Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைத்தொகுப்பு வெளியீட்டவிழா - 06-04-2014 - பார்வையாளர் விசுகுவின் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று 06-04-2014

யாழ் கருத்துக்கள உறவும்  என்னால் தம்பி  என பாசத்துடன் அழைக்கப்படுபவருமான 

நெற்கொழுதாசனின் அழைப்புக்கமைய அவரது கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன்.

எனக்கு வேறு  ஒரு கூட்டமும் இருந்ததை அவரிடம் முன்னமே  சொல்லியிருந்தேன்.

நான்கு மணிக்கு விழா ஆரம்பிக்கும் எனக்குறிப்பிட்டதால்

சரியாக நான்கு மணிக்கே அங்கு சென்றிருந்தேன்.

அவருடைய  தொலைபேசிக்கு   தொடர்பு கொண்டபோது

அவருடைய  நண்பரே பதிலளித்தார்

மண்டப  இடத்தை சரியாக வழி காட்டினார்

வாசலில் வந்ததும்

ஒரு இளைஞர் நின்றிருந்தார்

அவரது படபடப்பில் இவர் தான் விழா நாயகனாக  இருக்கும் என என்னை குகதாசன் என அறிமுகம் செய்தேன்.

ஆனால் அவர் என்னை  இனம் காணவில்லை

அவரது படபடப்பில் நான் நேரத்தை எடுக்காது உள்ளே  சென்றேன்.

உள்ளே  போனதும்

தலைவர் மற்றும் வந்திருப்பவர்களைப்பார்த்தபோது

விழாவின் பாதை புரிந்தது எனக்கு.

அவர்கள் மௌன அஞ்சலியில் கூட மாவீரர்கள் வராது பார்த்துக்கொண்டார்கள்.

அதற்கு தொடக்கம் சொல்வதற்கே உலகத்தை  ஒருமுறை  சுற்றி  வந்தார்கள்.

ஒரு அரைமணி  நேரம் இருந்துவிட்டு 

அடுத்த கூட்டத்துக்கு சென்று அவர்களிடம்

நெற்கொழு  போன்ற  இளைஞர்களை  உற்சாகப்படுத்தணும் என அனுமதிபெற்று

மீண்டும் அரை மணி  நேரத்தில் வந்தேன்.

கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் நடந்தது

நெற்கொழுவை  தூக்கி  வைத்து பாராட்டினார்கள்

எனக்கு இதில் எச்சரிக்கை  உணர்வே  வந்தது

தற்பொழுது  தான் புலத்தில் வந்து ஒரு தொகுப்பை வெளியிடும் நெற்கொழுவை

பல மைல்களைக்கடந்த கவிஞன் போல் உயர்த்திப்பேசினார்கள்.

நெற்கொழு கூச்சப்பட்டு நெளிவது தெரிந்தது

தனது பேச்சிலும் அதை நெற்கொழு குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட

3 மணித்தியாலம் நடந்த விழாவில்

தலைவர்

மற்றும் பேச்சாளர்கள் புலிகள் என்ற  சொல் வராமல் பார்த்துக்கொண்டார்கள்

ஆனால் புலிகள் மீதுள்ள  குற்றச்சாட்டுக்கள் அத்தனையையும் முன் கொணர்ந்தார்கள்.

(வாசு தேவன் மற்றும் சதாபிரணவன் தவிர்ந்து)

யாழ்ப்பாணத்திலிருந்து இசுலாமியர்களின் பெயர்வு  மற்றும் யாழ் பல்கலைக்கழக செல்வி மற்றும் ராகிணி கொலை  மற்றும் கட்டாய  ஆட்சேர்ப்பு போன்றவற்றை பேச அநேக  நேரத்தை எடுத்தார்கள். 

ஆனால் நெற்கொழு கவிதைகள் புலிகளைச்சாடவில்லை  என்ற  வருத்தத்தை அநேகமாக எல்லோரும் சொன்னார்கள்.

உதாரணமாக 

நெற்கொழுவின் கவிதையில் வெளியே  போன தன் பெண் பிள்ளை  இன்னும் திரும்பிவரவில்லை என்ற வேலிகள் இழந்த பின் என்ற  கவிதையின் கடைசி  வரிகள்

(சிலநேரம் அடுத்த கணத்தில்

தெரியவும் வரலாம் அவளுக்கு

மகள் சிதைக்கப்பட்ட கொடூரம்...)

இராணுவத்தை மட்டுமே குறிக்கின்றதாம்

அவள் இயக்கத்தாலும் வலுக்கட்டாயமாக கொண்டு   போகப்பட்டிருக்கலாம் தானே என்றும்  ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல என்றும்  மிகவும் கவலைப்பட்டுக்கொண்டார்கள்.

ஆனால்3 மணித்தியாலம் நடந்த விழாவில்

சிறீலங்கா  அரசால் இதுவரை

ஏன் முள்ளிவாக்கால் நடந்து 5 வருடத்துக்கும் பின்னால் நடந்த ஒரு விடயத்தை தானும் கதைக்கவுமில்லை. கண்டிக்கவுமில்லை.

