Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பர் சிங்கர் - 4

Featured Replies

நன்றி பெருமாள் அண்ணா. :)

முதல் சுற்றில் சையத் சுபகான் பாடிய "விடைகொடு எங்கள் நாடே" பாடல் 6.44 ஆவது நிமிடத்திலிருந்து கேட்கலாம். :) பின்னால் படங்களும் போடுகிறார்கள். அதை சரியாக கவனிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் படங்கள், முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்ட மக்களின் படங்கள் போல் தெரிகிறது. பாடலை கேட்டு மாணிக்கவிநாயகம் ஐயா அழுது விட்டார்.
 

பல மக்கள் முன்னிலையில் இப்படியான பாடலை பாடிய சையத் சுபகானுக்கு வாழ்த்துக்கள். :)

 

இரு தமிழர்கள் முதலிரு இடங்களை பெற்றது மகிழ்ச்சி.

 

http://www.youtube.com/watch?v=oDxmS6FuBgo&desktop_uri=%2Fwatch%3Fv%3DoDxmS6FuBgo&app=desktop

Edited by துளசி

  • Replies 88
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது போன்ற  நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை

ஆனால்

இங்கு  திண்ணை  மற்றும் திரிகளில் எழுதப்பட்ட பருத்தக்களால் இந்தமுறை  பார்க்கத்தூண்டியது

பார்த்தேன்.

 

திவாகரின் வெற்றி  என்பது  எனக்குள் பல சந்தோசங்களைக்கொடுத்துள்ளது

1- தமிழக  மக்கள் குறிப்பாக இளையோர்தமிழர்  என்ற  எழுச்சிக்குள் வந்துள்ளனர்

2- தமிழர் என்ற  ஒற்றுமை எல்லா  இடமும் இருந்தது

3- உலகத்தமிழர் எல்லோரிடமும் இந்த எழுச்சி  இருந்தது

 

இதைப்பார்க்கும் போ
சீமானும்

நாம் தமிழரும்

2016ம்  ஏதோ என்னுள் வந்து போகிறது....... :icon_idea:

 


முதலாமவருக்கும்  இரண்டாமவருக்குமானக்கும் இடையிலான

5 இலட்ச  வாக்கு வித்தியாசம்

தமிழன் தோற்றுவிடக்கூடாது என்ற தமிழர் முடிவின் தேட்டம்......... :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பெருமாள் அண்ணா. :)

முதல் சுற்றில் சையத் சுபகான் பாடிய "விடைகொடு எங்கள் நாடே" பாடல் 6.44 ஆவது நிமிடத்திலிருந்து கேட்கலாம். :) பின்னால் படங்களும் போடுகிறார்கள். அதை சரியாக கவனிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் படங்கள், முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்ட மக்களின் படங்கள் போல் தெரிகிறது. பாடலை கேட்டு மாணிக்கவிநாயகம் ஐயா அழுது விட்டார்.

 

பல மக்கள் முன்னிலையில் இப்படியான பாடலை பாடிய சையத் சுபகானுக்கு வாழ்த்துக்கள். :)

 

இரு தமிழர்கள் முதலிரு இடங்களை பெற்றது மகிழ்ச்சி.

 

 

எமது அழுகையும் வேதனையும் அவர்களின் பொழுது போக்கு .

எமது அழுகையும் வேதனையும் அவர்களின் பொழுது போக்கு .

 

பெருமாள், இப்படியே நாங்கள் எல்லாத்துக்கும் குதர்க்கம் கதைத்துக் கொண்டு இருந்தால் மேலும் மேலும் தனிமைப்படுதல் தான் நடக்கும். இசை மூலமும் பாடல்கள் மூலமும் அவலத்தினை மற்றவர்களுக்கு உணர்த்துவதும், நினைவுபடுத்துவதும் காலம் காலமாக எல்லா இனங்களிலும் நடக்கும் விடயம்.  ஒரு குத்துப் பாடலை பாடி பாராட்டு பெறுவதை விட உணர்வுபூர்வமான ஒரு பாடலை பாடி கவனத்தினை பெறுவது கடினம். அந்த வகையில் சையத்துக்கு பாராட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Glad to introduce the talented Diwakar for my upcoming film #Panjumuttai starring Makapa Anand in the lead. Lyric by Yugabharathi.. Directed by Mohan.. Praise God! - D. Imman.

