Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை, உயர்பாதுகாப்பு வலயம் எதற்கு? - நாடாளுமன்றில் சம்பந்தன் கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை, உயர்பாதுகாப்பு வலயம் எதற்கு? - நாடாளுமன்றில் சம்பந்தன் கேள்வி. 
[Friday 2014-08-08 09:00]
sampanthan-150-news.jpg
முன்னர் விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்களைக் காரணம் காட்டி உயர் பாதுகாப்பு வலயங்களை விஸ்தரித்தீர்கள். இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறித் தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை. பின்னர் ஏன் நில அபகரிப்பைத் தொடருகின்றீர்கள்? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு கூறினார். அவர் தனது உரையில், காணிகளை இழந்த மக்களுக்கு ஆட்சியுரிமைச் சட்டமூலம் சாதகமாக அமைந்தாலும் அதன் கால எல்லை ஒரு வருடமாக்கப்பட்டதன் பின்னணி என்ன?
  
மக்களுக்கு நீதியை வழங்காத அரசால் நிலைத்து நிற்கமுடியாது."காணி விவகாரம் தொடர்பில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்காக இச்சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் சாதகத்தன்மை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நன்மை பெறக்கூடிய கால எல்லை ஏன் ஒருவருடமாக்கப்பட்டது? இதன் பின்னணி என்ன? காணி சம்பந்தமாக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டால் சிலவேளை 10 வருடங்களாகக் கூட வழக்கு விசாரணை நடைபெறும். இந்நிலையில், மேற்படி சட்டவரைவில் ஒரு வருடமென மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை ஏன்? மேற்படி சட்ட வரைவு திருத்தத்தின் 5ஆம் பகுதி குறித்து நிற்பது என்ன? புரியவில்லை. அது பற்றிய விளக்கம் அவசியம்.
 
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் காணிப் பிரச்சினை அதிகரித்துக் காணப்படுகின்றது. இன்னும் உயர் பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்படவில்லை. புலிகள் காலத்தில் ஆட்லறி தாக்குதலைக் காரணம் காட்டி பாதுகாப்பு வலயங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை. அப்படியானால் காணி ஏன் பிடிக்கப்பட்டுள்ளது? தொடர்ந்தும் காணிகள் கையகப்படுத்தப்படுவதன் நோக்கம்தான் என்ன? இது அரசின் மோசமான கொள்கையையே வெளிப்படுத்துகின்றது. அதேவேளை, வடக்கு, கிழக்கில் பெருபான்மை இனக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. குடிப்பரம்பலை மாற்றியமைக்கவே இவ்வாறு செய்யப்படுகின்றது. கலாசாரம், மொழி மாற்றியமைக்கப்படுவதன் நோக்கம் என்ன?
 
இந்து சமய இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இது தொடர்பில் அரசுக்குப் புரிந்தும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. கிண்ணியாவில் புத்தர்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை - இந்திய ஒப்பந்தம் மீறப்படுகின்றது. எமக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைவாகவே உள்ளது" என்று தெரிவித்தார் சம்பந்தன் எம்.பி.http://www.seithy.com/breifNews.php?newsID=114518&category=TamilNews&language=tamil

தேர்தல் விரைவில் வருகிறது போல ஒரு வாடை அடிக்கிறது...வெளி நாடுகளிடம் இலங்கையை காப்பாற்றி உள்ளூர் பாரளுமன்றத்தில் ஒப்பாரிவைத்தால் ராசபக்ச அணைத்து தேவையான நிதி தருவார் அடுத்த சந்ததிக்கும் வாழ்க்கை ஓட்டலாம்.. ஆள் இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரையாம்.. பாராளுமன்றத்தில் பேசிப்பேசி காலங்கள் போக்கி கவுண்டது தான் சிங்கக்கொடி...

அனுபவம் பேசுதாக்கும் .

