Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது அருந்துவது தவறா ,???????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுவுக்கோ அல்லது போதைப்பொருளுக்கோ அடிமையானவர்கள் முதலில் செய்யும் காரியம் தாம் அடிமையாகிவிட்டோம் என்பதனை மறுத்தல்; அதற்கான காரணங்களைத் தேடுதல்.. :rolleyes: அண்மைய உதாரணம் ரொராண்டோவின் மேயர் Rob Ford .. :huh:

அவர்கள் அவ்வாறு தேடக்கூடிய காரணங்கள்.. :blink:

1) நான் வாரத்தில் இவ்வளவு மில்லிதான் குடிப்பேன்.. (நிழலி :lol: )

2) பைபிளில்கூட சொல்லப்பட்டுள்ளது. (த.சூ. :huh: )

3) வீட்டிலிருந்துதான் அடிப்பேன்..

4) நினைத்தால் விட்டுவிடுவேன்.

5) குடித்தால் நல்லா சாப்பிடவேணும்.. ஆமா.. :D

6) உடல் அசதிக்கு நல்லது.. (பெண்களுக்கு அசதி வருவதில்லை.. :huh: )

இப்படியான காரணங்களைத் தேடுவதை விட்டுவிட்டு மருத்துவரைப் பார்க்கப்போவது நல்லது.. :blink: குடிப்பழக்கத்தை ஒரு வியாதியாக அல்லோ வகைப்படுததியிருக்கினம்??! :o:rolleyes:

  • Replies 53
  • Views 6.7k
  • Created
  • Last Reply

...............எல்லாம் சரி இசை, நீங்கள் ஒரு கோப்பை வைன் தானும் குடிப்பதில்லையா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

...............எல்லாம் சரி இசை, நீங்கள் ஒரு கோப்பை வைன் தானும் குடிப்பதில்லையா? :rolleyes:

குடிப்பேனே.. :D அதுபோல பியரும் ஒன்றிரண்டு அடிப்பேன்.. :lol: எல்லாம் வீட்டுக்கு வெளியில்தான்.. :blink:

சிங்கையில் இருந்தபோது பலதடவைகள் மட்டையாகியுள்ளேன்..  :unsure: காரில் ஏற்றி அனுப்பப்பட்ட சம்பவங்கள் எல்லாம் உண்டு.. நண்பர்கள் குழாமில் இதெல்லாம் சகஜம்தானே.. :D ஆனால் அடுத்த நாள் தலையிடி வாழ்க்கை வெறுக்கப்பண்ணும்.. :huh:

கனடா வந்துவிட்டபிறகு வாகனம் ஓட்டுதல் பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு எதிர்ப்புகள் :icon_idea:கார‌ணமாக ஒரு வைன் அல்லது ஒரு பியருடன் நிறுத்திக்கொள்வது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மதுவுக்கோ அல்லது போதைப்பொருளுக்கோ அடிமையானவர்கள் முதலில் செய்யும் காரியம் தாம் அடிமையாகிவிட்டோம் என்பதனை மறுத்தல்; அதற்கான காரணங்களைத் தேடுதல்.. :rolleyes: அண்மைய உதாரணம் ரொராண்டோவின் மேயர் Rob Ford .. :huh:

அவர்கள் அவ்வாறு தேடக்கூடிய காரணங்கள்.. :blink:

1) நான் வாரத்தில் இவ்வளவு மில்லிதான் குடிப்பேன்.. (நிழலி :lol: )

2) பைபிளில்கூட சொல்லப்பட்டுள்ளது. (த.சூ. :huh: )

3) வீட்டிலிருந்துதான் அடிப்பேன்..

4) நினைத்தால் விட்டுவிடுவேன்.

5) குடித்தால் நல்லா சாப்பிடவேணும்.. ஆமா.. :D

6) உடல் அசதிக்கு நல்லது.. (பெண்களுக்கு அசதி வருவதில்லை.. :huh: )

இப்படியான காரணங்களைத் தேடுவதை விட்டுவிட்டு மருத்துவரைப் பார்க்கப்போவது நல்லது.. :blink: குடிப்பழக்கத்தை ஒரு வியாதியாக அல்லோ வகைப்படுததியிருக்கினம்??! :o:rolleyes:

உண்மையில்  இங்கு எழுதியிருப்பவற்றை  பார்க்க  பரிதாபமாக இருக்கு.....

