Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாதாம்! - கௌசலின் ஆலோசனை இது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாதாம்! - கௌசலின் ஆலோசனை இது. 

[Monday 2014-08-25 12:00]
Avdhash-Kaushal-200-news.jpg

தமிழர்கள் வடக்கு மாகாணத்துக்கு தனியாக பொலிஸ் அதிகாரத்தைக் கோரக் கூடாது என்று தெரிவித்துள்ளார் காணாமற்போனார் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மனித உரிமை பணியாளர் அவ்டாஸ் கௌஷல். இந்தின் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இந்தியா இலங்கையுடன் பேச்சு நடத்தலாம்; ஆலோசனை வழங்கலாம்; ஆனால் அந்த நாடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா உத்தரவிட முடியாது.

  

இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றையவர்களின் இறைமையை மதித்துச் செயற்பட வேண்டும். இந்தியப் பிரிவினைவாதிகளுடன் இலங்கை பேச்சு நடத்தினால் இந்தியாவின் உணர்வுகள் எவ்வாறிருக்கும்? நாங்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றக்கூடாது; அதாவது பெரியண்ணண் மாதிரி செயற்பட்டு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடாது. எமது நிலைப்பாட்டையே வலியுறுத்த வேண்டும். இலங்கையில் 13 ஆவது திருத்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டவேண்டும். தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து, தம்மை இலங்கையர்களாகக் கருதி அந்த நாட்டின் அரசமைப்பு, சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும், அவர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115577&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து, தம்மை இலங்கையர்களாகக் கருதி அந்த நாட்டின் அரசமைப்பு, சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும், அவர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாது.

 

 

கிழிஞ்சது போ.... :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாறல்தான் விசாரணைக்கு ஆலோசனை வழங்கப்போகிறதா .......?
செத்தாண்டா சிவனாண்டி 
 

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரில்.. அசாமில்.. பஞ்சாப்பில்.. ஈழத்தில்... இந்தியப் படைகளால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைமீறல்கள் மீதும் ஐநா மனித உரிமை அமைப்பு சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அதில்.. ஈழத்தமிழர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக்குழு அமைக்கப்படுவது கட்டாயமாகும்..!

 

இவருக்கு கொழும்பு ஹொட்டேலின் கண்ணிற்கும் மனதிற்கும்  நல்விருந்து படைத்துள்ளார்கள் போல் இருக்கிறது. இவரின் கண்ணை பார்த்தாலே தெரியல.

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுறது சரிதான். ஆனால் உங்கடை இறைமையை அவங்கள் அதுதான் இலஙகை மதிக்குதோ.அது சரி அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை.உங்கடை முதுமையை மறைக்குது தானே அது போதும் தானே உங்களுக்கு.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டு வருகின்றது....சிறிலங்காவை தனது சொல்படி நடப்பதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாதாம்! - கௌசலின் ஆலோசனை இது.

Avdhash-Kaushal-200-news.jpg

 

தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து, தம்மை இலங்கையர்களாகக் கருதி அந்த நாட்டின் அரசமைப்பு, சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும், அவர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாது.

 

சரியான..... விளக்கெண்ணை பயலா, இருப்பான் போலை கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.