Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோல்கேட் பற்பசையில் புற்றுநோய் காரணியான டிரைக்ளோசன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன்: புற்றுநோய்க்குக் காரணமான முக்கியமான ஒரு வேதிப் பொருளைத்தான் பல லட்சம் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதாவது கோல்கேட் டோட்டல் பற்பசையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று என்று இந்த ஆய்வு கூறுகிறது. பற்களில் ஏற்படும் ஈறு பாதிப்பை ஏற்படுத்தும் நோயைக் குணமாக்க கோல்கேட் பேஸ்ட்டில் டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுவதாக கோல்கேட் நிறுவனம் கூறுகிறது.

புற்று நோய்க் காரணி: ஆனால் இந்த வேதிப் பொருள் புற்று நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. இந்த வேதிப் பொருள் பாதுகாப்பானது, பயன்படுத்தலாம் என்று கடந்த 1997 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பலமான தவறுகள்: ஆனால் இந்த அனுமதிக்குப் பின்னர் சில தவறுகள் நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம்: அதாவது கோல்கேட் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த அனுமதியை உணவு மற்றும் மருந்துக் கழகம் கொடுத்துள்ளது. இதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு வழக்கறிஞர் வெளிக் கொணர்ந்துள்ளார்.

ஆட்சேபனை தெரிவிப்பு: உண்மையில் கோல்கேட் நிறுவனம் கடந்த 1997 இல் இந்த வேதிப் பொருளை பயன்படுத்த அனுமதி கோரியபோது உணவு மற்றும் மருந்துக் கழகத்தில் இடம் பெற்றுள்ள பலரும் இது ஆபத்தானது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால் கோல்கேட் தாக்கல் செய்த ஆய்வறிக்கையிலோ, அதிக அளவில் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தினால்தான் ஆபத்து என்று வாதிடப்பட்டிருக்கிறது.

அபாயகரமான வேதிப்பொருள்: இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்விலுலும் டிரைக்ளோசன் அபயாகரமான ஒரு வேதிப் பொருள், புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வில் தகவல்: பற்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தவே டிரைக்ளோசன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய வேதிப் பொருட்களில் ஒன்று என்று 2010 இல் நடந்த ஆய்விலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலட்டுத்தன்மை: மேலும் இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் 2013 இல் நடந்த ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

http://tamil.oneindia.in/

கனடாவில் எங்கே வேப்பங் குச்சி விற்கின்றார்கள் என்று அறியத் தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் எங்கே வேப்பங் குச்சி விற்கின்றார்கள் என்று அறியத் தரவும்.

அது மனிதர்களுக்கு பயன் கொடுக்க கூடியது அதை இறக்குமதி செய்து தமிழர்களுக்கு விற்பனை செய்ய முடியாது.
 
இங்கு தேவைக்கு பயன்படாத அம்மி ஆட்டுக்கல் ... இவைகள் வேண்டுமென்றால் எல்லா கடையிலும் கிடைக்கும்.
 
ஊரில் அத்தனை கோப்பைகளுக்கு வசதி இல்லாத காரணத்தால்தான் தாமரை இலை வாழை இலை போட்டு பந்தி வைப்பார்கள்.
இப்போ கோப்பை $5 டொலருக்கு வாங்கலாம்.
$500 செலவழித்து வாழை  இலை கொண்டு வருகிறார்கள். தமிழனின் தலையில் கட்டிவிடலாம் என்ற முழு நம்பிக்கையும் இருக்கிறது. அவர்களை ஈழ தமிழர் ஒருபோதும் ஏமாற்றியதும் கிடையாது இதுபோன்ற விடயங்களில். 
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் எங்கே வேப்பங் குச்சி விற்கின்றார்கள் என்று அறியத் தரவும்.

