Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் வன்முறையான யாழ் பொது நூலகம் எரித்த நாள் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் வன்முறையான யாழ் பொது நூலகம் எரித்த நாள் இன்று. video.png 
[saturday, 2014-05-31 21:47:22]
jaffna-library-news-filephoto-310514-200

யாழ் நுலகம் எரியூட்டப்பட்ட நாள் நினைவுநாள் இன்று.யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் இடம்பெற்றது.இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.

  

நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு,

மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

எரியும் நினைவுகள் 1

 

 

 

எரியும் நினைவுகள் 2

 

 

 

எரியும் நினைவுகள் 3

 

 

 

எரியும் நினைவுகள் 4

 

 
எரியும் நினைவுகள் 5

 

http://www.seithy.com/breifNews.php?newsID=110457&category=TamilNews&language=tamil

 
நன்றி - செய்தியிணையம்

 

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலக எரிப்பு (நினைவுக் கவிதை)

ஏன் செய்தார் இந்த இழிவு தரும் செய்கை தனை
சதிகாரர் எங்களுக்குச் சகுனப் பிழை காட்ட
மூக்கை அறுத்துவிட்டு முழு வியளம் வந்தனரா?
போக்கிரிகள் ஏன் இந்தப் பொல்லாப்பைச் செய்திட்டார்?
தீக்கு இரையாகத் தேசத்தின் செல்வத்தை
ஆக்கியதால் மூடர் அடைந்த நயமென்ன?

ஆங்கிலத்தில் ஆரியத்தில் அருந்தமிழில் சிங்களத்தில்            
பாங்காய் அறிவு தந்து பயன்பட்ட நூல்களெல்லாம்
தீங்கென்ன செய்தன இத் தீயவர்க்குத் தீயிலிட?

அன்னைத் தமிழ்  மண்ணின் அறிவுக்கு அணைபோடும்
அவலை நினைத்து வெறும் உரலை இடித்தனரா?
சூரியனைக் கொள்ளியினாற் சுட்டெரிக்க முயல்கின்ற
காரியத்தை இந்தக் கடைப்பழிகள் ஏன் செய்தார்?
நாசத்தைச் செய்து நம்மை அழித்திடவா
தேசத்தின் சொத்தைச் சிதைத்தார் முழு மூடர்

உள்ளத்தில் உண்மை ஒளி பாய்ச்சம் பேரறிவு
வெள்ளத்தின் மீது வெறுப்புற்ற மூடர்களாய்
மன வழுக்கை நீக்கி மதி கூட்டும் நல்லறிவுக்
குளத்தோடு கோபித்துக் குப்பையை ஏன் போட்டார்கள்

தூசி விழுந்த கண்ணைத் துடைத்து விடமாட்டாமல்
ஊசி கொண்டு குத்தி ஒளி இழந்த பேதையராய்
தம் கண்ணில் தாமே மண் வாரிப் போட்ட இந்த
வம்பர்களைப் பார்த்து வரலாறு சிரிக்கிறது
மானுடமோ தன்றன் மதிப்பைக் குறைத்திட்ட
ஈனப் பிறவிகளை எண்ணிக் குமைகிறது
மண்ணை இழிவுசெய்ய மலம் சொரிந்து மகிழ்ந்திட்ட
பொண்ணையரைப் பார்த்திந்தப் பூமி முறைக்கிறது         -  பெண்மையர் எனவும் வரலாம்
உளங்காட்டும் கீழ்மை உணர்வைப் பறைசெய்த
வளங்காதவாகளுக்காய் வையம் சிரிக்கிறது
மூக்கையறுத்துத் தடிமலுக்குச் சிகிச்சை செய்த
மொக்குத் தனத்தையெண்ணி முழுவுலகும் அழுகிறது

சிரித்தென்ன அழுதென்ன திருவழிந்து போனபின்னர்
உரித்தாய் எமக்கிருந்த ஒப்பற்ற நூல்கள்தமை
அரித்த கறை யான்களுக்கு ஆறறிவா ஓரறிவா
யார்க்கிதனால் லாபமென்று நாய்க்குணத்தோர் கேடு செய்தார்?
அறிவை அழித்தொழிக்க அற்பர்கள் ஏன் பாடுபட்டார்

கடலை அழுக்காக்கக் காறி உமிழ்ந்தது போல்
முடைநாற்றச் சாக்கடையை முல்லைக் கெறிந்ததுபோல்
அம்புலியைக் கையால் அணைக்க முயன்றதுபோல்

அன்னை தமிழை அறிவுச் சுடர் வீசும்
பொன்னை இழிவு செய்யப் புகையடித்துப் பார்த்தாரா?

