Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது, மங்கள்யான்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21-1411291394-mars231123-600.jpg

 

இந்தியாவின் "செவ்வாய் கிரகப் பிரவேசத்திற்கு" இன்னும் 2 நாட்களே....

 

பெங்களூர்: உலகமே இந்தியா மீது தனது கவனத்தை முழுமையாக திருப்பியுள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரக ஆய்வு விண்கலம், இன்னும் 2 நாட்களில் அதாவது செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் பிரவேசிக்கவுள்ளது.

 

இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய சாதனையாகும். அதை விட முக்கியமாக, சீனாவை இந்த விஷயத்தில் இந்தியா தோற்கடிக்கப் போகிறது என்பதுதான்.

 

எப்படி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தரை மார்க்கத்தில் கடும் போட்டி நிலவுகிறதோ அதேபோல விண்வெளிக்கு அப்பாலும் இரு நாடுகளும் கடுமையான போரில் ஈடுபட்டுக் கொண்டுள்ளன. அதில் தற்போது செவ்வாய் கிரக பயணத்தில் சீனாவை தோற்கடிக்கிறது இந்தியா.

 

முதல் ஆளாக நுழையும் இந்தியா.

சீனாவை முந்திக் கொண்டு இந்தியா முதல் ஆளாக தனது செவ்வாய் கிரக பயணத்தை வெற்றிகரமாக்கப் போகிறது என்பதுதான் இதன் முக்கிய அம்சமாகும்.

 

ஆசிய சாதனை.

இந்தியாவின் மங்கள்யான், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையை வெற்றிகரமாக அடைந்து விட்டால் அது மிகப் பெரிய ஆசி சாதனையாகவும் மாறும்.

முதல் ஆசிய நாடு.

அதாவது செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய முதல் ஆசிய நாடாக இந்தியா உருவெடுக்கும்.

 

தோற்றுப் போன சீனா, ரஷ்யா, ஜப்பான்.

இதற்கு முன்பு 2011ம் ஆண்டு சீனா தனது யிங்குயோ 1 என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல ரஷ்யாவும் 1998ம் ஆண்டே போபோஸ் கிரன்ட் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதுவும் தோல்வியில் முடிந்தது. அதபோல ஜப்பான் அனுப்பிய விண்கலம் எரிபொருள் தீர்ந்து போனதால் தோல்வியில் முடிந்தது.

 

சாதனை மங்கள்யான்.

இந்தியா தனது மங்கள்யான் விண்கலத்தை வெறும் 15 மாதங்களில், மிகக் குறைந்த பொருட் செலவல் உருவாக்கியது என்பதுதான் விசேஷமே. வேறு எந்த நாடும் தனது செவ்வாய் திட்டத்துக்காக இவ்வளவு குறைந்த செலவை செய்ததில்லை. எனவே அந்த வகையிலும் மங்கள்யான் ஏற்கனவே சாதனை படைத்து விட்டது.

 

முதல் முயற்சியிலேயே, வென்ற முதல் நாடு.

மேலும் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் தனது விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய முதல் நாடாகவும் இந்தியா உருவெடுக்கும் என்பது இன்னொரு பெருமிதமாகும்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தமிழர், தெலுங்கர்கள் இருப்பார்கள். அவர்களால் இந்தியாவுக்கு இந்த எழுப்பம்.. :wub:

அதுசரி.. சீனா, ரஷ்யா அனுப்பியவை எப்பிடி தோல்வியில் முடிஞ்சது..? இவையள் ஒருபக்கம் அனுப்ப அது தன்ரபாட்டுக்கு போட்டுதா?? :unsure::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இந்தியாவுக்கு செவ்வாய்தோஷம் வரப்போகுது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை செவ்வாயில் மங்கள்யான் 'கிரகப் பிரவேசம்'...

4 விநாடி 'விழிக்க'ப் போகும் 'கும்பகர்ணன்'!

 

பெங்களூர்: புதன்கிழமையன்று செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் நுழையவுள்ள இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தின் ராக்கெட் மோட்டார் (அதாவது வாகனத்தின் என்ஜின் போல) முன்னெச்சரிக்கையாக இன்று நான்கு விநாடிகள் இயக்கிப் பார்க்கப்படவுள்ளது.

 

கடந்த 9 மாதமாக செவ்வாயை நோக்கி பயணித்து வரும், மங்கள்யான், புதன்கிழமையன்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் நுழையவுள்ளது.

