Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐஸ் கிரீம் கேட்ட குழந்தையை காலால் மிதித்துக் கொல்ல முயன்ற தாய்! - செல்வச்சந்நிதி ஆலயத்தில் சம்பவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐஸ் கிரீம் கேட்ட குழந்தையை காலால் மிதித்துக் கொல்ல முயன்ற தாய்! - செல்வச்சந்நிதி ஆலயத்தில் சம்பவம். 
[Tuesday 2014-09-02 07:00]
mother-child-200-news.jpg
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தனது 4 வயதுப் பெண் குழந்தையை பெற்ற தாயே நிலத்தில் போட்டு கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனைக் கண்ட பொதுமக்கள் தாயிடம் இருந்து குழந்தையைப் பறித்துக் காப்பாற்றினர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தையும் தாயும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இளவாலை பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த பெண் செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் அர்ச்சனைப் பொருட்களை விற்று வருகிறார். அவருடன் கூடவே 4 வயது மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகளும் அங்கு இருந்துள்ளன.
 
நேற்றுக் காலை தனது தாயிடம் ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு சிறுமி கோரியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் திடீரென தனது 4 வயதுக் குழந்தையை நிலத்தில் போட்டு அதன் கழுத்தில் காலால் மிதித்துள்ளார். அங்கு நின்று நிலைமையை அவதானித்த பொதுமக்கள் உடனே குழந்தையைத் தாயிடம் இருந்து காப்பாற்ற முனைந்தனர். அவர்களை அருகே நெருங்கவிடாது கடுமையாகத் திட்டித் தீர்த்த அந்தத் தாய் பிள்ளையின் கழுத்தில் மேலும் அழுத்தமாக மிதித்துள்ளார். தாய் மித்ததில் மூச்சுத் திணறி குழந்தையின் கண்கள் பிதுங்கின. அதன் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறியது.
 
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பொதுமக்கள் உடனே தாயை கீழே தள்ளிவிட்டு குழந்தையை அவரிடம் இருந்து மீட்டுக் காப்பாற்றினர். பின்னர் அப்பகுதி கிராம அலுவலருக்கு விடயத்தை தெரியப்படுத்தி பிள்ளையையும் தாயையும் கிராமஅலுவலரிடம் ஒப்படைத்தனர். அவர் வல்வெட்டித்துறை பொலிஸாரை அழைத்து பிள்ளையை ஒப்படைத்ததார். தாயை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கழுத்து நெரிக்கப்பட்ட சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
 
மேற்படி தாய் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி தனது 5 வயது மகளையும் ஒன்றரை வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டு கொலை செய்ய முற்பட்ட போது அயலவர்களின் முயற்சியால் அவ்விரு சிறுவர்களும் காப்பாற்றப்பட்டிருந்தனர். தொடர்ந்து இளவாலை பொலிஸார் மேற்படி தாயை கைது செய்து யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில் மேற்படி பெண்ணை நீதிமன்றக் காவலில் வைத்து மனநல சிகிச்சையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
 
அத்துடன் அந்த தாயின் 5 வயது மகளை கைதடி சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஒன்றரை வயது மகனை பாட்டியிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். நீதிமன்ற காவலில் மனநல சிகிச்சை பெற்ற அத் தாய் நன்னடத்தை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதுடன் அவரது குழந்தைகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையிலேயே அவர் தனது 5 வயது மகளை நேற்று கடுமையாகத் தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=116025&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

இனியும்.... இந்தத் தாயிடம், குழந்தைகளை வளர விடுவது உசிதமல்ல. 
அவருக்கும்... ஏதோ, உளவியல் பிரச்சினை உள்ளது.

Edited by தமிழ் சிறி

திருப்பியும் அந்த குழந்தைகளை அந்த மிருகத்திடம் ஏன் திருப்பி கொடுக்கிறார்களோ...அந்த பிள்ளைகளை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
ஐஸ்கிறீம் கேட்ட 5 வயது மகளை தாக்கிய தாய் விடுதலை

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயை, திங்கட்கிழமை (01) மாலை விடுதலை செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர்.

