Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனை புலியாக்க கொழும்பு ஊடகங்கள் தீவிரம்

Featured Replies

Flash%20news1_CI.jpg

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய உளவாளி ஒர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அண்மையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவின் சார்பில் உளவுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்திய தேசிய விசாரணை முகவர் நிறுவன அதிகாரிகள் குறித்த இலங்கையரை கைது செய்திருந்தனர்.

அருண் செல்வராஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் குறித்த விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனங்கள் தீவிரமாக முன்னெடுத்துள்ளன. எனினும் இது வரை அருண் செல்வராஜனின் பூர்வீகம் குறித்தோ அல்லது அவரது முழுமையான பின்னணி குறித்தோ இந்திய தமிழக அரசாங்கங்கள் மற்றும் புலனாய்வு மையங்கள் எந்த தகவல்களையும் வெளியிட்டு இருக்கவில்லை.

இது குறித்து தமிழகத்தின் முக்கிய ஊடகவியலாளர் ஒருவரை குளோபல் தமிழ்ச் செய்திகள் தொடர்பு கொண்டு விசாரித்த போது அருண் செல்வராஜனுக்கும் முன்னாள் இன்னாள் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியாவின் எந்த ஊடகங்களும் தகவல்களை வெளியிடவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் கொழும்பின் ஊடகங்கள் அருண் செல்வராஜனை  தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என உறுதியாகக் கூறுவதன் பின்னணியில் இலங்கை பாதுகாப்பு அமைச்சும் புலனாய்வுப் பிரிவும் முக்கிய பங்கு வகிக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டு உள்ளார்.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு மையங்கள் பாகிஸ்தானுடன் நெருங்கிப் பணியாற்றுவதும், அதன் பின்னணியில் அருண் செல்வராஜனுக்கும் இலங்கைப் புலனாய்வு மட்டங்களுக்கும் உள்ள தொடர்பு இருக்கும் பட்சத்தில் அதனை திசைதிருப்புவதற்கான நடவடிக்கையாக இந்த செய்திகள் அமையலாம் எனவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  அவர் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111509/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறு துரும்பையும் பல்லுக்குத்த சிங்களம் தயங்குவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

----

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய உளவாளி ஒர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

-----

 

கொழும்பு ஊடகமும், இந்திய புலனாய்வுத் துறையும் மண்டை கழண்டுதுகள்.

தங்களது வசதிக்கு, ஏற்றபடி.... அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதுகளைப்போல.... எத்தினையப் பாத்திட்டம். வெட்கம் கெட்டவர்கள்.

 

புலி செய்தால், நெத்திக்கு... நேரே தான் செய்யும்.

 

போயும்... போயும், முஸ்லீம் பாகிஸ்தானுக்கு.... புலியா? உளவு பாக்குது.... த்தூ.........

 

  • தொடங்கியவர்

தமிழகத்திற்கு குறி வைத்த புலிகளுக்கு உதவியவர்கள் யார்?'பகீர்' தகவலால் மத்திய, மாநில போலீஸ் விசாரணை

 

சென்னையில் கைது செய்யப்பட்ட, பாக்., உளவாளியும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவருமான, அருண் செல்வராஜுடன், ரகசிய உறவு வைத்து இருந்த, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரின் பட்டியலை, மத்திய, மாநில போலீசார் தயாரித்து வருகின்றனர். மேலும், அவருடன் தங்கி, உளவு தகவல்களை சேகரித்த இளம் பெண்ணை தேடும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது.

 
கடந்த 2008ல், இலங்கையில் இருந்து, பெற்றோருடன், அகதியாக, தமிழகத்திற்கு வந்து, விமான பயிற்சி பெற்று, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவியுடன், மக்கள் தொடர்பு அலுவலகம் துவங்கி, பிரபலங்களின் நட்பை பெற்று, உளவு தகவல்களை சேகரித்த, அருண் செல்வராஜ் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
யார் அவர்கள்?
 
பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடம், 2 கோடி ரூபாய் பெற்று, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உளவு தகவல்களை சேகரித்த, அருண் செல்வராஜ், சென்னை, சாலிகிராமத்தில் தங்கியிருந்த வீட்டுக்கு இரவு நேரத்தில் மட்டுமே ஆட்கள் வருவர்; அதிகாலையில் அவர்கள் கிளம்பி விடுவர் என, தேசிய புலனாய்வு அமைப்பினரிடம், அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், கடந்த 2009ல், இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது, சில பிரபலங்கள் மற்றும் இரண்டாம் கட்ட நிலையில் உள்ளவர்களின் நட்பை பெற்றுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவன் என, தெரிவித்ததாலேயே, அவருக்கு சிலர் அடைக்கலம் கொடுத்து உதவியதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார் என்பது பற்றிய விவரங்களை, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில போலீசார் சேகரித்து வருகின்றனர். அருண் செல்வராஜ் தங்கியிருந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட, மொபைல் போன்களை ஆராய்ந்த போது, யார் யாருடன் தொடர்பில் இருந்தார்; அவர்களுடன் பேசிய பேச்சு, உளவு தகவல்கள் என, அனைத்தும், தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு கிடைத்துள்ளன. 
 
காதலி எங்கே?
 
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற அறிமுகத்துடன், சுற்றி வந்த அருண் செல்வராஜ், சில உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்களுடனும் தொடர்பில் இருந்துள்ளான். அவர்களிடம் பெறப்பட்ட உளவு தகவல்களும், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், அவனுக்கு ஒரு காதலி இருந்து உள்ளார். ரகசியமாக தங்கி உளவு பார்த்து வந்த அந்த பெண், தற்போது தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அடுத்த மாதம், அந்த பெண்ணை திருமணம் செய்யவும், அருண் செல்வராஜ் முடிவு செய்து இருந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த பெண் அடிக்கடி வெளியூர் சென்று வந்ததால், உளவு அமைப்பின் பெண் பிரிவு தலைவராக அவர் செயல்பட்டு இருக்கலாம் என, தேசிய புலனாய்வு அமைப்பினர் சந்தேகிக்கின்றனர்.அதனால், அந்த பெண்ணை நேரில் பார்த்த, சாலிகிராமவாசிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு மற்றும் மத்திய, மாநில உளவு போலீசார், அவரது உருவப்படத்தை வரைந்து தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
கூட்டாளிகளுக்கு வலை:
 
கைதின் போது, அருண் செல்வராஜ் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவனது கூட்டாளிகள், நான்கு பேரையும், தேசிய புலனாய்வு அமைப்பினர் சுற்றி வளைத்து விட்டதாகக் கூறுகின்றனர்.சென்னை தவிர பிற மாவட்டங்களிலும், உளவாளிகளை தேடும் பணி நடந்து வருவதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.
 
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:தமிழக பிரபலங்களை கவர, அருண் செல்வராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள், விடுதலைப்புலிகள் என்ற அஸ்திரத்தை பயன்படுத்தியுள்ளனர். பயங்கர சதித் திட்டத்துடன், தமிழகத்திற்கு குறி வைத்து செயல்பட்ட அவர்களுக்கு, பிரபலங்களோடு கூடவே இருப்பவர்கள் பலரும் உதவி செய்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.இவ்வாறு, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நெத்திக்கு நேர எண்டா - அமிரை பேச என்று அழைத்து செய்தது போலவா?

90 இல் சரணடைந்த 600 பொலிஸ் காரருக்கு செய்தது போலவா?

அல்லது கந்தன் கருணையில் தடுப்புக் காவலில் இருந்த சக தமிழ் இளைஞருக்கு செய்தது போலவா?

  • கருத்துக்கள உறவுகள்

நெத்திக்கு நேர எண்டா - அமிரை பேச என்று அழைத்து செய்தது போலவா?

90 இல் சரணடைந்த 600 பொலிஸ் காரருக்கு செய்தது போலவா?

அல்லது கந்தன் கருணையில் தடுப்புக் காவலில் இருந்த சக தமிழ் இளைஞருக்கு செய்தது போலவா?

