Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோ - ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் கரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Gary-Anandasangaree-210814-300-seithy1.j

ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் திரு கரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றார். அவருக்கு 1400 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஸ்வானிக்கு 600 வாக்குகளும் கிடைத்தன. கரி வெற்றி பெற்று விட்டார் என லிபரல் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கனடிய அரசியல் கட்சிகளில் ஒன்றான லிபறல் கட்சி சார்பில் ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு போட்டியிட இருவர் ஒரே கட்சியில் விண்ணப்பித்திருந்த நிலையில் அவாகளுள் ஒருவரை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட வைப்பதற்காக கட்சியினால் நியமனத் தேர்தல் 20-08-14 அன்று மாலை நடாத்தப்பட்டது. இதில் கனடிய தமிழரான சட்டத்தரணி கரி ஆனந்த சங்கரி வெற்றிபெற்றார்.

  

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற மாலைநேர நியமணத் தேர்தலில் 1400 வாக்குகள் பெற்று சட்டத்தரணியான திரு கரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்று கனடாவின் பாராளுமன்றுக்கு செல்வதற்கான தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் தனி வாய்ப்பை பெற்றுள்ளார். இதன்முலம் கனேடியத்தமிழர்களுள் இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினராக திரு கரி ஆனந்த சங்கரி லிபறல் கட்சியில் பாராளுமன்ற அங்கத்துவம் பெறும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார். கடந்த காலங்களில் என் டி பி கட்சி சார்பாக போட்டியிட்டு ராதிகா சிற்சபைஈசன் என்கிற பெண்மணி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

gary-200814-won-600-seithy-003.jpg

 

 

gary-200814-won-600-seithy-004.jpg

 

 

gary-200814-won-600-seithy-001.jpg

 

 

gary-200814-won-600-seithy-002.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115365&category=TamilNews&language=tamil

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை. இறுதி தேர்தலில் நிச்சயம் மண் கவ்வுவார்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழரின் வெற்றி உங்களை மகிழ வைக்கவில்லையா?" சிலர் என்னை கேட்டார்கள்.

"இனத்தின் வெற்றியே தமிழரின் வெற்றி. தமிழராக வாழும் தமிழரின் வெற்றி எங்களை மகிழ்விக்கும்! அந்த வகையில் இனத்தின் பெயர் சொல்லி வென்றமைக்கு வாழ்த்துக்கள்!"

" நிச்சயமாக இந்த வெற்றி எங்களை மகிழ வைக்கும் வெற்றி பெற்ற தமிழர் இனியாவது எங்கள் மண்ணில் நடந்தது இனப்படுகொலை என துணிவோடு நெஞ்சு நிமிர்த்தி கூறுவாராயின்.

அழிந்து போகும் இனத்தின் சாட்சியாக தமிழராக எங்கள் இனத்துக்கு நீதிக்காக உழைக்கும் அதிகாரத்தைக் கையிலெடுத்தால் இனப்படுகொலையை நிறுவிக் காட்டும் தமிழராய் இருந்தால் எங்கள் ஆதரவு உங்களுக்காய் இருப்பதில் என்ன தவறு? ...

நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் மண்ணில் எங்கள் இனத்துக்கு நடந்தது இனப் படுகொலை என மட்டும் சொல்லுங்கள். வேறென்ன வேண்டும் எமக்கு? வேறு எதை கேட்டோம் நாம்?

தமிழினத்தின் அவலத்தை தமிழர் எனக் கூறிக் கொள்ளும் எவரும் தயவு செய்து திரித்துச் சொல்லாதீர்கள். என மட்டும் மீண்டும் மீண்டும் உங்களை வெல்ல வைத்த இனத்தின் பெயரால் மன்றாட்டமாக கேட்கின்றேன் அன்னைத் தமிழ் மீது ஆணையிட்டுக் கேட்கின்றோம்.

தமிழர் வெல்ல வேண்டும் என்று தமிழரே உழைத்தார்கள். வேறு இனம் உழைத்துக் கொடுத்த வெற்றி இது அல்ல. அந்த நன்றிக்கேனும் எங்கள் இனத்தின் படுகொலை பற்றி பேசவது உங்கள் கடன். 

