Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாத நோய்கள் வராமலிருக்க அசைவ உணவை தவிர்ப்பீர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாத நோய்கள் வராமலிருக்க அசைவ உணவை தவிர்ப்பீர்

நமது உடம்பை நாம் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தும் ஆய்வுகளமாகத்தான் உபயோகப்படுத்தி வருகிறோம். உணவுகள் மீதான நமது ஆசையை பூர்த்தி செய்வதற்காக உடல்நலத்தை பலி கொடுக்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம். நமக்கு நமது உடலின் மேல் அக்கறை இருந்தாலும்,  அதனை அலட்சியப்படுத்துகிறோம். இந்த அலட்சிய மனோபாவம் தான் நமது உடலை, மருத்துவருக்கும், மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்கிறது. அங்கு சென்ற பின்,  அவர்கள் தரும் அதிர்ச்சியான தகவலால் நமது மனம் பதற்றமடைகிறது. தொடர்ந்து இயங்குவதற்கு தயக்கம் அடைகிறோம். பலவித சந்தேகங்களை உருவாக்கிக் கொள்கிறோம். இது பற்றி மற்றவர்கள் கூறும் சில தவறான முன்னுதாரணங்களைக் கூட பின்பற்றுவதற்கு எளிதாக இருப்பதால் பின்பற்ற தொடங்கி விடுகிறோம். 

வாதநோய் என்றால் என்ன?

மனிதனுக்கு உடலில் பொதுவாக வாதம், பித்தம், கபம் என்ற 3 நாடிகள் உண்டு. நாடி பிடித்துப் பார்க்கும்போத வாது நாடி தன்னளவில் மிகுந்து காணப்பாட்டால் அந்த நபருக்கு வாதநோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதை ஆங்கிலத்தில் ஆர்தரைடிஸ் என்பார்கள்.

வாதநோயில் 80 வகைகள் இருப்பதாக யூகி என்ற சித்தர் கூறியுள்ளார். இதில் முக்கியமானவை, வாத கீல் வாயு மற்றும் பக்கவாதம். இதில் வாத கீல் வாயு பித்த கீழ்வாயுவை ஆங்கிலத்தில் ருமாட்டிக் காய்ச்சல் என்பார்கள். இதன் அறிகுறிகள் தொண்டையில் வலி, மார்பு, இரண்டு மூட்டுப் பொருத்துகளில் வலி, கை, கால்கள் சிவந்து வீங்குதல், உடம்பில் ஒரு வகையான குடைச்சல், கை, கால்களை நீட்டவும், மடக்கவும், அசைக்கவும் முடியாத நிலை போன்றவை தோன்றலாம். வீக்கத்திற்கேற்ப காய்ச்சல் கூட வரலாம். குத்தல் குடைச்சலினால் நோயாளி இரவில் தூக்கமின்மையால் தவிப்பார். இதில் பெரும்பான்மையான பாதிப்புகள் முழங்கால் மூட்டுக்கள், இடுப்புப் பொருத்துகள், மணிக்கட்டு மற்றும் முழங்கைகளில் உண்டாகலாம்.

வாத கீல் நோய்க்குக் காரணம் என்ன?

இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களினால் தான் இது பெரும்பாலும் ஏற்படுகிறது.அதிலும் குறிப்பாக 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு வகையான கிருமிகளால் இது போன்ற பாதிப்பு  ஏற்படும். இந்த வயதுக்குள்,  இதற்குத் தேவையான சிகிச்சை எடுத்துக் குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது வாழ்நாள் முழுவதும் தொடரும். 15 வயதுக்கு மேலும் இந்தப் பாதிப்பு இருந்தால் இதயத்தின் நிலையே மாறிப்போகும். சரியாக ரத்த ஓட்டம் இருக்காது. படபடப்பு இருக்கும். படபடவென மார்பு துடிக்கும். பெருமூச்சு, அடிக்கடி தன்னையும் அறியாமல் வியர்வை பெருக்கெடுக்கும். தவிர, நாடி தளர்தல், அடிக்கடி மயக்கம், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளும் தோன்றும். சில நேரங்களில் மலச்சிக்கல் கூட  இருக்கும். சிறுநீர் சரியாகப் பிரியாது. அப்படி சிறுநீர் பிரிந்தாலும் மிகக் குறைந்த அளவில் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படும் பித்த கீழ்வாயு எந்த வயதினரைப் பாதிக்கும்? 

