Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புன்னாலைக் கட்டுவனில் வாள்வெட்டுக்கு இருவர் படுகாயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
புன்னாலைக் கட்டுவனில் வாள்வெட்டுக்கு இருவர் படுகாயம். 
[Monday 2014-08-25 12:00]
blood-knife-150.jpg

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம இளைஞர்களுக்கு இடையே நிலவி வந்த பகைமையின் தொடர்ச்சியாக நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தையல் கடையின் முன்பாக நின்று மத்தாளோடைப் பகுதியைச் சோந்த சில இளைஞர்கள் மதுபோதையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறான முறையில் நடந்துள்ளார்கள்.

இதனால் தையல் கடையின் உரிமையாளர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் இதனால் வாடிக்கையாளாகள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் இளைஞர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனை செவிமடுக்காத இளைஞர்கள் குறிப்பிட்ட தையல் கடை உரிமையாளருடன் முரண்பட்ட போக்கைத் தொடர்ந்து பேணி வந்துள்ள நிலையில் நேற்று மதியம் தையல் கடை உரிமையாளருக்கு மதியஉணவு கொண்டு வந்த பூலோகசிட்டி இளைஞர் ஒருவரை தாக்கியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து மாலையில் குறிப்பிட்ட இடத்திற்கு வருகைதந்த இளைஞர் குழுவொன்று அட்டகாசம் செய்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் வெட்டியும் உள்ளார்கள். இந்தச் சம்பவத்தில் மத்தாளோடை கிராமத்தை சேர்ந்த இராசலிங்கம் தனுஸ்கரன் (வயது 20) மற்றும் பூபாலசிங்கம் உமாரமணன் (வயது 26) ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

http://www.seithy.com/breifNews.php?newsID=115564&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழேண்டா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புலம் பெயர் தேசங்களில் குறுப்புகளின் நடவடிக்கை இல்லாது போக தாயகப்பிரதேசங்களில் தொடங்குதாக்கும்.
 
இதெல்லாத்துக்கும் புலிகள் இல்லாததுதான் காரணம்  
 
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாத்துக்கும் புலிகள் இல்லாததுதான் காரணம்

இதுக்கு நாங்கள் பதில் சொன்னா - புலிக்காச்சல் என்பார் ஐயா. ஏனையா எல்லாத்துக்கேயும் புலியை கொண்டந்து சொருகிறியள். புலித்துதியை தவிர வேறேதும் உங்களுக்குத் தெரியாதா :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழு + சிங்கள இராணுவ அராஜத்தின் உச்சக்கட்டம். இதற்குத்தான் சிங்களப் படைக்கு ஆள்பிடித்துக் கொடுத்தார்கள்.. ஒட்டுக்குழுக்கள்..! இந்தியப் படைகளோடு சேர்ந்து நின்று செய்த அதே கூத்து..! :icon_idea:

இந்தக் கலாசாரத்தின் தொடக்கம்.. தமிழர் விடுதலைக் கூட்டணிக் காலம். அன்று தங்கள் எதிர்ப்பு வேட்பாளர்களை அச்சுறுத்த கூட்டணிக்காரர்கள் உள்ளூர் ரவுடிகளை வளர்த்து வாளும்.. தாரும்.. சாணமும் கொடுத்து ஊக்குவித்தனர். கூட சாராயமும்.. புரியாணியும். அதில் சங்கரி கைதேர்த்தவராம்..!

மக்கள் சுதந்திரமாக இருந்தால் புலிகளுக்கு பிடிக்காதே....

ரவுடி சுதந்திரமாக ரவுடித்தனம் செய்கிறான்...

சாதரணமக்கள் நிம்மதியாக தம் அலுவல்களை பார்கிறார்கள்...

இதுவே சுதந்திரம்...புலிகளின் காலத்தில் இல்லை....

thank you...ராஜபக்ஷே..சோனியா..கருணா அண்ட் KP :)

ஒரு முப்பது வருடத்துக்கு பிறகாவது விடிஞ்சுதே என்று சந்தொசபடுவோம்..

