Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரு நிறுவனங்கள் உள்ளதாக கற்பனை செய்துகொள்வோம். ஒன்று நிறுவனம் "அ". மற்றையது நிறுவனம் "ஆ".

நிறுவனம் "ஆ"வுடன் ஒரு ஒப்பந்தம் போட முன்வருகிறது நிறுவனம் "அ". ஆனால் விலை நிர்ணயம் நிறுவனம் "ஆ"வுக்கு கட்டுப்படியாகவில்லை. அதனால் மறுத்துவிடுகிறது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பின்வரும் காலங்களில் வேறு எந்த ஒப்பந்தங்களும் எங்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்காது என்கிறது நிறுவனம் "அ".

வருங்காலத்தை எண்ணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது நிறுவனம் "ஆ". :unsure:

இந்த நடைமுறை சட்டப்படி தவறு. பொருளாதாரத்தைக் காட்டி பணியவைத்தல் தவறு. இது Economic Duress எனப்படும்.

கையெழுத்துப் போடும்போது யோசித்திருக்க வேண்டியதுதானே என்று நிறுவனம் "ஆ" வைப்பார்த்து நீதிமன்றம் கேள்வி கேட்காது.

அதுபோல, பொருளாதார தாழ்வு நிலையால் அல்லது திருமண நிமிர்த்தத்தால் அல்லது காதலால் மதம் மாறுபவர்களை குற்றம் சொல்ல முடியாது. மாற்றுபவர்கள்தான் அந்தக் குற்றத்தை ஏற்க வேண்டும்.

  • Replies 254
  • Views 33.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ்சூரியன்
    தமிழ்சூரியன்

    கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

  • சண்டமாருதன்
    சண்டமாருதன்

    நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

  • சண்டமாருதன்
    சண்டமாருதன்

    சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தமிழ் ஈழம் அடைத்தே தீரப்படும், உங்களுடைய ஆட்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் சைவர்களும், கிறிஸ்த்தவர்களும் தமக்குள் சண்டை பிடிக்க வேண்டியது இல்லை, போவதும் இல்லை அண்மைக்கலமாக இரணைமடு நீரை வைத்து யாழ்-வன்னி ப்ரச்சனையை ஆரம்பித்தீர்கள் அது பலிக்கவில்லை ,அதுக்கு முன்னர் உதயன் பத்திரிகையை கவிதையை வைத்து பிரச்ச்னையை ஆரம்பித்தீர்கள் அதுவும் நடக்கவில்லை இப்போது புதிதாக சைவம்-கிறிஸ்த்தவ பிரச்சனையை ஆரம்பித்துளீர்கள், இது என்னத்தை காட்டுகிறது என்றால் தமிழ் ஈழம் என்ற இலக்கு நெருங்குகின்றது வெகு தொலைவில் இல்லை என்பதே அதான் பிரச்சனையை கிளப்பி அதை குழப்ப முயற்சி செய்கிறீர்கள், ஆனால் தமிழ் ஈழம் நிறுவப்பட்டு அதன் பின் தமிழர் அல்லாதோர் எல்லம் வெளியேற்ற்பபடுவார்கள் அல்லது மலேசியா போல் இரண்டாம் தர பிரஜை ஆக்கப்படுவார்கள், தமிழ்ருக்கு உரிய மதம் என்றால் அது சைவம்,கிறிஸ்த்தவம்,புத்த மதம் மூன்றும் மட்டுமே.

ஆடறுக்க முதல்..

யாழ்பாணத்தில் இருந்து ஒரே நாளில் அகதியாக்கியதுபோல சுருக்கமாக இஸ்லாமியத் தமிழர்களை நாட்டைவிடடேவெளியேற்றுவோம் என்கின்றீர்கள். அல்லது அவர்களை அடிமைகளாக வைத்திருப்போம் என்கின்றீர்கள்.

இதை புலம்பெயர்ந்த நாட்டில் இருந்த வீரவேல் வெற்றிவேல் ரேஞ்சுக்கு அறிவித்துள்ளீர்கள்.

ஏற்கனவே இஸ்லாமியத்தமிழர்களை பிளவுபடுத்தி இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதம் என்று மாற்றினோம் என்பதை உங்கள் தேசீயத் திருவாயால் மலந்தருளியுள்ளீர்கள். இவற்றை வெளிக்கொண்டுவருவதற்காகவே இங்கெ மினைக்கெடுகின்றறேன். நன்றி

உங்கள் தூரநோக்கு விழைவு என்ன? தமிழீழம் கிடத்தால் இஸ்லாமியத்தமிழர்கள் வாழ்வு அழிக்கப்படும் என்பதை இப்போதே பிரகடனப்படுத்தி தமிழீழம் அமைவதை மதவாரியக தடைசெய்கின்றீர்கள்.

இலங்கையில் சிங்களவருக்கு அடுத்தபடி பெரும்பான்மை நிலையை எட்டிக்கொண்டிருப்பவர்களும் பெருளாதராத்தில் ஸ்திரத்தன்மையுடனும் இருப்பவர்களுமான இஸ்லாமியத்தமிழர்களை அச்சுறுத்தப்பார்கின்றீர்கள். இதனால் எதர்காலத்தில் உங்களுக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை ஏனெனில் நீங்கள் பிள்ளை குட்டிகளுடன் வெளிநாட்டில் பாதுகாப்பாக பதுங்கிவிட்டீர்கள். இவ்வாறன கருத்து விதைப்பிற்கு அறுவடையாவது மீளவும் தாயகத்தில் வறுமைப்பட்ட மக்களே !

இந்த முட்டாள்த்தனத்தையும் அறிவிலிநிலையையும் தான் மையவாதத் தளம் என்கின்றோம். இத்தளத்திலேயே போராட்டம் அழிந்து சிதைந்து போனது.

புலிகள் கூட இறுதிக்காலத்தில் இஸ்லாமியர் வெளியேற்றம் குறித்து வருத்தம் தெரிவித்தார்கள். இவ்வாறு நாடுகடத்தும் நிலையை அவர்கள் இறுதியில் கொண்டிருக்கவில்லை.

இரணைமடு பிரச்சனையில் எனது கருத்து

நடுகடந்த அரசு என்று அர்த்தமற்று அடயாளம் தேடும் அமைப்புகள் அவற்றை கலைத்து தொண்டு நிறுவனமாக தம்மை மாற்றி புலம்பெயர் தமிழர்கள் உதவியுடன் விக்கி சம்மந்தனுடன் இணைந்து சிங்கள அரசுடன் இணைந்து இவ்வாறான திட்டங்களை செய்ய முற்பட்டால் இவைகள் சாதராணமாக சாத்தியம். போரால் பாதிக்கப்பட்ட வன்னிமக்களுக்கான நிதியில் நீச்சல்குளத்தை யாழில் கட்டியதுதான் போகட்டும் இப்படியான வழங்கள் இருக்க எதற்கு விவசாய நீரில் கைவைக்கவேணும்? பறங்கியாற்றை திசைதிருப்பி வவுனிக்குளத்தில் இணைக்கும் திட்டம் புலிகளால் தொடங்கப்பட்டு இடையில் கைவிடப்பட்டுள்ளது. அவற்றை செய்து விவசாய வளத்தை பலப்படுத்தலாம். இது தமிழகத்தின் நதிநீர் பிரச்சனைபோல் வன்னிக்கும் யாழ்பாணத்துக்குமான பிரச்சனையாக மாற்றும் நோக்கே மறைமுகமாக உள்ளது. இந்து இஸ்லாம் என்ற பிரிவினை பிறகு வடக்கு கிழக்கு என்ற பிரிவினை இப்போது வன்னி யாழ்பாணம் என்று எதோ ஒன்று ஆரம்பிக்கின்றது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131010&page=2

இரு நிறுவனங்கள் உள்ளதாக கற்பனை செய்துகொள்வோம். ஒன்று நிறுவனம் "அ". மற்றையது நிறுவனம் "ஆ".

நிறுவனம் "ஆ"வுடன் ஒரு ஒப்பந்தம் போட முன்வருகிறது நிறுவனம் "அ". ஆனால் விலை நிர்ணயம் நிறுவனம் "ஆ"வுக்கு கட்டுப்படியாகவில்லை. அதனால் மறுத்துவிடுகிறது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பின்வரும் காலங்களில் வேறு எந்த ஒப்பந்தங்களும் எங்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்காது என்கிறது நிறுவனம் "அ".

வருங்காலத்தை எண்ணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது நிறுவனம் "ஆ". :unsure:

இந்த நடைமுறை சட்டப்படி தவறு. பொருளாதாரத்தைக் காட்டி பணியவைத்தல் தவறு. இது Economic Duress எனப்படும்.

கையெழுத்துப் போடும்போது யோசித்திருக்க வேண்டியதுதானே என்று நிறுவனம் "ஆ" வைப்பார்த்து நீதிமன்றம் கேள்வி கேட்காது.

அதுபோல, பொருளாதார தாழ்வு நிலையால் அல்லது திருமண நிமிர்த்தத்தால் அல்லது காதலால் மதம் மாறுபவர்களை குற்றம் சொல்ல முடியாது. மாற்றுபவர்கள்தான் அந்தக் குற்றத்தை ஏற்க வேண்டும்.

இதைதான் நானும் கூறுகிரேன் திருமணத்திற்காக மாறினால் அது மாறினவர்களின் தவறு, என்னுடைய கேள்வி ஒன்று தான் ஒரு கிறிஸ்த்தவரால் நீ மாறினால் தான் திருமணம் செய்வேன் என்று கூறமுடியுமானால் ஏன் அதையே ஒரு சைவனால் கூறமுடியாது உள்ளது, ஏன் சைவர்களுக்கு வாய் இல்லையா?? இதை முதலில் விளக்கவும் பின்னர் மீதியை விளக்கலாம்

இதைதான் நானும் கூறுகிரேன் திருமணத்திற்காக மாறினால் அது மாறினவர்களின் தவறு,

இசை அண்ணா சொன்னது மதம் மாறும்படி கேட்பவர்களில் (மதம் மாற்றுபவர்களில்) பிழை என்று.