அதேநேரம்  நெற்கொழுவின் கவிதைகள் தேசியம் சார்ந்து ஒரு பக்கம் சார்ந்தாக  மட்டும் இருக்கிறது

அவர் மாறணும்

மாற்றங்களை  உள் வாங்கணும்

எல்லோருக்காகவும் எழுதணும்.......

போன்ற  கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக்கொண்டே   இருந்தார்கள்.

அத்துடன் போரை ஆதரிப்பது

சூரியத்தேவனின் வருகைக்காக காத்திருப்பது போன்றவற்றை  கண்டித்தார்கள்

எனக்கு நெற்கொழுவை  சூழ்ந்து எல்லோரும் புகை  அடிப்பது போன்றதொரு நிலையே  தெரிந்தது.

இது எனக்கு பெரும் எரிச்சலைத்தந்தது

எனக்கு அருகிலிருப்பவர்களும் போதும் நிறுத்தச்சொல்லுங்கள் என புறுபுறுத்தபடி  இருந்தனர்

இறுதியாக

சபையினர்  பேச 15  நிமிடம் ஒதுக்கினார்கள்

அதில் கோமகன்

யாழுக்கு நன்றி  சொல்லி  நாலு வரிகள் பேசியதும்

புலம் பெயர் தேசத்தவர் தாயகதமிழரின் பிரச்சினை  பற்றி பேசினால்

நீ புலம் பெயர்ந்தவன் உனக்கு பேச உரிமையில்லை என்கின்றோம்

இவர்

அங்கிருந்து  எல்லா அழிவுகளையும் பார்த்து  அனுபவித்து வந்தவர்

அவர் எழுதினால்

நீங்கள் மாறணும்

மாறணும் என்கிறீர்கள்

அப்படியாயின் அவர்களையும் பேசவிடாது மாற்றிவிடுகின்றோமா?

என்ற கேள்விக்கு  தலைவரின் பதில்

அண்ணை  இலக்கியக்கூட்டங்களுக்கு புதிசு போல..

இன்னும் 5 அல்லது 6  கூட்டங்களுக்கு வாருங்கள்.

நான் இங்கு நெற்கொழுவில் எந்தவித குறையையும் காணவில்லை

ஆனால் சுற்றியுள்ள  கூட்டம் பற்றி அவர் அறிவாரா???

அறிந்து கொள்ளணும் என ஒரு அண்ணனாக ஆசைப்படுகின்றேன்.

அவர் மேலும் வளரவும்

தாயகம் சார்ந்த

அந்த மக்கள் சார்ந்த

அவலங்களையும் அவர்களின் மீட்சி  சார்ந்த படைப்புக்களையும் தொடர்ந்து தரணும் எனவும் எதிர்பார்க்கின்றேன்.

வாழ்க  வளமுடன்..............

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப மட்டமான கூட்டத்துக்குள் மாட்டிக்கொண்டார் நெற்கொழு..  :o  :icon_idea:

ஹி ஹி...

அண்ணை (விசுகு) இப்படியான கூட்டங்களுக்கு புதுசு போல.. இன்னும் 5 அல்லது 6 கூட்டங்களுக்கு போங்கள். (போனால் பழகிவிடும்)

இப்படியான கூட்டங்களில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் விடயங்கள்

1. புலிகள் முஸ்லிம்களை துரத்தியது

2. ராஜினி திரணகம படுகொலை

3. செல்வி படுகொலை

4. யாழ் பல்கலைக் கழக மாணவன் விமலேஸ்வரன் படுகொலை

5. etc etc

இவர்கள் இலங்கை அரசின் 2009 முன்னரான படுகொலைகள், இலங்கை அரசின் 2009 பின்னரான அடக்கு முறைகள் + படுகொலைகள், போர்க் குற்றங்கள், முஸ்லிம்கள் கிழக்கில் செய்த தமிழினப் படுகொலைகள், மாற்று இயக்கங்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட படுகொலைகள், இலங்கை அரசு படுகொலை செய்த 80,000 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள்... இவை எது பற்றியும் மறந்தும் வாய் திறக்கினமா என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தீர்கள் என்றால்... பாவம் நீங்கள்..

அதோட, "புலிகள் இல்லாத இந்த 5 வருடங்களில் என்னத்தை புடுங்கினீர்கள்" என்று அழுத்தமாக கேட்டுப் பாருங்கள்.. பிறகு நல்ல சுவாரசியமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவம்தான் விசுகு ஐயா!

இலண்டனிலும் இப்படியானவர்கள் சிலரை நூல் அறிமுக விழாக்களில் கண்டிருக்கின்றேன். அரைத்த மாவையே திருப்பிப் திருப்பி அரைப்பார்கள். எனினும் யமுனா ராஜேந்திரன் புத்தகத்தைக் முழுமையாகப் படித்து நேர்மையாக விமர்சனம் வைத்ததை பலமுறை பார்த்திருக்கின்றேன்.

..அதோட இந்த 'நிறங்கள்' பற்றிக் கதைக்கவில்லையா? சாம்பல், கறுப்பு, வெள்ளை என்று எடுத்து விட்டிருப்பினமே?