தாயின் தாக்குதலால், ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகளுக்கு, பாரதூரமான காயங்கள் எதுவும் இல்லையென வைத்தியர் தெரிவித்ததையடுத்து தாயை விடுவித்ததுடன் மகளையும் தாயுடன் அனுப்பி வைத்ததாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயொருவரை திங்கட்கிழமை (01) வல்வெட்;டித்துறைப் பொலிஸார் கைது செய்தனர்.

இளவாலை, பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தாய், செல்வச்சந்திநி ஆலய வளாகத்தில் தனது 5 வயது மகளுடன் கற்பூரம் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், திங்கட்கிழமை காலை தனது தாயிடம் ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த 5 வயது சிறுமி கோரியுள்ளார். இதனையடுத்து அவர் தன் மகளை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால், அச்சிறுமியின் மூக்கு மற்றும் வாயால் இரத்தம் வடிந்துள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக செல்வச்சந்நிதி உபபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த பெண்ணை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேற்படி தாய் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி தனது 5 வயது மகளையும் ஒன்றரை வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டு கொலை செய்ய முற்பட்டுள்ளார் என்றும் அயலவர்களின் முயற்சியால் அவ்விரு சிறுவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து, இளவாலை பொலிஸார் மேற்படி தாயை கைது செய்து, யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், மேற்படி பெண்ணை நீதிமன்றக் காவலில் வைத்து மனநல சிகிச்சையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், அந்த தாயின் 5 வயது மகளை கைதடி சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஒன்றரை வயது மகனை பாட்டியிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்ற காவலில் மனநல சிகிச்சை பெற்ற அத் தாய், நன்னடத்தை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதுடன் அவரது குழந்தைகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையிலேயே அவர், தனது 5 வயது மகளை நேற்று கடுமையாகத் தாக்கியுள்ளார். எனினும் பொலிஸார் அவரை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.e-jaffna.com/archives/31092

உறவுகளைப் பறிகொடுத்த நிலை, வறுமை உள்ளிட்ட பல காரணிகளால் இது போன்ற உளவியல் தாக்கத்திற்குள்ளானோர் நிறைந்த தேசமாக எம் தமிழ்த் தாயகம் மாறி வருகிறது. பொருளாதார ரீதியாக கைகொடுத்து உதவ வேண்டிய புலத் தமிழர்களில் பலர் ஊரில் கோயில்களுக்குக் கோபுரம் கட்டித் தங்கள் பகதியை வெளிக்காட்டி விட்டு அடங்கி விடுகிறார்கள்..

ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பலவும் இந்தப் படங்காட்டும் செயற்பாட்டுக்கு விதிவிலக்கல்ல..... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ மண்ணில் வீசப்பட்ட குண்டுகள்/நச்சுவாயு குண்டுகளின் தாக்கத்தை இப்படியான சம்பவங்கள் மூலம் உணரமுடிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளைப் பறிகொடுத்த நிலை, வறுமை உள்ளிட்ட பல காரணிகளால் இது போன்ற உளவியல் தாக்கத்திற்குள்ளானோர் நிறைந்த தேசமாக எம் தமிழ்த் தாயகம் மாறி வருகிறது. பொருளாதார ரீதியாக கைகொடுத்து உதவ வேண்டிய புலத் தமிழர்களில் பலர் ஊரில் கோயில்களுக்குக் கோபுரம் கட்டித் தங்கள் பகதியை வெளிக்காட்டி விட்டு அடங்கி விடுகிறார்கள்..

ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பலவும் இந்தப் படங்காட்டும் செயற்பாட்டுக்கு விதிவிலக்கல்ல..... 

உண்மை இது தான்!

அந்தத் தாயிடம் அடுத்தவேளைச் சாப்பாட்டுக்கூடப் பணமில்லாமல் இருந்திருக்கலாம்! அதற்காக 'ஐஸ்கிரீம்' கேட்ட குழந்தையிடம் கோபப்பட்டிருக்கலாம்!

இல்லாவிட்டால் அந்த ஐஸ்கிரீமில் என்னென்ன கலந்திருக்குமோ என்ற தாயின் ' பாதுகாப்புணர்வு' எச்சரித்திருக்கலாம்!

