Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் மிக உயரமான சிவபெருமான் சிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்தின் மிக உயரமான 25 அடி கொண்ட சிவபெருமான் சிலை யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் – சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

sivaparuman.png

இத்திருவுருவ சிலை தமிழர் முறைப்படி நேற்று ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு, அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

யோகர் சுவாமிகளின் சிவ தொண்டர் அமைப்பை சேர்ந்தவர்கள் இவற்றை முன்னின்று மேற்கொண்டு உள்ளார்கள்.

 

சம்புநாதர் ஆலயத்தை சுற்ற உள்ள ஆலயங்களில் இருந்து சிவனடியார்களால் ஓம் நம சிவாய என்கிற மந்திர பாராயணத்துடன், பூரண கும்பங்கள் கொண்டு வரப்பட்டு, சம்புநாதர் ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

 

இலங்கையிலேயே முதன்முதலாக தமிழ் முறைப்படி திருக்குடமுழுக்கு இடம்பெற்று உள்ள கோவில் இதுவே ஆகும்.

 

http://www.e-jaffna.com/archives/22504

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்... சரியான நடவடிக்கை.. :D சம்பிக்கவுக்கு கொதி ஏறப்போகுது.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்... சரியான நடவடிக்கை.. :D சம்பிக்கவுக்கு கொதி ஏறப்போகுது.. :huh:

 

அவர் கலங்கமாட்டார். உதுக்குப் பக்கத்தில உதவிட பெரிய விகாரையை கட்டிவிட்டால் அவர் மனம் அடங்கிடும். நயினாதீவில.. நடந்தது தெரியுமில்ல. :):lol:

தட்சணை என்ரறபெயரில் பூசாரிக்கும் நிறைய பொயிறுக்குமே?

அவர் கலங்கமாட்டார். உதுக்குப் பக்கத்தில உதவிட பெரிய விகாரையை கட்டிவிட்டால் அவர் மனம் அடங்கிடும். நயினாதீவில.. நடந்தது தெரியுமில்ல. :):lol:

 

உதுக்குப் பக்கத்தில கட்டியாச்சே..!!! நீங்க எங்க இருக்குறீங்கள்?! 

 

dam1-Copy.jpg

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குப் பக்கத்தில கட்டியாச்சே..!!! நீங்க எங்க இருக்குறீங்கள்?! 

 

dam1-Copy.jpg

 

நான் நினைச்சன்.. கொஞ்சம் தூரமாக்கும் என்று. அப்ப.. கட்டிப்போட்டுத்தான்.. உதைக் கட்ட விட்டவையோ..??! எனி ஒரு பள்ளிவாசலையும் கட்டிட்டால்.. மாதகலில்.. மத நல்லிணக்கம் ஆகிடும். :lol::D

Edited by nedukkalapoovan

மாதகலாரும் சுழிபுரத்தாரும் சம்பில்துறை தங்களது என்று உரிமை கோர... இவங்கள் அது சம்புகோளப் பட்டின, ஒருத்தருக்கும் உரிமை இல்லை தங்களுக்குத்தான் உரிமை என்று..... 1998ல நேவிக்காரங்கள் மூலம் 65 நாட்களில கட்டிப்போட்டாங்களாம்!! 

 

Most of the the structures in the temple including the stupa which has been completed in a record 65 days have been done by the Sri Lankan Navy. Even the current bo tree was planted in 1998 by the Navy.

http://amazinglanka.com/wp/dambakola-patuna/

Edited by sOliyAn

தட்சணை என்ரறபெயரில் பூசாரிக்கும் நிறைய பொயிறுக்குமே?

 

அதென்ன சைவ மதத்தை தாக்குவதையே பொழுது போக்காக் கொண்டு இருக்கிறியள், நீங்கள் என்ன திராவிட கும்பலை சேர்ந்தவரா? இ.வே.ராமசாமியின் முகவரா??

நான் நினைச்சன்.. கொஞ்சம் தூரமாக்கும் என்று. அப்ப.. கட்டிப்போட்டுத்தான்.. உதைக் கட்ட விட்டவையோ..??! எனி ஒரு பள்ளிவாசலையும் கட்டிட்டால்.. மாதகலில்.. மத நல்லிணக்கம் ஆகிடும். :lol::D

 

பள்ளிவாசல் கட்டும் போது முக்கியமான விடயம்,சிவபெருமானுடைய சிலையை இடித்து தள்ளி விட்டுத் தான் கட்ட வேண்டும், அது தான் இஸ்லாம் மதத்தின் பண்பு, அதன் அவர்க்ளுடைய ஸ்ட்டைல்.

