Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புங்கை மண்ணின் மைந்தர்களே ..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை மண்ணின் மைந்தர்களே ..!

புங்குடுதீவு வட்டாரம் கொண்ட ஒரு சிறிய தீவு இப்பொழுது அங்கு ஒரு ஐயாயிரம் மக்கள் இருப்பார்களோ தெரியவில்லை ஆக உலகில் 194 நாட்டில் 1108 சங்கம் ...ஒன்றியம் ..அபிவிருத்தி குழு ..பழைய மாணவர் அமைப்புக்கள் ..என்று எல்லாம் இயங்கி வருவதை பார்த்தா இப்ப புங்குடுதீவு ஒரு ஐரோப்பாக்கு நிகரா நிக்க வேணும் ஆனாலும் அன்றில் இருந்து இன்றுவரை நாம் பார்த்த அதே புங்குடுதீவா தான் இருக்கு ...

தண்ணியே இல்லா கிணற்றை சுற்றி வெள்ளை பூசுவதும் ..சும்மா இருக்கும் வயல் பிள்ளையாருக்கு கலர் அடிப்பதும் தான் முன்னேற்றம் என்று புரியவில்லை.. இங்கு மாதா மாதம் கூடும் நிர்வாகம் எல்லாம் ஒரு டீயும் வடையுடன் பேசிட்டு போவதால் என்ன செயல் திறன் கண்டார்கள் என்றும் தெரியவில்லை ...

ஆக கேள்வி கேட்டல் குழப்பவாதிகள் ஆகவும் நீ என்ன செய்த என்னும் எதிர்கேள்வியும் எழுவதா இருக்கே ஒழிய நாங்கள் இது எல்லாம் செய்தோம் என்று ஒருவரும் கணக்கு காட்டுவதா இல்லை ஆனால் மாதா மாதம் அங்கத்தவர் பணம் அறவிடப்படுது அது போக வீட்டு விஷேசங்களில் அது செய்ய இது செய்ய என்று பணம் வசூல் நடக்கு இன்னும் ஒன்றும் செய்த பாடா இல்லை ..

அண்மையில் கூட வைத்தியசாலைக்கு தனியா ஒரு குடும்பம் நாற்ப்பது லட்சம் செலவில் ஒரு ஊடு கதிர் கருவி வாங்கி கொடுத்து இருக்கு அப்ப இந்த ஒன்றியம் ..சங்கம் எல்லாம் என்னதான் செய்யுது இன்றைய தலைவர் நாளைய செயலர் நாளைய செயலர் இன்றைய தலைவர் இப்படி மாறி மாறி இருக்கேறோம் ஒழிய ஒழுங்கா ஒரு அலுவலும் செய்வது இல்லை என்பது தானே உண்மை ...

எல்லாவற்றிலும் பணமும் ...முதலித்துவமும் முன்னுக்கு நிக்கு தவிர படித்தவர்கள் அல்லது ஊரை முன்னேற்ற வேண்டும் என்று ஆசைபடுபவர்கள் இல்லை ஒரு கடை இருந்தால் அல்லது நாலு பேருக்கு வட்டிக்கு காசு கொடுத்தா அவர் பெரிய மனுஷன் அடுத்த நிர்வாக தலைவரும் அவருதான் என்னும் அடிமட்ட சிந்தனை எப்ப எங்களில் இருந்து மாறும் ...

ஆக ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைபவர்கள் சரியான நிர்வாகத்தை தெரிவு செய்ய வேணும் அல்லது அவர்கள் நேரடியா உதவிகளை வழங்க வேணும் என்பதே எமது கருத்து ..

அடுத்த சந்ததி ..எம் தலைமுறை ஒரு ஆக்கபூர்வமான கல்வியறிவுடன் வளரவேண்டும் என்பதே எமது நோக்கு அதுக்காக இன்றைய தலைமுறை அவர்களை ஊக்குவிக்கும் செயல்திறனில் இறங்க வேண்டும் ..

அதுக்கு ஒவ்வெரு தனி மனிதர்களும் தங்களா சிந்தித்து செயல் ஆற்ற முன்வரவேண்டும் என்பது எமது எண்ணம் .

