைய கருத்தை வரும் வாரங்களில் உலகம் காது கொடுத்து கேட்கப்போகிறது..

பிரிட்டன் முதல் இந்தியா சிறீலங்கா தலைவர்கள் எவருடைய கருத்தையும் உலகம் கேட்காது.. கேட்கப்போவது கெலும் மக்ரேயின் தொகுப்புரையைத்தான்.

ஆம்..

2013 காமன்வெல்த்தின் கதாநாயகன் யார்..?

என்ற கேள்விக்கு பதில்.. கெலும் மக்ரேதான்.

ஓர் ஊடகவியலாளன் சரியாக செயற்பட்டால் அவனுக்கு முன்னால் உலகம் கால் தூசிக்கு சமம் என்பது நிதர்சனமாகியுள்ளது.

துப்பாக்கி முனையை விட எழுத்தாளனின் பேனா கூர்மையானது என்பது எவ்வளவு சரியான வாசகம்..

அலைகள்

RECOMMEND TO FRIENDS
 
  •  

http://www.velichaveedu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95/

  • கருத்துக்கள உறவுகள்

1470201_411718185624407_571339363_n.jpg
-----

இந்த ஆடுகளத்தின் கதாநாயகன் யார்..

யாருடைய கருத்தை வரும் வாரங்களில் உலகம் காது கொடுத்து கேட்கப்போகிறது..

பிரிட்டன் முதல் இந்தியா சிறீலங்கா தலைவர்கள் எவருடைய கருத்தையும் உலகம் கேட்காது.. கேட்கப்போவது கெலும் மக்ரேயின் தொகுப்புரையைத்தான்.

ஆம்..

2013 காமன்வெல்த்தின் கதாநாயகன் யார்..?

என்ற கேள்விக்கு பதில்.. கெலும் மக்ரேதான்.

நல்லதொரு பதிவு.

இணைப்பிற்கு நன்றி, தமிழ்ச்சூரியன். :)

கொமன்வெல்த் மகாநாடே இன்னமும் தொடங்கவில்லை :icon_mrgreen:

எழுத்தோட்டம் பார்க்கையிலேயே விசில் அடிக்கும் கோஸ்டிகள் போலிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

கொமன்வெல்த் மகாநாடே இன்னமும் தொடங்கவில்லை :icon_mrgreen:

எழுத்தோட்டம் பார்க்கையிலேயே விசில் அடிக்கும் கோஸ்டிகள் போலிருக்கு .

இருந்து பாருங்க...

நாங்க அடிக்கிற விசில்லை... படம் நூறு நாளைத் தாண்டி, வசூல்லை... வரலாற்றுச் சாதனை படைக்கும். :rolleyes:  :D

கொமன்வெல்த் மகாநாடே இன்னமும் தொடங்கவில்லை :icon_mrgreen:

எழுத்தோட்டம் பார்க்கையிலேயே விசில் அடிக்கும் கோஸ்டிகள் போலிருக்கு .

சரிதான் மிஸ்ரர் அர்ஜீன் உங்கள் பார்வையில் ,,என் இனத்தை சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் என் எஜமான் சீரழித்து கொலை செய்ததை ஆதாரத்துடன்   காட்டிகொடுத்த கெலும் மக்ரேயை எப்படி கதாநாயன் என்று சொல்ல முடியும்.,, உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்பதை எவ்வளவு இரத்தின சுருக்கமாக அழகாக அதைப் பதிவு செய்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் நன்றி  மிஸ்ரர். தொடரட்டும் தங்கள் விசுவாச சேவை.

Edited by tulpen

  • தொடங்கியவர்

கொமன்வெல்த் மகாநாடே இன்னமும் தொடங்கவில்லை :icon_mrgreen:

எழுத்தோட்டம் பார்க்கையிலேயே விசில் அடிக்கும் கோஸ்டிகள் போலிருக்கு .

