Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல தமிழக வார இதழ் செய்தியாளர் இலங்கைப் படையினரால் கைது - குளோபல் தமிழ் செய்தியாளர்:-

Featured Replies

மகா தமிழ் பிரபாகரன் சென்னை வந்தடைந்த செய்தி புதிய தலைமுறை தொலைக்காட்சியில்.

 

 

(facebook)

Edited by துளசி

  • Replies 77
  • Views 4.5k
  • Created
  • Last Reply

என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் பதில் சொல்ல வேண்டி வரும் - தமிழ் பிரபாகரன்

 

maha_tamil_pirabaharan_2.jpg

 

என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு நாடுகடத்தப்பட்ட ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன் கூறியுள்ளார். சென்னை வானனூர்த்தி நிலையத்தில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

என்னை உறங்க விடாமல் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. அது விதி முறையே இல்லாத நாடு. ஜனநாயகம் இல்லாத நாடு. நான் ராணுவத்தினர் முன்னர்தான் புகைப்படம் எடுத்தேன். மறைந்து நின்று எடுக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு படையினர் நான்காவது மாடியில் இன்னமும் விடுதலை புலிகளை சேர்ந்தவர்களை அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டி இருக்கும். அத்துடன் தனது விடுதலைக்கு குரல் கொடுத்த பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சிகள் அனைத்திற்கும் அவர் நன்றி கூறுவதாகவும் மகா. தமிழ் பிரபாகரன் மேலும் கூறியுள்ளார்.

 

http://www.pathivu.com/news/28805/57/d,article_full.aspx

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Maga Tamizh Prabhagaran தம்பியை வரவேற்க சென்றிருந்தேன். தம்பியை மூன்று நாட்கள் தூங்கவிடாமல் விசரணை என்ற பெயரில் துன்புறுத்தியிருக்கின்றனர். குடிக்க கெட்டுப் போன தண்ணியையும், பெட்ரோலையும் கொடுத்திருக்கிறார்கள் சுட்டிக் காட்டியபொழுது தவறுதலாக நடந்து விட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.

4 நாட்கள் மனரீதியாக துன்புறுத்திவிட்டு எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட பகுதிகள் எதையும் படமெடுக்கவில்லை, என்பது தெளிவாக தெரிந்தாலும் வேண்டுமென்றே துன்புறுத்தியுள்ளனர். உடல்ரீதியாக எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை..

தம்பி நலமாக வந்து சேர்ந்தார்... ஆனால் இலங்கை அரசின் ஊடக சுதந்திரமும், மக்கள் அங்கு நலமாக சுதந்திரமாக இருக்கிறார்கள் என்ற பொய் பித்தலாட்டங்களும் அம்பலம் ஆகியுள்ளது....

 

Hari Haran

(facebook)

கமருன், சனெல்-4, ஜக்கி பார்க், அவுஸ்திரேலிய பா.உ. லீ ரீயனன் போன்ற்வர்களை வெளியேற்றிய பின்னர் இது நடந்திருக்கு. எனவே  மகா தமிழ் பிரபாகரன் வரும் மார்ச்சு மாதம் ஜெனீவா போக ஆயத்தப்படுத்த வேண்டும். பொது அமைப்புக்கள் அவருக்கு இந்த வசதியை செய்து கொடுக்க வேண்டும். தமிழர் இன்னமும் நாலாம் மாடியில் துன்புறுத்தப்படுவது கேட்க வேதனையான விடையம். 

“தண்ணீருக்கு பதில் பெட்ரோல் வைத்தார்கள்”: தமிழ் பிரபாகரன்

 

131228162313_tamil_mahaprabakaran_304x17

 

விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் ம.க. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உளவியல்ரீதியில் துன்புறுத்தியப்பட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

செவ்வியை முழுமையாக ஒலிவடிவில் கேட்க: http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131228_tamilprabakaran.shtml

Edited by துளசி

பச்சை பொய் சொன்னவருக்கு நாலு கொடுத்து அனுப்பாமல் விட்டு விட்டார்கள், இவரை கொண்டு திரிந்த சிறிதரனை மூன்று நாலு மாதங்கள் உள்ளுக்க போட்டால் சரிவருவார் .

இருவரும் BBC  யில் வந்து தமிழர்களின் மானத்தை வேறு வாங்கிவிட்டார்கள் .வாயை திறந்தால் பொய்யும் புரட்டும் .

