Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீபச் செல்வனின் தங்கை புலிகளால் பிடித்துச் செல்லப் பட்டு கள முனைக்கு அனுப்பப் பட்டிருந்தபோது தீபச் செல்வன் யாழ்ப்பாணத்தில் இருந்தார். அவரிற்கே தங்கை உயிரோடு இருக்கிறாரா என்று தெரியாது . அதே நேரம் அவர் இறந்து விட்டதாகவும் வெய்திகள் வெளியாகியிருந்தது. அதனைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன் பின்னர் தனது தங்கை உயிருடன் இருப்பதாக  தீபச் செல்வன் அறியத் தந்ததும் நான் அந்த பதிவையும் அழித்து விட்டிருந்தேன். புலிகளால் பிடித்துச் செல்லப் பட்ட தங்கைக்காக அவரே எழுதிய கவிதை யழிலும் உள்ளது இணைப்பு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65983&hl=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

 

-----------
இதேபோல தீபச்செல்வனின் தங்கையை – அதிலும் அவள் பதின்மூன்று வயதுச்சிறுமியாக – பள்ளி மாணவியாக இருந்தபோது புலிகள் அவளை பிடித்துச் சென்றதையும் தீபச்செல்வன் தன்னுடைய
--------------------------------
இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.
-----------------------------------
(நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு)

 

அடுத்ததாக  தீபச் செல்வனுடனான பணப் பிரச்சனையை  நான் அவரை விரைவில் நேரே சந்திப்பேன் அப்போது தீர்த்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆவணப் படம் தொடர்பாக தீபச் செல்லனிற்கும் எனக்கும் 22 யூன் மாதம் 2011 ஆண்டு முகப் புத்தகத்தில் நடந்த உரையாடல் நான் வீடியோவை கேட்பதும் அவரது மழுப்பல் பதிலும்

Capture_zps291a7431.png

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேவலம் கெட்ட வாழ்கையை விட நஞ்சு குடித்து சாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டமான பேச்சு தன் ஊரை கெடுக்குதுங்க - அது

வெட்டித்தானமாக் கேக்கிறவங்க

காதையும் கெடுக்குதுங்க

சந்திலும் பொந்திலும் வாதம் - அதால்

தலைவலி மருந்துக்கு லாபம்

கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து

குடும்பத்தை கலக்குதுங்க - பெரும்

குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி

பொழப்பயும் கெடுக்குதுங்க

புரளியும் வதந்தியும் மூட்டி - ஒரு

பொய்யை நூறாகக் கட்டி - கரும்

பூதம் என்றும் சிறு பேய்கள் என்றும் - பல

பாதையும் ஊரையும் கெடுக்குதுங்க

அறையில் வளர்ந்து வெளியில் பறந்து

அவதிப் படுத்துதுங்க - ஊரை

அவதிப் படுத்துதுங்க - அது

அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே

அமைதியை கெடுக்குதுங்க ...

 

 

~~~~~ நன்றி

~~~~~பட்டுக்கோட்டை கல்யாணம்

 

குரல் ~ 196 (பயனில சொல்லாமை - Against vain Speaking)

பயனில்சொல் பாராட்டுவானை மகனேனல்

மக்கட் பதடி யேனல்

பயனற்றவைகளை சொல்லி பயன் பெற நினைப்பவனை, மனிதன் என்பதை விட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ எங்க எண்டு கேக்கிறதாலயும் அதுக்கு  ஏதோ பதில் தெளிவில்லாம வாற படியாலயும் தீபச் செல்வன் காசு வாங்கின மாதிரி ஆகி விடுமா? இது எதையும் நிரூபிக்க இல்லையே சாத்திரி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இங்கு சாத்திரி என்னத்தை தனது கையில் கொண்டு வந்து கருத்தையும் தனது பொய்யையும் திசைதிருப்புவார் என்பது தெரிந்ததே.எங்களிடமும் பல பதிவுகள் ஆவணங்கள் இருக்கிறது. அதையெல்லாம் தீபனோ நானோ கொண்டு வந்தால் எங்களை எப்படி பழிசுமத்தி பொய்யால் வெல்லலாம் என்பதற்கு சாத்திரியால் முடிந்த படி வகைகள் இருக்கிறது.  
 
