Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோரம் போவது என்பது இது தானா....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்பில் ஒன்றையும் காணவில்லையே ???????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்பில் ஒன்றையும் காணவில்லையே ???????

 

இந்த இணைப்பில் பார்க்கவும்

http://www.channel4.com/news/sri-lanka-murali-cricket-tamils-misled-forget-forgive

  • கருத்துக்கள உறவுகள்

'முரளி' என்பவர் தன்னை ஒரு தமிழனாக என்றும் அடையாளப்படுத்தியதில்லை!

 

சிங்களத்தைச் சந்தைப்படுத்தும் ஒரு 'ஊடகமே' எப்போதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்!

 

அந்த வார்த்தைகளைக் கூறியதற்காக, ஏசுநாதர் தான் இப்போது வெட்கப்பட வேண்டும்!

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'முரளி' என்பவர் தன்னை ஒரு தமிழனாக என்றும் அடையாளப்படுத்தியதில்லை!

 

சிங்களத்தைச் சந்தைப்படுத்தும் ஒரு 'ஊடகமே' எப்போதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்!

 

அந்த வார்த்தைகளைக் கூறியதற்காக, ஏசுநாதர் தான் இப்போது வெட்கப்பட வேண்டும்!

'முரளி' என்பவர் தன்னை ஒரு தமிழனாக என்றும் அடையாளப்படுத்தியதில்லை!

 

அப்போ அவர் சொல்வது பற்றி நாம் ஏன் விவாதிக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

'முரளி' என்பவர் தன்னை ஒரு தமிழனாக என்றும் அடையாளப்படுத்தியதில்லை!

 

அப்போ அவர் சொல்வது பற்றி நாம் ஏன் விவாதிக்க வேண்டும்?

எங்களைப் பற்றி அவர் கருத்துக்கூற முற்படுவதால்! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களைப் பற்றி அவர் கருத்துக்கூற முற்படுவதால்! :o

அப்ப அவரைப் பற்றி விவாதிக்க வேண்டியதுதான். காசா, பணமா.. ஜமாய்ப்போம்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவரைப் பற்றி விவாதிக்க வேண்டியதுதான். காசா, பணமா.. ஜமாய்ப்போம்.

இவரைப்பற்றி விவாதிக்கிறதில உங்களுக்கென்ன பிரச்சனை?

 

நான் என்ன செய்ய வேண்டுமென்பதை,நீங்கள் சொல்லித்தர வேண்டியதில்லை! :D

இங்கே என்ன நடக்கிறது. அவர் ஒரு கிரிக்கட் வீரர் என்பதட்கு அப்பால் அவர் ஒரு தமிழர், தமிழர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள் என்ற தொனியில் இலங்கை அரசு அவரை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது. இவர் தன்னை ஒரு தமிழர் என்று ஆடயாளப்படுத்தவராயின் இவர் ஒன்றை செய்ய வேண்டும். முதலில் இவருக்கு தமிழ் மொழியும் தெரிந்த படியால் அந்த மக்களுக்கு இருங்கின்ற பிரச்சனைகள் எவை என்று சரியாக அறிந்து அதன் மூலவேற்களை எவ்வாறு இவரின் நல்லிணக்க புளுடா தீர்க்கும் என்று ஊதியிருக்க வேண்டும். அதை விடுத்து ஒரு கறை படிந்த அரசுக்கு ஏவாரு நாஜிக்கள் ஒலிம்பிக் விளையாட்டையும் ஒரு ஆயுதமாக யூதர்களுக்கு எதிராக பயன்படுத்தினார்களோ அதேபோலே நடக்க விடுவது வெறும் கொடுமையன்றி வேறில்லை. மனித உரிமைகளுக்கு சலூட்டா?. மகிந்தவுக்கு சலூட்டா?. தெரிவு தமிழ் முரளியிடமும்

 

Carlos-Smith.jpg

 

The 1968 Olympics Black Power salute was an act of protest by the African-American athletes Tommie Smith and John Carlos during their medal ceremony at the 1968 Summer Olympics in the Olympic Stadium in Mexico City. As they turned to face their flags and hear the American national anthem (The Star-Spangled Banner), they each raised a black-gloved fist and kept them raised until the anthem had finished. Smith, Carlos and Australian silver medalist Peter Norman all wore human rights badges on their jackets. In his autobiography, Silent Gesture, Tommie Smith stated that the gesture was not a "Black Power" salute, but a "human rights salute". The event is regarded as one of the most overtly political statements in the history of the modern Olympic Games.[1]

