Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சு பொறுக்குதில்லயே இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்துவிட்டால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

V.I.P நிகழ்வுகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்து கொள்வது ஒன்றும் புதிய விடயமோ அல்லது  வழக்திட்குமாரானதுமோ   அல்ல. எனினும் இங்கே (மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு) கலந்து கொண்டவர்கள் அனைவரும்  இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள். கூடவே இவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நெருங்கிய உறவினர்கள்.

இலங்கை திடீர் கோடீஸ்வரர் குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட  ராஜபக்ஷ (Pvt) Limited அனைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் பட்டியல்.

மணமகன் மனோஜ் ராஜபக்ஷ - கோத்தபாய ராஜபக்ஷவின் மகன்.

இதோ அந்த விழாவில் சமூகம் தந்தவர்களின் பட்டியல்.

 

1. கோத்தபாய ராஜபக்ஷ - (தந்தை, பாதுகாப்பு செயலாளர்,  "மிக் ஒப்பந்த" ராஜா, இன்னும் எண்ணில் அடங்கா அரசியல் கைங்கரிய கபடதாரி, ஊடகத்துறையின் சிம்ம சொப்பனம்.

 

2. மஹிந்த ராஜபக்ஷ - நாட்டின் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளரின்   சகோதரர், ஹம்பாந்தோட்டை நகரை குத்தகைக்கு எடுத்து லவட்டியவர் .. மன்னிக்கவும் உதவியவர் (விலை 72 மில்லியன் )

 

3. பசில் ராஜபக்ஷ - ஒரு பலம் பொருந்திய அமைச்சர் (கம்பஹா மாவட்டம்), இலங்கை சுதந்திர கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர், மற்றும் இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர். ( அப்டீனா என்ன, கிலோ என்ன வெல)

 

4. சாமல் ராஜபக்ஷ - (துறைமுக ஒப்பந்த தயாரிப்பாளர்) பாராளுமன்ற  பேச்சாளர்முறையே #1, #2, #3 இவரின் பாசமுள்ள தம்பிகள்

 

5. நாமல் ராஜபக்ஷ - ஜனாதிபதியின் மகன், பாராளுமன்ற உறுப்பினர்,   அவரது தந்தை வழியில் அடுத்த வாரிசு என்று பரவலாக நம்பப்படுகிறது. தங்க விற்பனை கமிஷன் மூலம் மில்லியன் கணக்கான வருமானம் பெற்றதாக தகவல் (aka Gold Digga), 2010 இலங்கை சட்ட கல்லூரி இறுதி தேர்வில் தில்லு முள்ளு செய்தே சித்தி அடைந்தார். ( இவருக்காக குதிரை ஓடியவரின் கை, கால் முறிக்கப்பட்டது ஒரு தனிக் கதை )

 

6. அசந்த டி-மேல் முன்னால் கிரிகெட் வீரர்,  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிபர், இலங்கை கிரிக்கெட்தேர்வாளர்கள் சபைத் தலைவர், அதோடு முதற் பெண்மணி சிரந்தி  ராஜபக்ஷவின் ஒரு மிக நெருங்கிய உறவினர்ஒரு சுணெய் கெட்ட ஒப்பந்தத்தில் நுழைந்து நாட்டிக்கு சுமார்  ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான பாரிய இழப்பை ஏற்படுத்திய இள்ளீகள்.

 

7. சஜின் வாஸ் குணவர்தன-  முன்னாள் மிஹின் எயார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ஜனாதிபதியின் சர்வதேச விவகார ஆலோசகர் (அப்ப அப்ப தேவையான குஜிலி சப்ளை), தென் மாகாண சபை உறுப்பினர். மிஹின் எயார் ரூ 3 பில்லியன் இழப்புகளுக்கு பொறுப்பு கூறவேண்டிய அவசியம் அறியாத கோமகன். ராஜபக்ஷக்களுக்கும் ஒரு மிக நெருங்கிய கூட்டாளி.

 

 8. நிஷாந்த விக்ரமசிங்க - ஸ்ரீலங்கன் விமான நிறுவன தலைவர். இவரின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு மறு தேசியமயமாக்கலின் பின்னர் ரூ 9,000 பில்லியன் செலவில் இயங்கி வருகிறது. இவர் முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ அவர்களின் சகோதரர். ஒரே நாளில் தன் குஜிலிக் காதலிக்காக 6.2 மில்லியன் செலவளித்த தனவான். உயரே பறந்த விமான சேவையை கிராஷ் லேன்ட் நிலைக்கு கொண்டு வந்தவர்.