நான்  நல்லவன்

ஆனால் மற்ற (குடிப்பவர்கள் குடிக்காதவர்கள்)  எல்லோரும் கெட்டவர்கள்

உண்மையைச்சொன்னால்

தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கமுடியாதவர்கள்

தன்னை

சுயநினைவுடன் இயக்கமுடியாதவர்கள் தான் இப்படி சொல்லி  தப்பிக்கமுடியும்.

நான் குடிப்பவர்களுக்கு எதிரானவன் கிடையாது

ஆனால் இப்படி நடிப்பவர்களுக்கு எதிரானவன்.

அத்துடன் ஒருவர் வெறியில் இருக்கிறார் என்றால்

அவருடன் எந்தவித முக்கிய பேச்சுக்களையும் நான் வைத்துக்கொள்வதில்லை. (என் தகப்பனார் உட்பட)

காரணம் அவர் எங்கே பேசுகின்றார்???

உள்ளே  போனவர்   பேசுகின்றார்

குடிகாரன் பேச்சு

விடிந்தால் போச்சு.........

சுருக்கமாக  ஒரு பதில்

அரசால் விற்கப்படும் அரசுக்கு அதிக வருமானம் தரும் ஒரு பொருளில் அதனை  தவிர்க்கும்படி ஏன் இத்தனை  அறிவுறுத்தல்கள்????????????????

  • கருத்துக்கள உறவுகள்

மது அருந்துவது தவறா ??????????????

தெர்லீங்கண்ணா!  :D

ஆனால் பைபிள் கூறுகிறது நீ திராட்சை மதுவை [இரசத்தை ] புசித்து உற்சாகமாய்,ஆனந்தமாய்  ஓய்வாய் இரு ,,,,,,,,,,,,,,,,,,,,,,

பயிபிள் எங்க கூறுது?   :rolleyes:

இது சூப்பர் பாட்டுங்கண்ணா! :D

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் கேள்வியே பிழை பிளேட்டை மாத்திப்போட்டு கேள்வியை முன் வையுங்க

மது அருந்தாமல் இருப்பது தவறா? அவற்றின் பாதிப்புகள் என்னென்ன இப்படி நீங்கள் கேட்டிருந்தால் இன்னும் கனபேர் இதில் கருத்திட்டிருப்பார்கள்.... :icon_mrgreen:  :icon_mrgreen:  :lol:

  • தொடங்கியவர்

பயிபிள் எங்க கூறுது?   :rolleyes:

என்ன சார் பைபிளை மீண்டும் தேட வச்சிட்டீங்க   :D
 
பழைய ஏற்பாட்டில் பிரசங்கி 9 ; 7 ஆவது வசனத்தை வாசியுங்க சகோ . :lol: .............அல்லேலூயா ....

மதுவுக்கோ அல்லது போதைப்பொருளுக்கோ அடிமையானவர்கள் முதலில் செய்யும் காரியம் தாம் அடிமையாகிவிட்டோம் என்பதனை மறுத்தல்; அதற்கான காரணங்களைத் தேடுதல்..

அண்மைய உதாரணம் ரொராண்டோவின் மேயர் Rob Ford ..

அவர்கள் அவ்வாறு தேடக்கூடிய காரணங்கள்..

1) நான் வாரத்தில் இவ்வளவு மில்லிதான் குடிப்பேன்.. (நிழலி

2) பைபிளில்கூட சொல்லப்பட்டுள்ளது. (த.சூ.

3) வீட்டிலிருந்துதான் அடிப்பேன்..

4) நினைத்தால் விட்டுவிடுவேன்.

5) குடித்தால் நல்லா சாப்பிடவேணும்.. ஆமா..

6) உடல் அசதிக்கு நல்லது.. (பெண்களுக்கு அசதி வருவதில்லை..

இப்படியான காரணங்களைத் தேடுவதை விட்டுவிட்டு மருத்துவரைப் பார்க்கப்போவது நல்லது.. :blink: குடிப்பழக்கத்தை ஒரு வியாதியாக அல்லோ வகைப்படுததியிருக்கினம்??! :o:rolleyes:

வன்மையாக கண்டிக்கிறேன் ............. :D  :D  

  • தொடங்கியவர்

வெள்ளிக்கிழமை ஆனதும் எண்டா இந்த கோதாரி திரியை திறந்தேன் என்றொரு உணர்வு ............ :( . :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை ஆனதும் எண்டா இந்த கோதாரி திரியை திறந்தேன் என்றொரு உணர்வு ............ :( . :D  :D

கவலைப் படாதீங்க... தானாச்சூனா,

வருசம் பிறந்ததில இருந்து, கன சனம் வைராக்கியத்தோடை இருக்குது.

