Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லத் தகுதியானதா? ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக நமக்குள் சிலர் தையைத் தமிழ்ப் புத்தாண்டு எனச் சில வருடங்களாகக் கொண்டாடுவார்கள். தாயகத்தில் இருந்து இறுதி யுத்த காலப்பகுதியில் வந்ததாக சொல்லப்படுகின்ற கடிதத்தை மையப்படுத்திப் பலர் கொண்டாடுவார்கள். அவர்களிடம் விளக்கம் கேட்டால் எந்தக் காரணமும் அவர்களுக்குச் சொல்லத் தெரிவதில்லை. இத்தனைக்கும் இப்படிப்பட்ட தமிழர் வாழ்வியல் பற்றிய அந்தக் கடிதத்தில் தலைவர் சம்மதித்தாரா என்பது பற்றி எந்த ஆதாரமும் இல்லை. சிலர் சித்திரையில் விஸ்ணு- நாரதர் பற்றிய புராணக்கதை இருப்பதால் தையில் கொண்டாடலாம் என்பார். தையிலும் ஒரு புராணக்கதையை உருவாக்கினால் எந்த நாளுக்கு மாறுவார்? ஒரு காலத்தில் தைப்பொங்கலைத் தமிழர் விழாவாக கொண்டாடிய மனது, இந்தப் புத்தாண்டு விடயத்தின்பின்னர் அது பற்றிய விபரங்களைத் தேடும்போது தைப்பொங்கலே தமிழ்ப் பண்டிகையா என்ற கேள்வியோடு வேதனையே மிஞ்சுகின்றது. மகர சங்கராந்தி என்ற வடநாட்டுப் பண்டிகையின் தமிழ்வடிவம் தான் தைப்பொங்கல் என எண்ணத் தோன்றுகின்றது. அடிப்படையில் சித்திரை என்பது மேடராசிக்குள் சூரியன் போனால் சித்திரைப் புத்தாண்டு, மகர ராசிக்குள் சூரியன் போனால் தைப்பொங்கல் என்ற வேற்றுமை மட்டுமே தெரிகின்றது. மறுபக்கம் இதனால் தமிழ்ச் சமூகம் 2 ஆகப் பிளவுபட்டு நிற்கின்றது. நான் உற்பட்ட பலர் தையைப் புத்தாண்டாக ஏற்கத் தயாராக இல்லை. அது உழவர்களின் கௌவரத்துக்கு மதிப்புக் கொடுக்கும் விழா. புத்தாண்டு என மாற்றுவது, அதன் நோக்கத்தைப் பாழ்படுத்தி விடும் என்ற உயரிய சிந்தனை கொண்டவர்கள் பலர் உள்ளனர். இது பற்றிய என் எண்ணங்களைப் பகிரப் போகின்றேன். ஆயினும் தமிழ்ப் புத்தாண்டு என வாழ்த்துச் சொல்பவர்கள் ஏன் இதை நாங்கள் புத்தாண்டாக மாற்ற வேண்டும்? அப்படி மாற்றுவதால் என்ன பலன் கிடைத்தது என்பது பற்றிய பதில்களைத் தரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிந்தனையைத் தூண்டுகின்ற பதிவு, தூயவன்!

 