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழு மாதிரியான வளரும் கலைஞர்களையும் தாங்கள் ஊறிய குட்டைக்குள் இழுத்து விடும் வேலை தான் செய்திருக்கீனம் போல!. அவர்களுக்குப் புத்தகம் வித்தும் பிழைக்க முடியாது. கற்பனை தவிர சொலிட் ஆக நிறுவக் கூடிய ஒரு அறிவும் கிடையாது! புலிகளை வைச்சாவது வயித்துக் கஞ்சிக்கு வழியைப் பாப்பம் எண்டாலும் விட மாட்டம் என்கிறீங்கள்! :D

நான் இப்படியான பல கூட்டங்களுக்கு சென்றிக்ருக்கின்றேன் .சென்று கொண்டும் இருக்கின்றேன் .தேடகம் நடாத்தும் கூட்டங்களில் நிழலியை ஒரு முறை மட்டும் சந்தித்தேன் .

அரசு ,புலிகள் ,மாற்று இயக்கங்கள் ,இந்தியா,சர்வதேசம் எல்லாவற்றின் மேல் தான் விமர்சனம் இருக்கும் .பிழை யார் விட்டாலும் அதன் மேல் விமர்சனம் வைக்கப்படவேண்டும் என்பதுதான் பலரது எண்ணம்.

புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைப்பவர்களுக்கு அவர்களை பற்றி ஒரு சொல்லு சொன்னாலும் ஏற்றுகொள்ளமுடியாது .

தேவாரம் பாடும் கூட்டங்களுக்கு சென்று பழகிய விசுகருக்கு  அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கணக்கு அப்படி இருந்திருக்கும் .

உருப்படியாக கவிதை பற்றி விமர்சனம் வேண்டுமென்றால் அவர்களிடம் தான் போகவேண்டும் என்று விளங்க வேண்டியவருக்கு விளங்கியிருக்கு .

"ஜில்லா"  பார்க்க போய் "குக்கூ" விற்க மாட்டிக்கிட்டவர் நிலையை நினைக்க சிரிப்பாய் கிடக்கு . :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஜில்லா"  பார்க்க போய் "குக்கூ" விற்க மாட்டிக்கிட்டவர் நிலையை நினைக்க சிரிப்பாய் கிடக்கு . :icon_mrgreen:

வணக்கம்

இதில் எவரையும் தாக்கும் நோக்கமோ

தாழ்த்தும் நோக்கமோ இல்லை

புலி

மாற்றுக்கருத்து என்ற  பிரிவுகளைக்கூட நான் எழுதவில்லை

ஆனால் 

முள்ளிவாய்க்காலுக்கு பின்னராவது கொஞ்சம் மாறியிருப்பார்கள் என  எதிர்பார்த்தேன்

அவர்கள் மாறவில்லை

இன்னும் புலிகளை வம்புக்கிழுப்பதும்

வசை  பாடுவதுமே நடக்கிறது

உங்களைப்போல..........

நல்லதை இங்கும் நீங்கள் எழுதவில்லை

இதிலிருந்து எவ்வளவோ  செய்யமுடியும்

அரவணைத்து செல்லமுடியும்

நீங்கள் கோடம்பாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை

அவர்களும்

80 களிலிருந்து மீளவில்லை

எனக்கு நேரம் பொன்னானது

அதனால் இவர்களிடமிருந்து தள்ளி  நிற்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை  இலக்கியக்கூட்டங்களுக்கு புதிசு போல..

இன்னும் 5 அல்லது 6  கூட்டங்களுக்கு வாருங்கள்.

இந்த இடத்தில நீங்கள் கோமகன் அண்ணாவை தனிமையில் விட்டது தவறு என்றே நினைக்கின்றேன். அவர்களின் இந்தப் பதிலிற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஒருவர் தானே என்ன செய்துவிடப்போகிறார் என்று அவர்கள் நினைத்ததால் தான் இந்த பதில் வந்திருக்கும். 

இப்ப இங்க புலிகளின் குற்றத்தை முன்னிறுத்தி பேசுவது தாங்கள் ஒரு நாகரீமானவர்கள், படித்தவர்கள், சனநாயகவாதிகள், யார் குற்றம் செய்தாலும் தட்டிக்கோட்போம் என்று இப்படி பல "Fashion" வந்துவிட்டது. ஆனால் வெளிநாடுகளில "Asyl" அடிச்சு இப்ப சொகுசு வாழ்க்கை வாழுறதுக்கு புலிகள் தான் காரணம் என்பதை மறந்துவிட்டார்கள். இப்படியானவர்களை தானே மகிந்தர் நாட்டை கட்டியெழுப்ப அழைத்தவர் 2009ற்கு பிறகு? இவர்கள் சிறிலங்காவிற்கும் விசுவாசமாக இல்லை. தமிழீழத்திற்கும் விசுவாசமாக இல்லை. 