தயவு செய்து எங்கள் இனத்தை விலை பேசாத மாந்தாராக இருங்கள். . எங்கள் மண்ணில் இந்த நூற்றாண்டின் கொடிய இனப் படுகொலை நடந்ததை மட்டும் உரத்துச் சொல்லுங்கள் என்பதொன்றையே நாங்கள் இங்கு உங்களிடம் கேட்கின்றோம்.

 

https://www.facebook.com/sivavathani.prabaharan

  • கருத்துக்கள உறவுகள்

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை. இறுதி தேர்தலில் நிச்சயம் மண் கவ்வுவார்.  :D

 

வைத்துச் சொல்கின்றீர்கள் என அறிந்து கொள்ளலாமா?

வாழ்த்துக்கள் ஹரி!


வெற்றி நிட்சயம்!!!


:)  :D


மக்கள் தெளிவாய் இருக்கிறார்கள்!!

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை. இறுதி தேர்தலில் நிச்சயம் மண் கவ்வுவார்.  :D

 

இல்லை சீமான்.  வரும் தேர்தலில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.  அவரது கட்சியும் தொகுதியும் அப்படி.  எனது கணிப்பின்படி, அடுத்த தேர்தலில் வெற்றி பெறமாட்டார்.  

 

வாழ்த்துக்கள் ஹரி!

வெற்றி நிட்சயம்!!!

:)  :D

மக்கள் தெளிவாய் இருக்கிறார்கள்!!

 

மக்கள் இன்னும் மந்தைகளாகத்தான் இருக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.   :(    ஒரு தனிநபரின் சுயநல கனேடிய அரசியல் பிரவேசத்திற்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருந்தது என்பது தெளிவாகியுள்ளது.  எத்தனை பேரின் பேட்டிகள்.   எத்தனை பேரின் அறிக்கைகள்.  இத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தசங்கரி.. தானாகவோ.. குடும்பமாகவோ.. தமிழ் மக்கள் மீது சவாரி செய்வதை எனியும் அனுமதிக்க முடியாது. சங்கரி போல்.. ஒரு இனத்துரோகி தமிழ் மக்களுக்கு கிடைத்ததில்லை. இவரும்... அப்பரின் வழியை பின்பற்றும் அறிகுறிகள் இருப்பின்.. மக்கள் அது தொடர்பில்.. தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

 

ஒருத்தனை அரியணை ஏற்றும் மக்களே அவனை அதில் இருந்து.. இறக்க விரும்புகின்ற போது படுகிற பாடு எவ்வளவு சிரமமானது என்பதை.. சங்கரி எமது மக்களுக்கு தனது துரோகத்தால் பாடமாகக் கற்றுத் தந்துள்ளார். அதனை கனடிய வாழ் புலம்பெயர் தமிழர்கள் சிந்தித்து செயற்படுங்கள். தவறான ஒருவருக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் நிலைக்குப் போகாமல்.. தவறாக இவர்கள் வழிநடக்க ஊக்குவிக்காமல்.. அதீத நம்பிக்கைகளை இவர்கள் மீது வைக்காமல்.. அவதானத்தோடும்.. உத்தரவாதங்களை உறுதியோடுபெற்றும்.. இவர்களின் உள்நோக்கங்கள் அறிந்தும்.. மக்கள் தங்கள் தெரிவுகளை இடுவதே.. ஆபத்துக்களை வாக்குகளால் விலைக்கு வாங்கும் நிலையில் இருந்தும் மக்கள் தம்மை தற்காத்துக் கொள்ள உதவும்.

 

ஆனந்தசங்கரி.. எமது இனத்தின் ஒரு அசிங்கமான அடையாளம். அதனை ஹரி ஆனந்தசங்கரி புரிந்து கொண்டு செயற்படுவார் என்று நம்புவதிலும்.. புரிந்து செயற்பட வைக்க வேண்டியது.. இவர்களுக்கு வாக்களிக்க முன் வாக்காளர்கள் செய்ய வேண்டிய கடமை ஆகும். அதனை செய்ய முடியல்லைன்னா.. ஆபத்துக்களை வாக்குகளால் தெரிவு செய்வதை தவிருங்கள்..!!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சீமான்.  வரும் தேர்தலில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.  அவரது கட்சியும் தொகுதியும் அப்படி.  எனது கணிப்பின்படி, அடுத்த தேர்தலில் வெற்றி பெறமாட்டார்.  