Thanks to yoko Anna

  • Replies 83
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு12 வட்டாரங்களைக் கொண்டது...இவை பற்றி எனக்கு கதைப்பதற்கு விருப்பம் இல்லைக் காரணம் ஒன்றைக் கதைக்க தொடங்கினால் பல பிரச்சனைகள்,இலவச பட்டங்கள் எல்லாம் நாம் வாங்க வேண்டி வரும்..அதனால் இப்போ எந்த விடையத்தை எடுத்துக் கொண்டாலும் மௌனமாக இருந்து விடுதல் நன்று  போல தான் இருக்கிறது

Edited by யாயினி

இப்படி எல்லாவற்றையும் விட்டு ஒதுக்க முடியாது யாயினி அக்கா அவர் அவர் தன ஊர் பற்றி ஒரு கனவு இருக்கும் அதை சொல்லி ஆகணும் .

என்ன ராசா நடந்தது சுண்டல்

எங்க விசுகு அண்ணாவை காணல்ல இன்னும் ..... :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

 மற்ற நாடுகளில் உள்ள.... புங்குடுதீவு ஒன்றியம் எப்படியோ தெரியவில்லை.
ஆனால்.... பிரான்ஸ் புங்குடுதீவு ஒன்றியம், ஆக்க பூர்வமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளதை கண்கூடாக  காண்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில முந்தி ஒரு கூட்டம் இருக்குமாம். அதுவா ஊருக்கு ஒன்னும் செய்யாது.. "பொட்டிசம்" போடுறது மட்டும் தான் அந்த கூட்டத்தின் பணியாம்.

அது இன்னும் தலைமுறைகள் தாண்டியும்.. தேசங்கள் தாண்டியும்.. இருக்குது. ஏதோ "பொட்டிசம்" போட்டு உள்ளதையும் கெடுக்காமல்..நல்லது நடந்தால் சரி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

முதலில்  இது போன்ற அநாமதேய  முகங்களுக்கு  பதில்சொல்வதில்லை

முகத்தைக்காட்டி நேரில் வந்தால் பதில் தரப்படும்..

அடுத்து

இந்த அன்பர் எமது ஊரைச்சேர்ந்தவராக இருந்தால்...

31/08/2014  இல் நாடு கடந்த அரசுக்கு

போர்க்குற்றம் தொடர்பாக அறிவித்தலை விடுக்கும் துண்டுபிரசுரத்துக்கு ஆதரவு கொடுத்திருந்தோம் (பணம்)

நேசக்கரம் மூலமாக இந்தக்கிழமை

2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாக்களுக்கு கிழக்கில் 35 குடும்பங்களுக்கான தண்ணீர்வசதி  செய்து கொடுக்கின்றோம்

அது முடிகிறது

அடுத்து

10ம்  மாதம் 19ந்திகதி தென்னங்கீற்று விழா இருக்கிறது 

(இதில் வரும் பணத்தைக்கொண்டே ஊரில் முன் பள்ளிகளையும் ஆசிரியர்களுக்கான சம்பளத்தையும் கடந்த பலவருடங்களாக  கொடுத்து வருகின்றோம்)

பெப்ரவரி  மாதம்  200 பாடசாலை மாணவர்களுக்கும் அதிகமாக  பங்கு கொள்ளும் 

திருக்குறள் மனனப்போட்டி

ஓவியப்போட்டி

சொல்வதெழுதல் போட்டி

தமிழ் மூலம் பிரெஞ்சு (பிரேஞ்சு மூலம் தமிழ்)

கட்டுரைப்போட்டி............  நடக்கவுள்ளது

அதை அடுத்து 4ம் மாதம் 

நாவலர் விருதுக்கான

குறும்படத்தெரிவுப்போட்டி.........

(இதில் வரும் பணத்தைக்கொண்டே தாயக உறவுகளின் உதவிகளை கடந்த பலவருடங்களாக  செய்து வருகின்றோம்)

இவற்றில் ஏதாவது ஒன்றையாவது நீங்கள் பொறுப்பெடுத்து நடாத்தமுடியுமா??

எமக்கு  கிடைக்கும் நேரங்களிலேயே  இவற்றைச்செய்கின்றோம்

சம்பளத்துக்கு எவரும் வேலை செய்வதில்லை

ஆட்பலம்  இருந்தால்

இன்னும் பல நல்ல விடயங்களை  செய்யமுடியும்..