சில காலமா தலைவிரிச்சாடுகிற பிரச்சனையில முக்கியமானது இந்த "எழுத்தாளர்கள்" மோதல். வடிவேலுவின் கையை புடிச்சு இழுத்தியா மாதிரி இது தொடர்ந்துகொண்டே போகிறது. 

இந்த நூலை எழுதியவர் பற்றி எனக்கு தெரியாது. இப்படியான கருத்துக்களிற்கு அவரது எதிர்ப்பை பதிவுசெய்திருக்க வேண்டும் (அப்படி பதிவுசெய்திருந்தால் நன்றி).

முள்ளிவாய்காலுக்கு பிறகு ஆவது மாறியிருப்பார்கள்?  எனக்கு விளங்கவில்லை .மாற என்ன இருக்கு? .

உங்களை போன்ற கனவில் மிதப்பவ்ர்களைதான் முள்ளிவாய்கால் நிஜத்திற்கு கொண்டுவந்தது எங்களை அல்ல .

அதில் கலந்து கொண்டவர்களில் பலர் ,நான் உட்பட போராட்டத்தில் எதோ ஒரு வகையில் நேரடியாக பங்கு பற்றியவர்கள் .

நீங்கள் எல்லாம் ( பச்சைகள் உட்பட,) போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிய ஆட்கள் .

அதுதான் அண்ணை ஒரே வித்தியாசம் அவர்களுக்கும் உங்களுக்கும் .

வெளிநாடு வந்து தனது இருக்கையை முதலில் பார்த்துவிட்டு பின்னர் என்ன ஒரே தேசிய கீதம் தான் .

நான் இப்படியான பல கூட்டங்களுக்கு சென்றிக்ருக்கின்றேன் .சென்று கொண்டும் இருக்கின்றேன் .தேடகம் நடாத்தும் கூட்டங்களில் நிழலியை ஒரு முறை மட்டும் சந்தித்தேன் .

புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைப்பவர்களுக்கு அவர்களை பற்றி ஒரு சொல்லு சொன்னாலும் ஏற்றுகொள்ளமுடியாது .

அர்ஜுன்,

புலிகள் விமர்சனங்களுக்கு அப்பால்பட்டவர்கள் அல்ல என்பது மிகவும் உண்மை. ஆனால் இங்கு குறிப்பிடப்படும் ஆட்கள், புலிகளை மட்டுமே விமர்சிப்பவர்கள் அல்லது புலிகளை 99 வீதமும் அரசை 1 வீதமும் விமர்சித்து தாமும் நடுநிலை வாதிகள் தான் என்று படம் காட்டுகின்றவர்கள்.

நீங்களும் கூட  புலிகள் தோற்ற பின் தான் பகிரங்கமாக யாழில் அவர்களைப் பற்றி கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தீர்கள். நான் புலிகள் இருக்கும் காலத்திலேயே இலங்கையில் இருக்கும் போதே அவர்களின் தவறுகளை பத்திரிகளைகளில்  விமர்சித்து இருக்கின்றேன். ஆனால் எம் விமர்சனங்கள் எல்லாம், போராட்டம் சரியான வழியில் போய் மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற அவாவில் வைக்கப்பட்டவை. ஆனால் உங்களினதும் மேலே குறிப்பிடப்பட்டவர்களினதும் விமர்சனங்கள் வெறும் காழ்ப்புணர்விலும், மக்கள் அழிந்தாலும் சரி புலி அழிய வேண்டும் என்ற நோக்கில் வைக்கப்படுபவை.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில நீங்கள் கோமகன் அண்ணாவை தனிமையில் விட்டது தவறு என்றே நினைக்கின்றேன். அவர்களின் இந்தப் பதிலிற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஒருவர் தானே என்ன செய்துவிடப்போகிறார் என்று அவர்கள் நினைத்ததால் தான் இந்த பதில் வந்திருக்கும். 

இப்ப இங்க புலிகளின் குற்றத்தை முன்னிறுத்தி பேசுவது தாங்கள் ஒரு நாகரீமானவர்கள், படித்தவர்கள், சனநாயகவாதிகள், யார் குற்றம் செய்தாலும் தட்டிக்கோட்போம் என்று இப்படி பல "Fashion" வந்துவிட்டது. ஆனால் வெளிநாடுகளில "Asyl" அடிச்சு இப்ப சொகுசு வாழ்க்கை வாழுறதுக்கு புலிகள் தான் காரணம் என்பதை மறந்துவிட்டார்கள். இப்படியானவர்களை தானே மகிந்தர் நாட்டை கட்டியெழுப்ப அழைத்தவர் 2009ற்கு பிறகு? இவர்கள் சிறிலங்காவிற்கும் விசுவாசமாக இல்லை. தமிழீழத்திற்கும் விசுவாசமாக இல்லை. 

சில காலமா தலைவிரிச்சாடுகிற பிரச்சனையில முக்கியமானது இந்த "எழுத்தாளர்கள்" மோதல். வடிவேலுவின் கையை புடிச்சு இழுத்தியா மாதிரி இது தொடர்ந்துகொண்டே போகிறது. 