என்னைப் பொறுத்த வரையில். வருடத்தின் எல்லா நாட்களுமே ஒரே மாதிரியானவை! எனினும், மனிதர்கள் வாழுகின்ற மண்ணினதும், கலாச்சாரத்துடனும் இணைந்து விழாக்கள் உருவாகின! எல்லாவற்றிற்கும், காரணங்களைத் தேடிக்கொண்டு போனால், எமக்கு எதுவுமே மிஞ்சாது! உதாரணமாக, நத்தாரை எடுத்துக்கொண்டால், ஏசுநாதர் பிறந்த நாள் அது என்று கூறப்படுகின்றது! எனினும், இயேசுநாதர் பிறந்தது அன்றைய தினத்தில் அல்ல என்பது, விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட போதிலும், கிறிஸ்தவர்கள் அன்றைய தினமே, யேசுநாதரின் பிறந்த தினம் என்று கொண்டாடுகின்றார்கள்!இங்கு அவர்கள் விஞ்ஞானத்தை விலக்கித் தங்கள் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள்! இதே போலவே எமது புதுவருடம் எங்கு ஆரம்பிக்கின்றது என்றால், எந்த ஆண்டை நாம் ஏற்றுக்கொள்வது என்னும் பிரச்சனை வருகின்றது! சித்திரை மாதத்தை எடுத்துக் கொண்டால், தமிழ் வருடம் சித்திரையில் பிறக்கின்றது என்று ஏற்றுக்கொள்ளலாம்! வள்ளுவராண்டை எடுத்துக் கொண்டால், அது என்று ஆரம்பிக்கின்றது என்று தேடி அதை நெறிப்படுத்த வேண்டும்! நாங்கள் தமிழர்களே எனினும், பரந்த உலகுடன் இணைந்து வாழ வேண்டிய தேவையும் உள்ளது! இதனைக் கருத்தில் எடுக்கையில், தைப்பொங்கல் தினமானது, மேற்கத்தைய வருடத்துடன் ஓரளவுக்கு இணைந்து போகின்றது! எனவே அதைப் புத்தாண்டாகப் பலர் கொண்டாடுகின்றார்கள்! இல்லாவிட்டால், புத்த ஜெயந்தியில் இருந்து வருசத்தைக் கணக்குப்பார்த்த இலங்கை அரசு செய்வது போலச் செய்தால், கப்பல்கள் துறைமுகத்தில், போயா தினத்திலும், பிறிப்போயா தினத்திலும் ஓய்வெடுப்பது போலவும், சனி, ஞாயிறுகளில் கப்பல்கள் வேலை செய்யத் தொழிலாளர்கள் ஓய்வெடுப்பது போலவும் நிலை தான் எமக்கும் ஏற்படும்! அதை விடவும், தமிழர்களின் உண்மையான மதமானது, இந்து சமயம் இல்லை என்பது எனது ஆழமான நம்பிக்கையாகும்! இந்து மதமானது பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் எம்மீது திணிக்கப்பட்டது என்பதே எனது கருத்தாகும்! தொன்மைத் தமிழர்கள், இயற்கையை மட்டுமே வழிபட்டு வந்தனர்! இயற்கை வழிபாட்டின், பரிணாம நிலையில் 'சிவன்' உருவாகியிருக்கலாம்! அதிலிருந்து சைவம் உருவாகியிருக்கலாம்!இயற்கை வழிபாட்டில் சூரிய வணக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! அதன் தொடர்ச்சியே சூரியனுக்குப் பொங்கலிடுவது போன்றதும் என நினைக்கிறேன்! 

 

மற்றும்படி நீங்கள் கூறும் ராசிகள் பற்றிய அறிவானது வட இந்தியர்களுடையது என்று ராசிகளின் பெயர்களை வைத்துக் கூறுகின்றீர்கள் போல உள்ளது! தொன்மைத் தமிழர்களின் பல விடயங்கள், வட இந்திய மயப்படுத்தப் பட்டது நீங்கள் அறியாததல்ல! யோகக் கலையானது, சிந்து வெளி நாகரிக காலத்திலேயே இருந்திருக்கின்றது என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன! அதனைப் 'பதஞ்சலி முனிவர்' தொகுத்து எழுதிய படியினால் அது வட இந்தியர்களுக்கு உரியது என்று ஆகிவிடாது! அதே போலவே, பரத முனிவர், பரத நாட்டியத்தைத் தொகுத்தார் என்பதற்காக, அது வட இந்தியர்களின் கலை என நாம் முடிவு செய்வதும் தவறாகும்! அதைப்போலவே சோதிட சாத்திரங்களும், வட இந்தியர்களது என்று நாம் நம்புகின்றோம் அல்லது அவ்வாறு நம்ப வைக்கப்பட்டிருக்கின்றோம்!