 

ஹலோ....   கோசான்,

நீங்கள், எந்த இடத்தில்... எந்த உதாரணத்தை, கொண்டு வர வேண்டும் என்ற, அடிப்படை அறிவு தன்னும், உங்களுக்கு இருக்கும் என்று, நினைத்தேன். அது, தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
பாக். உளவாளி விமானப்பயிற்சியும் பெற்றவராம்! விமானத்தைக்கடத்த திட்டமா?
 

arun2-300x225.jpgசென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தைக் கடத்திச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அவர் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றாரா என புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக தமிழகத்தில் உளவு பார்த்ததாக இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராஜன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

அருண் செல்வராஜன், சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்தவாறே தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.

அவரிடம் தற்போது தேசியப் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு

நிறுவனத்தை நடத்திய அருண், அதன் மூலம் முக்கியப் பிரமுகர்களின் நட்பை வளர்த்து, அவர்கள் மூலம் முக்கிய இடங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த தகவல்களை தேசியப் புலனாய்வு அமைப்பினருக்கு சந்தேகம் ஏற்படாதவாறு, பல்வேறு வழிமுறைகளில் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வித்தியாசமான நடைமுறையை அருண் கையாண்டுள்ளார். அதன்மூலம், குறிப்பிட்ட இ-மெயில் முகவரியில், தகவல்களைப் பதிவேற்றம் செய்து அதனை “டிராஃப்ட்’ எனப்படும் பிரிவில் வைத்துவிடுவார். அந்தக் குறிப்பிட்ட இ-மெயில் முகவரியின் கடவுச்சொல், ஐ.எஸ்.ஐ. அமைப்பினருக்குத் தெரியும். அதன் மூலம் இ-மெயிலை திறந்து தகவல்களை எடுத்துக் கொள்வார்கள். இதனால், தகவல்களை மின்னஞ்சலில் அனுப்பத் தேவையில்லை.

மின்னஞ்சல் அனுப்பினால், யாருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை புலனாய்வு அதிகாரிகள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் அவர் இந்த முறையைக் கையாண்டுள்ளார்.

மேலும் ஐ.எஸ்.ஐ. அமைப்பினரிடம் தொலைபேசியில் பேசிய உரையாடல்களையும் அருண் செல்வராஜன் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துள்ளார். அவர், விமானம் ஓட்டவும் பயிற்சி பெற்றுள்ளார். இந்தத் தகவல்களை அருண் செல்வராஜன், தேசியப் புலனாய்வு அமைப்பினரிடம் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. சென்னையில் இருந்து விமானத்தைக் கடத்திச் செல்லும் திட்டத்துடன் அவர் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றாரா என்ற ரீதியிலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அருண் செல்வராஜனை விசாரிக்க ரா, ஐ.பி. போன்ற பல்வேறு புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டால், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பு: தனது நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மூலம் பல்வேறு அரசு அதிகாரிகள், பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் என பலரது நட்பை அருண் செல்வராஜன் பெற்றுள்ளார். அவர் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர், பிரபல பாடகர் உள்பட பலருடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திய அருண், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சுலபமாகச் சென்று, அவற்றை புகைப்படங்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், தமிழகத்தில் பதுங்கியுள்ள மற்ற ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் குறித்தும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டங்கள் குறித்தும் தெரிய வரும் என்று புலனாய்வு அதிகாரிகள் கருதுகிறார்கள்.

 

போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு

 

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசியப் புலனாய்வு போலீஸார் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தை உளவுப் பார்த்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் தேசியப் புலனாய்வு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர், பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோனி முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதில் அருண் செல்வராஜனை வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நீதிமன்றக் காவலில் உள்ள அருண் செல்வராஜனை 7 நாள்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய தேசியப் புலனாய்வு போலீஸார், பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

மனுவைப் பெற்று கொண்ட நீதிபதி மோனி, “16-ஆம் தேதி செல்வராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அதன் பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கான கால அவகாசம் அறிவிக்கப்படும்’ என்றார் நீதிபதி.

http://tamilleader.com/?p=41042

நெத்திக்கு நேர எண்டா - அமிரை பேச என்று அழைத்து செய்தது போலவா?