எழுத்தோட்டத்திலேயே தங்கட கிலுசுகெட்ட குறகுணத்தை காடுறாங்க ..... .விசிலடிக்காம ................ :D

.அதுக்கு வக்காலத்து வாங்கிறார் இந்த படித்த ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,[ கீறிட்ட இடத்தை நிரப்புங்க ] :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன் இன்னொரு வேலையும் செய்தார்: கெலம் மக்றே "தன் கட்சி" என்றார் சில நாட்கள் முன்பு! மக்றேக்கு இப்படி ஒரு அவமானம் வேறெங்கயும் கிடைச்சிருக்காது! :lol:

  • தொடங்கியவர்

அர்ஜூன் இன்னொரு வேலையும் செய்தார்: கெலம் மக்றே "தன் கட்சி" என்றார் சில நாட்கள் முன்பு! மக்றேக்கு இப்படி ஒரு அவமானம் வேறெங்கயும் கிடைச்சிருக்காது! :lol:

இது  வேற  நடந்திரிச்சா அண்ணா ... :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன் இன்னொரு வேலையும் செய்தார்: கெலம் மக்றே "தன் கட்சி" என்றார் சில நாட்கள் முன்பு! மக்றேக்கு இப்படி ஒரு அவமானம் வேறெங்கயும் கிடைச்சிருக்காது! :lol:

அவர் கோட்சூட்டை  சொல்லியிருப்பார். :lol:  :D

அர்ஜூன் இன்னொரு வேலையும் செய்தார்: கெலம் மக்றே "தன் கட்சி" என்றார் சில நாட்கள் முன்பு! மக்றேக்கு இப்படி ஒரு அவமானம் வேறெங்கயும் கிடைச்சிருக்காது! :lol:

கெலம் மைக்ரே மாத்திரமல்ல பிரான்சிஸ் கரிசன் ,கோர்டன் வைஸ் ,யூ .என், பி பி. சி  இவர்கள் எல்லாம் எமது கட்சிதான் .

அரசு புலிகள் இரண்டையும் விமர்சிப்பதும் குற்றம் செய்ததை சுட்டி காட்டியும் வருபவை .

இவர்களில் அரசிற்கும் கோவம் புலி ஆதரவாளர்களுக்கும் கோவம் .இவர்களின் அறிக்கைகள் எல்லாமே சிறி லங்கா அரசை விட புலிகளைத்தான் கட்டமாக விமர்சிக்கின்றன .இவர்கள் புலிகளை ஏற்கனவே பயங்கரவாதிகள் என்ற நிலையில் வைத்து பார்த்ததால் அவர்களை பெரிதாக கணக்கில் எடுப்பதில்லை .சனல் நான்கின் வீ டியோக்களை  பார்த்தால் தெரியும்என்ன சொல்கின்றார்கள் என்று .

செய்த குற்றங்களுக்கு தண்டிக்க புலிகள் இப்ப இல்லை சிறி லங்கா அரசுதான் அவதிப்படுகின்றது .ஒரு அரசாக செய்த போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும் .அதுதான் சிங்களவன் கடுப்பில இருக்கின்றான் .

அதைவிட முக்கியமானது புலி ஆதரவாளர்களுக்கே புலிகளை பற்றி வடிவாக தெரியும் கொழும்பு போய் வன்னி  போகாமல் வந்தவர்கள் எத்தனையோ பேரை எனக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்களாக ஒருத்தர் எழுதுகிறார். இன்னும் முடியவில்லை.

30 வருடங்களாக ஒருத்தர் எழுதுகிறார். இன்னும் முடியவில்லை.

ஏதாவது செய்யுற ஆக்களிலை நொட்டை பிடிக்கிறது எண்டால் சுலபமா என்ன...>?? 

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் ஊடகவியலாளன் சரியாக செயற்பட்டால் அவனுக்கு

முன்னால் உலகம் கால் தூசிக்கு சமம் .

துப்பாக்கி முனையை விட எழுத்தாளனின் பேனா கூர்மையானது

http://www.velichaveedu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95/

இணைப்பிற்கு நன்றி

கலம் மைக்ரே  தமிழர்களின் வரலாற்றில் இடம் பெற்ற ஒரு
ஊடகப் போராளி

வாழட்டும் பல்லாண்டு

30 வருடங்களாக ஒருத்தர் எழுதுகிறார். இன்னும் முடியவில்லை.