நன்றி

மேலதிக  விபரங்களையும்

எமது செயற்பாடுகளையும் பார்வையிட

சில நிமிடங்கள்  போதும்....

http://www.pungudutivu.fr/

ஊரில முந்தி ஒரு கூட்டம் இருக்குமாம். அதுவா ஊருக்கு ஒன்னும் செய்யாது.. "பொட்டிசம்" போடுறது மட்டும் தான் அந்த கூட்டத்தின் பணியாம்.

அது இன்னும் தலைமுறைகள் தாண்டியும்.. தேசங்கள் தாண்டியும்.. இருக்குது. ஏதோ "பொட்டிசம்" போட்டு உள்ளதையும் கெடுக்காமல்..நல்லது நடந்தால் சரி. :lol:

சந்தோசமாக இருக்கு

எமது வளர்ச்சி  மக்களின் கண்களுக்கு  தெரியத்தொடங்கியுள்ளதன் பலன் இது...

நன்றி   சுண்டல் பதிவுக்கும் நேரத்துக்கும்....

Edited by விசுகு

மக்களின் நாடித் துடிப்பறிந்து தக்க நேரத்தில் சரியான உதவியை வழங்கிய சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்துக்கு தமிழ் சி.என்.என் குடும்பத்தின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

IMG_2800-610x407.jpg

(புங்குடுதீவு)  30.07.2014 (புதன்கிழமை) பி.ப. 03.00 மணிக்கு நடைபெற்றது.

குறை சொல்ல பல பேர் கை கொடுக்க சிலர் தான் வருவர்..புங்குடுதீவு ஒன்றியம் பல நாடுகளில் பல வழிகளில் ஒற்றுமையாக செயல்படுவது மிகவும் பாராடப்பட வேண்டியது. கோவில் திருத்துதல் , அன்னதானம் வழங்குதல் , பாடசாலை புனரமைப்பு என பலவழிகளில் தீவை புனரமைப்பு செய்வதற்கு காரணம் மக்களை அப்பிரதேசதில் தக்க வைக்கும் நோக்கமே.

இளம் சமுகம் பெருமளவில் வெளியேறிய நிலையில் அல்லது தொடர்ந்து வெளியேறும் நிலையில் இது தான் எம்மக்கான தெரிவாக உள்ளது.இதுவும் செய்யாவிடில் இபிரதேசம் சூனிய மயமாகிவிடும் .

இருப்பினும் இளம் சமுகம் வெளி செல்வதை தடுக்க வழிகள் இருந்தால் ( புதிய தொழில் , புதிய தொழில்சாலைகள் ,) இருந்தால் முன்வைக்கலாம்.........

ஒரு  நோக்கத்தை அப்படியே  பிரதிபலிக்கிறது தங்கள் வரிகள்

சேவையில் உள்ளவரால்  மட்டுமே இவ்வாறு   உணர்வுடன் பொறுப்புடன் எழுதமுடியும்

நன்றி  ஐயா

உங்களுக்காக..

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்  பிரான்சின் இந்த வருடத்திட்டம் நடந்து வருகிறது

60 லட்சம்  மதிப்பீடுள்ள இத்திட்டம் மூலம்

புங்குடுதீவு  மகாவித்தியாலயத்தின் பாதுகாப்பும் 

அதனைத்தொடர்ந்து

மதிலுக்குள்ளே  மரம் நடுதல்

உதைபந்தாட்ட

கரபந்தாட்டம்  உட்பட சகல விளையாட்டுக்குமான விளையாட்டுத்திடல் அமைக்கப்படும் போது

புங்குடுதீவின் சகல பாடசாலைகள் மட்டுமன்றி

தீவுப்பகுதிகள் அனைத்திலுமிருந்து மாணவர்கள்  வந்து கலந்து விளையாடுவதன் ஊடாக

படிப்பு விளையாட்டு மற்றும் சகல வழிகளிலும் மாணவர்களது முன்னேற்றம் ஏற்படுவதோடு

புங்குடுதீவின் நடுப்பகுதி மக்கள் நடமாட்டமுள்ளதாக மாற்றப்படுவதன் ஊடாக

வேலை வாய்ப்புக்களும் வணிகங்களும் பெருகும் என எதிர்பார்க்கின்றோம்..