மானம் கெட்ட தமிழ் வியாபாரிகள் .

எது அண்ணை பச்சை பொய்?

இருவரினதும் BBC நேர்காணல் கேட்டேன் ,இருவர் சொன்னது அத்தனையும் பொய் .

உங்களுடன் இதை பற்றி பெரிதாக விவாதிக்க விரும்பவில்லை .

இவர் சுற்றுலா விசாவில் தான் சென்றார் ,அது பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அழிக்கவில்லை .

சிறிதரனுக்கு இவர் ஒரு பத்திரிகையாளர் என்று தெரியாதாம் . வாசிக்க தெரியாதோ என்னவோ ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருவரினதும் BBC நேர்காணல் கேட்டேன் ,இருவர் சொன்னது அத்தனையும் பொய் .

உங்களுடன் இதை பற்றி பெரிதாக விவாதிக்க விரும்பவில்லை .

இவர் சுற்றுலா விசாவில் தான் சென்றார் ,அது பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அழிக்கவில்லை .

சிறிதரனுக்கு இவர் ஒரு பத்திரிகையாளர் என்று தெரியாதாம் . வாசிக்க தெரியாதோ என்னவோ ? 

அர்ஜூன்,

 

மொத்தத்தில் மகா தமிழ் பிரபாகரனை சிங்களவன் வெளியே விட்டது உங்களுக்கு கவலையாக உள்ளதாக்கும்  

ஒரு பெறுமதியான ஆளைத்தான் அவனும் வைத்திருப்பான் . :icon_mrgreen: .

புலியையே அடித்து விழுத்தியவனுக்கு பல்லி பூச்சிகள் எம்மாத்திரம் . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெறுமதியான ஆளைத்தான் அவனும் வைத்திருப்பான் . :icon_mrgreen: .

புலியையே அடித்து விழுத்தியவனுக்கு பல்லி பூச்சிகள் எம்மாத்திரம் . 

புலியை அடித்து விளுத்தினவன் பல்லியையும் பூச்சியையும் கண்டு ஏன் பயப்படவேண்டும் அர்ஜூன்   :icon_mrgreen:  

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெறுமதியான ஆளைத்தான் அவனும் வைத்திருப்பான் . :icon_mrgreen: .

புலியையே அடித்து விழுத்தியவனுக்கு பல்லி பூச்சிகள் எம்மாத்திரம் . 

 பெரியவர் இன்னைக்கு நேரத்திற்க்கே சுதி ஏறிட்டுதாக்கும் அச்சாபிள்ளையாய் போய் படுங்கோ புலியை எதிர்கிறன் என்று சொந்த வீட்டையே கொழுத்திற ஆக்களில் ஒருத்தர்  :unsure:

Edited by பெருமாள்

சொந்த வீட்டையே கொழுத்தியவர்கள் யாரென்று விளங்காமல் இப்ப எஞ்சி இருப்பது ஒரு பத்து வீதமும் இல்லை தம்பி .

மண்டேலாவின் மரணம் சொல்லிய செய்திகள் பல .நாமும் எவ்வளவு காலத்திற்கு எட்டுடன் நிற்பது :icon_mrgreen: .அடுத்த அடி வைக்கத்தானே வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த வீட்டையே கொழுத்தியவர்கள் யாரென்று விளங்காமல் இப்ப எஞ்சி இருப்பது ஒரு பத்து வீதமும் இல்லை தம்பி .

மண்டேலாவின் மரணம் சொல்லிய செய்திகள் பல .நாமும் எவ்வளவு காலத்திற்கு எட்டுடன் நிற்பது :icon_mrgreen: .அடுத்த அடி வைக்கத்தானே வேண்டும் .

உங்களுக்கு பதில் சொல்ல நானும் ஏதாவது போடவேனும் இன்று சனி ஆளை விடுங்க சாமி எஸ்கேப் ...............................................

புலியை அடித்து விளுத்தினவன் பல்லியையும் பூச்சியையும் கண்டு ஏன் பயப்படவேண்டும் அர்ஜூன்   :icon_mrgreen:  

 

கொசுத்தொல்லை தாங்கேலாமல் இருந்து இருக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

மகா தமிழ் பிரபாகரன் மீண்டு வந்தது, மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது.
அவ‌ரை  வரும் மார்ச்சு மாதம் ஜெனீவா போக ஆயத்தப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகா தமிழ் பிரபாகரன் மீண்டு வந்தது மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது..!