இந்த நூலை எழுதியவர் பற்றி எனக்கு தெரியாது. இப்படியான கருத்துக்களிற்கு அவரது எதிர்ப்பை பதிவுசெய்திருக்க வேண்டும் (அப்படி பதிவுசெய்திருந்தால் நன்றி).

வணக்கம் செங்கொடி

80  கடைசிகளிலிருந்து இவர்களின் நிகழ்வுகளுக்கு போவதையும்

யேகோவின் சாட்சிகளுடன்  அரசியல்  பேசுவதையும் நிறுத்தியிருந்தேன்

வெறும் சவ்வுகள்.

நேரம்  தான் கழியும்

மாற்றங்களுமில்லை

செயல்களுமில்லை.

நெற்கொழு

புதியவர்

அதிலும் புலம் பெயர்தேசத்தில் புதியவர்

அவரை ஊக்கவிக்கணும்

அத்துடன் ஆட்கள் வருவார்களோ தெரியாது

எனவே நான் நிச்சயம் அங்கு நிற்கணும் என்றே போனேன்

முதலிலேயே  எழுதியுள்ளேன்

உள்ளே போன போதே கூட்டம்  போகப்போகும் பாதையை உணர்ந்தேன் என.

சாதாரணமாக  கூட்டங்களில் நடுவிலேயே எனது ஒவ்வாமையை  வைத்துவிடுவேன்

அது புலிகளின் கூட்டமாக இருந்தாலும்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

நமக்கெல்லாம்  எந்தப்பயமும் கிடையாது

அதை அதை அங்கேயே  சொல்வது வழமை.

அதையே  இங்கும் செய்தேன்.

ஆனால் என்னால் நெற்கொழுவின் விழாவுக்கு இடைஞ்சல் வந்துவிடக்கூடாது என மிகவும் அமைதியாக இருந்தேன்

அதேநேரம்  என்னைப்போல் பலர் அமைதியாக கடைசிவரை இருந்தது

நெற்கொழுவுக்கு அவர்கள் கொடுத்த மரியாதை.

நான் பேசி  வெளியேறியபோது பலர் வந்து கை  கொடுத்தார்கள்

எனது கருத்தை ஆமோதித்தார்கள். எனக்கு நன்றி  சொன்னார்கள். 

***

கோ  பற்றி  எழுதியுள்ளீர்கள்

எனக்கென்னவோ

இந்திரா காந்தியின் கடைசிக்கணங்கள் ஞாபகம் வந்து துலைக்கின்றன........... :lol:

நான் இப்படியான பல கூட்டங்களுக்கு சென்றிக்ருக்கின்றேன் .சென்று கொண்டும் இருக்கின்றேன் .தேடகம் நடாத்தும் கூட்டங்களில் நிழலியை ஒரு முறை மட்டும் சந்தித்தேன் .

அரசு ,புலிகள் ,மாற்று இயக்கங்கள் ,இந்தியா,சர்வதேசம் எல்லாவற்றின் மேல் தான் விமர்சனம் இருக்கும் .பிழை யார் விட்டாலும் அதன் மேல் விமர்சனம் வைக்கப்படவேண்டும் என்பதுதான் பலரது எண்ணம்.

புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைப்பவர்களுக்கு அவர்களை பற்றி ஒரு சொல்லு சொன்னாலும் ஏற்றுகொள்ளமுடியாது .

தேவாரம் பாடும் கூட்டங்களுக்கு சென்று பழகிய விசுகருக்கு  அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கணக்கு அப்படி இருந்திருக்கும் .

உருப்படியாக கவிதை பற்றி விமர்சனம் வேண்டுமென்றால் அவர்களிடம் தான் போகவேண்டும் என்று விளங்க வேண்டியவருக்கு விளங்கியிருக்கு .

அண்ணாச்சி புத்தக வெளியீட்டுக்கு   அழைத்தால்   , அன்று வெளியிடப்பட்ட புத்தகத்தில் என்ன உள்ளது ,எப்பிடி உள்ளது, ,புத்தகத்தில் உள்ள கருவில் சிறப்புத்தன்மையை  கூறி .இன்னும் சிறப்பாக என்ன செய்திருக்கலாம் ,,,,,,என்ற பாவனையிலேயே ,உரைகளும் ,கருத்துக்களும் இருக்கும் ,இருக்கவேண்டும் .இதுவே படித்த புத்திசாலி .நல்ல இலக்கியவாதி செய்திருப்பான் .....நடந்த சம்பவத்தை, கேள்விப்பட்டவற்றை பார்க்கும்போது ,சிலபசுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பேசப்பட்டுள்ளது :lol: ...........நிச்சயமாய் வந்தவர்கள் நீங்கள் சொல்வது போல மொக்கு கூட்டங்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் ............. :D  :D

நிழலி,

நான் புலிகளின் அழிவிற்கு பின்னர் தான் யாழில் எழுத தொடங்கினேன் என்பது மட்டும் உண்மை .

