Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்றுக்கொள்ள இரண்டு பதிவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1.

புலத்தில் சிலர் போரின்போதும் போரின்பின்னும் கள நிலவரங்களைப்பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாது விடுதலையை ஒரு கூச்சல்போல போடுகிறார்கள். அவர்கள் நமக்கு வேண்டிய சக்திகள். ஆதலால் அவர்கள் அனுபவமுள்ளவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எமக்கு ஆதரவான சிங்களத் தோழர்கள் மிகுந்த ஆபத்துக்களின் மத்தியில் போரின்போதும் பின்னும் இனக்கொலை ஆவணங்களை திரட்டி உலகிற்க்குத் தந்துள்ளனர். இத்துடன் கற்றுக்கொள்வதற்க்காக யதீந்திராவின் பதிவையும் தீப செல்னவனின் பதிவையும் இணைக்கிறேன்.

 

2 யதீந்திராவின் பதிவு

 

பிரசன்ன விதேனகேயின் திரைப்படத்தை தமிழ் நாட்டில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தொிவித்தை முன்வைத்து பலரும் பல விதமான பதிவுகளை இட்டு வருகின்றனர். பிரசன்னவின் குறித்த படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த திரைக் கலைஞன் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. புலிகள் தமிழர் அரசியல் ஆட்சி செய்த காலத்தில்தான் (தற்போது அது கூட்டமைப்பின் வசம்) என்னால் அவரை அறியமுடிந்தது. அந்தக் காலத்தில் தெற்கின் சில கலைஞர்கள் வடக்கு நோக்கிச் செல்லும் நிலை இருந்தது. குறிப்பாக புலிகளால் நடத்தப்பட்ட மானுடத்தின் தமிழ் கூடல் நிகழ்வில் பல சிங்கள கலைஞர்கள் பங்கு கொண்டிருக்கின்றனர். குறிப்பாக கொழும்பில் இடம்பெற்ற சிங்கள - தமிழ் ஒன்று கூடல் முற்றிலும் சிங்கள கலைஞர்களாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தக் காலத்தில் புலிகளின் சார்பில் இந் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருந்தவர்தான் தற்போது வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சராக இருக்கும் ஜங்கரநேசன் ஆவார். இந்தக் காலத்தில் பல சிங்கள கலைஞர்களை சந்தித்திருந்த போதும் இன்றுவரை நட்பில் இருப்பர் பிறிதொரு முக்கிய சிங்கள திரைப்படக் கலைஞரான தர்மசிறி பண்டாரநாயக்க ஆவார். பிரசன்ன விதானகேயுடன் தொடர்ந்து தொடர்பை பேண முடியாமல் போய்விட்டது. புலிகளின் சினிமாப் பிாிவான நிதர்சனத்திற்கு அன்று உதவியர்களின் முக்கியமானவர்தான் இந்த பிரசன்ன விதானகே.

