Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சா கடைகளைத் திறந்த அமெரிக்கா; அலைமோதும் கூட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

img1140102014_1_1.jpg
 
FILE

பொருளாதார சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், உழைக்கும் மக்கள் மீது அடக்குமுறை என்று அராஜக ஆட்சி நடந்து வரும் அமெரிக்காவில் மக்களை நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்த கஞ்சா கடைகளை வேறு திறந்து விட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தில் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் சில்லரை கடைகளிலும், ஒரு சில மருந்து கடைகளிலும் அரசின் அங்கீகாரத்துடன் கஞ்சா விற்பனை செய்ய கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.

21 வயதை கடந்த ஆண், பெண் இருபாலரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அனுமதி பெற்ற இந்த கடைகளில் அதிகபட்சமாக 28 கிராம் கஞ்சா வாங்கிக் கொள்ளலாம் என கொலோராடோ மாநில அரசு அறிவித்தது. இதன் மூலம் கள்ளச் சந்தை கஞ்சா விற்பனையை ஒழித்துவிட முடியும் என அரசு கருதுகிறது.

மேலும், கஞ்சா கடைகளுக்கு அனுமதி அளிக்க வசூலிக்கப்பட்ட லைசன்ஸ் கட்டணம் மற்றும் விற்பனை வரியின் வாயிலாக அரசின் வருமானமும் பெருகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வகையில் முதல்கட்டமாக 348 சில்லரை கடைகளுக்கு கஞ்சா விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொலோராடோ மாநிலத்தில் தற்போது கடுமையான பனி பெய்து வருகிறது. குளிர் வாட்டி வதைப்பதால் கஞ்சா விற்பனை செய்யும் கடைகளின் வாசலில் புத்தாண்டு தினமான நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்ததை காண முடிந்தது.

கொலோராடோவையடுத்து வாஷிங்டன் மாநிலத்திலும் விரைவில் அரசின் அனுமதி பெற்ற கஞ்சா கடைகள் திறக்கப்பட உள்ளன. வாழ்க அமெரிக்க ஜனநாயகம், வாழ்க அமெரிக்க சுதந்திரம்!!

http://tamil.webdunia.com/newsworld/news/international/1401/02/1140102014_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் அராஜக ஆட்சி.. இந்தியாவில் ஜனநாயக ஆட்சி..! : :D

வலிப்பு நோய்க்கு கஞ்சாவின் வடிப்பு ஒன்று (extract) மிகுந்த பலன் தருவதாகவும் கொலராடோவில் மட்டுமே மருத்துவரீதியில் இவை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வானொலி நிகழ்ச்சியில் சொன்னார்கள்..! கனடாவில் இருந்து சென்றவர்களும் பலன்பெற்றுள்ளார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு இந்திய மீடியாக்கள் அமெரிக்காவை  வெறும்வாயால் கூப்பிட்டு போர் புரிவார்கள் இதுவும் ஒஸ்ரேலியன் கதை மாதிரி படுத்திடும்.



 
Partygoers smoke marijuana during a Prohibition-era themed New Year's Eve party celebrating the start of retail cannabis sales
1 / 2
v2-Colorado-AP.jpg
×
 
 

http://www.independent.co.uk/news/world/americas/pot-smokers-in-colorado-welcome-green-wednesday-as-marijuana-sales-become-legal-9032624.html

 

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. கரிக்கோச்சிகூட தோத்திடும் போலை இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு திரும்பியதும் ..... இது பற்றி விபரமாக எழுதுகிறேன்.

கஞ்சா ஒரு அரு மருந்து.

இது வரை ஆராய்சிகள் பல அனுகூலங்களை வெளிபடுத்தி இருக்கிறது.

குலக்கொமா கண் வியாதி, சலரோகம், வயிற்று வலி , மன தளர்ச்சி போன்றவைக்கு பக்கவிளைவு இல்லாத அருமருந்து.

கான்சருக்கும் இது தான் மருந்து. கஞ்சாவில் உள்ள டி.எச்.சி பழைய மற்றும் வலுவிழந்த செல்களை அழிக்கும் அதனால் அந்த செல்களில் கான்சர் வளர்வது தடைப்படும்.

25 வயது வரை புகைப்பதை தவிர்க்கவேண்டும். அந்த நேரம் வளரும் இளம் செல்களையும் அழித்துவிடும். பின் short term memory loss வந்துவிடும்.