90 இல் சரணடைந்த 600 பொலிஸ் காரருக்கு செய்தது போலவா?

அல்லது கந்தன் கருணையில் தடுப்புக் காவலில் இருந்த சக தமிழ் இளைஞருக்கு செய்தது போலவா?

 

இல்லைஎன்றா ராஜீவுக்கு வைச்ச (வைக்காத) மாதிரியோ தெரியாது...அதுவும் நெத்திக்கு நேரே தான் வைச்சது...ராஜீவ் மாலைக்கு குனிஞ்ச பொது....

  • கருத்துக்கள உறவுகள்

இல்லைஎன்றா ராஜீவுக்கு வைச்ச (வைக்காத) மாதிரியோ தெரியாது...அதுவும் நெத்திக்கு நேரே தான் வைச்சது...ராஜீவ் மாலைக்கு குனிஞ்ச பொது....

பிச்சைக்காரன் தன்ர புண்ணை மாறவிடாமல் சொறியுறமாதிரி,நீங்களும் கிளறிக்கொண்டே இருங்கோ அப்பதான் உங்கள் பிழைப்பும் ஓடும்.
  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரன் தன்ர புண்ணை மாறவிடாமல் சொறியுறமாதிரி,நீங்களும் கிளறிக்கொண்டே இருங்கோ அப்பதான் உங்கள் பிழைப்பும் ஓடும்.

 

என்ன  செய்வது?

நாம பலிகளை  தியாகிகளாக நினைக்கின்றோம்

அவர்

சொறிவதற்கு பயன்படும் பொருளாகவாவது நினைக்கிறாரே.. :(

என்ன  செய்வது?

நாம பலிகளை  தியாகிகளாக நினைக்கின்றோம்

அவர்

சொறிவதற்கு பயன்படும் பொருளாகவாவது நினைக்கிறாரே.. :(

 

இந்த திரி தலைப்பை விட்டு சென்றதற்கு முதல் காரணம் தமிழ்சிறி எழுதிய கருத்து. ஒரு ஈழ‌ தமிழரை பிடித்ததை புலி பிடிபட்டது என்று சிங்கள ஊடகங்கள் பொய்யாக எழுத அதற்கு ஏதாவது கருத்தெழுதாமல் புலி செஞ்சா நெத்திக்கு நேரா தான் செய்யும் என்ட வீர வசனம் தேவையா? 
அதற்கு தான் கோசானும் நாந்தானும் பதிலலித்தார்கள். நெத்திக்கு நேரா தான் செய்வார்கள் என்ற கருத்துக்கு நேரடியான உதாரணங்களை கோசான் தந்தார. அதை ஏற்கிற பக்குவம் தமிழ்சிறிக்கோ மற்றவர்களுக்கோ இல்லை. இதுக்கு கோசானையும் நாந்தானையும் புண்ணை சொறிகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையதா?
  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த திரி தலைப்பை விட்டு சென்றதற்கு முதல் காரணம் தமிழ்சிறி எழுதிய கருத்து. ஒரு ஈழ‌ தமிழரை பிடித்ததை புலி பிடிபட்டது என்று சிங்கள ஊடகங்கள் பொய்யாக எழுத அதற்கு ஏதாவது கருத்தெழுதாமல் புலி செஞ்சா நெத்திக்கு நேரா தான் செய்யும் என்ட வீர வசனம் தேவையா? 
அதற்கு தான் கோசானும் நாந்தானும் பதிலலித்தார்கள். நெத்திக்கு நேரா தான் செய்வார்கள் என்ற கருத்துக்கு நேரடியான உதாரணங்களை கோசான் தந்தார. அதை ஏற்கிற பக்குவம் தமிழ்சிறிக்கோ மற்றவர்களுக்கோ இல்லை. இதுக்கு கோசானையும் நாந்தானையும் புண்ணை சொறிகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையதா?

 

இது எனது பதில்..