இது அரைகுறையாக ஈழம் பற்றி அறிந்து வைத்திருப்போருக்கு தொிந்திருக்க நியாயமில்லை. அவர்கள் எதனைத்தான் ஒழுங்காக அறிந்திருக்கிறார்கள்? கலைஞன் எந்த மொழியில் இருந்தாலும் அவன் கலைஞன்தான். அவனது படைப்பை வெளியிட அனுமதிப்பதே நாகாிகமுள்ள சமுதாயத்தின் பணி. பிரசன்ன விதானகே நிட்சயமாக தமிழ் மக்களுக்கு எதிரான ஒருவரல்ல. இதற்கும் மேல், ஒரு படைப்பை வெறுமனே இனவாத அணுகுமுறையில் பார்க்க முடியாது என்பதே எனது அபிப்பிராயம். எனவே பிரசன்னவின் திரைப்படத்தை தமிழ் நாட்டில் திரையிட முடியாத சூழல் இருக்கிறதெனின், அது தமிழ் நாட்டின் முற்போக்காளர்கள் அறிவாளிகள் என்றெல்லாம் தங்களை சொல்லிக் கொள்வோர் அனைவரதும் தோல்வியாகும். எனவே இதனை சமரசத்திற்கு அப்பாற்பட்டு எதிர்க்க வேண்டியதே உண்மையான கலைஞர்கள், எழுத்தாளர்களின் பணி. அதைவிடுத்து, நாங்கள் எதிர்க்கும் தமிழ் தேசியவாதிகள் பக்கமாகவும் இல்லை, அதே வேளை ஆதாித்தல் என்னும் போில் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துவோர் பக்கமாகவும் இல்லை, என்பதான சப்பைக்கட்டு வார்த்தை ஜாலங்களை நிறுத்துக்கள்.இப்படி சொல்லுவோர் அனைவரும் தங்களின் போலித்தனத்தை அம்பலப்படுத்துகின்றனர் என்பதே உண்மை. முதலில் சொல்லுங்கள் ஜயா - தமிழ் தேசியம் என்றால் என்ன? இந்த இடத்தில் முன்னர் படித்த ஜோர்ஜ் ஓவலின் கூற்றொன்றுதான் நினைவுக்கு வருகிறது - ஒரு கருத்து எவ்வளவுதான் முட்டாள்தனமானதாக இருந்தாலும் அதனை சொல்லுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமா, இல்லையா? இப்படிக் கேட்டால் அனைவரது பதிலும் ஆம் என்பதாக இருக்கும் - அதுவே ஸ்டாலின் பற்றியதென்றால் அனைவரது பதிலும் இல்லை என்றாகும். இப்போது தமிழர் நிலையும் இதுதான். எவரும் இலங்கை அரசியலை வைத்து எதனையும் பேசவிடக் கூடாது. குறிப்பாக தமிழர் பிரச்சனை ப்ற்றி. அவ்வாறு பேசினால் அவர் மகிந்தவின் ஆள்- கோத்தாவின் ஆள் - உண்மையில் அவர்களுக்கு சேவகம் செய்யும் அனைவரும் இன்று தமிழ் தேசியம் என்று ஏதோ பேசுகிறார்களே - அவர்கள்தான் இந்த ஆட்சியை பலப்படுத்திக் கொண்டிருப்பவர்கள். -jathindra-

 

2 தீபச் செல்வனின் பதிவு.

 

இனப்படுகொலை மறக்கக்கூடிய காயமல்ல

தமிழகத்தில் திரைப்படத் திரையிடல் நிகழ்வின்போது சிலர் பிரசன்னாவிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? தனி ஈழம்தான் தமிழர்களுக்கு தீர்வு என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா என்ற கேள்விகளே அங்கு எழுப்பட்டன. பிரசன்ன விதானகே வன்னிக்கு வரும்போது ஒரு பொதுவெளியில் வைத்து இத்தகைய கேள்விகளை யாரும் அவரிடம் கேட்கவில்லை. 

அவர் வன்னிக்கு வந்து தன் திரைப்படபங்களை திரையிட்டுக் காட்டினார். பிரசன்ன சிறந்த சிங்கள இயக்குனர் மட்டுமல்ல. அவர் உலகத்தரமான இயக்குனர். அவரது நோக்கம் திரைப்படத்தை வணிகமாக்குவதல்ல. அதை அவரது திரைப்படத்தை பார்க்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும். தன் திரைப்படங்களின் மூலம் இனப்பிரச்சினையை அவர் நுட்பமாக பேசுகிறார்.

பிரசன்ன விதானகே ஒரு சிங்களவர் என்ற காரணத்திற்காக அவர்மீது கண்மூடித்தனமாக விமர்சிக்கும் ஒரு சிலரது விமர்சனங்களை வைத்து சிலர் தமிழ் Nதிசயத்தின்மீது சேறடிக்க முனைகின்றனர். அடிப்படை புரிதலற்ற தமிழ் தேசியவாதிகள் ஒரு சிலர் அந்தப் படத்தை எதிர்ப்பதை வைத்து அதை தமிழ் தேசியத்தின்மீது அவதூறுகளை ஏற்படுத்துவது அறிவிலித்தனமானது. தமிழ் தேசியம் சார்ந்து இயங்கும் பலர் இந்த திரைப்படம் மிகவும் சரியாக எடுக்கப்பட்ட நல்ல திரைப்படம் என்றே தமது கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.

