Jump to content

ஓரின செக்ஸ் ஈர்ப்பு இக்காலத்தின் தேவையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஓரின செக்ஸ் ஈர்ப்பு இக்காலத்தின் தேவையா?

ஆர்.அபிலாஷ்

செக்ஸுக்கும் பால் நாட்டத்துக்கும் ஒரு சின்ன, ஆனால் முக்கியமான வித்தியாசம் உள்ளது. ஓரின உறவுக்கு எதிரான சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஒரு பால் நாட்டமாக நம் சமூகத்தில் ஓரின உறவுக்கு உள்ள முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே பிரச்சினை. ஓரின உறவு குடும்ப அமைப்புக்கு எதிரானதாக, அதனாலேயே ஒழுங்கீன மாக, பண்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாகப் பார்க்கப்படுவது ஒரு அறியாமையினால் ஏற்படுவதுதான்.

முதலில், ஓரின உறவுக்கு இயற்கை மாறானது அல்ல. பரிணாமவியல் கோட்பாடுபடி இயற்கை நமக்குள் தேவையற்ற ஓரின உறவைத் தூண்டுகிற ஒரு மரபணுவை இத்தனை கோடி வருடங்களாய் விட்டு வைக்காது. ஓரின உறவு குழந்தைப் பேறுக்கு எதிரானது என்றால் அதனால் மக்கள் தொகை குறையும்; மற்றும் ஒரு தனிமனிதனின் மரபணு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாது. இது உண்மை என்றால் அப்படியான ஒரு உயிரியல் கூறு ஏன் இன்னும் நம் உடலுக்கு உயிர்ப்பாக இருக்கிறது? ஆக, ஓரினச் சேர்க்கை விழைவால் நமக்கு ஒரு முக்கியமான பயன் உள்ளது. அது என்னவென யோசிப்போம்.

பொதுவாக ஒரு ஆண் ஒரு ஆணருகே இருப்பதை விட பெண்ணருகே இருக்கத்தான் விரும்புவான் என அறிவோம். நியூட்டனின் ஒப்புமை கோட்பாடு பற்றின விளக்கமே பெண்ணருகே இருக்கையில் நேரம் சிட்டாய் போவது குறித்த உதாரணத்தைப் பயன்படுத்துகிறது. சரி, ஆனால் நம் சமூகத்தில் ஏன் ஆண்கள், பெண்கள் தம் பாலினத்தோடு தனித்து இருப்பதற்கான இடங்களை உருவாக்கி வைத்திருக்கி றோம். ஏன் ஒரு வேலைக்காகவோ, பொழுதுபோக்குக்காகவோ கூட்டமாகச் செல்லும்போது தத்தமது பாலினத்தோடுதான் சேர்கிறார்கள்? தாராளவாத பாலுறவை அனுமதிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் மட்டுமல்ல, ஒழுக்கவி யல் அழுத்தங்களை அறியாத பழங்குடிகள் இடையே கூட பெண்கள் பெண்களோடும், ஆண்கள் ஆண்களோடும்தான் கணிசமாக இருக்க விரும்புகிறார்கள். ஆண்களுக்கு மட்டுமேயான வகுப்புகளுக்குப் பாடமெடுக்கையில் அங்கு மாணவர்கள் உணரும் சுதந்திரமும், உற்சாகமும் வேறு ஒரு நிலையில் இன்னும் தீவிரமாக இருக்கும். சில பெண்கள் வகுப்பில் இணைந்தாலே ஆண் மாணவர்களின் உடல்மொழி இறுக்கமானதாக, அழுத்தங் கொண்டதாக மாறுவதைப் பார்த்தி ருக்கிறேன். எதிர்பாலினத்தோடு இருப்பதை நாம் ரசிக்கிறோம். அதேவேளை அது ஏற்படுத்தும் கடுமையான அழுத்தம், எதிர்பார்ப்புகளை நம்மால் கொஞ்ச நேரத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனாலே நமக்கு நம் பாலினத்தோடு தனித்திருப்பதற்கான காலமும் வெளியும் கணிசமாய் தேவைப்படுகிறது.

எதிர்பாலினத்தோடு இருப்பதை விட சகபாலினத்தோடு இருப்பது இன்னும் ஆசுவாசமாக இருக்கிறது. தகராறுகள், சச்சரவுகள் குறைகின்றன, சுலபமாக வேலை செய்வது சாத்திய மாகிறது, பரஸ்பரம் இன்னும் சுலபமாக உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. திருமணமான பல ஆண்கள் வீட்டில் இருந்து தப்பிப்பது பற்றி சதா கவலைப்படுவது தன்னால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத, சமாளிக்க சிரமமான ஒரு மாறுபட்ட பிராணியை வீட்டில் தொடர்ந்து எதிர்கொள்வதில் உள்ள நெருக்கடி காரணமாகத்தான். ஆண்கள் டாஸ்மாக்கில் அடைக்கலம் தேடினால் பெண்கள் வேலையிடங்களை நாடிச் சென்று தப்பிக்கிறார்கள்.

ஆண்களுக்கு ஆண்கள்மீது வரும் வெறுப்புக்கு பெண் விருப்பம் சார்ந்த போட்டி உணர்வுதான் முதல் காரணம். அடுத்தது அதிகாரமும், படிநிலைப் போட்டியும். யார் யாருக்கு அடங்கிப் போவது என ஒரு புரிந்துணர்வு வந்ததும் ஆண்கள் கூட்டத்தில் இயல்பாகவே ஒரு அமைதி வந்து விடும். விடுதலைப்புலிகள் போன்ற இயக்கத்தில் திருமணமும், காதலும் ஆரம்பத்தில் தடைசெய்யப்பட்டதற்கு இது ஒரு காரண மாக இருக்கலாம். ஆனால் பெண்கள் மட்டுமே இருக்கும் வேலையிடங்களில் அல்லது அமைப்புகளில் மிக எளிதாக மனஸ்தாபங்களும், வெறுப்பும், கோபமும் மேலிடுகின்றன. பெண்களோடு சேர்ந்து வேலை செய்ய முடியாது எனப் பெண்களே வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள். இதற்கு முக்கிய காரணம், பெண்கள் மற்றொரு பெண்ணை பாலுறவுக் கான போட்டியாக ஆழ்மனதில் கருதுவதுதான் அல்லது ஒரு பெண் தான் எங்கு வேலை செய்தாலும் அதைத் தன் குடும்பத்தின் நீட்சியாகப் பார்க்கிறாள். ஒரு அலுவலகத்தில் பெண் மேலாளராக இருந்தால் அதை ஒரு கணவனில்லாத குடும்பமாகக் கருதி மிகுந்த அதிகாரமும் கட்டுப்பாடும் செலுத்தி நிர்வகிக்க முயல்கிறாள். சதா பதற்றம் மிக்கவளாக இருக்கிறாள். பெண் விடுதலை என்றால் ஆணிடம் இருந்து விடுபடுவதல்ல; குடும்பத்தில் இருந்து தப்பிப்பது. இந்த அர்த்தத்தில் நன்றாகப் படித்த, ஆணைச் சார்ந்திருக்காத பெண்கூட மனதளவில் ஒரு குடும்பப் பெண்ணாகவே எங்கு போனாலும் இருப்பாள்.