இதன் மூலமே  மக்களது இருப்பை உறுதி  செய்யலாம் என நம்புகின்றோம்...

சோறு போடும் வேலையை  ஒரு போதும் செய்யமாட்டோம்

சோறை  தேடிப்பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவோம் என

அங்குள்ள புத்தியீவிகள்  மற்றும் பொதுச்சேவையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சொல்லியுள்ளோம்...

படங்களைப்பார்வையிட...

https://drive.google.com/folderview?id=0Bw7bWUHiJSgEclNwelVQUFhiSUU&usp=sharing

http://www.pungudutivu.fr/2014/08/blog-post_24.html

அத்துடன் 

2015-2016  இல்

2 கோடிகள் ரூபாக்கள் மூலதனமாப்போடப்பட்டு

பெரும் தொழில் வாய்ப்பை  செய்து கொடுக்க

பேச்சுவார்த்தைகளை  ஆரம்பித்துள்ளோம்

(இதில் சரி சமமாக ஊருக்கு ஒரு கோடியும் தாயக மக்களுக்கு(வன்னி - மன்னார் - கிழக்கு) ஒரு கோடியும் பகிர்ந்து செய்யப்படும்)

(இந்த திட்டத்தை எமது நிர்வாகக்கூட்டத்தில் முன் மொழிந்தபோதே
அப்படி தாயகத்துக்கு செய்தால் தான் 5 லட்சம் ரூபாக்களை  தருவதாக எமது நிர்வாகத்திலுள்ள ஒரு வர்த்தகர் உடனடியாகவே உறுதியளித்துள்ளார். இவர்களை ஒன்றிணைத்து செயலாற்றும் வேலையை  மட்டுமே நாம் செய்கின்றோம்)
 
நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும்..

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த உதவிகள் புங்கை நடுப்பகுதிக்கு தானே போய் சேருது அதை விட பல கஷ்டப்பட்ட வட்டாரங்கள் இருக்கே

இங்கே இந்த கட்டுரையாளர் எழுப்பிய கேள்வி நாட்டுக்கு ஒரு சங்கம் இருக்கு ஒரு 5000 மக்கள் வாழுகின்ற ஒரு பிரதேசம் இப்போ சிங்கப்பூர் ஆகி இருக்கணுமே.......

ஆனா சனம் இன்னும் தண்ணிக்கு கஷ்டபடுதே.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த உதவிகள் புங்கை நடுப்பகுதிக்கு தானே போய் சேருது அதை விட பல கஷ்டப்பட்ட வட்டாரங்கள் இருக்கே

இந்தக்கேள்வி வேடிக்கையானது

நல்ல காலம்  ஒரு மூலையிலுள்ள குடும்பத்துக்கு என்று எழுதாமல் விட்டீர்களே...

அவரும் கொஞ்சம் அசைந்து வரட்டுமே.....

உங்கள் எழுத்தைப்பார்த்தால்

கொண்டு போய்த்தீத்தி  விடுங்கள் என்பீர்கள் போலிருக்கு.. :(  :(  :(

எப்பொழுதுமே

ஒரு சிறு கிராமத்தின் நடுப்பகுதியே

எல்லோருக்கும் பொதுவானதும்

எல்லோருக்கும் பயனளிக்கத்தக்கதுமாகும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி இல்லை அண்ணே அபிவிருத்திகள் என்பதை அனைவருக்கும் பொதுவா தேடிப்போய் செய்யணும் அதவிட்டிட்டு உனக்கு வேணுமா நடுப்பகுதிக்கு வா என்பது தவறு .,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி இல்லை அண்ணே அபிவிருத்திகள் என்பதை அனைவருக்கும் பொதுவா தேடிப்போய் செய்யணும் அதவிட்டிட்டு உனக்கு வேணுமா நடுப்பகுதிக்கு வா என்பது தவறு .,,,,,

அது ஒரு அரசின்வேலை ராசா

நாங்கள் எம்மால் முடிந்ததைத்தான் செய்யமுடியும்

பொதுவாக அந்தக்கிராமத்தை முன்னேற்றுவது  பற்றித்தான் திட்டம் போடமுடியும்.

தனிப்பட்டவர்களுக்கு எம்மால் உதவ முடியாது

அது பின்னர் விவாதங்களுக்கும் சுயநலப்பாதைகளுக்கும் இடமளிக்கும்...