சாத்திரியின் பொய்யான குற்றச்சாட்டு ஆனந்தவிகடன் வரை எழுதுவேன் என சாத்திரி விட்ட மிரட்டலின் பின்னாலேயே இங்கு எழுத வேண்டி வந்தது. 
 
ஆனால் தொடர்ந்து தீபன் மீதான சாத்திரியின் தொல்லைக்கு பதில் எழுத வேண்டிய கடமை இங்கு எழுத வைக்கிறது. சாத்திரியின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துவிட்டு இத்தோடு இங்கு எழுதுவதை நிறுத்துகிறேன். இனிமேல் சாத்திரிக்கு இதில் பதில் எழுதி நானோ தீபனோ மினக்கெடமாட்டோம்  என்பதனை எங்கள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரிவிக்கிறோம்.
 
முதலில் சாத்திரிக்கு தீபன் மீது பழிதீர்க்கும் காரணம் எதனால் என்பதை தெளிவுபட வாசகர்கள் புரிய வேண்டும்.
 
தீபன் தனது தங்கை பற்றி ஏற்கனவே எழுதிய கவிதையில் தனது தங்கை இறந்து போனதாக எங்கும் எழுதவில்லை. தனது மனநிலமையில் தங்கையின் பிரிவை தனது உணர்வால் வெளிப்படுத்திய கவிதையை சாத்திரியும் இன்னும் சிலரும் தீபனின் தங்கை இறந்து விட்டதாகவும் புலிகள் கொன்றுவிட்டதாகவும் எழுதிக் கொண்டிருந்தார்கள். 
 
தனிப்பட தீபனின் தங்கை குடும்ப நிலமைகள் எனக்குத்  தெரியும் அதனால் பல இடங்களில் இவ்விடயம் பற்றி நானும் மௌனமாகவே இருந்தேன். ஆனால் சாத்திரி தனது அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்தல் மற்றவர்களின்  உயிருக்கு அவர்களது பாதுகாப்புக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை யோசிக்காமல் தனது காதில் எட்டும் விடயங்களை மிகைப்படுத்தி எழுதி தன்னை அனைத்தும் அறிந்த மகானாகவே காட்டுவது வளமை. 
 
இதுபோலவே தீபனின் தங்கை விடயத்திலும் நடந்தது.தனது தங்கைக்கு நடக்காத ஒன்றை தனது கற்பனைப்படி சாத்திரி எழுதியதற்காக தீபன்  தனது தங்கையைப் பற்றிய தவறான செய்தியை சுட்டிக்காட்டிய போது தான் சாத்திரிக்கு கோபம் வந்தது.  தனது பொய்யை நம்பிய அனைத்துலக புலிவாந்திகளுக்கு முன்னால் தன்னை நியாயமாக்க வேண்டிய தேவையேற்பட்டது.
 
தனது எழுத்தில் நம்பிக்கையில்லாத நிலமை வரக்கூடாதென்பதற்காக தீபனுடன் தனது வீரத்தை காட்ட வெளிக்கிட்டதன் முடிவே ஆவணப்படத்துக்காக தான் பணம் கொடுத்ததாக பொய்யான பழியை தனக்கு வேண்டிய தற்கால புலிவாந்திகள் யாவருக்கும் பரப்புரை செய்யத் தொடங்கியதோடு தீபனுக்கும் தனிச்செய்தியை முகநூல் மூலம் அனுப்பினார்.
 
கிருபன் வழங்கிய உதவி பற்றி ஏற்கனவே சாத்திரிக்கும் தெரியும். நிழலி, சாத்திரி உட்பட பலரிடம் உதவி கேட்கப்பட்டது. நிழலி வேலை இழந்திருந்ததால் தன்னால் முடியாதென்று சொன்னார். ஏற்கனவே நிழலி 2மாவீரர்களின் பிள்ளைகளை பொறுப்பேற்றிருந்ததால் நிழலியால் இவ்வுதவியை செய்ய முடியா போனதை வருத்தத்தோடு அறியத்தந்த பின்னர் கிருபனுக்கு தனிமடல் மூலமே கேட்டு உதவியை கிருபனே அனுப்பியும் வைத்தார்.
 