 

நான் 90 வீதத்தையை   எனது முடிவுகளை  எடுக்கின்றேன்

நீங்கள் 10 வீதத்தையா??  முன் நிறுத்துவீர்கள்:??

 

புலிகளிடம் 90 வீதம் சரியாக  இருந்ததே

அதை இவர்கள் எப்பொழுதாவது எழுதியதுண்டா??

 

90 வீதத்தை  புறக்கணிக்கும் போது...........??? :(

 

தோல்வியை  வைத்துக்கொண்டு

கணிப்பீடுகளைச்செய்வது சரியா??... :(

 

புலிகள் இல்லாத காலத்தில்

எந்தளவுக்கு  இவர்கள் வழியில் முன்னேறியுள்ளோம் என்பதைச்சொன்னால் நாமும் யோசிக்கலாம்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

1482961_1476568899294526_782362617923438

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு புலி இருந்தாலும் தலையிடி இல்லாவிட்டாலும் தலையிடி

Edited by புலவர்

இது எனது பதில்..

 

நான் 90 வீதத்தையை   எனது முடிவுகளை  எடுக்கின்றேன்

நீங்கள் 10 வீதத்தையா??  முன் நிறுத்துவீர்கள்:??

 

புலிகளிடம் 90 வீதம் சரியாக  இருந்ததே

அதை இவர்கள் எப்பொழுதாவது எழுதியதுண்டா??

 

90 வீதத்தை  புறக்கணிக்கும் போது...........??? :(

 

தோல்வியை  வைத்துக்கொண்டு

கணிப்பீடுகளைச்செய்வது சரியா??... :(

 

புலிகள் இல்லாத காலத்தில்

எந்தளவுக்கு  இவர்கள் வழியில் முன்னேறியுள்ளோம் என்பதைச்சொன்னால் நாமும் யோசிக்கலாம்.. :(

 

90:10

99:1

50:50

5:95

 

யார் முடிவு செய்வது????

 

90% வீதமான பாலில் 10% விசத்தை கலந்துவிட்டு அண்ணை சந்தோசமா குடிப்பார்...மற்றவர்கள் குடிக்கவேண்டும் என்று இல்லை....

 

தாங்கள் செய்தால் பழைய புண்ணை கிளற கூடாது...அதுவே மற்றவர்கள் செய்தான் நோண்டோ..நொண்டு என்று நோண்டுவார்கள் :)

 

Edited by naanthaan

தாங்கள் செய்தால் பழைய புண்ணை கிளற கூடாது...அதுவே மற்றவர்கள் செய்தால்  நோண்டோ..நொண்டு என்று நோண்டுவார்கள்  :)
 

பலர் வாழ்க்கையின் மிக பெரிய தத்துவம் இதுதான். :o  

ஈழத்தமிழருக்கு வர இருந்த பெரிய பிரச்சினை தீர்ந்தது எண்டு நினைக்க வேண்டியது தான்...

தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் ஆதரவு நிலையை குலைக்க சிங்களமும் பாக்கிஸ்தானும் இணைந்து எதையாவது புலிகளின் பெயராலோ இல்லை ஈழத்தவர் பெயரில் செய்து இருந்தாலோ நிலைமை தலைகீழாக மாறி இருக்கும் அந்த வையில் சந்தோசமே....!!

மற்றய இயக்கங்களுக்கோ , இல்லை இலங்கை அரசுக்கோ இல்லை பாக்கிஸ்தானுக்கோ புலிகளின் பெயரால் தாக்குதல் நடத்துவதும் கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும் ஒண்டும் புதிது இல்லை தானே...?

மேலுள்ள செய்தியெல்லாம் ISIS, AlQuida போன்றவர்கள் ஊடுருவாமல் அல்லது அவர்களோடு தொடர்பில் இருக்கும் (இருப்பதாக சந்தேகப்படும்) முஸ்லீம்களை கண்காணிக்கவும், warrant இல்லாமல் கைது செய்யவும் ஒரு களநிலைமையை இந்தியாவில் உருவாக்குகிறார்கள்..