நீங்கள் டக்ளசின் ரவுடி கூட்டத்தை காணவில்லையா??

நீங்கள் டக்ளசின் ரவுடி கூட்டத்தை காணவில்லையா??

அவர்களும் சுதந்திரமாக ரவுடித்தனத்தில் ஈடுபடுகிறார்கள் என்றே நினைக்கிறன்.........வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் ரவுடிக்கும்பல் போல.....

ஒரு நாட்டில் எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ...அங்கு ரவுடித்தனமும் அதிகமாக இருக்கும் (அதிலும் கூடுதலாக ஒடுக்கப்பட்டவர்கள் என்னும் தலைப்போடு.....வெளிநாடுகளில் உள்ள கறுப்பர்..latino....முஸ்லீம்..தமிழ்..மாபியா குண்டர்கள் போல) :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

ரவுடித்தனம்.. கொலை.. பாலியல் வன்புணர்வு.. கொள்ளை.. வாள்வெட்டு.. சாராயம்.. போதை.. விபச்சாரம்.. இதுகள் எங்க அதிகமாக இருக்கோ.. அங்க தான் சுதந்திரமே அதிகமா இருக்காமில்ல. பேசாமல்.. இவர்களை காட்டுக்குள் அனுப்பி விட்டால் நல்லது அங்க தர்ப்பாரே இல்லாத சுதந்திரம் உள்ளது. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் சுதந்திரமாக ரவுடித்தனத்தில் ஈடுபடுகிறார்கள் என்றே நினைக்கிறன்........

ஒரு நாட்டில் எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ...அங்கு ரவுடித்தனமும் அதிகமாக இருக்கும் ...

தாங்கள் என்ன மாதிரி 'சுதந்திரம்' விரும்புகிறீர்களென தெள்ளத் தெளிவாக புரிகிறது.. :icon_idea:

இந்த மாதிரி தாங்கள் எதிர்பார்க்கும் சுதந்திரம் தமிழகத்தில் இல்லையே, எப்படி குடியேறுவதாக உத்தேசம்? :o:):D

எதிர்க்கட்சியாக மட்டுமே  இருக்க நினைத்தால் இப்படித்தான்...

எதுக்கெடுத்தாலும் காலைத்தூக்கிக்கொண்டு ஆடவேண்டும் :(

நாடு

மக்கள்

நல்லது கெட்டது

களவு பொய்

எதிர்காலம்.........

இதெல்லாம் மறைந்துவிடும்.... :(

தாங்கள் என்ன மாதிரி 'சுதந்திரம்' விரும்புகிறீர்களென தெள்ளத் தெளிவாக புரிகிறது.. :icon_idea:

இந்த மாதிரி தாங்கள் எதிர்பார்க்கும் சுதந்திரம் தமிழகத்தில் இல்லையே, எப்படி குடியேறுவதாக உத்தேசம்? :o:):D

ஏன் இல்லை...தமிழகத்தில் போலீசுக்கும் ஆளும்கட்சிக்கும் கும்பிடு போட்டுவிட்டு எதுவும் செய்ய முடியாதா? :)

செய்தி பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் என்ன? :)

இதற்காகவே தானே இந்தியாவை தேர்ந்தெடுத்தேன்... :)

அதுவும் தென் பகுதியை....வேதாரண்யம்...கன்னியகுமாரி தான் எனது இலக்கு :) பார்ப்போம்....

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சுதந்திரமாக இருந்தால் புலிகளுக்கு பிடிக்காதே....

ரவுடி சுதந்திரமாக ரவுடித்தனம் செய்கிறான்...

சாதரணமக்கள் நிம்மதியாக தம் அலுவல்களை பார்கிறார்கள்...

இதுவே சுதந்திரம்...புலிகளின் காலத்தில் இல்லை....

thank you...ராஜபக்ஷே..சோனியா..கருணா அண்ட் KP :)

ஒரு முப்பது வருடத்துக்கு பிறகாவது விடிஞ்சுதே என்று சந்தொசபடுவோம்..