சரி, ஆண்கள் இணைந்து சுலபமாகப் பணியாற்றுவது போல் ஏன் பெண்களுக்கு இயலுவது இல்லை? இதற்குப் பொதுவாக சொல்லப்படும் காரணம், வரலாறு நெடுக ஆண்கள் வெளி வேலைகளில் குழுவாகச் செயல்பட்டும் பெண்கள் குடும்பத்துக்குள் மட்டும் இயங்கியும் வந்திருக்கிறார்கள், பழகி விட்டது என்பது. ஆனால் இது முழுக்க உண்மை அல்ல. இணைந்து சுமுகமாக மகிழ்ச்சியாக செயல்படும் பெண்களையும் பார்க்கிறோம். எப்படி செக்ஸ் உணர்வு ஒரு குடும்பப் பொறுப்பாகப் பரிணமித்து பெண்களிடம் பொறாமையையும் வெறுப்பையும் தூண்டுகிறதோ, இதே செக்ஸ் உணர்வு அவர்களைக் குழுவாக இனிது இயங்கவும் உதவக் கூடும். ஆனால் சகபாலினத்தோர் மீதானதாக அப்போது அது இருக்கக்கூடும்.

மிகச்சிறந்த, நெருக்கமான நண்பர்களிடம் ஒரு பண்பைப் பார்க்கலாம். ஒருவர் சற்று அடங்கி, அமைதியாக இருப்பார்; இன்னொருவர் ஆதிக்கம் செலுத்தும், ஆவேசமானவராக இருப்பார். பொதுவாக இந்த வேதியல் மிக நுணுக்கமாக கண்ணுக்குத் தெரியாதபடி செயல்படும். இருவரும் ஆண்மை மிக்கவராக அல்லது பெண்மை அதிகமானவளாகத் தம்மைக் காட்டிக் கொள்வர். ஆனால் சிற்சில சூழ்நிலைகளில் பரஸ்பரம் அடங்கியும் ஏற்றும் நடந்து கொள்வர். இந்த உறவில் தராசு எப்போதும் ஒரு பக்கம் சாய்ந்தும் உயர்ந்துமே இருக்கும். சிறந்த தோழிகளில் ஒருவர் ஆண்மை மிக்கவராகவும் ஒருவர் பெண்மை மிக்கவராகவும் இருப்பார். இரண்டு பெண்மை மிக்க பெண்களாலோ அல்லது ஆண்மை மிக்க ஆண்களாலோ நல்ல நண்பர்களாக இருப்பது மிக மிக சிரமம்.

பொதுவாக இன்று நிர்வாகவியலிலும் உளவியலிலும் வலுவாக உருவாகி வருகிற ஒரு கருத்து பெண்களால் நல்ல மேலாளர்களாக இருக்க முடியாது, அவர்கள் தமக்குக் கீழுள்ள ஆண்களைக் கடும் நெருக்கடிக்கும், வதைக்கும் உள்ளாக்கு கிறார்கள் என்பது. ஆனால் ஒரு ஆண்மை மிகுந்த, ஆண்கள் மத்தியில் மட்டுமே தம்மை சகஜமாக உணரும் பெண்ணால் (tஷீனீதீஷீஹ்) பெண்மை மிகுந்த, உள்ளூர ஆண்கள் பால் விருப்பமும், அச்சமும் கொண்ட சம்பிரதாயப் பெண்ணை விட நல்ல மேலாளராக முடியும்.

இங்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, செக்ஸை நாம் உடலுறவு மற்றும் சந்ததி உருவாக்கம் சம்பந்தப்பட்ட ஒன்றாக மட்டும் பார்க்கக் கூடாது. இரண்டு, ஓரின விழைவுக்கு இன்றைய வேலையிடங்களில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. சம்பிரதாயமான பெண்களை விட லெஸ்பியன் உணர்வு கொண்ட பெண்கள் இன்னும் மகிழ்ச்சி யாக இணைந்து பணியாற்ற முடியும். இந்த உணர்வு நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம்.

நாம் பாலியல் ரீதியாக விரும்புகிற அல்லது ஈர்க்கப்படுகிற அத்தனை பேரையும் படுக்கைக்கு அழைக்க நாம் விரும்புவ தில்லை. ஒருவருடன் உடலுறவு கொண்டு பந்தத்தை உருவாக்குவது ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி எடுப்பதற்கு சமம். அது கணிசமான பணத்தை, ஆற்றலை, நேரத்தைக் கோருகிற ஒன்று. ஆனால் நாம் படுக்கைக்கு அழைக்காத அதேவேளை ஈர்க்கப்படுகிற நபர்களுடன் இருப்பதும் இணைந்து வேலை செய்வதும் மன அமைதியும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கி றது. ஆக, செக்ஸ் என்பது 90% உடலுறவுக்கானது அல்ல; இன்று செக்ஸ் சார்ந்த உடலுறவற்ற உறவுகள் நம் சமூக உறவாடலில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகின்றன.

அதாவது உடலுறவு ஜிலேபி என்று நினைத்தால் நீங்கள் அதை மிகக் குறைவாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் நாள் முழுக்க சாப்பிடும் உணவு மற்றும் மருந்துகளில் இனிப்பு வெவ்வேறு வடிவங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. செக்ஸ் விழைவு நம் மொழியில், உரையாடல்களில், மீடியா பிம்பங்களில், இறைநாட்டத்தில், குழந்தைமீதான பிரியத்தில், கட்டிட அமைப்பில், வன்முறையில் எங்கும் பரவலாக நுணுக்கமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றைய நேரடியான ஆண் - பெண் உடல் வழியாக அன்றி இவ்வாறுதான் செக்ஸ் இனிப்பை நுகர விரும்புகிறோம்.

மனித குல வளர்ச்சி வெற்றிகரமான கூட்டு செயல்பாடுகளால் ஏற்பட்டது. நம் வகுப்புகளில் இருந்து வேலை செய்யும் இடங்கள் வரை மனிதர்களோடு எப்படி சரியாக இணைந்து செயல்படுவது என்பது குறித்தே மீள மீள அக்கறையாக சொல்லித் தருகிறார்கள். கூட்டுச் செயல்பாட்டின் எஞ்ஜின் ஆயில் செக்ஸ்தான். ஆண்கள் இத்தனை காலமாய் விவசாயத் தில், வணிகத்தில், போர்களில், கட்டுமானப் பணிகளில் கூட்டாக இயங்கி வந்திருக்கிறார்கள். இதை சாத்தியமாக்கியது ஆண்களுக்கு இடையிலான ஓரினப் பாலுணர்வுதான் என ஒரு பரிணாமவியல் கோட்பாடு உணடு.