(கிருபன் இவ்வுதவியை நேசக்கரம் சார்பாக செய்யவில்லை. நானும் நேசக்கரம் சார்ந்தும் இவ்வுதவியை கேட்கவில்லை. நட்பு ரீதியாகவே கேட்ட உதவி. கிருபனும் தன்னை வெளிப்படுத்தாமல் செய்த உதவி. ஆனால் ஏற்கனவே உதவி கேட்டவர்களுக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தினேன். அது போல சாத்திரிக்கும் தெரியப்படுத்தினேன். இதுவரையில் சாத்திரிக்கு கிருபன் அனுப்பிய தொகைகூட எவ்வளவென்பது தெரியாது. தனது குத்து மதிப்பான கணக்கில் மட்டுமே இங்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்)
 
இவ்விடத்தில் கிருபன் செய்த இவ்வுதவி பற்றி நேசக்கரத்திலும் தெரிவிக்கவில்லையென்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் கிருபன் நேசக்கரம் பணிகளுக்கு தந்த உதவிகளை நேசக்கரம் கணக்கறிக்கையில் தெரிவித்து வந்துள்ளேன் என்ற கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படாமல் ஏற்கனவே கருத்துகள் வைக்கப்பட்டுள்ளது.
 
இங்கு கிருபன் தனது பெயர் இழுபட்டது பற்றி கண்டித்திருக்கிறார். தீபச்செல்வன் மீது சாத்திரி எறியும் கற்களுக்கெல்லாம் கிருபனின் உதவிதான் சாத்திரிக்கு ஆதாரம். அதனை கிருபனே அறிவித்தால் மட்டுமே சாத்திரியின் பணமல்ல அது என்பது மற்றவர்களுக்கு தெரியும்.
 
இதனை தீபனோ நானோ இல்லை யாரோ ஒருவர் உதவினார் அவரை நாங்கள் வெளிப்படுத்த முடியாதுள்ளோம் என பேசமாமல் இருந்தால் சாத்திரியின் பொய்யே தீபன் மீதான மற்றவர்களின் நம்பிக்கையை சிதைக்கும். கிருபன் உங்களது பெயரை நான் வேண்டுமென்று இங்கு கொண்டு வந்து எனது தனிப்பட்ட பகையை தீர்க்கவில்லையென்பதனை புரிந்து கொள்ளுங்கள் கிருபன் . 
 
தனது பொய்யான தகவலை பொய்யென்று சுட்டிக்காட்டியதற்காகவே தீபன் மீதான ஆவணப்படம் பொய் சாத்திரியால் திரிக்கப்பட்டு தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டதாக தனது முகநூல் விசுவாசிகளுக்கும் புலிவாந்திகளுக்கும் பொய்யான கதையை பரப்பிக் கொண்டிருக்கிறார்.
 
 
 

வீடியோ எங்க எண்டு கேக்கிறதாலயும் அதுக்கு  ஏதோ பதில் தெளிவில்லாம வாற படியாலயும் தீபச் செல்வன் காசு வாங்கின மாதிரி ஆகி விடுமா? இது எதையும் நிரூபிக்க இல்லையே சாத்திரி?

 

கொஞ்சம் பொறுங்கோ யஸ்ரின் சாத்திரியின் வீடியோ கேள்விக்கு பதில் தாறன்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தெருத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு அடித்து அருள் பெறுவதில் சாத்திரி கெட்டிக்காரன். யாராவது அமைதியாக செய்துவிட்டு அல்லது செய்கிற நல்ல விடயங்களை தனது பெயரில் போட்டு முதல்வனாகும் வளமையான குணமே சாத்திரி இங்கு வீடியோ கேட்கும் கதையாகும். 
 
தன்னுடைய பெயரை தக்க வைக்க யார் மீதும் யாரின் தியாகங்கள் இழப்புகள் மீதும் நெருப்புமூட்டியேனும் மகிழ்ச்சி காணும் நல்ல மனம் சாத்திரிக்கு. காலம் பல உண்மைகளை சொல்லும் சிலரது பாதுகாப்பு வாழ்வுக்காக பல விடயங்களில் மௌனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இந்த மௌனங்களே சாத்திரி காட்டில் இப்போது மழைக்காலமாக அமையவும் காரணமாக இருக்கிறது.
 