கோயிற் சிலைக்குக் குத்துகின்ற முள்ளெடுத்துச்
சாத்தி; மகிழ்ந்திட்ட  தரங்கெட்ட செய்கையினால்
யாருக்கு நட்டம்? நாங்கள் விழுதெறிந்த
ஊருக்கா? உயிராம் தமிழுக்கா? இல்லை   
பாருக்கு,  கல்விப் பயனறிந்த யாவருக்கும்.

அன்னை தமிழீழத்தின் அறிவுக் கருவூலத்தில்
சின்ன மதியால் சேறிறைத்த  தீச்செயலை
முழுவுலகும் பார்த்து மூக்கில் விரல் வைக்கிறது!
இப்படியும் ஓர் உணர்வா? இப்படியும் ஓர் பகையா?
யார் இவர்கள்? எக் காட்டு நாய் நரிகள்?
ஏன் இவர்கட்கிந்த இழிபுத்தி-இந்தப்
பாரின் வரலாற்றில் பழி முடிக்க இத்தகைய
கோரச் செயலைக் கொடுமைதனை ஓர் நாளும்
யாரும் புரிந்ததில்லை நாகரிகம் கெட்டதில்லை


பாசிசத்திலூறிப் பழிபுரிந்த ஹிட்லரும் தன்
நாசிப் படைகளுக்கு ஆணையிட்டபோதினிலே
வீசு குண்டை லண்டனுக்கு  மியூசியத்தைத் தாக்காதே
என்றுதான் சொன்னான் ஏன் சொன்னான்?அங்குதான்!
அறிவுக் கருவூலம் அடங்கிக் கிடந்ததன்று

மோடையரோ? இந்தக் கேம கண்ண யோதையரோ
தெற்காசியாவின் சிறந்ததொரு நூலகத்தை
செக்கோ சிவலிங்க மென்றோ அறியாமல்
நக்கி முகர்ந்தும் நலமெதுவும் காணாமல்
கால் தூக்கி நின்று கழிவு செய்த  பேதமையை
மறக்க முயன்றாலும் மனமதனைச் செய்திடுமா?

பாவியர்கள் எங்கள்   படிப்புச் சுரங்கத்தைக்
காவு கொண்ட இந்தக் கயமைத் தனந்தன்னை
நாவு கொண்டு தூற்ற நமக்கேது சொல் உலகில்?
சாவு வந்த பின்னும் தமிழ் மீது பற்றுடையோர்
ஆவி இவர்மீது அழுதழுது சாபமிடும்

செய்வதையும் செய்துவிட்டு பொய்மையிலே ஊறியவர்
கண் தீப் புனல் சொரியும் கலைவாணித் தாயவளாம்
வெண்தாமரையாளை வேதனைக்குள் ஆழ்த்திவிட்டு
புண்தீவிரம் குறையப் புனுகு தடவுகிறார்
தயக்கமெதுவுமின்றித் தமிழை அழித்தவர்கள்
இயக்கம் அமைத்தெமக்காய் என்ன செய்யப் போகின்றார்?
கல்வி தனை மதியாக் கயவர் எமக்காகக்
கல்சேர்த்து நூல் சேர்த்துக் காட்டுகின்றார் பம்மாத்து
ஆடைதனைத் தூக்கி  அவர்கள் வெட்கம் போக்குதற்காய்
முகம் மறைத்து நிற்கின்றார் முழுவுலகும் சிரிக்கிறது.

வார்த்தையினாற் சீறி வசைபாடி நின்றாலும்
ஆர்த் தெழுந்து இந்த அறிவிலிகள் தோற்றோட
போர்த்திறன்கள் காட்டிப் புயலாயடித்தாலும்

கழுதையறியாது கற்பூர வாசனையை
கல்வி அதற்கு வெறும் காகிதம் தான்  தின்று விடும்
அறிவை  அசைபோடும், ஆர்ப்பரித்துக் கூச்சலிடும்.

