Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரதி என்று ஒரு கோழைக் கவிஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரசியப் புரட்சியை காளியின்

கடைக்கண் பார்வை எனவும்

யுகப் புரட்சி எனவும் போற்றிப் பாடியதால்

புரட்சிக் கவிஞன் ஆனவன்

ஒவ்வொரு கவிக்கும்

இசையோடு தாளமும் கொடுத்து

ஓசையோடு நயம் கொடுத்து

எழுதி வைத்ததால்

இசைக் கவிஞன் ஆனவன்

பெண்ணடிமையை எதிர்த்ததால்

பாஞ்சாலி சபதத்தில்

மனுதர்ம சாஸ்த்திரத்தை

திரிபு படுத்திய சாஸ்த்திரம் என்றதால்

புதுமைக் கவிஞன் ஆனவன்

கோகுலத்துக் கண்ணனைத்

தன் காம வேட்கை தீர்க்கும்

காதலனாக்கிப் பாடியதால்

தன்னினச் சேர்க்கைக் கவிஞன் ஆனவன்

இன்னும் குழந்தையாக்கிப் பார்த்ததனால்

paedophile கவிஞன் ஆனவன்

தமிழர் ஆண்ட மண்ணை

மறவர் வீரம் படைத்த நிலத்தை

சிங்களத் தீவென்றழைது

அறியாமையை வெளிப்படுத்தியதால்

அறிவிலியான கவிஞன் ஆனவன்.

அச்சம் தவிர் என்று அடித்துக் கூறியவன்

அச்சமில்லல அச்சமில்லை எனப்பாடியவன்

பாரதம் என்ற பெயர் சொன்னால்

பயம் போகுமென்றவன்

காவற்துறைக்கு அஞ்சி

பாண்டிச் சேரிக்கு ஓடிப் போனதால்

கோழைக் கவிஞன் ஆனவன்

தமிழ்போல் வேறு மொழியில்லை

எனப்பாடிப் புகழ்ந்ததால்

செந்தமிழ் நாடென்றால் தேன் என்றதால்

பிராந்தியக் கவிஞன் ஆனவன்

ஆதிமறை தோன்றிய ஆரிய நாடே"

"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"

என இந்தியாவை ஆரியர் தேசமெனப்பாடியதால்

சாதியக் கவிஞன் ஆனவன்

குரங்கின் அழகையும்

மாட்டின் அழகையும்

குயிலாகிப் போற்றிப் போற்றி

காதல் போயின் சாதல் எனப்பாடியதால்

கனவுலகக் கவிஞன் ஆனவன்

வெள்ளையனை வெளியேறு எனப்பாடினான்

விடுதலை வேண்டிப்பாடினான்

இன்று வெள்ளைச்சி தனி ஒருத்தியாக

பாரத்தத்தை கொள்ளையடிக்கிறாள்

ஆட்டிப் படைக்கிறாள் - அதனால்

எதிர்காலம் உணாராத கவிஞன் ஆனான்

பார்ப்பானை ஐயனென்ற காலமும் போகவில்லை

வெள்ளைக்காரப் பரங்கியை சைபர் கூலிகள்

துரையென்று பெங்களூரில் இன்றும் கைககட்டி

வாய் பொத்திச் சேவகம் புரிவதும் நிற்கவில்லை - அதனால்

நினைத்ததை நடக்கச் செய்யாத கவிஞன் ஆனான்

வெள்ளிப் பனிமலையில் இந்தியப்படைகள்

சீனனிடம் அடிவாங்குவதாலும்

வங்கக் கடலில் சிங்களவனால்

சுடுபட்டு இந்தியன் மாள்வதாலும்

தீர்கதரிசனம் இல்லாக் கவிஞன் ஆனவன்

பார்க்கும் கண்களுக்கெல்லா

பலதோற்றக் கொடுக்கும் கவிவடித்தவன்

தேசியம் என்னும்

ஒரு சொல்லிலும் அடங்காது

ஒரு வரியிலும் அடங்காது

ஒரு காவியத்திலும் அடங்காது

பன்முகக் கவிஞன்

பாரதியின் கவித்திறன்

Vel tharma

பாவம் பாரதி நாலுபேரை மண்டையில்

போட்டிருந்தால் வீர கவிஞன் ஆகியிருப்பான்

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் ஒப்பற்ற கவிஞன் பாரதியை வேல்தர்மா வசைபாடுதல் நியாயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ந்த போது பாரதி ஏழை மறைந்த போது கோழையாக்கிவிட்டது தமிழ்க்கவிதை. என்ன செய்வது எதுவும் உயிரோடு உள்ள போது கேட்டிருந்தால் மீசைக்கவிஞன் ஞானியாக பதில் சொல்லியிருக்கலாம். நாளை வேல் தர்மா இல்லாது போன பிறகு இக்கவிதையைக் கூட ஆயலாம் யாரோ ஒரு கவிஞர்.