முதலில் ஒரு விடயம் நாம் தெளிவாக இருக்க வேண்டும். பிரசன்ன விதானகேயின் திரைப்படத்தை விமர்சிக்க எல்லாருக்கும் உரிமையுண்டு. ஒவ்வொருவரது விமர்சனங்களும் ஒவ்வொரு விதமாக அமையும். அது அவரவர் பார்வையை அணுகுமுறையையும் பொறுத்தது. பிரசன்னா இந்த திரைப்படத்தின் ஊடாக சொல்லும் செய்திக்கு எதிரானவர்கள் பிரசன்னவுக்கு அருகில் நிற்கிறார்கள் என்பதற்காக இந்தப் படத்தை எதிர்ப்பதும் அறிவிலித்தனமானது.

அத்தகைய ஈழ எதிர்ப்பாளர்கள் பிரசன்னாவை தமிழ் தேசியம் சார்ந்தோர் எதிர்க்க வேண்டும் என்பதற்காவும் தங்கள் நலன்களை சாதிப்பதற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள். இனப்படுகொலைக்கும் எதிராக குரல் கொடுக்காமல் ஈழத்தில் நடக்கும் அநீதிகளை மூடிமறைத்துச் செயல்படும் இச் சிலர் பிரசன்னவை ஆதரிப்பது விநோதமானது. இவர்கள் குறித்து பிரசன்ன அறியாதிருக்கக்கூடும்.

ஆனால் பிரசன்னாவுக்கு எங்கள் போராட்டம் குறித்து சரியான புரிதல் இருக்கிறது. எங்கள் போராட்டம் நியாயமானது. சரியானது என்பதனாலேயே அன்று வன்னிக்கு வந்தார். அதற்கான தன் பங்களிப்பாகவே அவர் சிங்கள தமிழ் - முரண்பாடுகள் குறித்து திரைப்படம் எடுக்கின்றார். அவரிடம் எழுப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை அவர் இயக்கிய திரைப்படத்தில் இருந்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தன் திரைமொழியின் ஊடாக சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார். 

அவர் நேரடியாக சொல்வதை விடவும் அவரது திரைமொழி அழுத்தமானது. இனப்படுகொலை செய்த சிங்கள இராணுவமும் சிங்கள அரசும் ஈழத் தமிழர் உரிமையை மறுத்த சிங்களப் பேரினவாதிகளும்தான் எங்கள் எதிரிகள் என்பதில் போராளிகள் உறுதியோடு இருந்தனர். சிங்கள முற்போக்கு – நட்புசக்திகள் எங்களுக்காக குரல் கொடுப்பதுதான் எங்கள் போராட்ட நியாயத்தை சிங்கள மக்களுக்கு புரிய வைக்கும் என நம்பினார்கள்.

தன் சகோதரர்களை கொலை செய்த ஒருவனுடன் தமிழ் பெண்ணொருத்தி இணைந்து வாழ முடியாது என்பதை இந்தப் படத்தில் பிரசன்னா சொல்கிறார் எனில் அதுவே இன்றைய இலங்கை - ஈழ யதார்த்தமாக இருக்கிறது. அதுவே தமிழ் - சிங்கள முரண்பாடாக இருக்கிறது. இலங்கையில் இன நல்லிணக்கம் காணப்படுகிறது என்ற இலங்கை அரசின் பிரசாரத்தை இந்தப் படம் கேள்விக்குள்ளாக்கிறது. ஒரே நாடு ஒரே மக்கள் என்ற வெற்றுக்கோசத்தை நிராகரிக்கிறது.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறுகிற உலகத்தை நோக்கி இன நல்லிணக்கம் ஏற்பட சாத்தியம் இல்லை என்பதை இந்தப் படம் சொல்லுகிறது. இந்த விடயத்தை சிங்கள முற்போக்குதரப்பில் இருந்து சொல்லுவது மிகவும் முக்கிமானது. போர் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல, போரில் மக்கள் கொல்லப்படவில்லை. இராணுவம் எவரையும் கற்பழிக்கவில்லை என்று சிங்கள அரசு பொய் பிரசாரத்தை திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கையில் இந்தப் படமோ ஒரு கதையின் ஊடாக போரில் என்ன நடந்தது என்பதை சொல்கிறது.

