Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு உலக தமிழர் பேரவை கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ad5a610eef29eebdb103fcae99dfd8fa.jpg

 புலம்பெயர் அமைப்புகளை தமழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என உலக தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

 
இவ் நடவடிக்கை இலங்கையில் யுத்தத்தின் போதும்  மனித உரிமை மீறல்,நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு முயற்சிப்போரை அச்சுறுத்தி மௌனிக்கச் செய்யும் முயற்சியாகவே இது அமைவதாக உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகர் ஜோன் ரியன் தெரிவித்துள்ளார்.
 
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கில் புலிகளை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியைத் தடுப்பதற்காகவே இந்தத் தடை நடவடிக்கை என்கிறது அரசு. ஆனால், யாருமே மீண்டும் ஆயுதப் பிணக்குக்குச் செல்ல விரும்பவில்லை. அப்படிச் செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க மிக உண்மையான ஆதாரம் ஒன்றைக்கூட அரசினால் சமர்ப்பிக்க முடியாதுள்ளது.
 
. அரசின் இந்த நடவடிக்கை  இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேலும் மிக மோசமாக்கி பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நல்லிணக்க செயற்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=160022815802613710

கடந்த ஐந்து வருடமா புலம்பெயர் ஈழ தமிழரிடம் அரசியல் அடிவாங்கியது போதவில்லை போலும்.

தமிழர் பேரவையை தடை செய்தால் கனடா வந்து நயாகரா நீர்வீழ்ச்சி பக்கம் போகலாம் என்று சக்கரவர்த்தி கனவு காண்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாக் கதவுகளையும் அடைக்கிறார்கள். இனிமேல் சிங்களம் அவசரம் ஆபத்துக்கு யாரிடமும் கதைக்கமுடியாமல் செய்துவிட்டது. சிங்களத்தில் பின்பக்கத்தில தீ எப்போதோ பிடித்துவிட்டது, ஆனால் இப்பதான் அவர்களுக்குக் கொஞ்சம் சூடுபடத் தொடங்கியிருக்கு.  அதுக்காக எண்ணைச்சட்டியில இருந்து அடுப்புக்குள்ள விளக்கூடாது.

 

போதாக்குறைக்கு அவர்களது நண்பன் பூட்டினும் அகலக்கால் வைத்து கிரீமியா தொடங்கி தனது எல்லைகளில் ரஸ்யர்கள் அதிகமாக வாழும் பகுதிகளை ரஸ்யாவுடன் சேர்ப்பதற்கு வெளிக்கிட்டு விட்டார். இதேபோல் இந்தியாவிலும் ஒரு நல்ல ஆட்சிவந்து, தமிழ் பேசும் மக்களது பிரதேசத்தை நாங்களும் எங்களுடன் சேர்க்கப்போகிறோம் எண்டு சொன்னால் கொஞ்சமென்ன கனக்கவே கஸ்டப்படப்போகினம் (அப்படி நடக்காது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை)

 

எதிரியைக்கூட பக்கத்திலதான் வைத்திருக்கவேண்டும். கனதூரம் கலைச்சுப்போட்டு பைனாக்குலரில பாக்குறது சுத்த வேஸ்ட்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் வெட்கப்பட வேண்டியது – GTF
 
Joan%20Ryan_CI.jpg

புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் வெட்கப்பட வேண்டியது என க்ளோபல் தமிழ் போராம் தெரிவித்துள்ளது. க்ளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புக்கள் என்ற வகையீட்டின் அடிப்படையில் பயங்கரவாத இயக்கங்களாக இந்த அமைப்புக்கள் அடையாளப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடாத்துமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகளை முடக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்துள்ளதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் முன்னாள் கொள்கை ஆலோசகரும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன் ரயன் (துழயn சுலயn) தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்தக் கூடாது என்ற தொணியில் இவ்வாறு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான போதிய ஆதாரங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளமை கவனிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105052/language/ta-IN/-----GTF.aspx#.Uzt-YX2zWiY.facebook

இலங்கையில் ஆயுத போராட்டம் இடம்பெறுவதனை எந்தவொரு தரப்பினரும் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.முன்னணி தமிழ் அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்துவதன் மூலம், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கையில் உள்ள சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை பேண முடியாத நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் புலம்பெயர் தமிழர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஆக்கபூர்வமான தொடர்புகளைப் பேணுவதற்கு அரசாங்கம் நாட்டம் காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளானது நாட்டின் மனித உரிமை நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105052/language/ta-IN/-----GTF.aspx#.Uzt-YX2zWiY.facebook

சகோதரத்துவ, இணக்கவாத, ஒற்றுமைவாத கொள்கைகள் எல்லாம் தமிழரை கட்டுரை எழுதி அறுக்கத்தான்.