தண்ணீர்ப்பிரச்சினை  தொடர்பாக

தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன

இது ஒரு நீண்டகாலப்பிரச்சினை

சாட்டி

கொக்குவில்

இரணைமடு  என ஒவ்வொருவரும் தருவதாக வாக்குறுதி தருவதும்

பின்னர் இழுத்து பூட்டுவதுமாக உள்ளனர்

இது சம்பந்தமாக

தற்பொழுது வடமாகாண சபையுடன் பேசி  வருகின்றோம்

(நயினாதீவிலும் காரைநகரிலும் உவர் நீரை நன்னீராக்கி இராணுவம் பயன்படுத்திவருகிறது. அதை எமது ஊருக்கும் செய்ய முனைகின்றோம்.)

பார்க்கலாம்........

இவற்றை எமது ஊருக்கு செய்யும் போது

வன்னியில் சாப்பாட்டுக்கே வழியில்லை

உங்களுக்கு தண்ணீருக்கு இவ்வளவு செலவு தேவையா என்ற கேள்வியையும் இங்கு கொண்டு வந்து சேர்ப்பது உங்கள் பொறுப்பு... :D

அதற்கும் தற்பொழுதே தயாராகிவருகின்றோம்..

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எது எப்பிடியோ உங்கள் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எழுப்பி இருக்கும் இந்த குரலிலும் சில நியாயங்கள் இருக்கலாம் இவர் உங்கள் நாட்டை சேர்ந்த சங்கத்தை மட்டும் குற்றம் சாட்டாம் பொதுவா எழுதி இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.....

நன்றி  சுண்டல்

அதனால் தான் உங்களது பதிவுக்கு நன்றி  என்று குறிப்பிட்டேன்....

சாப்பிடும்  கோப்பைக்குள் மலம் இருக்கும்   இனத்தில் இருந்து வந்தவர்கள் நாம்

அதன் காலறிவோம்.....

இது ஏற்கனவே அறிமுகமான ஒரு குரல்....

எனக்கு ஆளைத்தெரியும்  சுண்டல்..

இதெல்லாம்   தேநீர் குடிக்கும் இடத்தில்   பேசும் விடயங்களன்று....

பல மணித்துளிகளையும்

பணத்தையும் செலவளித்து

எம்மால் முடிந்ததை நாலு பேர் சேர்ந்து செய்யும் முயற்சி....

அது இது போன்ற துப்புதல்களால் விலகி ஓடாது

நன்றி

அத்துடன் 

2015-2016  இல்

2 கோடிகள் ரூபாக்கள் மூலதனமாப்போடப்பட்டு

பெரும் தொழில் வாய்ப்பை  செய்து கொடுக்க

பேச்சுவார்த்தைகளை  ஆரம்பித்துள்ளோம்

(இதில் சரி சமமாக ஊருக்கு ஒரு கோடியும் தாயக மக்களுக்கு(வன்னி - மன்னார் - கிழக்கு) ஒரு கோடியும் பகிர்ந்து செய்யப்படும்)

(இந்த திட்டத்தை எமது நிர்வாகக்கூட்டத்தில் முன் மொழிந்தபோதே
அப்படி தாயகத்துக்கு செய்தால் தான் 5 லட்சம் ரூபாக்களை  தருவதாக எமது நிர்வாகத்திலுள்ள ஒரு வர்த்தகர் உடனடியாகவே உறுதியளித்துள்ளார். இவர்களை ஒன்றிணைத்து செயலாற்றும் வேலையை  மட்டுமே நாம் செய்கின்றோம்)
 
நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும்..

நல்ல திட்டம்.....எமது அடுத்த சந்ததி பிள்ளைகளை இணைத்தால்  நாம் கவனிக்க தவறிய முலபோருட்களை அவரகள் அவதானிக்க கூடும். (seeweed , cosmetics products) .....

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் கலகம் நன்னையில் முடிந்தால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் கலகம் நன்னையில் முடிந்தால் சரி

ஆமா

புடுங்கிறவன்  நாரதர்?

பூனைக்கு  விளையாட்டு

எலிக்கு உயிர் போகுதாம்....