யுவன் மதம் மாறுவது தொடர்பில் நான் இதுவரை கருத்து வைக்கவில்லை. ஆனால் கருத்து வைப்பவர்களை இந்திய இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவானவர்கள் என நீங்கள் கூற முடியாது. இந்திய இந்துத்துவ கொள்கையிலிருந்து இந்திய தமிழர்களும் தான் விலகி நிற்க விரும்புகிறார்கள். பா.ஜ.க போன்ற கட்சியை அவர்கள் எதிர்க்கிறார்கள். அதுபற்றி கதைத்து நீங்கள் திசை திருப்ப வேண்டாம். தமிழர்கள் தம்மை இந்து என கூறிக்கொண்டாலும் அவர்கள் தம்மை இந்திய இந்துத்துவ கொள்கையாளராக காண்பிக்கவில்லை.

நீங்கள் இங்கு சாதிக்கதை கதைப்பதை நிறுத்துங்கள். :) அடுத்த வினாடி கூட எதிர்காலம் தான். நாளை கூட எதிர்காலம் தான். :)

சைவ சமயத்தில் சாதி, சாக்கடை இருக்கு என்பதால் தான் மற்ற மதத்துக்கு மாறுகிறார்கள் என்று உங்களை போன்றோர் சொல்வதால் தான் மற்ற மதத்தில் சாதி, சாக்கடை இல்லையா என இங்கு கேட்கிறார்களே தவிர சைவ சமயத்தில் இல்லை என்று இங்கு யாரும் கூறவில்லையே?? இங்கு அடுத்தவன் முதுகை சொரிவது நீங்கள் தான். :)

யஹோவா செய்யும் வேலைகளை நீங்கள் நியாயப்படுத்துவீர்களா? எனது கத்தோலிக்க நண்பர்களே தமக்கு யஹோவாவை பிடிக்காது என கூறுவார்கள்.

உங்களிடம் நல்ல சட்டை உள்ளது என்றால் "உங்கள் கடவுள் தான் கடவுள் மற்றவர்களெல்லாம் கடவுளில்லை" அல்லது "உங்கள் மதம் தான் மதம் மற்ற மதங்கள் ஒன்றும் மதமில்லை" என்று மறைமுகமாக நீங்களும் கூற வெளிக்கிட்டிட்டீர்கள்.  :D சட்டை அழகாக இருந்தால் நாங்கள் வாங்கி அணியலாம் என்றால் வாங்கு வாங்கு என கட்டாயப்படுத்தி எதற்காக அணிய வைக்கிறார்கள்? அப்படியானால் உங்கள் சட்டை நல்லதில்லை என கூற வருகிறீர்களா? :D

நீங்கள் இங்கு எதற்காக சைவ சமயத்தவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்து எழுதுகிறீர்கள்? உங்கள் சட்டையை நீங்கள் போட்டுள்ளீர்கள். அதில் சைவ சமயத்தவர் குறுக்கீடு செய்கிறார்களா? ஆனால் சைவ சமயத்தவரை இந்த சட்டையை போடு என மற்றைய மதத்தவர்கள் குறுக்கீடு செய்தால் நாம் அதுபற்றி குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது. எனக்கு மதம் மாறவும் பிடிக்காது. ஆனால் அடுத்தவன் தானே என்னை மாறு என கேட்கிறான். இங்கே மூக்கை நுழைப்பது நானா இல்லை அவர்களா? :D

உங்கள் எழுத்துக்கள் சைவ சமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் தமக்குள் முரண்பட வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட ஒன்று. :lol:

முரண்பாட்டை வளர்ப்பது நீங்கள். நான் ஆடுத்த மதத்தில் குறை கண்டுபிடிக்கவோ மூக்கை நுழைக்கவோ எந்தக் கருத்திலும் செய்யவில்லை. என் சார்ந்த மதத்தில் என்ன பிழையோ அதிலேயே எனது விமர்சனம் நிற்கின்றது. வேறு மதங்களில் உள்ள பிரச்சனை பற்றி கதைக்கவேண்டியது அவர்கள் தவிர நானில்லை. அவ்வாறு நான் கதைத்தால்தான் அது மதப்பிரச்சனை. மத முரண்பாட்டை வளர்பதில் கங்கணம் கட்டி நிற்பது நீங்கள். எங்காவது நான் கிருத்துவத்தில் அந்தப் பிழை இருக்கின்றது இஸ்லாத்தில் இந்தப் பிழை இருக்கின்றது என்று சொல்லியுள்னோ? சொன்னால் அது மதப்பிரச்சனை. அதை நீங்கள் எப்படித்தான் தூண்டினாலும் நான் செய்யப்போவதில்லை. ஏனெனில் நான் மத முரண்பாட்டிற்று எதிரானவன்.

சைவம் இந்துத்துவம் தனது சாதீய மத வெறியால் தமிழர்கள் வாழ்வை சுடுகாடாக்குவதில் பெரும் பங்கு வகித்தது. இன்னும் வகித்துக்கொண்டிருக்கின்றது. அது சார்ந்த விமர்சனத்தை நான் எப்போதும் செய்வேன். பிழை இருக்கும் வரை அதை திருத்த மறுக்கும் உங்கள் போன்றோர் இருக்கும் வரை விமர்சனம் என்பது இருக்கும் தவிர மத வேற்றுமைகளை வளர்க்கும் உங்கள் எண்ணம் எனது கருத்தில் இருக்கப்போவதில்லை. அதனால் ஏற்பட்ட அழிவுகள் வெளிப்படையானது.

எனது எல்லை இந்து சைவம் போன்றவற்றுக்குள்ளானது என்பதில் நான் தெளிவாய் இருக்கின்றேன். இங்கு சிலர் என்னை கிருத்துவத்தில் கொண்டுபேய் செருகினாலும் சரி இஸ்லாத்தில் கொண்டுபோய் செருகினாலும் சரி இல்லை பௌத்தத்தில் கொண்டுபோய் செருகினாலும் சரி நான் யார் என்பதில் எனக்குத் போதிய தெளிவுண்டு.

எக்காலத்திலும் சொந்த மதத்தில் உள்ள குறைகளை கழைய மறுக்கும் உங்களுக்கு அடுத்த மதத்திலும் அப்படித்தான் அங்கேயும் இப்படித்தான் இங்கேயும் இப்படித்தான் என்ற சாக்குப் போக்கும் விரோதமும் அவசியம் தவிர எனக்கில்லை.

ஆடறுக்க முதல்..

யாழ்பாணத்தில் இருந்து ஒரே நாளில் அகதியாக்கியதுபோல சுருக்கமாக இஸ்லாமியத் தமிழர்களை நாட்டைவிடடேவெளியேற்றுவோம் என்கின்றீர்கள். அல்லது அவர்களை அடிமைகளாக வைத்திருப்போம் என்கின்றீர்கள்.

இதை புலம்பெயர்ந்த நாட்டில் இருந்த வீரவேல் வெற்றிவேல் ரேஞ்சுக்கு அறிவித்துள்ளீர்கள்.

ஏற்கனவே இஸ்லாமியத்தமிழர்களை பிளவுபடுத்தி இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதம் என்று மாற்றினோம் என்பதை உங்கள் தேசீயத் திருவாயால் மலந்தருளியுள்ளீர்கள். இவற்றை வெளிக்கொண்டுவருவதற்காகவே இங்கெ மினைக்கெடுகின்றறேன். நன்றி

உங்கள் தூரநோக்கு விழைவு என்ன? தமிழீழம் கிடத்தால் இஸ்லாமியத்தமிழர்கள் வாழ்வு அழிக்கப்படும் என்பதை இப்போதே பிரகடனப்படுத்தி தமிழீழம் அமைவதை மதவாரியக தடைசெய்கின்றீர்கள்.

இலங்கையில் சிங்களவருக்கு அடுத்தபடி பெரும்பான்மை நிலையை எட்டிக்கொண்டிருப்பவர்களும் பெருளாதராத்தில் ஸ்திரத்தன்மையுடனும் இருப்பவர்களுமான இஸ்லாமியத்தமிழர்களை அச்சுறுத்தப்பார்கின்றீர்கள். இதனால் எதர்காலத்தில் உங்களுக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை ஏனெனில் நீங்கள் பிள்ளை குட்டிகளுடன் வெளிநாட்டில் பாதுகாப்பாக பதுங்கிவிட்டீர்கள். இவ்வாறன கருத்து விதைப்பிற்கு அறுவடையாவது மீளவும் தாயகத்தில் வறுமைப்பட்ட மக்களே !

இந்த முட்டாள்த்தனத்தையும் அறிவிலிநிலையையும் தான் மையவாதத் தளம் என்கின்றோம். இத்தளத்திலேயே போராட்டம் அழிந்து சிதைந்து போனது.

புலிகள் கூட இறுதிக்காலத்தில் இஸ்லாமியர் வெளியேற்றம் குறித்து வருத்தம் தெரிவித்தார்கள். இவ்வாறு நாடுகடத்தும் நிலையை அவர்கள் இறுதியில் கொண்டிருக்கவில்லை.