அமெரிக்காவில் கட்டுகடங்காத சுகாதார செலவை குறைக்க சில மாகாணங்கள் சட்டத்தை தளர்த்தி இருக்கின்றன.

Dr. Gupta: Why I changed my mind about weed

http://www.cnn.com/2013/08/08/health/gupta-changed-mind-marijuana/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஞ்சா ஒரு அரு மருந்து.

இது வரை ஆராய்சிகள் பல அனுகூலங்களை வெளிபடுத்தி இருக்கிறது.

குலக்கொமா கண் வியாதி, சலரோகம், வயிற்று வலி , மன தளர்ச்சி போன்றவைக்கு பக்கவிளைவு இல்லாத அருமருந்து.

கான்சருக்கும் இது தான் மருந்து. கஞ்சாவில் உள்ள டி.எச்.சி பழைய மற்றும் வலுவிழந்த செல்களை அழிக்கும் அதனால் அந்த செல்களில் கான்சர் வளர்வது தடைப்படும்.

25 வயது வரை புகைப்பதை தவிர்க்கவேண்டும். அந்த நேரம் வளரும் இளம் செல்களையும் அழித்துவிடும். பின் short term memory loss வந்துவிடும்.

அமெரிக்காவில் கட்டுகடங்காத சுகாதார செலவை குறைக்க சில மாகாணங்கள் சட்டத்தை தளர்த்தி இருக்கின்றன.

Dr. Gupta: Why I changed my mind about weed

http://www.cnn.com/2013/08/08/health/gupta-changed-mind-marijuana/

 

கொலண்டுக்கு மீன் வாங்க போகேக்கை ஒரு சரையை வாங்கி இரண்டு இழுவை இழுக்கத்தான் இருக்கு....220px-Cannabis_indica.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தவறனைகளை ஊருகுள்ள திறக்கும் பொழுது சனம் புறுபுறுத்து கொண்டிருந்தது.....இப்ப அந்த சனம் வீட்டிலயே தவறனை வைச்சிருக்குது....:D

மேற்கின் அஸ்தமனமும் கிழக்கின் எழுச்சியும்..

 

 

கொலண்டுக்கு மீன் வாங்க போகேக்கை ஒரு சரையை வாங்கி இரண்டு இழுவை இழுக்கத்தான் இருக்கு....220px-Cannabis_indica.jpg

பிறகு மீனுக்கு பதில் ஹோலாந்து காரியை இழுத்துக்கொண்டு போகாட்டில் சரி.:D

மேற்கின் அஸ்தமனமும் கிழக்கின் எழுச்சியும்..

மேற்கின் எழுச்சியும் கிழக்கின் வீழ்ச்சியும் என்று என்பது எனது கருத்து.

கிழக்கு மேற்குமயமாக, மேற்கோ பிளாசாக்கு பிளாசா கிழக்கின் கராத்தே, யோகா, தியானம் என்று வைத்து முன்னேறுகிறார்கள்.

மேற்கு மருத்துவர்களின் அறிவுரைபடி சைவ உணவு உண்பவர்களும் அதிகரித்துவருகிரார்கள். சுத்தமான இயற்கை உள்ளூர் உணவை வாங்க உழவர் சந்தைகளை மொய்க்கிறார்கள்.

இப்போது ஆயுர்வேத மருத்துவத்தின் மூலமான

ஓப்பியத்தையும் கஞ்சாவையும் நூதனமாக மக்கள் மருத்துவதற்கு பாவிக்கிறார்கள்.

மேற்கு அதி புத்திசாலி.

கஞ்சாவில் டி.எச்.சி. இரசாயனத்தை 125 வருடங்களாக செயற்கை (சிந்தடிக்)முறையில் செய்ய முயன்று தோல்வியில் முடிந்தபடியால் இப்போது இயற்கை தாவரத்திற்கு சட்டத்தை தளர்த்தி இருக்கிறார்கள்.

மற்றும் வட அமெரிக்காவில் இருக்கும் குடி பிரச்சினைக்கும் இது தான் நல்ல தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டை  ஒழிக்க புறப்பட்டு

முழுகப்போகிறார்கள்

தொட்டிருப்பது போதையை  என்பதை  உணராமல்.......... :(  :(  :(


ஆனால்  இதுவும் கடந்து போகும்............. :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.