Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணி கோத்தாபே - விக்டர் ஐவன்

Featured Replies

6fabeebf57a31d7fcb8c80ffa6f11c39_L.jpg

கோத்தாபே ராஜபக்ஷ என்றொருவர் இலங்கை அரசியலினுள் இணைந்தது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்தாகும். அவர் இராணுவ சேவையிலிருந்து விலகிய பின்னர் ஒன்றரை தசாப்த காலம் அமெரிக்காவில்தான் வாழ்ந்து வந்தார். அவர் பிரபல அல்லது பலம் பொருந்திய ஒருவராக அறியப்படுவது தனது சகோதரர் ஜனாதிபதியாக ஆகியதன் பின் இந்நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னணியிலாகும். அப்போது அவருக்கு மிகவும் அதிகாரமிக்க  பதவியாக கருதப்படக்கூடிய பாதுகாப்புச் செயலாளர் என்ற அந்தஸ்தும்பதவியும் கிடைக்கப் பெற்றதோடு அதனைத் தொடர்ந்து ஆரம்பித்த நான்காவது ஈழப்போரின் பாதுகாப்பு படைக்கான இணைப்பாளராகவும் அவரே நியமிக்கப்பட்டார்.

 

மேலும் அவர் தனக்கிருந்த ஆபத்துக்களைக் கூட பொருட்படுத்தாமல் யுத்தத்தை தர்க்கரீதியானதொரு முடிவை நோக்கி கொண்டு செல்வதில் மிகப் பெரிய பணியொன்றை செய்தார். முப்படையினருக்கு அபிமானத்தையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக செயற்படுத்தப்பட்ட பாரிய பிரசார நடவடிக்கையின் பின்னால் பிரதானமாக  தொழிற்பட்டவர் இவரோயாகும். யுத்த வெற்றியானது அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தையும் வீர வணக்கத்தையும் கொண்டுவந்து கொடுத்தது. யுத்தத்தினால் உருவாக்கப்பட்ட முப்பெரும் வீரர்களில் ஒருவராக அவர் ஆக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் அரச ஊழியர் என்ற வரையறைக்குள் இருந்த போதிலும் ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் நின்று அதிகூடிய அதிகாரங்களைப் பெற்ற ஒருவராகவும் அனைத்து கெபினட் அமைச்சர்களையும் விட உயர்ந்த அந்தஸ்த்துகளைக் கொண்டவராக மாறினார்.

 

ஜெனரல் பொன்சேகா நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டதிலிருந்து நாட்டினுடைய பாதுகாப்புச் சேவைகளுடன் சம்பந்தபட்ட பலம் மிக்க மனிதராக மாற்றமடைகின்றார். முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபருக்கும் அவருக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி சாதாரணமானதன்று. வானத்திற்கு பூமி போன்று பாரிய இடைவெளியாக காணப்பட்டது. ஜனாதிபதியைப் போன்று அவரது சகோதரர்களான பசில்,சமல் என்போரை அரசியலில் அனுபவமுள்ளவர்களாக அரசியல் ரீதியாக பதப்படுத்தப்பட்டவர்களாக கருத முடியுமாயினும் கோதாபே ராஜபக்ஷவை அரசியல் பிராணியாக பார்க்க முடியாது. அவர் (மிலிடரி) இராணுவப் பிராணி மாத்திரமே ஆவார். அனைத்து விடயங்களையும் இராணுவ நோக்கிலேயே பார்ப்பதற்கு முயற்சி செய்தார்.

 

கலகங்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்......

 

யுத்தத்தை முடித்த பின்னர் தோல்வியைத் தழுவியவர்கள் என்ற நிலைக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மக்களை பராமரிக்கும் பொறுப்பையும் யுத்தத்தின் போது மாவீரன் என்ற நிலையில் இருந்த கோதாபேயிடமே ஒப்படைத்தனர். கோதாபேயின் மிலிடரி நிழலானது படிப்படியாக வடக்கு மக்கள் மீது மட்டுமல்லாது முழு நாட்டின் மீதும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய  நிலையை  தோற்றுவித்துள்ளது எனக்கூற முடியும்.

 

நாட்டினுடைய உள்நாட்டு கலகம் ஒன்றை அடக்கியதன் பிறகு தோல்வியைத் தழுவிய கலகக்காரர்கள் மற்றும் அவர்களின் மக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை வெற்றி பெற்ற பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பதில்லை. இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டமாகும்.

 

71வது கலகத்தை தோற்கடித்த பின்னர் சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட சிறைக்கைதிகள்18000 பேரையும் கண்காணிக்கும் பொறுப்பை சிரிமா பண்டாரநாயக்க அரசாங்கம் அக்கலகக்காரர்களை தோற்கடித்த பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கவில்லை. பதிலாக அவர்கள் அனைவரையும் பராமரிக்கும் பொறுப்பை சிறைச்சாலைகள் திணைக்களத்திடமே ஒப்படைத்தார்.  சாதாரணமாக பாதுகாப்பு படையை அவர்களது முகாம்களிலிருந்து வெளியே கொண்டு வரப்படுவது யுத்த சூழ்நிலையின் போது அல்லது விஷேட அனர்த்தங்கள் நிகழும் போதே ஆகும். யுத்த சூழ்நிலை முடிந்த மறுகணமே சிவில் நிர்வாகத்திற்கு இடமளிக்கும் வகையில் யுத்த கால சட்டங்களை நீக்கி பாதுகாப்புப் படையை மீண்டும் அவர்களின் தங்குமிடங்களுக்கு அனுப்ப வேண்டும். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டமாகும்.

 

L.T.T.E யை தோல்வியடையச் செய்த நிகழ்வை நாட்டினுள்ளே நடந்த முதலாவது சந்தர்ப்பமாக அல்லாது மூன்றாவது நிகழ்வாகவே பார்க்க வேண்டும். (நடந்து முடிந்த J.V.P யின் இரு கலகங்கள்) அப்போது J.V.P கலகத்திற்கு சார்பற்ற தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் மத்தியிலும் கூட பாதுகாப்புப் படை அக்கலகத்தை அடக்கிய முறை குறித்து  கடுமையான விமர்சனமும் எதிர்ப்பும் காணப்பட்டது என்பதை ஜனாதிபதி பிரேமதாஸ அறிந்து கொண்டார். எனவேதான் கலகத்தை முடிவுக்கு கொண்டு வந்த உடனே நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக இராணுவ முகாம்களை அகற்றிவிட்டு பாதுகாப்பு படையினரை அவர்களது தங்குமிடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கின்ற கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தியது அதனாலேயே ஆகும்.

 

அந்த நல்வழிமுறையே வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கும் பொருந்திச் செல்கிறது. ஆனால் அது கடந்த காலங்களைப் போன்று வடக்கு தமிழ் போராட்டத்தை தோல்வியடையச் செய்த பின் நடைமுறைக்கு வராமல் இருந்தமைக்கு கோத்தாபயே காரணமாகும். அவ்வாறு நிகழக் காரணம் அவருக்கு இராணுவ (மிலிடரி) பார்வையைத் தவிர அரசியல் பார்வை இருக்கவில்லை என்பதாக இருக்கலாம். சிலநேரம் கோத்தாபே பாதுகாப்பு செயலாளர் பதவியில் இல்லாமலிருந்திருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் சிறிமா பண்டாரநாயக, ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ போன்றோர் நடைமுறைப்படுத்திய அதே கொள்ளையை நடைமுறைப்படுத்தி இருப்பார். யுத்தத்தின் போது பாரிய பங்களிப்பொன்றைச் செய்து யுத்தத்தை வெற்றிக்கொண்டதால் கோத்தாபேயின் எந்த விவகாரங்களிலும் தான் தலையிடாது அவரின் விடயங்களை அவரின் விருப்பப்படி செய்து கொள்வதற்கு இடமளிக்கும்  கொள்ளையைத்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரன் கோத்தாபே விடயத்தில் பின்பற்றினார். இக்கொள்கைதான் பாதுகாப்பு செயளாலருக்கு  யாருடைய கட்டுப்பாட்டுக்கும் உட்படாத அதிகூடிய அதிகாரங்கள் கொடுக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது எனக் கூறலாம். கோத்தாபேக்கு தனது சகோதரனை மீறி செயற்படுவதற்கான தேவை இல்லாதிருந்தபோதிலும் அரசியல் விவகாரங்களை இராணுவக் கோணத்தில் பார்த்து செயற்படுவதன் காரணமாக அவர் தற்போது தனது சகோதரனினது மட்டுமன்றி அவரின் அரசாங்கத்தினுடைய அரசியல் புதைகுழியை வெட்டிக் கொண்டிருக்கின்ற நிலைக்கு ஆளாகியுள்ளார் எனக் கூறக்கூடியதாக உள்ளது.

 

இறந்தோரை நினைவு கூறல்

 

71வது கலகத்தின் போது இறந்தவர்களினது பெற்றோர்கள்,பிள்ளைகள் அவர்களை நினைவுகூர்ந்தனர். இரண்டாவது கலகத்தின் போதும் அவ்வாறே செய்தனர். இறந்தவர்கள் செய்தவற்றின் சரி பிழை எப்படிப்போயினும் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் இருக்கின்றது. ஆனால் கோத்தாபே ராஜபக்ஷ இதற்கு முன்னர் யாருமே செய்யாத வகையில் வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு தமது இறந்துபோனவர்களை நினைவுகூரும் உரிமையைக் கூட ஏற்றுக்கொள்ளாமைக்கு அவருக்குள்ளே அரசியல் இதயமன்று இராணுவ இதயமே காணப்படுகின்றது என்பதனால் இருக்கலாம்.