இந்தாள் இன்று இந்தியாவில் உள்ள பிரச்சனைகளை வைத்து என்றோ செத்துப்போன பாரதியை பழிகின்றான்...பாரதியையும் காந்தியையும் பழிப்பது ஒரு புது ஸ்டைல்...ஏனென்றால் இவர்களை தான் பின் பற்றுவார் யாருமில்லையே...

  • கருத்துக்கள உறவுகள்

வேல் தர்மா

விரலிடுக்கில் உலகம் அதனால் நேற்றைய காலத்துக் கவிஞன் பாரதி உங்களுக்குக் கோழையாகிவிட்டான். கொஞ்சமாக உங்கள் சிந்தனையைத் தட்டிவிட்டுப்பாருங்கள் இன்றைய யுகத்தில் அதாவது இந்தத் தொழில் நுட்பங்கள் நிறைந்த வேளையில் பாரதி என்கின்ற கவிஞன் இருந்திருந்தால்...

 

அல்லது பாரதியின் காலத்தில் நீங்கள் இருந்திருந்தால்..... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியா கோழைக்கவிஞன்?

 

அக்கிரகாரத்தில் பிறந்தும், 'பெண் விடுதலை' பேசிய பாரதியா கோழைக்கவிஞன்? அப்போதே பெண்விடுதலை பற்றிப் பேசியவன் காலத்தை வென்றவனல்லவா?

 

ஐயராகவே பிறந்தவன், 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே' என்று பாடி அக்கிரகாரத்திலிருந்தே துரத்தப்பட்டவன், தனது கொள்கைக்காக, ஏழையாகவே வாழ்ந்து, இறுதியில் சாகும்போது கூட அவனது நிறை வெறும் நாற்பத்து மூன்று றாத்தல்கள் மட்டுமே! அவனது இறுதி மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், அவனுடன் சேர்த்து.... வெறும் பதின்மூன்று பேர் பட்டுமே!

 

மனதில் உறுதி வேண்டும்... என்றவன் இறக்கும் வரை அந்த உறுதியில் இருந்து ஒரு கணம் கூட விலகவில்லை!

 

அவர்களது தூற்றல்களுக்கான பதிலையும் அவனே தந்திருக்கிறான்...

 

 

நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...

 

சொல்லடி சிவசக்தி...என்னைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்...

 

வல்லமை தாராயோ.... இந்த மானிடம் நலம் பெற  வாழ்வதற்கே....

 

அந்த சக்தியிடம் கூட, அவன் தனக்கென எதுவுமே கேட்கவில்லை.... :o

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதியா கோழைக்கவிஞன்?

 

அக்கிரகாரத்தில் பிறந்தும், 'பெண் விடுதலை' பேசிய பாரதியா கோழைக்கவிஞன்? அப்போதே பெண்விடுதலை பற்றிப் பேசியவன் காலத்தை வென்றவனல்லவா?

 

ஐயராகவே பிறந்தவன், 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே' என்று பாடி அக்கிரகாரத்திலிருந்தே துரத்தப்பட்டவன், தனது கொள்கைக்காக, ஏழையாகவே வாழ்ந்து, இறுதியில் சாகும்போது கூட அவனது நிறை வெறும் நாற்பத்து மூன்று றாத்தல்கள் மட்டுமே! அவனது இறுதி மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், அவனுடன் சேர்த்து.... வெறும் பதின்மூன்று பேர் பட்டுமே!

 

மனதில் உறுதி வேண்டும்... என்றவன் இறக்கும் வரை அந்த உறுதியில் இருந்து ஒரு கணம் கூட விலகவில்லை!