இவரைப்  பிடித்ததுவும் ஒரு சாதாரண சிங்களப் போலிசா?  இவரை விடுவிக்க பல சிறிலங்கா அரச பிரபலங்கள் வேலை செய்தார்களா? 

இவரின் செய்தியாளார் மானாட்டில் அறிந்து கொள்வோம்.

 

அண்மையில் நிமல் சிறிபால அமைச்சரின் மனைவி சொல்லி இருந்தார், தங்களின் வீட்டு நாயைக் கூடத் தங்களால் கோத்தாவின் கொலையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை என.

 

 

உண்மைக்கும், பொய்மைக்குமிடையான வித்தியாசம் வெளிவரும் காலம்.

மகா தமிழ் பிரபாகரனின் முகநூல் இணைப்பு இது. விரும்பியவர்கள் follow பண்ணுங்கள். https://www.facebook.com/magatamizh


கமருன், சனெல்-4, ஜக்கி பார்க், அவுஸ்திரேலிய பா.உ. லீ ரீயனன் போன்ற்வர்களை வெளியேற்றிய பின்னர் இது நடந்திருக்கு. எனவே  மகா தமிழ் பிரபாகரன் வரும் மார்ச்சு மாதம் ஜெனீவா போக ஆயத்தப்படுத்த வேண்டும். பொது அமைப்புக்கள் அவருக்கு இந்த வசதியை செய்து கொடுக்க வேண்டும். தமிழர் இன்னமும் நாலாம் மாடியில் துன்புறுத்தப்படுவது கேட்க வேதனையான விடையம். 

 

இந்த செய்தியை உங்கள் பெயரையும் குறிப்பிட்டு நேற்று அவருக்கு முகநூலில் message போட்டு விட்டிருந்தேன். இன்று 1.31am க்கு பார்த்திருக்கிறார்.
 

  • கருத்துக்கள உறவுகள்

.

அய்யா அவர் தெரியாத்தனமா போய்விட்டார் .. அதற்காக சிறிலொங்கா ஒட்டு குழுக்கள் கும்மியடிக்கும்  ஆட்கள் அவரில்லை

 

டிஸ்கி:
வில்வித்தையெல்லாம் காமிக்க ஒலிம்பிக்ஸ் .. இன்னும் நிறைய போட்டிகள் கிடக்கு அதுக்கு தயார் பண்ணாமா?

உங்க்ள் வீட்டு சாப்பாடு அதை இவர் அள்ளி திண்ண மாறி ஒரு பீலிங்கு...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஆங்கில ஊடகங்களும் செய்திகளை பிரசுரிப்பது வரவேற்க வேண்டிய விடையம்.

 

Deported Journalist Claims Torture in SL
 

Tamil Nadu journalist Tamil Prabhakaran arrived in Chennai on Saturday after the Sri Lankan Terrorist Investigation Division (TID) handed him over to the Immigration Department for deportation.

The TID had apparently concluded after interrogation that he had no terrorist links and had not indulged in terrorist activity, and that the only fault was that he had violated visa regulations.

Speaking to reporters at the Chennai airport, Prabhakaran claimed he was psychologically tortured and subjected to probe like a ‘criminal or terrorist’.

“I was subjected to psychological torture and repeatedly subjected to investigations like a criminal or a terrorist when I had done nothing wrong,” Prabhakaran said.

Prabhakaran, who had gone to Sri Lanka on a tourist visa, was detained on December 25 in Kilinochchi district in the former war zone of North Lanka by the local police. After overnight interrogation, they handed him over to the Terrorist Investigation Division, which took him to Colombo to find out why he was taking pictures of military installations and interviewing Tamil politicians when he was on a tourist visa.

While Lankan authorities asserted that he was doing journalistic work while being on a tourist visa and taking pictures of army camps and troops, Prabhakaran categorically denied taking pictures of any military area and said he had only captured a few photographs of certain civil functions.

“Even they were taken in the presence and knowledge of Lankan authorities and the arrest came much later,” the journalist said.

Officials of the Indian High Commission in Colombo were given consular access to the detainee and they had found him to be quite alright. After investigations, TID told the High Commission that Tamil Prabhakaran had no terror links but had violated visa regulations and, therefore, he would be handed over to the Immigration Department for deportation.

In Chennai, he said: “I was repeatedly interrogated and they kept me in handcuffs throughout my detention period, even when I was sleeping. I was subjected to emotional and psychological torture.”