உலகிலேயே முதலாவது தமிழ்த் திருக்குடமுழுக்கு சம்புநாத ஈஸ்வரத்தில்

 

 

சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் சிவதொண்டர் அமைப்பால் நிர்மாணிக்கப்பட்ட சிவபெருமானின் 21 அடி உயரமான சிவபெருமானின் திருச்சொரூபத்திற்கு உலகிலேயே செந்தமிழ் திருமறையில் அமைந்த முதலாவது திருக்குடமுழுக்கு நேற்று முன்தினம் (02.02.2014) ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

சம்புநாதஈஸ்வர ஆலய குரு முதல்வர் சிவத்திரு நரசிங்க சித்தர் சுவாமிகளின் ஆசியுடன் நடைபெற்ற இந்தக் குடமுழுக்கு நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்தும் சுவிட்ஸர்லாந்து மற்றும் லண்டன் மாநகரிலிருந்தும் வருகை தந்த புலம்பெயர் உறவுகள், தாயகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் சிவதொண்டர்களும் கலந்துகொண்டனர்.

சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் உள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலய அருட்சுனைஞர்கள் செந்தமிழ் வேள்விச் சதுரர் திருவருள் மு.பெ.சத்தியவேல் முருகனாரின்  மாணாக்கர்களாகிய சிவருசி.தர்மலிங்கம் சசிக்குமார், ஞானத்திரு.திருச்செல்வம் முரளிதரன், சிவஞானசித்தர்பீட நிறுவுனர் சிவயோகநாதன் ஆகியோர் இணைந்து திருக்குடமுழுக்கினை செந்தமிழ் திருமறையில் நடத்தினார்கள்.

காலை 8 மணிக்கு செந்தமிழ் திருமறையில் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றது. முற்பகல் 10.30 மணிக்கு தியான சிவபெருமானுக்கு திருக்குடமுழுக்கு இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தைச் சூழவுள்ள பக்தர்கள் தத்தம் ஆலயங்களில் இருந்து கும்பங்ளைச் சுமந்தவண்ணம் சம்புநாதஈஸ்வரத்தை வந்தடைந்து அந்தக் கும்ப நீரால் சிவபெருமானின் தியான திருச்சொரூபத்திற்கு அபிடேகம் செய்தனர்.

குடமுழுக்கு தினத்தன்று வானம் தெளிவாக இருந்த போதிலும் பிரதான கும்பத்திற்கு விசேட பூசை இடம்பெற்றவேளை மழைத்தூறல்கள் வீழ்ந்தமை தமிழ்த் திருக்குடமுழுக்கின் சிறப்பை வெளிப்படுத்தியிருந்தது. இந்த திருக்குடமுழுக்கு விழாவில் 150 வரையானோருக்கு சிவருசி த.சசிக்குமாரினால் செந்தமிழில் சிவதீட்சை வழங்கப்பட்டது.

உலகத்திலேயே சிவபெருமானின் தியான திருச்சொரூபத்திற்கு செந்தமிழ் திருமறையில் இடம்பெற்ற இந்த திருக்குடமுழுக்கு விழாவிற்கு நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் ஆறு.திருமுருகன் உள்ளிட்ட பல ஆன்மீகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

சமஸ்கிருதத்திலேயே இதுவரை இடம்பெற்ற திருக்குடமுழுக்கு மற்றும் பூசைகளைப் பார்த்து தரிசித்த மக்களுக்கு இந்த தமிழ் திருமறையில் அமைந்த திருக்குடமுழுக்கு முற்றிலும் வித்தியாசமாக அமைந்தது. இந்த முறை தொடர்பில் தமது மகிழ்ச்சியை வெளியிட்ட சைவத் தமிழ் மக்கள் இனிமேல் இவ்வாறான முறைகள் பின்பற்றப்படுவதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினர்.

1.JPG

2.JPG

4.JPG

6.JPG

8.JPG

11.JPG

12.JPG

13.JPG

14.JPG

http://www.sankathi24.com/news/38105/64//d,fullart.aspx


யாழில் வட இந்திய முறையில் ஒரு கிறிஸ்ன கோவிலும் கட்டப்படுகிறது .முழுக்க முழுக்க வட இந்திய கட்டிடக் கலையில்  இந்திய துணை தூதரக அனுசரணையில்

முகத்தை இன்னும் சற்று அழகாகச் செய்திருக்கலாம்.

 

Lord-Shiva-and-Goddess-Ganga-Statue-on-t

 

 

Shiva-in-Rishikesh.jpg

 

 

5491_126477571081_510551081_2912652_5395

 

 

பிரச்சனைகள் முடிந்ததன் வெளிப்பாடு.....

 

மாதகல் சிவனை பார்க்க புத்தருக்கு சிவன் வேடம் இட்டது போல இருக்கு

Edited by naanthaan

அதென்ன சைவ மதத்தை தாக்குவதையே பொழுது போக்காக் கொண்டு இருக்கிறியள், நீங்கள் என்ன திராவிட கும்பலை சேர்ந்தவரா? இ.வே.ராமசாமியின் முகவரா??

எப்போதும் இறைவனை நினைக்கிறேன் அதனால் எல்லா மதங்களையும் வெறுக்கிறேன்.

பூசாரியைத்தான் தாக்கினேன் தெளிவாக பார்க்கவும்.