 

 

மக்கள் இன்னும் மந்தைகளாகத்தான் இருக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.   :(    ஒரு தனிநபரின் சுயநல கனேடிய அரசியல் பிரவேசத்திற்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருந்தது என்பது தெளிவாகியுள்ளது.  எத்தனை பேரின் பேட்டிகள்.   எத்தனை பேரின் அறிக்கைகள்.  இத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

தெரிவான பின் ஹரி... தனது அப்பர்.. ஆனந்தசங்கரியோடு மகிந்தவை கனடாவுக்கு அழைத்து வந்து விருந்து வைச்சால் கூட.. என்ன பண்ண முடியும்.

 

இப்ப வாக்குக் கேட்கிறவ.. அப்ப பாப் கோன் சாப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க.

 

ராதிகா என்பவர் வேறு. இவர்கள் வேறு. இவர்கள் விடயத்தில் மக்கள் இரட்டிட்டு எச்சரிக்கையோடு முடிவுகளை எடுப்பது அவசியம்...!

 

ஆனந்தசங்கரியை தெரிவு செய்த மக்கள்.. ஒரு காலத்தில்.. அந்தத் தெரிவுக்காக வருந்தினர். அதற்கான பதிலடிகளை... கிளிநொச்சி மக்கள்...2013 இல்.. இல் தான் வழங்க முடிஞ்சது..! அதுக்குள்ள ஆனந்தசங்கரி செய்த துரோகத்தனங்கள் தான் எத்தனை எத்தனை..!! அத்தனைக்கும் அவருக்கு வாக்குப் போட்டோர்.. சேகரித்தோர் எல்லோருக்கும் பங்குள்ளது..! :icon_idea:

அந்த நிலை இங்கு வராது என்பதற்கு உத்தரவாதம்.. தேவை..??! அதை யாரும் கொடுக்கக் கூடிய நிலையில் இல்லை..!!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் பதில் எழுதிக் கொண்டிருந்தால் எனக்கும் கிறுக்கு என்று நினைப்பார்கள் நெடுக்ஸ்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாங்கொட்டை தாட்டது கிளிநொச்சியிலை.......மாம்பழம் தின்னுறது கனடாவிலை...

வைத்துச் சொல்கின்றீர்கள் என அறிந்து கொள்ளலாமா?

 

ஆனந்த சங்கரி குடும்பத்தை எனக்கு நீண்ட நாளாக தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதை வைத்து இதை சொல்கிறேன் தூயவன். ஆனந்த சங்கரியை விட இரட்டிப்பு ஆபத்தானவர் கரி சங்கரி

வாழ்த்துக்கள் ஹரி!

வெற்றி நிட்சயம்!!!

:)  :D

மக்கள் தெளிவாய் இருக்கிறார்கள்!!

 

மக்கள் தெளிவாக இருகிறார்களோ இல்லையோ அலை அக்கா நீங்கள் மிக தெளிவாக இருக்கிறீர்கள் என்பதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி குடும்பத்தை எனக்கு நீண்ட நாளாக தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதை வைத்து இதை சொல்கிறேன் தூயவன். ஆனந்த சங்கரியை விட இரட்டிப்பு ஆபத்தானவர் கரி சங்கரி

 

 

இப்படிச் சொல்லிக் கொண்டு படம் காட்டுவதே பலரின் வேலையாகிப் போய்விட்டது என்ன? 6 வயதுக்குப் பின்னர் தந்தையோடு இருக்கவில்லை என்பதையாவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்


b55d64ae4db3e60a85fbdec34cc3696b

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை. இறுதி தேர்தலில் நிச்சயம் மண் கவ்வுவார்.  :D

 

 

தந்தை செல்வா போல் ஏன் சந்திரஹாசன் இருக்கவில்லை? :)  :)

மட்டக்களப்பு எம்பி கனகரட்ணம் போலா அவர் மகன் இருந்தார்??

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு எம்பி கனகரட்ணம் போலா அவர் மகன் இருந்தார்??

 

ஒரு காலத்தில் சந்திரகாசனின் நிலை என்ன.. இன்று என்ன..???!

 

தமிழீழம் கேட்டுப் புறப்பட்ட தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தனின் நிலை என்ன..???!

 

மேலும்.. இவர் ஆனந்தசங்கரியின் கொள்கையை பிரதிபலிக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்..???!