 

அவர்களது தூற்றல்களுக்கான பதிலையும் அவனே தந்திருக்கிறான்...

 

 

நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...

 

சொல்லடி சிவசக்தி...என்னைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்...

 

வல்லமை தாராயோ.... இந்த மானிடம் நலம் பெற  வாழ்வதற்கே....

 

அந்த சக்தியிடம் கூட, அவன் தனக்கென எதுவுமே கேட்கவில்லை.... :o

 

230711707_1384754684.jpg

 

வேல்தர்மா எழுதியதில் ஏதும் குறையிருப்பதாக தெரியவில்லை. பாரதி பற்றி பாடப் புத்தகத்தில் படித்தையும் செவி வழி நாம் கேள்விப்பட்டவற்றவையும் அப்படியே நம்பி அதையே முற்றிலும் உண்மை என்று உறுதி கொள்கிறோம். ஆனால் அக்கருத்துக்களை ஆய்வுக்குட்படுத்தும்போது நாம் கொண்ட எண்ணங்களை மீள் பரிசிலனை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. பாரதி ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல

பாரதி பற்றிய சில வரலாற்று உண்மைகள்

பெண் விடுதலையைப் பற்றி பாரதி......
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உடன்கட்டை ஏறுதலை எதிர்த்து சமூக சீர்திருத்தவாதிகள் குரல் கொடுத்துள்ளனர். ஆங்கில அரசும் இதைத் தடுக்கச் சட்டம் போட்டுள்ளது. ஆனால் நம் பாரதியோ 'சதி 'யை ஆதரித்து 1910 பிப்ரவரியில் 'கர்ம யோகி ' இதழில் எழுதுகிறார் - ' நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரீகளே மஹா ஸ்திரீகளாவார்கள் '.

சாதிகள் பற்றி பாரதி....
 பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என மனுதர்மம் சொல்லி இருக்கிறது. ஆனால் தந்தையோ உடல் வேர்க்க வேலை செய்ய நேர்ந்ததே என நொந்து கொள்ளும் சாதியபிமானம் குறிப்பிடத்தக்கது.

'கண்ணன் என் தந்தை ' பாடலில் 'நாலு குலங்கள் அமைத்தான்- அதை நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர் ' என்று நான்கு வர்ணங்கள் சிதைவதை ரொம்ப வருத்தப்பட்டு எழுதுகிறார்.

'கடல் மேல் வருணாசிரமப் பாலம் ' என்ற கட்டுரையில் பாரதி 'குலத்தளவே ஆகுமாம் குணம் ' என்பதோடு 'அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்ளுகிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை ' என்று அவர் சொல்லும் இடத்தில்தான் குலக்கல்வி கொண்டு வந்த ராஜகோபாலாச்சாரி அதனை ஆதரித்து  ஒன்றிணைகிறார்கள்.

 பாரதியார், பிரிட்டிஷ் போலீசாரின் கைதில் இருந்து தப்பிட பாண்டிச்சேரிக்குப் போய் நீண்ட காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை மாகாணத்துள் திரும்பும் வேளையில் திருப்பாதிரிப்புலியூரில் வைத்துக் கைது செய்யப்பட்டுக் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 13/4/1919ல். அந்நேரத்தில் பாரதியார், 'தமக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பெல்லாம் கிடையாதென்றும், சென்னை மாகாணத்துக்குள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்கப் போவதாயும், ஆங்கிலேயப் பேரரசர் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்தித்து ' ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு  ஆங்கில அரசின் விருப்பப்படி கடயத்தில் வசித்து வந்தார்.

முழுக் கட்டுரையையும் இங்கே காணலாம்
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60603247&format=print&edition_id=20060324

 

http://www.keetru.com/literature/essays/valasa_vallavan_2.php

மேலும் பாரதியார் பற்றிய விமர்சனம் ஒன்றும் புதிதல்ல. இதையொட்டியே யாழில் முன்னர் ஒரு திரி ஓடியது
http://www.yarl.com/forum3/index.php?showtopic=95468

 

வே.மதிமாறன் எழுதிய "பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்" என்ற ஆய்வு நூலை கொஞ்சம் படித்தால் பாரதி பற்றி பிண்ணப்பட்ட உயர்ந்த பிம்பம் களையக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம், ஆதித்ய இளம் பிறையன்!