இரணைமடு பிரச்சனையில் எனது கருத்து

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131010&page=2

அப்படியானால் ஒரு சைவனால் மலேசியாவில் பிரதம்ராக முடியுமா? ஏன் ஒரு வியாபார நிறுவன்ம் கூட தொடங்க முடியாது, நான் எங்கேயும் இஸ்லாமியர வெளியேற்றுவோம் என்று கூறினேனா? இஸ்லாம் என்ற வார்த்தையே பாவிக்கவில்லையே தமிழர் அல்லாதோர் என்றே கூறினேன், ஏன் சவுதியில் கோவில் கட்ட முடியுமா., எல்லா இனத்தவனும் தந்து நாட்டையும் தேசத்தையும் காப்பாறலாம் ஆனால் தமிழன் மட்டும் தான் இழிச்ச்வாயன் எல்லாவற்றையும் தூக்கிக் கொடுக்க வேண்டும், நல்ல எண்ணம்

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா சொன்னது மதம் மாறும்படி கேட்பவர்களில் (மதம் மாற்றுபவர்களில்) பிழை என்று.

நன்றி.. :D இதைத்தான் நான் சொல்ல வந்தேன்.

கனடாவில் இருக்கும் ஒரு ஆண் ஊரில் இருக்கும் ஒரு பெண்ணை நீ மதம் மாறினால் நான் உன்னை கட்டுகிறேன் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணும் மாறுகிறார். திருமணம் செய்கிறார். கனடா வருகிறார்.

இங்கே அவரது மண வாழ்க்கை சரியாக அமையவில்லை. மத‌மாற்றத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார் என வைத்துக்கொள்வோம்.

வழக்கறிஞரின் உதவியுடன் நீதிமன்ற உதவியை நாடுகிரார். கனடாவில் எனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எண்ணி மதமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டேன். இப்போது எனக்கு பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது என்று கூறி அதை ஆதாரத்துடன் நிரூபிப்பாராக இருந்தால் (எடுத்த குளிசைகள், மருத்துவ சான்றிதழ்கள் போன்ற‌வை :D ) மாப்பிளை சிக்கலுக்கு உள்ளாகலாம். இழப்பீட்டுத் தொகையுடன் விவாகரத்து எடுக்கவும் பரிந்துரைப்பார் நீதிபதி. :D

இசை அண்ணா சொன்னது மதம் மாறும்படி கேட்பவர்களில் (மதம் மாற்றுபவர்களில்) பிழை என்று.

தவறை சுட்டிக்காட்டியதுக்கு நன்றி, அனால் என்னுடைய கருத்து அது தான், கிறிஸ்த்த்வரிடம் இருக்கும் ஒழுக்கமும் கட்டுபாடும் எம்மிடம் இல்லை அதான் அவர்கள் மாறு என்றவுடன் மாறீனம், அதே போல் நாஙக்ள் கிறிஸ்த்தவர்களை எமது மததுக்கு வா என்று இழுப்பதும் தவறு, எனது மனைவியின் நண்பர் ஒருவர் கத்தொலிக்க மதம் பின்பற்றிய பெண்ணை சைவமாக்கி வைத்து இருக்கிறார், அப்பெண் தேவாலயதுடன் ஒன்றிப் போனவர் அவர் மனனிலை எப்படியோ என்று நான் யோசிப்பது உண்டு

எனது உறவு வழியில் ஒருவரும் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கிறீஸ்தவப் பெண்ணை மணமுடித்திருந்தார். பெண் மதம் மாறினார் (அல்லது அதற்குத் தூண்டப்பட்டார்.) அவர் பிறகு விரதமெல்லாம் இருந்தவர். எவ்வளவுதூரம் ஈடுபாட்டுடன் அது நடந்தது என்பது கேள்விக்குறி. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவே சொல்லிக்கொண்டார்.

திறந்த மனத்துடன் யோசித்துப் பார்த்தால் அப்பெண் கிறீஸ்தவராக இருக்கும்போதுதான் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்றும் இன்றும் எந்த மதமும் எங்களை காக்க வரவில்லை, மாறாக எங்களுக்குள் என்னும் மதங்களின் பேரால்  மோதல்களை உருவாக்கி என்னும் அழிவுகளுக்கே வழிவகுக்கின்றது 

உறவுகளே மதம் என்றபெயரால் கொஞ்சப்பேரும் ஜாதியை வைத்து கொஞ்சப்பேரும் எமக்கிடையில் பிளவுகளை உருவாக்கப்பாக்கின்றார்கள் இதனூடாக சிங்களவன் என்னத்தை செய்ய விரும்புகின்றானோ அதற்க்கு நாம் துணையாக இருந்துவிடக்கூடாது 
இப்போதுதான் நாம் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும்  உறவுகளே 
ஈழ மீட்புக்காக ஒன்றாக போராடி ஒரே கருத்து எழுதி இருந்த நாம் இன்று இந்த திரியில் எப்படி எல்லாம் பிரிந்துள்ளோம் விழிப்பாக இருக்கவேண்டிய தரும் இது எனக்கு பெரிதாக எழுதவராது முடிந்ததை எழுதி என்னை சாந்தப்படுத்தி இருக்கின்றேன். நீங்களும் சிந்தித்து பாருங்கள் ...
 
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. உங்கள் விருப்பபடி சைவம் தன்னை தக்கவைக்கவேண்டுமானால் அது தன்னை மீழ் சீரமைப்பதால் மட்டுமே முடியும். முதலில் சைவமா இந்துவா என்ற குழப்பநிலைக்கு முடிவு அவசியம். இந்திய இந்துத்துவம் என்ற பெரும் சகதியில் குதிக்க முற்படுகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மத மாற்றத்தை தடுப்பது சாத்தியமற்றது.

பல வருடங்களாக மடுமாதாவை அண்டி பல்லாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களுக்கு நிறுவனமயப்பட்ட ஒரு மதம் பாதுகாப்பையும் உதவிகளையும் வழங்கியது. அதில் சிலர் மதம் மாறினால் அதில் தவறு எதுவும் இல்லை.இதே காரியத்தை சைவம் செய்திருந்தால் மக்கள் அதிலிருந்திருப்பார்கள். உங்கள் மதத்திற்கு என்று ஒரு தலமை இருக்கவேண்டும் அதில் ஜனநாயகம் இருக்கவேண்டும். கொள்கை இருக்கவேண்டும் அதில் சாதிகள் இல்லை எல்லோரும் சமம் என்ற கட்டுப்பாடு இருக்கவேண்டும். இது எதுவுமே இல்லையே ! உங்கள் மதத்துக்கு யார் தலைவர் கொலைகாரச் சங்கராச்சாரியா இல்லை மன்மதன் நித்தியானந்தாவா இல்லை யார்? இல்லை சாய்பாபாவா? என்ன கட்டமைப்பு உள்ளது? யார் நெறிப்படுத்துவது?

சைவ வெள்ளாளர் என்கின்றார்கள் சைவப் பிள்ளைமார் என்கின்றார்கள் இது இரண்டும் சைவத்தோட தனது சாதியை முனன்வைக்கின்றது. அங்கேயே நீபெரிது நான் பெரிது என்ற நிலை தோன்றுகின்றது. ஒரு காலத்தில் பொருளாதர அடிப்படையில் பிள்ளைமார்களையும் பணக்காரனையும் மக்கள் சார்ந்திருக்கும் வரை அவர்கள் சொன்ன சொல்லுக்கு கட்டுப்படலாம் இப்போது தானே தனது பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சூழலில் தனது மதத்தையும் அவனவனே தீர்மானித்துக்கொள்வான்.

மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள். அவனவனுக்கு விரும்பிய சட்டையை அவனவன் அணிந்தகொள்வான். உங்களிடம் சுத்தமான அழகான சட்டை இருந்தால் அதிகமானவர்கள் வாங்கி விரும்பி அணிந்துகொள்வார்கள். அந்தச் சட்டையை போடாதே என்பதற்கும் என்னிடம் நல்ல சட்டை இருக்கின்றது என்பதற்கும் வித்தியாகசம் இருக்கின்றது. எந்த வழி சிறந்தது என்பத நீங்களே தான் தெரிவு செய்யவேணும்.

சுகன்,சைவர்களும் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் மற்றவர்கள் மாதிரி உதவி செய்து போட்டு அல்லது செய்ய முன் எங்கட மதத்திற்கு மாறி வர சொல்லி எங்கட மதம் கட்டாயப்படுத்துவதில்லை.அதற்கான தேவையும் இல்லை.
 
எங்கட மதம் அன்பை போதிக்கிறது.எங்கட மதத்திற்கு என்று தலைவர் தேவையில்லை.ஏன் ஒரு தலைவரிடம் அல்லது நிறுவனத்திடம் எங்கட மதத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்து மேலும் எமது மதத்தை சீரழிக்கவா?...மற்ற மதத் தலைவர்கள்,சபைகள் செய்யும் கூத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
 
நாங்கள் சாதி பார்க்கிறோம் தான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் நாங்கள் மட்டும் தான் சாதி பார்க்கிறோமா? தமிழ் கிறிஸ்தவர்கள்,தமிழ் பேசும் முஸ்லீம்கள் ஏன் வெள்ளைகள் கூட சாதி பார்க்கிறார்கள் தானே!....சாதியே இல்லாத அமைப்பு உலகத்தில் தோன்ற வேண்டும் என சொல்லுங்கள் :) அதை வரவேற்கிறேன்.ஆனால் என்னவோ சைவர்கள் மட்டும் தான் சாதி பார்ப்பதாக கதை விடக் கூடாது
 
யுவன் சாதரண மனிதனாக இருந்தால் ஒருத்தரும் கணக்கில் எடுத்திருக்க மாட்டோம்.அவர் ஒரு பிரபல்யமான இசையமைப்பாளார் என்ட படியால் தான் பல பேர் கருத்து வைத்தார்கள்.அதிலும் சிலர் வந்து அவர் சாதிக் கொடுமை தாங்கேலாமல் மதம் மாறிட்டார் என்று கருத்துக்கள் வைக்கப்பட்டது.அவர் கிறிஸ்தவராக இருந்து மதம் மாறி இருந்தாலும் என்ட கருத்து அப்படித் தான் இருக்கும்