சாத்திரியின் ஆவணப்படம் அல்லது வீடியோவுக்கான பதிலும் உண்மையும் இதுதான் :-
 
தீபச்செல்வன் ஊடாக கிளிநொச்சியில் பல கிராமங்களிற்கான உதவிகள் செய்து கொண்டிருந்த 2009 - 2010காலம். அங்குள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளின் மனநிலமை போரின் பின்னான பாதிப்புகள் பற்றி பல கட்டுரைகளை தீபன் எழுதிக் கொண்டிருந்தார். தமிழ், யேர்மன், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் போரால் பாதிப்புற்ற குழந்தைகள் பற்றியதொரு ஆவணப்படம் எடுப்பமோ என தீபனிடம் கேட்டிருந்தேன்.
 
அப்போது நேசக்கரம் மூலம் உதவி வழங்கப்பட்டுக் கொண்டிருந்த மாணவர்களும் இந்த ஆவணப்பட முயற்சிக்கு தங்களால் ஆன ஆதரவை வழங்குவதாக முன்வந்திருந்தார்கள். மற்றைய மாணவர்களிடம் அவர்களது ஊர்களில் உள்ள குழந்தைகளின் நிலமைகளை தொகுத்து இப்படத்தை அனைத்துலக சமூகத்திற்கு இதனை வழங்குவோம் என்ற நோக்கில் பேசினோம். 
 
ஆனால் இதற்காக ஒரு சதமும் யாரும் கொடுக்கவில்லை. தேவையான பணத்தை நான் தருவதாக கூறினேன்.
 
(நேசக்கரத்திற்கான படமில்லை இது என்பதால் இதற்கான பணத்தை மாதாந்தம் எனது வேலையிலிருந்து சேமித்து தருவதாக சொல்லியிருந்தேன். இன்றுவரை மாதம் 20€வாக உண்டியல் வைத்து சேர்த்துக் கொண்டிருக்கிறேன். மும்மொழியிலும் படத்தை வெளியிடுவதற்கு தேவைப்படும் பணத்தை உடனடியாக தேட முடியாது)
 
 
இந்த வருடம் நிச்சயம் எங்கள் 4வருட கனவை நிறைவேற்றக்கூடிய எங்களது குழந்தைகள் பற்றிய ஆவணப்படத்தை வெளியில் கொண்டு வருவோம்.
 
ஆனால் தீபனும் மற்றைய மாணவர்களும் தங்களுக்கு கிடைத்த நேரங்களில் சில வீடியோ பதிவுகளை மேற்கொண்டு வந்தார்கள். அவற்றை எனக்கும் தந்திருந்தார்கள். அவற்றுக்கான ஒலிப்பதிவு சேர்க்கை மற்றும் குரல் பதிவுகளை இங்கே Germanyஇல்  செய்வதென முடிவெடுத்தோம்.
 
இந்த ஆவணப்படத்தை நாங்கள் வெளியிட முன்னர் ஊடகங்களில் இதுபற்றிய ஒரு செய்தியை போட விரும்பினேன். அப்போது சாத்திரியிடம் பல்கலைக்கழக மாணவர்களை வைத்து  ஒரு ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருப்பதாக சொன்னேன். சாத்திரி தனக்கு இந்திய முதல் ஐரோப்பிய தமிழ் ஊடகங்கள் யாவிலும் தொடர்புகள் இருப்பதாகவும் அதன் மூலம் தன்னால் ஊடகங்களில் விளம்பரம் செய்து தர முடியுமென்றார். (ஆனால் ஆவணப்படம் எவ்வகையில் வரப்போகிறது என்ற எதுவும் சாத்திரிக்கு சொல்லவில்லை) 
 
தனக்கு என்னிடமுள்ள வீடியோக்களை அனுப்புமாறு கேட்டிருந்த சாத்திரிக்கு அவற்றை கொடுப்பதில் உடன்பாடிருக்கவில்லை. காரணம் நாங்கள் என்ன நோக்கத்துக்காக இதனை தயாரிக்க முனைந்தோமோ அவற்றை தனது தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் நல்லெண்ணம் கொண்ட பத்திரிகையாளர் என்பதனை பல தரவுகள் பல போராளிகளது வாழ்வு சாத்திரிக்கு பலியானதால் இவ்விடத்தில் அவதானமாக இருக்க வேண்டிய தேவையிருந்தது. 
 