இருந்து பாருங்க... ஒரு கிழமையிலை, எல்லாம்.... நோர்மலுக்கு வந்திடும்.

980 பார்வையாளர்கள், இந்தப் பதிவை பார்த்ததே... வெறி தானே... சாரி வெற்றி தானே... :D  :lol:

  • தொடங்கியவர்

அண்ணா எனக்கு வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமைதான் ,,,,,,,,,,,,,,அதில்  எந்த மாற்றமும் இல்லை .............ஏனனில் அதனால் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை ,வரவும் வராது என்று எனக்கு தெரியும் .....ஆனாலும் பலரது மனதை நோகடித்து விட்டேனோ என்றொரு மன ஆதங்கமே .அதுவும் வெள்ளிக்கிழமை மட்டும்தான் எனக்கு தெரியுது .மற்ற நாளில் இது ஒரு திரியா ...........என்றுதான் தோணுது ....... :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவு பலரும் எதிர்பார்த்த  பதிவு தமிழ்சூரியன்

ஆனால்  எழுதுகிறார்களில்லை

ஆனால் எமது தமிழ்சமுதாயத்தில் ஒரு பழக்கமுண்டு

அதன்படி பெரியவர்களை

அல்லது  மரியாதைக்குரியவர்களைக்கண்டால் குடிப்பவர்கள் ஒதுங்கி  விடுவர்

அது ஒரு மரியாதை அல்லது தனது பழக்கம் கெட்டது என்று அவர்கள் தம்மைத்தாமே நினைப்பதாக உள்ளது

அதன்படியே  தான் இதிலும்  பலர் விலகியுள்ளனர்

இந்த திரியில் நான் எழுதியதும் 

பலர் அதற்கு தங்கள் பக்க நியாயங்களை எழுதவில்லை

நீங்கள் உட்பட.

அதற்கு காரணமும் நான் மேலே  சொன்னது தான்.

இது எம்முடன் கூடப்பிறந்தது

வெளியில் வருவது அவ்வளவு எளிது இல்லை.....

  • தொடங்கியவர்

100 வீதம் உண்மை அண்ணா .............ஏனனில் எனது தந்தை ,[பரம்பரை] என்றே சொல்லலாம் இந்த குடிப்பழக்கம் அறவே கிடையாது .................அந்த சூழலில் அது எனக்கு நியாயமானதாக பட்டது ...ஏனனில் குடிப்பவர்கள் படும் பாட்டை ,கேட்டை நேரில் பார்த்தவன் .................ஆனால் என் மனச்சாட்சியை பொருத்தவரை நான் நானாக இருக்கும் போது இதை ஒரு உணவு போலவே பார்க்கிறேன் ...............இது வரை இதனால் நான் எந்த தவறான வழிக்கும் போகவில்லை .அதற்கென ஒரு கொள்கை போட்டு செயல்படுகிறேன் ...............இதன் மூலம் பல நன்மைகள் எனக்கு ,என் நாளாந்த வாழ்க்கைக்கு கிடைக்கிறது என்பதும் உண்மை .............நியாயப்படுத்துவதற்காக எழுதவில்லை ....................அதற்காக குடிப்பது 100 வீதம் சரி என்றும் நிறுவவில்லை ....................உண்மை .............. :)

  • கருத்துக்கள உறவுகள்

மது அருந்துவது /குடிப்பது /அடிப்பது எல்லாமே ஒழுங்கீனச் செயல்கள்தான். :wub: :wub: :wub:

இதில் அளவாகக் குடிப்பது, வீட்டுக்குள்ளேயே குடிப்பது என்ற தமக்குத் தாமே குற்ற உணர்வை தேற்றிக்கொள்ளும் நொண்டிச் சாக்குகள் வேண்டாம். :huh::(

மது அருந்துவது /குடிப்பது /அடிப்பது எல்லாமே ஒழுங்கீனச் செயல்கள்தான். :wub: :wub: :wub:

சரி, ஒழுங்கான செயல்கள் என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன?

இந்த ஒழுங்கு பற்றிய நியதிகள் எத்தனையாம் ஆண்டு, எவரால் எப்போது விதிக்கப்பட்டது? 

