Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்தமுறை இந்தியா வரும்போது ஜெயலலிதாவுடன் சந்திப்பு! - மாவை எம்.பி நம்பிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
அடுத்தமுறை இந்தியா வரும்போது ஜெயலலிதாவுடன் சந்திப்பு! - மாவை எம்.பி நம்பிக்கை. 
[saturday 2014-08-23 07:00]
mavai-senathiraja-150.jpg

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசத் திட்டமிட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இது தொடர்பாக நேற்று புதுடில்லியில் நிருபரிடம் அவர்கள் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த முறை இந்தியா வரும்போது சென்னையில் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறோம். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கைக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=115480&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எப்பொழுதும் 

எமதை

கிடைப்பதை  விட

எட்டவே  பார்க்கின்றோம்

நினைக்கின்றோம்.. :(

அது புளிக்கும்  கதைதான் மிஞ்சப்போகிறது.. :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எப்பொழுதும் 

எமதை

கிடைப்பதை  விட

எட்டவே  பார்க்கின்றோம்

நினைக்கின்றோம்.. :(

அது புளிக்கும்  கதைதான் மிஞ்சப்போகிறது.. :(  :(

 

அவர்களும் தில்லியுடன் ராஜதந்திரம் பழகி, தங்கள் வீச்சை அதிகரிக்க வேண்டும்தானே? :o

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போனவர்கள்.... ஜெயலலிதாவிடமும் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கி சந்திப்பை நிகழ்த்திவிட்டு வந்திருக்கலாமே....
அதனை விட்டு, அடுத்த முறை  சந்திப்போம் என்பதெல்லாம், யாரை குளிர்வு படுத்த இப்படிச் செய்கிறார்கள் என்பது புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவர் சம்பந்தன்.. சுப்பிரமணியம் சுவாமிட சவாலுக்கு சவாலாத்தான் இந்தச் சந்திப்புக்களை நடத்தினவர் பாருங்கோ. சுப்பிரமணியம் சுவாமி ஜெ வை சந்திக்க முடியுமோன்னு சவால் விட்டால் தான் அடுத்த சந்திப்பு நடக்கும்.

 

இதுங்க திருந்தவே போறதில்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நல்ல ஆக்கபூர்வமான மக்கள் விருப்பை செயற்படுத்தக் கூடிய.. கூனிக்குறுகாத.. இளைய தலைமைகள் தேவைப்படுகுது. அந்த வெற்றிடத்தை நிரப்பாமல்.. தமிழ் மக்களின் தேசிய அரசியல் என்பது எந்த முன்னேற்றத்தையும் எட்டாது. சம்பந்தனும்.. சுமந்திரனும்.. மற்றவர்களும்.. தாங்கள் மிதவாதிகள்.. மென்போக்காளர்கள் என்று சிங்களவனை.. ஹிந்தியரை நம்ப வைப்பதிலேயே நேரம் கழிப்பார்களே தவிர.. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய ராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய நகர்வுகளை செய்யக் கூடியவர்களாத் தெரியவில்லை.!!! இது தான் யதார்த்தம்..!! இவர்களின் எல்லா விஜயங்களும் நேரச் செலவும்.. பணச் செலவும் மட்டுமே ஆகும்.!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போனவர்கள்.... ஜெயலலிதாவிடமும் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கி சந்திப்பை நிகழ்த்திவிட்டு வந்திருக்கலாமே....

அதனை விட்டு, அடுத்த முறை  சந்திப்போம் என்பதெல்லாம், யாரை குளிர்வு படுத்த இப்படிச் செய்கிறார்கள் என்பது புரியவில்லை.

 

ஒருவேளை சு.சாமி வகையறாக்களாக இருக்கலாம். :rolleyes:

 

அவர்களும் எவ்வளவு நாளைக்குத்தான் சீமான், திருமுருகன் காந்தி, வைக்கோ, நெடுமாறன் போன்ற வினைத் திறனற்ற ஆட்களை நம்பியிருப்பார்கள்? 

 

மு.க., ஜெ.ஜெ போன்றவர்களால் என்ன செய்துவிடமுடியும்? ஆகக் கூடியது கடிதம் எழுதலாம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமிழக முதல்வரைச் சந்திக்காமல் விட்டதில் அரசியல் இருக்கிறது.தமிழக முதல்வரின் நிலைப்பாடு சம்பந்தர் வகையறாக்களுக்கு பிடிக்கவில்லை . தமிழகம் இல்லாமல் எமக்கு வடிவு சாத்தியமில்லாத போது தமிழரைக் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தமிழகத்தைப் புறக்கணித்து தமிழக முதல்வரை தமிழருக்கு எதிரான நிலையை எடுக்கத்தூண்டுகிறது.அதென்ன அடுத்தமுறை சந்திப்பு????இப்ப என்ன வெட்டிப்புடுங்கிற வேலை இருக்கு?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் ஓடிப்போய் முதலில் பார்த்திருப்பினம் .... :D

இந்தியா வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாக இரண்டு நாள் முன்பு செய்தியில் கேட்ட ஞாபகம்...