இந்த செய்தியால் என்ன பிரச்னை என்றால்...முஸ்லீம் அல்லாத ஈழ தமிழரை/அல்லது வெளிநாட்டவர்களையும் பணத்துக்காகவும் நோண்டலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் செய்தால் பழைய புண்ணை கிளற கூடாது...அதுவே மற்றவர்கள் செய்தால்  நோண்டோ..நொண்டு என்று நோண்டுவார்கள்  :)

 

பலர் வாழ்க்கையின் மிக பெரிய தத்துவம் இதுதான். :o  

 

 

10599249_523764884421499_187447279244538

  • தொடங்கியவர்

பெண்களை வைத்து பலவீனமான அதிகாரிகளுக்கு தூண்டில்: 'பப்'பில் ஆடவைத்து உளவு பார்த்த அருண் செல்வராஜ்.

 

'ஹைடெக்' நிகழ்ச்சி தயாரிப்பாளர், போலி பத்திரிகையாளர் போல், சென்னையில் உலா வந்த பாக்., உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை, 'பப்பு'களில் கிறங்க வைத்து, ரகசிய தகவல்களை கறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

 
சென்னை, சாலிகிராமம், கே.கே.சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த, பாக்., உளவாளியும், இலங்கை தமிழருமான அருண் செல்வராஜை, 26, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.கோடிகளில் புரண்டு, பெரும் தொழில் அதிபர் போல், ஆடம்பர வாழ்வு நடத்தி, உளவுத் தகவல்களை சேகரித்து வந்த, அருண் பற்றி, பூதம் கிளம்பியது போல் ஏராளமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 
'ஐஸ் ஈவென்ட்':
 
இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:பட்டதாரி வாலிபரான அருண் செல்வராஜ், இலங்கையில் உள்ள, பாக்., துணை துாதரக அதிகாரிகள் அமீர் சுபேர் சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர் கொடுத்து அனுப்பிய, ௨ கோடி ரூபாயுடன், சென்னையில் கால்பதித்தான்.நுங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி பிரதான சாலையில், டி.எம்.ஏ., டவர்ஸ் குடியிருப்பில், 'பேஷன் ஷோ' நடத்தி வந்த நிறுவனத்துடன் இணைந்து, பி.ஆர்., (மக்கள் தொடர்பு) அலுவலகம் துவங்கினான்.
 
விமான நிலைய அதிகாரி:
 
அப்போது, பெரும் நிறுவனங்களுக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து தருதல், சினிமா பிரபலங்களை வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துதல் உள்ளிட்டவற்றை செய்தான்.அது தொடர்பான ஆல்பத்தை, எப்போதும் கை வசம் வைத்து இருந்த அருண் செல்ராஜ், 2009ல், நுங்கம்பாக்கத்தில் உள்ள 'பப்' ஒன்றில், மது மயக்கத்தில் இருந்த விமான நிலைய அதிகாரி ஒருவருக்கு துாண்டில் போட்டான்.அவரிடம், 'பேஷன் ஷோ' ஏற்பாட்டாளராக அறிமுகமான அருண், பளபளப்பான அந்த ஆல்பத்தை, அதிகாரியின் கைகளில் தவழவிட்டுள்ளான். அதன்பின், இருவரும் அடிக்கடி சந்தித்ததில், நட்பு வட்டம் விரிவடைந்து, பல அதிகாரிகள், அருணின் வலையில் சிக்கினர்.அதன்பின், விமான நிலைய அதிகாரிகளின் செல்லப்பிள்ளையாகவே மாறினான் அருண். இந்த யுத்தியை பயன்படுத்தியே, பல அதிகாரிகளை தன் வலையில் வீழ்த்தினான்.
 