உறவுகளைத் தீர்மானிப்பதில் உடலுக்கு ஒரு முக்கிய பங்குள்ளது. ஏன் சிலபேரைப் பார்த்ததும் பிடிக்கிறது, சிலரைக் கண்டதும் வெறுக்கிறோம்? அவர்களின் முகத்தோற்றம், பாவனை, உடல்மொழி, நிறம், குரல் இவையெல்லாம் ஒட்டுமொத்தமாகவோ தனியாகவோ ஒரு ஒவ்வாமையை நமக்குள் ஏற்படுத்துகின்றன. அலுவலகத்தில் நமக்குப் பல விநோதமான எதிரிகள் தோன்றுவது இதனால்தான். மனம்தான் உறவைத் தீர்மானிக்கிறது என்றால் நாம் கிட்டத்தட்ட யாரையும் வெறுக்க மாட்டோம். மனதளவில் நாம் கிட்டத்தட்ட ஒன்றுதான். மேலும் சுவாரஸ்யமாக உடலளவில் பிடித்துப் போகிற ஒருவரைத்தான் அணுகி மனதளவில் அறிய முயல்கிறோம். இப்படித்தான் நட்புகள் ஆரம்பிக்கின்றன. உதாரணமாக, மனதளவில் பெண்மை ஒத்த நளினமும் மென்மையும் கொண்ட ஒரு ஆணுக்கு முற்றிலும் மாறுபட்ட முறுக்கான முரட்டுத்தனமான ஒரு ஆணைக் கண்டதும் நல்ல அபிப்ராயம் ஏற்படலாம். அவருக்குத் தன்னுடைய இயல்பான பெண்மை மீது கூச்சமும் வெறுப்பும் உண்டென்றால் தன்னை ஒத்த பெண்மையான ஆணைக் கண்டால் பரம விரோதியாக பாவிக்கவோ விலகிச் செல்லவோ நேரலாம். இதன் பொருள் நெருக்கமான நண்பர்கள் ஹோமோ என்றல்ல. இவர்களின் உறவாடலில் ஓரின விழைவின் ஒரு சிறு கூறு உள்ளது என்பதே என் கருத்து.

பாலியல், இயங்கியல் முரண் பாட்டை அடிப்படையாக கொண் டது. இரு ஆண்கள் ஈர்க்கப்படும் போதும் அவர்கள் தம்மிடையே ஆண்மையும் பெண்மையும் வெவ்வேறு அளவுகளில் கொண்ட வர்களாக இருக்கிறார்கள். சரி, இது உண்மையென்றால் பெண் கள் இடையே அவஸ்தைப்படும் ஆணும், ஆண்கள் இடையே அசௌகரியமாக உணரும் பெண்களும் ஏன் இருக்கிறார்கள்? இதுதான் இங்கு மிக முக்கியமான கேள்வி. ஆண் - பெண் உறவாடலில் உள்ள சிக்கல் குழந்தைப் பேறுதான். குழந்தைப்பேறு உடமை, அதிகாரம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. உறவை இறுக்கமானதாக, சட்டதிட்டங்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக ஆக்குகிறது. இரு காதலர்கள் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதை அனுமதிக்கும் நாம் கணவன் - மனைவி ஒரே இடத்தில் வேலை பார்க்கையில் அதை எளிதில் ஏற்பதில்லை. காரணம், அவர்கள் நிர்வாகம் எனும் அமைப்புக்குள் இன்னொரு தனி அமைப்பாக இயங்குகிறார்கள். ஆனால் ஓரினச் சேர்க்கையின் முக்கிய குறையாக கருதப்படுகிற குழந்தையின்மையே இங்கு ஒரு சுதந்திரத்தை, இறுக்க மின்மையை, லகுத்தன்மையைக் கொண்டு வருகிறது. அதனா லேயே தாம்பத்ய பந்தம் போல் சிக்கலானதாக நட்பு இருப்ப தில்லை. நண்பர்களிடையே அடிக்கடி சச்சரவுகள், வன்முறை, கொலை இதெல்லாம் அன்பின் பெயரில் நடப்பதில்லை. ஆனால் காதலுக்கு இணையான தீவிரத்தன்மையும் அணுக்கமும் நட்பிலும் உருவாகிறது - இதற்குக் காரணமும் கண்ணுக்குத் தெரியாத ஓரின விழைவின் வேதியல்தான்.

இங்குதான் இரண்டாவது முடிவுக்கு வரலாம். உறவாடலைக் குடும்பம் சார்ந்ததாக மட்டும் யோசிக்கும் பாணியை நாம் கைவிட வேண்டிய வேளை வந்து விட்டது. இன்று வேலை மற்றும் வேறு நாட்டங்களுக்காக எண்ணற்ற பரிச்சயமற்ற பேருடன் உரையாடவும், சேர்ந்து இயங்கவுமான சாத்தியங்கள் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளால் ஏற்பட்டுள்ளன. இன்றைய யுகத்தில் கண்ணுக்குத் தெரியாத அந்நியர்களுடனான உரையாடலும், பரஸ்பர புரிந்துணர்வும் சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. மென் திறன் பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளுக்கு கல்லூரிகளிலும், அணி செயல்பாடு என்ற பெயரில் நிறுவனங் களிலும் இதற்குத்தான் பயிற்சி அளித்து அழுத்தம் கொடுக் கிறார்கள். ஒரு காலத்தில் குடும்ப உறவு சார்ந்த சாதிய பந்தங்கள் வழியாகத்தான் நாம் வேலைகளை அடைந்தோம், வணிகம் செய்தோம். இன்று உலகம் விரிந்து வரும் நிலையில் உறவுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணம் கிடைத்துள்ளது. தினசரி புது நபர்களை சந்திப்பதும், வலைத்தொடர்புகளை உருவாக்குவதும் வாழ்வில் நம் வெற்றியைத் தீர்மானிக்கிற காரணியாக இருக்கிறது.

சமூக வளர்ச்சி என்பது குடும்பம், மகப்பேறு போன்ற சிறுவட்டங்களைத் தாண்டிச் சென்று விட்டது. இதற்கு மற்றொரு உதாரணம், இன்று உலகு முழுக்க கணிசமாகக் குறைந்து வரும் உடலுறவும், மகப்பேறும். கடந்த வருடத்தில் மட்டும் இந்தியாவில் மலட்டுத்தன்மையின் அளவு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய தம்பதியினரிடையே உடலுறவில் ஆர்வம் இழப்பு குறித்த ‘இந்தியா டுடே’ கட்டுரையில் ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பு வருகிறது. உடலுறவு இன்மைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய தொடர்பு இருப்ப தாகக் கட்டுரை கூறுகிறது. மனிதர்கள் சமூக, பொருளாதார ரீதியாகப் பெரும் முன்னேற்றங்கள் அடைகையில் செக்ஸை மகப்பேறுக்கான ஒரு சம்பிரதாயமாக எண்ணாமல் ஒரு பொழுதுபோக்கு கேளிக்கையாக மாற்ற விழைகிறார்கள். இந்த செக்ஸ் கேளிக்கையைப் படுக்கையறை வழியாக அன்றி வேறு பல கலாச்சாரப் பொழுதுபோக்குகள், விருப்ப நிறைவேற்றல்கள் வழி அடையவே விரும்புகிறார்கள். உதாரணமாக, ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வாங்குவது மிக அழகான பெண்ணைப் புணர் வதை விட கிளர்ச்சியானதாக, கிளுகிளுப்பானதாக இன்று பார்க்கப்படுகிறது.

