Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டயாலிசிஸ் (dialysis).. என்றால் என்ன..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவீன மருத்துவ உலகில் இன்று பாவிக்கப்படும் சொற்களில் டயாலிசிஸ் (dialysis) உம் ஒன்று.

 

இதுபற்றி கேள்வி பதில் வடிவில் இப்போ அறிந்து கொள்வோம்..??!

 

டயாலிஸிஸ் என்றால் என்ன..??!

 

வெளியக குருதி சுத்திகரிப்புச் செயன்முறை என்று சொல்லலாம். இதனை குருதி மாற்றீடு (blood transfusion) என்று சொல்வதில்லை. அது வேறு. இது வேறு.

 

டயாலிசிஸின் தேவை..?!

 

குறிப்பாக சிறுநீரக பாதிப்பு நிகழ்ந்திருந்தால் இந்த டயாலிசிஸ் குறித்து மருத்துவர்கள் சிந்திப்பார்கள்.

 

சிறுநீரகம் என்றால் என்ன..??!

 

சிறுநீரகம் என்பது எமது வயிற்றுப் புற பின்பகுதியில் அவரை வடிவில் உள்ள இரண்டு வடிகட்டி அங்கங்கள். இவை இரத்தத்தில் உள்ள யூரியா போன்ற நச்சுக்களையும் மேலதிக உப்பு மற்றும் நீரையும் வடிகட்டி சிறுநீராக வெளியேற்ற உதவுகின்றன. இவை பாதிப்படையும் போது கீழ்ப்படி அறிகுறிகள் தென்படலாம்.

 

1. களைப்பு.

 

2. தோல் பிரச்சனைகள். (அரிப்பு உள்ளடங்க)

 

3. வாந்தி

 

4. கால்.. கை மற்றும் கணுக்கால் பகுதிகளில் வீக்கம்.

 

முற்றான சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டு கவனிப்பாரற்று போனால்.. உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.

 

சிறுநீரக பாதிப்பு எதனால் ஏற்படுகிறது..??!

 

சிறிநீரகங்களின் பாதிப்பில் உடற்பருமன் அதிகரிப்பு பெரும் செல்வாக்குச் செய்கிறது. குறிப்பாக அது குருதி அழுத்தத்தை அதிகரிப்பதால்.. சிறுநீரகங்கள் உயர் குருதி அழுத்தத்தில் வடிகட்டலை செய்ய வேண்டி ஏற்படுவதால்.. அவற்றின் நுண் வடிகட்டல் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது.

 

மேலும்.. நீண்ட கால இதயப் பிரச்சனை உள்ளோர் மற்றும் நீரிழிவு நோய் உள்ளோரிலும் மற்றும் சிறுநீரக தொற்று நோய் கண்டோரிலும்.. இந்த நிலை ஏற்படலாம்.

 

சிறுநீரக பாதிப்புக்கான மாற்றீடு என்ன..??!

 

1. டயாலிசிஸ்

 

இதில் இரண்டு வகை உண்டு.

 

அ. குருதிசார் டயாலிசிஸ்.

 

இதன் போது உடற்குருதியை வெளியக சுத்திகரிப்பு கருவி ஊடாக செலுத்தி சுத்திகரித்து மீண்டும் உடலுக்குள் செல்ல அனுமதிப்பது.

 

nurrse_with_Patient.jpg

 

இதனை செய்வதால்.. பெரிய உயிர் ஆபத்து நிகழும் என்று இல்லை. ஆனால் ஒரு சுத்திகரிப்பு முடிய எடுக்கும் காலம்  3 அல்லது 4 மணித்தியாலங்கள் நீண்டதாக இருக்கும். சிலருக்கு இதனை விடக் கூடவாகவும் இருக்கலாம். குருதியின் அளவை மற்றும் குருதி வெளியேற்ற உட்புகு வேகத்தைப் பொறுத்தது.