சாத்திரிக்கு சந்தேகம் வராமல் எங்களது படத்துக்கான ஊடக விளம்பரத்தை பெறலாம் என்ற நோக்கில் சாத்திரிக்கு ஒரு ஆவணப்படம் தாயகத்தின் உண்மை நிலவரங்களை வைத்து வரவுள்ளது என்பதனை மட்டும் சொல்லி விளம்பரத்தை செய்து தருமாறு கேட்டிருந்தேன். சாத்திரி என்னிடமிருந்த வீடியோக்களை பெற்றுக் கொள்ளவே பெரும் முயற்சி செய்தார். நான் தீபச்செல்வன் எடுத்துக் கொண்டிருக்கிறார் விரைவில் வரும் வந்ததும் தருவேன்என கூறியிருந்தேன் . அதற்கு முன் ஊடகங்களில் விளம்பரத்தை செய்து தருமாறு கேட்டிருந்தேன். 
 
இந்தவேளை தீபனுக்கு கூறியிருந்தேன். சாத்திரி  வீடியோ கிளிப்புகளை பெற்றுக் கொள்ள நிற்பதால் நாங்கள் நினைக்கும் விடயம் நிறைவேற தடைகள் வரும். வீடியோ பற்றி அதிகம் எதுவும் கதைக்காமல் பிடிகுடுக்காமல் கதைக்குமாறு. அதன்படி தீபனும் சாத்திரிக்கு பதிலளித்திருந்தார். 
 
சாத்திரி இதோ ஒருபேப்பர் ஆனந்தவிகடன் குமுதம் என பல ஊடகங்களில் விளம்பரம் செய்து தருவதாக சொன்னது தவிர எந்த விளம்பரத்தையும் செய்து தரவேயில்லை. ஆனால் தீபச்செல்வனுடன் ஆவணப்படம் தயாரிப்பில் ஆதரவு தந்த பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர்புகளையும் விபரங்களையும் தருமாறும் கேட்டுக்கொண்டேயிருந்தார்.
 
ஏற்கனவே பல விடயங்களில் சாத்திரியின் மீதான நம்பகம் இல்லாமையால் சமாளித்துக் கொண்டு சாத்திரியை முறிக்காமல் போக வேண்டியிருந்தது. எதிர்த்து நாங்கள் போனால் எங்களது வேலைகளில் சாத்திரியின் தலையீடும் சாத்திரி பின்னால் நிற்கும் ஆட்களின் தடைகளும் எங்களை நினைத்த விடயத்தை செய்யவிடாது. 
 
உண்மையில் எங்களது ஆவணப்படம் வெளியில் வர வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தால் சாத்திரி விளம்பரங்களை செய்து தந்திருப்பார். ஆனால் அதனைச் செய்யாமல் வீடியோ கிளிப்களை கேட்டுக் கொண்டதற்கான காரணம்  நாங்கள் வீடியோ எடுத்த இடங்களில் உள்ள அரசபடை அதிகாரிகளால் தொல்லை தருவதற்கே தவிர நல்லெண்ணத்தில் அல்ல. 
 
ஒருமுறை தீபனின் கமராகூட அரசபடைகளால் பறிக்கப்பட்டது. இதற்கு காரணம் சாத்திரியே. இதுபோல இன்னொரு மாணவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட வீடியோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கும் சாத்திரியே காரணம். இத்தகைய நபர்களால் ஆபத்துகள் இருப்பதை உணர்ந்தே சாத்திரியை ஏற்றுக் கொண்டது போல நடிக்க வேண்டி வந்தது.
 