இன்றைய காலத்தின் முக்கிய பிரச்சினை இது. இன்று சிங்கள இராணுவத்தினர் பலர் தமிழ் பெண்களை திருமணம் செய்கின்றனர். இன அழிப்புச் செய்யம் நோக்கில் இனக் கலப்புச் செய்யும் நோக்கில் இராணுவமும் அரசம் திட்டமிட்டுச் செய்கின்றது. இந்த சூழலிலேயே இவ்வாறானதொரு படத்தை பிரசன்னா இயக்கியுள்ளார். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சிங்கள இராணுவத்துடன் தமிழ் பெண்களை திருமணம் செய்து வைப்பதன் மூலம் எல்லா விடயங்களையும் மறைக்கவும் இல்லாமல் செய்யவும் முடியுமென நினைக்கிறது.

ஒன்று தமிழர்கள் தனிநாடு கோரமாட்டார்கள் எனவும் இனப்படுகொலை போர்க்குற்றம் குறித்து கே;ளவி எழுப்ப மாட்டார்கள் எனவும் அதனால் சர்வதேச அழுத்தங்கள் எழாது எனவும் நினைக்கின்றது. இதுவெல்லாம் உண்மையல்ல. இதுவெல்லாம் சாத்தியமல்ல என்பதை பிரசன்ன இந்தப் படத்தில் உணர்த்த முனைகிறார் என்றே படுகிறது. அந்தளவுக்கு கொடியதொரு இனப்படுகொலையை சிங்கள அரசு இழைத்துள்ளது என்பதை பிரசன்ன விதானகே ஏற்றுக்கொள்கிறார். தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ முடியாது என்பதை காட்டுகிறார். இதை சிங்களத் தரப்பிலிருந்து சுட்டிக்காட்டுவது முக்கியமானது.

தமிழ் இனப்படுகொலை குறித்த போர்க்குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்திய முக்கியமானவர் பாஷன அபேயவர்த்தன. அதனால் இன்று அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஈழ இனப்படுகொலைப் போருக்கு எதிராக குரல் கொடுத்த கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். சிங்கள முற்போக்குச் சக்திகள் தேவை என்பதில் ஈழத் தமிழர்தரப்பு உறுதியாக இருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக குறிப்பிடத்தக்கவர்களே எமக்காக குரல் கொடுத்தனர்.

பிரசன்ன விதானகேயிற்கு இருக்கும் குற்ற உணர்ச்சி நான் காணும் சிங்கள சகோதரர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தும் அதை குற்ற உணர்வின்றி மறைக்கிறார்கள். எங்களை மறைக்கவும் மறக்கவும் நிர்பந்திக்கிறார்கள். அவர்கள் பயங்கரவாதத்தை தோற்கடித்த யுத்தம் என்கிறார்கள். இந்த நாடு முழுவதும் தங்களுக்குச் சொந்தம் என்கிறார்கள். கொல்லப் பட்டவர்களுக்ககு நீதி வேண்டும் என்றோ, காணாமல் போனவர்கள் திரும்ப வேண்டு மொன்றோ நினைக்கவில்லை.

எங்கள் காயங்களைக் குறித்துப் பேச அவர்கள் தயார் இல்லை. முழுக்க முழுக்க யுத்த வெற்றியின் மமதையில் உள்ளனர். நடந்தது நடந்துவிட்டது. முடிந்தது முடியட்டும் இனி இணக்கமாக வாழுவோம் என்கிறார்கள். திட்டமிட்டு அது நடத்தப்பட்டபோது அதை எப்படி மறப்பது? ஈழ மக்களுக்கு எதிரான யுத்தம் இனப்படுகொலை யுத்தம், அது மறக்கவோ, மன்னிக்கவோ முடியாத காயம்.

