Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதித்தது Australia

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாதித்தது Australia

இந்தியாவுக்கு திரும்பி போகமாட்டம் இந்திய தூதரக அதிகாரிகளுடன் பெசமாட்டம் என்று அடம்பிடித்து அதிகாரிகளுக்கு தலைவலி கொடுத்து வந்த 157 தமிழ் அகதிகளையும் நவுரு தீவுகளுக்கு இரவோடு இரவா அனுப்பியாச்சு.......

ஆஸ்திரேலியாவா கொக்கா....யாரு கிட்ட.....

  • கருத்துக்கள உறவுகள்

தன்னினத்தின் துன்பத்தில் சந்தோஷம் அடைகிற இனம் நாங்கள் மட்டுமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வெடிகொளுத்தி சந்தோசப்பட வேண்டிய விசயம்.

பள்ளிக்கூடத்துக்கு மூண்டுநாள் லீவு...எல்லாரும் வீட்டை ஓடுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

மூலம் இல்லாமல் செய்திகள் இணைக்க கூடாது என்பது, உங்களுக்கு தெரியாதா? மற்றவனின் கண்ணீரில் இன்பம் காணும் நீங்கள், ஒருநாள் உங்களுக்கும் ஏதாவது ஒரு வழியில் கஷ்டப்படும் போது உணருவீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரையும் விமானம் மூலம் அவுஸியை விட்டு அகற்றி இருக்கிறது.. அவுஸ்திரேலியா.

_76705848_76705843.jpg

_76705915_76705851.jpg

_76110984_aus_lanka_0714.jpg

இது அடிப்படையில் பல ஐநா விதிமுறைகளை மீறி அவுஸ் தன்னிச்சையாக எதேச்சதிகாரத்தோடு செயற்படுவதைக் காட்டுகிறது.

http://www.bbc.co.uk/news/world-asia-28627369

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை இந்தியாவிற்கு அனுப்ப கொடுக்கப்பட்ட சலுகையை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் இவர்களின் அகதி கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் இலங்கைக்கும் இவர்களின் அகதி கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்ச்சத்தில் நவுரு தீவிலும் குடியமர்த்தபடுவார்கள் என்பதனை எமது அரசு தெரியப்படுத்தி இருக்கு நவுரு தீவுகளில் இருந்து தமிழ் வளர்க்கட்டும்.....

Edited by SUNDHAL

மூச்சு விடாமல் தகவல் தந்ததுக்கு ரொம்ப தாங்ஸ் சுண்டல்.. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முகம்தெரியாத, தமிழன் எனும் ஒரேயொரு அடையாளத்துடன், இன்னல்களுடன்வந்த எமது அன்றாட வாழ்வில் அவர்களது வருகையால் எந்தவித பாதிப்புகளும் எப்போதுமே ஏற்படமாட்டாது எனத் தெரிந்தும்.

எவ்வளவு குரூரமான மன எண்ணவோட்டத்துடன் கருத்திடுகிறார்கள் என்பதை இங்கு நான் அறிந்து வேதனையடைகிறேன்.

மேற்படி இவ்வகதிகளுக்கு ஏற்பட்ட இதே வேதனையும் வலியும் இன்னுமொருமொரு சந்தர்ப்பத்தில் வேறுவடிவில் கள உறவு "திருவாளர் பரிசுத்தம்" சுண்டல் அவர்களுக்கு ஏற்படாது இருக்கும்வண்ணம் எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.

ஆனால் ஒன்றுமட்டும் எனக்குப் புரிகின்றது. தாங்கள் யாழ்குடாநாட்டில் நகர்ப்புறச்சூழலில் ஒரு நல்ல வசதிபடைத்த அப்பிராந்தியத்தின் மதிப்பு மிக்க குடிகளாகக் கணிக்கப்படும் சமூகக்குடியில் வளந்திருக்கிறீர்கள் என்பதை.