 

அவருக்கு இக்கலகங்களில் காணப்படும் சமூக,அரசியல் பின்புலம் குறித்த எந்தவிதமான புரிதலும் இருப்பதாக தென்படவில்லை. அவரின் இராணுவக் கண்களுக்கு தென்படுவதெல்லாம் கலகக்காரர்களினுள்ளே வாழ்ந்த பயங்கரவாதி மாத்திரமே ஆகும். பயங்கரவாதியொன்று உருவாகுவதற்கு பங்களிப்புச் செய்கின்ற சமூக,பொருளாதார காரணிகள் அவருக்கு விளங்காது. ஆகக்குறைந்த வகையில் தன்னால் தோற்கடிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படையினரல்ல, இந்நாட்டைச் சேர்ந்த மக்களின் பிள்ளைகள் சிலராகும் என்பதைக் கூட புரிந்து கொள்வதில் அவர் தோல்வி கண்டார்.

 

யுத்தத்தின் போது நிகழ்ந்த வரையறைக்குட்பட்ட செயற்பாடுகளை தேடிக் கண்காணிக்கும் நிலைக்கு அனுமதி வழங்காது தடையாக செயற்பட்டவர் கோத்தாபே ஆகும். நியாயமான உள்ளக கன்காணிப்பு விசாரணை ஒன்றை செய்ய அனுமதித்திருந்தால் அதன் விளைவாக இலங்கைக்கு மிக வேகமான முன்னேற்றப் பயணமொன்றை செல்வதற்கான வாய்ப்பை  பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது. அந்தக் கண்ணோட்டத்தில் அச்சந்தர்ப்பத்தை இலங்கைக்கு கிடைக்க விடாமற் செய்து இலங்கையை இலகுவாக எழுந்து நிற்க முடியாதளவிற்கான பெரும் சிக்கல் ஒன்றில் தள்ளிவிட்டதற்கான பெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது கோத்தாபேயாகும். அண்ணன் ஜனாதிபதி தனது விருப்பத்துக்குரிய தம்பிக்கு விரும்பியதெல்லாம் செய்வதற்கு இடம் கொடுத்துவிட்டு மேலே பார்த்துக் கொண்டிருக்கும்  கொள்கையால் நாடு பெரும் சிக்கலுக்குள் சிக்கலாக மாறுவதற்கு அது காரணமாக அமைந்தது எனச் சொல்லலாம்.

 

கோத்தாபேயினால் நடந்த தவறு.......

 

கோத்தாபேயின் கைகளால் நிகழ்ந்த நாட்டிற்கு நடந்த மோசமான விடயமாக கருத வேண்டியது நாட்டை இராணுவ முகாம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டதாகும். சிவில் அதிகாரிகள் அமர வேண்டிய பொறுப்புகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தார். சரியான பயிற்சி கூட வழங்காது இராணுவ அதிகாரிகள் தொகையளவில் தூதுவராலய சேவைகளுக்கு அமர்த்தப்பட்டனர். கல்வியையும் இராணுவமயப்படுத்தினார். இதனால் நாட்டை இராணுவ பதுங்குகுழி நோக்கி தள்ளுவதற்கு மேலாக சிவில் அரசியல் நிறுவன முறைகளையும் விகாரப்படுத்தினார்.

 

குற்றவாளிகளை அவர்களது வழக்கை கேட்காது சுட்டுக்கொலை செய்யும் பயங்கர கலாசாரத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் அவரே. அதனை உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து சட்ட, ஜனநாயக அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான பாசிச செயற்பாடாக பார்க்க வேண்டியுள்ளது.

 

அரசியல் ரீதியாக அவரின் கைகளினால் நடந்த பயங்கரமான தவறு, உத்தியோகபூர்வமாகவும் உத்தியோபூர்வமற்ற வகையிலும் பாதுகாப்பு படையுடன் சம்பந்தப்பட்டவர்களை அரசியலுக்குள் உள்வாங்கியதாகும். அடையாள முக்கியத்துவம் கொண்ட சிலரை மர்மமாக கொலை செய்து இன்னும் சிலரை மர்மமாக கடத்தினார். சில ஊடக நிறுவனங்கள் பயங்கர தாக்குதலுக்கு உட்பட்டன. இவ்வாறு நிகழ்ந்த சில அவலட்சனமான நிகழ்வுகளின்போது பாதுகாப்புப் படையுடன் சம்பந்தமுடைய குழு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக விளங்கியது.

 

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும் அக்கைங்கரியங்களை அவர் நிறுத்தவில்லை. பல்வேறு காரணங்களினால் நாட்டினுள் பல்வேறு பிரதேசங்களில் நடாத்தப்பட்ட ஆர்பாட்டங்களை தடுப்பதற்காகக்கூட உத்தியோகபூர்வமாக மட்டுமல்லாது உத்தியோகபூர்வமற்ற வகையிலும் பாதுகாப்பும் படையுடன் தொடர்பான குழுவை பயன்படுத்தினார். விடயங்களை நன்கு அறிந்து வைத்திருந்த அரசாங்கத்துடன் சம்பந்தபட்ட சிலர் அச்செயற்பாடுகளை ஆதரவாக பார்க்கவில்லை; பெரும் வெறுப்புடன் நோக்கினார். எனினும் அவர்கள் அதனை ஆங்காங்கே கிசு கிசு பேசினார்களே தவிர பகிரங்கமான எதிர்ப்பைத் தெரிவிக்க பயப்பட்டனர்.

 

தீவிரவாதிகளை போஷித்து வளர்த்தல்.........

 

பாதுகாப்புச் செயலாளர் சில தீவிரவாத சக்திகளுக்கு பாலூட்டி பெரியவர்களாகும் வரை வளர்த்ததோடு நின்றுவிடாது அவற்றுக்கு பாதுகாப்பும் வழங்கினார். பொதுபல சேனா அமைப்பு இதற்கான சிறந்ததொரு உதாரணமாகும். ஞானசாரதேரர் வெளிக்காட்டும்அவரது துணிவு இயல்பான ஒன்று என்பதை விடவும் பாதுகாப்பு அமைச்சு பின்னணியிலிருந்து கொடுக்கும் அதிகார பலத்தால் உருவாக்கிக் கொண்ட ஒன்றாகும் என்றே கருதவேண்டும். அத்தேரரின் பல்வேறு நடிப்புக்கும் நாடகத்திற்கும் முன்னால் பாதுகாப்பு பிரிவானது அத்தேரர் விரும்பியதையெல்லாம் செய்வதற்கு இடமளித்துவிட்டு சும்மா பார்த்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் அத்தேரருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் இருந்த மறைவான  நெருக்கத்தை அவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்ததனாலாகும். அரசாங்கத்திலுள்ள அதிகமான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அதனை அறிந்து வைத்துள்ளனர். அத்தேரர் நடித்துக் கொண்டிருந்த வீரதீரம்மிக்க பாத்திரத்தை அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பெருந்தொகையினர் அங்கீகரிக்காத போதிலும் அனைவரும் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கும் கொள்கை ஒன்றை கடைப்பிடித்தமைக்கு அத்தேரர் மீது செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கின்றது கோத்தாபேயின் நிழல் என்பதனாலாகும். நாட்டிலுள்ள பிரபல்யமான பிக்குமார்களும் ஞானசார தேரரின் நடிப்பை அனுமதிக்காவிடினும் அவர்கள் அனைவரும் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கும் கொள்கையை கடைப்பித்தமைக்கு காரணமாகும் இதுவே ஆகும்.

 

ஹலால் பிரச்சினை தொடங்கிய காலப்பகுதியில் நாட்டில் அங்கீகாரமுள்ள முக்கிய பிரபல்யமான சில பிக்குமார்கள் பிரச்சினை முற்ற விடாது தடுத்து சமாதானமாக தீர்த்துக் கொள்வதற்கு முன் வந்தனர். அப்போது அவ்வனைத்து பிக்குமார்களையும் அவர்களது தொலைபேசி ஊடாக ஆபாசமாக திட்டித் தீர்க்கும் ஒழுங்கமைக்கப்பட்ட (ழுசபயnணைநன) நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தினார்கள். இது இப்பிக்குமார்களுக்கு பழக்கப்படாத அனுபவமாக இருந்ததோடு, எந்தளவிற்கு அவர்கள் பயந்தார்கள் எனின் அப்பிக்குமார்கள் குறிப்பிட்ட காலம் வரையில் தமது தொலைபேசிகளின் தொடர்புகளை துண்டித்தனர்.அதன் நோக்கம் என்னவெனில் பிரபல்ய மிக்க பிக்குமார்கள் அனைவரையும் பீதிக்குட்படுத்தி அவர்கள் அனைவரதும் வாய்களை மூடச்செய்வதாகும்.