 

ஆனால் எல்லா விதமான அறிவு பூர்வமான கேள்விகளும், ஆய்வுகளும் தமிழன் மீதும், அவனது பண்டிகைகளின் மீது மட்டுமே தொடுக்கப்படுவதனை அவதானியுங்கள்! இவை மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்படுகின்றன! அண்மையில் கூட, சிங்கள ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி, ' இலங்கை வாழ் இந்துக்களுக்கு' என்று தான் தொடங்கியதையும் கவனியுங்கள்! இலங்கையில் எங்கே இந்துக்கள் வாழ்ந்தார்கள்? சைவர்கள் தானே வாழ்ந்தார்கள்? ' இந்து மதத்தையும்'. சைவ மதத்தையும் பிரித்தறியும் அறிவு, இலங்கை ஜானதிபதிக்கு இருந்திருக்குமென நான் நம்பவில்லை! இவையெல்லாம், ஏதோ ஒரு நோக்கத்தைக் கொண்டே நடத்தப்படுகின்றன! அது என்ன என்று உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்! அதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்று சிந்திப்பதே, எமக்கான ஒரு இருப்பை நிச்சயிக்கும்!

 

யாரவது திருஞான சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், பிறந்த நாளைக் கொண்டாடுவதைக் கேள்வி எழுப்புவதில்லையே? அவர்களுக்கெல்லாம், பிறப்புச் சான்றிதழ்களா இருக்கின்றன?

 

இந்த நீண்ட பதிவானது, உங்கள் கேள்விக்கான சரியான பதிலில்லை என்றே எண்ணுகின்றேன்! இருந்தும், உங்கள் சிந்தனைக்கு ஒரு வடிகாலாக அமையும் என்ற நம்பிக்கையில் பதிந்துள்ளேன்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுபற்றி எத்தனை விளக்கம் கூறினாலும் சிலர் ஏற்றுக்கொள்ளாது ஆரியமயப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. நாம் பழ விடயங்களை மூடத்தனமாக நம்பிக்கொண்டு இருக்கிறோம். சிலவற்றை இதுதான் சரி எனக் கூறினாலும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அத்தனை எம்மனம் முதலில் கேட்பதை மூலையில் அழுத்தமாகப் பதிந்தது போவதே காரணம். எம் அறிவைக் கொண்டு நாம் அதுபற்றிச் சிந்தித்தும் பார்ப்பதில்லை. படித்தவனாக மற்றவரால் கருதப்படும் ஒருவர் கூறுவது வேத வாக்காக எமக்குப் படுகிறது. உலகின் வரலாறும் நாகரீகமும் விவசாயத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. அதனால் தைப்பொங்கலை புதுவருடமாக அறிமுகப்படுத்தி இருக்கலாம்.

 

ஆனால் தைத் திருநாள் கூட எப்போது யாரால் ஆரம்பிக்கப்பட்டதென வரலாறுகள் இல்லையாயினும் எம் மூதாதை சுமேரியர் என்னும் என் நம்பிக்கையின் காரணமாக அங்கே இயற்கையை வழிபட்டு விழா எடுத்ததன் தொடர்ச்சியாகவே தைப்பொங்கலை நான் பார்க்கிறேன். தமிழரின் அடிமுடி இதுவரை யாருமே அறியவில்லை. அறிய முயலவும் இல்லை. மதுரை ஆதீனத்தின் திரு அருணகிரி அவர்களுடன் உரையாடியபோது ஆதி இனம் என்பதே ஆதீனமாக வந்திருக்கலாம் என்றார். இந்தியாவில் எத்தனையோ அறிஞர்கள் இருந்தும் யாருக்கும் தமிழர் பற்றிய உண்மையான அக்கறையோ ஆர்வமோ இல்லை. எதோ கடமைக்கும் பேருக்குமாக சிலதை செய்துகொண்டிருக்கிறார்கள் என்றார்.