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

முரளி பற்றி நாங்கள் அதிகம் அலட்டி அவருக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது என்று கருதுகிறேன். அவருக்குத் தமிழ் தெரியாது, அவர் ஒரு விளையாட்டுக் காரர் என்பதற்கப்பால், அவர் அரசியல், சமூகவியல் விளக்கம் கொண்ட ஒரு கல்வியாளர் கூடக் கிடையாது (க.பொ.த. உயர்தரம் கூட முடிக்காதவர் இவர்). பி.பி.சியின் நிக் ரொபின்சன் முரளியின் கருத்தை பற்றி தனது வலைப்பூவில் எழுதியமைக்கு ஒரு பிரித்தானியத் தமிழர் நல்ல விளக்கம் கொடுத்து அனுப்பிய கருத்தை ஒப்புக் கொண்டு நிக் ரொபின்சன் தனது பதிவில் இணைத்திருக்கிறார் பாருங்கள்:

 

16:12 GMT update:

A British Tamil has written to make the point - hinted at in my blog - that Murali does not represent the Tamils of northern Sri Lanka

"Whilst I take your point that Mr Muralitharan is one of the most famous Tamils in the world (amongst the 4 Nobel Prize Winners, world chess grandmaster and the famous Oscar-winning composer, AR Rahman, and even the UN human rights chief Navi Pillay), he is certainly not representative of all the Tamil community.

"The Tamils in the north of Sri Lanka are completely different to those that are from the hill counties such as Kandy from where Mr Muralitharan originates.

"These Tamils were brought by the British during colonial times to work on and manage the tea plantations in these areas.

"The Tamils in the northern territories, however, such as Jaffna, Vanni, Batticoloa and Trincomelee, were those that settled more than 2000 years ago as well as later on from the Chola Empire incursions from southern India during the 1st millennium.

"Politics in the country reflects this origin where the hill country Tamils are more close to the Sinhalese."

 

(BBC-Nick's Blog)

 

இக்கருத்தின் மூலம் இலங்கையின் தமிழர்களைப் பிரித்துப் பார்க்கிறோம் என்று சிலர் இப்ப சண்டைக்கு வரக்கூடும். உண்மையில், இலங்கையில் இருக்கும் தமிழர் எல்லாரும் ஒன்று என்று நாம் சகட்டு மேனிக்குக் கூறிக் கொண்டிருந்தால், முரளி போன்றோர் தங்களுக்குக் கிடைக்கும் எச்சி இலைகளுக்காக எங்கள் கண்ணீரைத் தூசாக மிதிப்பதையும் "பெருமனதோடு" ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்! 

டக்கிக்காக "நாங்கள் யாழ்ப்பாணத்து உள்நாட்டார், தீவார்" அல்ல என்று சொல்வது போன்றது முரளிக்காக "நாங்கள் இலங்கைத்தமிழர், தோட்டத்தார் அல்ல" என்பது.  எவ்வளவு விளக்கத்துக்கு பின்னரும், மலையகத்தார் யாழ்பாணத்தவரை விட(அரசியலில் தன்னும்) சிங்கள்வருடந்தான் நெருக்கம் என்று  தமிழன் ஒருவன் எழுத முடியாது. அந்த வேடதாரி தன் முகத்தை பேஸ் புக்கில் போட்டிருந்தால் அதை பார்க்க எனக்கு விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் கூறும் கருத்துடன் உடன்படுகின்றேன்!

 

மலையகத் தமிழர். தமிழர்கள் இல்லை என்றோ அல்லது அவர்கள் எமக்குக் குறைந்தவர்கள் என்றோ நான் கூறவரவில்லை!

 

தமிழர்கள், தென்னிந்தியாவில் இருந்து கூலிகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் என்ற பொதுக்கருத்தானது, யாழ்ப்பாணத் தமிழர்கள் புகையிலை வளர்ப்புக்காகத் திருநெல்வேலியிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் என்று, பரவலாக இணையங்கள் முழுவதும் சிங்களவரால் எழுதப்பட்டுள்ளது!

தமிழ் நாட்டுத் தமிழர்கள் சிலர் கூட, பிழைப்புக்காக இலங்கைக்குப் போனவர்கள் என்ற ரீதியில் தான் எம்மைக் கணிக்கின்றார்கள்!

பிழைக்கப் போன இடத்தில், எதுக்குத் தனிநாடு கேட்கணும் என்னும் விவாதத்தைப் பல முறைகள் கேட்டிருக்கின்றேன்!