 

இந்த முறைகேடான உறவு வெடித்துச் சிதறிய கட்டமே பேருவளை அனர்த்தமாகும்.புத்தசாசன பாதுகாப்பு அதிகார சபை ஒன்று கூட்டிய ஒன்றுகூடலானது பாரிய பிரச்சினையொன்றை தோற்றுவிப்பதற்கு காரணமாக அமையப் போகிறது என்பதை அப்பிரதேச அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருந்தனர். ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மட்டுமன்றி சில சிங்கள அமைச்சர்களும் பொலிஸ் தலைமைகளுக்கு கதைத்து கூட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கோரியும் கூட அவர்கள் யாரும் அவ்வேண்டுகோளிற்கு உடன்படாமைக்கு பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளையின் காரணமாக இருக்கலாம். அளுத்கம கூட்டத்தின் போது ஞானசார தேரர் தனக்குச் செய்ய முடிந்த அனைத்தையும் செய்தார். முழுப் பிரதேசமும் நனையும் வகையில் பெட்ரோலை ஊற்றிவிட்டு அத்தேரர் அவ்விடத்தைவிட்டும் சென்றார். அதன்பிறகு அந்நிலத்திற்கு நெருப்பு வைத்தவர்கள் பிறிதொரு கூட்டம். குழப்பம் விளைவித்தவர்கள் மத்தியில் சிவில் உடையில் பாதுகாப்புப் படையினரும் இருந்தார்கள் எனப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் கூறுகின்றனர். பேருவலை அனர்த்தத்தை தொடர்ந்து பொதுபல சேனாவின் முக்கிய தலைவரான கிராம விமலஜோதி தேரருக்கு விஷேட அறிவிப்பொன்றை செய்யவேண்டி ஏற்பட்டது. ஞானசார தேரரின் செயற்பாடுகள் புத்தமதத்துடனோ அல்லது பிக்கு அந்தஸ்துக்கோ பொருத்தமற்றதாகும் என தெரிவித்துவிட்டு தான் அவ்வமைப்பின் தலைமைத்துவத்திலிருந்து விரைவில்  விலகப் போகிறேன் எனவும் கூறினார்.

 

நிகழ்ந்த பாரிய அழிவின் பின்னர் பாதுகாப்புச் செயளாலருக்கு குற்றச்சாட்டுக்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து பொதுபல சேனாவிற்கும் தனக்கும் எந்தத்தொடர்புமில்லை என்பதை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிவிக்குமாறு ஞானசார தேரருக்கு பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார் என தோன்றுகிறது. இதுவரையில் ஊடகவியலாளர்கள் மிகச் சிலருக்கு மாத்திரமே தெரிந்த எனக்கு கேட்கக் கிடைத்த ஓர் இரகசியம் இதோ. ஒரு ஊடக நிறுவனமொன்றின் தலைவரை உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கியமான ஒருவர் தொடர்புகொண்டு ஞானசார தேரருக்கு ஊடக சந்திப்பொன்றை (பேருவளை அனர்த்தத்தின் பின்னர்) வழங்குமாறு கேட்டுள்ளார். அவ் ஊடக செயலாளரிடமிருந்து திருப்தியான பதில் கிடைக்காததனால் சிறிது நேரத்திற்கு பின் பாதுகாப்புச் செயளாலரே அவருடன் தொடர்பை ஏற்படுத்தி ஞானசார தேரருக்கு ஊடக சந்திப்பொன்றை வழங்குமாறு கேட்டுள்ளார். பின்னர் அவ் ஊடக சந்திப்பில் ஞானசார தேரர் திரும்பத்திரும்ப கூறியிருப்பது தனது அமைப்புக்கும் கோத்தாபேயவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதையே ஆகும். அது பூனை சாக்குப் பையிலிருந்து வெளியே பாய்ந்தது போன்ற சந்தர்ப்பமாக பார்க்க வேண்டியுள்ளது.

 

இவ்வாறு ஒரு வரலாற்றுமிக்க சந்தர்ப்பமொன்றின் போது பிரபாகரனை யுத்த ரீதியாக வெற்றிகொள்வதற்காக முக்கியமான பெரும் பணியொன்றை செய்ததன் மூலம் மக்கள் மத்தியில் வீரன் என்ற நிலையை பெற்றுக் கொண்டிருந்த கோதாபே ராஜபக்ஷ இன்று நாட்டின் முன்னோக்கிய பயணத்தை குழப்புகின்ற ஒரு குழப்பவாதி என்ற நிலைக்கு ஆளாகியுள்ளார் என்றே கூறக் கூடியதாவுள்ளது.

www.engalthesam.lk/

Edited by ராஜகுரு

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு சிங்கள-முஸ்லிம் கலவரம் வெடித்துவிடுமோ என பெரிதும் அஞ்சினேன்! - விக்டர் ஐவன்    

 

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளினால் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக, மீண்டும் ஒரு சிங்கள முஸ்லிம் இனக் கலவரம் வெடித்து விடுமோ என தான் பெரிதும் அஞ்சியதாக 'ராவய' பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரபல எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான விக்டர் ஐவன் விடிவெள்ளிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது குறிப்பிட்டார்.

அவருடனான விரிவான நேர்காணல் வருமாறு:


நேர்­காணல்: எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத்

இந்நாட்டில் வாழுகின்ற மக்களை இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டின் கீழ் கொண்டுவர முடி யாதிருப்பதற்கான காரணம் என்ன எனக் கருதுகிறீர்கள்?

ஒரு சமூகம் எனப்­படும் போது பல இனங்கள், மதங்கள், மொழிகள் கலந்து காணப்­படும். அதற்­குள்ளே முஸ்லிம் தன்மை, சிங்­க­ளத்­தன்மை, தமிழ்த் தன்மை என கலந்த தன்மை காணப்­படும். அவ்வாறானதொரு சூழலில் ஒவ்­வொ­ரு­வரும் இணைந்து வாழ வேண்டும். எனது தனிப்­பட்ட கருத்து ஒரு இனத்தை விட இன்­னொரு இனம் உயர்ந்­ததோ தாழ்ந்­ததோ அல்ல.

எமக்­கி­டையில் ஒற்­று­மையை உரு­வாக்கிக் கொள்­வதில் ஒரு பிரச்­சினை இருக்­கின்­றது. இதற்கு எமது சிங்­கள, முஸ்லிம் தமிழ் தலை­வர்கள் அனை­வரும் பொறுப்புக் கூற வேண்டும். ஒரு தடவை முஸ்லிம் தலை­வர்­களுள் ஒரு­வ­ரான அஷ்ரப் என்­னோடு கதைத்தார். தனது கட்­சிக்கு முஸ்லிம் காங்­கிரஸ் என்று பெய­ரிட்­டது தவறு என்று கூறினார். அவர் மர­ணிக்க ஒரு வாரத்­துக்கு முன்­னரே இந்த விட­யத்தை என்­னிடம் கூறினார்.

1948 ஆம் ஆண்டு நாம் சுதந்­தி­ரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பெரிய கஷ்­டங்­களை அனு­ப­விக்கவில்லை.­ இந்­தியா பல கஷ்­டங்­களை அனு­ப­வித்­துதான் சுதந்­தி­ரத்தைப் பெற்றுக் கொண்­டது. அதற்­காக வேண்டி அனை­வ­ரையும் ஒன்று சேர்க்க வேண்­டிய தேவை­யி­ருந்­தது.

மகாத்மா காந்தி போன்ற சிறந்த தலை­வர்கள் அங்கு இனங்­க­ளுக்­கி­டையில் ஒரு­மைப்­பாட்டை ஏற்­ப­டுத்த எத்­த­னிப்­புக்­களை செய்­தனர். இவ்­வா­றான தலை­வர்கள் நமக்­கி­ருக்­க­வில்லை. பிரித்­தா­னி­யரை அல்­லது ஆங்­கிலே­யரை ஏமாற்றி இந்த நாட்டின் சுதந்­தி­ரத்தை பெற முயற்­சித்­தனர். சுதந்­தி­ரத்தை பேணும்­போது ஒரு பொது­வான உடன்­பாடு இருக்­க­வில்லை. இலங்­கையர் என்ற இனத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் நிலை இருக்­க­வில்லை.

அதன் தாக்­கத்தை நாம் இன்னும் அனு­ப­வித்துக் கொண்டே இருக்­கின்றோம். எமது எந்தத் தலை­வரும் எந்­த­வித வேறு­பா­டு­மின்றி நாம் ஒன்­றி­ணைவோம் என்று சொல்­வ­தில்லை. இந்த நாட்டில் அனை­வ­ருக்கும் சம உரி­மை­யு­டைய ஒரு­வரை ஒருவர் மதிக்­கின்ற ஒரு சமூ­கத்தை உரு­வாக்க யாரும் முயற்சி செய்­த­தில்லை. எல்­லோ­ருமே இன்­னொரு இனத்­துடன் குரோ­தத்தை தூண்டும் வகை­யி­லேயே செயற்­ப­டு­கின்­றனர். இது மிகவும் பயங்­க­ர­மா­னது. சிங்­கள தமிழ் சமூ­கத்துக்கு மத்­தியில் பல தசாப்­த­மாக தொடர்ந்த யுத்தம் ஓய்ந்­துள்ள நிலையில் இன்­னொரு சிறு­பான்மை சமூ­கத்­துடன் முரண்­ப­டு­வது மிகப் பயங்­க­ர­மான தவ­றான விட­ய­மாகும்.

இந்த நிலைமைகளுக்கு ஒட்டுமொத்த பெரும் பான் மையினரும் மௌன அங்கீகாரம் வழங்குகின் றனர் எனக் கருத இடமுண்டா?

இல்லை. இந்த நிலைமையை பெரும்­பான்மை சமூகம் அனு­ம­திப்­ப­தாக எனக்கு தோன்­ற­வில்லை, பெரும்­பான்மை சமூகம் அமை­தி­யா­கத்தான் இருக்­கின்­றது. தீவி­ர­வாதப் போக்­கு­டைய கடும்­போக்­கு­டைய நூறு இரு­நூறு பேர் இணைந்து மிகப் பெரிய குழப்­பத்தை உண்டு பண்ண முடியும். சில நேரங்­களில் நல்ல விட­யங்­களை சிந்­திக்­கின்ற பார்க்­கின்ற அமைப்­பு­களால் ஒன்­றி­ணைய முடி­யாமல் இருக்கும். ஆனால் இவ்­வா­றான கடும்­போக்கு சக்­திகள் இல­கு­வாக நிறு­வ­ன­ம­ய­மா­கி­விடும்.