 

இப்படியே கட்டுரை எழுதுவதாகவே தமிழன் நிலை தொடர்ந்தும் இருக்கப்போகிறதேயன்றி வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியே கட்டுரை எழுதுவதாகவே தமிழன் நிலை தொடர்ந்தும் இருக்கப்போகிறதேயன்றி வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

 

உலகில் தமிழனுக்கு என்று நிலம் இருந்தவரை தமிழும் வளர்ந்தது, தமிழனும் வளர்ந்தான். இப்போது தமிழனுக்கு என்று நிலமில்லை. தமிழும் வளரமுடியாது, தமிழனும் வளரமுடியாதநிலை....

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு காலத்தில் தைப்பொங்கலைத் தமிழர் விழாவாக கொண்டாடிய மனது, இந்தப் புத்தாண்டு விடயத்தின்பின்னர் அது பற்றிய விபரங்களைத் தேடும்போது தைப்பொங்கலே தமிழ்ப் பண்டிகையா என்ற கேள்வியோடு வேதனையே மிஞ்சுகின்றது. மகர சங்கராந்தி என்ற வடநாட்டுப் பண்டிகையின் தமிழ்வடிவம் தான் தைப்பொங்கல் என எண்ணத் தோன்றுகின்றது. அடிப்படையில் சித்திரை என்பது மேடராசிக்குள் சூரியன் போனால் சித்திரைப் புத்தாண்டு, மகர ராசிக்குள் சூரியன் போனால் தைப்பொங்கல் என்ற வேற்றுமை மட்டுமே தெரிகின்றது. மறுபக்கம் இதனால் தமிழ்ச் சமூகம் 2 ஆகப் பிளவுபட்டு நிற்கின்றது. நான் உற்பட்ட பலர் தையைப் புத்தாண்டாக ஏற்கத் தயாராக இல்லை. அது உழவர்களின் கௌவரத்துக்கு மதிப்புக் கொடுக்கும் விழா. புத்தாண்டு என மாற்றுவது, அதன் நோக்கத்தைப் பாழ்படுத்தி விடும் என்ற உயரிய சிந்தனை கொண்டவர்கள் பலர் உள்ளனர். இது பற்றிய என் எண்ணங்களைப் பகிரப் போகின்றேன். ஆயினும் தமிழ்ப் புத்தாண்டு என வாழ்த்துச் சொல்பவர்கள் ஏன் இதை நாங்கள் புத்தாண்டாக மாற்ற வேண்டும்? அப்படி மாற்றுவதால் என்ன பலன் கிடைத்தது என்பது பற்றிய பதில்களைத் தரவேண்டும்.

 

எனக்கும்... தைப்பொங்கலை, புத்தாண்டு விழாவாக கொண்டாடுவதில் உடன்பாடு இல்லை.

கருணாநிதியின் ஆட்சியின் போது.... இந்த புதிய அறிவித்தல் வந்தது என நினைக்கின்றேன்.

சும்மா இருக்கும் மக்களை.. குழப்பி அடிப்பதில், தமிழக அரசியல் தலைவர்களுக்கு நிகர் யாரும் இல்லை.

கருணாநிதியின் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், தீர்மானங்களையும் மாற்றி அமைக்கும் ஜெயலலிதா இதனை மட்டும் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

அடுத்த சட்டமன்றக் கூட்டத்தில்.. தைப்பொங்கல் தினத்தை, புத்தாண்டு தினமாக கொண்டாட முடியாது என்று அறிவிக்க வேண்டும்.

 

நேற்று முந்தினம் நடந்த பொங்கலை, ஈழத்திலுள்ள கிறிஸ்தவர்கள்... தேவாலயங்களிலும் பொங்கி கொண்டாடினார்கள்.

அவர்களுக்கு இதனை புத்தாண்டு என்று சொன்னால்... ஆங்கில ஜனவரி முதலாம் திகதியை எப்படி அழைப்பது என்ற குழப்பம் வருமா...வராதா?