இன்று இந்தியாவில் செக்ஸ் உறவு கொள்ளாத தம்பதியினர் அதிகமாகி வருகிற தகவலும் நமக்குத் தெரியும். பிரம்மச்சரிய தம்பதியினர் என இவர்களுக்கு என்று ஒரு பெயரே உள்ளது. இன்றைய தம்பதியினர் ஒன்று செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை அல்லது குழந்தைப்பேறை வெகுவாகத் தள்ளிப் போடுகிறார்கள். காரணங்கள் நேரமின்மை, களைப்பு, ஆர்வமிழப்பு, தகவல் தொடர்பின் பெருக்கம் என பலவாறு கருதப்பட்டாலும் இவை வெறும் சப்பைக்கட்டுதான். முக்கியமான காரணம், இரண்டும் அவசியம் அல்ல என்கிற எண்ணம் சமகாலத்தில் வலுப்பெற்று வருகிறது.

கணிசமான ஜோடிகள் திருமணம் செய்து பெயருக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அன்றி உடலுறவு, சந்ததி நீட்டிப்பு என்கிற நோக்கத்தில் இருந்து குடும்ப அமைப்பு வெகு வாக விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. குடும்ப அமைப்பு அடிப்படையில் குறுகுதலை வேண்டுவது. ஆசைகளை, விருப்பங்களை, செக்ஸைக் குறுக்கி ஆற்றலை மொத்தமாக உறவுகளின் பேரில் செலவழிப்பது. ஆனால் இன்றைய காலகட்டம் நம்மை ஒரு சப்பாத்தியைப் பரத்துவது போல முழுக்க விரித்துக் கொள்ளக் கேட்கிறது. வேலை செய்வது, தொடர்ச்சியாகப் பயணிப்பது, குலம் கோத்திரம் கடந்த உறவுகளை உருவாக்குவது, பணம் சம்பாதிப்பது, பொருட்களை வாங்கிக் குவிப்பது, அதிகாரத்தை அடைவது, அது குறித்த கனவுகளில் மூழ்குவது, தீரத்தீர ஆசைகளைத் தேடித்தேடி நிறைவேற்றுவது, கட்டற்ற இன்பத்தைத் தேடுவது என இன்றைய காலத்தின் போக்கு குடும்பம் எனும் குவிமையத்தில் இருந்து சிதறிப் போவது. காலத்தின் திசையை நாம் மாற்ற முடியாது. எதிர்கால மனிதன் செக்ஸ் அற்றவனாகக் கூட இருக்கலாம். அவனுக்கு ஓரின உறவுகளே அதிக சௌகரியமாகக் கூட இருக்கலாம். இந்த முடிவை நோக்கிய பண்பாட்டு அசைவுகளைத் தாம் இப்போது கண்டு வருகிறோம். இதைப் புரிந்து கொள்ளாதவர்களே இயற்கையான செக்ஸ் குறித்தும், குடும்பத்தின் பவித்திர தன்மை பற்றியும் ஓரின சேர்க்கைக்கு எதிராக ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உடலுறவும், குழந்தைப்பேறும் குறைவதற்கான காரணம் மனிதனின் அக்கறை இதைக் கடந்து போய் விட்டது என்பதே. இது ஒரு சமூக, பொருளாதாரம் சார்ந்த பண்பாட்டு சுழல். இந்தச் சுழலில் சிக்கி புலன்வழி உலகை மேலும் மேலும் அறிவதற்கான விருப்பம் இன்றைய மனிதனுக்கு மிக அதிகமாகி உள்ளது. செக்ஸ் இன்றியே குழந்தைப்பேறு இன்று சாத்தியமாகி பரவலாகி வருவதும் இன்னொரு காரணம். ஒரு பண்பாட்டுப் போக்கு மனித குலத்தின் உள்ளார்ந்த இச்சை, சமூக பொருளாதார வீச்சை அடிப்படையாக கொண்டது. ஓரினச் சேர்க்கையை எதிர்க்கும் வலதுசாரிகள் இதே கோளாறான அணுகுமுறையைத்தான் நவீன முன்னேற்றங்கள் மற்றும் விழுமியங்களுக்கு எதிராக வைக்கிறார்கள். நாம் காலத்துக்குள் இருக்கிறோம், காலத்தில் இருந்தபடியே காலத்தை மாற்ற நினைப்பது காருக்குள் இருந்தபடியே காரைத் தள்ளுவதைப் போன்றது என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ராமர் ஆட்சியை, காமராஜர் ஆட்சியை வேண்டுவோர்தான் ஓரினச் சேர்க்கையையும் எதிர்க்கிறார்கள்.

மனிதர்கள் பண்படாத வனவாசிகளாக இருந்த காலத்தில் கூட்டாக ஆண்கள் வேட்டையாடவும் போரிடவும் ஒரு இணைப்பு பாலமாக ஓரின ஈடுபாடு இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் மனிதர்களை எந்திரம் போல் வேலை வாங்கி உபரி மதிப்பு பணமாக, சொத்தாக மாற்றும் இறுக்கமான நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவானதும் உடல் சொத்தின் நீட்சியாகப் பார்க்கும் போக்கு உருவானது. செக்ஸ் அளக்கப்பட்டு கறாராகப் பரிந்துரைக்கப்பட்டது. படிநிலை தக்க வைக்கும் பொருட்டு குடும்பத்துக்கு மிகுதியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனாலேயே செக்ஸில் ஆண்-பெண்ணுக்கு இடையிலானது மட்டுமே சரியானது, உத்தமமானது என வலியுறுத்தப்பட்டது. சுயபுணர்வு, வயதில் குறைந்தவர்கள், மூத்தவர்கள், ஒருபாலினத்தவர் மீதான இச்சைகள் ஒடுக்கப்பட்டன. இன்று மீண்டும் எதேச்சையாக வரலாற்றில் ஒரு உடைப்பு நேர்ந்திருக்கிறது. உலகுதழுவிய உரையாடலை நோக்கியும், இனம் கடந்த பண்பாட்டு பகிர்தல்கள் நோக்கியும் உலகம் விரையும் இவ்வேளையில் குழந்தைப்பேறு கடந்த ஒரு செக்ஸ் உறவாடலுக்கான தேவை கனிந்துள்ளது.

இருபால் உறவு எப்படிக் கடந்த காலத்துக்கான மார்க்கமோ அதேபோல் ஓரினச்சேர்க்கை இக்காலத்து உறவாடலுக்கு உதவுகிற ஒன்று என நாம் புரிந்துகொள்ளும் அவசியமும் எழுந்துள்ளது. நாம் இன்னொரு காலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். அதை உணராதவர்கள்தாம் இயற்கைக்கு மாறானவர்கள்.