ஆதலினால் என்றன் அருமை உறவுகளே!
தீதே இயற்கையதாய்ச் செயல்புரிவோரால் உற்ற
வேதனையைத் தூக்கி வீசியெறிந்திடுவோம்.
பாதகர்கள் செய்யும் பழிக்கு மருந்தாக
கல்வியிலே ஊறிக் கரைதேர்ந்து நாமுயர்வோம்
இல்லங்கள் தோறும் இணையில்லா நூல்கள் பல
நாம் சேர்த்து எங்கள் நாட்டிற்காய்வைத்திடுவோம்

காய்ந்து வெடித்த கழித்தரையில் நீர் சேர
ஓய்ந்து விடாது உடன் முகிழ்த்துப் பூச்சொரியும்
ஆம்பர், ஒட்டி. அல்லி, அரவிந்தமாய் மலர்வோம்.
சாம்பரிலே நின்று பீனிக்ஸ் பறவைகளாய்
மீண்டும் எழுவோம் விரைந்துயர்வோம், இஃதுறுதி.

முற்றும்

1.சிங்ஹலயா மோடையா(மடையர்) காம கண்ண யோதையா(சோற்றுத் துருத்திகள்) என்பது சிங்களவர் தமக்கே கூறிக் கொள்ளும் பழமொழி.
2. இது இலங்கையரசின் வெண்தாமரை இயக்கம் பற்றியது

Edited by karu

  • 11 months later...

எரிந்த நூலகம்; அணையாத நினைவுகள்

 

1981-ம் ஆண்டு மே 31-ம் திகதி யாழ். நூலகம் எரிக்கப்பட்டது.

அந்தச் சம்பவம் இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நூலகத்தின் எரிப்பு ஆயுதப் போராட்டம் மேலும் தீவிரமடைவதற்கும் காரணமாகவும் அமைந்தது.
யாழ்ப்பாண நூலகத்தின் எரிப்பு தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாட்டின் மீது நேரடியாக நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
 
நூலகம் எரிக்கப்பட்டபோது யாழ். மாநகரசபையின் ஆணையாளராகவும் நூலகத்தின் பொறுப்பதிகாரியாகவும் இருந்த, தற்போதைய வடக்கு மாகாணசபையின் தற்போதைய அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் பிபிசி தமிழோசையுடன் பகிர்ந்துகொண்ட நினைவலைகளை நேயர்கள் கேட்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூலகத்தில் நேரம்போவதே தெரியாமல் எத்தனையோ நாள் இருந்திருக்கிறேன்.2 ஆண்டுகளுக்கு மன்னர் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு சென்ற பொழுது உள்ளே போவதற்கு கட்டணம் கேட்டார்கள் எங்கள் நூலகத்தை எரித்தது மட்டுமல்லாமல் அதை ஒரு சுற்றுலாத்தலமாகப் பாவித்து வருகிறார்கள். ஏராளமான சிங்களவர்கள் தமழர்களின் வரலாற்றை எரித்த இடத்தை பணம் கொடுத்து ஆர்வத்துடன் பார்க்க வருகிறார்கள். எங்கள்நூலகத்திற்குச் செல்வாற்கு பணம் எதற்கு என்று வாசலில் நின்று படம் எடுத்து விட்டு வந்துவிட்டேன்.அந்த நூலகம் எரிக்கப்பட்டு தமிழர்களின் வராலற்றை எரித்தநாள் இன்று இந்தக் கனல் இன்னும் எங்கள் நெஞ்சங்களில் எரிந்து கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூலகத்தில் நேரம்போவதே தெரியாமல் எத்தனையோ நாள் இருந்திருக்கிறேன்.2 ஆண்டுகளுக்கு மன்னர் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு சென்ற பொழுது உள்ளே போவதற்கு கட்டணம் கேட்டார்கள் எங்கள் நூலகத்தை எரித்தது மட்டுமல்லாமல் அதை ஒரு சுற்றுலாத்தலமாகப் பாவித்து வருகிறார்கள். ஏராளமான சிங்களவர்கள் தமழர்களின் வரலாற்றை எரித்த இடத்தை பணம் கொடுத்து ஆர்வத்துடன் பார்க்க வருகிறார்கள். எங்கள்நூலகத்திற்குச் செல்வாற்கு பணம் எதற்கு என்று வாசலில் நின்று படம் எடுத்து விட்டு வந்துவிட்டேன்.அந்த நூலகம் எரிக்கப்பட்டு தமிழர்களின் வராலற்றை எரித்தநாள் இன்று இந்தக் கனல் இன்னும் எங்கள் நெஞ்சங்களில் எரிந்து கொண்டிருக்கிறது.