கொலை கலாச்சாரத்தில் ஒரு வீதம் கூட  உடன்பாடு இல்லாதவன்.லண்டனில் தொடங்கிய அந்த நிலைப்பாடு இன்றும் தொடருது .  அது லண்டனில் இருந்ததே தொடங்கிவிட்டது .புலி பேச்சாளராக இருந்த ராஜனி திரணகம,சத்தியமூர்த்தி ,சபேசன் இவர்களுடன் வாக்குவாதபட்ட காலமும் இருக்கு .(சத்தியமூர்த்தி ,சபேசன் இப்போ எங்கே என்று தெரியாது ).

அது கனடா வந்தும் தொடர்ந்தது .சிங்கள அரசை விட புலிகள் அலுப்பு தந்த காலம் அது .அடி மட்டும் விழவில்லை ஆனால் கொலரில் பிடித்தவரை போயிருக்கு .துணிந்து வந்த சொந்த பெயரில் வானொலிகளில் கருத்துகள் வைத்த நாட்கள் அவை .

புலி எதிர்ப்பு - என்ன அது ?.  கூட்டணி விட்ட பிழைகளை விமர்சித்தோம் ,மாற்று இயக்கங்கள் செய்த பிழைகளை விமர்சித்தோம் .அதே போல புலிகள் செய்யும் பிழைகளையும் விமர்சித்தோம் .ஆனால் என்றும் விமர்சனத்தை விரும்பாத புலிகள் எங்களை துரோகிகளாகவும் பின்னர் அரசின் கைக்கூலிகளும் ஆக்கியது .

விமர்சனம் செய்த நாங்கள் அப்படியே இன்னமும் இருக்கின்றோம் அரசின் கைக்கூலிகள் என்று திட்டிய பலர் இன்று அரசுடன் நிற்பதுதான் பெரும் வேடிக்கை .

அரசுக்கெதிராக விமர்சனம் வைப்பதில்லை என்ற கருத்து - நிழலியிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை.

முதலில் அரசையும் புலிகளையும் ஒரு தராசில் வைத்து பார்ப்பதே தவறு . புலிகள் எம்மவர்கள் அவர்கள் திருந்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் விமர்சனம் வைப்பது ,

அரசு ,அவர்கள் எதிரி .அவர்களுக்கு எதிராக செயற்படவேண்டுமே ஒழிய விமர்சனம் ஒன்றுக்கும் ஆகாது .

கடைசி காலத்தில் புலிகள் கூட நினைத்திருக்கலாம் தேவாரங்கள் பாடியவர்களை நம்பாமல் விமர்சனம் வைத்தவர்களை செவி சாய்த்திருக்காலம் என்று .

இங்கு உள்ளவனுக்கெல்லாம் ஞாபக  மறதி  நோய் என்ற  நினைப்பு போலும்

நல்லா விடுகிறீர்கள் கயிறு........

முள்ளிவாய்கால் பற்றி நீங்கள் எழுதியதை  எவரும் மறக்கமாட்டார்கள்

இப்போ நம்மவர்கள்  என்று............

எபபடி முடிகிறது இவ்வாறு  ............?????????? :(  :(  :(

இவைகள் எல்லாவற்றையும் தவிர்க்கவே யாம் இறுதி கணத்தில் வந்தோம் அதுவும் கொழுவானுக்காக ....நம்ம வாய் சும்மா இருக்காது என்று எமக்கு நன்கு தெரியும் ஆனால் சூழ் நிலை கொழுவான் செய்வது அறியாது இறுதிவரை கவலை பட்டான் அவர்களை கொண்டு புத்தகம் விட போகிறேன் அதனால் தான் விமர்சனங்களை சந்திக்க வேண்டி வரும் என்று வேறு வழி இருக்க வில்லை என்னெனில் புலத்தில் இலக்கியம் ..படைப்புக்கள் பெரும்பாலும் இந்த தலித்தியம் ...தாலியாருந்ததியம் எல்லாம் ஒரு வட்டத்திலே நிக்கு என்பதால் அவர்கள் தவிர்க்க முடியாத ஆக்கள் ஆகிட்டினம் என்பதுதான் உண்மை ..

ஒரு நடுநிலையான ஊடக வெளிச்சம் உள்ள அல்லது ஆரோக்கியமான ஒரு இலக்கிய வட்டத்தை உருவாக்க வேண்டிய தருணம் எமக்கு இருக்கு புலத்தில் ..

விசு அண்ணை கேள்வி கேட்க அவர் சொன்ன பதில் மேதையின் பதில் ..மீள அவர்கள் அத்துடன் உடனம் நிறுத்தி விட்டனர் தொடர்த்து இருந்தால் அந்த அதி மேதவியை எம் கேள்வி கணை துளைத்து இருக்கும் எழும்பி சென்று விட்டனர் அடுத்த கணமே ..

இதுதான் முதல் தடைவையோ என்று கேட்டார் நாங்க என்ன முதல் இரவுக்கா போனனாங்க அறிவாளி கதை அவருக்கு வேற வேற வெளியீட்டுக்கு வரட்டம் என்று அல்லலோயா கூட்டம் போல சொல்லுறார் எனக்கு சிரிப்பு ..