கடவுளை விற்று வயிறு வளர்க்கிலும் பார்க்க பிச்சை எடுக்கலாம்.

நான் திராவிட கும்பல் என்றால் நீங்கள் என்ன ஆரியனா? ஆரிய பார்ப்பணணா?

நான் இ.வே ராமசாமியின் முகவர் என்றால் நிங்கள் என்ன சுப்பிரமணியன் சுவாமியின் முகவரா?

பி.கு: எல்லமதங்களும் திருடர்கள்தான் ஆனால் இந்துக்களுக்குத்தான் அதிகம் வலிக்கிறது.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிலை வடிவமைப்பின் பின்னால்.. மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம் உள்ளது.

 

budda.png

 

buddh2-215x300.jpg

 

சிறீலங்கா சித்திரக்கலையில்.. புத்தரின் தியான நிலை.. என்பது அக்குவேறு ஆணிவேறாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. வைசத்தின் முழுமுதற் கடவுளான சிவன்... சைவ சித்தாந்த நிலைகளில் தான்.. தியானத்தை கடைப்பிடிப்பார். ஆனால்.. இது முழுக்க முழுக்க புத்தரின் தியான சித்திரக்கலை சாயலை கொண்டு ஆக்கப்பட்டுள்ள சிவன் சிலை.

 

இது தமிழர்கள் வந்தேறு குடிகள்.. சிங்களவர்களின் கலையம்சங்களை கொப்பி பண்ணி இருக்கிறார்கள்.. என்று வரலாற்றை மாற்றி எழுத கட்டப்பட்டிருக்குமோ என்ற சந்தேகமே இருக்கிறது. காரணம்.. மாதகலில் தான் புத்த மதம் முதன்முதலில் வந்து இறங்கியதாக அண்மை ஆண்டுகளில்.. புனையப்பட்ட.. புதுக்கதை ஒன்றை சிங்களவர்கள் வெளியிட்டிருந்தார்கள். அதன் கீழ் அங்கு புத்தருக்கு கோவிலும் கட்டப்பட்டுள்ள நிலையில்.... இந்தச் சிவன் சிலை.. புத்தரின் தியான கலையம்சங்களோடு அமைக்கப்பட்டிருப்பதும்.. அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்.. அதனை பிரமாண்டமாக அமைத்திருப்பதும்.. சாதாரண நிகழ்வாக கருத முடியாததாக உள்ளது.

 

இப்படி ஒரு தியான நிலை.. சிவனுக்குரியதா..?????????????! என்ற கேள்விக்கு விடையை சைவ நெறி கற்றுப் புலமை பெற்றோர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். குறிப்பாக வைசத்தில் நம்பிக்கையும்.. பற்றுதலும் கொண்ட வடக்கு மாகாண சபை முதல்வர் விளக்க வேண்டும்..???! :icon_idea::)


பிரச்சனைகள் முடிந்ததன் வெளிப்பாடு.....

 

மாதகல் சிவனை பார்க்க புத்தருக்கு சிவன் வேடம் இட்டது போல இருக்கு

 

பிரச்சனை என்ன என்பதை நீங்கள் பார்க்கிற விதத்தில் இருக்குது.. முடிஞ்சுதோ தொடருதோன்னு. ஆனால் உண்மையில்.. இப்ப தான் பிரச்சனை முத்தி இருக்குது..!

 

செல்லடியும்.. பொம்பர் அடியும்.. இராணுவ நடவடிக்கைகளும் பிரச்சனைகளே அல்ல. அவற்றிற்கு மூலகாரணமாக இருந்த பின்புலக் காரணிகள் தான் பிரச்சனையே. அவை.. இன்று நன்கு வலுப்பெற்றுள்ளன. அந்த வகையில்.. பிரச்சனை.. இன்னும் வலுப்பட்டுள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தை இன்னும் சற்று அழகாகச் செய்திருக்கலாம்.

 

Lord-Shiva-and-Goddess-Ganga-Statue-on-t

 

 

Shiva-in-Rishikesh.jpg

 

 

5491_126477571081_510551081_2912652_5395

 

அது மட்டுமல்ல. சிவனும்.. புலியும்.. நெருங்கிய தொடர்புடையவர்கள். சிவன் புலித்தோல் ஆடை அணிந்திருப்பார் அல்லது.. புலித்தோல் மீது உட்கார்ந்திருப்பார்.. அல்லது புலி மீதிருப்பார். அங்கு அந்த அடையாளங்களே இல்லையே..??! :lol::D

 

Shiva_Bijapur.jpg

 

im0805-47_shiva.jpg

 

lord_shiva4.jpg

 

  :)

Edited by nedukkalapoovan

சிவம் எனும் தமிழ்ச்சொல் அருவமும் உருவமும் இல்லா அந்த பரம்பொருளை குறிக்கும் சொல். பின்னர் உருவமாகவும் சிலையாகவும் உருவக்ப்படுத்தி வியாபாரமாக்கப்டுவது சுரண்டலுக்கு சமமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.