மேசராசியில் சூரியன் வரும்போது புதுவருடம் எப்படி வரும்? ஆடியில் தம்பதிகள் சேராமல் இருக்கும் வழக்கம் உண்டு ஏனெனில் ஆடியில் கருவானால் சித்திரையில் புத்திரன் பிறப்பான். சித்திரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு கண்டம் என்றொரு சோதிட விளக்கம் மற்றது சித்திரை வைகாசி கத்திரி வெயில் காலம், காண்டாவனக் காலம். அம்மைநோய் கண்ணோய் போன்ற பல வியாதிகள் அதிக வெப்பத்தால் வரும். இதில் குழந்தைகள் பாதிக்கப்படும். ஒரு வசந்த காலத்திலே அதாவது நெல்விழையும் தையிலே தான் வருடம் வர முடியும் காண்டாவனக் காலத்தில் எப்படி வருடப்பிறப்பாக முன்னோர்கள் முன்வைத்திருப்பார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை.

 

தமிழ் புத்தாண்டு என்றால் என்ன?

 

அதாவது தமிழர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்கள். பூமி தன்னைத்தான் ஒருமுறை சுற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 24 மணி நேரம். அதுபோல் ஒரு வருடத்தில் சூரியன் வடக்கு - தெற்காக நகர்தலை துல்லியமாக கணித்திருந்தார்கள் தமிழர்கள். அதுதான் கோடைகாலம், குளிர்காலம் என்பதற்கு அடிப்படை. பழ இலக்கியங்களில் அதனை 'வடசெலவு', 'தென்செலவு' என குறிக்கப்பட்டது. இதில் தென்செலவு என்பது மிகவும் முக்கியமானது. அதாவது வடக்கிருந்து வரும் சூரியன் ஒருகட்டத்தில் நிலைகொள்கிறது. அதாவது தென்செலவு சமயங்களில் தெற்கே சூரியன் நிலைகொள்கிறது. அதைப் பொறுத்தே அந்த வருடத்தில் மழைபெய்தல், புயலடித்தல் போன்றவை இடம் பெறும். சில வருடங்களில் அது இரண்டு நாட்கள் சில் வருடங்களில் அதற்கு மேலும் இந்த தென்செலவு நடைபெறும். அதைத்தான் அந்தக்கால கணியர்கள் கணித்தனர். சூரியன் என்று அந்த தென் செலவை முடித்து வடக்கு நோக்கி நகருகிறானோ அன்றுதான் புத்தாண்டு. அது தான் தமிழ் புத்தாண்டு. அதுதான் தமிழ் மாதமாகிய சுறவத்தின் முதல் நாள். அன்றுதான் காடுகளில் யானைகள் தங்கள் பாதையை மாற்றுகின்றன. கடல்களில் ஆமைகள் தங்கள் பாதையை மாற்றுகின்றன. பறவைகள்......... சொல்லிக்கொண்டே போகலாம்.

 

வேதியர் காலத்தில் இந்த எந்த அடிப்படையுமே இல்லாமல் பஞ்சாங்கங்கள் வடிவமைக்கப்பட்டு அதனை நாம் கட்டாயமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் எனும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஆக சுறவம் - தை யாக மாறியுள்ளது. யானை, ஆமை, பறவை களோடு சேர்ந்துதான் நம் தமிழர்களும் புத்தாண்டு கொண்டாடியுள்ளனர்.  இதுதான் அடிப்படை. இன்றைய அத்தனை புத்தாண்டுகளுக்கும் அடிப்படை இதுதான் ஜனவரி புத்தாண்டு உட்பட.