சக மனிதனுக்கு உணவு இன்றேல் ஜகத்தினை ஒழித்திடுவோம் என்றான் பாரதி. அவன் சொன்னது ஒழுங்கு என்றால் அதை கடைப்பிடிக்காதவன் ஒழுங்கீனனா? அல்லது குடிப்பவன் மட்டும் ஒழுங்கீனனா?

இன்னொரு மனிதனிற்கு அழிவு நிகழும் போது கை கட்டி வாய் பொத்தி நிற்பவன் ஒழுங்கீனனா அல்லது இப்படி வாய் பொத்தி நின்றும் குடிக்காமல் இருந்து கொண்டு இருப்பவன் தன்னை 'ஒழுங்கானவன்' என்று சொல்லலாமா?

அறம் நழுவி தன் சொந்த உறவுகளையே எதிரிக்கு காட்டிக் கொடுத்த ஒருவன் ஒரு பக்கம் இருக்கின்றான். நல்லா குடித்தும் அற நெறி பற்றி அறிவில்லாவிட்டாலும் எவனது வாழ்வையும் சூறையாடதவன் இன்னொரு பக்கம் இருக்கின்றான். இவர்களில் எவன் ஒழுங்கானவன், எவன் ஒழுங்கீனமற்றவன்?

இந்த கேள்விக்கு பதில் யாரும் தரமுடியாது என நினைக்கிறேன் நிழலி ................
 
...ஏனனில் எதைப்பற்றியும் தீர்ப்பிடும் பக்குவம்  எமக்கில்லை ,.......ஒரு பக்கத்தை பார்ப்பவன் மனிதன் ,பல பக்கங்களை பார்ப்பவன் இறைவன் ,................அப்பிடி பல பக்கத்தில் பார்க்கும் மனிதர்களும் உண்டு ..ஆனால் என் கேள்விக்கு இன்னும் அந்த மனிதர்கள் பதில் அளிக்கவில்லை .பார்ப்போம் ........... :)  :D
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடியானவன் வீட்டில் இருந்து வாரம் ஒருநாள் மன அமைதிக்காக குடிப்பவன். குடித்தால் மகிழ்வாக ஒன்றிரண்டு கதைகள் பேசிவிட்டு நன்றாக சாப்பிட்டுவிட்டு நன்றாக நித்திரை கொள்வான். அடுத்த வாரத்தை புதிய உற்சாகத்துடன் எதிர்கொள்வான்..

அன்று ஒரு சனிக்கிழமை.. நண்பர்களை அழைத்து மது கொண்டாட்டம் ஒன்றை செய்துவிட்டு தூங்கச் செல்கிறான்.

நடு நிசியில் யாரோ நடந்துவரும் சத்தம். :unsure: குடியானவனால் எதையும் கிரகிக்க முடியவில்லை.. மனைவி எழுப்புகிறாள் இவனை..

"ஐயோ.. கள்ளன் வந்திட்டான் போலை இருக்கப்பா.."

குடியானவனுக்கு போதை மயக்கத்தில் அரைகுறை நினைவில் புரிந்தும் புரியாததுபோல் இருந்தது..

"சும்மா கிழவழி.. அழு வேழை ஏழோ".. உளறிவிட்டுப் படுத்துக்கொண்டான் குடியானவன்..

"ஐயோ.. குடிச்சுப்போட்டு இப்பிடி படுத்துக் கிடக்கிறீங்களே.. நீங்கள் ஒரு ஆம்பிளைதானே??"

அவ்வளவுதான்..! எங்கிருந்துதான் அவ்வளவு ஆக்ராசம் வந்ததோ.. தட்டுத்தடுமாறி எழுந்து போய் ஒவ்வொரு அறையாக நோட்டம் விட்டான். சமையல் அறையில் ஜன்னல் திறந்திருந்தது.. எட்டிப் பார்த்தான்.. ஒரு உருவம் ஏணி வழியாக இறங்கியதுபோல் தெரிந்தது.. வந்த ஆத்திரத்தில் அருகில் இருந்த அம்மிக்குழவியை ஏணியில் உருட்டிவிட்டான் குடியானவன்..

"ஆஆஆஆஆஆஆஆஆஆ.........." :huh:

இப்போது நீதிபதி முன் நிற்கிறான் நம் குடியானவன்..

நீதிபதி: உங்கள்மேல் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்கிறீர்களா??

குடியானவன்: இல்லை கனம் கோர்ட்டார் அவர்களே..

நீதிபதி: சற்று விளக்கமுடியுமா??

குடியானவன்: வந்திருந்தது திருடன் என நினைத்துவிட்டேன்.. குடும்பத்தையும் என்னையும் தற்காத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தேன்.