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6451

Posted

ஓரின பாலுணர்ச்சியென்பது பரம்பரை அலகுகளால் கடத்தப்படுவதல்ல. அது ஓர் மன விகாரம். மனோவியல் நோய். எவ்வாறு சிலர் இலகுவாக புகை குடி போதை செக்ஸ் போன்றவற்றுக்கு அடிமையாகிறார்களோ அவ்வாறே ஓரின பாலுணர்ச்சியென்பதும். அதனை தகுந்த மனோவியல் சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். அடிப்படை மருத்துவ உடற்றொழிலியலின் படி ஆசன வாய் மலம் கழிப்பதற்கும் யோனி  சிறு நீர் கழிப்பற்கும் புணர்ச்சியில் ஈடுபடுவதற்குமே அமைக்கப்பட்டது. இந்த விதி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது மருத்துவ உடற்றொழில் கோட்பாடுகளுக்கும் இயற்கைக்கும் முரணாணது. அதனை ஏற்றுகொள்வது மனித நாகரிகத்தை அவமதிக்கும் செயல். ஏற்றுக்கொள்ளமுடியாதது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:D சும்மா விசைப்பலகை கிடைச்சால் எல்லாரும் அடிப்படையேதும் இல்லாமல் எழுதுவாங்கள் போல இருக்கு இந்தக் கட்டுரையைப் பார்க்க. சீமான் எற்கனவே சுட்டிக் காட்டியிருப்பது போல, தன்னினச் சேர்க்கைக்கு காரணமான ஜீன்கள் எதுவும் கண்டு பிடிக்கப் படவில்லை. ஒரு மனித நடத்தைக்கு ஒரு அல்லது பல ஜீன்களைக் காரணமாகக் கண்டு பிடிக்க இயலும் என்று எனக்குள்ள உயிரியல் அறிவை வைத்துக் கொண்டு என்னால் நம்ப முடியவில்லை. மேலும், மனிதன் ஏனைய விலங்குகள் போல ஒரு விலங்கினம் என்று வைத்துக் கொண்டால், எப்படித் தன் இனத்தைப் பெருக்கலாம் என்று தான் செயல் படுவான். பிரம்மச்சரியத்தை எல்லாருக்கும் போதித்த சமண மதம் அழிந்தது போல, தன்னினச் சேர்க்கையை கலாச்சாரமாகத் தழுவிக் கொள்ளும் மனிதக் குழுக்களும் எண்ணிக்கையில் அழிந்து போவார்கள். இது இயற்கை வகுத்த வழி மாதிரி எனக்குத் தோன்றவில்லை!

மற்ற படி தன்னினச் சேர்க்கை விலங்குகளிலும் காணப் படுகிறது. ஆனால் விலங்குகள் தங்கள் பாலுணர்வு மற்றும் சேர்க்கை உந்துதல்களை conscious ஆக கட்டுப் படுத்தும் சக்தியற்றவையாக இருப்பதால் விலங்குகள் தன்னினச் சேர்க்கையில் ஈடு படுகின்றன என நான் நம்புகிறேன். மனிதன் அப்படியல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"பொல்லுப் போகின்ற இடம், புண்ணியம்" என்று... ஆன்றோர்கள் சொல்வார்கள்.
அது.. ஓரினத்தில் போனாலும், ஈரினத்தில் போனாலும்... புண்ணியமே.... :D  :icon_idea:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"பொல்லுப் போகின்ற இடம், புண்ணியம்" என்று... ஆன்றோர்கள் சொல்வார்கள்.

அது.. ஓரினத்தில் போனாலும், ஈரினத்தில் போனாலும்... புண்ணியமே.... :D  :icon_idea:  :lol:

 

உவருக்கு வெள்ளி விடிஞ்சுட்டுது! :D

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
ஓரின செக்ஸ் ஈர்ப்பு இக்காலத்தின் தேவையா?

 

மனித மனம் சம்பந்தப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
உப்பிடி எல்லாத்துக்கும் மனித மனம் சம்பந்தப்பட்டது எண்டு போட்டு பேசாமல் இருக்கேலாது...
 
இது பிற்காலத்தில் பாரிய விளைவுகளை உருவாக்கும்.
 
Posted

இணைப்புக்கு நன்றிகள்.
 
காட்டுரை காலம் சார்ந்து பல விசயங்களை அலசுகின்றது.
 
பல வளர்ந்த நாடுகள் ஓரினச்சேர்க்கையாளர்களின் உணர்வுகளை மதித்து அதை அங்கீகரித்துள்ளது.

http://en.wikipedia.org/wiki/Same-sex_marriage
 

சாதீய பாரம்பரிய சமுதயங்களை பொறுத்தவரை ஓரினச்சேர்க்கை மட்டுமில்லை ஆண் பெண் சாதிமாறிக் கலந்துகொள்வதற்கு கூட கடுமையான கடும்போக்கை கடைப்பிடிக்கின்றது. இன்னும் எத்தனையே கொடும் மரணங்கள் இத்தால் நிகழ்கின்றது. பின்னணயில் கடவுளும் மதமும் கோட்பாடுகளும் காரணப்பொருளாக என்னும் நிற்கின்றது. இயற்கையான ஆண் பெண் சேர்க்கைக்குள் முரண் கொண்டுவந்த சமூகம். இது ஒரு பெரும் சமூகம் சார் மனநோய். இவ்வாறான மனநோய் உள்ள சமூகம் ஓரினச்சேர்க்கை சார்ந்த விடயங்களை கத்தி துப்பாக்கி துணைக்கொண்டுதான் அணுக முற்படும். ஆனால் இவ் அணுகுமுறைகளை காட்டுமிராண்டித்தனம் என்று ஒதுக்கி காலம் நகர்ந்துசெல்லும். தனிமனித உரிமைகளில் மூக்கை நுளைப்பதே இயற்கை பண்பாடு நாகரீகம் என்று கருதும் சமுதாயங்கள் காலம் நகர்ந்துசெல்லும் வேகத்துக்கு ஈடுகொடுக்காது. அதற்காக காலம் தனது வேகத்தைக் குறைக்கப்போவதும் இல்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படிப் பார்த்தால் வாயும் நாக்கும் சாப்பிடுவதற்கும் கதைப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்ட விடயங்கள் :huh: .

எனது புதிய வேலையில் எனக்கு buddy யாக வேலை பழக்குபவர் gay. அவருக்கு ஒரு ஆண் நண்பரும் இருக்கிறார். அது அவர் அவரின் சொந்த விருப்பமும் உரிமையும் கூட. இதனை ஒரு நோயாகக் கருதுவது மிகவும் பிற்போக்குத் தனமானது.

Posted

ஓரினச்சேர்க்கை சர்ச்சை - முஸ்லீம் தலையீடு!  