எனது கொழும்பு கவிதை எதிர்பார்த்ததைத்தான் பிரசன்னவின் திரைப்படமும் எதிர்பார்க்கிறது. எனது அந்தக் கவிதை சொல்ல வருவதைத்தான் பிரசன்னவும் சொல்ல வருகிறார். அது முக்கியமான பிரச்சினை. இந்தத் திரைப்படம் சிங்கள மக்களிடம் எடுத்துச்செல்லப்பட வேண்டும். நீங்கள் ஏற்படுத்தியது மறந்து வாழக்கூடிய காயங்கள் இல்லை என்பதை அவர்கள் உணரவேண்டும். அது இணக்கத்தை ஏற்படுத்த முடியாத காயம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்களும் நாங்களும் சேர்ந்து வாழ முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதை நாங்கள் சொல்லும்போது பிரிவினைவாதம் - பயங்கரவாதம் என்கிறார்கள். பிரசன்னா போன்றவர்களையும் சிங்கள அரசும் சிங்களப் பேரினவாதிகளும் சிங்களப் புலிகள் என்றே கூறுகிறார்கள். இவ்வாறான நெருக்கடிகளின் மத்தியில் தமிழர்களின் போராட்டத்தை – பிரச்சினையை அழுத்தமாக எடுத்துரைக்கும் இந்த திரைப்படம் குறித்து நாம் நமது விமர்சனங்களை உரிய அணுகுமுறையோடு முன்வைப்பதே அறமும் அவசியமுமாகும்.

- கவிஞர் தீபச்செல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரசன்னவின் குறித்த படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த திரைக் கலைஞன் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

ஹொலிவூட்டில் கேட்டால் இவரைத் தெரியுமா? இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது என்பது அதிகப்படி. :D

DEAR ISAI

Do you know anything about world cinema? Is there any world class directors in Hollywood? Grow man grow.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யதீந்திராவின் மதிப்பீடு சரியானது. ஹொலிவூட் பிரபல்யத்தை வைத்து ஒரு திரைப்பட கலைஞனின் சர்வதேச அங்கீகாரத்தை நிர்ணயிக்கிறது அபத்தம்.. சந்வதேச திரைபட ஆர்வலர்கள் பிரசன்ன விதானகேயை அறிவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

DEAR ISAI

Do you know anything about world cinema? Is there any world class directors in Hollywood? Grow man grow.

இதப்பாருங்கப்பா கொடுமையை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹொலிவூட்டில் கேட்டால் இவரைத் தெரியுமா? இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது என்பது அதிகப்படி. :D

 

ஹொலிவூட் அமேரிக்கா எகாதிபத்தியத்தின் கைப்பொம்மை .....ஆகவே புரட்சிகர முற்போக்குசிந்தனையாளர் பிரசன்னாவை அவர்களுக்கு தெரியாது......:D

இணைப்புக்கு நன்றி poet .

  • கருத்துக்கள உறவுகள்

யதீந்திராவின் மதிப்பீடு சரியானது. ஹொலிவூட் பிரபல்யத்தை வைத்து ஒரு திரைப்பட கலைஞனின் சர்வதேச அங்கீகாரத்தை நிர்ணயிக்கிறது அபத்தம்.. சந்வதேச திரைபட ஆர்வலர்கள் பிரசன்ன விதானகேயை அறிவார்கள்.

சரி ஹொலிவுடை விடுங்கள். ஜப்பான், ரஷ்ய, ஈரான் மக்களிடம் கேட்டால்.. 'அடடே.. நம்ம பிரசன்ன..' என்று அடையாளம் கண்டுபிடித்து விடுவார்களா?? நீங்கள் குறிப்பிடும் அந்த சர்வதேச ஆர்வலர்கள் யார்?

