Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழிக்காலம் (நாவல்) - தமிழ்க் கவி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

Edited by sayanthan

  • Replies 55
  • Views 10.3k
  • Created
  • Last Reply

தமிழ்க்கவி

புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவர். பாடகி, கேமிரா விமன், எடிட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர். ஊடகத்தின் அத்தனை துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று மொழிகளையுமே சரளமாகப் பேசக்கூடியவர்.

ஈழத்தின் கடைசிக்கட்ட போர் அனுபவங்களை நாவலாக எழுதியிருக்கிறார். ‘ஊழிக்காலம்’, தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கிறது. போரின் வலி நேரடி சாட்சியமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நாவலை எழுத எவருக்குமில்லாத தகுதி அன்னை தமிழ்க்கவிக்கு உண்டு. ஏனெனில் தன்னுடைய இரண்டு மகன்களை போரின் பசிக்கு உணவாக கொடுத்த அவலமான அனுபவம் அவருக்கு இருக்கிறது.

போரிலக்கியம் என்கிற வகையில் வகைப்படுத்தக்கூடிய இந்நாவல், தமிழின் மிக முக்கியமான ஆக்கங்களில் ஒன்றாக நிச்சயம் இடம்பெறப் போகிறது என்று நம்புகிறேன்.

நன்றி : யுவகிருஷ்ணா
முகனூல்

  • கருத்துக்கள உறவுகள்

பல நூல்கள் வெளியாகின்றன என்ற செய்திகள் வருகின்றன. நல்லவிடயம். ஆனால் இவற்றையெல்லாம் எப்படி இலகுவாக வாங்கலாம் என்பதைப் பற்றிய தகவல்கள் இல்லை. தெரிந்தவர்கள் கூறவும்.

  • கருத்துக்கள உறவுகள்
india+996.JPG
தமிழ்க்கவியுடனான ஒரு சந்திப்பு

தமிழ்க்கவி என்கிற தமயந்தி (வயது 66)மக்களாலும் போராளிகளாலும் நன்கு அறியப்பட்டவர். இவரது இரண்டு மகன்களும் ஒரு பேத்தியும் புலிகள் அமைப்பில் மாவீரர்களாகிப் போனதோடு இவரது கணவரும் இறுதி யுத்தத்தில் இறந்து போனார். ஆரம்ப காலப் போராளிகளிற்கு அவர் அக்கா.அடுத்த கட்ட போராளிகளிற்கு அன்ரி.அல்லது மம்மி. அதற்குமடுத்த கட்ட போராளிகளிற்கெல்லாம் அவர் அம்மம்மா.இப்படி புலிகள் அமைப்பின் மூன்று தலைமுறை போராளிகளிற்கு நன்கு அறிமுகமானதும் அவர்களின் அன்பு கொண்டவருமான தமிழ்க்கவி புலிகள் அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு தவிர்ந்த புறக் கட்டமைப்புக்களான  அரசியல்.பிரச்சாரம்.கலை பண்பாட்டுக் கழகம். தொலைக்காட்சி. வானொலி. பத்திரிகை . இருபது வருடங்களிறகு மேலாக  பணியாற்றியவர்.இலங்கை இராணுவத்தால் கைதாகி முகாமில் அடைக்கப் பட்டு  புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப் பட்டு  விடுதலையானர்.இன்று  வன்னி இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சியமாகி நிற்பதோடு தனது அனுபவங்களை  ஊழிக்காலம் என்கிற ஒரு நாவல் வடிவத்தில் தந்துள்ளார்.