வயது ஆக ஆகத்தான் இந்த நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. பொதுவாக ஆண், பெண்களுக்கு கால் மூட்டுகளில் சைனோவியல் என்ற திரவம் சுரக்கிறது. சைனோவியல் என்ற சவ்வுக்குள் இந்தத் திரவம் இருக்கும். இந்தத் திரவம் வயது ஆக ஆக  குறைவாக சுரக்கும். இதனால் இரண்டு மூட்டுகளும் சந்திக்கிற இடத்தில் ஒன்றோடொன்று உராயத் தொடங்கும். இதுவே பித்த கீல் வாயு எனப்படுகிறது. குறிப்பாக கடல் மற்றும் கடல் சார்ந்த  நிலப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த வகை வாத நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. உப்புச்சத்து அதிகம் கொண்ட அந்த மண்ணின் இயல்புக்கு ஏற்றபடி வாத நோய் ஏற்படுகிறது.

இது எந்த விதமான அறிகுறிகளைத் கொண்டிருக்கும்?

மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும். உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமை, மலச்சிக்கல், நடக்கும் போது எலும்பு முறிந்தது போன்ற சடக் சடக் என்ற ஒரு வகையான ஒலி, சில சமயங்களில் காய்ச்சல், காலை நீட்டி மடக்க முடியாமை போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த வகை நோய் பெரும்பாலும் பெண்களையே பாதிக்கிறது. பலவீனமான உடல், அதிக வேலைப்பளு, மூட்டுகளில் அடிபடுவது போன்ற காரணங்களால் இந்நோய் வரலாம். சில பெண்களுக்கு பேறுகாலத்திற்குப் பின்னர் இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறு உண்டு.

ருமாட்டாய்டு ஆர்த்ரைடிஸ் எனப்படும், வாத பித்த கீல் வாயு நோய் வைரஸ், பாக்டீரியாக்களால் உண்டாகிறது என்பது உண்மையா? 

வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுநோய்க்கிருமிகளால் இந்த நோய் வரலாம். தவிர, ரத்தத்தில் ருமாட்டாய்டு என்ற காரணி பாசிட்டிவ் ஆக இருக்கிறவர்களுக்கு இந்த நோய் இருக்கிறது என அர்த்தம். கை விரல் பொருத்துகளில் வலி, வீக்கம் இருக்கும். விரல்களை நீட்டி மடக்க முடியாது. பெரும்பாலும் அதிகாலையில் தான் இது போல ஆகும். குளிர்ச்சியான சூழலில் இந்த நோயின் அறிகுறிகள் தீவிரமாகும். மணிக்கட்டுப் பகுதி மற்றும் விரல்கள் சிவந்து எரிச்சல் மற்றும் வலி உண்டாகும். தூக்கமின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் இது வெளிப்படுத்தும்.

இன்றைய நிலையில் பக்கவாத நோயால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவதற்குக் காரணம் என்ன?

மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு, ரத்த நாளங்களில் சிதைவு ஏற்பட்டாலும் கூட  இந்த நோய் வரலாம். வலது பக்க மூளைப்பகுதி பாதித்தால் உடலின் இடது பக்கம் முழுவதும், இடது பக்க மூளை பாதித்தால், உடலின் வலது பக்கம் முழுவதும் பாதிப்பு உண்டாக்குவதே இந்த நோயின் தன்மை. இந்தப் பாதிப்பு பெரும்பாலும் அதிகாலையில் தான் தெரியும். அதிகமான கொழுப்புப் பதார்த்தங்கள் உண்பது, குடிப்பழக்கம். அதிகமாக டென்ஷன் ஆவது, அதிக ரத்த அழுத்தம் இன்னும் சில பால்வினை நோய்களுக்கு அணையாகக் கூட இந்த நோய் உண்டாகலாம். இதன் கொடூரத்தன்மை என்னவென்றால் நோயாளிகளுக்குத் தெரியாமலே அதிகாலையில் மூளையில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு இது பாதித்தால் கை, கால், வாய், நாக்கு பாதிக்கப்படும்.