திவாகர் தமிழன் என்றபடியால் தான் வென்றார் என்றால் போட்டி போட்ட மற்ற தமிழர்களுக்கு என்னாச்சு . :icon_mrgreen: .

திவாகரரின் திறமையை கொச்சை படுத்துவது போலிருக்கு பலரின் கருத்துக்கள் .

அடுத்த முறை தமிழர் இல்லாத ஒருவர் கூட வெற்றி பெறலாம் .

போன முறை யூனியர் சூப்பர் சிங்கரில் யாழினியை தமிழச்சி ,இவர் தந்தையார் போராட்டத்திற்கு உதவினார் என்று எல்லாம் வாக்கு கேட்டார்கள் இறுதியில் திறமைதான் வென்றது .ஆசிஸ் இவர் ஒரு முஸ்லிம் .

கலை விளையாட்டு என்று வரும் போது இனம்  மதம் என்ற கொச்சை எல்லாம் மிக ஒரு சிறுவட்டதிற்குள்தான்  தமிழ் நாட்டில் இருக்கு .

அல்கா போன்றொரு திறமையானவர் வரும்போது மற்ற அனைத்து விடயங்களும் அடிபட்டுபோகும்.

 

Edited by arjun

முதலாமவருக்கும்  இரண்டாமவருக்குமானக்கும் இடையிலான

5 இலட்ச  வாக்கு வித்தியாசம்

தமிழன் தோற்றுவிடக்கூடாது என்ற தமிழர் முடிவின் தேட்டம்......... :icon_idea: 

 

இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட சையத் சுபகான் இஸ்லாமிய தமிழர். :) இவர்கள் இருவரையும் நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. யாழ்கள உறவுகள் திவாகருக்கு அடுத்து இவருக்கே வாக்குகள் போட்டிருந்தோம். திறமையின் அடிப்படையில் திவாகர் தான் முன்னணியில், திவாகருக்கு அடுத்ததாக சையத் சுபகான். :)

final இலும் இருவரும் மற்றவர்களை விட நன்றாக பாடியிருக்கிறார்கள். நடுவர்களின் தீர்ப்பு படி அவர்கள் வாக்கு சையத் சுபகானுக்கு என கூறினார்கள். மக்களின் வாக்குகள் படி திவாகர் முதலிடம் பெற்றார்.

 

என்னை பொறுத்தவரை இவ்வளவு காலம் பாடிய பாடல்களை வைத்தும் final இல் பாடிய பாடலை வைத்தும் திவாகருக்கு முதலிடம் கிடைத்தது சரியானது. :)

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தையும் கொச்சைப்படுத்தினால் அப்படியே கொச்சைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டியது தான்.

 

புதியவர்களுக்கு பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் கொடுக்கிறார். அது போல் கஷ்டப்பட்ட மக்களில் சிலரை தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்கிறார். 4 வருடங்களாக music class நடத்தியும் எம்மில் யாருக்காவது தெரியுமா? விளம்பரம் தான் நோக்கமாக இருந்தால் 4 வருடங்களுக்கு முன்னமே அவர் சொல்லியிருக்கலாம்.

 

ரகுமானுக்கு விளம்பரத்துக்காக இலவசமாக எதையும் நடத்தி விளம்பரம் தேடி வாழ வேண்டிய அவசியமில்லை. அந்தளவுக்கு அவர் நிலை தாழ்ந்து போகவில்லை.

இது ரகுமான் போன வருடம் வெளியிட்ட வீடியோ. சூப்பர் சிங்கர் 4 இல் கலந்து கொண்ட போது விஜய் டிவி குழுவினர் அங்கும் இதை போட்டதாக பார்த்ததால் இந்த திரியிலும் இணைத்துள்ளேன்.