 

இவருக்கு.. தமிழீழமே கொள்கை அல்ல.. சிங்கக் கொடியே எனது கொடி.. ஒற்றை நாட்டுக்குள் சகவாழ்வு.. இனப்படுகொலை பற்றி பேசப்படாது... என்று போதனை எடுக்கும் சம்பந்தன் எதுக்கு வக்காளத்து அறிக்கை சமர்ப்பிக்கனும்..??!

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. இன்னும் தமிழ் தேசியமும்.. இனப்படுகொலையும்..போர்க்குற்றமும் பேசிக்கிட்டு இருக்கின்னா... அதுக்குக் காரணம்.. மக்கள் தமிழ் தேசியம் என்ற அந்த சொல்லின் மீது கொண்டிருக்கும்.. நம்பிக்கையும்.. அதுக்கு வாக்களிக்க தயாராக உள்ளதுமே..!

 

கனடாவில்.. நிலை அதுவல்ல. அந்த வகையில்.. ஹரி ஆனந்தசங்கரியின் செயற்பாடுகள்.. தேர்தலுக்குப் பின்.. முழு தமிழர் விரோதமாக மாறாது என்பதை நியாயப்படுத்தக் கூடிய எதுவும் இல்லை. இப்படியான சூழலில்.. மக்கள்.. என்ன செய்யனும்.??! சிந்திக்கனும்..!! risk factors பற்றி அலசி ஆராயனும்.. அதுக்குப் பின் வேட்பாளர்கள் தரும் எழுத்துமூல.. உறுதிமொழிகளின் அடிப்படையில்.. தான் மக்கள் தமக்கு தேவையான நம்பிக்கைக்குரிய வேட்பாளரை முன்னிறுத்தனும்..! வெற்றி பெற வைக்கனும்..!

 

இந்த மதில் மேல் பூனை விளையாட்டுக்கள் சரிவராது. தமிழ் மக்களைப் பொறுத்த வரை.. ஏனைய கனடிய மக்கள் போன்று.. உரிமை அனுபவிப்புக்களோடு.. தாயக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கனும் என்பதே இலக்கு. அவர்களின் இலட்சியம் வெல்லப்பட சர்வதேசத்தின் மீது அழுத்தம் கொடுக்கனும் என்பதே இலக்கு. அதற்கு தெளிவான பகிரங்க உறுதிமொழிகளை தராதவிடத்து.. இனப்படுகொலை தொடர்பிலையே பூசிமொழுக நினைப்பவர்களை நம்பி எப்படி தமிழ் மக்கள் வாக்களிக்க கோர முடியும்..!!! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாலால் இத்தால் அறியத்தருவது என்னவென்றால் 15 வருடங்களாக யாழில் கருத்தெழுது எழுதும் நெடுக்ஸ் முகம் காட்டவில்லை என்பதற்காக அவரை வீரமற்றவராக நினைக்கக்கூடாது. அவரது வீரதால் தமிழீழ மண்ணில் நின்று விரைவில் தமிழீழத்தைப் பிரகடணப்படுத்துவார். சம்பந்தர் போன்றவர்கள் மூட்டை முடிச்சைக் கட்டத் தயாராகட்டும்

இப்படிச் சொல்லிக் கொண்டு படம் காட்டுவதே பலரின் வேலையாகிப் போய்விட்டது என்ன? 6 வயதுக்குப் பின்னர் தந்தையோடு இருக்கவில்லை என்பதையாவது தெரியுமா?

 

பனை மரத்திற்கு கீழே இருந்து கொண்டு பால் குடிக்க முடியாது தூயவன். கரி எத்தனை வயதில தந்தையை பிரிந்தார் என்பது முக்கியமல்ல. கரி என்பவர் யார்? அவரது உண்மை முகம் என்ன? அவர் எப்படிப்பட்டவர்? அவரது போலி வேஷம் சாயம் எப்ப கழரும்? என்பது தான் முக்கியம். போகிற போக்கை பார்த்தால் கரி ஆனந்த சங்கரிக்கு பிறக்கவில்லை என்று கூட சொல்லுவீங்கள் போல இருக்கு தூயவன். சும்மா கரி போன்ற போலி அரசியல் வேஷதாரிகளுக்கு வக்காலத்து வாங்குவதுவதை விட்டு விட்டு நீங்களே நேரடியாக அரசியலில் இறங்கி இருக்கலாம் தூயவன்.  :D

மாங்கொட்டை தாட்டது கிளிநொச்சியிலை.......மாம்பழம் தின்னுறது கனடாவிலை...