பலரது சிந்தனை.... பிரித்தானிய மகாராணியின் குழந்தைத் தனமான சிந்தனை போலவே உள்ளது!

பாண் இல்லாவிட்டால், கேக்கைச் சாப்பிடலாம் தானே..! :o

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பலவும் இந்தப் படங்காட்டும் செயற்பாட்டுக்கு விதிவிலக்கல்ல..... 

இந்த அமைப்புக்கள் வடமாகாணசபை மூலம் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்...பூணைக்கு மணி கட்டுவது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை இது தான்!

அந்தத் தாயிடம் அடுத்தவேளைச் சாப்பாட்டுக்கூடப் பணமில்லாமல் இருந்திருக்கலாம்! அதற்காக 'ஐஸ்கிரீம்' கேட்ட குழந்தையிடம் கோபப்பட்டிருக்கலாம்!

இல்லாவிட்டால் அந்த ஐஸ்கிரீமில் என்னென்ன கலந்திருக்குமோ என்ற தாயின் ' பாதுகாப்புணர்வு' எச்சரித்திருக்கலாம்!

பலரது சிந்தனை.... பிரித்தானிய மகாராணியின் குழந்தைத் தனமான சிந்தனை போலவே உள்ளது!

பாண் இல்லாவிட்டால், கேக்கைச் சாப்பிடலாம் தானே..! :o

இதோட.. வெளிநாட்டுக்கு அகதின்னு ஓடியாந்திட்டு.. ஊருக்கு படங்காட்டப் போறவை.. பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டதுகளை அளவு கணக்கில்லாமல்.. வேண்டிக் கொடுக்கின்ற போது.. யுத்த வலுவை தாங்கி நின்ற.. அந்த உள்ளூர் பிள்ளைகள் ஒரு ஐஸ் கிறீம் கூட வாங்கிக் குடிக்க முடியாத நிலை... இந்த ஏக்கமும் கூட.. அந்தத் தாயை பைத்தியம் ஆக்கி இருக்கலாம்.

இது வெறுமனவே பொருண்மியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. எமது சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும்.. உளவியல் பிரச்சனை.. ஆக்கிரமிப்பு தந்த உளவியல் பிரச்சனை.. போரின் பின் எமது ஒரு பகுதி சமூகம் கவனிப்பாரற்று.. ஏழ்மையில்.. உள் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து குடிசையில் வாழவிடப்பட்ட.. சமூகக் கவனிப்பாரற்ற பிரச்சனை.. அது தரும் உளவியல் பிரச்சனை.. என்று பல காரணிகளை உள்ளடக்கி உள்ளது.

இந்த ஒற்றைச் சம்பவம்.. பல பிரச்சனைகளை அடையாளம் காணவும்... தூய நியாய சிந்தனையோடு செயற்படவும்.. எம்மவர்களை தூண்டினால்.. அன்றி... இவ்வாறான நிகழ்வுகள் தொடர்வதை தடுக்க முடியாது.

மேற்கு நாடுகள் உழைப்பவனிடம் வரி என்று வாங்கி இல்லாத அகதிங்களுக்கு கொடுத்து ஊருக்கு  "படங்காட்ட" அனுப்பி வைக்கிறது தெரியாமல்.. கண்டபடிக்கு செலவழிக்கும் நம்மவர்களுக்கு உள்ள வசதி போல ஒன்று அங்கும் உள்ளூர் மக்களுக்கு வர வேண்டும். அப்படி ஒன்று இல்லையேல்.... ஒன்று இருந்து சீரழியும். இன்னொன்று இல்லாமல் சீரழியும். இதையே எம் சமூகம் சந்தித்து நிற்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும்,என்னதான் கஷ்டம் வந்தாலும் இப்படியான செயலை ஒரு ஒழுங்கான தாய் செய்யமாட்டார். நாங்கள் எல்லாவற்றையும் தமிழர் பிரச்சனையோடு சம்பந்தபடுத்தமுடியாது.... இப்படியான தாய் விடுதலைப்புலிகள் இருந்தாலும் இப்படித்தான் செய்வார்.

நீங்க வேற..

யாரிலாவது தூக்கிப்போட்டுவிட்டு

நாம  தப்பிக்கணும்..