இதைத் தவிர்ப்பது எப்படி?

உட்கொள்ளும் உணவில் அதிகமான அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய், பழைய சாதத்தைத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுப்பொருட்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்த நோயை வராமல் தவிர்ப்பது முக்கியம். நேரம் தவறாமல் உணவு உட்கொள்ளுதல் மற்றும் தூக்கம் போன்றவற்றை வயதுக்கு ஏற்றவாறு கடைப்பிடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடந்த 3  4 வருடங்களாகவே மணிக்கட்டு கை கால் விரல்கள்கள் கால் மூட்டுக்கள் வீக்கத்துடன் ரொம்பவும் நோவாக இருந்தது.இரு வருடங்கள்  இருக்கும் என்று நினைக்கிறேன் அதற்கான டாக்ரரிடம் சென்று சிகிச்சை பெறலாம் என்று கலந்தாலோசித்தேன்.பல சோதனைகள் செய்து இது வாதம்(Arthritis)தான் என்று உறுதி செய்தார்.சரி என்ன மாதிரி குணப்படுத்தலாம் என்றால் கொஞ்ச குளிசைகள் எழுதி தந்து ஒவ்வொரு மாதமும் இரத்த பரிசோதனை செய்ய வேண்டுமென்றார்.

டாக்கர் கடந்த பதினைந்து வருடங்களாக இருதய சிகிச்சை பெற்ற பின் மூன்று மாதத்திற்கொரு தடவை இரத்த பரிசோதனை செய்கிறேன் இன்னொன்று புதிதாக செய்ய வேண்டுமா என்றேன்.இந்த குளிசைகள் ஈரலை ரொம்பவும் பாதிக்கும் என்பதால் கட்டாயம் இரத்த பரிசோதனை செய்ய வேண்டுமென்றார்.அப்பவே இந்த குளிசைகளின் தாக்கம் துல்லியமாக புரிந்துவிட்டது.இதை விட இந்த நோவுன் இருப்பது பரவாயில்லை என்று எண்ணி யோசித்து விட்டு பின்னர் வருகிறேன் என்று வந்துவிட்டேன்.இன்று வரை திரும்ப போனதில்லை.

அண்மையில் ஒரு நண்பர் தனக்கும் இப்படி இருந்ததாகவும் இன்னொரு நண்பர் மூலமாக ஒரு மருந்து போட்டு வருகிறேன் நீங்களும் வேண்மென்றால் போட்டுப் பாருங்கள் என்று அவர் சொன்னபடியே செய்து பார்த்தேன் ரொம்பவும் குணமாக இருந்தது.

செய்ய வேண்டியது

மஞ்சள் மாவு ஒரு கப்

வெந்தயத் தூள் ஒரு கப்

கருஞ்சீரகத் தூள் ஒரு கப்

வேர்க்கொம்பு தூள் ஒரு கப்

வேர்க்கொம்பு மஞ்சள் தூளாகவே வாங்கலாம் மற்ற இரண்டையும் வாங்கி அரைத்து நான்னையும் நன்றே கலந்து காலை வெறும் வயிற்றில் ஒரு மேசைக் கரண்டி போட்டு தண்ணீரில் கலந்து பெக் அடித்த மாதிரி அடிக்க வேண்டியது தான்.அப்போதும் காலைச் சாப்பாட்டை எடுத்து வைத்து கொண்டு தான் இதைக் குடிப்பது.ஆடி தொடக்கத்தில் என்னாகுமோ என்று எண்ணிக்கொண்டுதான் தொடங்கினேன்.இப்போது முழு பலன் இல்லாவிட்டாலும் அரைவாசிக்கு மேல் குணமாகிய மாதிரி இருக்கிறது.

யாராவது இப்படி வாதத்தால் பீடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.ஆங்கில வைத்தியத்திலேயே இதற்து முழு தீர்வு கிடையாது என்கிறார்கள்.ஆனபடியால் எவ்வளவு காலம் பாவிக்க வேண்டுமென்பது தெளிவில்லை.