இன்று மக்கள் இவ்­வா­றான நிகழ்­வு­க­ளூ­டாக கற்றுக் கொண்­டி­ருக்­கின்­றனர். இவ்­வா­றான விட­யங்­களை மக்கள் அனு­ம­திக்­கின்­றனர் என்று எனக்குத் தோன்­ற­வில்லை. நான் குறித்த ஒரு இனத்தைச் சாட­வில்லை. எல்லா இனத்­த­வரும் பொறுப்­புடன் மிகவும் நுணுக்­க­மான முறையில் இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வைத் தேட வேண்டும்.

இவை போதனை செய்து தீர்­வு­கா­ணக்­கூ­டிய பிரச்­சி­னை­யல்ல. நான் நினைக்­கின்றேன் ஒரு புதிய சமூக கோணம், புதிய அரச தலைவர், புதிய அர­சியல் பண்­பாடு என்­பன உரு­வாக வேண்டும். இது சிங்­கள, முஸ்லிம்,தமிழ் இனங்கள் இணைந்த புதிய கோணத்தில் சிந்­தித்து நாம் அனை­வரும் ஒரு நாட்­டவர் என்ற எண்­ணத்­துடன் அனை­வ­ருக்கும் எல்லா உரி­மை­களும் உள்­ளன என்ற எண்­ணத்­துடன் செயற்­பட வேண்டும்.

நாம் எப்­போது வந்­த­வர்கள், புதி­ய­வர்­களா? பழை­ய­வர்­களா? என்­பதில் எந்தப் பய­னு­மில்லை. இங்கு பிறந்­த­வர்கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழ்ந்­த­வர்கள். முஸ்­லிம்கள் ஒரு காலத்தில் வெளி­நாட்டில் இருந்து வந்­த­வர்கள். அவர்கள் இங்­குள்ள பெண்­க­ளையே மணந்து கொண்­டனர்.

சிங்­க­ள­வர்கள் இந்­நாட்­டுக்கு வர முன்னர் குவேனி என்ற ஒருவர் இங்கு வசித்தார். அறி­வு­பூர்­வ­மாக பார்த்தால் வர­லாற்றை மையப்­ப­டுத்தி கதைப்­பது மிகவும் மடத்­த­ன­மான விட­ய­மாகும்.

 

நமது நாட்டில் இனங்களுக்கிடையே முரண் பாடுகளும் கருத்துவேறுபாடுகளும் தோற்றம் பெறும் போது ஊடகங்கள் அதற்கு எண்ணை வார்த்தன எனும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியுமா?

எனது பார்­வையில் சிங்­கள ஊட­கங்கள் சிங்­களக் கோணத்­திலும் முஸ்லிம் ஊட­கங்கள் முஸ்லிம் கோணத்­திலும் தமிழ் ஊட­கங்கள் தமிழ் கோணத்­தி­லே­யுமே பிரச்சினகளைப் பார்க்­கின்­றன. இதன் அர்த்தம் என்­ன­வென்றால் எமக்­கான ஒரு பொதுப் பார்வை இல்லை என்­ப­தாகும்.

நான் வலியுறுத்தும் ஒரு­வி­டயம் தான் இந்தப் பிரச்­சி­னைக்கு மூல­கா­ரணம் ஊட­கங்கள்தான். வேறு நாடு­களில் என்றால் இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் ஊட­கங்கள் மிகக் கவ­ன­மாக செயற்­படும். இன­வாதம், வர்க்க வாதம், குழு­வாதம் போன்ற விட­யங்­களுக்கு ஊட­கங்கள் முன்­னு­ரிமை கொடுக்­காது. ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக எமது ஊட­கங்­க­ளுக்கு இந்தப் பண்பு இல்லை. இந்தப் பண்­பில்­லாமல் போவ­தற்கு காரணம் நாம் ஒன்­றி­ணைந்த சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் மனோ­பாவம் கொண்ட ஒரு சமூ­க­மல்ல. நான் தனிப்­பட்ட ரீதியில் நினைக்கும் ஒரு விட­யம்தான் நாம் மிகப் பெரிய பிரச்­சி­னையை நோக்கிச் சென்­று­விட்டோம். எனது எண்­ணப்­படி எமது பழைய தலை­வர்­களின் காலம் முடிந்­து­விட்­டது. புதிய முறையில் சிந்­திக்கக் கூடிய, மக்­களை இன­மு­ரண்­பா­டு­களில் சிக்­க­வைக்­காத, ஒற்றுமைப்படுத்தக் கூடிய, அன்­புடன் சமூ­கத்தை பார்க்­கின்ற தலை­வர்கள் உரு­வாக வேண்டும்.

மக்கள் அச்­சத்­துடன் வாழ்­கின்­றனர் என்றால் அந்­நாடு எப்­ப­டியும் அபி­வி­ருத்­தியை நோக்கிச் செல்­லாது என்றே நான் நம்­பு­கின்றேன். தாம் விரும்பும் மதத்தை யாராலும் பின்­பற்­ற­மு­டியும். தமது கலா­சா­ரங்­களில் பல மாற்­றங்கள் உள்­ளன. முஸ்­லிம்கள் மாட்­டி­றைச்­சியை சாப்­பி­டுவர். நானும் அதனைச் சாப்­பி­டுவேன். இதனை உண்­ணா­த­வர்களும் இருப்பர். நான் ஒரு இந்து நாட்­டுக்கு சென்று மாட்­டி­றைச்­சியை கேட்­க­மாட்டேன். முஸ்லிம் நாட்­டுக்குச் சென்றால் பன்றி இறைச்சி கேட்க மாட்டேன். என்னால் சாப்­பிட முடி­யு­மா­னதை உண்பேன். எனக்கு அந்த பண்பு இருக்க வேண்டும். மற்­ற­ மக்­களை அங்­கீ­க­ரித்து வாழ வேண்டும். கலா­சா­ரங்­களை மதிக்க வேண்டும். மற்­ற­ மக்களை அங்­கீ­க­ரித்து பிற­ரது உரி­மை­களை மதித்து அனு­ச­ரிக்கும் மனோ நிலை உரு­வாக வேண்டும்.

 

கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி 'ராவய' பத்­தி­ரி­கையில் பிரசுரமான உங்­க­ளது கட்­டுரை ஒன்றில் 1915, 1958, 1983 காலங்­களில் ஏற்­பட்ட கல­வ­ரத்­துக்கு முன்னர் நில­விய சூழ்­நிலையை ஒத்­த­தா­கவே தற்­போ­தைய நிலையும் உள்­ளது எனக் குறிப்­பிட்­டி­ருந்­தீர்கள். எனவே சமகால ­பி­ரச்­சி­னையும் அத்­த­கைய பாரதூரமான நிலைக்கு நம்மை இட்டுச் செல்­லுமா?

அவ்­வா­றான நிலை ஏற்­படும் என்­றில்லை. ஆனால் எனக்கு அதுபற்றிய பெரி­யதோர் பயம் ஏற்­பட்­டது. 1915 கல­வரம் பற்றி நான் ஆய்வு நோக்கில் பார்த்­துள்ளேன். எனக்­குள்ள பிரச்­சி­னைதான் இந்த கல­வ­ரத்தில் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முஸ்­லிம்கள். ஆனால் அதன் போது கைதான சிங்­கள தலைவர்கள் பற்­றியே அதிகம் பேசப்­பட்­டுள்­ளது. மாறாக அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்டோர் பற்­றியே பேசப்­பட்­டி­ருக்க வேண்டும்.

இந்த ஆய்வின் பின்னர் சமூக இயங்­கியல் பற்றி நான் ஒரு முடி­வுக்கு வந்தேன். ஒரு சிறு­பான்மை சமூகம் தாக்­கப்­ப­டும்­போது இன்­னொரு சிறு­பான்மை சமூகம் பெரும்­பான்மை சமூ­கத்­தோடு இணைந்து கொள்­கி­றது. 1958 கல­வ­ரத்தில் நான் இதனைக் கண்டேன். முஸ்­லிம்கள் தமி­ழர்கள் பற்றி சிந்­திக்­க­வில்லை. அதேபோல் 1915 இல் தமி­ழர்கள் முஸ்­லிம்­களைப் பற்றி யோசிக்­க­வில்லை. நமது சமூக இயங்­கி­யலில் இருப்­பது ஒரு சமூகம் தாக்­கப்­ப­டும்­போது ஏனைய அனைத்து சமூ­கமும் ஒரு பக்­கத்­துக்கு இணைந்து விடு­கின்­றனர். இது ஒரு கேவ­ல­மான நிலை. தாக்­கப்­ப­டு­ப­வர்கள் மீதே அனு­தாபம் வர வேண்டும். சில வர­லாற்று எழு­து­கை­களைப் பார்க்­கும்­போது எனக்கு மிகவும் சங்­க­ட­மாக இருந்­தது. நியா­ய­மற்ற முறை­யி­லேயே 1915 ஆம் ஆண்டு கல­வரம் பற்­றிய வர­லாற்று பதி­வுகள் இடம்­பெற்­றுள்­ளன. ஒரு கல­வ­ரத்­தின்­போது சிறைக்குப் போன­வர்­களைத் தான் நாம் வீரர்­களாகக் கரு­து­கின்றோம்.

இவ்­வா­றா­னதோர் நிலை மீண்டும் ஏற்­ப­டக்­ கூடாது. நாம் அனை­வரும் இணைந்து சிறந்­ததோர் சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். 2015 இல் மீண்டும் இன முரண்பாடொன்று ஏற்­படும் என்று நான் நினைக்­க­வில்லை. ஏனெனில் வீணாகக் கத்­து­ப­வர்கள் திருந்­தாவிட்டாலும் கூட அவர்­க­ளுக்கு சார்­பாக அதி­க­மானோர் இல்லை.