 

குசா அண்ணை நச்சென்று நறுக்கு தெறித்தாற்போல குடுத்திருக்கிறார். யதார்த்தத்தை இதை விட சிறப்பாக எழுதவே முடியாது. சுப்பர் குசா அண்ணை  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற கருத்துக்களின் அடிப்படையில் நோக்குகின்ற போது.. தமிழ் தேசியத்தை வைத்து இவரை விழுத்த இவர் ஒன்றும் பெரிய தமிழீழ அல்லது தமிழ் மக்கள் விடுதலையை நேசிக்கும் ஒருவராக இல்லை. தமிழ் தேசியத்திற்கு இவரால் ஆபத்து நேரலாம் என்ற அடிப்படையில் தான் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் இவரை மக்கள் தேர்வு செய்வது ஆபத்தாக முடியலாம் என்பது தான் வாதமாக உள்ளதே தவிர.. தமிழ் தேசியம் கொண்டு இவரை வீழ்த்த நினைக்கின  என்பது சரியான பார்வையோ.. சரியான வியாக்கியானமோ அல்ல..!

 

மேலும்.. தமிழ் மக்கள் விரோதமான.. அல்லது விரும்பாத ஒரு விடயத்தை கவனித்து தவிர்க்க முடியாத ஒரு நபர்.. எப்படி.. தமிழ் மக்களின் நலன்களை தேர்தல் வெற்றிக்குப் பின் கவனித்து நகர்வார் என்ற கேள்வி எழும்புகிறது.. அதனை இவர் ஐநாவில்.. தமிழ் மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தாதது.. சிங்கள பேரினவாத அரசின் கூலிகளோடு சேர்ந்து.. செயற்பட்டது உட்பட்ட உதாரணங்களை முன் வைத்து.. கேள்வியாக்கிறார்கள். இவர் சும்மா தன் பாட்டிற்கு சுய சார்பு மக்கள் தொண்டன் என்று சொல்லிச் செயற்பட்ட வேளையில்.. இவற்றை பெரிசாக தூக்கிப் பிடிக்க வேண்டும் என்றில்லை.. ஆனால்.. இன்று மக்கள் பிரதிநிதி என்று கனடிய பாராளுமன்றத்தில்.. இவர் போய் குந்த.. இவருக்கு தகுதிகள் இருக்கா என்று மக்கள்.. மக்கள் சார்ப்பில் உள்ள அமைப்புக்கள் ஆராய வேண்டியது அவசியம். தவறான ஒருவருக்கு தவறான உதாரணங்களை முன்வைத்து.. அவரின் கடந்த கால தவறுகளை மறைத்து.. வாக்களிக்கக் கோருவது கூட ஜனநாயக விரோதமாகும்.

 

ஹரி ஆனந்தசங்கரி.. தான்.. தவறு செய்யவில்லை. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான விளக்கம் அளித்து.. நான் தமிழீழத்துக்கோ.. தமிழ் தேசிய கோட்பாட்டியலுக்கோ எதிரானவன் அல்ல. ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நடப்பது இனப்படுகொலை தான்.. இனச் சுத்திகரிப்புத்தான்.. அதனை நாங்கள் சர்வதேசத்திடம்.. குறிப்பாக கனடிய பாராளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.. இவற்றின் அடிப்படையில் தான் சர்வதேசம் போர்க்குற்ற விசாரணைகளையும் மையமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்க சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்பேன்.. இதனை மக்களுக்கு உறுதியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலைப்பாட்டில் இருந்து நான் எப்போதும் மாறமாட்டேன் என்று... சொல்லட்டும்.எழுத்து மூல அறிக்கை மூலம்.. மக்கள் முன் வைக்கட்டும். அதுக்கு அப்புறம்.. பார்ப்போமே.. எந்த அமைப்பு.. அல்லது மக்கள்..இவரை எதிர்க்குதுன்னு.. என்ன காரணத்தை முன் வைக்குதுன்னு..??!