இவர் சென்னை வந்திருந்ததை அறிந்து அவரது விலாசத்தினை பெற்றுக் கொண்டு அவர் இருந்த முகப்பேர் பகுதிக்கு என்னுடைய ஒரு நண்பரோடு  சென்றிருந்தேன். சென்னையில் இப்போ இருக்கின்ற சிறிய இடத்திலெல்லாம் குடியிருப்புக்களை சிறிது சிறிதாகக் கட்டி வாடைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது  முக்கிய தொழில். அப்படி ஒரு சிறிய அடுக்கு மாடி கட்டிடம் தான் அவரது விலாசம். ஒடுங்கிய படிக் கட்டுக்களில் அவரது வீட்டைத் தேடி  முதலாவது  இரண்டாவது என ஏறி நான்காவது மாடியை கடந்து மொட்டை மாடிவரை போய் விட்டேன்  அவரது வீட்டைக் காணவில்லை. மொட்டை மாடியில் ஏறி நின்று சுற்றி வர பார்த்தபோது அங்கு அமைக்கப் பட்ட சிறிய ஒரு அறையில் இருந்து சிரித்தபடியே இதுதான் எனது மாளிகை வாருங்கள் என வரவேற்றவர்.கவனம் குனிந்து உள்ளை வாங்கோ என்றார்.
மொட்டை மாடியில் இரண்டு மீற்றர் சதுர அளவில்  சுவர் எழுப்பி மேலே சீற் போட்ட கூரை.இதுதான் அவரது வீடு இங்கு அவரும் அவரது ஒரு பேரனும் வசிக்கிறார்கள்.நான் கவனமாய் குனிந்து உள்ளே போனதும் இஞ்சை கதிரையெல்லாம் கிடையாது என்றபடி ஒரு பாயை விரித்து விட்டு அவசரமாக தேனீருக்காக அடுப்பை மூட்டி தண்ணீரை கொதிக்க வைத்து விட்டு ஒரு பிஸ்கற் பக்கற்றை பிரித்தவர் அங்கு மிங்கும் பார்த்து விட்டு அங்கு கிடந்த ஆனந்த விகடன் புத்தகத்தை எடுத்து நிலத்தில் வைத்து இதுதான் தட்டு என்றபடி அதில் பிஸ்கற்றுக்களை கொட்டி சாப்பிட சொல்லி விட்டு ரின் பால் பேணியை உடைத்து பால்தேனீர் போட்டு  கொண்டு வந்து அமர்ந்தார்.நீண்ட நேரம் அவரோடு உரையடிவிட்டு விடை பெற முன்னர் நாங்கள் வாங்கிப் போன அவரது புத்தகத்தில் வீரமும் தீரமும் விலை பேச முடியாதவை. வெற்றி அல்லது வீர மரணம் இதுவே எமது தாரக மந்திரம் அன்புடன் தமிழ்க்கவி என்று கையெழுத்திட்டு தந்தார்.

india+1251.JPG
 நான் சென்னையை விட்டு புறப்பட முன்னர் அவரை தொடர்பு கொள்வதாக சொல்லி விடை பெற்றோம்.
நான் சென்னையை விட்டு புறப்படு முன்னர் அவரை புத்தக சந்தையில் சந்தித் திருந்த போது தான் அவசரமாக வேறு வீடு தேடுவதாக சொன்னார். காரணம் நாங்கள் மற்றும் வேறு பத்திரிகையாளர்களும் அடிக்கடி அவரை சந்திக்கச் சென்றதில் ஆத்திரமடைந்த வீட்டு முதலாளி வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி விட்டாராம் என்றார்..வேண்டு மானால் வீட்டு முதலாளியோடு  நாங்கள் கதைத்து பார்க்கவா என்றதற்கு வேண்டாம் எங்களிற்கும் மான ரோசம் இருக்கு றோட்டிலை படுக்கிறது ஒண்டும் எனக்கு புதிசில்லை வீட்டை விட்டு போ.. எண்டு சொன்னதுக்கு பிறகு எனக்கு அங்கை இருக்க விருப்பம் இல்லை பாலத்துக்கு கீழை படுத்தாலும் இனி அங்கை இருக்க மாட்டன் வீடு தேடுறன் என்றார்.முடிந்தளவு நானும் உதவுவதாக கூறி விடை பெற்றேன்.அவரது ஊழிக்காலம் இன்னமும் முடியவில்லை...

 