 

எங்கையாயலும் சாம்த்திய பட்ட பெண் பிள்ளைகளின் வீட்டுக்கு போனால் இலை போக குச்சி மிஞ்சும்.விசாரிச்சு பார்க்கவும். :rolleyes::lol:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரக்கரியாலையும்.உமிச்சாம்பலாலையும் பல்லு தீட்டின சனத்தை நக்கலடிச்சவனுக்கு நல்ல பரிசு. :icon_idea:

கோபால் பல் பொடியில் இருக்கும் பிங்க் கலர் எப்படி செய்யப்படுவது? யாருக்காவது தெரியுமா? தகவல் அறிய தான்...

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் எங்கே வேப்பங் குச்சி விற்கின்றார்கள் என்று அறியத் தரவும்.

 

 

அண்மையில்  எமது ஊரில் ஏதாவது தொழில் வசதிகளை  ஏற்படுத்திக்கொடுக்கணும் என்று  சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன்

 

அப்பொழுது ஒருவர்  சொன்னது இது

உங்களது ஊரில் மிகவும் வழமாக ஆழமாக  வளரக்கூடியது வேம்பு

அதன் பலன்கள் எண்ணிலடங்கா

வேப்பெண்ணை

வேப்பமிலை

வேம்பு குடிநீர்

வேம்பு தடி

வேம்பு......???

அந்தவகையில் இவற்றை  செய்வதனூடாக

தொழிலும் வருமானமும் மருத்துவத்துக்கும்  உதவுவதோடு

எமது மக்களின் மட்டுமல்லாது

உலக ரீதியாக மக்களின் நலத்துக்கும் உதவமுடியும்

அத்துடன் எமது மருத்துவத்தை  அழியாது பாதுக்காக்கவும் முடியும் என்றார்.

அப்படியொரு நோக்கம் உள்ளது

பார்க்கலாம் 

நான் கோல்கேட் பற்பசை பாவிப்பதில்லை சிக்னல் அல்லது Oral B தான் பாவிக்கிறனான்  :D

தேனீக்களை கொல்லும் நச்சு திரவங்களை தடை செய்வதை எதிர்க்கும் தலையிடி மருந்து பேயர் நிறுவனம். இரு வருடங்களுக்கு முன்பு வரை பேயர் கோழி தீனிக்குள் கோழியை கொழுக்க வைக்க ஆர்சனிக் நஞ்சை கலந்தது.

இரசாயன புண்ணாக்கை திண்டே தீருவோம் என்று அடம்பிடிக்கும் மந்தைகளுக்கு கான்சர் பரிசு காவல் இருக்கிறது.

Amid mounting public concern over the link between pesticides and the decline of insect pollinators, the industry group that represents the makers of the chemicals says restricting use of the crop protection would “handcuff” farmers in their battle against insects.

The Ontario government’s proposal to end the blanket use of a class of pesticide known as neonicotinoid by requiring growers to seek a licence to apply it would create two tiers of farmers, and hamper one of the province’s key economic sectors, said Pierre Petelle of industry group CropLife Canada, which represents Bayer AG, Syngenta AG and other makers of pesticides.

http://m.theglobeandmail.com/report-on-business/the-battle-over-pesticides/article19909522/?service=mobile

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சேபனை தெரிவிப்பு: உண்மையில் கோல்கேட் நிறுவனம் கடந்த 1997 இல் இந்த வேதிப் பொருளை பயன்படுத்த அனுமதி கோரியபோது உணவு மற்றும் மருந்துக் கழகத்தில் இடம் பெற்றுள்ள பலரும் இது ஆபத்தானது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால் கோல்கேட் தாக்கல் செய்த ஆய்வறிக்கையிலோ, அதிக அளவில் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தினால்தான் ஆபத்து என்று வாதிடப்பட்டிருக்கிறது.

அபாயகரமான வேதிப்பொருள்: இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்விலுலும் டிரைக்ளோசன் அபயாகரமான ஒரு வேதிப் பொருள், புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தெரிந்தே தான் தவறு 1997ல் இருந்து. :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.