இலங்கை தன்னை திருத்திகொள்ள உலகும், தமிழர்களும் கொடுக்கும் சந்தர்ப்பங்களை உபயோகிகாமல் மேலும் தன்னை ஒரு மோசமான நாடாக காட்டி சிக்கலில் மாட்டுகிறது. எல்லாம் எம் நன்மைக்கே.. கெடு குடி சொற் கேளாது.. உண்மையில் இலங்கைக்கு பதிலடியாக புலம்பெயர்தமிழ் அமைப்புகள் மேலும் தங்கள் வாழும் நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து இலங்கையின் 1956 முதல் இன்றுவரை இனவாத அரசியல்களை ஆதரங்களுடன் புட்டுவைத்து எம்மினத்திற்கு அவர்கள் மூலம் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இலங்கை அரசு தான் ஏன் இவர்களை தடைசெய்தோம் என வருந்த வைக்க மேலும் வேகமாக செயல்பட்டு எல்லா நாடுகளின் அங்கீகாரம் பெற்று எம்மினத்திற்கு விடுதலையும், இலங்கைக்கு தண்டணையும் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தடைகள் எங்களை ஒற்றுமைப்படுத்தவும் சர்வதேசத்தின் கவனத்தை அனுதாபத்தை எங்கள் பக்கம் ஈர்க்கவும் பயன்படுத்த வேண்டும். சிங்களவன் செய்யும் ஒவ்வொரு நகர்வையும்.. தவறையும் எமக்கான பலமாக்கிக் கொள்வதில் தான் நாம் அவனை வெற்றி கொள்ள முடியும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தடைகள் எங்களை ஒற்றுமைப்படுத்தவும் சர்வதேசத்தின் கவனத்தை அனுதாபத்தை எங்கள் பக்கம் ஈர்க்கவும் பயன்படுத்த வேண்டும். சிங்களவன் செய்யும் ஒவ்வொரு நகர்வையும்.. தவறையும் எமக்கான பலமாக்கிக் கொள்வதில் தான் நாம் அவனை வெற்றி கொள்ள முடியும். :icon_idea:

 

 

நானும் இவ்வாறு  தான் யோசித்தேன்

இங்குள்ள  இளைய  தலைமுறையை  இது சீற்றம் கொள்ளவைக்கும்

அதை  தமிழர்கள் ஒருங்கமைத்து

இங்கள்ள  கட்சிகளுடன் சேர்ந்து ஐனநாயகவழிகளில்  பலப்படுத்தணும்

புலம்பெயர்மக்கள் ஒற்றுமையாகவும், விரைவாகவும் செயற்படாவிட்டால் இலங்கை எல்லாப்புலம் பெயர்மக்களும் பயங்கரவாதிகளாக வெளி நாடுகளுக்கு பூச்சாண்டி காட்டி வெளி நாடுகளின் அதிகாரிகள் மட்டங்களில் ஊடுறுவி எல்லோருக்கும் ஆப்படிக்கும். அதே நேரம் தனது இனவாத நடவடிகைகளை இலங்கையில் அரங்கேற்றும். அதே நேரம் கைகூலிகள், முகவர்கள் ஊடாகவும் வெளி நாடுகளில் அலுவல்கள் பார்க்கும்.. எனவே மிக அவதானத்துடன், ஒவ்வொரு அடியும் வைக்கவேண்டும். துடிப்பான இளையதலைமுறையையும் முன் நின்று செயல்பட ஈடுபடுத்துவது நன்று.. அவர்களுக்கு நல்ல செயல்திறன் உண்டு. வழினடத்தப்பட்டால் மொழி கையாளும் திறமையும், விளக்கம் கொடுக்கும் திறமையும் சிறந்த பலனைத்தரும். காலத்தை வீண்கடத்த வேண்டாம்.. எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்கள் போல் இலங்கையின் பிரச்சாரம் மேற்கு நாடுகளில் வேலை செய்யாவிட்டாலும் எமது சோம்பேறித்தனமும் பாராமுகமும் எதிர்க்கு சாதகமாக நிறையவே வாய்ப்புண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்கள் போல் இலங்கையின் பிரச்சாரம் மேற்கு நாடுகளில் வேலை செய்யாவிட்டாலும் எமது சோம்பேறித்தனமும் பாராமுகமும் எதிர்க்கு சாதகமாக நிறையவே வாய்ப்புண்டு.