எல்லா பொறுமையும் கொழுவானுக்காக புன்னகைத்து வரவேண்டி ஆகிட்டு .

அவர்களுக்கே ஒரு புலிதான் வாழ்வு கொடுத்தது இந்த இரண்டு எழுத்து இல்லாட்டி இவனுகளுக்கு இலக்கியம் இல்லை பேச்சு மட்டும் மாற்றம் வேணும் ..முதல் நீங்க மாறுங்கடா அப்போ இருந்து இப்பவரை புலியை வைத்து பிழைக்காமல் .

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த இலக்கியவாதிகள் அல்லது அப்படி தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் புலி எதிர்ப்பு பேசுகிறார்கள் ஆனால் புலித் தேசியம் பேசுபவர்கள் சிறந்த இலக்கியம் அல்லது நூல்களை படைப்பது குறைவு ஏன்? சிறந்த இலக்கியம்,நூல்களை நாங்களே[நானில்லை] எழுதினால் எதற்காக அவர்களை கூப்பிட வேண்டும் அவர்கள் தாமாகவே புறக்கணிக்கப்பட்டு விடுவார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியம் பற்றிப் பேசுறவன் இலக்கியம் எழுத வெளிக்கிட்டா

இப்பத்தைய இலக்கியவாதிகள் கையில் தேசியம் போய்விடும்

இப்பத்தைய இலக்கியவாதிகளின் கயிலை தேசியம் அகப்பட்டா :wub: 

நினைக்கவே பயமா இருக்கு

விசுகு இந்த விபரத்தை வெளியிலை கொண்டு வந்தததுக்கு

மிக்க நன்றி

நேற்கொழுதாசன் படிச்ச மனிசன் போலை இருக்கு

சுயபுத்தியோடை நடப்பார் எண்டு நினைக்கிறன் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களது கருத்தக்களுக்கு பின்னர் எழுதுகின்றேன்

ரதியினதும்  போக்கரியினதும் கருத்துக்களுக்கு  எழுதுவதால் பலருக்கும் விளக்கம் கிடைக்கும் என்பதால்...

சிறந்த இலக்கியவாதிகள் அல்லது அப்படி தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் புலி எதிர்ப்பு பேசுகிறார்கள் ஆனால் புலித் தேசியம் பேசுபவர்கள் சிறந்த இலக்கியம் அல்லது நூல்களை படைப்பது குறைவு ஏன்? சிறந்த இலக்கியம்,நூல்களை நாங்களே[நானில்லை] எழுதினால் எதற்காக அவர்களை கூப்பிட வேண்டும் அவர்கள் தாமாகவே புறக்கணிக்கப்பட்டு விடுவார்கள்

உண்மைதான்  ரதி

நிச்சயமாக அந்தக்குறை  எனக்குமுள்ளது

அதனால் தான் இந்த விழாவுக்கு நான் போயிருந்தேன்

நெற்கொழு போன்றவர்கள் தேசத்துக்குரியவர்கள்

அவர்களை  வளர்க்கணும்

உதவணும்

அவர்களோடு இருக்கணும்

இருப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த விபரத்தை வெளியிலை கொண்டு வந்தததுக்கு

மிக்க நன்றி

நேற்கொழுதாசன் படிச்ச மனிசன் போலை இருக்கு

சுயபுத்தியோடை நடப்பார் எண்டு நினைக்கிறன் :)

இதை  எழுதுவதற்கான அனுமதியை  அவரிடம் கேட்டிருந்தேன்

அவரும்  தந்திருந்தார்

இங்கு பதிந்த   லிங்கை அவருக்கு உடனடியாக தனி  மடலிட்டிருந்தேன்.

உங்களுக்கு என்ன மனதில் பட்டதோ

எழுதுங்கோ அண்ணை  என பதில் தந்திருந்தார்.

அத்துடன்

இந்த கருத்தை  அவரே முகநூலிலும் உலவவிட்டிருப்பதாக அறிந்தேன்

இது இன்றைய எமது இலக்கியவாதிகளிடம் இல்லாத பண்பு.

என்  மனதில் பலபடி உயர்ந்துள்ளார் தம்பி நெற்கொழு.

சிறந்த இலக்கியவாதிகள் அல்லது அப்படி தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் புலி எதிர்ப்பு பேசுகிறார்கள் ஆனால் புலித் தேசியம் பேசுபவர்கள் சிறந்த இலக்கியம் அல்லது நூல்களை படைப்பது குறைவு ஏன்? சிறந்த இலக்கியம்,நூல்களை நாங்களே[நானில்லை] எழுதினால் எதற்காக அவர்களை கூப்பிட வேண்டும் அவர்கள் தாமாகவே புறக்கணிக்கப்பட்டு விடுவார்கள்

எழுதலாம் ஆனால் யார் வாசிப்பது :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப மட்டமான கூட்டத்துக்குள் மாட்டிக்கொண்டார் நெற்கொழு..  :o  :icon_idea:

நன்றி  இசை

நம்ம  தம்பிமார் ரொம்ப  விழிப்பானவர்கள்

கனகாலமாக

இவர்களுடனும்  (இவர்களிடமிருந்து ஒதுங்கியிருந்தாலும்) 

பிரான்சிலும் இருப்பதனால்

அவரை சிறிது உசார்ப்படுத்தலே  இந்த திரியின் நோக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி...