 

தற்போது அதி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் மங்கள்யான், இதே வேகத்தில் போனால், அப்படியே செவ்வாயைக் கடந்து சென்று சூரியனை நோக்கிப் போய் விடும்.

 

22-mangalyaan243434-600-jpg.jpg

 

வேகத்தைக் குறைக்க

எனவே செவ்வாயின் சுற்று வட்டப் பாதையைத் தாண்டி போய் விடாமல் தடுப்பதற்காக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ராக்கெட் மோட்டாரை இஸ்ரோ விஞ்ஞானிகள் இயக்கவுள்ளனர்.

 

ரிவர்ஸில் வேகம் குறைக்கப்படும்

அதன் பின்னர் வேகம் ரிவர்ஸ் செய்யப்பட்டு செவ்வாயின் சுற்று வட்டப் பாதையிலேயே மங்கள்யான் நிலை நிறுத்தப்படும்.

 

பெரிய ராக்கெட் மோட்டாரும், 8 திரஸ்டர்களும்

கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து அது வெற்றிகரமாக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. இந்த விண்கலத்தில் ஒரு பெரிய ராக்கெட் மோட்டாரும், எட்டு சிறிய ரக "திரஸ்டர்களும்" பொருத்தப்பட்டுள்ளன.

 

சொகுசான ராக்கெட் மோட்டார்

இதில் பெரிய ரக ராக்கெட் மோட்டார் சில முறை மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. இதைத்தான் தற்போது விஞ்ஞானிகள் இயக்கிப் பார்க்கவுள்ளனர். இதுதான் மங்கள்யானின் வேகத்தைக் குறைத்து அதை செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தும் பணியைச் செய்யப் போகிறது.

 

4 விநாடி சோதனை

புதன்கிழமைதான் இந்த ராக்கெட் மோட்டார் சில நிமிட நேரத்திற்கு இயக்கப்படவுள்ளது. இருப்பினும் பல மாதமாக அது செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், கடைசி நேரத்தில் சிக்கல் வந்து விடக் கூடாதே என்பதற்காக அதை இன்று 4 விநாடி நேர அளவுக்கு இயக்கிப் பார்க்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இன்று அந்த சோதனை நடைபெறவுள்ளது.

 

சூப்பர் மோட்டார்

இந்த பெரிய ராக்கெட் மோட்டாரானது, கடந்த 1992ம் ஆண்டு முதல் பல்வேறு நிலைகளில் 12 முறை சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் அது எந்தப் பிரச்சினையுமின்றி செயல்பட்டுள்ளது. எனவே இஸ்ரோ தரப்பில் அதிக நம்பிக்கையும் காணப்படுகிறது.

 

எல்லா உத்தரவுகளும் ரெடி!

இதுகுறித்து மங்கள்யான் திட்ட கட்டுப்பாட்டாளர் ராமகிருஷ்ணா கூறுகையில், ராக்கெட் மோட்டாரில் உள்ள அனைத்து உத்தரவுகளும் சிறப்பான முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே விண்கலம் தானாகவே தனது செயல்களை திட்டமிட்டபடி செய்யும் என்றார்.

 

3 ஆப்ஷன்கள்!

தற்போது முன்னெச்சரிக்கையாக 3 விதமான திட்டங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கையில் வைத்துள்ளனர். அதில் முதல் இரு திட்டங்கள்தான் முக்கியமானவை. ஒரு வேளை இந்தத் திட்டங்கள் தோல்வியில் முடிந்தால், 3வது திட்டம் கையில் எடுக்கப்படும். முதல் இரு திட்டங்கள் மூலம் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க முடியாமல் போகும்போது இந்த 3வது திட்டம்செயல்படுத்தப்படும். அதாவது விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள எட்டு சிறிய ரக திரஸ்டர்களைப் பயன்படுத்தி வேகம் குறைக்கப்படும்.

 

கும்பகர்ணா எழுந்திருப்பா...!

மங்கள்யானின் பெரிய ரக ராக்கெட் மோட்டாருக்கு கும்பகர்ணன் என்று செல்லப் பெயர் வைத்துள்ளனர் விஞ்ஞானிகள். காரணம், இது நீண்ட தூக்கத்தில் இருப்பதால். எனவே தூக்கத்திலிருந்து எழும் இது சிறப்பாக செயல்பட வேண்டுமே என்ற பிரார்த்தனையும் ஒரு பக்கம் இருக்கிறது.