சாலிகிராமத்தில் மையம்:
 
தனியாக, 'வெப் சைட்' துவக்கி, 'ஹைடெக்' நிகழ்ச்சி ஏற்பட்டாளர், போலி பத்திரிகையாளர் என, காட்டிக் கொண்ட அருண், தன் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, சாதுர்யமாக, சாலிகிராமத்தில் தங்கி, சினிமா தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளான். பாகிஸ்தானில் இருந்த வந்த பணம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் கிடைத்த வருமானம் என, கோடிகளில் புரண்ட அருணின் நட்பு வட்டத்தில், பெண்களே அதிகம்.பெண்களை வைத்தே, அதிகாரிகளுக்கு துாண்டில் போட்டு, பல நேரங்களில் உளவுத் தகவல்களை சேகரித்துள்ளான். அது பற்றிய குறிப்புகள், அவன் டைரியில் இருந்து கிடைத்துள்ளன.
 
உளவு தகவல் சேகரிப்பு:
 
மேலும், அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, 'லேப்-டாப், கேமரா, ஹார்டு டிஸ்க், 'சிடி' போன்றவற்றை ஆய்வு செய்த போது, அந்த இளம் பெண்கள், ஐதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களுடன் இருக்கும் நபர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். மொபைல் போனில், யார் பெயரும் இல்லை. ஆனால், முதல் எழுத்தை மட்டுமே பதிந்துள்ளான்.பெரிய மனிதர்களின் நட்பு, அதிகாரிகளின் செல்லப்பிள்ளையாக மாறிப்போன அருண் செல்வராஜ், பத்திரிகை குறிப்பு தயாரிப்புக்கு என, பல்வேறு இடங்களுக்கு சென்று, உளவு பார்த்துள்ளான்.அவன் எடுத்துள்ள படம் மற்றும் வீடியோ பதிவுகள் அனைத்தும், கடல் வழி ஊடுருவலை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளன. உ.பி.,யில் உள்ள, அவன் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
 
நீதிமன்றத்தில் இன்று ஆஜர்:
 
கைது செய்யப்பட்ட, அருண் செல்வராஜ், பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும்,' பொடா' கோர்ட்டில், இன்று காலை ஆஜர்படுத்தப்படுகிறான். அவனை, 10 நாட்கள், காவலில் எடுத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு அமைப்பினர் மனு செய்ய உள்ளனர்.
 
மாமல்லபுரத்தில் பாக்., உளவாளி நடமாட்டம்?
 
பாக்., உளவாளி அருண் செல்வராஜ், மாமல்லபுரம் வந்து சென்றதாக, பரபரப்பாக பேசப்படுகிறது. சென்னையில், தொழில் அதிபர் போர்வையில், பாக்., உளவாளியாக செயல்பட்டு வந்த, இலங்கை தமிழர் அருண் செல்வராஜை, தேசிய புலனாய்வு அமைப்பினர், கடந்த 10ம் தேதி, சென்னை, சாலிகிராமத்தில் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சென்னை மற்றும் கல்பாக்கம் அணுசக்தி வளாகம் ஆகிய இடங்களில், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சதி அம்பலமானது. இதுகுறித்த செய்தி, ஊடகங்களில் வெளியானதை அடுத்து, நாடு முழுவதும், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உளவாளி அருண் செல்வராஜ், மாமல்லபுரத்தில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.கல்பாக்கம், அணுசக்தி வளாகத்திலிருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதையடுத்து, உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள், இங்குள்ள விடுதிகளில் தங்குகின்றனர்.கல்பாக்கம் பாதுகாப்பு கருதி, இந்நகரமும், போலீஸ் மற்றும் உளவு ஆகிய துறைகளின் கண்காணிப்பில் உள்ள நிலையில், உளவாளி அருண் செல்வராஜ், அவ்வப்போது இங்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. முக்கிய விடுதிகள், உணவகங்கள் ஆகியவை இயங்கி வரும், ஒற்றைவாடை தெரு உட்பட சில பகுதிகளில், அவர் வலம் வந்ததாகக் கூறப்படுகிறது.சில நாட்களாக, ஊடகங்களில் வெளியான அவரின் புகைப்படத்தை கண்ட நபர்கள், ஒற்றைவாடை தெரு உணவகங்களுக்கு அவர் வந்ததாகவும், உணவு பரிமாறியவர்களுக்கு, தாராளமாக 'டிப்ஸ்' வழங்கியதாகவும் கூறுகின்றனர்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.