நீதிபதி: ஏணியில் நின்ற ஒருவரால் என்ன ஆபத்து? அவசர உதவி சேவையை நாடியிருக்கலாமே..

குடியானவன்: ?

நீதிபதி: கொலை செய்யும் நோக்கமோ அல்லது திட்டமிடுதலோ உங்களிடம் இல்லாவிட்டாலும் இன்னொரு உயிர் பறிபோக காரணமாகிவிட்டீர்கள்.. உங்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடுகிறேன்..

குடியானவனுக்கு வெறி இல்லாமலே மேலே தூக்கினமாதிரி இருந்தது..

மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.. "குடி குடியைக் கெடுக்கும்..! " :blink::D

  • தொடங்கியவர்

அருமையான கதை :lol: ..............ஒரு புத்தகமே வெளியிடலாம் ........ :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

தன் குடும்பம் உட்பட அடுத்தவர்களின்  சுதந்திரத்துக்கு பங்கம் விளைவிக்காத வரை, தன்னையும் கூட சிரமத்துக்கு உள்ளாக்காதவரை  தப்பில்லை.

இந்நாடுகளின் குளிர் கால நிலைக்கு ஆகிருதியான இந்நாட்டு மக்கள்  இருபாலாருமே வேலைக்கு அப்புறம் மதுவை நாடுகின்றனர். நான் பார்த்த வரையில் கடினமான வேலைகள் செய்பவர்களுக்கு அது தேவையாயும் அவசியமானதாயும் இருக்கு. அதே நேரம் மூளையுடன் சம்பந்தப்பட்ட மென்மையான வேலை செய்பவர்கள் வீம்புக்கு நிறையக் குடிக்கக் கூடாது.

ஜெயகாந்தனின் ஒரு புத்தகம், பெயர் ஞாபகம் இல்லை சில சமயம் நீங்களும் படித்திருந்தால் மறந்திருக்க மாட்டீர்கள்! அதில் இருவருக்குள்  ஒரு விவாதம்,

"why want we avoid the ligkars "  ஏன் நாங்கள்  மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மது அருந்துபவர் செய்யும் தவறுகளால் ( வாகன விபத்து, பாலியல் வல்லுறவு, வீதிச் சண்டைகள் போன்றவை) அவருக்குத் தன்டனை தரும் பட்சத்தில் நீதியும் மயங்குகின்றது என்பதே!

ஒரு நல்ல மனிதன் என்பவன்  தான் ஒரு தவறு செய்தால் , அதன்  முழுப் பொறுப்பையும் அவன் ஏற்க வேன்டும். தட்டிக் கழிக்க முடியாது, கூடாது. ஆனால் போதையில் இருப்பவர் விடயத்தில்  அதில் தடுமாற்ரம் உண்டாகின்றது. ( வீட்டிலும் நடந்திருக்கும் , அடி நான் வெறியில அப்படிச் சொல்லிப் போட்டன்டி மறந்திடு, மறக்க முடியுமா ? தீயினால் சுட்டது உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.)  உறவினர்களிடத்தில் நடந்திருக்கும்.

   அம்மாவும் விலக்கல்ல அப்பாவும் விலக்கல்ல ,   நன்பர்கள் மட்டும் விதிவிலக்கு , ஏனெனில்  நன்பேன்ன்ன் டா ஆ ஆ ஆ ..... !!!  :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை :lol: ..............ஒரு புத்தகமே வெளியிடலாம் ........ :D  :D

இந்தக் கதைக்கு நெடுக்கின் பதில் என்னவாக இருக்கும்?

"குடியானவனை தூண்டிவிட்ட மனைவிக்கு என்ன தண்டனை? :( "

:D

  • தொடங்கியவர்

இந்தக் கதைக்கு நெடுக்கின் பதில் என்னவாக இருக்கும்?

"குடியானவனை தூண்டிவிட்ட மனைவிக்கு என்ன தண்டனை? :( "

:D

நெடுக்ஸ் இன்னும் இந்த திரிக்கு வரவில்லை ,அவரை அவசரமாக அழைக்கிறோம் ... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

மது அருந்துவது ஒழுக்கம் சம்பந்தப் பட்டது என்பதை விட உடல் மன ஆரோக்கியம் சம்பந்தப் பட்டது என்பதால் நான் மதுவை விலக்கினேன். (பியரில் ஆரம்பித்து, மெண்டிசுக்குத் தாவி, ஜின், ரெகீலா, வொட்கா என்று உச்சம் தொட்ட பிறகு கை விட்டேன்!) இதையே என் உறவுகள் நண்பர்களுக்கும் சொல்லி வருகிறேன்.