அப்படி சர்வதேச தரம் வாய்ந்த படைப்பாளி எதுக்கு சென்னையில் போய் படத்தைப் போட்டுக் காட்டுகிறார்?? :D

சீமானின் படங்களை பார்த்து தான் ஒபாமா/கில்லரி எல்லாம் திருந்தினார்களோ... :) (சும்மா ஒரு விளையாட்டுக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் பற்றி.. அந்த அரங்கில் அதனை பார்வை இட்டவர்கள் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையிலும் வரும் விமர்சனங்களின் அடிப்படையிலும் பார்க்கும் போது.. மேற்படி படத்தில் சர்ச்சைக்குரிய விடயங்கள் நாசூக்காக புகுத்தப்பட்டு.. பருமட்டாக... தமிழ் மக்களும் சிங்கள மக்களும் அந்நியோன்னியமாக திருமணம் பந்தம் வரை சென்று வாழ முடிகிறது.. என்ற ஒரு தோற்றப்பாட்டை காட்டும்.. நோக்கத்தோடும்.. பாலியல் வன்புணர்வை ஆயுதமாக பாவித்து தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த சிங்களப் படைகளை.. சாதாரண அணுகுமுறையின் கீழ் மன்னிக்கக் கேட்பது போலவும்... தான்.. இந்தப் படம்  உள்ளது. அதாவது நடந்தது நடந்து விட்டது.. எனி நெகிழ்ந்து போங்கள் என்பது தான் சொல்லப்படுகிறது.

 

இங்கு வெளிநாடுகளுக்கு  பல தசாப்தங்கள் முதல்.. அகதியாக வந்து செற்றிலானவர்கள் இன்னும் பழைய நட்பு வட்டங்களின் தொடர்புகளோடு இருந்து கொண்டு.. மற்றவர்களுக்கு போதிப்பது சரியாகத் தெரியவில்லை. 

 

போராட்ட உச்சக் காலம் வரை அதுவும் தென்பகுதியில் இருந்தும் கூட எமது போராட்ட விடயங்களை கொண்டு சென்றவர்களுக்கு களப் பிரஞ்ஞை பற்றி குறிப்பாக சிங்கள திரை உலகம் பற்றி.. கூடவே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. :icon_idea:

 

(இந்த விடயத்துக்கு இன்னும் எங்கெங்கெல்லாம் திரி திறக்கப் போறாய்ங்களோ.) :D

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன்.. இந்தளவுக்கு நீட்டி முழக்கிறார்..

 

அவரிடம்.. ஒரு கேள்வி.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கொள்கைகளுக்கு எதிராக.. ஒரு படம் எடுக்கப்பட்டு அது சிங்கள மக்களிடம் காட்டப்பட அனுமதிக்கப்படுமா..????????!

 

சிங்களவர்களாக இருந்து கொண்டும்.. தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற பலருக்கு சிங்கள மக்கள் அளித்துள்ள கெளரவமும்.. மதிப்பும் என்ன..??????!

 

இந்தப் படம் சிங்கள பேரினவாத தமிழினப்படுகொலை அரசின்.. தடையை மீறி ஓடுகிறது என்றால்.. அது ஒன்றே போதும்.. இந்தப் படத்தின் மூலம்.. அதன் மென் இலக்கு ஒன்று எட்டப்படுகிறது என்பது..!!!!!!!!!!! இதனை தீபச் செல்வன் தனது அதி உச்ச அறிவால் விளக்கிக் கொள்வாரா..??!!! (எல்லாரையும் அறிவிலி என்றார்.. அதுதான்.) :icon_idea::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதைப்பற்றிப் பேசுகிறோம் என்பதை அறிந்துகொண்டு சமப்ந்தமுள்ள கருத்துக்களை மட்டும் எழுதுங்கள் நண்பர்களே. 

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள யதார்த்தம் பற்றியும் போராட்டம் பறியும் போராட்டத்தின் நண்பர்கள் பற்றியும் பட்டினி கிடந்து கற்றுக்கொண்டவர் தீபச்செல்வன். தீபச்செல்வனையும் யதீந்திராவையும் கேழ்வி கேட்ப்பதற்க்கு கள யதார்தம் கொஞ்சமாவது தெரிந்திருக்கவேன்டும். பேசும் விடயம்பற்றி கொஞ்சமாவது தேடல் இருக்க வேண்டும்.  சும்மா ஈரான் கருணரட்ணா என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைவளர்பது வேண்டாமே.

இலங்கையில் இந்த திரைப்படம் திரையிட இன்னும் அனுமதி இல்லை .

