Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் – மண்டேலா ஒப்பீடே தவறு.

Featured Replies

praba-pottu-300x199.jpgமண்டேலாவின் மரணத்தை ஒட்டி மீண்டும் “பயங்கரவாதம்” ஒரு விவாதப்பொருளாகியிருக்கிறது. பிரபாகரன் -மண்டேலா ஒப்பீடும் நிகழ்த்தப்படுகிறது.

ஏன் இந்த நீண்டவிவாதம் என்று புரியவில்லை. மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் அது விவாதித்து கண்டறிய வேண்டிய “பொருளாக” இருக்கலாம். ஒரு போராடும் இனமான நமக்கு ஏன் இந்த தடுமாற்றம்?

மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக இருந்தால் அது “பயங்கரவாதம்”. மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடினால் அது “விடுதலைப்போராட்டம்”.

mandela8.jpg
மண்டேலா “பயங்கரவாதியாக” இருந்து “போராளியான” கதை இப்படித்தான் உருவாகியது.

பிரபாகரனை ஏன் இறுதிவரை “பயங்கரவாதி” யாகவே இருந்தார் என்றால், ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேற்குலக உலகை ஒழுங்கையே மாற்ற முற்பட்டார். அவர் மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடவில்லை.

இதைத்தான், “A fleeting moment in my country” என்ற நூலில் பெண்ணிய செயற்பாட்டாளரும் மனித உரிமையாளருமான ந. மாலதி பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

“புலிகள் சர்வதேச மட்டத்தில் தனிமைப்பட்டிருந்தாலும் தம் இலக்கை நோக்கி அணியமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். முழு உலகையும் எதிர்த்து அதிலும் வெற்றி கொள்வார்கள் போலத் தோன்றியது. விடுதலைப்புலிகள் பற்றிய இத் தகைமையே உலகில் இன்று நிலவும் ஒழுங்கைக் குலைப்பதாக இருந்தது. அடைக்கப்பட்ட ஆட்டு மந்தைகளில் ஒன்று படலையைத் திறந்து வெளியேற அறிந்து கொண்டால் அதைச் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை. இல்லாவிட்டால் ஆட்டு மந்தைகள் எல்லாம் தொடர்ந்து வெளியேற ஆரம்பித்து விடும். படலையைத் திறக்க தெரிந்த ஆடுகள்தான் விடுதலைப்புலிகள். உலகத்திற்கு அவர்களை அழிப்பதை தவிர வேறு வழியில்லை”

எனவே மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்குள் உள் மடிந்துபோன மண்டேலாவையும் பிரபாகரனையும் ஒப்பிடுவதே தவறு.

மண்டேலா, பிடல்கஸ்ரோ, சேகுவேரா, கோசிமின், யாசீர் அரபாத் போன்ற தலைவர்கள் வரிசையில் பிரபாகரன் தனித்துவமானவர். அவர் மேற்குலக உலக ஒழுங்கை நிர்மூலம் செய்யும் “பிரபாகரனியம்” என்ற நவீன விடுதலைக்கோட்பாட்டை நிறுவியவர்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் போராடும் இனங்களுக்கு மண்டேலாவின் முன்பாதி வாழ்வுதான் எடுத்துக்காட்டே ஒழிய பின்பாதி வரலாறு அல்ல. ஆனால் “பிரபாகரனியம்” அப்படியல்ல.. போராடும் இனங்களின் ஆன்மா அது. உலக ஒழுங்கை நிர்மூலம் செய்து அது போராட என்றும் உந்துதலாகவே இருக்கும்.

எனவே பிரபாகரன் – மண்டேலா ஒப்பீடே தவறு.

அது வேறு இது வேறு. ஆனால் இரண்டும் அதனதன் தளங்களில் விடுதலைக் கோட்பாடுகளை முன்வைத்தன என்றளவிலேயே ஒன்றுபடுகின்றன.

ஈழம்ஈநியூஸ்ற்காக தாயகத்திலிருந்து ஓவியா.

 

http://www.eelamenews.com/?p=114594

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல இணைப்பு மயூரன்.. இணைப்பிற்கு நன்றி.

செம கொமடி , இப்படி எல்லாம் யாரப்பா சிந்திக்கின்றார்கள் .

நல்லவேளை ரோட்ஸ்கி உடன் ஒப்பிட்டு உலக புரட்சி பற்றி சிந்தித்தார் என்று எழுதவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
சில பேர் சிவப்பு புத்தகத்தை படித்து புரட்சி செய்ததை நாமறிவோம். லெபனானில் பயிற்சி எடுத்து தேங்காய் களவெடுத்தவர்களையும் நாமறிவோம். 
 