 

எமக்குத் தனி இராச்சியங்கள் இருந்தன என்பது எவ்வாறு பிரித்தானிய மக்களுக்கு உணரவைக்கப்பட்டதோ, அதே போல வடக்கு கிழக்குத் தமிழர்களுக்கும், மலைநாட்டுத் தமிழர்களுக்கும், இலங்க்கைக்கு வந்த காலத்தில் வித்தியாசம் உண்டு என்பது அடிக்கடி சுட்டிக்காட்டப்படுவதில் தவறில்லை என்பதே எனது கருத்து!

 

இல்லாவிடால் காலப்போக்கில், நாங்களும் வந்தேறுகுடிகள் என்றே, சர்வதேசசமூகம் முடிவுகட்டி விடும்!

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிக்காக "நாங்கள் யாழ்ப்பாணத்து உள்நாட்டார், தீவார்" அல்ல என்று சொல்வது போன்றது முரளிக்காக "நாங்கள் இலங்கைத்தமிழர், தோட்டத்தார் அல்ல" என்பது.  எவ்வளவு விளக்கத்துக்கு பின்னரும், மலையகத்தார் யாழ்பாணத்தவரை விட(அரசியலில் தன்னும்) சிங்கள்வருடந்தான் நெருக்கம் என்று  தமிழன் ஒருவன் எழுத முடியாது. அந்த வேடதாரி தன் முகத்தை பேஸ் புக்கில் போட்டிருந்தால் அதை பார்க்க எனக்கு விருப்பம்.

 

மல்லை, உங்களுடைய கருத்து சிறு பிள்ளைத் தனமானது. தீவாருக்கும் யாழ் நிலப்பரப்பாருக்கும் வெவ்வேறு அரசியல் அல்லது வாழ்வியல் பிரச்சினைகள் இருந்தனவா?  அதே நேரம், மலையகத் தமிழருக்கும் வடக்கு-கிழக்குத் தமிழருக்கும் ஒரே மாதிரியான "மரியாதை" சிங்களவனிடம் இருந்து கிடைத்த போதும், அவசரகாலச் சட்டத்திற்கு மலையகத் தமிழரின் கட்சிகள் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை? அப்படி வாக்களிக்காத தலைவர்களை ஏன் மலையகத்தமிழர்கள் தொடர்ந்தும் தேர்தலில் வெல்லச் செய்தார்கள்? இதற்கெல்லாம் பதில் தேடினால் உங்களுக்குத் தெளிவு பிறக்கலாம் சில நேரம்! 

இது சரியாக G.G.பொன்னம்பலம் ஏன் இந்திய பாகிஸ்தானியர் வாக்குரிமை சட்டத்திற்கு வாக்களிக்க முடிவெடுத்தார் போன்ற முடிவு. 

 

இதைப் புரியாதவராகவா மலையகத்தாரை தலைவர் வடக்கு கிழக்கில் குடியேற்ற ஆரம்பித்தார்? 

 

ஆழநீளமில்லாத அற்பத்தனமான கருத்து.

 

முதலில் முரளி பேசுவதையா மனோகனேசன் பேசுவாரா என்பதை தங்கள் மனத்துக்கு கேடக முடியாதவர்கள் தமிழன் தனோ எழுதிய கருத்து அது என்று ஆராயமுயலாமல் சிறுபிள்ளைதனமாக பார்த்ததில் கேட்டதில் அள்ளுண்டு போகும் குணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரைப்பற்றி விவாதிக்கிறதில உங்களுக்கென்ன பிரச்சனை?

 

நான் என்ன செய்ய வேண்டுமென்பதை,நீங்கள் சொல்லித்தர வேண்டியதில்லை! :D

ஆயிரத்தில் ஒரு வார்த்தை! மன்னிக்கவும். நன்றி.

Edited by sabesan36

இலங்கையில் இதுவரையில் மிக சிறந்த வீரர் என்றால் அது முரளிதான்.ஆனால் அவர் தமிழர் என்றதால் அவருக்கு அணியின் தலைமைப்பதவி வழங்கப்படவில்லை.இலங்கை அரசுக்கு எதிராய் சொல்லிவிட்டு இலங்கையில் இருக்கமுடியுமா?அதுதான் 

இலங்கையில் இதுவரையில் மிக சிறந்த வீரர் என்றால் அது முரளிதான்.ஆனால் அவர் தமிழர் என்றதால் அவருக்கு அணியின் தலைமைப்பதவி வழங்கப்படவில்லை.இலங்கை அரசுக்கு எதிராய் சொல்லிவிட்டு இலங்கையில் இருக்கமுடியுமா?அதுதான் 

 

Muralitharan married Madhimalar Ramamurthy,[28] a Chennai girl, on 21 March 2005.[29] Madhimalar is the daughter of late Dr S. Ramamurthy of Malar Hospitals, and his wife Dr Nithya Ramamurthy. Their first child, Naren, was born in January 2006.[30]

 

Muttiah Muralitharan holds Overseas Citizenship of India (OCI)[31] and he does not need a visa for travelling to India. According to his manager, Kushil Gunasekera, Muralitharan qualifies for this status because his family originates from India.