இப்படியே  செய்பவன் எல்லோரையும் பதம் பார்த்து

பதம் பார்த்து

ஒருவனுமே இல்லாமல் நிற்கப்போகுது எமதினம்......... :(  :(  :(  :(

அதாவது கேரைதீவு ...ஊரைதீவு பிள்ளைகள் படிக்க மடத்துவெளி கமலாம்பிகை பள்ளிக்கு நடந்தே வருகிறார்கள் இதில் எல்லாவற்றையும் மகாவித்தியாலையம் நோக்கி நகர்த்தினால் அந்த பிள்ளைகள் அங்கு போய் வருவதை விட யாழ்ப்பாணம் வந்து போகலாம் ...

ஒரு மைய செயல்ப்பாடு என்பது இல்லை அவர் அவர் தங்களுக்கு பிடித்த கிராமத்தில் நோக்கி முதலீட்டை செய்வது அவர்களின் நலனே அன்றி தீவகத்தின் நலன் இல்லை ..

நாலு நாலு கிராமமா நாலு நாட்டு ஒன்றியம் தத்தெடுத்தால் போதும் ஊர் சேவை பொது சேவை என்று இறங்கிட்டு எமக்கு நேரம் இல்லை என்று சொலவது கூடாது அல்லது அதுக்கு என்று ஒருவரை மாத சம்பளத்தில் வையுங்கள் அவரின் வேலையை மக்களின் பிரச்சினை ...மக்களுடன் தொடர்பாடல் என்று இருக்கட்டும் அவர் உங்கள் முன் ஓர் அறிக்கை தந்தால் அதை பின் நீங்கள் சரி பிழை பார்க்கலாம் ..

இதை சுவிஸ் ரஞ்சன் உடன் பேசபட்ட விடையம் அதுக்கு அவர் சொன்னது பொறுத்து இருங்கள் பல திட்டம் கையில் இருக்கு நடைமுறைக்கு வர கொஞ்ச காலம் ஆகும் என்று .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில நாடுகளில் ஒரு சிலரின் நடவடிக்கைக்காக எல்லோரிலும் பழி போடக்கூடாது. குறிப்பாக உதவிகள் செய்து கொண்டிருப்போர் மீது அபாண்ட பழிகளை போட வேண்டாம். வெளியில் இருந்து ஒன்றும் செய்யாமல் விசில் அடிக்கும் கூட்டத்தை உதாசீனம் செய்ய வேண்டியது தான்.

ஆமா

புடுங்கிறவன்  நாரதர்?

பூனைக்கு  விளையாட்டு

எலிக்கு உயிர் போகுதாம்....

இப்படியே  செய்பவன் எல்லோரையும் பதம் பார்த்து

பதம் பார்த்து

ஒருவனுமே இல்லாமல் நிற்கப்போகுது எமதினம்......... :(  :(  :(  :(

உங்கள் செயலில் நேர்மை இருந்ததால் ..ஒரு இலக்கு இருந்ததால் ..உறுதி இருந்தால் இன்னும் பலர் கரம் கோர்த்து நிப்பார் ஒருவரும் இல்லாமல் போகாது தீவகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவனம் இருப்பார்கள் ...

பொது சேவை என்று வந்தால்.... அங்கு வியாபாரம் இருக்க கூடாது.. ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது.. தரம் பிரிப்பு இருக்க கூடாது.. முதலித்துவம் இருக்க கூடாது.... அதிகாரம் இருக்ககூடாது... பாமர மக்களின் கருத்துக்கு மதிப்பளிகனும் நீ செய் ..நீ என்ன செய்த ..நீ வேலையை பார் என்னும் ஒருமை முக்கியமா இருக்க கூடாது ..

காசு கொடுத்தவன் மட்டுமே பேசலாம் என்றால அது ஒரு நிர்வாகம் இல்லை தனியார் கடை .

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது கேரைதீவு ...ஊரைதீவு பிள்ளைகள் படிக்க மடத்துவெளி கமலாம்பிகை பள்ளிக்கு நடந்தே வருகிறார்கள் இதில் எல்லாவற்றையும் மகாவித்தியாலையம் நோக்கி நகர்த்தினால் அந்த பிள்ளைகள் அங்கு போய் வருவதை விட யாழ்ப்பாணம் வந்து போகலாம் ...

