Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துக்குத் திரும்பிச் செல்லவிடாமல் உங்களைத் தடுக்கும் விடயங்கள் எவை?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகதிகள் என்ற மனப்பாங்கிலிருந்து ஏன் மீள மாட்டோம் என்று அடம்பிடிக்கின்றீா்கள் எல்லோரும். என்னைப்பொறுத்தவரை ”அகதி” என்று நாம் எம்மை வரையறை செய்தால் ஒட்டுமொத்த கனேடியா்களும் அகதிகளே..! ( except Native canadian )  எம் பிரதமா் அவுஸ்ரேலியாவிலிருந்து குடிபெயா்ந்தவா்களின் மரபு... இப்படி அனைவருமே குடிபெயா்ந்தவா்களே... குடிபெயா்வுக்கான காரணங்கள் வெவ்வெறாக இருக்கலாம் ஆனால் யாரும் கனடாவின் சொந்தகாரா் அல்ல.

சிறிலங்கா சென்று வாழ வேண்டாம் என்று வாதிடுவது நோக்கமல்ல. ஆனால் இந்த விவாதத் தலைப்பை அரசியல் சாராமல் கொண்டு சொல்ல முடியாது என்பது யதாா்த்தம். ஈழத்துக்கு திருப்புதல் என்ற தலைப்பு யதாா்த்தமற்றதாகவே பாா்க்கவேண்டியுள்ளது. 
 

என்னதான் சிறிலங்காவிற்கு ஈழம் என்ற பெயரும்  பொருந்தும் என்றாலும் அந்த வாா்த்தையை சத்தமாக பேசுவது என்பது தற்கால சிறிலங்காவின் முடியாத காரியம். 

பொருளாதார பிரச்சினைகளை எப்படிப்பட்டும் தீா்க்க முடியும். மீளச் செல்வதில் அது ஒரு பிரச்சினையாக இருக்காது ஆனால் பொருளாதார வசதிகள் அற்றும் உங்களுக்கு என்று வடகிழக்கில் இருக்கும் நிலங்களை நம்பியும் அங்கு செல்ல முடியாது. 

 

தும்பளையான் சொல்வது போல படித்து கொழும்பில் வேலை பாா்க்கும் ஆசை இருந்தால் அங்கு செல்லமுடியும். கொஞ்சம் சிங்களம், தமிழ் ஆங்கிலம் தொியும் என்ற ரீதியில் வாழ்க்கை சுமாராகவேணும்  போகலாம். ஆனால் மீண்டும் முரணான விடயம் அரசியல் சாா்ந்து எழுகின்றது. யாழ்ப்பாணத்திலிருப்பவா் கொழும்பில் நின்று பணிபுாியவேண்டும் என்றால் ஏன் வெளிநாடுகளில் செய்ய முடியாது? கொழும்பு யாழ்பாணப் பயணம் 7 மணி நேரம்....லண்டன் கொழும்பு 8 மணி  நேரம் என்று நினைக்கிறேன்.
 

 

இன்னோரு விடயம் தும்பளையான் அவா்களின் கருத்தில், இங்கு படிப்புக்கு ஏற்ற மாியாதை இல்லை என்று சொல்லும் அவா் இறுதியில் அங்கு சென்று படம் காட்டத்தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளாா். மாியாதை என்பதை என்ன கருத்தில் கூறினாா் என்று தொியவில்லை ஆனால் இங்கு முகாமையாளருக்கும்... சிற்றுளிா்களுக்கும் பதவி மட்டுமே வேறுபாடு...அதை நல்லவிடயமாகவே பாா்க்கிறேன். மாறாய் சிறிலங்கா போன்ற நாடுகளில் முகாமையாளா் என்றால் அவா் தன் பதவிக்கு மற்றவா்கள் மாியாதை செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு உண்டு. அவை இங்கு படித்து பணியாற்றிவா்கள் அங்கு சென்று பணிபுாியும் போது சாத்தியமா?