 

உலக சினிமா பற்றி அறிந்தவர்களுக்கு பிரசன்னாவை நன்கு தெரியும் .(உலக சினிமா என்றால் கோலிவுட் இல்லை தமிழ் சினிமா உலக சினிமாவை எட்டிப்பார்க்க முதல் சிங்கள சினிமா எட்டிப்பார்த்துவிட்டது )

(பலர் தெரியாத விடயங்களில் எல்லாம் மூக்கை நீட்டி ஏன் மூக்குடைபடுகின்றார்கள் என்று விளங்கவில்லை )

  • கருத்துக்கள உறவுகள்

அ..ஆ..உ.. என்றால் தீபச்செல்வன் தான் கிடைக்கிறார் இப்ப சிலருக்கு.தீபச்செல்வன் முள்ளிவாய்க்கால் இடைவெளியில் முளைத்த காளான். அவர்ஒன்றும் தமிழீழ வரலாறாசிரியர் கிடையாது. இவரை போலவே நிறைய பேர் பட்டினி கிடந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லம் களம் அறிந்த விற்பன்னர்கள் கிடையாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நற்றாமரைக் கயத்தில்

நல் அன்னம் சேர்ந்தாற்போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்

காக்கை உவக்கும் பிணம்.

 

கயம்- குளம்


 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இது பகுதி அளவு என்றாலும் ஜனநாயக உலகம். சர்வாதிகாரத்துக்கு மக்கள் ஆதரவு கிடையாது. அரசவையில்.. கவிபாடி.. பொற்காசும்.. வெட்டிப் புகழும்.. அரசவை ஆதரவும்.. பெறும் காலம் மலையேறிப் போய்விட்டது. இது மக்கள் தங்களை நோக்கி கருத்துச் சொல்வோரிடம் கேள்வி கேட்கும்.. விளக்கம் கேட்கும் அளவுக்கு அறிவு மயப்பட்ட 21ம் நூற்றாண்டுக் காலம். இதனை சிலர் மறந்துவிட்டு.. இன்னும் 17,18 19 அல்லது 20ம் நூற்றாண்டில் வாழ்கிறார்கள்..!

 

தீபச் செல்வன் மட்டுமல்ல.. எவர் கருத்துச் சொன்னாலும் மக்கள் கேள்வியும் விளக்கமும் கோர உரித்துடையவர்கள். அதற்கான உரிமையை மக்களிடம் இருந்து எவரும் எக்காரணம் காட்டியும் பறிக்க முடியாது. அப்படி கேள்வி கேட்கும் மக்களை.. முட்டாள்.. அறிவிலிகள்.. என்று நினைப்பவர்கள் தான் தம்மை தாமே முட்டாளாக்கிக் கொள்கிறார்கள். :icon_idea:

Edited by nedukkalapoovan

நெடுக்கருக்கு ஒரு பச்சை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள யதார்த்தம் பற்றியும் போராட்டம் பறியும் போராட்டத்தின் நண்பர்கள் பற்றியும் பட்டினி கிடந்து கற்றுக்கொண்டவர் தீபச்செல்வன். தீபச்செல்வனையும் யதீந்திராவையும் கேழ்வி கேட்ப்பதற்க்கு கள யதார்தம் கொஞ்சமாவது தெரிந்திருக்கவேன்டும். பேசும் விடயம்பற்றி கொஞ்சமாவது தேடல் இருக்க வேண்டும்.  சும்மா ஈரான் கருணரட்ணா என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைவளர்பது வேண்டாமே.

"விதானகே தமிழ் மொழி தெரியாதவர்;தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி "பட்டினி கிடந்து கற்றுக்கொள்ளாதவர்";கள யதார்த்தம் கொஞ்சமும் தெரியாதவர்;தமிழர் போராட்டம் பற்றி கொஞ்சத் தேடலும் இல்லாதவர்."

இதே சிந்தனையைத்தான்,இதே கருத்தை வைத்துத்தான் அவர்கள் பேசினார்கள்;அதை விழுங்கி விட்டு ஜெயபாலனும் அப்படியே பேசினால் எப்படி?

ஒன்றைச் சொல்வதற்கு இரண்டு பிரிவுவாதம் ஏன்?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.