 

அப்படி எதுவுமே செய்யத் தூண்டாமல்.. ஹரி ஆனந்த சங்கரி நல்லவர்... வல்லவர்.. 6 வருசம் தான் அப்பன் மடியில் கிடந்தவர்.. 7 வருசம் முதல் அவதார புருஷர்.. அவர் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களோடு நின்றாலும்.. தமிழ் மக்களுக்கு நல்லவர்.. என்று சொல்வது.. அவ்வளவு.. ஆணித்தரமான நம்பிக்கைக்குரிய வார்த்தை ஜாலங்களாக இல்லையே..!!!!

Edited by nedukkalapoovan

gari எ விரும்பினாலும் தமிழர்களுக்கென்று ஒன்றும் செய்ய முடியாது..அவர் செய்ய வேண்டியது ...அவர் வென்றால்...தனது தொகுதி மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டியது தான்.....அந்த மக்களின் வாழ்வை முன்னேற்றவேண்டியது தான் அவரது வேலை....Gari அறிவாளி...ஆகவே தமிழர்களுக்கு அவப்பெயரை உண்டாக்க மாட்டார் என்று நம்புகிறேன்.....

 

Gari செய்ய கூடியது கனடிய நிறுவனங்களுக்கு இலங்கையில் சந்தையை விரிவு படுத்த உதவுவது தான்...இந்திய வம்சாவளி MPகள் இந்தியா/கனடா வர்த்தகத்துக்கு உதவுவது மாதிரி.....வேறு ஒன்றுமே முடியாது :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

பொது வாழ்வு

மற்றும் அரசியல் தலமைப்பீடங்கள் என்று வரும் போது

சந்தேகங்களும்

கருத்துமுரண்பாடுகள்

கொள்கை இடைவெளிகள்  வரலாம்..

விவாதிக்கலாம்

 

ஆனால் இதில் எனது கருத்து  அல்லது பயம் என்னவென்றால்...

இது போன்ற எமது  சந்தேகங்களால் 

அல்லது இடைஞ்சல்களால்

இவர்கள் ஒதுங்கிப்போய்விடக்கூடாது என்பதே..

 

என்னை  வைத்தே  நான் மற்றவரை மதிப்பிடுவேன்

எனக்கு இவ்வாறு நடந்தால்

நிச்சயம் ஒதுங்கிவிடுவேன்

இவ்வாறு பலர்  ஒதுங்கியுள்ளதை அறிவேன்.... :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தானவர்கள் ஒதுங்குவது.. ஒதுக்கப்படுவது கூட நல்லதே. கருணாவை சரியான நேரத்தில் ஒதுக்கி இருந்தால்.. இன்று நாம்.. இன்னும் பலமான வழியில் நின்றிருக்கலாம். ஆகவே.. சந்தேகப்படும் படி ஒரு தரப்பு நகர்கிறது என்றால் அங்கு சந்தேகம் கொள்ளாது ஏமாளியாக இருப்பதும் ஆபத்தே..!!!!

பொறுத்திருந்து பார்ப்போமே!

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப் போனால் ஹரி பெற்ற வாக்குகள் 1600, அஸ்வானி 600 வரையில் தான் பெற்றார்.கிட்டத்தட்ட 75 வீதத்துக்கு அதிகமானவை ஹரிக்குக் கிடைத்தது. அதில் பெரும்பகுதி தமிழர்களினது தாம்.. சொல்லப் போனால் பெரும்பாலான தமிழர்களுக்கு ஹரி மீத எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு சில விளக்கம் குறைவானவர்களும், சிங்கள கைக்கூலிகளும் தான் இந்தப் பிரச்சனை.. அதனால் இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சிங்கள கைக்கூலிகள் எதிர்பது என்பதில் தெளிவாக இருப்பார்கள். ஆனால் விளக்கம் குறைவானவர்களுக்கு விளங்கப்படுத்துவது தான் ரெம்பவே கடினம்...

 

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

Gary அவர்கள் ஒருமுறை எனக்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.

எனது வீட்டு முகவர் இவரை பரிந்துரை செய்தபோது எனது சந்தேகத்தைக் கேட்டேன். தகப்பனுக்கும், இவருக்கும் எந்த தொடர்பும், கருத்தியல் ஒற்றுமையும் இல்லை என்பதை எனது முகவர் தெளிவுபடுத்தினார்.

ஐநாவில் Gary அவர்களின் செயற்பாட்டில் அதை உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.