அண்ணை (விசுகு) இப்படியான கூட்டங்களுக்கு புதுசு போல.. இன்னும் 5 அல்லது 6 கூட்டங்களுக்கு போங்கள். (போனால் பழகிவிடும்)

இப்படியான கூட்டங்களில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் விடயங்கள்

1. புலிகள் முஸ்லிம்களை துரத்தியது

2. ராஜினி திரணகம படுகொலை

3. செல்வி படுகொலை

4. யாழ் பல்கலைக் கழக மாணவன் விமலேஸ்வரன் படுகொலை

5. etc etc

இவர்கள் இலங்கை அரசின் 2009 முன்னரான படுகொலைகள், இலங்கை அரசின் 2009 பின்னரான அடக்கு முறைகள் + படுகொலைகள், போர்க் குற்றங்கள், முஸ்லிம்கள் கிழக்கில் செய்த தமிழினப் படுகொலைகள், மாற்று இயக்கங்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட படுகொலைகள், இலங்கை அரசு படுகொலை செய்த 80,000 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள்... இவை எது பற்றியும் மறந்தும் வாய் திறக்கினமா என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தீர்கள் என்றால்... பாவம் நீங்கள்..

அதோட, "புலிகள் இல்லாத இந்த 5 வருடங்களில் என்னத்தை புடுங்கினீர்கள்" என்று அழுத்தமாக கேட்டுப் பாருங்கள்.. பிறகு நல்ல சுவாரசியமாக இருக்கும்.

நன்றி  நிழலி

100 வீதம் நீங்கள் எழுதியது தான்

மாவீரருக்கு வணக்கம் சொல்ல  மனமில்லாது

சுற்றி  வளைத்து உலகத்திலுள்ள கலைஞர்கள்

என்று வெளிக்கிட்டு சார்லி  சப்ளின் தான் எல்லாத்துக்கும் சிகரம் வைத்தவர் என முடித்து

அவருக்கே அமைதி  வணக்கம்  செலுத்துவது போல் எழுந்து நின்ற  போதே.......

கேள்வி  கேட்டிருப்பேன்

அல்லது வெளியில் வந்திருப்பேன்

தம்பிக்கு புரியும் எனது நிலை என்பதால் இருந்தேன்.

நாங்கள் ஊர்ச்சங்கம் சார்பாக கூட்டங்களைச்செய்யும் போது

சிலவேளை 6 அல்லது 7 பேர் வருவதாக இருந்தால்

ஒரு பாரில்  செய்வோம்

அங்கும் (வெள்ளை ஆட்களுக்கு முன்) எழுந்து நின்று

மாவீரர்களுக்கு மௌன  அஞ்சலி  செய்தே கூட்டத்தை ஆரம்பிப்போம்.

மாவீரரை  மறந்துவிட்டால்

தமிழனுக்கு எந்த பிடிப்புமில்லை  இன்றையநிலையில்............

அந்த தியாக நெருப்பு எரிந்து கொண்டே இருக்கணும்

அதை அணைக்க  விளைபவர்கள்

தமிழருக்கு எதையும் செய்துவிடமுடியாது..........

அடுத்த பரம்பரைக்கும் பரப்பப்படணும்.

நல்ல அனுபவம்தான் விசுகு ஐயா!

இலண்டனிலும் இப்படியானவர்கள் சிலரை நூல் அறிமுக விழாக்களில் கண்டிருக்கின்றேன். அரைத்த மாவையே திருப்பிப் திருப்பி அரைப்பார்கள். எனினும் யமுனா ராஜேந்திரன் புத்தகத்தைக் முழுமையாகப் படித்து நேர்மையாக விமர்சனம் வைத்ததை பலமுறை பார்த்திருக்கின்றேன்.

நன்றி  கிருபன்

நூல் வெளியீடு என்று வரும் போது

எனது கருத்தை எப்படி பார்ப்பீர்கள் என  தெரியாதிருந்தேன்

நன்றி

தற்பொழுது  தான் தெரிகிறது

பலர் நொந்து நூலிகியிருப்பது.......... :(

மற்றும் யமுனா ராயேந்திரன்

எம்மை நேசிப்பவர்

மாவீரருக்கு கனம்  செய்பவர்

அவருடன் தொடர்புண்டு

ஒருமுறை எமது குறும்பட  தெரிவுக்கு நடுவர்களில் ஒருவராக வந்திருந்தார்

அதிசயிக்கத்தக்க வல்லமைகள் கொண்ட மனிதர்.

..அதோட இந்த 'நிறங்கள்' பற்றிக் கதைக்கவில்லையா? சாம்பல், கறுப்பு, வெள்ளை என்று எடுத்து விட்டிருப்பினமே?

அது நானிருந்தவரையில் இல்லை

தலைவர்

சிவப்பு என்பதால் மற்றவர்கள் அடங்கியிருக்கலாம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.