சமீபத்தில் உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக அளித்த தீர்ப்பு குறித்து இந்தியாவிற்குள் பல விவாதங்களை உருவாக்கி இருந்தாலும் மேற்கத்திய நாடுகளிடம் இந்தியா கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்கிறது. 
 
"ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபாண்மை மக்களின் உரிமைகளை பறிக்கப்படுவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது" என்று சில மேற்கத்திய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. 
 
கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும். மக்களாட்சிக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். இந்து மதவாதிகளையும் திருப்திபடுத்த வேண்டும். சிறுபாண்மையினருக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்றால் இந்திய அரசு என்ன செய்யும்? 
 
சொந்த நாட்டு மக்களை திருப்திப்படுத்துவதைவிட, நாங்கள் ஜனநாயகவாதிகள் என்று உலகத்திற்கு நிருபிக்க வேண்டிய நெருக்கடி இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் 'ஒரினச்சேர்க்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்' என்று இந்திய அரசு மனுதாக்கல் செய்திருக்கிறது. இது மீண்டும் மதவாதிகளை கலங்கடித்திருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாய் மீண்டும் தீர்ப்புகள் கிடைத்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள். மீண்டும் போராட்டங்களையும் இந்திய அரசுக்கு எதிராக எதிர் வழக்கும் தொடருகிறார்கள். ஓட்டு பொறுக்கும் அரசியல் பொறுக்கிகளும் பெரும்பான்மை ஓட்டுக்களுக்காக சிறுபாண்மையினரை கேவலப்படுத்துகிறார்கள். 
 
தமிழ்நாட்டைச் சேர்ந்த "ஐ.என்.எல்" என்ற முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் அணி இ.பி.கோ. 377 பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக மாற்றும்படி கோரிக்கை வைப்பதோடு, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாய் போராடும் கலாச்சார பயங்கரவாதிகளை கைது செய்யும்படி வலியுறுத்துகிறது. 
 
சிறுபாண்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று போராடுபவர்கள் பயங்கரவாதிகளா? ஒருபால் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனையைவிட, கடுமையான மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பும் மதவாத/கலாச்சார பிற்போக்காளர்கள் பயங்கரவாதிகளா? 
 
ஏதோ ஒரு காலத்தில் எப்போதோ அக்கால சூழலுக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை இன்றைய சமூக வளர்ச்சி நிலை காலத்திலும் அதே சட்ட அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியாயவாதம் இல்லை. அது அடக்குமுறை சட்டமாகத்தான் இருக்கும். 'லார்டு மெக்காலே' என்ற ஆங்கிலேயர் உருவாக்கிய இந்திய குற்றவியல் சட்டம் இ.பி.கோ. 1837-இல் இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டு 1860-இல் இருந்து இ.பி.கோ. சட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது. 
 
19-20 ஆம் நூற்றாண்டுகளில் மனித உரிமைகள் குறித்த அதிக விழிப்புணர்வும் சமூக சூழல் மாற்றங்களும் அதற்கேற்ற புதிய சட்டங்களையும் உருவாக்க வேண்டிய சூழ்நிலைகள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்பட்ட போது சட்டத் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தியாவுக்கு சட்டங்களை உருவாக்கிய இங்கிலாந்தில் கூட சட்டத்திருத்தங்கள் மாற்றப்பட்டன. ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்ட திருத்தங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் சட்டத் திருத்தங்கள் செய்யப்படவில்லை. 
 
2001-இல் எய்ட்ஸ் மற்றும் பாலியல் சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்  நாஸ் அறக்கட்டளை இ.பி.கோ. 377 சட்டத்திற்கு எதிராக டில்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு பதிவு செய்திருந்தது.  
 
"ஒருவரின் பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் அந்த நபர் சட்டரீதியில் குற்றவாளியாக கருதப்படும் இந்திய அரசியல் சட்டத்தின் 377 வது பிரிவை  திருத்தம் செய்ய வேண்டும்" என்று கோரிக்கை மனு கொடுத்திருந்தது. 
 
இவ்வழக்கு விசாரணையில் 2009- ஜூலையில் உயர் நீதிமன்றத்தின் உயர் நீதிபதி 'அஜித் பிரகாஷ் ஷா' மற்றும் நீதிபதி எஸ்.முரலிதா, "வயதுக்கு வந்தவர்களுக்கு இடையிலான பரஸ்பர சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் ஒருபாலுறவு சட்டப்படி குற்றமல்ல" என்று தீர்ப்பு கூறி 377வது பிரிவு சட்டத்தை ரத்து செய்தது. 
 
ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், அரசியல், மத மற்றும் சமுகக் குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, 377வது சட்டப் பிரிவினையில் திருத்தம் செய்யக் கூடாது. அவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. 
 
2013- டிசம்பர் 11-இல் டில்லி உயர்நீதிமன்றம் அளித்த முந்தைய தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து 377வது பிரிவை  மீண்டும் சட்டப்புத்தகத்தில் சேர்த்திருக்கிறது.
 
உச்ச நீதிமன்றம் நீதிபதி சிங்வி, நீதிபதி முக்கோபாத்யாயே, "ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவது ஆயுள் தண்டனை கொடுப்பதற்கு நிகரான குற்றமாகும்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். 
 
முரண்பாடுகள்:
 
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் என்ன? இருநீதிமன்ற நீதிபதிகளும் இந்திய லாவைத்தான் படித்திருக்கிறார்கள். ஆனால் கருத்து முரண்படுகிறது. 
 
ஒரு நீதிமன்றம் தனிமனித பாலியல் சுதந்திரத்தில் தலையிடுவது அநாகரிகம் என்கிறது. இன்னொரு நீதிமன்றம் ஒரினச்சேர்க்கை கலாச்சாரத்திற்கு எதிரானது; இயற்கைக்கு முரணானது; ஆயுள் தண்டனைக்கு நிகரான குற்றம் என்கிறது.
 
"அடிப்படையில் சமயத்தைக் காப்பதற்கு தத்துவத்தைப் பயன்படுத்தும் இரண்டும்கெட்டான் நூல்கள் பகவத்கீதை மனுதர்மம் போன்றது நமது சட்டங்கள்" என்பார் அம்பேத்கர். 
 
உச்ச நீதிமன்றம் அதை உண்மை என்று நிருபித்திருக்கிறது. ஒரினச்சேர்க்கை கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பதறும் தீதிபதிகளுக்கு நாரதரும் கிருஷ்ணனும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு 60 குழந்தைகளை பெற்றெடுத்து அதன் பெயர்களை இந்து ஆண்டுகளின் மாதங்களுக்கு வைத்த புராணக் கதை தெரியாதா? 
 
சிவனும் விஷ்ணுவும் ஓரினச்சேர்க்கையில் இணைந்து ஐயப்பனை பெற்றெடுத்து காட்டில் போட்டுவிட்டு போன புராணக் கதை தெரியாதா? 
 