அவர்­களை வெறுப்­ப­வர்­களே அதி­க­மா­க­வுள்­ளனர். எல்லா தவ­று­க­ளுக்கும் எமது அரச தலை­வர்­க­ளைத்தான் சாட வேண்டும். அவர்­க­ளது சுய தேவை­க­ளுக்­கா­கவே முஸ்லிம், தமிழ், சிங்­களத் தலை­வர்கள் அனை­வரும் செயற்­ப­டு­கின்­றனர். அஷ்ரப் போன்ற முஸ்லிம் தலை­வர்கள் இருக்க வேண்டும். சோம­ஹா­மு­து­ரு­வோடு தைரி­ய­மாக கதைத்தார். இவ்­வாறு தைரி­ய­மான உண்­மை­யான தலை­வர்கள் தேவை. எமது சமூ­கத்­திலும் இவ்­வா­றான தலை­வர்கள் இல்லை.

 

1915 ஆம் ஆண்­டு­ க­ல­வ­ரத்தின் போது முஸ்­லிம்­களால் சிங்­க­ள­வர்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­தாக வர­லாற்று எழு­து­கைகள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வி­ட­யத்தில் நீங்கள் உடன்­ப­டு­கின்­றீர்­களா?

நிச்­ச­ய­மாக இல்லை. நான் அதனை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டேன். நாம் பழைய வர­லா­று­களைப் பார்த்­தோ­மே­யானால், வர­லாற்றுக் கட்­ட­மைப்­பு­களின் போது பல்­வே­று­பட்ட இடர்­பா­டுகள் இருக்­கின்­றன. சிங்­கள சமூகம்தான் உலகில் சிரேஷ்­ட­மான சமூகம் என்­று ­க­ரு­து­கின்­றனர். ஆனால் இவ்வாறு கருதுவது தவறு. சிங்­கள சமூகம் மிகவும் தாழ்ந்த சமூகம் என்­ப­தல்ல. தங்­களை உயர்­வா­ன­வர்­க­ளா­கவும் ஏனை­ய­வர்­களை தாழ்­வா­ன­வர்­க­ளா­கவும் கரு­து­வது பிழை­யான விடய­மாகும்.

முஸ்லிம் சமூகம் எப்­போதும் வியா­பா­ர­ ச­மூ­க­மா­கவே இருந்­துள்ளது. எனவே அவர்கள் அதி முன்னேற்றம் கண்டுள்ளனர். சிங்­க­ள­ மற்றும் தமிழ் சமூ­கத்­துக்கு அதன் மீது ஒரு வகை­யா­ன­ கு­ரோத நிலை­ கா­ணப்­பட்டு வந்­தது. இவர்கள் வர­லாற்றில் பெரிதாக வியா­பா­ர­த்­துக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­க­வில்லை, ஆனால் உல­க­ம­ய­மா­தலின் விளை­வாக இவ்­வி­ரு­ ச­மூ­கமும் வியா­பா­ரத்தில் நுழைய வேண்டி ஏற்­பட்­டது. வியா­பா­ரத்­துக்கு வந்த பின்னர் முஸ்­லிம்­களை அடித்­துத் துரத்­த­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

முஸ்­லிம்­க­ளுடன் முரண்­ப­ட­ வேறு எந்த ஒரு கார­ண­மு­மில்லை. ஒவ்­வொரு சமூ­கத்­துக்கும் தனித்­து­வ­மான ஆற்றல்கள் இருக்­கின்­றன. அவற்றின் மீது பொறாமை கொள்ளக் கூடாது. வேறு ஒரு சமூகம் அத்­த­கைய விட­யத்தில் ஈடு­ப­டு­கின்­றது என்றால் முயற்சித்து அதனுடன் போட்­டி­யிட்டு நாம் முன்னேற வேண்டுமே தவிர அவர்களை தாக்­கி­ ஒருபோரும் முன்னேற முடியாது.

 

நாட்டில் பலர் ­கடும்போக்குச் செயற்­பா­டுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவற்றை கவ­னத்­தி­லெ­டுக்­காது அஸாத் ­ஸா­லியை பயங்­க­ர­வா­த ­தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்தமை தொடர்பில் உங்களது அபிப்­பி­ராயம் என்ன?

இங்­கு ­ந­டக்­கின்ற விட­யங்கள் மிகவும் அசா­தா­ர­ண­மா­ன­வை­யா­கவே இருக்­கின்­றன. அஸாத் ஸாலி கைது செய்­யப்­பட்டால் ஏனை­ய­வர்­களும் கைது செய்­யப்­ப­ட­வேண்டும். சட்டம் என்­பது ஏனைய மனி­தர்­களின் இனம், சமூகம், உரி­மைகள் என்­பனவற்றை பாதிக்­கா­த ­வ­கை­யி­லேயே அதன் செயற்­பா­டுகள் இருக்­க­வேண்டும்

பொது­ப­ல­சே­னா­ அ­மைப்பு பற்றிய உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

'பண்­ச­லே­விப்­ல­வய' என்று நான் ஒரு புத்­தகம் எழு­தி­யுள்ளேன். அதில் நான் பேச­ வி­ளைந்­தது புத்­த­மதம் விருத்­தி­ய­டைந்து எப்­படி இலங்­கையில் சிங்­கள மத­மாக­ மாறியது என்பதும்  அது ஏற்­ப­டுத்­தி­யுள்ள பிரச்­சி­னைகள் பற்­றி­யதுமாகும். புத்­த­மதம் ஒரு குறிப்­பிட்ட சமூ­கத்­துக்­கு­ரி­ய­தல்ல. புத்­த ­பெ­ருமான் சிங்­க­ளவர் என்று எங்கும் குறிப்­பி­டப்­ப­ட­வு­மில்லை. எமது மத­ நி­லை­யங்­க­ளிலும் மதத்­த­லை­வர்கள் மீதும் அழுக்­குப்­ப­டிந்­துள்­ளது. இது அந்­தக் ­கா­லத்தில் இருந்­துள்ள ஒரு­ வி­டயம். இவ்­வா­றான குழப்­பத்தின் ஒரு­ப­கு­திதான் இது. இவர்­களின் செயற்­பா­டுகள் புத்­த­பெ­ரு­மானின் போத­னை­க­ளுக்கு சற்றும் உடன் பட்­ட­தல்ல. புத்­த­மதம் ஏனைய மதங்­களை அனு­ச­ரிக்கும் ஒரு­ ம­த­மாகும். ஆனால் இலங்­கையில் இந்­நிலை இல்லை.

1915 ஆம் ஆண்­டு­ க­ல­வ­ரத்­துக்கு சிங்­கள வியா­பா­ரிகள் நிதி­ வ­ழங்­கி­ய­தாக உங்கள் கட்­டுரை ஒன்றில் குறிப்­பிட்­டி­ருந்தீர்கள். தற்­போதைய பிரச்சினைகளின் பின்னாலும் அவ்வாறான நிதி உதவிகள் இருக்கும் எனக் கருத இடமுண்டா?
என்னால் அதனை நிரூ­பிக்க முடி­யாது. ஆனால் இது ஒரு வியா­பா­ரப் போட்டியா­கவும் இருக்­கலாம். நோலிமிட் போன்ற முஸ்லிம் கடைகள் தாக்­கப்­பட்­டன. அவை பாரிய வரு­மா­ன­மீட்டு­கின்­றன என்பது உண்மைதான். ஆனால் அதனை ஈடு­செய்யும் வகையில் இன்­னுமோர் வியா­பா­ரியால் போட்­டி­யிட முடி­யும். மாறாக வியா­பா­ர­ போட்­டிக்­காக அவற்றைத் தாக்­கு­வ­து ஒருபோதும் தீர்வாகாது.

இலங்கை முஸ்­லிம்கள் அடிப்­ப­டை­வா­தி­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர் என்று குற்றம்சாட்டுகிறார்களே?
என்­னிடம் அதற்­கான எந்த ஆதா­ரங்­களும் கிடை­யாது. எனவே ஆதா­ரங்கள் இல்­லாமல் இதுவிடயமாக எதுவும் கதைக்­க ­மு­டி­யாது.

 

அண்­மையில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக புரி­யப்­பட்ட தாக்­கு­தல்கள், எதிர்ப்­புகள் தற்போது சற்­று­க் கு­றைந்­தி­ருந்­தாலும் கூட மீண்டும் அந்­த­ நி­லை­ மே­லோங்கும் சில­ நி­கழ்வுகள் நடக்­கின்­றன. இந்த சூழ்­நிலை தொடர்­வ­தற்­கான வாய்­ப்புள்­ளதா?

முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் மேலோங்கிச் செல்வதானது ஒரு பெ­ரிய பிரச்­சினை. இதற்­கு ­அ­ரசு அனு­மதி கொடுக்­கி­றது என்று நான் கூற­வ­ர­வில்லை. ஆனாலும் அமை­தி­யாக இருப்­பது இதற்கு அனு­ம­தியை கொடுத்­துள்­ளது போல் தோன்­று­கின்­றது. பிற­ருக்கு துன்பம் விளை­விக்கும் அமைப்பு­க­ளுக்கும் சங்­கங்­க­ளுக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நட­வ­டிக்கை எடுக்­காமல் இருப்­பது பற்றி நாம் சற்று யோசிக்க வேண்டும். இவ்­வாறு நடப்­பதால் அச்­செ­யற்­பா­டு­க­ளுக்கு அர­சு­ சார்­பாக உள்­ளது போன்று தோன்­று­கின்­றது.

அரசு தமது இனம் விளை­யாடும் பைத்­தி­ய­கா­ரத்தனமான செயற்­பா­டு­க­ளுக்கு இடம் கொடுத்­துக் கொண்டிருக்­கின்­றது. இது மிகவும் மோச­மா­ன­நி­லை­யாகும்.