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஊழிக்காலம் பக்கம்.90.....மாவீரர்களின் உடல்கள் வரிசையாக அடுக்கப் பட்டிருந்தது.அதைக் கடந்து அலுவலகத்தினுள் நுளைந்தபோது பொறுப்பாளர் தியாகம் ஜயா முகம் நிறைந்த தாடி மீசையுடன் அமர்ந்திருந்தார்
வணக்கம் ஜயா
வாங்கம்மா
என்றவர் மாவீரர் பதிவுகள் சரியாக மேற் கொள்ளப் படுகிறதா என்றதை கவனித்தபடி இருந்தார்.அங்கு நின்ற பத்மாவிடம் எங்கை இருக்கிறீங்கள் என பார்வதி சம்பிரதாயமாக கேட்டதும் அவளது கண்கள் பனித்தன.மூங்கிலாத்திலைதான்.சொந்தக் காரரோடை போயிருப்பன்.எல்லாரும் தனியாத்தான் போகினம் என்னை வாறியா எண்டு ஒருத்தர் கூட கேக்கேல்லை.எங்கடை நிலைமையை பாத்தியளா??.போரிலை வெற்றியெண்டா எத்தினை பேர் வீட்டை வந்திருப்பினம்.இப்ப நான் தனி மரம்.நானும் சண்டைக்கு போகப் போறன் என்றாள்.
பத்மா அங்கு நின்றதற்கான காரணம் பார்வதிக்கு புரிந்தது களத்திலிருந்து வரும் வித்துடல்களோடு அல்லது வேறு வகையில் அவளது கணவனுடன் நிற்பவர்கள் வரக் கூடும் அவனும் வரக்கூடும் எனவே அவனை சந்திக்கவோ அல்லது அவனைப் பற்றி அறிய சந்தர்ப்பம் அவளிற்கு கிடைக்கும் .அதற்காக மாவீரர் துயிலும் இல்லத்தில் காத்திருந்தாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஊழிக்காலம்.பக்கம்.95..உடையார் கட்டு மைதானத்தில் அதிகாரிகள் நிவாரணம் வழங்கினார்கள்.முல்லை மாவட்ட மக்கள் கிழக்கு மேற்காகவும்.கிளிநொச்சி மாவட்ட மக்கள் வடக்கு தெற்காகவும்.இன்னொரு வரிசை சுதந்திர புரம் வீதியை அடைத்து நின்றது.மன்னார் மாவட்ட மக்கள் தனி வரிசையில் நின்றனர்.பகல் 11 மணி இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்தது ஓ..என்று அலறல் சத்தம் கேட்டது ஆனாலும் எவரும் வரிசையை விட்டு விலகவில்லை.எறிகணைகள் கூவிக் கொண்டு வரவும்.சிலர் நெளிந்து கொடுத்தார்கள் சிலர் இருந்தார்கள்.சிலர் படுத்தார்கள்.ஓடவோ வரிசையை கைவிடவோ இல்லை.உயிரின் விலை நிவாரணப் பொருட்களை விட குறைந்து போயிருந்தது.உயிரா??பசியா??

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி ஒவ்வொரு பக்கமாக போட்டு கொண்டு வந்தால் எப்படி புத்தகத்தை வேண்டி வாசிக்க மனம் வரும் :( நூலைப் பற்றி அறியத் தந்த சயந்தனுக்கு நன்றி
 
  • கருத்துக்கள உறவுகள்

ஊழிக்காலம்.பக்கம்155.காயமடைந்திருந்த பாலகுமார் பதுங்கு குழிஒன்றினுள் கதிரை போட்டு அமர்ந்திருந்தார்.பார்வதியை கண்டவர் வாங்கோ இருங்கோ என்றார்.காயமடைந்த இடது கையை மடக்கி தொங்க விட்டிருந்தார். புலிகளின் பொது நிருவாகங்கள் ஆரம்பித்த பின்னர் தலை தூக்கிய கீழ் மட்ட ஊழல்களால் பாலகுமார் மனமுடைந்து போயிருந்தார்.இருபது வருட காலத்தில் அவர் எந்த பதவியிலும் அமர்ந்ததில்லை.புலிகளின் மூத்த உறுப்பினர் என்பதோடு சரி.அவர் பேசட்டும் என்று பார்வதி மெளனமாக இருந்தாள்.கவலையோடை முகத்தை சுழித்தவர் காது குடுத்து கே்ககேலாது முககுடுக்கேலாத கதையள் .நாயள்.பேயள். தாங்க முடியேல்லை. வெற்றி எண்டது சண்டையிலை எடுக்கிறதில்லை யுத்தத்திலை வெற்றி தோல்வி சகஜம் ஆனால் மக்களை வெண்டிருக்கவேணும்.அதிகாரம் போட்டி எல்லாம் அழியும்.மக்களை காப்பாத்த எடுத்த ஆயுதத்தை மக்களை நோக்கி திருப்புவாங்கள்.நண்பர்களை கூட பார்க்க மனமில்லாமல் போகும்...