ஆனால் எங்களது முயற்சிகளில் தானே கதாநாயகன் போல வேடமிட்டு இந்தியா முதல் இதர தனது கொலிடே போகும் நாடுகள் வரையும் நேசக்கரம் தனது தயவிலும் தன்னாலுமே இயங்குவதாக படம் காட்டிக்கொண்டு திரிந்தார்.
 
யாவும் தெரிந்தும் பேசாமல் எனது வேலைகளில் கவனமாக இருந்தது பெயர் வேண்டுமென்றதற்கு அல்ல. பலரை காப்பாற்ற வேண்டிய தேவையிருந்ததால். ஒரு கட்டத்தில் நேரடியாகவே சாத்திரி மீதான எதிர்ப்பைக் காட்ட வேண்டி வந்த போதே கடந்தவருடம் நேசக்கரத்தை அழிப்பேன் என்று சபதமிடும் வரை தொடர்ந்தது. 
 
இன்று தீபனுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை போல கடந்த வருடம் எனக்கு சாத்திரி சவால்விட்டிருந்தார். 
 
கே.பியிடமும் , கருணாவிடமும் தான் தொலைபேசியில் கதைத்து நேசக்கரத்தை நிறுத்துமாறு கூறியிருப்பதாகவும் வேண்டுமானால் கருணா , கேபியிடம் கேட்குமாறும் எழுதியிருந்தார். இத்தோடு ஒரு வரியையும் சேர்த்திருந்தார். அதாவது கே.பி. கருணாவின் தொடர்பு உங்களுக்கு இருக்கிறது தானே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு எழுதியிருந்தார் முகுநூலில்.
 
இப்படியெழுதியது  மற்றவர்களுக்கு நானும் கே.பி கருணாவின் தொடர்பில் உள்ளவர்களின் ஆளென எப்போதாவது சொல்லுவதற்கு தனது ஆயுதமாக பயன்படுத்தவே. கே.பி.கருணாவுடன் தொடர்பு கொள்ள வேண்டிய எவ்வித தேவையோ அல்லது எவ்வித அலுவலோ எனக்கு இதுவரையில் இல்லை. இனியும் இருக்காது.
 
கடந்த வருடம் சாத்திரி எழுதிய எச்சரிக்கை :-
 
reply1_zps9548bbb7.jpg
reply_zps88e06dd1.jpg
 
தனது எழுத்துக்களில் கடந்த காலங்களில் தன்னை மற்றவர்கள் மிரட்டுவதாகவே எழுதி மற்றவர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார். ஆனால் தானே அத்தகையதொரு வழிமூலமே அமைதியாக பணிசெய்வோர் மீதும் பயணிப்போர் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார். தனது பொய்யை மறைக்க மற்றவர்கள் மீது எத்தனையாயிரம் பொய்களை புனைந்து கட்டுகிறார்.
 
தீபனுக்கு நேற்று விடுத்திருக்கும் சாத்திரியின் எச்சரிக்கை இது :-
 
1931934_10152065971343801_1458967577_n_z
 
சாத்திரி இதுவரையில் ஒரு சதமும் தீபனுக்கு கொடுக்கவில்லையென்பது உண்மை தனது பொய்யை மறைக்க நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருப்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளுங்கள். 
 
போரின் குழந்தைகள் பற்றி ஆவணப்படத்தை UN , UNICHEF, SOSபோன்ற அனைத்துலக அமைப்புகளுக்கு அனுப்பும் கனவோடு ஆரம்பித்தோம். ஆனால் தான் பணத்தை தந்ததாக பொய்சொல்லி எங்களது எல்லா உழைப்பையும் சுயநலத்தோடு பலியெடுத்துக் கொண்டிருக்கிறார்.ஆனாலும் இந்தப்படத்தை நாங்கள் வெளியிடுவோம். இந்த வருடம் நிச்சயம் கொண்டு வருவோம். ஆனால் சாத்திரியின் பங்களிப்போ ஆதரவோ இங்கு ஒரு சதமோ துளியோ இல்லையென்பதனையும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.ஆனால் சாத்திரியின் பங்களிப்போ ஆதரவோ இங்கு ஒரு சதமோ துளியோ இல்லையென்பதனையும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.
 