நன்றி

அது எங்கே கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

வேர்க்கொம்பு தூள் ஒரு கப்

காய்ந்த இஞ்சி தூள் தானே!

இங்குள்ள் super market களில் கிடைக்கும் அதுதானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஞ்சள் மாவு ஒரு கப்

அது எங்கே கிடைக்கும்?

லண்டனிலை தானே இருக்கிறியள்??????  :rolleyes:

kurkuma.jpg

  • 5 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாதத்தை போக்கும் ஆயுர்வேதம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தவாத நோய்க்குக் குளிர் பிரதான எதிரி. எனகுத் தெரிந்தவர் ஒருவர் எந்த சிகிச்சை செய்தும் மாறாமல் இப்ப ஒஸ்ரேலியா போவதற்கு தயார்செய்கிறார்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

On 8/3/2014 at 1:31 AM, ஈழப்பிரியன் said:

யாராவது இப்படி வாதத்தால் பீடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.ஆங்கில வைத்தியத்திலேயே இதற்து முழு தீர்வு கிடையாது என்கிறார்கள்.ஆனபடியால் எவ்வளவு காலம் பாவிக்க வேண்டுமென்பது தெளிவில்லை.

நன்றி

ஈழப்பிரியன், 6 வருடங்களின்பின் உங்கள் அனுபவத்தின் பயன்களைப் பகிர்ந்து கொண்டால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதில் குறிப்பிடப்படும் வாத நோய் என இவர்கள் குறிப்பிட்டு இருப்பது Stroke / paralysis என்பதையா? ஓம் எனில் கண்டிப்பாக ஆங்கில மருத்துவ ரீதியிலான சிகிச்சையை தவிர வேறு வழிகளின் மூலம் நிவாரணம் கிடைக்காது.

சிலர் முதுகு வலி, மூட்டு வலி, கழுத்து வலி, கால் வலி போன்றவற்றையும் வாதம் என்பர். இப்படியானவற்றுக்கு ஆங்கில மருத்துவத்தை விட அக்குபஞ்சர், chiropractic போன்ற சிகிச்சை முறைகள் நிவாரணம் கொடுத்துள்ளதை நண்பர்கள் மத்தியில் கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தவாத நோய்க்குக் குளிர் பிரதான எதிரி. எனகுத் தெரிந்தவர் ஒருவர் எந்த சிகிச்சை செய்தும் மாறாமல் இப்ப ஒஸ்ரேலியா போவதற்கு தயார்செய்கிறார்.

உண்மை. எனது நெருங்கிய உறுப்பினருக்கு மூட்டு வாதம்  இருந்தது. எங்கோ படித்த நினைவில், புவி குளிர்வடையும்போது அல்லது மதியம் ஒருமணி அல்லது இரண்டு மணிக்குப்பின்  குளிக்காதே என்று  அவருக்குக் கூறினேன். அவரும் அதனை கடைப் பிடித்து அதீத பலனை அடைந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கில மருந்துவ மருந்துகள் அதிகமாக எடுத்தாலும் மூட்டுவலிகள்/தசை வலிகள் வரலாம் எனவும் கூறுகின்றனர்.உதாரணத்திற்கு கொலஸ்ரால்  பிரச்சனைக்கு எடுக்கப்படும் மாத்திரைகளால் மூட்டு தசை வலிகள் வரலாம். அந்த மருந்தின் பக்கவிளைவுகள் பட்டியலில் மூட்டு தசை வலி முதலாமிடத்தில் இருக்கின்றது.

அந்த மருந்துகளின் பட்டியல்.
Simvastatin, Lovastatin, Atorvastatin, Pravastatin, Fluvastatin, Pitavastin und Rosuvastatin .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kapithan said:

உண்மை. எனது நெருங்கிய உறுப்பினருக்கு மூட்டு வாதம்  இருந்தது. எங்கோ படித்த நினைவில், புவி குளிர்வடையும்போது அல்லது மதியம் ஒருமணி அல்லது இரண்டு மணிக்குப்பின்  குளிக்காதே என்று  அவருக்குக் கூறினேன். அவரும் அதனை கடைப் பிடித்து அதீத பலனை அடைந்தார்.