 

அத்தோடு தேவைக்கு ஏற்ப வாரத்துக்கு.. நான்கு தொடக்கம் இரண்டு தடவைகள் என்று இதனைச் செய்ய நேரிடலாம். இதனை கூடிய அளவு வைத்தியசாலையில் வைத்தே செய்வார்கள். சரியான பராமரிப்பு அவசியம் என்பதால். வீட்டில் செய்வதும் உண்டு.. (வசதிகளுக்கு ஏற்ப)

Haemodialysis.jpg

 

 

ஆ: Peritoneal dialysis

 

F%2010-6%20Peritoneal%20dialysis.jpg

 

இதன் போது பை மற்றும் குழாய்கள்.. போன்ற அமைப்புக்களின் உதவியுடன்.. வயிற்றுக் குழியினூடு (peritoneum) திரவங்களை செலுத்தி.. அவை பரிமாறப்பட அனுமதிப்பதன் மூலம்.. தேவையானவை உடலுக்குள் போக தேவையற்ற கழிவுகள் உடலில் இருந்து அகற்றப்படும். இது ஒரு பழைய முறை என்றாலும்.. தேவைக்கு ஏற்ப பாவிக்கிறார்கள். இதனை வீட்டில் இருந்தும் செய்யலாம்.

 

இது 30 - 40 நிமிடங்கள் நீடிக்கும். நாள் ஒன்றுக்கு.. 3 தொடக்கம் 4 தடவைகள் செய்வார்கள். அல்லது இரவு முழுவதும் செய்யக் கூடியதாக இருக்கலாம்.

 

2. சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை.

 

டயாலிசிஸ் மூலம் பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை அல்லது டயாலிசிஸ் அடிக்கடி செய்வது சிரமம் என்று காணப்படும் நோயாளிகளில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவது உண்டு. அதற்கு தகுந்த சிறுநீரகம் கிடைக்கப் பெறுதல் வேண்டும். அதற்கான காத்திருப்புக் காலம் நீண்டது என்பதால்.. அந்தக் காலத்தில் நிச்சயம் டயாலிசிஸ் நோயாளிகள் உயிர் வாழ உதவும்.

 

டயாலிஸிஸ் செய்வதால் ஆயுள் பாதிக்கப்படுமா..???!

 

டயாலிஸிஸ் பொறிமுறை என்பது சிறுநீரகங்களின் செயலை செய்தாலும் சிறுநீரகங்கள் போலவே அச்சொட்டாக செயற்படுகின்றன என்று சொல்ல முடியாது. ஆனாலும்.. இளையோரில்.. இதன் மூலம் அவர்களின் ஆயுளை 20.. 30 வருடங்களுக்கு நீட்ட முடியும். 70.. 75 க்கு மேற்பட்ட வயதானோரில்.. வாழ்க்கைக் காலத்தை 5 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.

 

சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மூலம் பொதுவாக.. ஆயுள் காலத்தை 5 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். அதற்கு மேல் வாழ்பவர்களும் உண்டு.

 

எதுஎப்படியோ.. எந்த நோயாக இருந்தாலும்.. வரும் முன் காப்பதே நீடித்த ஆயுளுக்கு உகந்தது..!!!

 

மேலும் விபரங்களுக்கு..

 

http://www.nhs.uk/conditions/Dialysis/Pages/Introduction.aspx

 

http://www.kidneypatientguide.org.uk/HD.php

 

http://www.nhs.uk/conditions/Kidney-transplant/Pages/Introduction.aspx

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல மருத்துவ இணைப்புக்களை எதிர் பார்க்கிறேன் நெடுக் அண்ணா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

KID_hemodialysis_peritoneal.gif

 

டயாலிஸிஸின் இரண்டு பிரதான வகைகளும் செயற்படும் முறைகள். எளிய விளக்கப் படங்கள் மூலம்.

 

dialysis.jpg

 

94b2af68284938fedd002c6a140218c1.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க  நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல்.

நன்றிகள்.

டயாலிஸிஸ் செலவைக் குறைக்க என்ன வழிமுறைகள் செய்யலாம். ( உள்ளூரில் மென்சவ்வு [ Membrane] உற்பத்தி.. இப்படி ஏதாவது ??)

 

 

.

 

Edited by ஈசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டயாலிஸிஸ் செலவைக் குறைக்க என்ன வழிமுறைகள் செய்யலாம். ( உள்ளூரில் மென்சவ்வு [ Membrane] உற்பத்தி.. இப்படி ஏதாவது ??)

 

 

.