முழுப் புத்தகத்தையும் உப்பிடி ஒவ்வொரு பக்கமாகப் போட்டால் நாங்கள் சுகமாய் வாசிப்பமல்லே  :D நன்றி சாத்!

  • கருத்துக்கள உறவுகள்

முழுப் புத்தகத்தையும் உப்பிடி ஒவ்வொரு பக்கமாகப் போட்டால் நாங்கள் சுகமாய் வாசிப்பமல்லே  :D நன்றி சாத்!

 

317 பக்கம் யார் தட்டச்சு செய்யிறதாம்.

பச்சையும் வாழ்த்தும் சொன்னவர்கள் இனி சிவப்பும் பேச்சும் தரப்போகின்றார்கள் .

தமிழ்கவியும் ஓடிவந்தவர்கள் கைகளிலில் துரோகியாகி வதை பட போகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் கடைசி நேரம் நிறைய விஷயம் நடந்திருக்கு .....,

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகத்தில் நிறைய விடயங்கள் இருக்கும்போல...! பரீசுக்குப் போனல் நிறைய சாமான்கள் வாங்க வேண்டும் ..ம்..!

  • கருத்துக்கள உறவுகள்

முழுப் புத்தகத்தையும் உப்பிடி ஒவ்வொரு பக்கமாகப் போட்டால் நாங்கள் சுகமாய் வாசிப்பமல்லே  :D நன்றி சாத்!

 

ஓ அந்த அம்மா வன்னியில் இருந்து கஸ்டப்பட்டு,படாத பாடுபட்டு தப்பி இந்தியா போய் ஒரு புத்தகம் எழுதினால் அதைக் கூட காசு கொடுத்து வேண்டிப் ப்டிக்காமல் ஓசியில் படியுங்கோ <_<

 

ஓ அந்த அம்மா வன்னியில் இருந்து கஸ்டப்பட்டு,படாத பாடுபட்டு தப்பி இந்தியா போய் ஒரு புத்தகம் எழுதினால் அதைக் கூட காசு கொடுத்து வேண்டிப் ப்டிக்காமல் ஓசியில் படியுங்கோ <_<

 

 

 

பகிடிகளுக்கு எல்லாம் ரென்ஷனாகாதீர்கள் ரதியக்கா  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஊழிக்காலம்.பக்கம் 175...என்ன அவல வாழ்க்கை எப்ப முடியப் போகுது என்றாள் சீராளனின் மனைவி. எங்கை முடியிறது இரண்டொருத்தர் அழியவேணும் அப்பதான் முடிவுக்கு வரும் என்றாள் பார்வதி. அவலப்பட்டு ஓடிக்கொண்டிருந்த வேளையிலும் போராட்டத்திற்கு ஆட்சேர்ப்பு தொடர்ந்து நடந்தது.யார் போவார் அதனால் பலவந்தமாக கூடாரங்களிற்குள் புகுந்து பிள்ளைகளை பிடித்துக் கொண்டு போனார்கள்.ஊரிழந்து உறவுகளையிழந்து உடைமைகளை இழந்து ஓடிக்கொண்டிருந்த மக்களிற்கு மற்றொரு பேரிடியாக ஆட் சேர்ப்பும் வந்து விழுந்தது.சனங்கள் யாவராலும் கைவிடப் பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் புத்தகங்களை இணையத்தினூடாக எப்படி வாங்கலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

ஊழிக்காலம் - தமிழ்க்கவி

வேட்டைத் தோப்பு – கருணாகரன்

இனி எனது நாட்களே வரும் – நிலாந்தன்

ரகசியத்தின் நாக்குகள் - நெற்கொழுதாசன்

கொலம்பசின் வரைபடங்கள் - யோ.கர்ணன்

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வி அடைந்த போராட்டத்தை விமர்சிக்கும் முன்னாள் போராளிகள் வரிசையில் தமிழ்க்கவியும் இணைந்திருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களாகவே தமிழகத்தில் தலைவருன் பெயரை கூறத்தடை படத்தை போடத்தடை என்று இருக்கும்பொழுது ஒருவர் அங்கயே இருந்து கொண்டு ஒரு புத்தகத்தை எழுதி நேர்மையாக வெளியிட முடியாது என்பதே எமது கருத்து அப்பிடியே வெளியிட்டாலும் அதில் என்ன வகையான எழுத்துக்கள் இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.....