சுண்டல் சில விடையங்கள் உங்களால் ஜீரணிக்க முடியாதவையே, எப்போதும் அவர்கள் ஓடப்பர் ஒப்பப்பராக இருப்பர் என எதிர்பார்க்க முடியாதுதானே.

இது ஒருவித மனநோய் ஒருகாலத்தில் எனக்கும் இருந்தது ஆனால் இப்போது விட்டெறிஞ்சுபோட்டன். கூடியவிரைவில் நீங்களும் எறிவீர்கள் ஆனால் காலம்கடந்து.

Edited by Elugnajiru

இவ்வளவு நாளும் இனவெறி சிங்களவனுக்கு மட்டுந்தான் என்று இருந்தேன். ஆனால் இப்பொழுது தெரியவருகிறது அவர்களை விட தம் இன மக்கள் துன்பப்படுவதை எண்ணி மகிழ்ச்சி கொள்ளும் குரூர மனம் கொண்ட மாக்கள் உள்ள குழுமம் இதுவென்று...  
 
உள்நாட்டில் கண்ணியமாக வாழ வழியில்லை. சென்ற நாட்டிலும் அடிமை வாழ்வு. ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிட்டாதா தன் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள என எண்ணி உயிரைப் பணயம் வைத்து கடல் கடக்கும் மக்கள்களின் இன்னல்கள் தெரியாதா?? இல்லை தெரிய விருப்பம் இல்லையா?.
 
இது அறியாமையா ?? அறிவற்ற தன்மையா?? என நானறியேன். எனினும் என் கண்டனத்தை சுண்டலுக்கெதிராக பதிவுசெய்ய விரும்புகிறேன் அத்துடன் அவர் இன்றுபோல் என்றும் வளமையோடு இருக்க இயற்கை ஆசி வழங்கட்டும்.
 
// எழுத்து பிழைக்காக திருத்தப்பட்டது 

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை இந்தியாவிற்கு அனுப்ப கொடுக்கப்பட்ட சலுகையை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் இவர்களின் அகதி கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் இலங்கைக்கும் இவர்களின் அகதி கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்ச்சத்தில் நவுரு தீவிலும் குடியமர்த்தபடுவார்கள் என்பதனை எமது அரசு தெரியப்படுத்தி இருக்கு நவுரு தீவுகளில் இருந்து தமிழ் வளர்க்கட்டும்.....

சுண்டல்

வேண்டாம் ராசா

எல்லாவற்றிலும் பகிடிவிடக்கூடாது :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில பகிடிக்கு என்ன அண்ணே இருக்கு?

சட்டவிரோத ஆள் கடத்தல் காரர்களுக்கு எதிராக எனது அரசு மேற்கொள்ளும் எல்லாவிதமான நடவடிக்கைகளுக்கும் இந்த நாட்டின் நல்ல பிரஜை என்ற முறையில் என் ஆதரவு உண்டு அதனால் பாதிக்கப்பட போவது நானாக இருந்தால் கூட....

கள்ளகடத்தல் காரர்களை ஆதரிக்கும் உங்களை போன்றவர்களுக்கு எதிராக எனது கண்டனங்களையும் நானும் பதிவு செய்கின்றேன் ஆதித்திய இளம் பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

சாதித்தது Australia

இந்தியாவுக்கு திரும்பி போகமாட்டம் இந்திய தூதரக அதிகாரிகளுடன் பெசமாட்டம் என்று அடம்பிடித்து அதிகாரிகளுக்கு தலைவலி கொடுத்து வந்த 157 தமிழ் அகதிகளையும் நவுரு தீவுகளுக்கு இரவோடு இரவா அனுப்பியாச்சு.......

ஆஸ்திரேலியாவா கொக்கா....யாரு கிட்ட.....

அவுஸின் அகதிகளுக்கான அதிகாரிகளை வழி நடத்துவது சுண்டல் தான்

போலை இருக்கின்றது. அளவுக்கதிகமாகச் சிரிக்காதேங்கோ.புரையேறிவிடும்  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.