  • கருத்துக்கள உறவுகள்

அதே விசயஞானமற்ற புலம் பெயர் புலம்பல்.

ததேகூ நேரம் கேட்டும் ஜெ ஒதுக்கவில்லை என்பது நானறிந்தது. இது ஜெக்கும் தெரியும் மாவைக்கும் தெரியும். மாவை ஒரு சமாளிப்பு அறிக்கை விடிறார். அதக்கூட்ட புரிந்துகொள்ள முடியாமல் .......என்னத்தச் சொல்லி... என்னத்த.

அதே விசயஞானமற்ற புலம் பெயர் புலம்பல்.

ததேகூ நேரம் கேட்டும் ஜெ ஒதுக்கவில்லை என்பது நானறிந்தது. இது ஜெக்கும் தெரியும் மாவைக்கும் தெரியும். மாவை ஒரு சமாளிப்பு அறிக்கை விடிறார். அதக்கூட்ட புரிந்துகொள்ள முடியாமல் .......என்னத்தச் சொல்லி... என்னத்த.

சும்மா ஒரு தேத்தண்ணி கடைக்கு வரச்சொல்லி சந்திதிவிட்டு போவதற்கு ஏன் இந்த எடுப்பு எடுக்கின்றார்கள் .

 

(யாழில் பலரது அரசியல் நிலை இதுதான் )

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு அரசியல் பயணம் மேற்கொள்ளும்... ஈழ தலைவர்கள் முதலில் தம்மை சந்திக்க வேண்டும் என்றே..... விரும்புகின்றவர்கள்.
அது... கருணாநிதி ஆகட்டும், ஜெயலலிதா ஆகட்டும்.
அப்படி மீறி ஈழத்தலைவர்களின் நிகழ்ச்சி நிரலில், முதலில் மத்திய அரசு இருந்து.... இரண்டாம் பட்சமாக இவர்களை சந்திக்க நேரம் கேட்டால்... அவர்களை சந்திக்க  நேரம் ஒதுக்குவதில்லை.
இது கடந்தகாலம் தரும் பாடம். கவலைக்குரியது.

 

இவர்கள் ஜெயா அம்மையாரை.... சந்திக்க நேரம் கேட்டதைப் பற்றி, செய்திகளில் வாசிக்கவில்லை.

அதனால்.... ஏற்பட்ட குழப்பம். http://www.yarl.com/forum3/index.php?showtopic=144795&hl=

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஜெயலலிதாவிடம் நேரம் கேட்டதாகவோ அவர்மறுத்ததாகவோ செய்திகள் வந்திருந்தால் இணைக்கவும்.முதலில் தமிழகமுதல்வரைச்சந்தித்தபின் மோடியைச் சந்திப்பதே பொருத்தமாக இருக்கும்.இனி ஜெயலலிதா நேரம் ஒதுக்கினமாதிரித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஜெயலலிதாவிடம் நேரம் கேட்டதாகவோ அவர்மறுத்ததாகவோ செய்திகள் வந்திருந்தால் இணைக்கவும்.முதலில் தமிழகமுதல்வரைச்சந்தித்தபின் மோடியைச் சந்திப்பதே பொருத்தமாக இருக்கும்.இனி ஜெயலலிதா நேரம் ஒதுக்கினமாதிரித்தான்.

 

 

சந்திப்பை ஒழுங்கு செய்தவர் சொல்லிப்போட்டார்

தான் தேநீர் குடிக்கப்போனதால

ஒழுங்க செய்வது தாமதமாம்

மற்றும்படி

இரு பகுதியும் கேட்டவையாம்..

நீங்க   இதை  நம்பமறுப்பது பயங்கரவாதமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழத்துக்குக் கூறும்போது ஒப்புக்குச் சொல்வது போல சந்திக்க விருப்பம் என்றால்சரியா?உத்தியோக ரீதியாக கடிதம் எழுதப்பட்டதா?( இந்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக் கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிய போதே, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் தற்போது வரை சந்திப்பு தொடர்பான பதிலுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டமன்றத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக நிறைவேற்றிய பிரேரணைகளுக்கு இந்தியா சென்றதும் முதலில் ஜெயா அம்மாவுக்கு நன்றி சொல்லியிருக்கவேண்டும். 