பிரபாகரனையும் மண்டேலாவையும் ஒப்பிட முடியாது என்றதற்கே இந்த குதி எனில்....
  • தொடங்கியவர்

செம கொமடி , இப்படி எல்லாம் யாரப்பா சிந்திக்கின்றார்கள் .

நல்லவேளை ரோட்ஸ்கி உடன் ஒப்பிட்டு உலக புரட்சி பற்றி சிந்தித்தார் என்று எழுதவில்லை .

 

அர்ஜின் அண்ணா அப்படிச் செய்தாலும் தவறில்லை. அதனால்தானே என்னவோ உலகநாடுகள் அனைத்தும் இணைந்து எமது போராட்டத்தை நசுக்கின.

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தமில்லாமல் வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விடவேண்டிய அவசியம் ஏன் என்று புரியவில்லை.

 

தமிழர்கள் விடுதலைப்போராட்டம் படிப்படியாக பயங்கரவாதமாகியது தென்னாபிரிக்கர்களின் போராட்டம் ஆரம்பத்தில் பயங்கரவாதமாக முத்திரைகுத்தப்பட்டிருப்பினும் பின்னர் அது விடுதலைப்போராட்டமாக நகர்ந்தது.

 

தென்னாபிரிக்கர்கள் உலகநாடுகளை நண்பர்களாக்கினார்கள் தமிழர்கள் உலகநாடுகளை எதிரிகளாகினார்கள்.

 

இவை எல்லாம் இரண்டு மனிதர்களின் பிரச்சனையில்லை இது இரண்டு இனங்களின் பிரச்சனை. இந்த இரண்டு இனத்தையும் எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது.

 

தமிழர்கள் போராடும் இனம் என்பது மகா ஆயோக்கியத்தனமான கருத்து. போராடும் இனம் எவ்விதத்திலும் தன்னினத்தையே தனக்கு இரையாக்கமாட்டாது. இனம் என்ற வரையறை இல்லாத கூட்டம் இனவிடுதலைக்காக போராடுகின்றது என்றால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. தமிழர்கள் முப்பது இயக்கமாகி அம்பது பிரிவுகளாகி மதங்களாகி பிரதேசங்களாகி சாதிகளாகி அளையாள் அடித்து தின்று எரியிறவிட்டில் புடுங்குவது வரை லாபம் என்று இருந்ததுக்குதான் இந்த உலகம் பயங்கரவாதம் என்று பெயரிட்டது. இது போராடும் இனமல்ல ஆளையாள் அடித்து தின்னும் கூட்டம். இதற்கு ஒப்பீடு உலகத்தில் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன்.. நீங்கள் சொல்லும் இந்த இயல்புகள் தமிழர்களுக்கு மட்டும் உரித்தானவை அன்று.. அமெரிக்க உள்நாட்டுப்போரிலும் ஒரு பாதி பிரித்தானியாவையும், இன்னொரு பாதி சுதந்திர அமெரிக்க கோட்பாட்டையும் கொண்டு போரிட்டன.. சொல்லமுடியாத அளவுக்கு வன்முறையை தங்கள் சொந்த இனத்தின்மீதே கட்டவிழ்த்து விட்டார்கள்..

அவர்கள் அன்று பட்டுத் திருந்தினார்கள்.. இப்போது எமது முறை..

இது ஈழம் நியூஸ் என்னும் பரணி கிஸ்னரஜனி என்னும் பேஸ்புக் பக்க புலம்பல் இது மற்றவன் எழுதும் ஆய்வை நாலுவரிகளை நாலுபேரிடம் சுட்டு தான் எழுதியதா சொல்லும் புண்ணியவான் இவர் ஆரம்பமும் இருக்காது முடிவும் இருக்காது அவரிடம் கேள்வி கேட்டா அவரிடம் இருந்து வரும் பதில் நீ எந்த நாட்டு உளவாளி என்பதே .

 

இதில்வேற தாயகத்தில் இருந்து ஓவியா என புனைபெயர் வேற போங்க பாஸ் பகிடி விடாமல் . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

செம கொமடி , இப்படி எல்லாம் யாரப்பா சிந்திக்கின்றார்கள் .

நல்லவேளை ரோட்ஸ்கி உடன் ஒப்பிட்டு உலக புரட்சி பற்றி சிந்தித்தார் என்று எழுதவில்லை .