 

ஆனாலும், வாழ்க்கை என்பது ஒரு பாதை! அதில் நடக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள் தான் ஒருவரைப் பண்படுத்துகின்றது! அல்லது ஒருவரை உருவாக்குகின்றது என்றும் கூறலாம்!

 

ஆறுமுகநாவலரைப் பற்றிக் கருத்துக்கூறுபவர்கள், அவர் சாதிமான் என்றும் கூறுவார்கள்! ஏனெனில் அவர் நடந்து வந்து பாதை அது! அதை மாற்ற அவர் விரும்பவில்லை! அதற்காக, அவர் செய்த பல நல்ல காரியங்களை மறந்து விட முடியாதல்லவா? ஆயினும், ஒரு சுத்த வேளாள, உயர்குடி இந்து எனத் தன்னை எடை போட்டுவைத்த ஒருவர், 'விவிலிய வேதத்தை' மொழிபெயர்த்தார் என்பதும்,ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காக, வீடு வீடாக நடந்து பிடியரிசி சேர்த்தார் என்பதும், அவர் ஒரு பக்குவ நிலையை அடைந்த பிறகு, தனது பாதையை மாற்றிக்கொண்டார் என்பதும் தானே உண்மை! அதன் பின்பும் அவரது பழைய செயல்களை வைத்து அவரை அடையாளம் காண முற்படுவது சரியானதா?

 

அதே போலத் தானே, மாகாத்மா காந்தியின் சத்திய சோதனை வாசிக்கும் போது, ஆரம்பத்தில் மட்டுமல்ல, பல இடங்களில் முகம் சுழிக்கும் வண்ணம் நடந்து கொள்ளுகின்றார்! ஆனால், சரியான பாதையொன்றைத் தெரிந்தெடுத்த பின்னர், தனது பிழைகளை அவர் ஏற்றுக்கொள்கின்றார்! என்னைப் பொறுத்த வரையில், காந்தியின் மூத்த மகன், ராம் லால், குடிகாரனாக மாறியதற்கும், கஸ்தூரிபாயின் மரணத்துக்கும், காந்தியின் பிடிவாதமே காரணமாக இருந்தது ! ஆனால் பிற்காலத்தில், சரியான பாதையைத் தெரிந்தெடுக்கிறார்!  அதனால் ஒரு மனிதரது, சில செயல்களை வைத்து, அவரைப் பற்றித் தீர்ப்பெழுதுவது சரியானதல்ல என்றே நினைக்கிறேன்!

 

இன்றைக்கு ஒரு 'யுக புருஷராக' உயர்த்தப்பட்டு நிற்கும், நெல்சன் மண்டேலா கூட, ஆரம்ப காலத்தில் மட்டுமன்றி, வெகு அண்மைக்காலம் வரை, ஒரு பயங்கரவாதியாகக் கருதப்பட்டவர் அல்லவா? அவரை, அவரது ஆரம்பகால வாழ்க்கையை வைத்து, எடை போடுவது தவறல்லவா? ஒருவரது பிறப்பு நிலையாலும், அவரது சூழ் நிலைகளாலும், மட்டுமே அவரது ஆரம்ப கால வாழ்க்கை, தீர்மானிக்கப்படுகின்றது! சில வேளைகளில் வாழ்வின் இறுதிவரை அந்த ஆரம்ப கால சூழ்நிலைகள், ஒரு மனிதனைக் கட்டுப்படுத்துகின்றன!

 

அத்துடன் பாரதியார் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்! வருணாச்சிர தர்மமே, அவரது வாழ்க்கை முறையாகவும், அக்கிரகாரமே அவரது வளர் சூழலாகவும் நீண்ட காலம் இருந்திருக்கின்றது! ஆனால், பிந்திய காலங்களில் அவர் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்றிருக்கின்றார் எனவே எண்ணுகின்றேன்!

 

அத்துடன், கவிஞர்களின் மன நிலை, பல வெளிகளில் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பதால், அவர்களது கருத்துக்களும், செயல்களும் பலரால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதே வழமை! கவிஞர் கண்ணதாசனில் இருந்து கவியரசு வைரமுத்து வரைக்கும் இது தான் நிலையாக இருந்துள்ளது! 