 

இன்னுமதிக தகவல்கள் இந்த இணைப்பில் உள்ளது. புரிந்துகொள்க. இல்லையேல் உங்கள் கருத்துக்களை, கேள்விகளைத் தாருங்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=133557

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எனில் மகர ராசியில் எப்படிப் புத்தாண்டு வரமுடியும்,? தைப்பொங்கலே ராசியை வைத்துக் கணித்தபடி அதை மதச்சார்பற்றது என்று எவ்வாறு சொல்ல முடியும். சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுவது பற்றிக் கதைக்கின்றோமே அன்றி, கலவி பற்றி அல்ல. நேரமின்மையால் தைப்பொங்கல் பற்றி எழுதமுடியவில்லை. விரைவில் சித்திரையை விடத் தைப்பொங்கல் எவ்வாறு பொருத்தமற்றது என்பது பற்றி எழுதுகின்றேன்

 

மேசராசியில் சூரியன் வரும்போது புதுவருடம் எப்படி வரும்? ஆடியில் தம்பதிகள் சேராமல் இருக்கும் வழக்கம் உண்டு ஏனெனில் ஆடியில் கருவானால் சித்திரையில் புத்திரன் பிறப்பான். சித்திரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு கண்டம் என்றொரு சோதிட விளக்கம் மற்றது சித்திரை வைகாசி கத்திரி வெயில் காலம், காண்டாவனக் காலம். அம்மைநோய் கண்ணோய் போன்ற பல வியாதிகள் அதிக வெப்பத்தால் வரும். இதில் குழந்தைகள் பாதிக்கப்படும். ஒரு வசந்த காலத்திலே அதாவது நெல்விழையும் தையிலே தான் வருடம் வர முடியும் காண்டாவனக் காலத்தில் எப்படி வருடப்பிறப்பாக முன்னோர்கள் முன்வைத்திருப்பார்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாதத்திற்காக குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்தது உண்மை என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலம் பூமத்திய ரேகைக்கு தெற்காக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறானால், ஐப்பசி முதல் பங்குனி வரை வெயில்காலமாக இருந்திருக்கும். ஆகவே, தைமாதம் அறுவடை செய்து சூரியனை வழிபடுதல் பொருத்தமாக இருந்திருக்கும்.

கடற்கோள்கள் மற்றும் பனிக்கால முடிவில் குமரிக்கண்டம் இழக்கப்பட்டு மக்கள் வடக்கு நோக்கி முன்னேறி இன்றுள்ள பகுதிகளுக்குச் செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது பூமத்தியரேகைக்கு வடக்காக வந்துவிட்டார்கள். ஆகவே சித்திரையில் கொண்டாடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எல்லாம் ஒரு அனுமானம்தான். :D