 

முஸ்லிம் ஊடகங்கள் பற்றிய உங்கள் பார்வை எப்படியிருக்கிறது?

முஸ்­லிம்கள் எவ்­வ­ள­வுதான் தமிழ் பேசி­னாலும் முஸ்­லிம்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்­கு­மி­டையில் ஒரு பாகு­பா­டு உள்­ளது. இரண்டு இனத்­த­வரும் பேசு­வது ஒரு­மொ­ழி­யல்ல, சிந்­த­னைப்­போக்கும் ஒன்­றல்ல. எனவே தனித்­துவ ஊட­க­மொன்­றில்லை என்­பது முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு அசா­தா­ரண நிலைதான். முஸ்­லிம்­க­ளுக்­கான தனித்­துவ ஊட­கத்தை உரு­வாக்­கு­வது நல்­லது. ஆனால் அது இன­வா­த ­நி­லைக்கு சென்றால் அதுவும் அசா­தா­ரண நிலையையே தோற்­று­விக்கும்.

இதற்­கான பெரி­யதோர் திட்டமிடல் வேண்டும். மக்களிடையே குரோதம், பேதம். இனவாதம் என்ப வற்றை தோற்றுவிக்காத வகையில் பிரச்­சி­னை­களின் போது நடுநிலையாக நின்று செயற்­ப­டு­வ­தாக இருக்­க­வேண்டும். இவ்­வா­றான தனித்­து­வ­ங்களுடனேயே உரு­வா­க­ வேண்டும். காலப்­போக்கில் அவை பிழை­யான வழியில் பயன்­ப­டுத்­தப்­படக் கூடாது.

இளம் ஊடகவியலாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த இளம் பரம்பரையினரும் புதிய கோணத்தில் உலகை பார்க்க வேண்டும். இவர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு கூட்டிணைந்த ஜனநாயக சமூகமாக, ஜனநாயக அரசை கட்டிழுப்ப பாடுபட வேண்டும்.

 

இலங்கையில் ஊடக தர்மம் எந்தளவு பேணப் படுகின்றது?

எப்படி  அரசியல்  கட்சிகள் சாக்கடையாக உள்ளனவோ அதே நிலைக்குதான் ஊடகங்களும் வந்துள்ளன. இத்தகைய இன ரீதியான பிரச்சினைகளுக்கு ஊடகங் களும் பிரதான காரணம். ஊடகங்கள் சமூகத்துக்கு சரி யான செய்திகளை சொல்லுமானால் நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

http://www.vidivelli.lk/morecontent.php?id=2629

"கோதாபேயின் மிலிடரி நிழலானது படிப்படியாக வடக்கு மக்கள் மீது மட்டுமல்லாது முழு நாட்டின் மீதும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய  நிலையை  தோற்றுவித்துள்ளது எனக்கூற முடியும்."

தம் வால்கள் எங்கே என்று கூட தெரியாத சில சிறி லண்கன்ஸ் இணக்க ஆப்பு இழுக்க முற்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணி கோத்தாபே - 

 

 

மெதுவாகப்பேசுங்கள்

இங்கு யாருக்காவது வலிக்கப்போகிறது...... :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் கோத்தாவின் மேல் போட்டு விட்டு மகிந்தாவை தப்ப வைக்கின்ற பிளானோ

கோத்தாவின் பெயரை கேட்டாலே நித்திரையிலும் சிலருக்கு இன்னும் "வெளியேறுகிறது" போலுள்ளது.....

எங்களை fair and square ஆக வேண்டு விட்டார்கள்...இனி அவர்கள் போடும் எலும்புக்கு வாலாட்ட வேண்டியது தான்...அல்லது பக்கத்து வீட்டில் இருந்து தொண்டை தண்ணி வத்துமட்டும் குரைக்கலாம்...(இல்லையென்றால் பக்கத்து வீட்டுக்காரன் கலைக்கும்மட்டும் :) )

 

சம்பந்தமே இல்லாமல் கடலில் தத்தளிக்கும் கப்பலை இலங்கைக்கு அனுப்புவார்களாயின்..அதோடு வாயையும் மற்றதையும் பொத்துவது

ஊரில் தப்பி பிழைத்திருக்கும் மக்களுக்கு நல்லது....இல்லையென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் குரைக்கலாம் எதுவும் நடக்க போவதில்லை...அது இன்னும் ஒரு 30வருடத்துக்கு பிறகு விளங்கும்....(30 வருடமாக குரைத்துக்கொண்டே இருந்திருக்கிறோம் என்று....பிறகு அதனிலும் ஒரு பெருமை கொள்வோம் :) )

கோத்தாவின் பெயரை கேட்டாலே நித்திரையிலும் சிலருக்கு இன்னும் "வெளியேறுகிறது" போலுள்ளது.....

எங்களை fair and square ஆக வேண்டு விட்டார்கள்...இனி அவர்கள் போடும் எலும்புக்கு வாலாட்ட வேண்டியது தான்...அல்லது பக்கத்து வீட்டில் இருந்து தொண்டை தண்ணி வத்துமட்டும் குரைக்கலாம்...(இல்லையென்றால் பக்கத்து வீட்டுக்காரன் கலைக்கும்மட்டும் :) )

சம்பந்தமே இல்லாமல் கடலில் தத்தளிக்கும் கப்பலை இலங்கைக்கு அனுப்புவார்களாயின்..அதோடு வாயையும் மற்றதையும் பொத்துவது

ஊரில் தப்பி பிழைத்திருக்கும் மக்களுக்கு நல்லது....இல்லையென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் குரைக்கலாம் எதுவும் நடக்க போவதில்லை...அது இன்னும் ஒரு 30வருடத்துக்கு பிறகு விளங்கும்....(30 வருடமாக குரைத்துக்கொண்டே இருந்திருக்கிறோம் என்று....பிறகு அதனிலும் ஒரு பெருமை கொள்வோம் :) )

எப்படி? பிரபாகரன் மறைந்து ஐந்து வருடாமாகியும் உங்களுக்கு இரவில் வெளியேறுவது போலவா? :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் கோத்தாவின் மேல் போட்டு விட்டு மகிந்தாவை தப்ப வைக்கின்ற பிளானோ

  • ஜே ஆர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
  • சந்திரிக்கா தப்பவில்லையா?
  • அவர்கள் மட்டுமா குற்றவாளிகள்? சிவாஜிலிங்கம் டேலோவில் இருந்து செய்தவையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர்.எல். எப் இல் இருந்து செய்தவையும் கொலைகள் இல்லையா?
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கோத்தாவை அகாசாய சூரன் என்று காட்ட விளைகிறார்கள். ஒப்பரேசன் லிபரேசனில் இருந்து அவர் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இராணுவ இனப்படுகொலையை முன்னெடுத்து வருகின்ற ஒருவர். நிறையவே புலிகளிடம் அடியும் வாங்கின ஒருவர். இடையில்.. சந்திரிக்கா.. ரத்வத்தை மேலாதிக்க தகாத காலத்தை அமெரிக்காவில் கழித்த கோழை.

 

கோத்தாவின் இடத்தில் நெடுக்காலபோவனை வையுங்கள்.. உவரை விட கூட செய்து காட்டுவோமில்ல.

 

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்தது.. இரண்டு விடயங்கள் தான்.

 

1. சிறீலங்காவின் பூகோள அமைவிடமும்.. நவீன தொழில்நுட்பங்களும்.

 

2. அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற கூச்சலும்.. அதன் கீழ் அமைந்த.. உலக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும்.

 

கோத்தா.. இந்த இரண்டு பெரு நெருப்பிலும்.. குளிர்காய்ந்தார் அவ்வளவே. :icon_idea:

  • 2 weeks later...

mahintha%20gothabaya%20ivan%2071d.jpg

 

தமது சகோதரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் அரசியல் புதைகுழியை வெட்டுபவராக கோட்டாபய ராஜபக்‌ஷவே இருக்கப் போகின்றார். -இப்படி தமது கட்டுரை ஒன்றில் எச்சரித்திருக்கின்றார் பிரபல சிங்கள ஊடகவியலாளரான விக்டர் ஐவன். அண்மையில் 'ராவய' வார இதழில் சிங்களத்தில் தாம் வரைந்த ஒரு கட்டுரையிலேயே அப்பட்டமாக இப்படித் தெரிவித்திருக்கின்றார் அவர். அவரது கட்டுரையின் ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து விசேடமாக 'மலரும்' இணையத்துக்காக அதனைத் தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருக்கின்றார் ராவ். அதன் முழு விவரம் வருமாறு:-
 
மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியான பின்னர் இலங்கையின் அரசியல் அரங்கிற்குள் சேர்க்கப்பட்டவர் கோட்டாபய ராஜபக்‌ஷ என்று அழைக்கப்படும் நபர். இராணுவத்தில் இருந்து வெளியேறி பின்னர் ஒன்றரை தசாப்தங்கள் இவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். தனது சகோதரர் ஜனாதிபதியானதும் அவர் மிகப் பிரபலமானவராகவும் மிக சக்திவாய்ந்த நபராகவும் மாறுகிறார். அதற்கு பின்னர் அவருக்கு மிக சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படுகிறது. நாலாவது ஈழ யுத்தத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் மாறுகிறார். ஜெனரல் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை - வழிவகைகளை - செய்தவரும் இவரே. பலருக்கு தெரியாத காரணங்களுக்காக இராணுவத் தளபதி பதவியை பொன்சேகாவிற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி விருப்பமற்றிருந்தார். எனினும் இதையும் மீறி ஜனாதிபதியின் சம்மதத்துடனேயே பொன்சேகாவிற்கு அந்த பதவியை பெற்றுக் கொடுத்தவர் கோட்டாபயவே. இதற்கு மேலதிகமாக இவர், யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர மிகக் கடினமாக, அதிகமான பொறுப்புணர்வுடன், தனக்குள்ள ஆபத்தையும் கருத்திற் கொள்ளாமல் பணியாற்றினார். பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சகோதரர் என்ற வகையில் முப்படையினருக்கும் தேவையான ஆயுத தளபாடங்களை எவ்வித தடைகளும் இன்றி உடனுக்குடன் அவரால் பெற்றுக்கொடுக்க முடிந்தது. படையினருக்கு பெருமைகளைத் தேடித் தந்த பிரச்சாரங்களுக்குப் பின்னாலும் இவரே இருந்தார். யுத்தத்தில் வெற்றிபெற்றமை அவருக்கு பெருமையையும், கதாநாயகர் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது. ஈழ யுத்தத்தை வென்ற பிறகு உருவான மூன்று கதாநாயகர்களில் இவர் ஒருவராக மாறினார். அரச சேவையில் இருந்த வேளையிலேயே இவர் சக்திவாய்ந்த நபராக மாறினார்.
 