இதைதான் நானும் கூறுகிரேன் திருமணத்திற்காக மாறினால் அது மாறினவர்களின் தவறு, என்னுடைய கேள்வி ஒன்று தான் ஒரு கிறிஸ்த்தவரால் நீ மாறினால் தான் திருமணம் செய்வேன் என்று கூறமுடியுமானால் ஏன் அதையே ஒரு சைவனால் கூறமுடியாது உள்ளது, ஏன் சைவர்களுக்கு வாய் இல்லையா?? இதை முதலில் விளக்கவும் பின்னர் மீதியை விளக்கலாம்

ஏன் என்டால் எங்கள் மதம் எல்லாக் கடவுளும் ஒருவர் என்று நம்புகிறோம் :lol:
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் பிள்ளை பிடி காரர் என்று அநாகரீகமாக பேசும் உங்களுடன் ஆன்மீகம் மதம் சம்பந்தமாய் எந்த கருத்தும் எனக்கு கூற விருப்பமில்லை .......................இறைவனை அவரது சாயலாக கொண்ட மனிதன் கொஞ்சம் என்றாலும் அவர் ஜாடை அடிக்கணும் .ஆனால்............உங்கள் கருத்தில் சாத்தானின் சாயல் அடிக்குது போல ....ஆமாம் என்ன அது பிள்ளை ப்டிகாரருக்கு ஏதாவது செய்யவேண்டும் .என்ன செய்யப்போகிறீர்கள் ...............மத வெறி உள்ளவனாக கருத்திடும் ஒருவனாகவே உங்களை பார்க்கிறேன் :D .......நன்றி 

நிச்சயமாக அக்கருத்து உங்களைப் பாதித்திருப்பின் வருந்துகின்றேன். ஆனால் அந்தக் கருத்தில் உண்மைத்தன்மை இல்லையா என்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது. நான் தத்தெடுக்க கேட்ட குழந்தைகளைத் தரமுடியவில்லை என்பது அதற்கு உதாரணம். ஒவ்வொரு மனிதனுக்கும், கிடைக்கின்ற அனுபவங்கள் தானே செயலைத் தீர்மானிக்க வைக்கின்றன.

உங்களுக்குக் கருத்துக் கூறத் தோன்றுவதும், தோன்றாததும் உங்களின் பிரச்சனை. சாத்தனின் சாயலுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும். சாத்தான்கள் அதை எதிர்பார்ப்பதுமில்லை.  மற்றும்படி பிள்ளை பிடிக்கவும், ஆட்கள் சேர்க்கவும் தான் அனைத்து கிறிஸ்தவ மத. Inc அல்லது  Ltd கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.அவர்கள் செய்கின்ற எல்லாச் சேவைகளுக்குப் பின்னால் அது ஒளிந்திருக்கின்றன. முடிந்தால் யாராவது மறுத்துப் பாருங்கள்....

எனக்கும் கிறிஸ்தவ மதம் மேல் வெறுப்புதான் இப்போ வருகின்றது..  மதமாற்ற முயற்சியில் முன்னுக்கு நிற்பவர்கள் கிறிஸ்தவம்

.

என் சொந்த உறவு  ஒன்று உந்த பிந்துகோஸ் கூட்டத்துடன் தெரியாமல் தொடர்பை வைத்து கொண்டார்.

கடைசியாக மதம்  மாறி பொட்டு பூ  வெல்லாம் அழித்து விட்டார்கள்.  அலங்கோல மாய் போய் விட்டார்கள்.

சொந்த அண்ணன் மகள் பூப்புனித வீட்டுக்கே வரவில்லை. மதம் போக கூடாதாம். நாங்கள் சாத்தான் என்கிறார்கள்.

அவரது பலவீனத்தை வைத்தே  மத மாற்றம் செய்யப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ சாண்டமருதன் என்பது பழைய சுகனா? எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கின்றது. 2009 இல், கேபி முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். அதற்கு யாழில் வந்து  அடுத்த தலைவர் அப்படிச் செய்யலாமா, இப்படிச் செய்யலாமா என்று அவர் முகம் மறைத்தது ஒரு தலைமறைவுத் தலைவர் அது இது என்றெல்லாம் விளாசினார். கேபி இதைப் படித்தாரோ தெரியாது. ஆனால் சிலநாட்களில் தன் படத்தை வெளியில் விட்டிருந்தார். சில நாட்களில் சிங்கள அரசு அப்பிக் கொண்டு போய்விட்டது. அந்தளவு வீரியமான கருத்துக்காராக இருந்தார்.

கேபி யாழ்படித்தாரோ என்பது ஒரு காலத்தில் என் சந்தேகம். அது சுகனின் கருத்தினால் வந்தது மட்டுமல்லாமல், சபேசன் யாழ்களத்தில் முதலில் எழுதிய வெளிநாட்டு அரசு, புலத்தமிழீழம் அப்படி ஏதோ ஒன்றைத் தான், கேபி நாடுகடந்த அரசு என்று தொடங்கியிருக்கக் கூடும் என்பது என் அவதானம்..

நிச்சயமாக அக்கருத்து உங்களைப் பாதித்திருப்பின் வருந்துகின்றேன். ஆனால் அந்தக் கருத்தில் உண்மைத்தன்மை இல்லையா என்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது. நான் தத்தெடுக்க கேட்ட குழந்தைகளைத் தரமுடியவில்லை என்பது அதற்கு உதாரணம். ஒவ்வொரு மனிதனுக்கும், கிடைக்கின்ற அனுபவங்கள் தானே செயலைத் தீர்மானிக்க வைக்கின்றன.

உங்களுக்குக் கருத்துக் கூறத் தோன்றுவதும், தோன்றாததும் உங்களின் பிரச்சனை. சாத்தனின் சாயலுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும். சாத்தான்கள் அதை எதிர்பார்ப்பதுமில்லை.  மற்றும்படி பிள்ளை பிடிக்கவும், ஆட்கள் சேர்க்கவும் தான் அனைத்து கிறிஸ்தவ மத. Inc அல்லது  Ltd கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.அவர்கள் செய்கின்ற எல்லாச் சேவைகளுக்குப் பின்னால் அது ஒளிந்திருக்கின்றன. முடிந்தால் யாராவது மறுத்துப் பாருங்கள்....

நீங்கள் கூறுவது அடிப்படைவாத அமெரிக்க மிசன்ரிகளுக்கு பொருதும், ஆனால் தமிழ் மண்ணுடன் இணைந்த கத்தோலிக்க மதத்திற்கு பொருந்தாது. அவர்கள் அப்படி நடந்தால் அதுக்கு காரணம் எமது பலவீனம், எமது சைவ அமைப்புக்கள் எல்லம் என்ன செய்க்ன்றன கிறிஸ்த்தவர்கள் செய்யும் உதவியை தாம் செய்து மத மாற்றத்தை தவிர்க்கலாமே ஏன் அவ்வாறு செய்யவில்லை, அதை விட்டுப்போட்டு சும்ம அவர்களி அநாகரிகமாக திட்டுவது நல்லது அல்ல

எனக்கும் கிறிஸ்தவ மதம் மேல் வெறுப்புதான் இப்போ வருகின்றது..  மதமாற்ற முயற்சியில் முன்னுக்கு நிற்பவர்கள் கிறிஸ்தவம்

.

என் சொந்த உறவு  ஒன்று உந்த பிந்துகோஸ் கூட்டத்துடன் தெரியாமல் தொடர்பை வைத்து கொண்டார்.

கடைசியாக மதம்  மாறி பொட்டு பூ  வெல்லாம் அழித்து விட்டார்கள்.  அலங்கோல மாய் போய் விட்டார்கள்.

சொந்த அண்ணன் மகள் பூப்புனித வீட்டுக்கே வரவில்லை. மதம் போக கூடாதாம். நாங்கள் சாத்தான் என்கிறார்கள்.

அவரது பலவீனத்தை வைத்தே  மத மாற்றம் செய்யப்பட்டார்.

கிறிஸ்தவத்தை தெரிந்தவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தரவேண்டியது என் பொறுப்பு .............பெந்தக்கோஸ்து ,அல்லேலூயா ,ஜெகோவா .இப்பிடி பல பிரிவுகள் ,,,,,,,,,,,,,,,இவற்றை பற்றி பேசுவதற்கும் ,கதைப்பதற்கும் எனக்கு தகுதி இருக்கு ....இவை எல்லாம் பைபிளில்  திருவேளிப்பாட்டில் சொல்லப்படுவதுபோல ஒரு அரக்கத்தனமான மிருகத்திற்கு ஒப்பானவை .............இந்த மிருகத்தின் மேல் இவர்கள் சவாரி செய்கிறார்கள் ...................[ வேசியாக ] இறுதியில் அந்த மிருகம் எல்லாவற்றையும் அழித்து அந்த வேசியையும் கடித்து தின்றது ................இந்த விளக்கம் கிறிஸ்தவ மதத்தை தெரிந்தவர்களுக்கு விளங்கும் .............ஆனால்.........நீங்கள் எங்கயோ எதையோ தப்பை பார்த்து .அதை முழு கிறிஸ்தவர்களையும் அதற்குள் அடக்க நினைப்பதே .இத்தனை பினக்குக்கும் காரணம் ...........பெந்திக்கொச்த் ,ஜெகோவா ,....போன்ற பிரிவினருடன் தர்க்கம் செய்ய தயாராய் உள்ளேன் ...அவர்கள் பிழையானவர்கள் என்று ...ஆனால் எனக்கு தெரியாத மற்ற மத சகோதரர்களே விடை பெறுகிறேன் .................நீங்ககள் பிழையானவர்கள் என்று என் மதம் எனக்கு சொல்லவில்ல ./நன்றி  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உறவுகளே மதம் என்றபெயரால் கொஞ்சப்பேரும், ஜாதியை வைத்து கொஞ்சப்பேரும் எமக்கிடையில் பிளவுகளை உருவாக்கப்பாக்கின்றார்கள். 
 