சாத்திரியின் தொல்லைகள் எங்களது பணிகளுக்கு வேறு வேறு வடிவங்களாக துரத்திக் கொண்டிருக்கிறது. தற்போது நேசக்கரத்தின் பணியாளர்களின் விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார். 
 
தீபச்செல்வன் தொடர்ந்தும் நேசக்கரத்தின் பணியாளராக இருப்பதால் சாத்திரியின் தொல்லை தீபச்செல்வனையும் துரத்திக் கொண்டிருக்கிறது.  எங்கள் மீது சாத்திரி எறியும் எல்லாக்கற்களும் நாளை எங்களையே அழித்தும் போகலாம். 
எனினும் நாங்கள் போராடுவோம்.
 
தீபச்செல்வனுக்கோ மற்றும் நேசக்கரம் பணியாளர்களுக்கோ ஆபத்து எனில் அது சாத்திரியின் ஆட்களாலேதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 
இதற்குமேல் இங்கு எழுதமாட்டேன். காலம் சாத்திரியின் முகத்தை வெளிப்படுத்தும். அந்த நேரம் நானோ அல்லது என்னுடன் கூடவரும் நண்பர்களோ உயிரோடு கூட இல்லாது போகலாம் ஆனால் உண்மைகளை சொல்லாமல் காலம் சாகாது.
 
நன்றி
 
வணக்கம்.
 

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தொல்லை 2009 லை இருந்து இருந்து கொண்டேதான் இருந்ததாம்.இலங்கை இராணுவத்தை வைத்து  தீபச் செல்வனின் கமறாவையெல்லாம்  அடிச்சு உடைச்சிருக்கிறன். இராணுவத்தை வைச்சு  ஒரு மாணவனை கூட போட்டுத் தாக்கியிருக்கிறன். ஆனால் அதையெல்லாம் தண்டி  நேசக்கரத்தை வழி நடத்துவதற்காக  என்னோடு ஒட்டி உறவாடினாராம் அதுவும் 3 வருடங்கள். இதே யாழ் இணையத்தில்  நேசக்கரம் தவிர்ந்து  எனது பதிவுகளிற்கும் ஓடியந்து  பாராட்டி பதிவுகள் போட்டிருந்ததும்  நான் இலங்கை இராணுவத்தை வைத்து  மிரட்டலாம் என்பதாலாம். அது சரி .நான் எழுதியவை ஏன் பாதி அழிக்கப் பட்டிருக்கின்றது சாந்தி முழுமையாக போட்டிருக்கலாமே. அதில் நீங்கள் அழித்த விடயங்கள்  கருணாவோடும் கே.பி யோடும் நாங்கள்  இருவரும் பேசிய விடயங்கள்தானே . சும்மா சீன் காட்டியது போதும்   அதே நேரம் நீங்கள் அழிக்காமல்  போட்ட எமது  முகப் புத்தக உரையாடவில் எழுதிய அதே விடயம்தான் "" இப்போதும் ஆணவத்தின் உச்சியில் நிற்கிறீர்கள்  வாழ்க வளர்க "" அதையேதான் தீபச் செல்வனிற்கும் எழுதியிருக்கிறேன். இப்போ வளர்ந்து விட்டீர்கள்  நல்லா வருவீர்கள் வாழ்க வளர்க. அப்போ . நீங்களே ஆப்பை  சீவிட்டு அதுக்குமேலை ஏறி அமர்ந்திருக்கிறீர்கள்...வரட்டா  நல்லிரவு வணக்கங்கள்

Edited by sathiri

இதையெல்லாம்....Prism இல் verify செய்ய சொல்லி CIA விடம் கேட்க்க வேண்டும்.... :)

 

உங்கள் சண்டையை பார்த்து தான் Snowden வேலையை விட்டு ஓடினானோ தெரியாது....

 

எல்லாரும் பெரிய ஆக்கள்...கொஞ்சம் கவனமா இருக்கோணும்.....

நடந்த சம்பாஷனைய பாக்கேக்க சாத்திரி ரொம்ப பக்கா ........ ஆசாமி போல இருக்கு. நல்ல காலம் நம்ப வீட்டு அட்றஸ் அந்த ஆசாமிக்கு தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.