 

 
யாரும் உலக புரட்சி பற்றி சிந்திப்பதில்லை.........
உள்ளூர் புரட்சியே வெளியில் பரவுகிறது.
 
கொள்கைகளை வகுக்குமுன்பு ...... ஏற்கு முன்பு.
சிந்திக்க வேண்டும்.
வகுத்த பின்பு அதனுடன் வாழ்பவன் புரட்சி வீரன்! அப்படி என்று உலகமும் வரலாறும் சொல்கிறது.
 
உங்கள் உண்மை உலகில் அப்படி  இல்லது இருக்கலாம்..... இந்த உலகில் நடப்பதே எமக்கு தெரியும்.
 
இந்தியாவில் ...........
இந்திரா இருந்தால் ஒரு கொள்கை ....
சோனியா வந்தால் ஒரு கொள்கை.....
என்று போபவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. சிங்களவன் கூட இன்று பிரபாகரன் பற்றியே பேசுகிறான். 
வேறு யாரையும் பற்றி அலட்டுவது இல்லை. 
 
காரணம் பிரபாகரன் என்பது ஒரு கோட்பாடு !
தனிமனிதன் என்றால் அவன்  இறந்ததோடு அதுக்கும் இறந்திருக்கும்.
 
சிங்களவன் பிரபாகரனுக்கு பயப்பிடவில்லை ......... கோட்பாடு க்குதான் பயபிடுகிறான்.
அண்டியிருந்த கொள்ளை கும்பலும் மக்களை எய்த்து பிழைப்பவர்களும் பாய்ந்தது அதற்குதான். 

சரித்திரத்தை புரியாதவர்கள் பலர் சரித்திரம் எழுதுகிறார்கள். இதையும் புத்தம் வளர்த்த தமிழ் என்று நினைக்கிறார்கள். 2008 வரைக்கும் மண்டெலா பயங்கரவாதியாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டிருந்தார். நாடு ஒன்று பயங்கரவாதியாக கூறுவதால் பயங்கரவாதம் பிறப்பதாக அரச பிரச்சாரிகள் கூறுகிறார்கள். அமெரிக்கா சம்பந்தனை பயங்கரவாதியாக போட்டு வைத்திருந்து விசா மறுத்தது. ஆனநத சங்கரிக்கு சமாதானப்பரிசு கொடுத்தது. மேலும் சபஸ்தியாம் பிள்ளையை பழிவாங்கியதிலிருந்து SLMM வந்து சமாதனத்தை நிலைநாட்டிய அமைப்புத்தான் புலிகள். நெல்சன் மண்டாலா தன்னை மேற்கு நாடுகள் விடுவித்த பின்னர் தான் ஏற்றுக்கொண்ட ஒப்பந்த்த்திற்கு மாறாக அப்போது  ANC யின் பயங்கரவாதத்தை நெல்சன் மண்டெலாவின் மனைவி பொறுப்பெடுத்து நடத்தி வந்ததால்த்தான் சிறை மீண்ட பின்னர் விவாரத்துக்கு அவர் போனதே .  SLMM விட்டு விட்டு போகும் போது கொடுத்த அறிக்கைகளை இந்த சரித்திரம் எழுதுவோர் படிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளையும், கனடாவையும் புலிகள் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கும் படி அமெரிக்கா நிர்ப்பந்தித்த காலத்தில் புலிகள் இராணுவ இலக்குகளில் மட்டும் தான் கவனம் செலுத்தியிருந்தார்கள். அரச சுற்றறிக்கைகளை வைத்து கருத்து எழுதுவோருக்கு படிக்க இவை கிடைப்பதில்லை. சர்வதேச வல்லுனர்களின் தலைவராக பணியாற்றிய இந்திய பிரத நீதியரசர் என். பகவதி அதே நேரம் பதவி விலகியது சரித்திரம் எழுதும் பலருக்கு தெரியாது.

 

நாம் அல்ல; அமெரிக்காதான் தாம் இலங்கை அரசால் ஏமாற்றப்பட்டதாக காங்கிரசில் அறிவித்தது. புலிகளால் ஏமாற்றப்பட்டதாக அல்லக் கூறப்பட்டது.