இதனூடாக சிங்களவன் என்னத்தை செய்ய விரும்புகின்றானோ அதற்க்கு நாம் துணையாக இருந்துவிடக்கூடாது 
 
இப்போதுதான் நாம் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும்  உறவுகளே, 
 
ஈழ மீட்புக்காக ஒன்றாக போராடி ஒரே கருத்து எழுதி இருந்த நாம் இன்று இந்த திரியில் எப்படி எல்லாம் பிரிந்துள்ளோம் விழிப்பாக இருக்கவேண்டிய தரும் இது
 
எனக்கு பெரிதாக எழுதவராது முடிந்ததை எழுதி என்னை சாந்தப்படுத்தி இருக்கின்றேன். நீங்களும் சிந்தித்து பாருங்கள் ...
 
அன்றும் இன்றும் எந்த மதமும் எங்களை காக்க வரவில்லை, மாறாக எங்களுக்குள் என்னும் மதங்களின் பேரால்  மோதல்களை உருவாக்கி மேலும் அழிவுகளுக்கே வழிவகுக்கின்றது  :(
 
கிறிஸ்தவத்தை தெரிந்தவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தரவேண்டியது என் பொறுப்பு .............பெந்தக்கோஸ்து ,அல்லேலூயா ,ஜெகோவா .இப்பிடி பல பிரிவுகள் ,,,,,,,,,,,,,,,இவற்றை பற்றி பேசுவதற்கும் ,கதைப்பதற்கும் எனக்கு தகுதி இருக்கு ....இவை எல்லாம் பைபிளில்  திருவேளிப்பாட்டில் சொல்லப்படுவதுபோல ஒரு அரக்கத்தனமான மிருகத்திற்கு ஒப்பானவை .............இந்த மிருகத்தின் மேல் இவர்கள் சவாரி செய்கிறார்கள் ...................[ வேசியாக ] இறுதியில் அந்த மிருகம் எல்லாவற்றையும் அழித்து அந்த வேசியையும் கடித்து தின்றது ................இந்த விளக்கம் கிறிஸ்தவ மதத்தை தெரிந்தவர்களுக்கு விளங்கும் .............ஆனால்.........நீங்கள் எங்கயோ எதையோ தப்பை பார்த்து .அதை முழு கிறிஸ்தவர்களையும் அதற்குள் அடக்க நினைப்பதே .இத்தனை பினக்குக்கும் காரணம் ...........பெந்திக்கொச்த் ,ஜெகோவா ,....போன்ற பிரிவினருடன் தர்க்கம் செய்ய தயாராய் உள்ளேன் ...அவர்கள் பிழையானவர்கள் என்று ...ஆனால் எனக்கு தெரியாத மற்ற மத சகோதரர்களே விடை பெறுகிறேன் .................நீங்ககள் பிழையானவர்கள் என்று என் மதம் எனக்கு சொல்லவில்ல ./நன்றி  :)

நீங்கள் கூறுவதொ 10000% உண்மை, பல சைவர்கள் இந்த வித்தியாசம் விளங்காமல் தான் அநாகரிகமாக கிறிஸ்த்தவத்தை திட்டுகிறார்கள் அதை விட கத்தொலிக்கம் தமிழ் இனத்தையும் அதன் அடையாளத்தையும் ஏற்றுக்கொண்ட மதம் ஆனால் ஜெனோவா,அலுலோயா அப்படியல்ல இவர்களை ஒரு தமிழ் இனத்தின் அங்கமாகவோ அல்லது அதன் பகுதியாகவோ ஏற்க முடியாது, அதை விட கத்தொலிக்கருகே இவர்களி பிடிக்காது என்பது பலருக்கு தெரியுமோ தெரியாது

முரண்பாட்டை வளர்ப்பது நீங்கள். நான் ஆடுத்த மதத்தில் குறை கண்டுபிடிக்கவோ மூக்கை நுழைக்கவோ எந்தக் கருத்திலும் செய்யவில்லை. என் சார்ந்த மதத்தில் என்ன பிழையோ அதிலேயே எனது விமர்சனம் நிற்கின்றது. வேறு மதங்களில் உள்ள பிரச்சனை பற்றி கதைக்கவேண்டியது அவர்கள் தவிர நானில்லை. அவ்வாறு நான் கதைத்தால்தான் அது மதப்பிரச்சனை. மத முரண்பாட்டை வளர்பதில் கங்கணம் கட்டி நிற்பது நீங்கள். எங்காவது நான் கிருத்துவத்தில் அந்தப் பிழை இருக்கின்றது இஸ்லாத்தில் இந்தப் பிழை இருக்கின்றது என்று சொல்லியுள்னோ? சொன்னால் அது மதப்பிரச்சனை. அதை நீங்கள் எப்படித்தான் தூண்டினாலும் நான் செய்யப்போவதில்லை. ஏனெனில் நான் மத முரண்பாட்டிற்று எதிரானவன்.

சைவம் இந்துத்துவம் தனது சாதீய மத வெறியால் தமிழர்கள் வாழ்வை சுடுகாடாக்குவதில் பெரும் பங்கு வகித்தது. இன்னும் வகித்துக்கொண்டிருக்கின்றது. அது சார்ந்த விமர்சனத்தை நான் எப்போதும் செய்வேன். பிழை இருக்கும் வரை அதை திருத்த மறுக்கும் உங்கள் போன்றோர் இருக்கும் வரை விமர்சனம் என்பது இருக்கும் தவிர மத வேற்றுமைகளை வளர்க்கும் உங்கள் எண்ணம் எனது கருத்தில் இருக்கப்போவதில்லை. அதனால் ஏற்பட்ட அழிவுகள் வெளிப்படையானது.

எனது எல்லை இந்து சைவம் போன்றவற்றுக்குள்ளானது என்பதில் நான் தெளிவாய் இருக்கின்றேன். இங்கு சிலர் என்னை கிருத்துவத்தில் கொண்டுபேய் செருகினாலும் சரி இஸ்லாத்தில் கொண்டுபோய் செருகினாலும் சரி இல்லை பௌத்தத்தில் கொண்டுபோய் செருகினாலும் சரி நான் யார் என்பதில் எனக்குத் போதிய தெளிவுண்டு.

எக்காலத்திலும் சொந்த மதத்தில் உள்ள குறைகளை கழைய மறுக்கும் உங்களுக்கு அடுத்த மதத்திலும் அப்படித்தான் அங்கேயும் இப்படித்தான் இங்கேயும் இப்படித்தான் என்ற சாக்குப் போக்கும் விரோதமும் அவசியம் தவிர எனக்கில்லை.

நீங்கள் எந்த மதத்தவர் என்பது எனக்கு தேவையில்லாதது. ஆனால் நீங்கள் தான் மதம் மாற்றுதலுக்குள் சாதீயத்தை கொண்டு வந்து திணித்து குழப்பத்தை உருவாக்குகிறீர்கள். மற்றவர்கள் எம்மை மதம் மாறும்படி கேட்பதற்குள் சாதீயம் எங்கே வருகிறது என்ற கேள்விக்கு இன்னும் உங்களிடமிருந்து பதிலில்லை. திட்டமிட்டு பதில் எழுதுவதை தவிர்க்கிறீர்கள். அல்லது உங்களிடம் பதில் இல்லை. :unsure: சாதீயம் பற்றி கதைப்பதற்கு இது தலைப்பு அல்ல. :)

நான் சைவ சமயத்தவர் செய்வதை எங்கும் நியாயப்படுத்தி கூறவில்லை. அதற்காக மற்றவர்கள் மதம் மாறு என கேட்டால் அது பற்றி கதைக்கவோ விழிப்புணர்வூட்டவோ கூடாது என நீங்கள் கூற முடியாது. என்னை நேரடியாக பலர் கேட்டிருக்கிறார்கள். எனது உறவினர்கள் சிலர் இதனால் பாதிக்கப்பட்டிருகிறார்கள். ஒரு உறவினர் மனநிலை பாதிக்கப்பட்டுமிருக்கிறார். :rolleyes: எனவே அது பற்றி கதைக்க எனக்கு உரிமை உள்ளது. அதே போல் சைவ சமயத்தவர் மற்றவர்களை மதம் மாறும்படி கேட்டால் அதுவும் பிழை தான். :)

எனது சகோதரர் ஒருவர் கிறிஸ்தவ மதத்தவரை தான் காதலிக்கிறார். (எனவே எனது குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தினர் மேல் பகையில்லை.) மதம் மாற மாட்டேன் என ஏற்கனவே கூறியுள்ளார். திருமணம் என்று வரும் போது மதம் மாறும்படி கேட்கிறார்களோ தெரியாது. பார்ப்பம். :)

கிறிஸ்தவர்களை எதிரியாக நோக்கும் எண்ணம் அறவே கிடையாது. அப்படி எதிரியாக நினைத்திருந்தால் எனக்கு கிறிஸ்தவ நண்பர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். நான் இங்கு கோவிலுக்கு சென்றது 2 தடவை தான். அதுவும் பிரான்ஸ் வந்த புதிதில். ஆனால் எனது கத்தோலிக்க நண்பர்களுடன் church க்கு ஒரு 50 தடவைக்கு மேல் சென்றிருக்கிறேன். :) கடவுளை வணங்குவதில்லை. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருக்கிறேன். தமிழ் பூசைகளுக்கு செல்வதில்லை. :rolleyes: அவர்கள் நிமிடத்துக்கு நிமிடம் இயேசு மட்டும் தான் கடவுள் என்ற ரீதியில் சொல்வதை கேட்க விருப்பமில்லை. :wub:

தமிழ் சூரியன் அண்ணா பிரான்ஸ் வந்தால் அவரும் மனைவியும் church க்கு செல்ல விரும்பினால் அவர்களை அழைத்து செல்வதற்கு தயாராகவே உள்ளேன். :)

Edited by துளசி

தமிழ் சூரியன் அண்ணா பிரான்ஸ் வந்தால் அவரும் மனைவியும் church க்கு செல்ல விரும்பினால் அவர்களை அழைத்து செல்வதற்கு தயாராகவே உள்ளேன். :)

நன்றி காதல் .........நான் சேர்ச்சுக்கு சென்று பல மாதங்கள் ஆகின்றது . :D ...............என் குடும்பமே என் கோயில் .................நீங்கள் நினைப்பது போல அல்ல ...........கிறிஸ்துவை மட்டுமே எனக்கு பிடிக்கும் .அவரை வழிபடுபவர்கள் எல்லோரையும் எனக்கு பிடிப்பதில்லை ................................சிலரைத்தவிர :) .....................