 

9. ஷஷிண்ட ராஜபக்ஷ - ஊவா மாகாணம் முதல்வர், டியவடன நிலமே - கதிர்காமம் (நம்ம கோயில் தர்மகர்த்தா மாதிரி) ராஜபக்ஷவின்  முன்னாள் தனி செயலர்,   துறைமுக, விமான போக்குவரத்து அமைச்சர், சாமல் ராஜபக்ஷவின் மகன், அட நம்ம  ஜனாதிபதி ராஜபக்ஷவின் மருமகன்.

 

10. ஷேநீரசா இராஜபக்ஷ - சமல் ராஜபக்ஷ (துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சரின் மகன்). அப்பா சமல் ராஜபக்ஷவின்  பிரத்தியேக செயலாளரும் இவரேமேலதிக போனஸ் … ஜனாதிபதியின் மருமகன்.

 

11. தில்ஷன் விக்கிரமசிங்க -  நிஷாந்த விக்ரமசிங்க ஸ்ரீலங்கன் விமான நிறுவன தலைவரின் சகோதரர். முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவின் மருமகன். E Governence ஒப்பந்தம் மூலம் 16 மில்லியன் அமெரிக்க டாலர் இவர் வசம் .. இலவசம்.

 

12. உதயங்க வீரதூங்க -   ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர். ஜனாதிபதி ராஜபக்ஷவின் நெருங்கிய  உறவினர். இலங்கை விமானப்படையின் மிக் ரக விமானங்களை வாங்கும்  நிழல்  ஒப்பந்தத்தில்  சம்பந்தப்பட்ட நபர்.

 

13. ஜாலிய விக்ரமசூரிய - இவர் ஐக்கிய அமெரிக்காவுக்கான   இலங்கை தூதுவர். ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர். பொய் மட்டுமே உரைக்கும் ஜாலியான பேர்வழி. 

 

14. சி. விக்ரமசூரிய - விமான நிலைய ஆணையத்தின் தலைவர் . ஜாலிய விக்ரமசூரிய  (அமெரிக்கா இலங்கை தூதுவர்) அவர்களின்  சகோதரர் மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தின்  மிக நெருங்கிய உறவினர்.

 

15. சந்திர ராஜபக்ஷ நிதி அமைச்சரின்  பிரத்தியேக செயலாளர். ஜனாதிபதி ராஜபக்ஷவின் மற்றொரு சகோதரர்.

 

16. சமிந்த ராஜபக்ஷ - ஜனாதிபதியின் ஆலோசகர் மற்றும் அம்பாந்தோட்டை ஒருங்கிணைப்பு செயலாளர். சந்திர ராஜபக்ஷவின்  மகன் மற்றும் ஜனாதிபதி ராஜபக்ஷவின்  மருமகன்.

 

17. ஜயந்த விக்கிரமசிங்க - தலைமை நிர்வாக அதிகாரி, இலங்கை லாஜிஸ்டிக்ஸ், இலங்கை இராணுவ ஆயுத கொள்வனவுக்கு பொறுப்பான அமைப்பு, சட்டம் ஜனாதிபதியின் ஒரு சகோதரியின் கணவர்.

 

18. காமினி விக்கிரமசிங்க - தலைவர், இலங்கை வங்கி. மேலே சொன்ன ஜயந்த விக்கிரமசிங்கவின்  சகோதரர்.

 

20. ஹிமால் லாளீன்ற ஹெட்டியாராச்சி - தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்கை நெட்வொர்க்ஸ். அவரது தாயார் ஜனாதிபதி ராஜபக்ஷவின்  சகோதரி. இவர் இலங்கை தொலைதொடர்பு திணைக்கள நிதியில் இருந்து ரூ 100 மில்லியன் ஒதுக்கி (சுரண்டிவைமாக்ஸ் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை பெற்ற மோசடி பேர்வழி.

 

21. கபில ராஜபக்ஷ  தென் மாகாண சபையின் அங்கத்தினர்,  ஜனாதிபதி பெரியப்பாவின் மகன்.

 

22. உபுல் திஸாநாயக்க - கபில ராஜபக்ஷவின் சகோதரர், தலைமை செயல்பாட்டு மேலாளர் லேக் ஹவுஸ் நிலையம்.

 

23. டாக்டர் லலித் சந்திரதாச ஜனாதிபதியின் சகோதரி ப்ரீத்தியின் கணவர் இலங்கை காப்புறுதி ஆணைக்குழு  உறுப்பினர்.

 

24. சரத் வீரதுங்க  - ஜனாதிபதியின் நெருங்கிய     உறவினர்  அரசுக்கு  சொந்தமான பிரமூக்க  வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி.