புலிகள் இருந்தால் அவர்கள் மீது..

இல்லாவிட்டால்

எவராவது மாட்டத்தானே வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

இதோட.. வெளிநாட்டுக்கு அகதின்னு ஓடியாந்திட்டு.. ஊருக்கு படங்காட்டப் போறவை.. பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டதுகளை அளவு கணக்கில்லாமல்.. வேண்டிக் கொடுக்கின்ற போது.. யுத்த வலுவை தாங்கி நின்ற.. அந்த உள்ளூர் பிள்ளைகள் ஒரு ஐஸ் கிறீம் கூட வாங்கிக் குடிக்க முடியாத நிலை... இந்த ஏக்கமும் கூட.. அந்தத் தாயை பைத்தியம் ஆக்கி இருக்கலாம்.

இது வெறுமனவே பொருண்மியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. எமது சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும்.. உளவியல் பிரச்சனை.. ஆக்கிரமிப்பு தந்த உளவியல் பிரச்சனை.. போரின் பின் எமது ஒரு பகுதி சமூகம் கவனிப்பாரற்று.. ஏழ்மையில்.. உள் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து குடிசையில் வாழவிடப்பட்ட.. சமூகக் கவனிப்பாரற்ற பிரச்சனை.. அது தரும் உளவியல் பிரச்சனை.. என்று பல காரணிகளை உள்ளடக்கி உள்ளது.

இந்த ஒற்றைச் சம்பவம்.. பல பிரச்சனைகளை அடையாளம் காணவும்... தூய நியாய சிந்தனையோடு செயற்படவும்.. எம்மவர்களை தூண்டினால்.. அன்றி... இவ்வாறான நிகழ்வுகள் தொடர்வதை தடுக்க முடியாது.

மேற்கு நாடுகள் உழைப்பவனிடம் வரி என்று வாங்கி இல்லாத அகதிங்களுக்கு கொடுத்து ஊருக்கு  "படங்காட்ட" அனுப்பி வைக்கிறது தெரியாமல்.. கண்டபடிக்கு செலவழிக்கும் நம்மவர்களுக்கு உள்ள வசதி போல ஒன்று அங்கும் உள்ளூர் மக்களுக்கு வர வேண்டும். அப்படி ஒன்று இல்லையேல்.... ஒன்று இருந்து சீரழியும். இன்னொன்று இல்லாமல் சீரழியும். இதையே எம் சமூகம் சந்தித்து நிற்கும்..! :icon_idea:

அத்தனையும் உண்மை

அண்மையில்  எனக்குத்தெரிந்த ஒரு குடும்பம்

இங்கிருந்து வகேசனுக்குப்போய் வேலணையில் தங்கியிருந்தார்கள்

காலையில்  பாண் வண்டிலும்

மதியம் Icecream வண்டியும்

மாலையில் கேக் வண்டியும் வருமாம் (3 வண்டியின் வியாபாரிகளும்  சிங்களவர்கள் - நன்றி  டக்லசு மாமா)

இவர்களது பிள்ளைகள் வாங்கப்போக

பக்கத்து பக்கத்து பிள்ளைகளும் வந்து விடுங்களாம்

தான் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கும் வாங்கிக்கொடுத்தாக சொன்னார்...

ஆனால் அந்த பரிதாபநிலை தன்னை அழவைத்தாகவும் சொன்னார்.

இது ஒரு பெரும் ஏற்றத்தாழ்வு

இந்த நிலையை  புலம் பெயர் மக்கள் போக்கமுடியும்..

அதென்னவோ தெரியவில்லை...தேசியகாவலர்களின் சொந்தக்காரர்கள் மட்டும் ஊரில் பிச்சைகாரர்களாக இருக்கிறார்கள்....

ஊரில் உள்ள "எல்லாரும்" பிச்சைக்காரர்கள் என்றால் யாருக்கு அந்த சிங்கலவியாபாரிகள் விற்கிறார்கள்?

கடனுக்கு கொடுகிரார்களா? அல்லது திரும்பி போகிறார்களா? அப்படி திரும்பி லாபம் இல்லாமல் போனால் பிரச்னை இல்லைதானே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.