 

புதன்கிழமை முழு வீச்சில்

இன்று நான்கு விநாடி நேரத்திற்கு இந்த கும்பகர்ணன் விழித்திருந்து வேலை பார்க்கப் போகிறார். அதன் பின்னர் மீண்டும் தூக்கத்திற்குச் செல்லும் கும்பகர்ணன், புதன்கிழமை முழு வீச்சில் செயல்படுவார்.

 

ரிஸ்க்தான்

மங்கள்யான் விண்கலம், செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் சீரான வேகத்தில் அது செவ்வாய் கிரகதத்தை சுற்றி வர ஆரம்பிக்கும். இதில் மோட்டாரை இயக்கி செயல்படுத்துவதுதான் ரிஸ்க்கான வேலை என்பதால் இஸ்ரோவில் சற்று பதட்டமும் இருக்கத்தான் செய்கிறது.

 

புதன்கிழமை பெங்களூர் வருகிறார் மோடி

இதற்கிடையே, செவ்வாய் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நுழைவதை நேரில் காண பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடி வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு படைத்தது இந்தியா... செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான்.

 

பெங்களூர்: மங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. புதிய சகாப்தத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது.

 

இன்று காலை 8 மணியளவில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் நுழைந்ததை உறுதிப்படுத்தும் செய்தி இஸ்ரோவை வந்தடைந்தது.

 

திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து மங்கள்யான் செவ்வாயின் நிழலை எட்டிப் பிடித்துள்ளது இந்திய மக்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

24-mars-orbitar-mission34-600.jpg

 

இன்று காலை நாலே கால் மணியிலிருந்து மங்கள்யானை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் செலுத்தும் பணிகள் பெங்களூர் அருகே உள்ள புவிக்கட்டுப்பாட்டு மையத்தில் தொடங்கின.

 

காலை ஏழேகால் மணியளவில் விண்கலத்தின் அனைத்து என்ஜின்களும் வெற்றிகரமாக இயக்கப்பட்டன. இந்த வேலைகள் எழே முக்கால் மணியளவில் முடிவடைந்து வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான். இது எட்டு மணியளவில் உறுதிப்படுத்தப்பட்டது.

 

உறுதிப்படுத்தும் செய்தி வந்ததும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகத்தில் கைதட்டிட வரவேற்று மகிழ்ந்தனர். இந்த நிகழ்வை பிரதமர் மோடி நேரில் பார்த்து மகிழ்ந்தார்.

 

முதல் ஆசிய நாடு

செவ்வாய் கிரகத்தை எட்டிப் பிடித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமயை இந்தியா பெற்றுள்ளது. மேலும் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குள் நுழைந்த 4வது நாடும் இந்தியா. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய வி்ண்வெளி அமைப்புகள் மட்டுமே செவ்வாயை எட்டிப் பிடித்தவையாகும். அந்த வரிசையில் தற்போது இந்தியா இணைந்துள்ளது.

 

உலகின் நான்கு இடங்களில்

மங்கள்யானின் செயல்பாடுகளை அமெரிக்கா உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்து கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் இஸ்ரோ கண்காணித்தது. மேலும் அமெரிக்காவின் நாசா அமைப்பும் மங்கள்யான் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

  • கருத்துக்கள உறவுகள்
 
செவ்வாயின் சுற்றுப்பாதையில் மங்கள்யான் நிலைநிறுத்தம்! முதல் முயற்சியிலேயே இந்திய விஞ்ஞானிகள் சாதனை!'
 
705.jpg
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று (24.09.2014) செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
 
அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. மங்கயான் விண்கலம், செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்கி உள்ளது
 
மிக முக்கியமான இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார். இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு கைகுலுக்கி பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
 
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. பல்வேறு நாடுகள் இதுவரை 51 விண்கலங்களை அனுப்பியதில் 21 மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. 
 
702.jpgமங்கள்யான் விண்கல திட்டம் வெற்றி பெற அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜெட் பிரோபல்சன் ஆய்வுக்கூடம் ஏற்கனவே இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது.
 
சாதிக்க முடியாததை இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. முதல் முயற்சியிலேயே வெற்றி அடைந்தது பெருமைக்குரியது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். அனைத்து இந்தியர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மங்கள்யான் விண்கல பயணம் வெற்றியடையும் என்று நம்பிக்கை இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
 
 
India's first Mars satellite 'Mangalyaan' enters orbit.

http://www.bbc.co.uk/news/science-environment-28268186

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Only the US, Europe and Russia have previously sent missions to Mars, but India is the first country to succeed on its first attempt.