ஏகப்பட்ட இந்துக்கடவுள்கள் பல ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்கின்றன. பல கோயில் சிலைகளில் ஓரினச்சேர்க்கை புணர்ச்சி சிலைகள் இருக்கின்றனவே. அவைகளை எல்லாம் இயற்கைக்கு முரணானது என்று தகர்த்தெறிய செய்ய முடியுமா? புராணக்கதைகளின் ஓரினப்புணர்ச்சி காவியங்களை தடை செய்ய வைத்திருக்கலாமே. ஏன் செய்ய முடியவில்லை? 
 
பல ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் மேற்கத்திரிய கலாச்சாரத்தில் இருந்து வந்தது என்று கூறுகிறார்கள். ஓரினச்சேர்க்கை என்பது தொற்று நோயா? அல்லது காப்பியடிக்கக்கூடிய மாடல் ஷோவா? இரண்டுமே இல்லை என்கிறது மருத்துவம். மனிதன் தோன்றிய பரிணாம வளர்ச்சியில் இருந்து பல புணர்ச்சி வகை கூறுகள் எல்லா சமூகங்களிலும் இருந்திருக்கிறது. 
 
இந்தியாவில் மிருகங்களோடு புணர்ச்சி செய்யும் மனிதர்கள் குறித்த தகவல்கள் 'காமசூத்திரா' போன்ற இலக்கியங்களில்   சிற்பங்களில் உண்டு. அதனால்தான் மிருகவதை சட்டத்தில் மிருகங்களோடு புணரும் மனிதர்கள் குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டு தண்டனைகளும் சட்டங்களாக உள்ளன. 
 
ஓரினச்சேர்க்கையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி வல்லுறவு கொள்வதும் குற்றமாகவும் தண்டனைக்குள்ளானதாகவும் இருக்கிறது. போப் - பாதிரிகள் - இமாம்கள் - சங்கராச்சாரிகள் - சாய்பாபா போன்ற சாமியார்கள் சிறுவர்களோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள்  இதே இந்து சமூகத்தில் நடந்திருக்கிறது. 
 
அப்போது எங்கே சென்றது மத ஒழுக்கம்? அதை கேள்வி கேட்கும் யோக்கியதையற்றவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களின் தனி மனித பாலியல் இச்சைக்குள் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை என்று கூறினால் அவர்களையும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று திட்டித் தீர்ப்பதால் சமூகப் பிரச்சனை ஒழிந்துவிடுமா? 
 
2009- ஜூலையில் உயர்நீதி மன்றத்தில் வயதுக்கு வந்த இருநபர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் ஒருபால் உறவு (ஓரினச்சேர்க்கை) சட்டப்படி குற்றமல்ல என்று தீர்ப்பு கூறி இ.பி.கோ. 377வது பிரிவு சட்டத்தை ரத்து செய்த போது முதல் எதிர்ப்பு தெரிவித்தது அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தான். அதோடு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து 377வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்யக்கூடாது வழக்கு தொடந்ததும் முஸ்லீம் அமைப்புதான். 
 
தற்போது இந்திய அரசு ஒரினச்சேர்க்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் மனுதாக்கல்  செய்ததற்கும் கடுமையாக கண்டனங்கள் செய்வது முஸ்லீம் அமைப்புகள் தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.என்.எல். முஸ்லீம் அமைப்பும் ஓரினச்சேர்க்கையை வலியுறுத்தி போராடுபவர்களை, 'கலாச்சார பயங்கரவாதிகள்' என்கிறது. கைது செய் என்கிறது. 
 
யார் கலாச்சார பயங்கரவாதிகள்? 
 
"எந்த சமூகம் தீமைகளை கண்டும் அதை தடுக்கவில்லையோ அந்த சமூகத்தின் மீது இறைவன் வேதனையை பொதுவாக்கி விடுவான் என்று நபிகள் நாயகம் கூறுவதை ஐ.என்.எல். முஸ்லீம் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. 
 
இந்து சமூகத்தின் பெரும் சமூக கேடாக ஓரினச்சேர்க்கை மதம், கடவுள்கள், கலாச்சாரம், புராணங்கள், இலக்கியங்கள் போன்றவற்றில் தீமைகள் தொடருகின்றனவே. அதை தடுக்க முடியாத முஸ்லீம்கள் மீது நபிகள் நாயகம் கோபம் திரும்பாதா? பெரும்பான்மை சமூகத்தின் மீது திரும்பாத முஸ்லீம் அமைப்பின் கோபங்கள், மிரட்டல்கள், உருட்டல்கள் சிறுபான்மையாளர்களை நோக்கி திருப்புவது அநாகரிகமில்லையா? 
 
இந்திய சமூகத்தில் முஸ்லீம்கள் நிலை குறித்து அம்பேத்கர் இவ்வாறு கூறுவார்:
 
"அரசியல் ரீதியில் இந்துக்களே மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சூழ்நிலையில் இந்திய முஸ்லீம்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் ஒடுக்கப்படுவோம் என்று இந்திய முஸ்லீம் உணர்கிறான்; அந்த அரசியல் ஒடுக்குமுறை இந்திய முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக ஆகக்கூடும் என்று அவன் அஞ்சுகிறான். 
 
சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் இந்துக்களால் மூழ்கடிக்கப்படக்கூடிய நிலையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற முஸ்லீமின் உணர்வு, வெளிநாடுகளில் உள்ள தங்களது தோழர்களுடன் ஒப்பிடும்போது சமூக சீர்திருத்தம் விஷயத்தில் இந்திய முஸ்லீம்கள் பின்தங்கியிருப்பதற்குப் பிரதான காரணமாக இவை இருக்கும்." [தொகுதி:15, பக்கம்:339]
 
எனவே, சமூக சீர்திருத்தங்களிலும் சிறுபாண்மையினரின் உரிமைகளிலும் எதிர்ப்பு தெரிவிப்பதை இந்திய முஸ்லீம்கள் கைவிட வேண்டும். 
 
"முஸ்லீம் அரசியல்வாதிகள் மதச்சார்பற்ற வாழ்க்கை அம்சங்களை தங்கள் அரசியலுக்கு ஆதாரமாகக் கொள்வதில்லை. ஏனென்றால் இந்துக்களுக்கு எதிரான போராட்டத்தில் இது தங்கள் சமூகத்தைப் பலவீனப்படுத்தும் என்பது அவர்களது கருத்து" என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டியதை ஐ.என்.எல். முஸ்லீம் அமைப்பு கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
"சமூகத் தீமைகள் எதுவென்று சமூகத்தில் வாழும் மனிதன் தீர்மானிக்க வேண்டிய விஷயம். சொர்க்கத்தில் வாழும் கடவுள்கள் தீர்மானிப்பதல்ல." 
 