ஒரு மைய செயல்ப்பாடு என்பது இல்லை அவர் அவர் தங்களுக்கு பிடித்த கிராமத்தில் நோக்கி முதலீட்டை செய்வது அவர்களின் நலனே அன்றி தீவகத்தின் நலன் இல்லை ..

நாலு நாலு கிராமமா நாலு நாட்டு ஒன்றியம் தத்தெடுத்தால் போதும் ஊர் சேவை பொது சேவை என்று இறங்கிட்டு எமக்கு நேரம் இல்லை என்று சொலவது கூடாது அல்லது அதுக்கு என்று ஒருவரை மாத சம்பளத்தில் வையுங்கள் அவரின் வேலையை மக்களின் பிரச்சினை ...மக்களுடன் தொடர்பாடல் என்று இருக்கட்டும் அவர் உங்கள் முன் ஓர் அறிக்கை தந்தால் அதை பின் நீங்கள் சரி பிழை பார்க்கலாம் ..

இதை சுவிஸ் ரஞ்சன் உடன் பேசபட்ட விடையம் அதுக்கு அவர் சொன்னது பொறுத்து இருங்கள் பல திட்டம் கையில் இருக்கு நடைமுறைக்கு வர கொஞ்ச காலம் ஆகும் என்று .

அதாவது

ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள பாடசாலைகளை  தரம் உயர்த்தணும்

எங்களால் அது முடியாது

புலம் பெயர் தேசத்தவர் ஒன்றும் மரத்தில் பணம் புடுங்குவதில்லை

மிகவும் கடினமாக உழைத்தே  பணம் தருகின்றனர்

அத்துடன் 5000 பேருக்கு எதற்கு 15 பாடசாலைகள்???

மேலும் கேரைதீவு ஊரைதீவுக்கு உதவினால்

குறிகட்டுவான்  இறுப்பிட்டிக்கு எவ்வளவு தூரம்????

1ம் வட்டாரம்

2ம் வட்டாரம்

3ம் வட்டாரம்

4ம் வட்டாரம்

5ம் வட்டாரம்

6ம் வட்டாரம்  எங்கு போவது???

எல்லாப்பகுதியும் சந்திக்கும் இடமே  மகாவித்தியாலம்

3 வீதிகள் சந்திக்கும் பகுதி

அத்துடன் உயர்தர

மற்றும் விஞ்ஞான பரிசோதனைப்பீடம் உள்ளது மகாவித்தியாலம் மட்டுமே...

கொஞ்சம் ஊர் பற்றியும்

மக்கள் பற்றியும்

பாடசாலைகள் பற்றியும்

அதன் மாணவர்களது வரவு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

எம்மால் செய்யப்படும் எதுவும் 

பலமுறை ஆராயப்பட்டு

12 வட்டார பிரதிநிதிகளின் கருத்துக்களும் கேட்கப்பட்டு

ஊருடன் தொடர்பு கொண்டே செய்யப்படுகிறது...

தவறுகள் இருக்கலாம்

திருத்தப்படும்

ஆனால் இவை தவறுகளைச்சுட்டிக்காட்டுவதாக தெரியவில்லை

குழப்புவதாக உள்ளது....... :(  :(  :(

ஒரு சில நாடுகளில் ஒரு சிலரின் நடவடிக்கைக்காக எல்லோரிலும் பழி போடக்கூடாது. குறிப்பாக உதவிகள் செய்து கொண்டிருப்போர் மீது அபாண்ட பழிகளை போட வேண்டாம். வெளியில் இருந்து ஒன்றும் செய்யாமல் விசில் அடிக்கும் கூட்டத்தை உதாசீனம் செய்ய வேண்டியது தான்.

அந்த ஒரு சிலரால் ஒட்டுமொத்த தீவகத்தின் வளர்ச்சி பதிக்க படுத்து அதனால் சில குறைகளை எடுத்து சொல்லவேண்டிய தேவை இருக்கு அதை பிழைபிடிப்பு அல்லது குழப்பம் விளைவிப்பு என்று திசை திருப்ப கூடாது அண்ணே ..

சரியான ஆக்கபூர்வமான செயலை ..செய்தை எடுத்து சொன்னால் போதும் ஒ இவ்வளவு நடக்கா என்று தெளிவு பெறுவார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.