 

http://en.wikipedia.org/wiki/Muttiah_Muralitharan

 

 

அப்படியா சங்கதி. பாவம் மனோகணேசன். 

 
மேலுல தகவலின் படி முரளி  வெளிநாட்து இந்திய வம்சாவளி உரிததுடையவர். அதோடு இந்தியரை திருமணம் செய்து அங்கு வாழ்கிரார்ர். இன்னும் உங்கள் விளக்கம் படகேறும் என்று எண்ணுகிறீர்களா. ஆக நீங்கள் சொல்வாருவது அவர் மகிந்த ஆட்சி முடிந்தவுடன் அவர் மாற்றபக்கம் பாய்வர் என்று. 
  • கருத்துக்கள உறவுகள்

டக்கிக்காக "நாங்கள் யாழ்ப்பாணத்து உள்நாட்டார், தீவார்" அல்ல என்று சொல்வது போன்றது முரளிக்காக "நாங்கள் இலங்கைத்தமிழர், தோட்டத்தார் அல்ல" என்பது.  எவ்வளவு விளக்கத்துக்கு பின்னரும், மலையகத்தார் யாழ்பாணத்தவரை விட(அரசியலில் தன்னும்) சிங்கள்வருடந்தான் நெருக்கம் என்று  தமிழன் ஒருவன் எழுத முடியாது. அந்த வேடதாரி தன் முகத்தை பேஸ் புக்கில் போட்டிருந்தால் அதை பார்க்க எனக்கு விருப்பம்.

 

சாதாரண மலைய மக்கள் தமிழீழ மக்களோடு கூடிய அளவு சேர்ந்து வாழ்ந்தாலும்.. உணர்வுகளால் பொருந்தி நின்றாலும்.. மலையக மேட்டுக்குடிகளும்.. அரசியல் சக்திகளும் சிங்களவர்களின் அடிவருடி தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். முரளி அத்தகைய ஒருவர் என்பதை தான் அந்தக் கருத்தில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேசிய தலைவர் ஆறுமுகம் தொண்டமான்.. சந்திரசேகரன்.. மனோ கணேசன் என்று பல மலையகத் தலைவர்களையும் அழைத்துப் பேசினார். ஒற்றுமையை கட்டி வளர்க்க பாடுபட்டார். ஆனால்.. இத்தனையாயிரம் சொந்த மக்கள் சாகடிக்கப்பட்ட போது மனோவை தவிர மற்றவர்கள் வாயும் திறக்கவில்லை. ஒரு கண்டனத்தைக் கூட உதிர்க்கவில்லை. முரளியும் கூட. அந்த வகையில் இவர்கள் எப்படி மலையக மக்களையோ.. தமிழ் மக்களையோ பிரதிநிதித்துவப்படுத்த முடியும். முரளி சிங்கள அரசின் ஏஜெண்டாக முன்னிறுத்தப்படுகிறாரே தவிர.. அவர் மக்கள் பிரதிநிதி கிடையாது. முரளி மாதிரி முதலீட்டுக்கு அலைபவர்களை சிங்களம் விலைக்கு வாங்குவதும் பெரிய சிரமமில்லை. எம்மவர்களில் சங்கரி.. டக்கிளஸ்.. எப்படியோ அப்படித் தான்.. முரளியும். அவரை முழு தமிழ் மக்களையும் பிரதிநிதிப்படுத்தும் ஒரு அடையாளமாக பிபிசி செய்தியாளர் இனங்காட்ட முடியாது. ஏன் அவர் மலையக மக்களைக் கூட பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. காரணம் எமது விடுதலைப் போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பும் இருந்துள்ளது. அவர்களுக்கான வாழ்விடம் தமிழீழதிலும் உள்ளது. 

முரளிக்கு ஒரு சகோதரம் இருந்து ....அவர் வெள்ளை வானால் கடத்தப்பட்டு காணாமல் போய்... அவருடைய அம்மா ஒரு போட்டோவை வைத்துக்கொண்டு ....தெருத்தெருவாக...அலைந்து .......  இறுதியில் டேவிட் கமரூன் போன்றவர்களுக்கு....முன்னால் போய் நின்று ...கதறும் நிலைக்கு வந்திருந்தாலன்றி.......முரளியால் இந்நிலை உணரமுடியாது.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில் ஒரு வார்த்தை! மன்னிக்கவும். நன்றி.