Edited by இசைக்கலைஞன்

இதில் தொடர்ந்து விவாதிக்க எனக்கு எதுவும் இல்லை. சித்திரையில் தான் வருடப்பிறப்பு என்பவர்கள் அதை கொண்டாடட்டும் தையில் தான் வருடப்பிறப்பு என்பவர்கள் அதை கொண்டாட்டும். இல்லை ஒக்டோபர் 17 தான் வருடப்பிறப்பு என்பவர்கள் அதையம் கொண்டாடட்டும் . சிலருக்கு தீபாவளி தமிழர்களை அவமதிக்கும் நாள் சிலருக்கு அது தீபத்திருநாள் என்று ஆனந்தமானது. எனது அறிவுக்கு தீபாவளி எமது முன்னோர்களை அவமதிக்கும் நாள் அதனால் கொண்டாடுவதில்லை அதே போல் கத்திரிவெயில் காண்டாவனக் காலத்தை வருடப்பிறப்பாக ஏற்கப்போவதும் இல்லை. இவ்விடயத்தில் வாத விவாதங்கள் ஒரு முடிவை முன்வைக்கப்போவதும் இல்லை. ஒருவர் முன்வைப்பதை ஒருவர் ஏற்கப்போவதும் இல்லை ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறைகள் இருக்கின்றது. இவைகள் மட்டுமல்ல இதுபோன்ற பல அரசியல் கலாச்சார சமய விடயங்களில் மாற்றம் என்பது குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இனி சாத்தியம் இல்லை ஏனெனில் அது தனது சுயத்தை முற்றாக இழந்து அடிமைகள் அல்லது இரண்டாந்தரப்பிரசைகள் எனற அறுதியான வரைவிலக்கணத்தக்குள் வந்துவிட்டது. அடிமைகள் கூச்சலிடும் சத்தத்துக்குள் தையா சித்திரையா என்ற சத்தமும் கொஞ்சக் காலத்துக்கு கேட்கும் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தொடர்ந்து விவாதிக்க எனக்கு எதுவும் இல்லை. சித்திரையில் தான் வருடப்பிறப்பு என்பவர்கள் அதை கொண்டாடட்டும் தையில் தான் வருடப்பிறப்பு என்பவர்கள் அதை கொண்டாட்டும். இல்லை ஒக்டோபர் 17 தான் வருடப்பிறப்பு என்பவர்கள் அதையம் கொண்டாடட்டும் . சிலருக்கு தீபாவளி தமிழர்களை அவமதிக்கும் நாள் சிலருக்கு அது தீபத்திருநாள் என்று ஆனந்தமானது. எனது அறிவுக்கு தீபாவளி எமது முன்னோர்களை அவமதிக்கும் நாள் அதனால் கொண்டாடுவதில்லை அதே போல் கத்திரிவெயில் காண்டாவனக் காலத்தை வருடப்பிறப்பாக ஏற்கப்போவதும் இல்லை. இவ்விடயத்தில் வாத விவாதங்கள் ஒரு முடிவை முன்வைக்கப்போவதும் இல்லை. ஒருவர் முன்வைப்பதை ஒருவர் ஏற்கப்போவதும் இல்லை ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறைகள் இருக்கின்றது. இவைகள் மட்டுமல்ல இதுபோன்ற பல அரசியல் கலாச்சார சமய விடயங்களில் மாற்றம் என்பது குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இனி சாத்தியம் இல்லை ஏனெனில் அது தனது சுயத்தை முற்றாக இழந்து அடிமைகள் அல்லது இரண்டாந்தரப்பிரசைகள் எனற அறுதியான வரைவிலக்கணத்தக்குள் வந்துவிட்டது. அடிமைகள் கூச்சலிடும் சத்தத்துக்குள் தையா சித்திரையா என்ற சத்தமும் கொஞ்சக் காலத்துக்கு கேட்கும் அவ்வளவுதான்.

 

 

எனக்கு

இந்த பொங்கல் பற்றிய  பூரண  தெளிவின்மையால் இந்த  திரிக்கு கருத்தை வைக்கவில்லை

ஆனால்

உங்களது இந்த அடையாளமிட்ட கருத்திற்கு எதிர்க்கருத்துண்டு

 

எனது தகப்பனார்

அடிக்கடி முன்பு சொல்வார்

தனது தகப்பனார் கவலைப்படுவாராம்

தன்னைப்பார்த்து

இவன்  எமது குல  வழக்கங்களை பின் பற்றமாட்டான்

எதிர் காலத்தில் இவை  இல்லாது போய்விடும் என்று.

ஆனால் எனது தகப்பனார்

நான் அறிந்தவரையில் அதை முழுவீச்சாக கடைப்பிடித்தார்

 

அதேநேரத்தில்

நானும் இளமைக்காலத்தில் கடவுளில் இருந்து

எமது பழக்கவழக்கங்களை  உதாசீனம் செய்தே வந்தேன்

எனது தகப்பனாருக்கு இது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்தது

ஆனால்  எனது வயசு குடும்பம்  பிள்ளைகள் என்று வர

என்னுள் பலமாற்றங்களை 

நானே  பார்த்தேன்

 

இதுவே

இன்று இளம் வயதிலிருக்கும் எனது பிள்ளையும்  செய்யும் என்பதே 

வரலாறுகளும்

பழக்கவளக்கங்களும்

எமது நாகரீகங்களும் திடீரென மாறக்கூடியன

அழிந்து போகக்கூடியன அல்ல

என்பதற்கு எமக்கிருக்கும் சாட்சிகளாகும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.