எனக்கு நீண்ட காலமாக இருந்த ஒரு சந்தேகம். நீங்கள் இந்த குளியல் விடயத்தை எழுதியதால் உங்களிடமே என் சந்தேகத்தை கேட்கலாம் என நினைக்கின்றேன்.
நான் தினசரி மூன்று தடவைகள் குளிப்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். இதனாலும் மூட்டு வலிகள் வருமா?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

எனக்கு நீண்ட காலமாக இருந்த ஒரு சந்தேகம். நீங்கள் இந்த குளியல் விடயத்தை எழுதியதால் உங்களிடமே என் சந்தேகத்தை கேட்கலாம் என நினைக்கின்றேன்.
நான் தினசரி மூன்று தடவைகள் குளிப்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். இதனாலும் மூட்டு வலிகள் வருமா?

நான் அப்படி எண்ணவில்லை . சிலருடைய உடல் சுவாத்தியத்திற்குத்தான் குளிர் ஒத்துவராதென நம்புகிறேன். எனது சொந்த அனுபவம், எனது குடும்ப உறிப்பினர் பலருக்கு  குளிர் ஒத்துவரவில்லை. 

அவர்கள் எல்லோருமே குளிக்கப் போனாலென்ன, குளிக்கப் போனாலென்ன அல்லது சட்டி பானை கழுவப் போனாலென்ன மணித்தியாலக் கணக்கில் ஈரத்திற்குள் நிற்பினம். அப்படி நின்ற எல்லோருக்கும் மூட்டுவாதம் வந்தது. யாரெல்லாம் குளிருக்குள் நிற்பதை குறைத்தார்களோ அவர்களெல்லாம் பெருமளவு சுகமடைந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு நீண்ட காலமாக இருந்த ஒரு சந்தேகம். நீங்கள் இந்த குளியல் விடயத்தை எழுதியதால் உங்களிடமே என் சந்தேகத்தை கேட்கலாம் என நினைக்கின்றேன்.
நான் தினசரி மூன்று தடவைகள் குளிப்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். இதனாலும் மூட்டு வலிகள் வருமா?

tenor.gif?itemid=14766519

அவனவன் ஒரு நேரம் குளிக்கிறதுக்கே தண்ணி இல்லாம கிடக்குறானுக..!

இவருக்கு ஒரு நாளைக்கு மூனு முறை..? அப்படி என்னதான் செய்யுறார்..? 😋

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

இவருக்கு ஒரு நாளைக்கு மூனு முறை..? அப்படி என்னதான் செய்யுறார்..? 😋

விடுங்க ராசவன்னியன். அவருக்கு ஏகப்பட்ட அலுவல்கள் இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

7 hours ago, ராசவன்னியன் said:

tenor.gif?itemid=14766519

அவனவன் ஒரு நேரம் குளிக்கிறதுக்கே தண்ணி இல்லாம கிடக்குறானுக..!

இவருக்கு ஒரு நாளைக்கு மூனு முறை..? அப்படி என்னதான் செய்யுறார்..? 😋

3 hours ago, Kavi arunasalam said:

விடுங்க ராசவன்னியன். அவருக்கு ஏகப்பட்ட அலுவல்கள் இருக்கலாம்

அதுக்காக நாளுக்கு மூன்று முறை என்பது ரொம்ப அநியாயம் சார் , தண்ணியை வீணாக்குகிறார்.......!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ராசவன்னியன் said:

tenor.gif?itemid=14766519

அவனவன் ஒரு நேரம் குளிக்கிறதுக்கே தண்ணி இல்லாம கிடக்குறானுக..!

இவருக்கு ஒரு நாளைக்கு மூனு முறை..? அப்படி என்னதான் செய்யுறார்..? 😋

4 hours ago, Kavi arunasalam said:

விடுங்க ராசவன்னியன். அவருக்கு ஏகப்பட்ட அலுவல்கள் இருக்கலாம்

44 minutes ago, suvy said:

அதுக்காக நாளுக்கு மூன்று முறை என்பது ரொம்ப அநியாயம் சார் , தண்ணியை வீணாக்குகிறார்.......!  😁

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.