நாந்தான் மேலுள்ள உங்கள் பதிலிலிருந்து..உங்கள் காழ்புணர்சியை காணக்கூடியதாக இருக்கிறது... இந்த அளவுக்கு..கோசானொ அல்லது அர்யுனோ கீழ்தரமாக இறந்த போராளிகழை கேவலமாக எழுதுவதில்லை... என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்...

ஏன் நாங்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் எழுத வேண்டும் என்று சட்டமா?

நான் என்ன எழுதுகிறேன் என்று உணர்ந்தே எழுதுகிறேன்...கவலை வேண்டாம்.....

இறந்த போராளிகளை யார் கேவலப்படுத்துகிறார்கள்???...

புலிகளின் மக்களை கட்டுப்படுத்தும் செயல்கள், போரினை முடிக்க தெரியாமல் ஒரு முடிவுக்கு வராமல் போரினை தொடர்ந்ததே நான் பிழை என்று கூறுவது...அது உங்களுக்கு விளங்கவில்லை என்றால்...மனம் வருந்துகிறேன்...நான் ஒன்றும் செய்யமுடியாது...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இல்லை...தமிழகத்தில் போலீசுக்கும் ஆளும்கட்சிக்கும் கும்பிடு போட்டுவிட்டு எதுவும் செய்ய முடியாதா? :)

செய்தி பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் என்ன? :)

இதற்காகவே தானே இந்தியாவை தேர்ந்தெடுத்தேன்... :)

அதுவும் தென் பகுதியை....வேதாரண்யம்...கன்னியகுமாரி தான் எனது இலக்கு :) பார்ப்போம்....

போச்சுடா... ! உங்கள் ஊரை கெடுத்தது போதாதா?

தமிழகமும் கெடனுமா? :wub::(

ரொம்ப நல்லெண்ணம் உங்களுக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

போச்சுடா... ! உங்கள் ஊரை கெடுத்தது போதாதா?

தமிழகமும் கெடனுமா? :wub::(

ரொம்ப நல்லெண்ணம் உங்களுக்கு. :)

புரிஞ்சு கொள்ளுங்க ராசா...

நாம் பட்ட துன்பம் நீங்களும் படணுமா?? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

------

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தையல் கடையின் முன்பாக நின்று மத்தாளோடைப் பகுதியைச் சோந்த சில இளைஞர்கள் மதுபோதையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறான முறையில் நடந்துள்ளார்கள்.

இதனால் தையல் கடையின் உரிமையாளர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் இதனால் வாடிக்கையாளாகள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் இளைஞர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனை செவிமடுக்காத இளைஞர்கள் குறிப்பிட்ட தையல் கடை உரிமையாளருடன் முரண்பட்ட போக்கைத் தொடர்ந்து பேணி வந்துள்ள நிலையில் நேற்று மதியம் தையல் கடை உரிமையாளருக்கு மதியஉணவு கொண்டு வந்த பூலோகசிட்டி இளைஞர் ஒருவரை தாக்கியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து மாலையில் குறிப்பிட்ட இடத்திற்கு வருகைதந்த இளைஞர் குழுவொன்று அட்டகாசம் செய்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் வெட்டியும் உள்ளார்கள். இந்தச் சம்பவத்தில் மத்தாளோடை கிராமத்தை சேர்ந்த இராசலிங்கம் தனுஸ்கரன் (வயது 20) மற்றும் பூபாலசிங்கம் உமாரமணன் (வயது 26) ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

தையல் கடைக்காரரும் பாவம், தனது பிழைப்பை பார்க்க வேணும்தானே...

தன்மையாக இளைஞர்களிடம் சொல்லிப் பார்த்தார் கேட்கவில்லை.

என்ன செய்வது....அதி உச்ச ஆயுதமான, வாளை.... பாவித்தது தவறு தான்.

உருட்டுக் கட்டையால்........ நாலு அடி அடித்து, விரட்டியிருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.