 

ஒரு விதத்தில், தன்னினச் சேர்க்கை போன்றதே இது! ஒரு தன்னினச் சேர்க்கையாளர் எனக்கருதப்படும் ஒருவரை, நாம் பிழையென விமரிசிக்கின்றோம்! ஆனால், உண்மையில் அவர்களது 'மூளை' அவ்வாறு தான் தொழிற்படுகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம்!

 

அதே போலத்தானே, பாரதியாரைப் பற்றி நாம் புரிந்து கொள்ளும் விதமும் உள்ளது! :D

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொழுதுப் போக்க நீயொன்றும் -சும்மாப்

புளுக வேண்டாம்; ஏ மனமே!

போதைத் தரும் புகழுக்கு -அதிப்

பேதையென அலைய வேண்டாம் மனமே!

அடுத்தவர் அங்கீகரிக்க வேண்டுமென -அனுதினமும்

பிடித்ததெல்லாம் பேயெனச் செய்யாதே மனமே!

தடுத்தவர் கூறினாலும் கருத்தைத் தவறென

மறுத்தவர் கூறினாலும் அதுன்னை -வந்து

வருத்துவதும் வீணே; என்றுணர்வாய் மனமே!

கருத்து தனைக்கூற உனக்கிருக்கும் உரிமை

மறுத்தவர்கூற மட்டுமல்லாது போகுமோ மனமே!

அங்கீகாரம் வேண்டுவதும் ஆணவத்தின் தூண்டுதலே

அகங்காரம் கொண்ட அற்பமனமே - நினது

அகமழிய; வேண்டாம் அப்படியொரு ஆறுதலே!

உங்கருத்தை அங்கீகரித்தாலும்; இங்கீகரித்தாலும் மனமே

ஆங்கதவர் அனுமானமோ; அபிப்ராயமோ அன்றி

ஈங்கிது இறுதியான உறுதியான சரியான

ஓங்குயர் கருத்தென்று நெகிழ்ந்துழலாதே மனமே!

ஆதித இளம்பிறையன் பாரதியார் உண்மையாக நடந்தவரா என்ற சந்தேகத்தைத்தான் விளைக்கிறாரேயல்லாமல் கோழையாக இருந்தார் என்று விளங்கவைக்கவில்லை. பாரதியார் கோழையாக இருக்கத்தான் சந்தர்ப்பம் கூட.

 

நீங்கள் நரியை பாருங்கள். துணிச்சலாக சாப்பாட்டு நேரம் மட்டும் திருடும். அதை பார்த்து நாம் வீரம் என்று பேசுவதில்லை அதை மூளையானது என்றுதான் சொல்வோம். ஆனல் நாயை பாருங்கள். பெரிய யானையை கண்டால் கூட பயப்படாமல் சென்று எதிர்க்கும். கிடைத்தால் காலில் கடித்துவிடும். அதை நாம் வீரமான நாய் என்போம்.

 

மனிதரின் வீரம் சற்று வேறுபட்டது. வழமையில் வீரத்தில் ஒருபாகம் துணிசலாக முன்னால் சென்று விவேகமாக வழிநடத்துவது. அஞ்சாமையும் தலைமைத்துவமும் இணைந்தால் மட்டும்தான் வீரம் பிறக்கும். எல்லாளன் துட்ட கைமுணுவுடன் தனி போருக்கு அழைத்து தன் மக்களை காத்த தலைமைத்துவம் தான் அவனை மோட்டுத்தனமாக மாண்ட முட்டாள் என்ற இழிச்சொல்லில் இருந்து காத்து வீரனாக காட்டுவது. இல்லையேல் சாக நினைத்து தற்கொலை செய்பவனும் வீரனாக காண்ப்படுவான்.

 

பாரதி வீர வசனகளை பேசினார் என்பதால் வீரானாக வர முடியாது. பாரதி வாழ் முழுவதும் விட்ட பிழைகள் தான் அவரின் குடும்பம், அவர் இறந்த பின்னர் காற்றில் பறக்க வேண்டி வந்தது.  பாரதி நின்று நிதானமாக சிந்தித்து  முன்னால் சென்று வழி நடத்தி அதனால் வரும் பலன்களை காணாமல், தான் ஒழித்து திரிந்ததால்த்தான் கோழை ஆகிறார்.