 

மண்டலா காலத்தில் வித்தியாசமான நிலைமை இருந்தது. வெள்ளை அரசுகள்  ஒர வஞ்சக ஜனநாயகத்தில் ஈடுப்பட்டார்கள். அங்கு உண்மையான ஜெனநாயாகமும் சட்டத்தை மதிக்கும் அரசும் இருந்தது. அது வெள்ளையர்களுக்கு மட்டும். இதனால் மேற்கு நாடுகளுக்கு அங்கு வந்த பொறுப்பு அடுத்த படியாக பொதுமக்கள் ஜனநாயகத்தை கொண்டுவருவதே. ஆனால் இலங்கையில் அப்படி இல்லை. சுதந்திரம் அடைந்தவுடன் DS செய்தது மக்களின் வாக்குக்களை பறித்து ஜனநாயகத்தில் கை வைத்தது. இதன் பின்னர் சிங்கள ஆட்சியாளர்கள் மெல்ல மெல்ல சர்வாதிகாரத்துக்குள் இறங்கி இன்று மன்னர் ஆட்சியில் வந்து.  இந்த மன்னர் ஆட்சியை ஏற்படுத்தும் சட்டமான 18ம் திருத்தம்,  2 முழுமையான அரசியல் அமைப்பு மாற்றங்களின் பின்னரும் பதினேழு திருத்தங்களின் பின்னரும்தான் உருவானது. 

 

கிராண்பாஸ் சம்பவம், வெலவேரியா சம்பவம், சிராணி சம்பவம் போன்றவைக்கு சமாந்தரமனவை வெள்ளைகளின் தென் ஆபிரிக்காவில் இருக்கவிலை. இதை மேற்கு நாடுகள் பொது ஜனநாயக பிரச்சனையாக பார்க்கிறார்கள். தென் ஆபிரிக்காவுக்கு சமமான இனத்துவேசமாக பார்க்கவில்லை. 

 

இதை விளங்காதவர்கள் சித்தி லெப்பையுடன் இராமநாதன் வைத்திருந்த தொடர்புகளை அறியாமல் சிங்கள் கையாள் என்று எழுதுகிறார்கள். நாய்கவிதை எழுதி இராமநாதனை வெள்ளையரின் நாய் என்று புருடாவிட்டவர்கள் இப்போது சிங்களத்தின் நாய் என்று இன்னொருதடவை அந்த கவிதையை திரிக்கிறார்கள். ஐயோ பாவம் அந்த கவிதைக்கு விழுந்து விழுந்து பச்சை குத்திய பண்டிதர்கள். அந்த கவிதையில் என்ன கள்ளம் இருந்தது என்பதை இன்றுவரை அறியாமல் பண்டித கருத்துக்களை எழுதி பச்சை குத்தின்னர்கள். 

 

சிலர் அரசின் அறிக்கைகளில் தங்கி எழுதுவதால் சம்பந்தரின் கட்சி எங்கு போய் இருக்கிறது என்பதை காணமுடியாமல் மாலைக்கண் வருத்தத்தால் அவதியுறுகிறார்கள். ஆனால் சம்ப்ந்தரின் கட்சி வரதராஜர் மாதிரி திடுதிப்பென தனி நாடு பிரகடனப்படுத்தப்பட வேண்டிய தேவைக்கு தள்ளப்ப்பட அரசால் ஆயந்தங்கள் செய்யப்படுவதை இவர்கள் அறியவில்லை.  அரசு அந்த செய்திகளிலிருந்து இவர்களை இருட்டில் வைத்திருப்பத்தால் இவர்கள் அப்பாவிகளாக தங்களை தாங்கள் அவிட்டுவிடுகிறார்கள். ஆனால் வரதர் மாதிரி அல்லாமல் சம்பந்தரின் கட்சி தனி நாடு பிரகடனப்படுத்தினால் ஐ.நா வர வேண்டிய தேவையும் வரும். 

 

Edited by மல்லையூரான்

சரித்திரத்தை புரியாதவர்கள் பலர் சரித்திரம் எழுதுகிறார்கள். இதையும் புத்தம் வளர்த்த தமிழ் என்று நினைக்கிறார்கள். 2008 வரைக்கும் மண்டெலா பயங்கரவாதியாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டிருந்தார். நாடு ஒன்று பயங்கரவாதியாக கூறுவதால் பயங்கரவாதம் பிறப்பதாக அரச பிரச்சாரிகள் கூறுகிறார்கள். 

நாலு கனேடிய பிரதமர்கள் (இந்நாள்,முன்னைய ) பிரதமர்கள் மாண்டேலாவின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள செல்கின்றார்கள் .