நாங்கள் எழுதியதும் எழுதுவதும் தானே நடக்கின்றது அப்ப எப்படி எழுதாமல் விடுவது :icon_mrgreen: .

உங்களுக்காக இன்னமும் சிலது ,

எக்காலமும் மகிந்த அரசு சர்வதேசத்தால் கேள்விற்கு உட்பட போவதில்லை ,

தமிழ் நாட்டில் சீமான் ஆட்சி அமைக்க போவதில்லை .

அப்ப நாங்கள் என்ன செய்யலாம் ?

கூட்டமைப்புடன் சேர்ந்து உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து ஒரு தீர்வை தேடலாம் .

தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதாவிற்கு முழு ஆதரவையும் கொடுக்கலாம் ,

தமிழனுக்கு தேவை ஒரு தீர்வும் விடுதலையும்

இன்னமும் புலிகளுக்கு கொடி பிடிப்பவர்களை தூக்கி பிடிப்பதல்ல .

அதை நன்றாக விளங்கிதான் சம்பந்தர் சிலரை வெளியில் விட்டு சிலரை உள்ளே கொண்டுவந்தார் .

தீர்க்க தரிசனம் ,தூர நோக்கு அரசியல் ,இராஜதந்திரம் என்பது இவைகள் தான்

அதை விட்டு வெட்டுவம் புடுங்குவம் என்று கடைசியில் மன்றி இடுவதில்ல .

நீங்கள் எழுதியது உங்களூக்கே ஞாபகம் இல்லை. அப்படியான நிலையில் தானே எழுதுகிறீர்கள். 4ம் வகுப்பு பிள்ளைக்கு தெரிந்தது உங்களூக்கு தீர்க்கதரிசனம்  :icon_mrgreen:  என்றால் எங்களால் என்ன செய்ய முடியும்?? :icon_mrgreen:

ஏதாவது செய்யுற ஆக்களிலை நொட்டை பிடிக்கிறது எண்டால் சுலபமா என்ன...>??

இது எல்லோருக்கும் பொருந்தும் .நீங்கள் உட்பட .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எழுதியதும் எழுதுவதும் தானே நடக்கின்றது அப்ப எப்படி எழுதாமல் விடுவது :icon_mrgreen: .

உங்களுக்காக இன்னமும் சிலது ,

எக்காலமும் மகிந்த அரசு சர்வதேசத்தால் கேள்விற்கு உட்பட போவதில்லை ,

தமிழ் நாட்டில் சீமான் ஆட்சி அமைக்க போவதில்லை .

அப்ப நாங்கள் என்ன செய்யலாம் ?

கூட்டமைப்புடன் சேர்ந்து உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து ஒரு தீர்வை தேடலாம் .

தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதாவிற்கு முழு ஆதரவையும் கொடுக்கலாம் ,

தமிழனுக்கு தேவை ஒரு தீர்வும் விடுதலையும்

இன்னமும் புலிகளுக்கு கொடி பிடிப்பவர்களை தூக்கி பிடிப்பதல்ல .

அதை நன்றாக விளங்கிதான் சம்பந்தர் சிலரை வெளியில் விட்டு சிலரை உள்ளே கொண்டுவந்தார் .

தீர்க்க தரிசனம் ,தூர நோக்கு அரசியல் ,இராஜதந்திரம் என்பது இவைகள் தான்

அதை விட்டு வெட்டுவம் புடுங்குவம் என்று கடைசியில் மன்றி இடுவதில்ல .

முன்னுக்கு பின் முரணான வாதம்

உங்களுக்கே உங்க ராசதந்திரம் புரிகிறதா???? :(  :(

இது எல்லோருக்கும் பொருந்தும் .நீங்கள் உட்பட .

யார் செய்தார்கள் அதிலை நாங்கள் நொட்டை பிடிக்க....?? 

யார் செய்தார்கள் அதிலை நாங்கள் நொட்டை பிடிக்க....??

யார் என்ன செய்தார்கள் என்று தாயக மக்களுக்கு தெரியும் .தூங்கிறவனை எழுப்பலாம் தூங்கிறமாதிரி நடிக்கிறவங்களை எழுப்பமுடியாது .

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.