கூட்டமைப்பினர்களுக்கு எதை எப்போது செய்யவேண்டும் என்று தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமன்றத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக நிறைவேற்றிய பிரேரணைகளுக்கு இந்தியா சென்றதும் முதலில் ஜெயா அம்மாவுக்கு நன்றி சொல்லியிருக்கவேண்டும். 

கூட்டமைப்பினர்களுக்கு எதை எப்போது செய்யவேண்டும் என்று தெரியாது 

 

 

நல்லதொரு  சந்தர்ப்பத்தை தவறவிட்டது மட்டுமல்லாது

பெரும் வரலாற்றுத்தவறைச்செய்ததாகவுமே படுகிறது..........  :(  :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் தியாகத்தில் அரசியல் நடத்தும் இவர்கள் தாங்களாக எதையும் உருப்படியாக செய்தது கிடையாது 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரச என்ன மாதிரியான குரல் கொடுக்கிறது என்று தெரிந்தால்தானே சேர்ந்த குரல் கொடுக்க முடீயும்.நீங்க 13தானே சொல்லுறியள்.அங்க என்னடா எண்டால் சிறிலங்கா அரசையும் ததேகூட்டைமைப்பையும் சேர்ந்து தீர்வுக்கு வருமாறு மோடி சொல்கிறார்.இஞ்ச சம்பந்தர் தமிழக அரசையும் மத்திய அரசையும் சேர்ந்து முடிவெடுக்கட்டாம்(அதாவது இந்தப் போர்க்குற்ற விசாரணை,சர்சனவாக்கெடுப்பு இதெல்லாம் விட்டுப்போட்டு 13க்க ஆதரவு கொடுக்கட்டாம். (இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசும் மக்களும் குரல்கொடுத்து வருவது நம்பிக்கையைத் தருகிறது. ஆனாலும் அனைவரும் இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து ஒருமித்து குரல் கொடுத்தால் அது தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.(சம்பந்தர்))

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கேட்டவையாம் ஜெ ஒதுக்கல்லையாம்.. என்ற கதையை எப்ப இருந்து சொல்லினம்.. ஜெ ஆட்சி அமைத்ததில் இருந்து சொல்லினம்.

 

மகிந்தவுக்கு எதிராகவும்.. சிறீலங்காவுக்கு எதிராகவும்.. தமிழீழத்துக்கு சார்ப்பாகவும் ஜெ போட்ட தீர்மானங்கள் சம்பந்தனால் வரவேற்கப்படக் கூடிய விடயங்கள் அல்ல. அந்த வகையில்.. இவர்கள் திட்டமிட்டே ஜெ வை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்கள்.

 

தமிழக அரசு சாராது.. தாங்கள் இந்திய நடுவன் அரசுடன் தான் பேசுகிறோம்.. நீங்கள் தொடர்பில் உள்ள அரசுடன் தான் தொடர்பில் உள்ளோம் என்று சிங்களவர்களை நம்ப வைக்கவும் தாஜா பண்ணவுமே சம்பந்தனும்.. சுமந்திரனும்.. முன்னுரிமை அளிக்கிறார்கள். அதுமட்டுமன்றி.. தாங்கள் மென்போக்கு மிதவாதிகள் என்பதை நிரூபிக்கவுமே இந்த நேரத்தேடல். மற்றும்படி.. சம்பந்தன் வகையறாக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்வுக்குக் கொண்டு வர.. பலமுனை நகர்வு என்பதில் எந்த அக்கறையும் இல்லை..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாவை பகைக்க கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஜெயக்குமார், ஓபி ஜெயாவை சந்திப்பதே பெரும் பாடாயிருக்கும் போது கூட்டமைப்பு கேட்டும் நேரம் கிடைக்கவில்ல என்பதே சரி.

ஜெ கொடநாட்டில் இருந்து வரும் வரை மோடியின் அழைபை தள்ளிப்போட முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கூத்தமைப்பின் அரசியல் கூட்டங்களில் பேசுவதும்,அறிக்கை விடுவதும்,பாராளுமன்றத்தில் தமிழில் பேசுவதும்,அடிக்கடி இந்தியாவுக்கு பயணம் செய்வதும்தான்....மிச்சத்தை செய்வது சிங்களவன்  :D
 
இவையள் அப்பப்ப குளிர்நாடுகளுக்கு கோட்டுசூட்டோடை வந்து போறது வேறை விசயம்  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.