இந்திய இந்துத்துவத்துடன் போய் ஐக்கியமாவது நிங்கள் தானே? யுவன் ஒரு இந்தியநாட்டுப் பிரஜை அவர் மதம் மாறுவதில் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்?

யுவன் பணக்கார பெண்ணை கை பிடிப்பத்தற்காக மதம் மாறினார் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டது. அந்த கேவலப் பிறப்பு, அசந்தர்ப்பவசமாக ஒரு தாலித்தும். இதனால் பாகிஸ்தானிய அடிவருடிகள் மதம் மாற்றம் சாதி சம்பந்தமானது என்று கதை கட்டினார்கள். இந்துகளின் கொடுமையால் அந்த தாலித்து மதம் மாறியத்தாக அவப்பேர் எழுந்தது. இதை அந்த ஈனததன இந்து ரசித்தான். அதை வைத்து காசாகினான். இதனால் சாதியை ஒதுக்க திராவிட கட்சிகளை கொண்டுவந்த ஒரே மானிலமான தமிழ்நாடு முழுவதும் நொந்தது. பாகிஸ்தானுக்கு சென்று மருத்து கடந்தும் வியாபாரிகளுக்கு இது புல்லரிப்பாக இருந்தது. இதனால் தமிழர் எல்லோரும் வேதனைப்பட்டர்கள். எனவே.இது இந்துக்கள் சம்பந்தபட்ட விவகாரம். இந்துக்கள் பேசி முடிவெடுத்துக்கொள்வார்கள்.  இதற்குள் அரச சம்பளத்தை வாங்கும் அரைவாசிகள்  மூக்கை நுளைப்பது வேண்டப்படாதது.  

நாவலர் போய் தமிழ்நாட்டில் வள்ளலாருடன் வம்பு வளக்கிழுத்து சண்டையிட்டது எந்த அடிப்படையில்? யார் கொண்டுபோய் மூக்கை நுழைப்பது?

யாரும் யாருடனும் விவாதுக்கு அழைப்பது சங்க காலத்திலிருந்து தமிழர் மரபு.  சம்பந்தர் பாண்டி நாட்டால்  தமிழ் துரோகிளை ஓட்டியது விவாதத்தால். அரச அடிவருடிகள் மாற்றுக்கருத்து என்ற பெயரில் இங்கே செய்வது கோளைத்தனமான விவாதம். அருண்கிரியும் வில்லிபுத்தரினதும் விவாதம் இன்றும் மங்காதது. ஆறுமுகநாவலர் கோட்களில் வெள்ளைகார நீதிபதிகளுடன் விவாதத்தில் இறங்கினார். பாதிரி மாருடன் விவிலிய வேதம் சம்பந்தமாக விவாதத்தில் இறங்கினார். எகிப்திய சித்தி லெப்பைக்கு அந்நிய மதங்களை எப்படி எதிர்ப்பது என்றதற்கு உதாரண்மாக இருந்தார்.  விவாதம் என்றால் மூக்கை நுளைப்பது என்று வலிந்து கருத்துவைப்பவர்கள் செய்வது எல்லாம் அக்கிரமம் என்றதை தாங்களே சொல்லாமல் சொல்வதே. தங்களை பற்றி பேச தயங்கிக்கொண்டு இந்துக்களை பற்றி பேசுகிறார்கள். 

இந்துத்துவம் என்பது இந்தியாக்குடையது சைவம் ஈழத்துக்குடையது என்றால் யப்னா கிண்டு என்ற போர்டை கழட்டி சைவம் என்று மாற்றுங்கள்.

சொல்லி தந்ததிற்கு நன்றி. அனுப்பி வைத்த முதலாளிமார்களிடம் சம்பளத்தை வாங்கி கொண்டு இந்துக்களின் சமாசாரங்களில் இனி மூக்கை நுளைக்காமல் இடத்தை காலி பண்ண வேண்டிய நேரம் வருகிறது. இல்லையேல் காதலிகளை கொலை செய்து, அனுப்பிவைத்த கொலையாளிகளையுமே கொலை செய்த கைமுணுக்கள் செய்பவற்றைப் பற்றி எங்கும் எழுதுவது தவிர்க்க முடியாது.  

ஈழத்து சைவம் புறம்புபட்டதென்றால் அதை தெளிவாக்கி அதற்கு நிர்வாகத்தை நிறுவனத்தை ஏற்படுத்துகங்கள். எனது கருத்தில் நித்தி சங்கராச்சாரியை மட்டும் குறிப்பிட வில்லை சாதீய பிள்ளைமார்களையும் குறிப்பிட்டுள்ளேன். உங்களது தனித்துவமான சைவ நிறுவனத்தக்கு யார் தலமை வளக்கம் போல பிள்ளைமார்களா இல்லை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் மூலமா?

சைவம் என்றால் என்ன என்று தெரிந்துவைத்துவிட்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும் இந்து மத்தைபுண்படுத்துவதை இனி நிறுத்த வேண்டும்.  தமையன் பெண்களுடன் கட்டிபிடித்து இருப்பத்தை வீடியோ எடுத்து தம்பி அதை காட்டி பிளெக் மெயில் செய்வதை நித்தியானந்தா கூட்டமும் கூட செய்வில்லை என்பதை உணர வேண்டும். அவ்வளவு களிசடை பிறபுக்குகள் அதுகள்.  திரும்பிப்போய் அனுப்பி வைத்தவர்களுக்கும் இனி கொஞ்சம் அறிவுரை செய்ய வேண்டும்.

எதற்காக சாதீயத்தை எதிர்காலத்தில் கழையவேண்டும். நிகழ்காலத்தில் கழைவதில் என்ன பிரச்சனை? யார் எதிர்காலத்தில் கழைவார்கள்?

எதிர் காலத்திலும் நிகழ் காலத்திலும் எங்களுக்கு தேவையான போது நாம் செய்து கொள்வோம்.  எமது நாடும், எமது சுதந்திரமும் முதல். அதற்குள் யாரும் மூக்கை நுளைப்பதையும் ரசிக்கவும் மாட்டோம். ஆனால் கரையோர மீன்பிடி அதிகாரத்துக்கக்க புத்த மதத்திலிருந்து கிறிஸ்தவத்திளுக்கு மாறி பின்னர் ஆட்சிக்கட்டிலுக்கக்க புத்ததிற்கு மாறத்தக்க அள்வு ஈனம் நமக்கு இன்னமும் வரவில்லை. 

எந்த மதத்தில் என்ன பிழை இருக்கு என்பதில் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏனெனில் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.சைவத்தில் சாதி இருக்கு ஆயிரத்தெட்டு சாக்கடை இருக்கு என்றால் அதைக் கழுவ வேண்டும் என்றால் கிருத்துவத்திலும் இருக்கு இஸ்லாத்திலும் இருக்கு எண்டு எதற்காக சாக்குப்போக்கு சொல்ல வேண்டும்? உங்கட சமயத்தில் என்ன பிரச்சனையோ அதை தீர்க்க வழியைப் பார்பதை விட்டு அடுத்தவன் முதுகை ஏன் சொறிய வேண்டும்?

சொல்வதை செய்வதுதான் பெருந்தனமை. இனி மூக்கை நுளைக்காமல் விலக வேண்டும். அத்தோடு இஸ்லாத்தில் இருக்கும் முதுகுசொறிய வேண்டிய அலுவல்களை முதலில் செய்து முடிக்க வேண்டும். மதம் மனிதர்களால் ஆக்கபட்டது. எல்லவற்றிலும் தவறு இருக்கு. அது அவரவர் பிரச்சனைக்குள் மூக்கை நுளைக்காமல்  சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் தங்கள் அலுவல்களை பார்க்க வேண்டும். யுவன் தான் கலைஞன் என்றதை மறந்தால், தான் செய்த ஈனத்து ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்காவிட்டால், ஒதுக்கப்படுவார்.  அசினுக்கு நடந்தை நடக்கும் வரைக்கும் நாங்கள் தொடர்ந்து எழுதுவோம். 

மதம் சட்டை போன்றது மதம் அபின் போன்றது என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு தவிர எனது முடிவில்லை. அந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உங்களால் ஏற்க முடியாவிட்டால் அது உங்கள் பிரச்சனை அல்லத உங்கள் சுதந்திரம்.

