Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் கண்டம் விட்டு கண்டம் பாயும் கலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்மக்கலை

===========

ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது..அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான " அகத்தியர் " . இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்கு சாட்சி !." அகத்தியர் " கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்","அகஸ்தியர் வர்ம கண்டி ", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம் ","அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு ","அகஸ்தியர் வர்ம கண்ணாடி ","வர்ம வரிசை","அகஸ்தியர் மெய் தீண்டாகலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன் " என்ற மன்னன் தான் இதில் வல்லவனாக திகழ்ந்தான்.பின்னர் பாண்டிய இனம் அழியத்தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்கு பின்னர் வந்த " சோழர்கள் " இதனை கற்றனர். பின்னர் இந்த கலை "இலங்கை", "சீனா" போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது.காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி " புத்த" மதத்தை பரப்ப " சீனா " செல்லும் போது இந்த கலையும் அங்கு பரவியது.“Tenjiku Naranokaku" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது."ஹு ஷிஹ் " என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது " இந்திய ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். "1793 " ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது.தாங்கள் இத கலை மூலமாக பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தமிழக இளைஞ்சர்கள் இந்த கலை பயில்வதை தடை செய்தனர்.அன்று ஆரம்பமான அழிவு , இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது !.இந்த கலையானது அனைவருக்கும் கற்று தர மாட்டாது. இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்!!.இந்த கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறை கையாள வேண்டும் என " "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே " என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.இதை எந்த வயதினரும் கற்கலாம்! ஆனால் யார் மட்டுமே கற்க முடியும் ? " "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே "என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது .வர்மக் கலைகளின் வகைகள் " "தொடு வர்மம்", " படு வர்மம்","தட்டு வர்மம் ","நோக்கு வர்மம் " என வகை படுத்தப்பட்டுள்ளது தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார் .இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும்.இந்த பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ,ஒரு நாளிலோ, ஒரு மாததிலோ,அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும் !. படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும் !.தட்டு வர்மம் யாருக்கும் கற்று தரப்படமாட்டாது.இது மிகவும் மோசமான பிரிவு .ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும் .நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும் ! உதாரனத்திற்க்கு சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம் ! அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம் !!!.ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரை தாக்கும் வல்லமை கொண்டது இந்த கலை, ஆனால் இது யாருக்கும் கற்று தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் இதை கற்கலாம் " தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் " என்று தான் எனக்கு தோன்றுகிறது. " இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை. இனியாவது விழித்துக்கொள்வோம் !!!

 

- நன்றி - முகநூல் - மெல்கிஜாஸ்பர்

10636178_860599757292875_636010610523646
தமிழர்களே உணர்வோமா???  நாம் இப்போது அடிமையாய் வாழ்கிறோம் என்பதனை  !!!!!!! எப்போது விடுதலை...... கலைகள் மீட்பு............உலகம் தமிழர்களை நசுக்கிக்கொண்டிருக்கிறது. விழித்துக்கொள்வோமா?

 

  • கருத்துக்கள உறவுகள்

.வர்மக்கலையானது எப்படி 1000km இற்கப்பால் உள்ளவரை தாக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

Anndapp Pulzuhu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன புதுக்கதையாய் கிடக்கு.

 

தமிழரின்ரை கண்டம் விட்டு கண்டம் பாயுறதெண்டால் முதல் ஜேர்மனியிலை அசேலம்.....அதுக்குப்பிறகு சிற்ரிசன்....பிறகு சிற்றுவேசன் பாக்க லண்டன்.......லண்டனிலை ஆற அமர இருந்து கனடா...கனடாவிலை சலிக்க....அவுஸ்ரேலியா.....அங்காலை... :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது மனதின் சக்தியையும் உள்ளடக்கியது. ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

 

சிறு நீர் கழிப்பதற்கு switch (விசைமுடுக்கி) எங்கே இருக்கிறது ?????? அது அவரவர் மனதில் இருக்கிறது. நம் உடம்பின் எந்த பாகத்திலும் அது இல்லை. நாம் மனது வைத்தால் அது நடக்கும். எப்படி?? விளக்குங்களேன்..

 

அது போல மனதின் நீட்டப்பட்ட (extended) ஒரு காரியமே இது. விளங்குபவர்களுக்கு விளங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

nihms207654f5.jpg

 

சிறு நீர் கழிப்பதற்கான ஆளி எங்கள் உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்கிறது. இந்த வரை படத்தில் காட்டப் பட்டிருப்பது போல மூளையின் பகுதிகளும், முண்ணானின் பகுதிகளும் இணைந்து செயற்படும் போது கண்களால் பார்க்க முடியாத இது தான் என சுட்டிக் காட்ட முடியாத இந்த ஆளி செயற்பட்டு சிறுநீர் கழித்தல் இடம் பெறுகிறது. இந்தப் படத்தின் மூலமான கட்டுரையில் அழகாகக் குறிப்பிடப் பட்டிருப்பது போல " குழந்தைப் பருவத்தில் மூளையின் நரம்பு இணைப்புகள் பூரணமடையாத காரணத்தால் சிறுநீர் கழித்தல் இச்சையின்றிய செயலாக நிகழ்கிறது. வளர்ந்த பிறகு, மூளையின் கட்டுப் பாடு காரணமாக நாம் கட்டுப் படுத்தக் கூடிய இச்சைச் செயற்பாடாக நிகழ்கிறது". ஒரு சுவிட்சைத் தொட்டுக் காட்ட முடியா விட்டால் அது இல்லை என்று அர்த்தம் இல்லை! பல அடுக்கு நிகழ்வுகளால் கண்ணுக்குத் தெரியாத (abstract) சுவிட்ச் ஒன்று உருவாக்கப் படுவது உயிரியல், வேதியியல், பொறியியல், கணணியியல் எனப் பல துறைகளிலும் காணப்படும் ஒரு சாதாரண கோட்பாடு!

 

மூலம்: The neural control of micturition. Nat Rev Neurosci. Jun 2008; 9(6): 453–466.

justin நன்றி

Edited by naanthaan

அது மனதின் சக்தியையும் உள்ளடக்கியது. ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

 

அது போல மனதின் நீட்டப்பட்ட (extended) ஒரு காரியமே இது. விளங்குபவர்களுக்கு விளங்கும். 

 

 

 

 
உண்மை.
 
மனத்தின் பௌதீக கட்டமைப்புக்கு (physical structures) அப்பாலான விசயங்களும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.