நமக்கு ஒன்று மட்டும் புரியல்ல.. இங்க உள்ளமெத்தப்படித்த அறிவாளிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

தலைவர்களை விமர்சிக்கிறதை விட்டிட்டு அவர்களை ஒதுக்கித் தள்ளிட்டு தாங்கள் தங்கள் அறிவுக்கு போராடி

விடுதலை அல்லது உரிமை பெற்றுக் கொடுக்கலாமே. வெறும் இணையப்பத்திரிகை வழிகாட்டியாக இருக்காமல் :) 

மக்கள் விமர்சனமே செய்யக்கூடாது என்பதுபோல் இருக்கு. :D  அடுத்தமுறை புது தொலைக்காட்சி ஒன்று வாங்கி அது நின்றுபோனால் தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றும் சொல்லக்கூடாது.. ஏனென்றால் எமக்கு தொலைக்காட்சி செய்யத் தெரியாது.  :o

பொதுமக்கள் சேவைக்கு வந்தவர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் விமர்சனத்தை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.  :icon_idea:

"சீமான் வசவுக்கு காத்திருந்தோருக்கு ஏற்ற நல்ல திரியாக இது இப்போது உருவெடுத்துள்ளது. பிரபாகரனையே வசவு பாட வாய்ப்புத் தேடும் இடத்தில்.. சீமான் என்ன சீமான்.  :lol:  :icon_idea:

நமக்கு ஒன்று மட்டும் புரியல்ல.. இங்க உள்ள அறிவாளிகள் சீமான்.. பிரபாகரனை ஒதுக்கித் தள்ளிட்டு தாங்கள் தங்கள் அறிவுக்கு போராடி விடுதலை அல்லது உரிமை பெற்றுக் கொடுக்கலாமே. வெறும் பிள்ளை குட்டி பெத்து அதை வளர்த்து காலம் கழித்து மண்டயைப் போடுற நேரத்துக்கு.  :D"   - நெடுக்ஸ் . இசை பச்சை.

பொதுமக்கள் சேவைக்கு வந்தவர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் விமர்சனத்தை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.   :icon_idea:

--இசை ,இதற்கு நெடுக்ஸ் பச்சை குத்தினாலும் குற்றுவார் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு நெடுக்ஸ் இன் கருத்துச் சுதந்திரம் பறிபோனதாய் ஆகிவிடும்.. :D

சீமானின் மீது குற்றம் சுமத்த எப்படி சுதந்திரம் உள்ளதோ.. அதேபோல அதை மறுக்கவும் ஏனையோருக்கு சுதந்திரம் உள்ளது. ஏனெனில் எல்லாமே குற்றச்சாட்டு அளவிலேயே உள்ளது.. அந்த அடிப்படையிலேயே பச்சை வழங்கப்பட்டது.  :icon_idea:

மக்கள் விமர்சனமே செய்யக்கூடாது என்பதுபோல் இருக்கு. :D  

பொதுமக்கள் சேவைக்கு வந்தவர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் விமர்சனத்தை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.  :icon_idea:

விமர்சனம் விமர்சிக்கப்படுகிரவரை நல்வழிப்படுத்தவேண்டும் ,அனால் இங்கு விமர்சனம் என்ற போர்வையில் சிலர் தங்களுடைய காழ்ப்பையும் வசை பாடுதலையும் தான் செய்கின்றார்கள் .

என்னைப்பொறுத்தவரையில் விமர்சனம் செய்பவர்களுக்கு அவரவர் மொழியிலேயே பதில் கொடுப்பேன் .

Edited by Gari

போலிகளை இனம்காட்டி, இனத்திற்கு வழிகாட்டியாக இருப்பதே இப்போதைக்கு போதும்.சிங்கக்கொடி ஒரு நாள் விழ அதில் உண்மையான புலிக்கொடி பறக்கும்.. அப்போது,போலிகள், தமிழின எதிரிகள் எங்கோ ஒடிமறைவர்.

மக்கள் விமர்சனமே செய்யக்கூடாது என்பதுபோல் இருக்கு. :D  அடுத்தமுறை புது தொலைக்காட்சி ஒன்று வாங்கி அது நின்றுபோனால் தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றும் சொல்லக்கூடாது.. ஏனென்றால் எமக்கு தொலைக்காட்சி செய்யத் தெரியாது.  :o

பொதுமக்கள் சேவைக்கு வந்தவர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் விமர்சனத்தை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.  :icon_idea:

http://youtu.be/U_jjCz2_bA8?t=9m14s

  • கருத்துக்கள உறவுகள்

 சீமான் என்னத்தையும் செய்யட்டும் நாங்கள் ஏதாவாது நமது மக்களுக்கு செய்வோம்.

போலிகளை இனம்காட்டி, இனத்திற்கு வழிகாட்டியாக இருப்பதே இப்போதைக்கு போதும்.சிங்கக்கொடி ஒரு நாள் விழ அதில் உண்மையான புலிக்கொடி பறக்கும்.. அப்போது,போலிகள், தமிழின எதிரிகள் எங்கோ ஒடிமறைவர்.