Claiming that the Lankan authorities treatment of him was a violation of human rights, Prabhakaran said, “I was given petrol when I asked for water and was subjected to several more types of torture that are a clear violation of human rights. I will release proof for this shortly,” he added.

 

http://www.newindianexpress.com/cities/chennai/Deported-Journalist-Claims-Torture-in-SL/2013/12/29/article1970901.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Jz6-8RZXQv4

 

ம‌கா த‌மிழ் பிர‌பாக‌ர‌ன் சென்னைக்கு வர‌ முத‌ல், புதிய‌ த‌லைமுறை தொலைக்காட்சியில்.... நடந்த, ஒரு நிக‌ழ்ச்சி.
ஆர்வ‌ம்.... உள்ள‌வ‌ர்க‌ள் பாருங்க‌ள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... மௌனம்?
இந்த... ஒளிப்பதிவை, பற்றிய... உங்கள் கருத்துக்களை... பகிரலாமே.

நன்றி தமிழ்சிறி அண்ணா, நான் இப்பொழுது தான் பார்க்கிறேன். ஆரம்பத்தை பார்க்கும் போதே நல்ல விவாதம் போல் தோன்றுகிறது. :rolleyes:

மகா தமிழ் பிரபாகரன் bbc இல் கூறும்போது, சுற்றுலா விசாவில் வந்தால் மட்டுமல்ல ஊடகவியலாளராக வந்தாலும் இலங்கையில் பிரச்சினை தான் என கூறியிருந்தார்.

 

சேனல் 4, bbc போன்றன பொதுநலவாய நேரத்தில் ஊடகவியலாளர்களாக அனுமதி பெற்று உள்ளே நுழைந்த போதும் சேனல் 4 க்கு எதிராக அரசு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து அவர்களை திருப்பியனுப்பியது மற்றும் ஏனைய ஊடகவியலாளர்களையும் அங்கு சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்கவில்லை என்பதை ஆதாரமாக சுட்டிக்காட்டியிருந்தார். :rolleyes:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

முராரிக்கு அமைதிப்படை அடிவாங்கின கடுப்பு.. ஊடகவியலாளர் என்றால் சாக தயாராக இருக்கவேணும் என்கிறார்.. இலங்கையில் நாலாம் மாடி அநியாயம் என்கிறார்.. ஆனால் அதைப்பற்றி ஏதும் எழுதியதுபோல் தெரியவில்லை.. நாட்டுக்கு நாடு அநியாயம் சகஜம் என்கிறார்.. அதனால் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லையாம்.. இதுக்கு இவர் ஏன் பத்திரிகைத்துறையில் இருக்கவேணும்?? பேசாமல் பூசையாக்கப் போகலாம்தானே??! :D

மணி என்பவருக்கு மகா பிரபாகரன் திரும்பி வந்தால் காணுமாம்.. மிச்சத்தை பிறகு பார்க்கலாம் என்கிறார்..

தமிழ்நாடு தலையிட்டால் தங்களுக்குப் பிரச்சினை வருகிறது என்று விக்கி ஐயா சொன்னதாகச் சொல்கிறார்கள்.. ஆகவே தமிழ்நாடு மௌனமாக இருக்க வேணுமாம்.. தேவயானி விடயத்திலும் அதைக் கடைப்பிடிப்பார்களா?? :unsure: ஏற்கனவே ஒருதடவை துகிலுரிந்து விட்டார்கள்.. போராட்டம் பண்ணினால் தேவயானிக்குத்தான் இன்னும் மானம் போகும் என்று சொல்லியிருக்கவேணும்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, இசைக்கலைஞன் நீங்கள்... முன் வைத்த கருத்துக்களுக்கு நன்றி.
இன்னும்... சிலரது கருத்துக்களை, எதிர் பார்க்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின் முதல்தடவையாக யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.   கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு சென்ற அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை நேற்றும் இன்றும் சந்தித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நேற்றுமாலை சந்தித்த அவர் இன்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சிறிதரனை சந்தித்தார்.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சபாபதிப்பிள்ளை அகதி முகாமில் தங்கியுள்ள மக்களையும் அவர் சந்தித்தார். வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைவர் இவரை அகதி முகாமுக்கு அழைத்து சென்றார்.

ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட கனடிய குடியுரிமை பெற்றவராவார்.

http://www.thinakkathir.com/?p=55421

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.