 

 

உண்மை

எதிரி  எம் கதவைத்தட்டும்வரை

அது அடுத்தவர் பிரச்சினை  என்று தூங்கும்

ஒதுங்கும் நிலை  மாறணும்

 

சிறீலங்கா  அரசின் இந்த முடிவுக்குப்பின்

தமிழர் அதிகளவில் ஒன்றிணைந்துள்ளனர் என்ற  செய்தி  சர்வதேசத்துக்கு தெரிய  வரணும்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் அரசுக்கெதிராக செயற்பட்ட இயக்கங்களும் தடை செய்யப்பட்டவற்றில் உள்ளடக்கம்:
லக்ஷ்மன் கிரியெல்ல:-
lakshman-kiriella_CI.jpg

உலக நாடுகள் இலங்கையை ஜெனீவாவில் கைவிட்டதைப் போன்று எதிர்காலத்தில் இந்த அரசாங்கமும் இலங்கையை கைவிடும் நிலைமை உருவாகும். அரசாங்கம் தடை செய்த இயக்கங்களில் ஜெனீவாவில் அரசுக்கெதிராக கருத்துகளை முன்வைத்த இயக்கங்களும் உள்ளடங்கியுள்ளதாகவும் ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பிட்டகோட்டே சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை (03.04.14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல

அரசாங்கம் தடை செய்த 15 அமைப்புகள் தொடர்பான பின்னணி அதன் விபரங்கள் எனக்குத் தெரியாது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை பிரதான மண்டபத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதான மண்டபத்தைச் சுற்றியுள்ள 35 சிறிய மண்டபங்களில் இத்தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பல கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105149/language/ta-IN/article.aspx

 

கடந்த காலங்கள் போல் இலங்கையின் பிரச்சாரம் மேற்கு நாடுகளில் வேலை செய்யாவிட்டாலும் எமது சோம்பேறித்தனமும் பாராமுகமும் எதிர்க்கு சாதகமாக நிறையவே வாய்ப்புண்டு.

எம்மவருக்கு தற்காப்பு ஒப்பாரி (defence)தான் தெரியும். எதிரியின் பலவீனத்தை அடையாளம் கண்டு முன்தாக்குதல்(offence) செய்ய தெரியாது.

ஐந்து வருடமா அரசியல் ரீதியா நொந்து போய் இருக்கும் சிறி லங்கா இனவெறி குடும்பத்தை தாக்க தெரியவில்லை.

வெள்ளையரும், பாதிக்கப்பட்ட சிங்களவரும் தான் தாக்குகிறார்கள்.

நாம் எல்லா முட்டைகளையும் ஐ.நா. கூடைக்குள் போட்டு அடைகாக்கிறோம்.

எம்மவருக்கு தற்காப்பு ஒப்பாரி (defence)தான் தெரியும். எதிரியின் பலவீனத்தை அடையாளம் கண்டு முன்தாக்குதல்(offence) செய்ய தெரியாது.

ஐந்து வருடமா அரசியல் ரீதியா நொந்து போய் இருக்கும் சிறி லங்கா இனவெறி குடும்பத்தை தாக்க தெரியவில்லை.

வெள்ளையரும், பாதிக்கப்பட்ட சிங்களவரும் தான் தாக்குகிறார்கள்.

நாம் எல்லா முட்டைகளையும் ஐ.நா. கூடைக்குள் போட்டு அடைகாக்கிறோம்.

 

அதானே, சிங்களவனை எதிர்த்துப் போட்டு நாங்கள் அங்கே கோடை விடுமுறைக்கு போக முடியுமா? நல்லிணக்கம் பற்றி கதைக்க வேண்டாமா?சிங்களவன் செய்யிறா அல்ப்பத்தனமான அபிவிருத்தி வேலைகள பார்த்துப் போட்டு இங்கே வந்து ஏதோ ஈழம் சிங்களவன் உதவியோட சிங்கபூர்,டுபாய் மாதிரி வந்திட்டுது மக்கள் எல்லம் சந்தோஷ்மாக இருக்கீனம் என் புழுக வேண்டாமா? அதை விட இடைக்கிலே புலிகள் இதை பேசித்தீர்த்து இருக்க வேணும் என அர்சியல் பாடம் நடத்த வேண்டாமா? இப்படி எத்தனை விடயங்கள் இருக்கு எனவே நாங்கள் சிங்களவனை எதிர்க்கமாட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

அதானே, சிங்களவனை எதிர்த்துப் போட்டு நாங்கள் அங்கே கோடை விடுமுறைக்கு போக முடியுமா? நல்லிணக்கம் பற்றி கதைக்க வேண்டாமா?சிங்களவன் செய்யிறா அல்ப்பத்தனமான அபிவிருத்தி வேலைகள பார்த்துப் போட்டு இங்கே வந்து ஏதோ ஈழம் சிங்களவன் உதவியோட சிங்கபூர்,டுபாய் மாதிரி வந்திட்டுது மக்கள் எல்லம் சந்தோஷ்மாக இருக்கீனம் என் புழுக வேண்டாமா? அதை விட இடைக்கிலே புலிகள் இதை பேசித்தீர்த்து இருக்க வேணும் என அர்சியல் பாடம் நடத்த வேண்டாமா? இப்படி எத்தனை விடயங்கள் இருக்கு எனவே நாங்கள் சிங்களவனை எதிர்க்கமாட்டம்