 

அதனை விட இலகுவான வழி.. சிறுநீரகங்களின் பாதுகாப்பு மற்றும் கவனிப்பு பற்றி மக்களை விழிப்புணர்வு செய்வது.

 

 சிறுநீரகங்களின் பாதிப்பில்...

 

1. புகை.

 

2. மது.

 

3. அதிக உடற்பருமன்.

 

4. உயர் குருதி அழுத்தம்.

 

5. நீரிழிவு.

 

6. கவனிப்பாரற்ற சிறுநீரக தொற்றுக்கள்.

 

7. சிறுநீர் கல் பிரச்சனை. (தாயக மக்களிடம் இது.. அங்கு பாவிப்படும்... தாவர உர வகைகள் கிணற்று நீரில்.. கலப்பது.. சார்ந்து அதிக ரிஸ்க் ஏற்படுவதாக அண்மையில் ஒரு கட்டுரையில் வாசித்ததுண்டு.)

 

8. போதிய அளவு நீர் அருந்தாமை.

 

9. உணவுப் பழக்கங்கள்.

 

இவை அதிகம் செல்வாக்குச் செய்கின்றன..!!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, பதிவு நெடுக்ஸ்.
நோய்... வரும் முன் காக்க வேண்டும்.
அதனைப் பற்றி.... உங்கள் பதிவில், முக்கியமாக தமிழர் உணவில் ஆபத்தானவை எவை என்பதையும்... விளக்கினால் நல்லது.
ஏனென்றால்..... தமிழக பிரபல பாலியல் வைத்தியர் மாத்ரு பூதம்,  இன்னும் பிரபலமான ஆட்கள் கூட....  டயாலிசிஸ் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு, அதன் செலவை ஈடு கொடுக்க முடியாமல், நொந்து போய்.... மரணித்தவர்கள் அதிகம்.

 

 

மிகவும் நன்றி நெடுக்ஸ்... தற்சமயம் எனது தேவை அறிந்து பதிந்ததுபோல உள்ளது. சில சந்தேகங்களூக்கு இப் பதிவு ஆறுதல் அளித்தது.

இதைப்போலத்தான் http://www.yarl.com/forum3/index.php?showtopic=144373 என்ற பதிவும் எனக்காகவே பதிந்தது போலிருந்தது.

 

1. அ  குருதி சார் டயாலிசிஸ் முறையே கிழமையில் 4 தடவைகள் 4 மணித்தியாலங்கள் எனது துணைவியாருக்கு கையாளப்படுகிறது.

 

மேலும் இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி நெடுக்ஸ்... தற்சமயம் எனது தேவை அறிந்து பதிந்ததுபோல உள்ளது. சில சந்தேகங்களூக்கு இப் பதிவு ஆறுதல் அளித்தது.

இதைப்போலத்தான் http://www.yarl.com/forum3/index.php?showtopic=144373 என்ற பதிவும் எனக்காகவே பதிந்தது போலிருந்தது.

 

1. அ  குருதி சார் டயாலிசிஸ் முறையே கிழமையில் 4 தடவைகள் 4 மணித்தியாலங்கள் எனது துணைவியாருக்கு கையாளப்படுகிறது.

 

மேலும் இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!

 

நாங்கள் அறியத்தக்கதாக பலர் இந்த சிகிச்சை முறையின் கீழ் நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இருந்தாலும்.. டயாலிசிஸ் அதிக நேரம் எடுப்பதால் நோயாளிகள் சில அவஸ்தைகளுக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு வாய்ப்பிருந்தால்.. அது குறித்து பரிசீலிக்க நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியரைக் கோரலாம். ஆனால்.. இதன் போது.. அவர்களின் வாழ்க்கைக்காலம் பற்றி நன்கு கேட்டறிந்து முடிவெடுப்பது மிகவும் நல்லது..!!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நெடுக்கருக்கு வணக்கம். 
இன்றைய சமுதாயத்தில் நடக்கும் முக்கிய விடயத்தை கருத்தில் கொண்டு.......
விவரணங்களுடன் கூடிய ஆராய்வு கருத்தாடல்களுக்கு நன்றி.
  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வை ஊட்டக்கூடிய உங்கள் ஆக்கங்களுக்கு மிக்க நன்றிகள் நெடுக்கர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.