அடுத்து 2000 ஆயிரம் டொலா்கள் சம்பளத்தில் சிறிலங்காவில் இங்கிருக்கும் வாழ்கைமுறையை கொண்டு நடாத்த முடியுமா? சாதாரண குடும்பம் ஒன்றுக்கு அது போதுமானதா? (பிள்ளைகளின் படிப்பு செலவு, காா், உணவு, வீடு, .இலன்சம், மற்றும் ஏனையவை)

 

அதுமட்டுமன்றி, இன்றைய அரசியல் நிகழ்வுகள் இன்றும் 10 அல்லது 20 ஆண்டுகளில் மாற்றமடையும் என்று யாரும் உறுதியாக நம்புகின்றீா்களா? அப்படி மாறினாலும் உங்கள் பாதுகாப்புக்கு புலம்பெயா்ந்து நீங்கள் வாழும் நாடுகளில் இப்போது இருப்பது போன்ற உறுதி கிடைக்குமா? இங்கு தமிழை மறந்து கலாச்சாரம் மாறுகின்றது என்று கவலைப்படுபவராக இருப்பின்... சா்வதேசப்பாடசாலைகளில் கல்விகற்று ஆங்கிலத்தையும் தொழிலுக்காய் சிங்களத்தையும் கற்று இங்கிருக்கும் கலாச்சாரங்களை பேணிவரும் கொழும்பு...(கிட்டத்தட்ட யாழ்பாணமும் இப்போது) வாழ்வில் எமது கலாச்சார அழிவு வராது என்பதற்க்கு என்ன உத்தரவாதம். 

சொந்த நாட்டில் வாழ்ந்தோம் என்ற பெருமையைத் தவிர வேறென்னத்தை பொறமுடியும்?   வந்து வாழும் நாட்டை எமது நாடாக கருத முடியாதா?

மாற்றினத்தவா்கள் எம்மை துவேசம் கொண்டு பாா்க்கிறாா்கள் என்பது உண்மையாக இருந்தாலும் அந்த துவேசம் எங்களுக்குள்ளும் இருக்கிறது. ”சப்பட்டை” கறுவல்” ”பாக்கி”  ”வடக்கு” காப்பிலி” ”வெள்ளை” என்று மற்றவா்களை பாா்த்து நாமும் துவேசத்தை காட்டுகின்றோமே? அப்படியிருக்கையில் எப்படி அவா்களைக் குற்றம் சாட்டுவது?

 

இது மீண்டும் நாம் ஏன் அங்கு சென்று வாழக்கூடாது என்ற  கேள்விக்கான கருத்தேயன்றி... அங்கு செல்லக்கூடாது என்ற வாதமல்ல.

“என்னை கொல்ல நினைக்கும் தாயை விட காப்பாற்றிய வளா்ப்புத்தாயை போற்றிடல் தகும்..”

இறுதியாய்...

தூயவன் அண்ணா, மற்றும்  போக விரும்புவா்களுக்கு....

ஈழத்தின் இன்றும் விடுதலைப்போராட்டம் (ஆயுத) நடைபெற்றுக்கொண்டிருந்தால்.? அங்கு மக்கள் செத்துக்கொண்டிருந்தால்..? திரும்பிச் செல்வீா்களா?  அப்படியானால் போராட்டத்தை வலுவாக்கா நாங்கள் அப்போராட்டம் மௌனிக்கும் முன் தாயகத்தில் நின்றிருப்போமே? ஏன் அதைச் செய்யவில்லை.? இப்போதும் சுயநலம் அப்போதும் சுயநலமே அனைவருக்கும் முன்னிற்க்கிறது..!


 

 

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறவுகள்

விவாதம் நல்ல வழியில் செல்கிறது

நன்றி  உறவுகளே...

 

இப்படிப்பார்க்கலாம்..

தாயகம்  இன்றுள்ளநிலையில்...

ஒவ்வொரு நாடும்

கனடா

அமெரிக்கா ...... ஐரோப்பிய நாடுகள் அத்தனையும்

கப்பல்களை தாயகப்பகுதிகளில் நிறுத்தி

வருபவர்களை  ஏற்றுக்கொள்கின்றோம் என்றால்...

எத்தனை பேர் தாயகத்தில் மிஞ்சுவார்கள்..............