அது ஏன் சொல்லப்பட்டது என்றதை தெரிந்து கொள்ள வேண்டும் இஸ்லாம் பயங்கரவாதிகளைன் மதவெறி போன்ற சில வெறி  ந்டத்தைகளை சொல்ல வந்த வசனம். இந்துமதம் மற்ற மதம் எல்லாவற்றிலும் வேறுபட்டது. அது கல்லால் எறிந்து சாகடிப்பதை நடத்துவது அல்ல. அறிஞர்களுக்கும் மதங்களுக்கும் தொடர்பில்லை.  அறிஞர்களுக்கும் விஞ்ஞானத்திற்கும், பொருளாதாரத்திற்கும், சட்டத்திற்கும், அரசியலுக்கும்தான் தொடர்பு. முஸ்லீம்கள் சட்டை களற்றுவது போல தங்கள் மதத்தை களற்றி மாற்றியிருந்தால், புலிக்ளை அமெரிக்கா பயங்கரவாதிக்களாக நிரல் படுத்தியிருக்காது. எனவே நீங்கள் சொல்வதை அவசியம் நீங்கள் செய்ய வேண்டியது எங்களின் தேவை. 

எவனெவனுக்கு எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவன் விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது. மதம் ஒன்றும் உறுதி எழுதிய பட்டா நிலம் கிடையாது. அது நம்பிக்கை சார்ந்தது. தனி மனிதர்களது நம்பிக்கை முடிவுகள் சூழ்நிலைகள் சார்ந்து அவரவர்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

ஒரு சமுதாயத்தை சம்பந்தர் கழுதைப்பால் உண்டார் என்று புண்படுத்த முடியாது.  அது மிக இழிவான தாழ் குடிப்பிறப்புகளின் நடத்தை.  இது மெக்காவல்ல. இந்து நாகரீகம் பிறந்த நிலம். தமிழரின் பாரம் பரிய நிலம். மற்ற்வர்கள் விலத்த வேணடும். சட்டத்தை அறியாதவர்கள் "பட்டுவாடா நிலம்" பற்றிக கதைக்கிறார்கள். அந்த அறியாமை மூட்டை கட்டுக்கொண்டு வெளியேற வேண்டும். குடியேற மெக்கா நல்ல நிலம்.  அங்கே ஆப்கானி கழுதைப்பால் இல்லாவிட்டால்  அங்கே ஒட்டக பால் குடிக்கலாம். சேர்ந்து படுக்க சிங்கம், குதிரை இல்லாவிட்டால் ஒட்ட்கம் நல்ல தெரிவு.

இந்த மதத்தில் சேர் என்று ஒருவன் சொல்கின்றான் அதற்கான காரணங்கள் இதர சலுகைகளை நன்மைகளை காட்டுகின்றான் என்றால் தனிமனிதர்கள் அதை நாடிச் செல்லலாம் இல்லையே விடலம். அது அவர்கள் விரும்பம். வேணுமானால் நீங்களும் அதைச் செய்யுங்கள் இல்லையேல் விடுங்கள்.

மேற்கு நாடுகளின் ஜனநாயக சட்டங்களில் அது எற்றுக்கொள்ளப்படவில்லை. மெக்காவில் ஏழை பெண்களை தந்தை தாயுக்கு காசு கொடுத்து வாங்க முடியும். மேற்குநாட்டு சட்டப்படி பணத்திற்கு வாங்க விற்க முடியாத பண்டகளில் வியாபாரம் நடத்தினால் உள்ளேதான் போக வேண்டும், எந்த மேற்கு நாட்டிலும் அதுதான் சட்டம்மது சட்டத்திற்கு முரணானது

உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் அந்தச் சட்டையை போடத்தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த சைவச் சட்டையை போட்டுக்கொண்டிருங்கள். அடுத்தவன் முடிவில் ஏன் மூக்கை நுழைப்பான்?

இந்துக்கள் என்பது ஒரு சமுதாயம். அவர்களை புண்படுத்த முடியாது. இது தனி அலகு சமாசாரம் அல்ல.

கிறிஸ்தவத்தை தெரிந்தவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தரவேண்டியது என் பொறுப்பு .............பெந்தக்கோஸ்து ,அல்லேலூயா ,ஜெகோவா .இப்பிடி பல பிரிவுகள் ,,,,,,,,,,,,,,,இவற்றை பற்றி பேசுவதற்கும் ,கதைப்பதற்கும் எனக்கு தகுதி இருக்கு ....இவை எல்லாம் பைபிளில்  திருவேளிப்பாட்டில் சொல்லப்படுவதுபோல ஒரு அரக்கத்தனமான மிருகத்திற்கு ஒப்பானவை .............இந்த மிருகத்தின் மேல் இவர்கள் சவாரி செய்கிறார்கள் ...................[ வேசியாக ] இறுதியில் அந்த மிருகம் எல்லாவற்றையும் அழித்து அந்த வேசியையும் கடித்து தின்றது ................இந்த விளக்கம் கிறிஸ்தவ மதத்தை தெரிந்தவர்களுக்கு விளங்கும் .............ஆனால்.........நீங்கள் எங்கயோ எதையோ தப்பை பார்த்து .அதை முழு கிறிஸ்தவர்களையும் அதற்குள் அடக்க நினைப்பதே .இத்தனை பினக்குக்கும் காரணம் ...........பெந்திக்கொச்த் ,ஜெகோவா ,....போன்ற பிரிவினருடன் தர்க்கம் செய்ய தயாராய் உள்ளேன் ...அவர்கள் பிழையானவர்கள் என்று ...ஆனால் எனக்கு தெரியாத மற்ற மத சகோதரர்களே விடை பெறுகிறேன் .................நீங்ககள் பிழையானவர்கள் என்று என் மதம் எனக்கு சொல்லவில்ல ./நன்றி  :)

நன்றிகள்.

இல்லை நாங்களும் வேளாங்கன்னி கோவிலுக்கு போய் இருகிறோம்  ,அங்கே கிடைக்கும்  சாப்பாடு எல்லாம் சாப்பிட்டிருக்கிறோம்   . அப்போ இப்படி இல்லை.

அவர்கள் பைபிள் பற்றியும் பேச மாட்டார்கள், எல்லாம் சைவ பிள்ளைகள் என்று அன்போடு பழகுவார்கள்.

ஆனால்  இப்போ எவரை பார்த்தாலும் பைபிளை தானே   சொல்கிறார்கள்.

நீங்கள்  சொல்லும் பிந்துக்கோஸ், அல்லோயா எல்லாம் பைபிளை தானே முன் வைக்கிறார்கள்.

அதன் படி தானே தேவன் வாக்கு என்று தானே பிரச்சாரம் செய்கிறார்கள்.

அதனால் தான்  அந்த மதத்தின் மேல் வெறுப்பை உண்டு  பண்ணுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்தக் கதையைச் சொல்ல முடியும் என்று நினைக்கின்றேன். நான் இரண்டு குழந்தைகளை 2009ம் ஆண்டு யுத்தத்தின் பிற்பாடு தத்தெடுப்பாக உறுதி செய்து, ஒரு தேவாலயம் ஊடாகச செய்து வந்தேன். இரண்டு குழந்தையில் ஒன்றுக்கு பெற்றோர் உறவினர் இல்லை. மற்றவரின் தாய் போராளி என்பதால் சிங்கள அரசு புனர்வாழ்வு என்ற பெயரில் வைத்திருந்தது. எனக்கு அவர்களின் மீதான அன்பு ஏதோ என் குழந்தைகளாகவோ, சகோதரங்களாக இருந்தால் எப்படி ஒரு உணர்வைத் தருமோ, அது போன்றதொரு பாசத்தை உருவாக்கியது. எனக்குத் திருமணம் ஆகாததால் தத்தெடுக்கமுடியாது, மற்றும் கனடா கொண்டு வரமுடியாது என்பதாலும், குழந்தைப் பாக்கியம் இல்லாத உறவினர் ஊடாக அவர்களிருவரையும் வளர்ப்பதற்காக முயன்றபோது, அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. விசாரித்தபோது இரு குழந்தைகளும் மதம் மாற்றப்பட்டிருந்தனர். எனக்கு உள்ள வருத்தம் என்னவெனில், குழந்தைகளிடம் ஏன் மதமாற்றத்தைத் திணிக்க வேண்டும்? அதற்கான வயதா அவர்கள்? இத்தனைக்கும் என்னிடம் இருந்து உதவி பெறும்போதாகட்டும், அந்தக் குழந்தைளாகட்டும், இடையில் நின்ற தரகர்கள் அவர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும்போது சுயநலவாதிகளாகவே என் கண்ணில் தெரிந்தார்கள். இப்படி நான் தத்தெடுக்கும் விடயம் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தியதுடன், என்னிடமான தொடர்பு தூண்டித்தார்கள்.

உண்மையில் சொல்கின்றேன். ஒரு காலத்தில் அன்னை திரேசா மீது நான் கொண்டிருந்த மரியாதை இதற்குப் பிற்பாடு உடைந்து போனது. அவர் தொழுநோயாளர்களைக் கவனித்த சேவை பெரிதாயினும், அதன் பின்ணனியில் மதமாற்றம் என்ற ஒரு வியாபாரமும் இல்லாமல் இருந்திருந்தால் உயர்வாகவே இருந்திருப்பார்கள். ஆனால் அவர் கடவுள் என்பதைப் பண்டமாற்றுச் செய்து தானே அவர்களைப் பார்த்துக் கொண்டார்....

சந்திக்கு சந்திக்கு ............ இருக்கும் எல்லா ஆலமரத்தின் கீழும் இத்தியின் கீழும் ...
இருக்கும் முருகனும் பிள்ளையாரும் எங்கு போய்விட்டார்கள் ?
அவர்களை வணங்கும் அதனை இந்து கூட்டமும் எங்கு போய்விட்டார்கள்?
 
இத்தனை  கோவிலும் குளமும்  இருந்த ஈழத்தில் பிறந்த ஒரு  இந்து குழந்தை ... ஏன் தேவாலயத்தில் சென்று நிற்கவேண்டும்? 
இவளவு இந்து கோவிலும் ஒரு ஆனதை பிள்ளையை பராமரிக்கும் மனிதாபிமானத்தை ஏன் தனது பக்த அடியார்களுக்கு சொல்லி கொடுக்கவில்லை?
 