இப்படியான சொரிலங்கன் சொறிச்செட்டைகள் பார்க்ககூடாது என்றுதான் தமிழனுக்கு நிம்மதியான காலம் வரும் மட்டும் தாயகம் செல்வதில்லை எனும் முடிவுடன் உள்ளன் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் அடிப்படை உரிமையான கல்வி உரிமை சிங்களத்தால் பறிக்கப்பட்ட நாள். இன்று அதனை.. போதைப் பொருள்.. பாலியல் துஸ்பிரயோகங்கள்.. குழு ஆயுத வன்முறைகள்.. இவற்றை.. மாணவர் மத்தியில் விதைத்து அந்த உரிமையை தமிழினம் எப்போதும் மீளப் பெறக் கூடாது என்ற வகைக்கு செயற்படுகிறது சிங்களம்.

 

இந்த கரி நாளை.. தமிழர் வரலாறு என்றும் சுமக்கும். இதனை மறைக்க சந்திரிக்கா போட்ட திட்டமே வெண்டாமரையும் செங்கல்லும் திட்டம். ஆனாலும்.. வெண்டாமரையால்.. இந்தக் கரி நாளை என்றுமே மறைக்க முடியாது. :icon_idea:


ஆசியாவின் தலைசிறந்த ஒரு நூலகம் அன்று சிங்களத்தால் எரியூட்டப்பட்டது தமிழர்களுக்கு மட்டுமல்ல.. முழு ஆசிய பிராந்தியத்தின் நூலகப் பொக்கிசத்துக்கு கிட்டிய கெடு நாளும் கூட. :icon_idea:

11148770_386615364864407_315432712662561

 

Born 1933! Burn 1981/05/31

Edited by BLUE BIRD

இது வெறும் நூலகசாலை இல்லை எமது மண்ணின் அடையாளம். உள்ளே எரிந்திருந்தாலும் மறுபடியும் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
 
எத்தனை மணிகள்
எத்தனை நாட்கள்
எத்தனை வருடங்கள்
உனக்காக மத்திய கல்லூரி மதில்கூட தாண்டினேன்
உன்னுடன் நான் இருந்த காலம் மறக்கவே முடியாதது.
  • கருத்துக்கள உறவுகள்

எரிந்த யாழ் நூலகத்தின் படத்தை முகப்பிற் போட்டு அதில் எனது கவிதையின் கடைசி வசனத்தின் ஓர் பகுதியையும் போட்டுக் கவிதையுள்ள பக்கத்தையும் லிங்க் செய்த யாழ்கள நிர்வாகத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.


 

Edited by karu

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

2 ஆண்டுகளுக்கு மன்னர் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு சென்ற பொழுது உள்ளே போவதற்கு கட்டணம் கேட்டார்கள் 

2012 டிசம்பரில் போன போது கட்டணம் எதுவும் கேட்கவில்லை. நூலகத்தில் வேலை செய்பவர்களிடம் அவர்களின் செயற்பாடுகள் பற்றி கேட்ட போது தம்மை சிங்கப்பூருக்கு அனுப்பி பயிற்சி தரப்பட்டதாக தெரிவித்தார்கள்.

அருகில் உள்ள சுப்ரமணியம் பூங்காவிற்கு கட்டணம் தேவையாக இருந்தது. இந்த கட்டணம் காரணமாக அங்கு வருபவர்களுக்கு தொல்லை தருபவர்கள் உள்ளே வருவதில்லை. பூங்காவும் சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்க படுகிறது. இவற்றை நிருவகிப்பது யாழ்ப்பாண மாநகரசபை - மத்திய அரசு இவற்றை நேரடியாக நிருவகிப்பது இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.