-bbc.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முதல் முயற்சி வெற்றி பெற்றதற்கு.. வாழ்த்துக்கள். இந்த மங்கல்யானை வடிவமைத்ததில்.. அனுப்பியத்தில்..  தமிழக விஞ்ஞானிகள் ஆற்றிய பங்குக்கும் பாராட்டுக்கள்..!! :)

  • கருத்துக்கள உறவுகள்
மங்கள்யான் திட்ட இயக்குநர் நெல்லை சுப்பையா அருணன்... ஒரு கிராமத்து விஞ்ஞானி
 
திருநெல்வேலி: இந்திய அறிவியலில் மிகப்பெரிய சாதனை இன்றைய தினம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பூமியில் இருந்து புறப்பட்ட மங்கள்யான் செவ்வாயை அடைந்த தினம் இன்று.
 
இன்றைக்கு உலகமே இந்தியாவின் சாதனையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மங்கள்யான். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் 'மங்கள்யான்' திட்டத்தின் தூணாக இருந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன்!
 
இவர் ஒரு தமிழர் அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து விஞ்ஞானி. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ்... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்ய அருணன் வகுத்த வியூகம் அளப்பரியது, செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான் நிலைநிறுத்தப்பட்ட உடன் சக விஞ்ஞானிகள் அவருடன் கைகுலுக்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.

http://tamil.oneindia.in/news/tamilnadu/mom-spacecraft-subbiah-arunan-the-project-director-mars-orbiter-mission-211573.html

Edited by nedukkalapoovan

இந்திய விஞ்ஞானிகளுக்கும் இம் முயற்சியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான்: இந்தியாவின் வெற்றிகரமான சாதனை

 

WR_20140924111110.jpeg


http://www.dinamalar.com/news_detail.asp?id=1078054

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விஞ்ஞானிகளில் தமிழ் விஞ்ஞானிகள்தான் அதிகம்பேர் உள்ளார்கள்.

வாழ்த்துக்கள் விஞ்ஞானிகளே... தமிழினம் பெருமைகொள்ள தரணியெங்கும் சரித்திரம் படைத்தீர்!!!

The fact that the mission succeeded on its first go is a testament to the handwork and engineering of the Indian team which were operating on a considerably tiny budget. To put it into perspective, the $74 million cost for the mission was less than the budget for the filmGravity which cost $100 million to make. It’s even more extraordinary when you consider NASA’s most recent Mars landing cost $671 million.

செவ்வாயில் சேமித்ததை கவர்ந்து செல்ல 
எத்தனை அரசியல் கருவாய்கள் காத்திருக்குதுகள்?

மங்கள்யான் செயற்கைக்கோள் பற்றிய அரிய தகவல்கள்!

 

* மங்கள்யான் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமே, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதுதான்.

* செவ்வாய் கிரகத்தையும் தாண்டி விண்வெளியில் ஆய்வு செய்யும் தொழில்நுட்பத் திறமையை இந்தியா பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

* மங்கள்யான் விண்கலத்தின் மொத்த எடையே 15 கிலோதான். ஆனால் அதிநவீனமாக அது தயாரிக்கப்பட்டுள்ளது.

* மங்கள்யானில் மொத்தம் 5 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ஒரு கருவி மீத்தேன் இருக்கும் அளவை ஆராயும். 2–வது கருவி லைமன் ஆல்பா ஒளிமானி எனப்படும் போட்டோ மீட்டர் கருவியாகும். மேற்கண்ட இவை இரண்டும் செவ்வாய் கிரக காற்று மண்டல தகவல்களைத் தரும்.

* செவ்வாய் கிரகத்தின் மேற்புற படிமங்களை ஆய்வு செய்ய அதிநவீன கலர் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல சிறப்பு நிற கதிர்கள் பற்றி மற்றொரு கருவி ஆய்வு செய்யும். இவை தவிர செவ்வாய் புறக்காற்று மண்டலத்தை 5–வது கருவி ஆய்வு செய்யும்.

* செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக ஒரு ராக்கெட் தளம் அமைப்பதற்கான ஆய்வையும் மங்கள்யான் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். இதன் மூலம் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்தியாவால் விண்கலங்களை அனுப்ப முடியும்.

* மங்கள்யான் அனுப்பும் படங்களின் அடிப்படையில் விண்வெளி தொடர்பு முறைகளை விருத்தி செய்யவும் இந்திய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

* மங்கள்யான் இன்னும் 6 மாதங்களுக்கு செயல்படும் ஆற்றல் கொண்டது. இந்த 6 மாதங்களில் சுமார் 60 தடவை செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் விண்கலம் சுற்றி வரும்.