நாம் வெளிநாட்டில் இருந்து கொண்டு அங்குள்ள 4 கஷ்டப்பட்ட சனம் முன்னுக்கு வருவதையும் எள்ளி நகையாடிக்கொண்டே இருப்போம். :)

 

இந்த இசைக் கல்லூரியை ரகுமான் திறக்கப் போறார் என்று அப்பவே அதாவது நாலு வருசத்திற்கு முந்தியே செய்தி பரபரப்பாக அடிப்பட்டது.யாழிலும் இந்த செய்தி போடப்பட்டது :)
 
ரகுமானாக இருக்கட்டும் அல்லது ராஜாவாக இருக்கட்டும் அவர்கள் இப்படி ஒன்றை நடத்தக் காரணம் சமூக நலன் என்பதை விட சுயநலமே முக்கிய காரணம்.வருமானத்திற்காக இப்படி ஒன்றை நடத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லைத் தான் ஆனால் தங்கட வருமானத்தை தக்க வைக்க,தங்கட இமேஜை தக்க வைக்க இப்படியான திட்டங்கள் தேவை <_<
 
ரகுமானில் பாடசாலையில் தனிய தமிழ் மாணவர்களோ அல்லது தென்னிந்திய மாணவர்களோ மட்டும் படிக்கவில்லை.வட இந்தியா மாண்வர்களும் படிக்கிறார்கள்.நான் இது வரையில் இவரது பாடசாலையில் ஒரு கஸ்டப்பட்ட தமிழ் மாணவன் படித்து முன்னேறி வந்ததாக கேள்விப்படவில்லை.அப்படி யாராவது கேள்விப் பட்டால் செய்தியைக் கொண்டு வந்து போடவும்.
 
ரகுமான் மட்டும் தான் புதுப் பாடக,பாடகிகளுக்கு சான்ஸ் கொடுக்கிறாரா?மற்றைய இசையமைப்பாளார்கள் கொடுக்கவில்லையா :o
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட சையத் சுபகான் இஸ்லாமிய தமிழர். :)

இவர்கள் இருவரையும் நாங்கள் பிரித்து பார்க்கவில்லை.

 

யாழ்கள உறவுகள் திவாகருக்கு அடுத்து இவருக்கே வாக்குகள் போட்டிருந்தோம்.

திறமையின் அடிப்படையில் திவாகர் தான் முன்னணியில், திவாகருக்கு அடுத்ததாக சையத் சுபகான். :)

final இலும் இருவரும் மற்றவர்களை விட நன்றாக பாடியிருக்கிறார்கள். நடுவர்களின் தீர்ப்பு படி அவர்கள் வாக்கு சையத் சுபகானுக்கு என கூறினார்கள். மக்களின் வாக்குகள் படி திவாகர் முதலிடம் பெற்றார்.

 

என்னை பொறுத்தவரை இவ்வளவு காலம் பாடிய பாடல்களை வைத்தும் final இல் பாடிய பாடலை வைத்தும் திவாகருக்கு முதலிடம் கிடைத்தது சரியானது. :)

 

 

நீங்கள் எழுதியதன்படி பார்த்தால்

திறமை 

திவாகரிடமில்லை.

ஆனால் தமிழர்கள் முடிவெடுத்து

போட்டுத்தள்ளியது

ஒருவரை முன் நிறுத்தணும்

வெல்லவைக்கணும் என்று.

அதனால் தான் இருவருக்குமிடையிலான இந்த வாக்கு வித்தியாசம்

இருவரில் எவர்  வந்தாலும் பரவாயில்லை என வாக்களித்திருந்தால்

இவ்வளவு வித்தியாசத்தில் வந்திருக்கவும் முடியாது

சிலவேளை அது மற்றவர்களை  முன்னுக்கும் விட்டிருக்கலாம்

 

தமிழரின் ஒரு பொதுமையான முடிவும் எழுச்சியுமே இதைச்செய்துள்ளது

என்பதையே  குறிப்பிட்டேன்

நீங்கள் எழுதியதன்படி பார்த்தால்

திறமை 

திவாகரிடமில்லை.

ஆனால் தமிழர்கள் முடிவெடுத்து

போட்டுத்தள்ளியது

ஒருவரை முன் நிறுத்தணும்

வெல்லவைக்கணும் என்று.