Edited by மல்லையூரான்

புங்கை உங்கள் உள்ளத்தில் பாரதி பற்றிய பிம்பம் வேரூன்றி விட்டது. அவ்வளவு சீக்கிரமாக அகற்ற மாட்டீர்கள் :)

பாரதியை தூற்றும் எண்ணம் எனக்கு கிடையாது. நான் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே என் எண்ணம். நானறிந்த வரையில் பாரதி இளமையில் முற்போக்கு கருத்துக்களை எழுதியவராகவும் கடைசி காலத்தில் பெண்ணடிமைக் கருத்துக்களையும் சாத்திய ஆதரவாளராகவும் இருந்துள்ளார்.

1882 --> டிசம்பர் 11 பிறப்பு

1897 -->  தனது  14 ½ வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண்டார்.

1904 --> தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடல்

 

1908 --> பெண்விடுதலை பற்றிய பாடல்

1910.--> உடன் கட்டையை ஆதரித்து  'கர்ம யோகி ' இதழில்எழுதிய காலம்

1910 --> தமது சுயசரிதையில் பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என மனுதர்மம் சொல்லி இருக்கிறது. ஆனால் தந்தையோ உடல் வேர்க்க வேலை செய்ய நேர்ந்ததே என நொந்து கொள்ளும் சாதியபிமானம் குறிப்பிடத்தக்கது.

1912  --> கீதையை தமிழில் மொழிப்பெயர்த்த காலம்

1917 --> இந்த உலகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர  மீண்டும் நால்வருணம் தோன்ற வேண்டும் என்று ஞானரதத்தில் எழுதிய காலம்

1919 --> தேசபக்தராகிய பாரதி ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்து ஒரு வார்த்தை கூட எழுதாமல் ஆங்கிலேயப் பேரரசர் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்தித்து ' ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்த காலம்

1920 --> பார்ப்பனர்கள் எந்தச் சாதியில் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் ஆனால் பார்ப்பனப் பெண்களைப் பிற சாதியில் திருமணம் செய்விக்கப் கூடாது என்ற விவாதத்தின் பின்னணியில் கடையத்தில் இருந்த நாராயணப் பிள்ளை என்பவருடன் சண்டை போட்டு  கடயத்தை விட்டு வெளியேற்றப்பட்ட காலம்

1921 --> அரசு பொது வேலைகளிலும், கெளரவ உத்தியோகங்களிலும்  பிராமணரல்லாத சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை எதிர்த்து சுதேசமித்திரனில் எழுதிய காலம்

1921 --> செப்டம்பர் 11 இறப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், ஆதித்தன்!

 

நீங்கள் சொல்வதில், உள்ள உண்மைகளையும் உள் வாங்க முயல்கின்றேன்! :D

 

ஒளி நேர்கோட்டில் பயணிக்கிறது என்று தான் நாங்கள் படித்த காலத்தில் சொல்லித்தந்தார்கள்!

 

இப்போது கொஞ்சம் வளர்ந்து விட்ட 'ஆய்வுகள்' ஒளி நேர்கோட்டில் தான் பயணிக்கின்றது என்பது முற்றிலும் சரியானது அல்ல! அது சில வேளைகளில், வளைந்தும் பயணிக்கிறது என சில நட்சத்திரங்களில் இருந்து வரும், ஒளிக்கீற்றுகளின் பாதைகளை, ஆராய்ந்த போது தெரியவருகின்றது என்று கூறுகின்றன! 

 

ஆய்வு என்ற போர்வையில், தமிழனுக்கு என்றே தனித்துவமாக இருந்த வாழ்விடங்களையும், பண்டிகைகளையும்,, தெய்வங்களையும், தனது மொழியையும் கூடத் தமிழன் இழந்து வரும் நிலையில், அவனது இருப்புக்கான ஆதாரங்களுடன் வரும் ஆய்வுகள் அனைத்தும் ஓரங்கட்டப்படுகின்றன அல்லது பொய்யான ஆய்வுகளால் மறுதலிக்கப் படுகின்றன!

 

அதனால் தான் இருப்பவற்றையாவது தக்கவைத்துக் கொள்ளும் ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடே, எனது கருத்தாக அமைந்தது!

 

மற்றும்படி, கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதில் எனக்கும் உடன்பாடில்லைத் தான்! :D

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.