எங்கடைக்கு பத்து பிரதமர்கள் வந்தார்கள் என்று மல்லை எழுதினாலும் எழுதுவார் ,அதற்கு சிலர் பச்சையும் குத்துவினம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலு கனேடிய பிரதமர்கள் (இந்நாள்,முன்னைய ) பிரதமர்கள் மாண்டேலாவின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள செல்கின்றார்கள் .

எங்கடைக்கு பத்து பிரதமர்கள் வந்தார்கள் என்று மல்லை எழுதினாலும் எழுதுவார் ,அதற்கு சிலர் பச்சையும் குத்துவினம் .

 

உங்கள் மண்டைக்குள் என்ன களிமண்ணா இருக்கின்றது? கண்ணுக்கு முன்னாலே அழிவுகள் நடந்துகொண்டிருக்கும் பொழுதிலும் எப்படி உங்களால் அடாவடித்தனமாக எழுத முடிகின்றது?

அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் அதிபர்கள் எல்லோரும் போகத்தான் ஆயத்தமானார்கள். ஆனால் ஒருவர் சுகவீனம் காரணமாக தவறி விட்டார்.

 

அதே மாதிரியே உயிருடன் இருக்கும்-இல்லாத பலர் அதிபர்கள் அவரை பயங்கரவாதியாக பட்டியலில் வைத்திருந்தார்கள். அதிலும் ஒருவர்தான் தவறினார். அவர் தானும் ஒரு கறுப்பர் என்ற காரணத்தினால் ஆக்கும்.

 

ஆனால் கனடாவில் ஒரே ஒரு பிரதமர்தான் பிரபாகரனை பயங்கரவாதியாக்கினார். 

 

மண்டாலாவின் இறுதிச் சங்குக்குத்தான் மிகப்பரிய தொகையான பயங்கரவாதிகள் போகும் சந்தர்ப்பம் இருக்கு. ஆபிரிக்கவிலிருந்து ஒரு கூட்டம் போகும். தென் அமெரிக்காவிலிருந்து கூட்டம் போகும். தெற்காசியா, தென்கிழக்காசியா  சோனியா, மகிந்தா, காஸ்ரோ............... அதிலும் கிம் யங் உன் ஒருவர்தான் தவறலாம்.

 

மண்டெலாவின் இறுதி சங்குக்குக்கு போய் கங்கையில் மூழ்கி அன்னமாக முயலும் காக்கைகளுக்கு அன்ன  சாடிபிகேட் கொடுக்கும் வேலைக்கு அருச்சுன் தான் நிர்வாக இயக்குனர்? 

 

 


ஒருவேளை மண்டெலாவின் படத்தை தனது ஐ.டி ஆக்கினால் தானும் கங்கையில் மூழ்கி எழுந்ததாக அருச்சுன் கனவுகாண்கிறார்ரென்றால் அது அவரை மட்டும்தான் க்ழுவும். அது எப்படி புளொட்டை, பத்ம நாபாவை கழுவும்?

Edited by மல்லையூரான்

பொய்யர்களும் புழுகர்களும் சுத்து மாத்து பேர்வழிகளும் தான் எம்மை இந்த இழிநிலைக்கு இட்டு சென்றவர்கள் ,

முப்பது வருடங்களாக இல்லாத பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி அவர்கள் தம் உயிரை விட்டதும் சிறையில் கிடப்பதும் அனாதராவானதும் தான் நடந்தது ,இவைதான் உண்மையும் யதார்த்தமும் ,

இந்த உருவேற்றிய கோஸ்டிகளில் சிலர்  இப்போ இலங்கை அரசுடன் ,சிலர் அந்த அந்த நாடுகளில் கவுன்சிலர்,எம் பி ஆசையில் ,சிலர் இன்னமும் நாடு பிடிப்பம் என்று சுத்துமாத்து ,

இந்த கோஸ்டிகளை முதலில் மக்கள் இனம் கண்டு ஓதிக்கினால் அன்றி தமிழனுக்கு விடிவு இல்லை ,நாட்டில் கூட்டைமப்பு அதை ஓரளவு செய்கின்றது ,புலம் பெயர்ந்த நாடுகளிலும் அது ஓரளவு வெற்றி பெற்றுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும் .அதில் ஒரு சிறு பங்குதான் நான் செய்வதும் அண்ணை .

அண்ணே முப்பது வருடத்திற்கு முன் கோமணத்தொடாவது  வாழ்ந்தோம் .இப்ப கோமணமும் இல்லாமல் வாழ்கிறோம் அண்ணே ..............கோமணம் அணிபவர்களுக்கு மட்டுமே நான் சொல்லுகிறேன் . :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.