பொன்சேகாவை அரங்கில் இருந்து அகற்றிய பின்னர் முப்படையினருடனும் தொடர்புபட்ட மிகச் சக்திவாய்ந்த நபராக இவர் மாறினார். அவர் அமைச்சர்கள் அனைவரையும் விடவும் சக்திவாய்ந்தவராகவும், ஜனாதிபதிக்கு அடுத்தவராகவும் மாறினார். ஜனாதிபதியைப் போல, அவரது ஏனைய இரு சகோதரர்களான பஸில், சமல் ஆகியோரை அனுபவம் மிக்க, முதிர்ச்சியடைந்த அரசியல்வாதிகளாகக் கருதலாம். கோட்டாபய ராஜபக்‌ஷ அவ்வாறான அரசியல்வாதி அல்லர். அவர் ஓர் இராணுவ வீரர். எப்போதையும் எல்லாவற்றையும் இராணுவக் கோணத்தில் இருந்தே நோக்குபவர்
 
கிளர்ச்சிகளை தேற்கடித்த பின்னர்.....
 
யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பராமரிக்கும் பொறுப்பு யுத்தத்தின் கதாநாயகராக மாறிய கோட்டாபயவிடம் வழங்கப்பட்டது. மெல்ல மெல்ல கோட்டாபயவின் இராணுவ நிழல்கள் தமிழ் மக்கள் மீது மாத்திரமல்ல, முழு இலங்கை மீதும் கவிழத் தொடங்கின. யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட கிளர்ச்சியாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் மக்களை நிர்வகிக்கும் பொறுப்பை யுத்தத்தில் வென்ற படையினரிடம் ஒப்படைப்பதில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி. 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியைத் தோற்கடித்த பின்னர் சரணடைந்த 18,000 கிளர்ச்சியாளர்களை பராமரிக்கும் பொறுப்பை ஸ்ரீமாவோ அரசாங்கம் இராணுவத்திடம் ஒப்படைக்கவில்லை. மாறாக சிறைச்சாலை திணைக்களத்திடம் ஒப்படைத்தது. சிறைச்சாலை திணைக்களத்திடம் இவர்களை பராமரிப்பதற்கு போதிய ஆட்பலம் இல்லாததால் புதியவர்கள் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தமையால் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களைப் பராமரிக்கும் பொறுப்பும் படையினரிடம் வழங்கப்படவில்லை. சிறைச்சாலை திணைக்களத்திடமே வழங்கப்பட்டது. ஓர் அவசரமான சூழ்நிலையிலேயோ அல்லது யுத்த சூழ்நிலை ஒன்று தோன்றினால் மாத்திரமேயோ மட்டுமே முகாம்களில் இருந்து இராணுவம்அழைக்கப்படும். யுத்தம் முடிவடைந்ததும் ஆட்சிப் பொறுப்பு மீண்டும் சிவில் நிர்வாகத்திடம் வழங்கப்படும்.
 
இதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாகும். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை முதலாவது கிளர்ச்சியல்ல; மூன்றாவது கிளர்ச்சி. ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் போதும் தற்காலிக இராணுவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. ஜே.வி.பி.யின் கிளர்ச்சி உச்ச நிலை அடைந்த போது மக்கள் அது தோற்கடிக்கப்படுவதை விரும்பினர். ஆனால் அது தோற்கடிக்கப்பட்ட விதத்தை மக்கள் விரும்பவில்லை. தென்னிலங்கை சிங்களவர்கள் இராணுவத்தைக் கொண்டாடவும் இல்லை. எனினும் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தென்னிலங்கை மக்கள் படையினரை வீர புருஷர்களாகக் கருதினர். ஆனால் ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியைத் தோற்கடித்த போது இவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளவில்லை. அவ்வேளை மக்களிடம் இருந்து இராணுவத்திற்கு எதிராக பாரிய விமர்சனங்களே முன்வைக்கப்பட்டன. தற்போது இராணுவத்தைக் கொண்டாடும் சம்பிக்க, விமல் வீரவன்ஸ போன்றவர்கள் படையினரை அப்போது எதிரிகள் என்றனர். ஜனாதிபதி பிரேமதாசாவிற்குக் கூட ஜே.வி.பியை எதிர்த்த தென்னிலங்கைச் சிங்கள மக்கள் இராணுவத்தையும் விரும்பவில்லை என்பது தெரிந்தே இருந்தது. இதன் காரணமாக ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதும் இராணுவம் முகாம்களுக்குள் திருப்பி அனுப்பப்பட்டது.
 
இந்தக் கொள்கை வடபகுதி தமிழ் மக்களுக்கும் பொருந்தக்கூடியது. எனினும் கோட்டாபய காரணமாக இந்தக் கொள்கை அங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு அரசியல் நோக்கம் காரணமல்ல. அவரது இராணுவ அணுகுமுறையே காரணம். கோட்டாபய பாதுகாப்பு செயலாளராக இருந்திருக்காவிட்டால் வடபகுதித் தமிழ் மக்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இராணுவத்திடம் ஒப்படைத்திருக்க மாட்டார். மாறாக படையினரை முகாம்களுக்குள் திருப்பி அழைக்கும் கொள்கையை பின்பற்றி இருப்பார்.ஜனாதிபதி தனது சகோதரரின் செயற்பாட்டில் தலையிடாதமைக்கு அவர் மீதான நெருக்கமும் காரணமாக இருக்கலாம். 4 ஆவது ஈழ யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு அவர் எடுத்துக்கொண்ட பாரிய பொறுப்பும் காரணமாக இருக்கலாம்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது சகோதரரின் பணிகளில் தலையிடுவதில்லை. அவரது விருப்பப்படி விட்டுவிடுகிறார் எனக் கருதவும் இடமுண்டு. அவரைக் கட்டுப்படுத்தாமல் தனது போக்கிலேயே விட்டுவிடுவதன் மூலம் முழு அதிகாரத்தையும் அவரிடமே கொடுத்து விடுகிறார். பாதுகாப்புச் செயலாளர் தனது சகோதரரை வீழ்த்துவதற்கான தெரிவுகள் - எண்ணங்கள்- இல்லாவிட்டாலும், அரசியல் செயற்பாடுகளிற்கான சாத்தியக்கூறுகளை, இவரது இராணுவப் பார்வை அல்லது மூளை நிராகரிக்கலாம், இதன் காரணமாக தனது சகோதரருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் அரசியல் புதைகுழியை வெட்டுபவர் இவராகவே இருக்கப்போகிறார். 
 
மரணித்தவர்களை நினைவு கூருதல்......!
 
வட பகுதியில் ஒரு கிளர்ச்சி மாத்திரமே இடம்பெற்றது. ஆனால் தென்னிலங்கை சிங்களவர்கள் மத்தியில் இரண்டு கிளர்ச்சிகள் உருவாகின. கிளர்ச்சிக்காரர்களின் குடும்பத்தினர் அவர்களது மரணத்தை நினைவு கூர்ந்தனர். இரண்டாவது கிளர்ச்சிக்குப் பின்னரும் அவர்களது குடும்பத்தினர் மரணத்தை நினைவு கூர்ந்தனர். இதற்காக அன்னையர் முன்னணி என்ற அமைப்பையும் உருவாக்கினர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இதில் மிகுந்த தீவிர பங்களிப்பை ஆற்றினார்.
 
கொல்லப்பட்டவர்கள் என்ன குற்றங்களைச் செய்திருந்தாலும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு அவர்களை நினைவு கூர உரிமை உண்டு. எனினும் கோட்டாபய ராஜபக்‌ஷ வடபகுதியைச் சேர்ந்த தமிழ் கிளர்ச்சிக்காரரின் குடும்பத்தினருக்கு இதற்கான அனுமதியை வழங்கவில்லை. சகலவற்றையும் இராணுவ நோக்கிலேயே அவர் அணுகுவதே இதற்கு காரணமாக இருக்கலாம். எனினும் இதனை இதுவரை யாரும் செய்ததில்லை. நினைவு கூரலுடன் தொடர்புபட்டுள்ள கலாச்சார, சமூக, அரசியல் குறித்து அவர் கணக்கில் எடுக்கவில்லை. கிளர்ச்சிக்காரனுக்குள் வாழ்ந்த பயங்கரவாதியின் தோற்றமே அவருக்குத் தென்பட்டிருக்கும். அவன் பயங்கரவாதியாக மாறுவதற்கான பொருளாதார நெருக்கடி குறித்து இவருக்குத் தெரியாது. நாங்கள் ஒரு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படையை தோற்கடிக்கவில்லை. இந்த மண்ணின் புதல்வர்களையும் புதல்விகளையுமே தோற்கடித்தோம் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாது. யுத்தத்தின் போது என்ன நடைபெற்றது என்பதை அறிவதற்கான உள்ளூர் விசாரணை ஒன்றிற்கு இணங்கி இருந்தால் - குற்றம் செய்தவர்களை தண்டித்து, மன்னிக்கும் நடைமுறையை பின்பற்றி இருந்தால் - எமது நாட்டிற்கு எதிரான சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகளை தவிர்த்திருக்கலாம்.
 