தானா.சூனா: திரி துவங்கின உடனேயே நான் 20 வருடம் முன்பு எழுதின ஒரு கட்டுரையை தனி மடலுக்கு அனுப்பி வைத்தேனே? என்ன ஓய் செய்தீர் அந்தக் கட்டுரையை? வெள்ளிக் கிழமை தண்ணிக்கு ரேஸ்ற் பரப்பி வைக்கப் பாவித்து வீட்டீரா? :D  நேர்மையான மாற்றுக் கருத்துகளை அனுமதிப்பவராக இருந்தால் உடனடியாக அந்தக் கட்டுரையை இங்கே இணையும் பார்க்கலாம்! :lol:

த.சூ.. உடனே நீங்கள் அந்தக் கட்டுரையை வெளியிடவேணும்.. இல்லாவிட்டால் கமலேஷ் சர்மா, பான் கி மூன் மற்றும் உங்களுக்குள் என்ன வித்தியாசம்?? :icon_mrgreen:

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்

மது அருந்துவது ஒழுக்கம் சம்பந்தப் பட்டது என்பதை விட உடல் மன ஆரோக்கியம் சம்பந்தப் பட்டது என்பதால் நான் மதுவை விலக்கினேன். (பியரில் ஆரம்பித்து, மெண்டிசுக்குத் தாவி, ஜின், ரெகீலா, வொட்கா என்று உச்சம் தொட்ட பிறகு கை விட்டேன்!) இதையே என் உறவுகள் நண்பர்களுக்கும் சொல்லி வருகிறேன்.

தானா.சூனா: திரி துவங்கின உடனேயே நான் 20 வருடம் முன்பு எழுதின ஒரு கட்டுரையை தனி மடலுக்கு அனுப்பி வைத்தேனே? என்ன ஓய் செய்தீர் அந்தக் கட்டுரையை? வெள்ளிக் கிழமை தண்ணிக்கு ரேஸ்ற் பரப்பி வைக்கப் பாவித்து வீட்டீரா? :D  நேர்மையான மாற்றுக் கருத்துகளை அனுமதிப்பவராக இருந்தால் உடனடியாக அந்தக் கட்டுரையை இங்கே இணையும் பார்க்கலாம்! :lol:

அகா ஆகா ...............இப்ப ஜனவரிதானே நடக்குது .........ஜூன் மாதம் தான் எமக்கு கஷ்டமான காலம் என்று நினைத்தேன் ....உண்மையில் ஜோதிடம் பொய்யப்பா ,,,,,,,,,,,,,,,,, :D  :D
 
ஜஸ்டின் அண்ணா அதை இங்கே இணைக்க நான் எடுத்த எல்லாமுயற்சிகளும் வீனாகிப்போய் விட்டது .துளசியிடமும் கேட்டுப்பார்த்தேன் எப்பிடி இணைக்கலாம் என .................உண்மையில் முடியல .................ஆனால் எனக்கு நேரம் கிடைக்கும் பொது அதை டைப் பண்ணி நிச்சயம் இங்கே இணைக்கிறேன் .................. :D

த.கூ.. உடனே நீங்கள் அந்தக் கட்டுரையை வெளியிடவேணும்.. இல்லாவிட்டால் கமலேஷ் சர்மா, பான் கி மூன் மற்றும் உங்களுக்குள் என்ன வித்தியாசம்?? :icon_mrgreen:

அய்யய்யோ இப்ப இரண்டு பக் அடிக்கணும் போல இருக்கு .........அவ்வ்வ்வ்வ்வ்  :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிக்குச் சொன்னன்! அதில் உள்ள விடயங்கள் இன்னும் உண்மை என்றாலும் கட்டுரை 20 வருடம் பழசு, தட்டச்சு செய்து மினக்கட வேண்டாம். மூளையுடன் மதுவினால் பாதிக்கப் படும் எல்லா உறுப்புகளையும் உள்ளடக்கி நானே ஒன்று எழுதி இங்கே போடுறன்!வாசித்த பிறகு அனேகமாய் வெள்ளிக்கிழமை சரக்கு குடலைப் பிடுங்கும்! அது வரை குடியில் திளைத்திருக்கவும்! :D

நன்றி அண்ணா ................. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.