எங்கே நாடு கடத்தபடுவமோ என்ற அச்சத்தில் விமர்சனங்களை அதிகமாக தூவி எழுதி இருக்கார் போல......

விமர்சனங்களை முன்வைக்கும் போது அந்த போராட்டத்தின் தியாகங்கள் எந்த சூழ்நிலையில் எப்பிடி யாரால் சிலநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன போன்றவற்றையும் கணக்கில் எடுக்க வேண்டும் 30 வருட போராட்டத்தை எழுத்துக்களால் கூறும் போது மக்கள் மத்தியில் எவளவு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதனை ஒரு உண்மையான விடுதலை எழுத்தாளன் சிந்தித்தே எழுதுவான்

உண்மைகள் கசக்கும் .(உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அப்படி நடந்தால் நல்லா விளங்கியிருக்கும் உங்களுக்கு )

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் கசக்கும் .(உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அப்படி நடந்தால் நல்லா விளங்கியிருக்கும் உங்களுக்கு )

 

 

தமிழ்கவிக்கு மட்டும் தான் இப்படி ஒரு வாழ்வு என்று இல்லைத் தானே.

சுனாமி,முள்ளிவாய்கால் இது இரண்டின் பின்பும் ஊரில் உள்ள ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் ஏதோ ஒரு வகையில் உறவுகளை இழந்தவர்களாகத் தானே அந்த மக்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..ஒருவர் நல்லா இருக்கும் போது அவர்களைத் தலையில் தூக்கி வைச்சு கொண்டாடுவதற்கும், அவர் கொஞ்சம் கஸ்ரப்பட்டுட்டார் எண்டதன் பின் அவர்களை திட்டி தீர்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா...

 

எல்லோருக்கும் எல்லாவற்றையும் சொல்ல சந்தர்பங்கள் அமைந்துவிடுவதில்லை .சந்தர்ப்பம் அமைந்தாலும் பலர் ஏன் வில்லங்கம் என்று ஒதுங்கி இருப்பவர்களும் இருக்கின்றார்கள். 

இதில் தூக்கி பிடித்த தூற்றிய என்ற ஒன்றிற்கே இடமில்லை .உண்மையில் நடந்ததை, தான் கண்டதை அவர் சொல்லுகின்றார் .அதை அவர் ஏன் சொல்லகூடாது என்று நினைக்கின்றிர்கள் .

கட்டிப்போட்டம் இனி அடித்தாலும் உதைத்தாலும் புருசனை விட்டுகொடுக்க கூடாது என்பது போலிருக்கு .

 

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய விடயங்கள் துயரமானவை. ஆனாலும், Desperate times call for desperate measures என்று சொல்வார்கள். அவற்றை விவாதித்துப் பயனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் புத்தகங்களை இணையத்தினூடாக எப்படி வாங்கலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

ஊழிக்காலம் - தமிழ்க்கவி

வேட்டைத் தோப்பு – கருணாகரன்

இனி எனது நாட்களே வரும் – நிலாந்தன்

ரகசியத்தின் நாக்குகள் - நெற்கொழுதாசன்

கொலம்பசின் வரைபடங்கள் - யோ.கர்ணன்

 

 

ஒன்லைன் மூலம் வாங்க விருப்பம் என்டால் மருதங்கேணியிடம் கேளுங்கள்  

நிறைய விடயங்கள் துயரமானவை. ஆனாலும், Desperate times call for desperate measures என்று சொல்வார்கள். அவற்றை விவாதித்துப் பயனில்லை.

 

விட்ட பிழையில் இருந்து பாடம் படிக்கலாம்.இனி மேல் அப்படி ஒரு தவறு நிகழாமல் தவிர்க்கலாம்.
 
இறுதி யுத்தத்தின் இறுதி நேரம் வரை அங்கே இருந்த கர்ணன்,நிலாந்தன்,கருண்கரன் சொல்வது பிழை.தற்போது தமிழ்க்கவியையும் இங்கே இருந்து கொண்டு எம்மால் விமர்சிக்கத் தான் முடியும்.அதைத் தவிர எம்மால் என்ன செய்ய முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.