மேலே சொன்ன விடயங்களுக்கு முக்கிய பொறுப்பு கோட்டாபயவே. அவரே இந்த நாட்டை மிக நெருக்கடியான நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளார். எந்த யுத்தத்திலும் வரையறைகளை எதிர்பார்க்க முடியாது. 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியைக் கட்டுபடுத்திய வேளை சில செயல்கள் இடம்பெற்றன. இதில் அழகுராணி பிரேமவதி மனம்பேரியின் படுகொலை சர்வதேச கவனத்தை ஈர்த்தது. பிரதம மந்திரி ஸ்ரீமா பண்டாரநாயக்க விசாரணை ஒன்றை ஆரம்பித்து இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். நீதிமன்றம் இதனை மேலும் முன்னெடுத்து உயர்ந்த பட்ச தண்டனையை வழங்கியது. இது இராணுவத்திற்குத் துரோகம் செய்யும் செயல் அல்ல. மாறாக அதன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைக்கும் செயல்
 
 
கோட்டாபயவின் தவறான செயல்கள்
 
நாட்டை இராணுவ முகாம் கலாசாரத்துக்கு இழுத்துச் சென்றதே கோட்டாபய ராஜபக்‌ஷ செய்த மிகப் பெரும் தவறு. சிவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டிய பதவிகளுக்கு எல்லாம் இராணுவ அதிகாரிகளையே நியமித்தார். தூதரக சேவைக்குக் கூட உரிய பயிற்சி இன்றி இராணுவ அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டார்கள். கல்வியும் இராணுவமயப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாட்டை இராணுவ முகாம் கலாசாரத்துக்கு இழுத்துச் சென்றமை மாத்திரமல்லாமல் ஜனநாயக அரசியலுக்கான கட்டமைப்புகளையும் அழித்தார். விசாரணை எதுவும் இன்றி குற்றவாளிகளை துப்பாக்கிப் பிரயோகம் மூலம் சுட்டுக் கொல்லும் நடைமுறையை ஆரம்பித்து வைத்தவர் இவர். இது சட்டவிரோதமானது. ஜனநாயக அடிப்படை நடைமுறைகளுக்கு எதிரானது. பாஸிச ஆட்சி என இதைக் கருதலாம். அரசியல் காரணத்திற்காக இராணுவ அதிகாரிகளை உத்தியோகபூர்வமாகவும் உத்தியோக பூர்வமற்ற முறையிலும் பயன்படுத்தியமையே அரசியலில் செய்த மிகப் பெரும் தவறு.
 
யுத்தத்தின் போது சில தென்பகுதி அமைப்புகள் யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆபத்தான யுத்தத்தின் போது இவர்கள் செயற்பட்ட விதம் பிழை என்று சொன்னாலும் அந்த அமைப்புகளை ஒடுக்குவதற்கு கையாண்ட வழிவகைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டனர். சிலர் ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் காணாமல் போயினர். சில ஊடக நிலையங்கள் ஈவிரக்கமற்ற தாக்குதலுக்கு உட்பட்டன. இவ்வாறான வெட்கக்கேடான தாக்குதல்களுக்குப் பின்னால் படையினர் இருந்தமை வெளிப்படையான விடயம். யுத்தம் முடிவடைந்த பின்னரும் இந்த நடைமுறை கைவிடப்படவில்லை. நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு படையினருடன் தொடர்புபட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டனர். அரசாங்கத்தில் சிலருக்கு இந்த உண்மை தெரிந்திருந்தது. அவர்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். ஆனால் வெளிப்படையாக எதிர்க்க அஞ்சுவதால் தங்களுக்குள்ளேயே இரகசியமாக முணுமுணுக்கின்றனர்.
 
தீவிரவாத சக்திளுக்கு ஆதரவளித்தல்
 
பாதுகாப்புச் செயலாளர் தீவிரவாத சக்திகளுக்குப் பாலூட்டினார்; பாதுகாத்தார். பாதுகாப்புச் செயலாளரின் ஆசீர்வாதத்துடன் உருவாக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பே இதற்கு சிறந்த உதாரணம். ஞானசார தேரர் வெளிப்படுத்தும் துணிச்சல் என்பது இயல்பானது அல்ல; பாதுகாப்பு அமைச்சு வழங்கி உள்ள பலத்தின் மூலம் உருவானது. குறிப்பிட்ட தேரர் தான் நினைத்தபடி எல்லாம் நடக்கும் அதேவேளை பாதுகாப்புப் பிரிவினர் மௌனமாகவும் அலட்சியமாகவும் இருப்பதன் மூலம் இது புலனாகிறது. இது பாதுகாப்புச் செயலாளருடன் அந்த அமைப்புக்குள்ள தொடர்பை அறிந்ததனால் உருவான செயலின்மை. பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது தெரிந்திருக்கிறது. தேரரின் இந்த நாடகத்தை பல அமைச்சர்கள் ஏற்றுக் கொள்ளாத போதிலும் அவருக்குப் பின்னால் உள்ள கோட்டாபயவின் நிழல் காரணமாக அவர்கள் மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட பௌத்த குருமார்களுக்கும் ஞானசாரரின் செயற்பாடுகளில் திருப்தி இல்லை.
 
எனினும் அவருக்குப் பாதுகாப்புச் செயலாளருடன் உள்ள தொடர்பு காரணமாக அவர்களும் அமைதியாக உள்ளனர். ஹலால் விவகாரம் வெடித்துக் கிளம்பிய போது மூத்த பிக்குகள் சிலர் அதற்குத் தீர்வு காண முயன்றனர். எனினும் குறிப்பிட்ட கும்பல் ஒன்று அவர்களைத் தொலைபேசி மூலம் தரக் குறைவாக ஏசியது. மூத்த பிக்குகளுக்கோ இது ஒரு கசப்பான அனுபவம். இதன் காரணமாக அவர்கள் பல நாட்களாகத் தங்கள் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்து வைத்திருந்தனர். பௌத்த பிக்குகளை அச்சுறுத்தி அவர்களைப் பேசவிடாமல் மௌனமாக்குவதே இதன் நோக்கம். பேருவளை சம்பவங்கள் இடம்பெற்ற போது இந்த தேவையற்ற நிலைவரம் பெரும் நெருக்கடியை உருவாக்கியது. குறிப்பிட்ட அமைப்பு ஒன்று பொது கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த வேளை அரசின்அதிகாரிகளுக்கு அது ஆபத்தான நிலைமை என்பது விளங்கியது. அரசில் உள்ள முஸ்லிம் எம்.பிக்கள், அமைச்சர்கள் மாத்திரமல்லாமல் சிங்கள அமைச்சர்களும் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அந்தக் கூட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கேட்டனர். எனினும் பாதுகாப்புச் செயலாளரிடம் இருந்து கிடைத்த உத்தரவு காரணமாக இந்த வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டும்.ஞானசார தேரர் இந்தப் பகுதி முழுவதும் 'பெற்றோலை' விசிறிவிட்டு சென்று விட்டார். அதன் பின்னர் சிலர் தீயைப் பற்ற வைத்தனர். பாதுகாப்புப் படையினரின் சீருடை அணிந்த சிலர் அப்பகுதியில் காணப்பட்டனர் எனச் சிங்கள, முஸ்லிம் மக்கள் தெரிவித்தனர்.இந்தத் துயரமான சம்பவங்களுக்கு பின்னர் பொதுபலசேனா அமைப்பின் தலைவர், ஞானசார தேரரின் செயற்பாடுகள் பௌத்தத்திற்கும் மதகுருமாருக்கும் எதிரானது என விசேட அறிக்கை ஒன்றை விடுத்தார்.
 
அதன் பின்னர் அந்த அமைப்பின் தலைமைப் பகுதியில் இருந்து விலகப் போகிறார் என அறிவித்தார். அளுத்கம சம்பவங்களைத் தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக பாதுகாப்புச் செயலாளர் காயப்பட்டிருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதன் காரணமாக அவர் ஞானசார தேரரை அழைத்து, அவர் மூலம் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தி தனது அமைப்பிற்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். தற்போது ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு மட்டும் தெரிந்த இரகசியத்தை - எனக்குத் தெரியவந்ததை - சொல்கிறேன். ஒரு பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரை அழைத்த புலனாய்வுத் தலைமை அதிகாரிகள் ஞானசார தேரரின் செய்தியாளர் மாநாட்டுக்கு முக்கியத்துவத்தை வழங்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு உரிய பதில் இல்லாமல் போகவே பாதுகாப்புச் செயலாளரே அந்தப் பத்திரிகையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட செய்தியாளர் மாநாட்டுக்கு முக்கியத்துவத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இந்த மாநாட்டிலேயே பாதுகாப்பு செயலாளருக்கும் பொதுபல சேனாவிற்கும் தொடர்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த பூனை வெளியே குதித்து வந்துவிட்டது. பிரபாகரனுடனான வரலாற்று யுத்தத்தை வென்ற பின்னர் பொதுமக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வீர புருஷர் என்ற அந்தஸ்து கிடைத்தது. அதுவே தற்போது நாட்டை குழப்பகரமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
 

http://malarum.com/article/tam/2014/07/10/3544/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.html

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா ராஜபக்சே களும் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது உலகறிந்தது, இதில் கோத்தபாய ராஜபக்சே அதிக குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.