Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியா, ராகுல் ராஜினாமாக்களை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துள்ளது

Featured Replies

140519140534_rahul_gandhi_sonia_gandhi_6

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறியிருந்தனர்.

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாடளவில் வெறும் 44தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திங்களன்று மாலை புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலத்தில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முன்வந்ததாகவும், ஆனால் காங்கிரஸ் செயற்குழு அதை ஏற்றுகொள்ளவில்லை என்றும் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஆஸ்கர் ஃபெர்னாண்டெஸ் தெரிவித்தார்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை பணிவுடன் ஏற்றுகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையில் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுவரும் ஆழமான மாற்றங்களை கவனிக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டதாகவும், வாக்காளர்களின் ஆதரவை பெற ஏன் காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என்பதை உள்ளாய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் இது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் அயராத தன்னலமற்ற கடும் உழைப்பை மீறியும் இந்த தேர்தலின் முடிவுகள் வருத்தத்தையே தருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் இந்த தீர்மானம் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ஜனார்தன் நிவேதி கட்சியின் எல்லா மட்டத்திலும் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

கண்ணியமிக்க வகையிலும் நிதானத்துடனும் அரசாங்கத்தை நடத்தி வந்தமைக்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம் நன்றி தெரிவிப்பதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சியமைக்கும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்கட்சியாக இருந்தாலும் சரி ஜனநாயகம், மதச்சார்பின்மை, உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் சமூக நீதி உள்ளிட்ட கொள்கைகளை பாதுகாக்க காங்கிரஸ் பாடுபடும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140519_soniarahulcwc.shtml

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாடகம்தான் போடுவார் இந்திய நாட்டிலே..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா - மகன் முடிந்து

அம்மா - மகன் தொடங்கியுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

போய்த் தொலையட்டும்... என்று, இருவரின் ராஜினாமாவை காங்கிரஸ் கட்சி கமிட்டி ஏற்றிருந்தால்,
சிலவேளை.... அடுத்த தேர்தலில் ஆவது, காங்கிரஸ் ஆட்சியமைக்க  சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

நேரு குடும்பத்திற்கு அரசியல் வியாபாரத்திற்கு காந்தி வியாபார முத்திரை தேவை, காங்கிரஸ் கட்சியின் இருப்பிற்கு காலி பெருங்காய டப்பா போல நேரு குடும்பம் தேவை. அவர்களை விட்டால் பிரச்சாரம் செய்ய எந்த தலைவர்களுக்கும் ஃபேஸ் வால்யூ இல்லை, பின்னே இம்மாதிரி தொடர் நாடங்கள் பல பார்க்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பம் ஒருமுறைதான் கதவைத் தட்டும்...!  செயற் குழு  கோட்டை விட்டு விட்டது...! :huh:  :)

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில சிறீலங்கா.. இந்தியாவில் தான் இந்த ராஜினாமா நாடகங்கள்.

 

மற்ற எல்லா நாடுகளிலும் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர்கள் பதவி விலகிக் கொண்டே போகிறார்கள்.

 

இந்த இரண்டு நாட்டினதும் போலி ஜனநாயகத்தை உலகம்.. இன்னும் ஜனநாயகம் என்று உச்சரிக்கிறது தான் வேடிக்கையாக உள்ளது. :icon_idea::o

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை  உணர்ந்து

போக  முடிவெடுத்தால்

எதற்கு அனுமதி .....???

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த கொம்பனி, முதலாளிகளை மாற்ற முடியா, வாரிசுகளை அமர்த்தலாம்.

  • தொடங்கியவர்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்; திரும்பப்பெற மறுப்பு!
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், ராஜினாமாவை வாபஸ் பெற மறுத்துவிட்டார்.
1400491864-2892.jpg
நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் படுதோல்வியைச் சந்தித்ததையடுத்து, நிதிஷ்குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று அவர் தனது ராஜினாமா இறுதியானது என்றும், ராஜினாமா செய்ததைத் திரும்பப் பெற இயலாது என்றும் கூறினார்.
 
இதுகுறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மாநிலத் தலைவர் நரைன் சிங் செய்தியாளர்களிடையே கூறுகையில், "நிதிஷ்குமார் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற மறுத்துள்ளதால் அவரே புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்குமாறு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சட்டமன்றக்குழு ஏகமனதாக கோரியுள்ளது" என்றார்.
 
"இது தொடர்பாக இன்று மாலை ஆளுநர் பாட்டீலை கட்சித் தலைவர் சரத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் சந்தித்து முடிவைத் தெரிவிப்பார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 

 

இதனிடையே, "தோல்விக்குப் பொறுப்பேற்று நிதிஷ் குமார் ராஜினாமா செய்தாலும் சட்டசபையில் ஐக்கிய ஜனதாதளத்திற்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. எனவே ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும் 2015 சட்டசபைத் தேர்தலிலும் நிதிஷ் குமாரே கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பார்" என்று சரத் யாதவ் கூறினார்.
 

http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/nitish-kumar-won%E2%80%99t-withdraw-resignation-to-choose-%E2%80%98new-leader%E2%80%99-114051900033_1.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 'ராஜினாமேனியா' தொற்று நோய் வேகமாக பரவி வருகின்றது.

ஆனாலும் இந்ந தொண்டர் ஒரு இரண்டு மணி நேரம் பொறுமை காத்திருக்கலாம் :D

4dqkkryb.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.