செல்வந்தர்களிடமிருந்து நியாயம் பெறுவதற்காக 
ஏழை முஸ்லீம்கள் ஏழை இந்துக்களுடன் சேரமாட்டார்கள். 
நிலப் பிரபுவின் கொடுங்கோன்மையைத் தடுத்து நிறுத்துவதற்கு 
முஸ்லீம் குத்தகைக்காரர்கள் இந்து குத்துகைக்காரர்களுடன் சேரமாட்டார்கள். 
உழைப்புக்கும் மூலதனத்துக்கும் நடைபெறும் போராட்டத்தில் 
முஸ்லீம் தொழிலாளர்கள் இந்து தொழிலாளர்களுடன் சேரமாட்டார்கள். 
சாதி இந்துக்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்டோருடன் ஒன்று சேரமாட்டார்கள்
 
என்று அம்பேத்கர் கூறியதைப்போல பெரும்பான்மை ஆதரவுக்காக சிறுபாண்மையினரை புறக்கணிக்காதீர்கள். 
 
"ஆதிமனிதனின் முதல் பாவம் ஆதாம் ஏவால் காமத்தில் இருந்து கிறிஸ்துவ மதம் தொடங்குகிறது." 
 
"பெண்ணின் அதிகபட்ச காம இச்சையை அவளுக்கு உணர்த்தி விடாதே என ஆணுக்கு இஸ்லாம் சொல்கிறது." 
 
"பெண்ணை தனியாக விடாதே; சகோதரனையும் காம இச்சைக்கு அழைப்பாள் என்று இந்து மதம் சொல்கிறது." 
 
மதவாதிகளுக்கு காமம், காதல், பெண்கள் உட்பட அனைத்தும் பாவ வகைகளில் சேர்ந்தது. இதை ஏற்காத மேற்கத்திய சமூகங்கள் மதத்தை தூக்கி எறிந்தது. மதவாதிகளும் ஜம்பங்கள் வேலைக்கு ஆகவில்லை என்று பழைய ஏற்பாட்டில் இருந்து புதிய ஏற்பாட்டிற்கு புனித நூலை மாற்றும் பக்குவம் இருந்தது. இது முஸ்லீம் சமுதாயத்தில் சாத்தியப்படுமா? இந்து சமுதாயத்தில் சாத்தியப்படுமா? 
 
இவர்களிடம் தான் சமூகநிலையை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது என்றால் பிற்போக்காளர்களின் அடக்குமுறைக்கு எதிராக முற்போக்கு இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும். 
 
எந்த சமூகமும் பிற்போக்காளர்களால் முன்னேறியதில்லை. இன்று நமக்குத் தேவை முதலில் கற்றறிதல். ஒரு சமூக நிகழ்வின் அரசியலையும் அதன் பிரதிபலிப்புகளையும் இச்சமூகம் எப்படி பார்க்கிறது? அதில் இருந்து நாம் எதை கற்கிறோம் என்பதுதான்.  அது பாலியலாக இருந்தாலும் சரி. காதலாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணின உரிமைகளாக இருந்தாலும் சரி. அங்கே பிற்போக்கு சிந்தனைகளுக்கு ஆளுமை செய்யும் அதிகாரம் இல்லை. அவை அனைத்துமே மக்களுக்கு எதிரானது. மக்களின் உரிமைகளுக்கு எதிரானது!

http://tamizachi.com/articles_detail.php?id=345

Posted

அப்படிப் பார்த்தால் வாயும் நாக்கும் சாப்பிடுவதற்கும் கதைப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்ட விடயங்கள் :huh: .

எனது புதிய வேலையில் எனக்கு buddy யாக வேலை பழக்குபவர் gay. அவருக்கு ஒரு ஆண் நண்பரும் இருக்கிறார். அது அவர் அவரின் சொந்த விருப்பமும் உரிமையும் கூட. இதனை ஒரு நோயாகக் கருதுவது மிகவும் பிற்போக்குத் தனமானது.

ஆண் ‍பெண் என்பது இயற்கை. பதின்ம வயதில் ஆண்களுக்கு பெண்களைப் பார்த்தால் ஈர்ப்பு வரும். இது இயற்கை. ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணைக்கண்டு ஈர்ப்பு வந்தால் அது அசாதாரணமானது. இதற்குப் பின்னால் டெஸ்டோஸ்ட்ரோன் அல்லது ஈஸ்ட்ரொஜன் சமநிலையில் தளம்பல் இருக்கலாம். அதனாலேயே அது மருத்துவ பிரச்சினையாக இருக்க் வாய்ப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இந்த ஓரின பாலியல்காரரிடம் ஆண்வர்க்கமாயின் ஒருவர் ஆண்மைத்தனமாகவும் மற்றவர் பெண்ணியல்களுக்குரிய அபிநயங்களுடனும் இருப்பார்..ஆ...அஃக்....ஆ.. :D
அதே போல் பெண்வர்கத்தினரிடமும் ஒருவர் ஆண்மகனுக்குரிய நடவடிக்கைகள் அவரில் தெரியும். மற்றவர்  நிஜ பெண்ணாகவே இருப்பார்... :lol:
 
ஒட்டுமொத்த மனித வாழ்க்கைக்கு இயற்கையை , மிருகங்களை , பறவைகளை முன்னுதாரணமாக எடுப்பவர்கள் இந்த விடயத்தில் மட்டும் எங்கே தொலைந்தார்கள்?  :(
  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நண்பன் ஒருவன் கேட்டான். வியப்பாக இருந்தது. அவன் தந்த விளக்கம் என்னையும் ஆள் தேட வைத்து விட்டது.

விளக்கம்: 

வருங்காலத்தில் அவனின் மகன் வந்து அப்பா தான் கல்லுகாரன் என்றால் அதை அனுபவித்து அனுபவம் இருந்தால் ஏற்க கூடிய ஒரு மனப்பாங்கு இருக்குமல்லவா. அனுபவம் இல்லாத காரணத்தால்தான் அதை பலர் ஏற்பதற்கு தயங்குகிறார்கள்.

சிறிய உதாரணம்: அவன் அப்பா தண்ணி அடிப்பதில்லை. அவன் பாட்டிகளில் தண்ணி அடிப்பது அவருக்கு பிழைமாதிரி தெரியுதாம். அவன் அப்பாவும் தண்ணி அடிப்பவராக இருந்திருந்தால் அவருக்கு தண்ணியின் சுகம்/இன்பம் தெரிந்து இருக்கும். மகனை அளவாக அடி என்று சொல்லி தட்டி கொடுத்து இருப்பார். இப்போது தண்ணி அடிப்பது சாதாரண விடயம். அதை அனுபவிக்காத வயது வந்த முதியவர்கள்  மட்டும் எதிர்க்கிறார்கள்.

கல்லு வெட்டி அனுபவம் இருந்தால் மகன் வந்து சொல்லும் போது சிலவேளை அது சரி என்று கூட தெரியலாம். விஞ்ஞானம் கல்லை பிழை என்று சொல்லவில்லையே. பிள்ளை பெற கூடிய வாய்ப்பு கூட இப்ப இருக்கு.

புதுசு புதுசாக அனுபவித்து பார்ப்பதில் என்ன தப்பு. மாற்றங்கள் ஏற்க எங்களை தயார் படுத்துவது நல்லதுதானே!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
    • இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃 ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.