போலிகளே நீங்கள் தானே ,விசைப்பலகையில் தட்டச்ச்சு செய்துகொண்டு வழிகாட்டியாக இருக்கமுடியாது ,இப்படி சொல்லிச்சொல்லியே மக்களை பேக்காட்டுங்கோ அதாவது தலைவர் வருவார் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்க என்று சொல்லுகின்ற பேர்ப் பட்டியலில் தான் உங்களையும் சேர்க்கவேண்டும் .

புலம்பெயர்ந்த நாட்டில் உள்ள போலித்தேசிய செயற்பாட்டாளர்கள் யதார்த்தத்தையும் உண்மைகளையும் மக்களுக்கு சொல்லும்வரை தமிழனுக்கு விடிவு வெகு தொலைவில் ?

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் சீமான் மீது வைக்கப்படும் வசவுக்கு விமர்சனம் என்று அடையாளமிட விரும்புகிறார்கள்.

விமர்சனம் என்பது Pros and Cons இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தெளிவான நோக்கத்தைக் கொண்டிருக்கும். யாழில் முன்னாள் ஒட்டுக்குழுக்களிடம் இருந்து அது இங்கே வைக்கப்படுவதில்லை. அவர்களின் பார்வையில்.. புலிகள் என்றால்.. வசவுக்கு.. என்பது எழுதாத சட்டமாகிவிட்டது.

நாங்கள் சம்பந்தனின் இரட்டை நிலைப்பாடுகளை மக்களுக்கு இனங்காட்டும் அதேவேளை... அவரின் மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான முடிவுகளை வரவேற்கவும் செய்கிறோம். இதுதான் ஜனநாயக பண்புள்ள அரசியல் சார்ந்த.. மக்கள் நலன் சார்ந்த விமர்சனத்தின் தன்மை ஆகும். :icon_idea::)

There is are no "pros and cons" in seemon's case... only "cons"; he cons us and tamilnadu people....

நாங்கள் சம்பந்தனின் இரட்டை நிலைப்பாடுகளை மக்களுக்கு இனங்காட்டும் அதேவேளை... அவரின் மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான முடிவுகளை வரவேற்கவும் செய்கிறோம். இதுதான் ஜனநாயக பண்புள்ள அரசியல் சார்ந்த.. மக்கள் நலன் சார்ந்த விமர்சனத்தின் தன்மை ஆகும். :icon_idea::)

யாழ் இணையத்தில் இப்படி நடந்ததா ?ஆச்சரியமாக இருக்கிறதே ?

அடி மேல் அடி போட அம்மியும் அசையுமாம்  :D  :icon_idea:

எப்பிடியெல்லாம் ஜோசிக்கிறாங்க நம்ம நா.................மக்கள்  :D  :D  :D

நெடுக்கின் "விமர்சனம்" குறித்த கருத்தை ஆதரிக்கிறேன். கடந்த காலங்களில் எப்படியோ எதிர்காலத்தில் தவறுகளை சுட்டிக்காட்டி, கண்டிக்கும், அதே வேளை நல்ல விடயங்களை. பாராட்டும் மனோபாவத்துடனான விமர்சனங்களை உருவாக்க அனைத்து உறுப்பினரும். இணைந்து முயற்சி செய்வோம். எனது பார்வையில்திரு. சம்பந்தனின் கேள்வி நியாயமானது. இவ்விடயத்தை திரு. சம்பந்தன் உறுதியுடன் அனைத்துலகத்திற்கு எடுத்து செல்லவேண்டும். தனியே பாராளுமன்ற பேச்சோடு விடக்கூடாது. திரியின் பிரதான விடயமான இவ்விடயம் பற்றி எந்த அக்கறையும் இன்றி சக உறுப்பினரின்  கருத்குக்கு அல்லது வசைமாரிக்கு பதிலளிக்கும் விதமான கருத்துகளை எதிர்காலத்தில் நாம் தவிர்த்து கொள்ளலாம் என்பது எனது கருத்து.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை, உயர்பாதுகாப்பு வலயம் எதற்கு?
தமிழர்கள் இருக்கின்றார்களே ஐயா.....
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இருக்கின்றார்களே ஐயா.....

இது கருத்து !!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.