 

25. ஜாலிய  விக்ரமசூரிய அவர்களின்  சகோதரி -  ஜனாதிபதிக்கான அலுவலக  ஒருங்கிணைப்பு செயலாளர்.

 

26. நாமல் ராஜபக்ஷ - ஜனாதிபதியின் மகன் ,  தலைவர் தருண யன்ட  ஹெட்டக் (இளைஞ்சர்களுக்கான எதிர்காலம்) தேசிய அமைப்பு

அப்டியே ஒன்னு இருக்கா என்ன !! 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

03.jpg

 

02.jpg

 

01.jpg

உள்ளுக்க போக முதல் கொஞ்ச நாளுக்காவது சந்தோசமாக இருக்கட்டும் . :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Manoj-Rajapaksha-Home-coming.jpg

 

Mahinda-Shiranthi-Rajapaksha-at-homecomi

  • கருத்துக்கள உறவுகள்
இந்தக் கல்யாணம் நடந்தது போன வருசம்.இதைக் கொண்டு வந்து இப்ப போட்டுக் கொண்டு :lol:  <_<
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கேடு கெட்டவங்களிண்ட படத்தைக் கொண்டுவந்து இதில போட்டதைப் பார்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கேடு கெட்டவங்களிண்ட படத்தைக் கொண்டுவந்து இதில போட்டதைப் பார்க்க

 

சும்மா இதிலை எழுதி எந்தப் பிரியோசனமும் இல்லை.   ஏதாவது செய்ய முனையுங்கள்.  அதை விட்டிட்டு இப்பிடி எழுதி உங்களை நீங்கள் தியாகியாக்க முனைகிறீர்களா?  இதாலைதானே நாங்கள் அழிந்தோம்.  சும்மா வாய் வீரம் காட்டி....

சும்மா இதிலை எழுதி எந்தப் பிரியோசனமும் இல்லை. ஏதாவது செய்ய முனையுங்கள். அதை விட்டிட்டு இப்பிடி எழுதி உங்களை நீங்கள் தியாகியாக்க முனைகிறீர்களா? இதாலைதானே நாங்கள் அழிந்தோம். சும்மா வாய் வீரம் காட்டி....

சும்மா வாய் வீரம் காட்டியா 60,000 சிங்கள கூலிகள் இறந்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

1- சும்மா இதிலை எழுதி எந்தப் பிரியோசனமும் இல்லை.   ஏதாவது செய்ய முனையுங்கள். 

 

2- அதை விட்டிட்டு இப்பிடி எழுதி உங்களை நீங்கள் தியாகியாக்க முனைகிறீர்களா

 

3- இதாலைதானே நாங்கள் அழிந்தோம்.  சும்மா வாய் வீரம் காட்டி....

 

முதலாவது  உண்மை

எல்லோரும் செய்யணும்

செயலே முதல்

 

2- அவர் என்ன  செய்கிறார்  என்று அவர் எழுதுவார்

 

3- இதற்கு விளக்கம் வேண்டும்

செயலே முதலாவதாக  இருந்த அமைப்பு

வாய் வீரம் காட்டி அழிந்ததாக சொல்வது.....?? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த, கோத்தபாய, நாமல் என்று ஆட்சியில் இருக்க பலர் காத்திருப்பதால் புலிகளை அழித்து தமிழர்களை வென்றவர்களின் ஆட்சி இன்னும் பல தசாப்தங்கள் இலங்கையில் இருக்கும். எனவே அவர்களின் கைகளில்தான் முழு அதிகாரமும் இருக்கப்போகின்றது. இதில் மாற்றங்கள் வரவேண்டுமென்றால் அவர்களும் தமிழர்களுக்குரிய பண்புகளில் ஒன்றாகிய சகோதர யுத்தம் புரியவேண்டும். ஆனால் அவர்கள் தமிழர்கள் இல்லையே!

மகிந்த, கோத்தபாய, நாமல் என்று ஆட்சியில் இருக்க பலர் காத்திருப்பதால் புலிகளை அழித்து தமிழர்களை வென்றவர்களின் ஆட்சி இன்னும் பல தசாப்தங்கள் இலங்கையில் இருக்கும். எனவே அவர்களின் கைகளில்தான் முழு அதிகாரமும் இருக்கப்போகின்றது. இதில் மாற்றங்கள் வரவேண்டுமென்றால் அவர்களும் தமிழர்களுக்குரிய பண்புகளில் ஒன்றாகிய சகோதர யுத்தம் புரியவேண்டும். ஆனால் அவர்கள் தமிழர்கள் இல்லையே!

சகோதர யுத்தம் தொடங்கிவிட்டது என்ன அதை பற்றி எழுத லசந்த போன்றோர் இப்போது இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.