நீங்கள் சாக்கடை இந்து மதத்தை தூக்கி பிடிக்கும்போது .............
ஜேசுவிட்காக  தனது வாழ்வை துறந்த ஒரு பாதிரியார் ஏன் தனது  கிறிஸ்தவத்தை தூக்கி பிடிக்க முடியாது? 
 
தன்னிடம் எது இருக்கிறதோ அதைதான் அவனால் பகிர்ந்துகொள்ள முடியும்.
பாதிரியாரிடம் பைபிள்தான் இருக்கிறது.
தேவலாயத்தின் வாசலில் வந்து நிற்கும் ஒருவனுக்கு கிறிஸ்தவமதம் பற்றி சொல்லி கொடுக்காவிட்டால் அது மாபெரும் தவறு.
அதை ஒரு பாதிரியார் செய்ய துணியமாட்டார்.
 
பாம்பு கோவில்களில் இருக்கும் பாம்பை கொண்டு சென்று ஒரு சரணாலயத்தில் விட்டு விட்டு. அங்கே எமது இனத்தில் இருக்கும்  அநாதை குழந்தைகளையும் தொழு நோய் வந்தவர்களையும் வைத்து பராமரிக்கும் மனிதாபிமானம் பற்றி இந்துக்கள் சிந்துக்கும்வரை. கிறிஸ்தவ மதத்தின் பால் ஒரு ஈர்ப்பு சாதாரண மனிதர்களுக்கு தானாகவே  வந்துவிடும் .......... அங்கே அடிப்படை மனிதாபிமானம் பற்றி அதிகம் சொல்லி கொடுக்கிறார்கள்.
ஞாயிற்று கிழமைகளில் குழந்தைகளை சரானாலயம் கூட்டி சென்று அவர்களுக்கு எமது  நாட்டில் இருக்கும் பாம்புகள் பற்றியும் அதன்  விஷம் பற்றிய அறிவை சொல்லி கொடுக்கலாம்.
 
தொழுநோய் வந்தவர்களை சக மனிதர்களாகவே பாக்காத நீங்கள் ............ அப்படி பார்க்க கூடாது என்று கற்று கொடுக்கும்  இந்து மதத்தை தழுவும் நீங்கள் .....
அவர்கள் கிறிஸ்தவ மதம் மாறிவிட்டார்கள் என்று ஏன் துள்ளி குதிக்கிறீர்கள் ?
அவர்கள் என்ன மதம் மாறினால் உங்களுக்கென்ன?
வீதியில் தீண்ட தகாதவர்கள் என்று எறியும்போது இந்த இந்து வேதாந்தம் எங்கு போனது???
 
4000 வருடங்கள் முன்பு என்ன இருந்தது ............
புத்தகத்தில் என்ன எழுதியிருக்கு என்பதனால் யாருக்கும் லாபம் இல்லை.
நிஜத்தில் இப்போது என்ன இருக்கு இதுதான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியது.
 
லட்சம் இந்துக்கள் இருக்கும் நாட்டில் ......... ஒரு இந்து குழந்தை போய் தேவாலயத்தி வாசலில் நின்றிருந்தால் .உங்கள் மதத்தை வெளியில் சொல்ல வெட்கப்பட பழகி கொள்ளுங்கள்.
பின்பு அந்த குழந்தையை ஒரு மனித குழந்தை என்று தூக்கி எண்டுத்த்வன் அதை கொடுத்தான் இதை கொடுத்தான்  என்று புலம்புவதை என்றாலும் நிறுத்தி கொள்ளுங்கள்.
தன்னிடம் எது இருக்கிறதோ அதைதான் அவனால் பகிர்ந்துகொள்ள முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்

திரி அழகாக நகர்கின்றது! பல விடயங்கள், வரலாறுகள் அனைத்தும் அலசப்படுகின்றன! பலவற்றை அறியக்கூடியதாகவும் உள்ளது!

எல்லா மதங்களிலும், பலங்களும், பலவீனங்களும் உண்டு!

ஏனெனில் அனைத்து மதங்களுமே, மனித வாழ்வை ஒழுங்கு படுத்தும் நோக்கில் ஏற்பட்டவையே!

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளைப் போதித்தது எனது மதம்! அது எனது மனதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் போதிக்கப்பட்டது!

பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நான்கு நிலைகளைப் போதித்தது எனது மதம். அது எனது வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் போதிக்கப்பட்டது!

எம்மில் எத்தனை பேர், சரியையும், கிரியையும் தாண்டியிருக்கிறோம்? எம்மில் எத்தனை பேர் பிரமச்சரிய நெறியில் வாழ்ந்திருக்கிறோம்?

எனவே மதம் தனது நோக்கத்தை நிறைவேற்றவில்லை! வெறும் சுயநலவாதிகளை மட்டும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றது! இதற்கு, சமீபகால சங்கராச்சாரியார்களும், நித்தியானந்தாக்களுமே சாட்சியாக உள்ளனர்! இந்த மதத்தின் பெயரால் தானே, எமது மக்கள் அழிக்கப்பட்டனர்! 

இதற்கு உதாரணங்கள்,  சோ. ராமசாமி, இந்து ராம், அமைச்சர் சிதம்பரம், சிவசங்கர் மேனன்,தீக்சித், நாராயணசாமி, நம்பியார், ஜெயலலிதா,..........நீண்டுகொண்டே போகின்றது!

இவர்கள் அனைவருமே ஐயர், ஐயங்கார், நம்பூதிரிகள்,... என்ற வரிசையில் நகர்கின்றன! இதை ஏன் ஒருவரும் பெரிது படுத்துவதில்லை? 

நான் ஒரு சைவன் என்பதில் எனக்குப் பெருமை! முருகன் எனது கடவுள். அவன் முருகனாக வள்ளியுடன் இருக்கும் போது என்னால் அவனை ஏற்க முடிகின்றது! ஆனால் அவன், கந்தனாக, தேவயானை சமேதனாக வரும்போது, என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இதே போல, சிவன், சிவனாக இருக்கும் போது, லிங்கமாக இருக்கும்போது என்னால் வணங்க முடிகின்றது! அழகிய அர்த்தநாரீச்வர தத்துவத்தின் பெருமையையும் உணர முடிகின்றது! அதற்கு மேல், ஐயப்பனாக,அவனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஏனெனில் ஐயப்பன், பிறப்பில், விஷ்ணுவுடன் சைவம் கலந்து இந்து மதத்தினுள் போய் விடுகின்றது. இதே நிலையே. இராமர், லட்சுமணன்,என வரும்போதும் ஏற்படுகின்றது! சிவபக்தனான இராவணனை அழித்து வெற்றிவாகை சூடிய இராமனை வணங்கும் மனம் எனக்கு வருவதில்லை! இது தான் மதத்தைப்பற்றிய எனது நிலைப்பாடு!

இன்னொருவருடைய கலாச்சாரத்தைத் தமிழன் வளர்த்துக்கொண்டு திரிகின்றான்! காஞ்சீபுரம் புடவைகளும், பரதநாட்டிய அரங்கேற்றங்களும் என்னைக் கவர்ந்திழுக்கவில்லை! ஏனெனில் அவை எமது கலாச்சாரத்துக்குள் திணிக்கப்பட்டவை! 

ராஜ ராஜ சோழன் ஈட்டிய வெற்றிகளினால், அவனிலும் பார்க்கப் பலமடைந்தது, அவனுடன் தொங்கிகொண்டிருந்த பிராமணர்களே! வேர்வை சிந்தாது, இரத்தம் சிந்தாது வெற்றி பெற்றவர்கள் அவர்களே! தாய்லாந்தின் அரச முடிசூட்டு விழாக்களில், 'சிவபுராணம்' இன்னும் ஒலிக்கின்றது! ஆனால், அதைத் தமிழர்கள் ஒலிப்பதில்லை! பிராமண வம்சாவளியினர்கள் தான் இன்னும் ஒலிக்கின்றார்கள்! தஞ்சைப் பெரிய கோவில் கட்டியவன், வென்றெடுத்த பூமியில், அரசர்களின் பெயர்களில், வீதிகளின் பெயர்களில் இருப்பது ' ராம்' என்பதே தவிர 'சிவா' இல்லை! அது மட்டுமில்லை, தமிழனைக் குறிக்கும் 'தாய்லாந்து மொழியில்' உள்ள சொல்லானது மிகவும் கீழ்த்தரமானது! இதற்குக் காரணம், யாராக இருக்கமுடியும்?

தமிழ் மன்னன் வென்றெடுத்த பூமியின் விமான நிலையத்தில் இருக்கும் சிலைகள் முன்னிலைப்படுத்துவது, தேவர்கள் பாற்கடலைக் கடைவது தான்! சிவன் முட்டாளைப் போல, நஞ்சை விழுங்கியதைத் தவிரச் சைவம் இதில் காணப்படவில்லை. இந்து மதம் தான் அங்கே முன்னிலைப்படுத்தப்படுகின்றது! அந்த விமான நிலையத்தின் பெயர் கூட, 'ஸ்வர்ண பூமி'!

தமிழன் வென்ற நிலம்!  :icon_mrgreen:

அழகாக சொல்லி இருக்கிறீர்கள்!
well done!
பச்சை இல்லை. 
இந்துமதம் ஒரு கடல் அதற்குள் பல முத்துக்கள் இருக்கிறது. வெளியே கொண்டுவர வேண்டும்.
இப்போது எங்கும் சாக்கடைதான் இந்த கடலோடு கலக்கிறது ..... முத்துக்களை காணவே முடியவில்லை.
 
ஒரு திருத்தம் நிச்ச்ச்சயம் வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.