என்னிலும் பிழையுண்டு, சபேசன்!

 

முரளி எண்ட இந்தத் தேவாங்கு சொல்லுது, 

 

Just thirty mothers crying and complaining.........does not mean........

 

உங்களுக்கும் தமிழன் என்ற முறையில் கோபம் வந்திருக்கும் என நினைத்தேன்! :o

  • கருத்துக்கள உறவுகள்

துர்நாற்றம் கொண்டவனின் நாற்றம் அவனுடன் மட்டுமே நின்றுவிடுவதில்லை. சுற்றுச் சூழலுக்குப் பரவினாலும் அதனை சுகந்த மணமாக சுவாசிப்பவர்களும் உள்ளனர். சிறீலங்காவின் நாற்றத்தை உறுஞ்சி மணந்து பாராட்டும் நாடுகளும் பொதுநலவாய மகாநாட்டிற்கு வருகைதந்துள்ளமை வெளிப்படுத்தி உள்ளது. முரளியின் துர்நாற்றத்தை சிறீலங்கா சுகந்த மணமாக சுவாசிக்கிறது. இதுபற்றிய விவாதங்கள் யாழில் அபசுரங்களாகவும் எழுவது வருத்தமளிக்கிறது. :( 

மகிந்தவை பாராட்டும் முரளியும் ஐநா செல்ல விரும்பும் கேமரனும்

16 நவம்பர், 2013

 

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனை சந்தித்துப் பேசினார்.

போருக்குப் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கிரிக்கெட் விளையாட்டைப் பயன்படுத்தும் முயற்சியாக முரளிதரன் தொண்டுநிறுவனம் ஒன்றை நடத்துகிறார்.

போர் நடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இலங்கையின் வடக்கே 1000 மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் முரளிதரன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுதந்திர விசாரணை நடத்தப்படாவிட்டால், சர்வதேச விசாரணை கோரி ஐநா செல்லவுள்ளதாகவும் கேமரன் தெரிவித்துள்ளார்.
 

காணொளியை காண இந்த இணைப்பில் செல்லுங்கள்: http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131116_muralicameron.shtml

Edited by துளசி

முரளிக்கு ஒரு சகோதரம் இருந்து ....அவர் வெள்ளை வானால் கடத்தப்பட்டு காணாமல் போய்... அவருடைய அம்மா ஒரு போட்டோவை வைத்துக்கொண்டு ....தெருத்தெருவாக...அலைந்து .......  இறுதியில் டேவிட் கமரூன் போன்றவர்களுக்கு....முன்னால் போய் நின்று ...கதறும் நிலைக்கு வந்திருந்தாலன்றி.......முரளியால் இந்நிலை உணரமுடியாது.....

நீங்கள் சொல்வது ஓரளாவே சரியானது. உண்மையில் இது ஒருவர் எந்தவகையில் தனது வாழ்க்கைப்பயணத்தினூடாக பண்படுத்தப்படுலார் என்பதையும் எந்த விழுமியங்களை உள்வாங்கியிருக்கிறார் என்பதையும் புலப்படுத்துகிறது. இததட்கு நெடுககரின் பதிவை வாசியுங்கள். 

 

இவர் வாழ்ந்த மலையாக சமூகத்தை இன்னும் அரசியல்வாதிகள் தொடர்ந்து பகடைகாய்களாக பாவித்து வருகிறனர். அவர்களை சுரண்டி அரசியல் நடத்துகின்றனர். இதை ஒவொரு வாரமும் வரும் வீர்கேஸரி வார இதழில் மலையாக செய்தி பகுதியில் காணலாம். அப்படியான ஒரு சூழலில் வளர்த்த ஒருவருக்கு மக்களின் கஷ்டம் பற்றி தெரியாதது அல்ல. மாறாக இவரின் உள்ளாக குறைபாடுகளின் பிரதிபலிப்பே இவரின் இன்றைய செயல்கள். இவரின் அழிவுக்கு இவரே வித்துட்டுளார் 

நீங்கள் அடிமையாக அழைத்து வந்த மலையக மக்கள் இன்னும் அதே நிலையில்...!: இளவரசர் சார்ள்ஸ்க்கான மடல் என்ற தலைப்பில் ஒரு மடல் கீழுள்ள இணைப்பில். முரளிக்கு மாத்திரம் சொலிப்போடாதேயுங்கோ. அவர் சொலுப்போகிறார் ஒரு30 மலயாககத்தவருக்கு பிரச்னை அதைப்போய் இப்படி காகிதம் எழுதி செய்வது பிழை என்று  :huh:

 

http://www.tamilwin.com/show-RUmrzBSbMZfw1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.