அதனால் தான் இருவருக்குமிடையிலான இந்த வாக்கு வித்தியாசம்

இருவரில் எவர்  வந்தாலும் பரவாயில்லை என வாக்களித்திருந்தால்

இவ்வளவு வித்தியாசத்தில் வந்திருக்கவும் முடியாது

சிலவேளை அது மற்றவர்களை  முன்னுக்கும் விட்டிருக்கலாம்

 

தமிழரின் ஒரு பொதுமையான முடிவும் எழுச்சியுமே இதைச்செய்துள்ளது

என்பதையே  குறிப்பிட்டேன்

 

விசுகு அண்ணா, நடுவர்களின் முடிவை வைத்து திவாகருக்கு திறமையில்லை என எண்ணாதீர்கள். சையத் சுபகானை விட திவாகர் நன்றாக பாடுவார். இந்த திரியில் முதல் பக்கத்திலிருந்து இணைத்துள்ள இருவரது பாடல்களை பார்த்தே நீங்கள் அதை கண்டு கொள்ள முடியும். ஏற்கனவே திவாகர் பாடிய பாடல்களை பார்த்து விட்டு final performance பார்க்க முன்னமே நாம் வாக்களித்து விட்டோம்.

 

final performance இல் திவாகரை விட சையத்துக்கு நடுவர்கள் அதிக புள்ளிகள் வழங்கியிருக்கலாம். ஆனால் எனக்கு, திண்ணையில் அந்நேரம் உரையாடிய யாழ்கள உறவுகளுக்கு, மற்றும் பல மக்களுக்கு திவாகரின் இரண்டாவது சுற்று performance தான் அதிகளவில் பிடித்திருந்தது. திவாகர் வெற்றி பெற்றார்.

 

தமிழர்கள் முன்னிலை பெற வேண்டும் என நினைத்தாலும் திவாகர் சையத் ஆகிய இருவரில் திவாகரின் திறமையே அவரை வெல்ல வைத்தது.

சையத் மதுரையை சேர்ந்தவர்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இப்போட்டியில் வென்றதினால் திவாகரின் குடும்பம் இனி நல்ல நிலைக்கு வரப்போகிறது. இவருக்கு கிடைத்த சிலவாக்குகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளும் இருக்கிறது. திவாகர், சையத் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் வந்தது மிக்க மகிழ்ச்சி. இனி இவர்களை புலம் பெயர்ந்த நாடுகளில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்வுகளிலும் காணலாம்.

இந்த காணொளியில் 5 ஆவது நிமிடத்தில் சையத் சுபகான் தனது தாய்மொழி உருது என கூறுகிறார். :o:unsure: ஒரு கள உறவு தனிமடலில் சுட்டிக்காட்டினார். அவருக்கு நன்றி. :rolleyes:

 



ஆனால் சையத் மதுரையை சேர்ந்த இஸ்லாமிய தமிழர் எனவே முகநூலில் சிலர் கருத்துக்களில் பார்த்தேன்.

 

இது அவரது முகநூல் என நினைக்கிறேன். https://www.facebook.com/syed.subahan.1/info?collection_token=100001135796114%3A2327158227%3A8 இதிலும் hometown மதுரை என்றே உள்ளது. அவரது குடும்பத்தினரும் மதுரை என்றே போட்டுள்ளார்கள். அப்படியானால் பரம்பரையாக மதுரையில் குடியேறி விட்டார்களா? :unsure:  அல்லது முஸ்லிம் என்பதால் தாய்மொழி உருது என்கிறாரா? :unsure: (இலங்கை தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரேபிய மொழியை தாய்மொழி என கூறுவது போல்)

 

உருது, ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு, தமிழ் ஆகிய மொழிகள் தெரியும் எனவும் போட்டுள்ளார். :rolleyes:

 

எப்படியோ திவாகருக்கு முதலிடம் கிடைத்தது சந்தோசம். :)

 

இந்த திரியை எதற்கு திரும்ப மேலே கொண்டு வருவான் என நினைத்தாலும் பிழையாக சொன்னபடி விட்டிட கூடாது. அதுதான் எழுதினேன். :(

Edited by துளசி

சுட்டிக்காட்டியதற்கு நன்றி!! 

  • தொடங்கியவர்

இறுதிச்சுற்று முடிந்தபின்பு.........

 

 

http://www.youtube.com/watch?v=LwMBjrJ9Pxw

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.