* மங்கள்யான் தனது 300 நாள் பயணத்தின்போது, வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஹெலன் புயலை மிகத் தெளிவாக படம் எடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

* மங்கள்யான் தன் 4–வது சுற்றுப்பாதையை தொடங்கிய போது சிறிது எந்திரக் கோளாறு ஏற்பட்டது. சரியான நேரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை கண்டுபிடித்து விட்டதால் உடனடியாக அந்த எந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டது.

* மங்கள்யான் தன் பயணத்தின் 200–வது நாள் 42 கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தது. இது மொத்த பயண தூரத்தில் 60 சதவீதமாகும்.

* மங்கள்யானின் மொத்த பயண நாளான 325 நாட்களில் 4 தடவை பாதை மாற்றி விடப்பட்டது.

* செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் 3.2 நாட்களுக்கு ஒரு தடவை செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் சுற்றி வரும்.

* மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்று சேர மொத்தம் 250 கிலோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* செவ்வாய் கிரக ஆய்வில் மங்கள்யானின் பணி, அமெரிக்காவின் நாசா திட்டங்களையும் விட முதன்மையானதாக, வலுவுள்ளதாக, பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

* மங்கள்யான் அடுத்த 6 மாதங்களில் செயல்பட போவதை பெங்களூர் அருகே உள்ள பயலாலுவில் உள்ள இந்திய தொலைநிலை விண்வெளி கட்டுப்பாட்டு மையம் கண்காணிக்கும்.

 

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=110852

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மங்கல்யானை அங்காரகனில் ஏவிய அத்தனை விஞ்ஞானிகளுக்கும் உளம் நிறைந்த பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும்...!  :D

  • கருத்துக்கள உறவுகள்

The cost of  Mangalyaan($67M) is chepaer than the cost to make the hollywood space movie "Gravity", which costed $100M

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

The cost of  Mangalyaan($67M) is chepaer than the cost to make the hollywood space movie "Gravity", which costed $100M

 

விண்வெளி சம்பந்தமான படம் தயாரிக்க $100M

நிஜமாகவே... விண்வெளிக்கு மங்கல்யான் போக $67M நல்ல தமாஸ் தான்.

 

அமேரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்வெளிகலத்துக்கு இதனை விட 10 மடங்கு அதிகம் செலவழித்தும் பல தோல்வியில் முடிந்த பின்பே சில செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தன.

இந்த விடயத்தில், இந்திய தமிழ் விஞ்ஜானிகளை பாராட்ட வேண்டும்.

ஒரு ஈழத்தமிழனாக இந்த வெற்றியில் சந்தோசப் பட எதுவுமில்லை, விண்வெளியிலுள்ள தமது சற்றலைட்கள் மற்றும் ராடார்கள் மூலம் எமது எதிரிக்குத் தகவல்களை அள்ளிவழங்கி எம்மை அழிக்க துணை போனவனின் விண்வெளி வெற்றியில்.......... நாம் எதைச் சந்தோசப்படுவது ? எமது கடல் வளத்தில் எங்கே அதிகளவில் மீன்கள் இருக்கிறது என விண்வெளியில் இருந்து கண்டுபிடித்து இன்னும் எம்மை வந்து சூறையாடுவார்கள் இந்த கொள்ளையர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளி சம்பந்தமான படம் தயாரிக்க $100M

நிஜமாகவே... விண்வெளிக்கு மங்கல்யான் போக $67M நல்ல தமாஸ் தான்.

அமேரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்வெளிகலத்துக்கு இதனை விட 10 மடங்கு அதிகம் செலவழித்தும் பல தோல்வியில் முடிந்த பின்பே சில செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தன.

இந்த விடயத்தில், இந்திய தமிழ் விஞ்ஜானிகளை பாராட்ட வேண்டும்.

Payload for NASA's maven mission is 65 kg, where as ISRO's MOM mission payload is only 15 kg. That is why the cost of mangalyaan was so cheap.

Edited by ragaa

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WR_272729_416_327.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எல்லா அறிவாளிகளும் சேர்ந்து இந்தியாவின் வறுமை கோட்டை ஒழிக்க முயற்சி செய்யுங்கோ.60% மேற்பட்டவர்கள் வறுமை கோட்டுக்கு மேலே இதில் மங்கல்யானும்,மண்ணாங்கட்டியானும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.