 

அப்படியே  கண்டிவீதியில்  நின்று

கொழும்புக்கு முன்பு ஒரு நாள் பயணம்

இப்ப 4 மணித்தியாலம்

நல்லதா? கெட்டதா? என்றொரு விவாதம் வைச்சா???

சும்மா பிச்சுக்கொண்டு ஓடுமில்ல.................? :(

சிறீலங்கா செய்த முதல் உருப்படியான வேலை இதுதான்

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நாங்கள் ஏதாவது செய்தாக வேண்டும். நாடு கடந்த அரசு போர்க்குற்றவாளிகளைப் பட்டியலிடுகின்றது. வரவேற்கக் கூடிய விடயம்.

இப்படியே இந்தச் சம்பவத்தைக் கடந்து செல்வோம் என்றால், அது வரலாற்றுத் தவறுகளில் ஒன்றாக இருக்கும். சிறுவர் போராளி என்று சிங்கள அரசு பிரச்சாரம் செய்யும்போது பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அதன்விளைவு, நம்மினக் குழந்தைகளைக் கொன்றபோது, அச் சம்பவங்கள், குழந்தைப் போராளிகளாக சிங்கள அரசு பிரச்சாரம் செய்ததை எம்மால் தடுக்கமுடியவில்லை. இப்படி புலம்பெயர் தமிழர்களைப் பட்டியிட்டமை, அவர்களின் பாதுகாப்புக்கு இடையூறு, அச்சுறுத்தலாக நடவடிக்கை எடுக்க முடியுமா? அவர்களின் முகவரி, தொலைபேசி இலக்கம், முதல் கடவுச்சீட்டு இலக்கம் வரை வழங்கப்பட்டமை, பாதுகாப்பு அச்சுறுத்தலான விடயமாகும். தவிர, பிரிதொருநாட்டில் வசிக்கின்றவர்களின் தகவல்களை இரகசியமாகத் திருடி வெளியிடுதல் என்பதை எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்(பவர்)ஸ்டார், என்ன பகலிலேயே போட்டாச்சோ. தேடிப்பாரும் உமது பேரும் இருக்கும். உங்கு புலிஎன்பது குறியிடுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா செய்த முதல் உருப்படியான வேலை இதுதான்

 

 

யாரும் நல்லாயிருந்தால் உங்களுக்கு பிடிக்காதே .

முதலில் இனவாத நாடாக அறிவிக்க எல்லாத்தமிழர்களும் சேர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். செயலாற்றல் உள்ள நேர்மையான வழி நடத்தும் தமிழ்தலைமை உடன் வேண்டும். தமிழரைகாட்டிகொடுத்து விலாங்கு வாழ்க்கை நடத்துவர்களை அடையாளம் கண்டு விழிப்படையுங்கள்.இவர்கள் தமிழ் பேசும் மூளையை சிங்களத்திற்கு அடகு வைத்தவர்கள். வாலை நிமிர்த்தமுடியாது. இவர்களால்தான் உலகின் கண்களில் இருந்து இலங்கை தப்பி வந்தது.இப்போதும் தென் ஆபிரிக்கா சென்று இலங்கையை காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்கள் போல் இலங்கையின் பிரச்சாரம் மேற்கு நாடுகளில் வேலை செய்யாவிட்டாலும் எமது சோம்பேறித்தனமும் பாராமுகமும் எதிர்க்கு சாதகமாக நிறையவே வாய்ப்புண்டு.

 

எம்மவருக்கு தற்காப்பு ஒப்பாரி (defence)தான் தெரியும். எதிரியின் பலவீனத்தை அடையாளம் கண்டு முன்தாக்குதல்(offence) செய்ய தெரியாது.

ஐந்து வருடமா அரசியல் ரீதியா நொந்து போய் இருக்கும் சிறி லங்கா இனவெறி குடும்பத்தை தாக்க தெரியவில்லை.

வெள்ளையரும், பாதிக்கப்பட்ட சிங்களவரும் தான் தாக்குகிறார்கள்.

நாம் எல்லா முட்டைகளையும் ஐ.நா. கூடைக்குள் போட்டு அடைகாக்கிறோம்.

 

உண்மை....

அருமையான... ஆதங்கம்,  அருமையான... பதில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.