 

இதற்கு விடை தெரிந்தால்

புலத்திலுள்ளவர்கள் ஊருக்கு போவதும் தெளிவாகும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரைக்கும் அங்கு ஒரு நியாயமான தீர்வு வந்து இராணுவப் பிரசன்னம் அறவே அற்றுப் போனாலும் நான் அங்கு போய் நிரந்தரமாக வாழப் போவதில்லை. கனடா கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளினாலும், அபிவிருத்தி அடைந்த, வசதியுள்ள இன்னொரு நாட்டிற்கு புலம்பெயரவே விரும்புவேன்.

 

இதன் முக்கிய காரணம், இங்குள்ள வசதி வாய்ப்புகளும், திறமைக்கேற்ற வேலையும் ஊதியமும் அது கொடுக்கும் மதிப்பும். நான் போரினைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்து கனடாவுக்கு வந்தவன் அல்ல. டுபாயில் 5 வருடங்கள் இருந்து,  பின் அங்கிருந்து Skill migration மூலம் கனடாவ் வந்தவன் என்பதால் போரின் காரணமாக கனடா வரவில்லை. வருவதற்கான அடிப்படைக் காரணமாக இருந்தது மேற்கத்திய வாழ்க்கை முறையில் இருந்த ஆசையும், மூன்றாம் தரப் பிரஜையாக இனவாத அரசின் கீழ் வாழ விருப்பம் இல்லாமையும் தான்.

 

எனக்கு பிடித்தமான வாழ்க்கை முறையையும், கல்வி வசதிகளையும், வேலை வாய்ப்புகளையும், இதர விடயங்களையும் பெறுவதற்கு கனடிய சட்டங்களும் அரசியலமைப்பும் குறுக்கே நிற்காமையினால், ஒரு நல்ல பிரஜையாக நான் இங்கு தான் தொடர்ந்து இருப்பேன். நாளைக்கு கனடிய அரசியலில் பெரும் மாற்றம் வந்து குடியேற்ற வாசிகளை நாலாம் தரப் பிரஜைகளாக நடாத்த தொடங்கினால் என் அடுத்த தலைமுறை (என் பிள்ளைகள்) தம் வேர்களை தேடிப் போகத் தொடங்கும் என்று எண்ணுகின்றேன்.

 

இந்தத் தலைப்பின் நோக்கம் அகதியாக வந்தவன் தான் திரும்பிப் போக வேண்டும் என்றல்ல. அகதியாக வந்தவர் ஒரு 20-30 வீதமாகத் தான் இருக்கும். மிகுதிப் பேர் கணவன், சகோதரர், கூப்பிட்டு விட்டவர்களாகவோ, இங்கு பிறந்தவர்களாகவோ இருப்பார்கள். இதை விடக் கல்வி நடவடிக்கைகளுக்காக இங்கு வந்தவர்களும் உள்ளனர். ஒவ்வொருவரும் என்னென்ன வாய்ப்பினைப் பாவித்து வந்தார்கள் என்பது அவர்களைப் பொறுத்த ஒன்று. ஆனால் போராட்டம், இன அழிப்பு போன்றவற்றின் பாதிப்புக்கள் எல்லாத் தமிழர்களுக்கும் பொருந்தக்கூடியவை என்பதால், இப்படியே போராட்டம் என்பதை நடத்திவிட்டு இங்கேயே இருப்பதா என்பதே கேள்வி..

கோப்பை அடிப்பவன் பிஎம்டபிள்யு பென்ஸ் ஓடக்கூடாது என்ற சிந்தனையே தவறு. ஊரில் ஒருத்தரும் கோப்பை அடிக்கவில்லையா? எல்லாம் தடிப்புதான்.

 

கோப்பை அடிப்பதைத் தவறாகக் கூறவில்லை. ஆனால் அதில் கிடைக்கின்ற சொற்ப சம்பாத்தியத்தில் அதிகமாகக் செலவு செய்வதைப் பற்றியே கேட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் ஊரில் சென்று வாழவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் அவர் சொன்ன இன்னும் பத்து ஆண்டுகளுள் என்பது முரண்படுகிறது. இன்னும் பத்து ஆண்டுகளுள் உங்கள் பொருளாதார வளத்தைக் கட்டி எழுப்புவதர்க்கா ???? அன்றி என்ன காரணம் என்று நீங்கள் குறிப்பிடவில்லை. பத்து ஆண்டுகளில் எத்தனையோ நடக்கலாம். நாம் உயிருடன் கூட இல்லாமல் இருக்கலாம். எம் மனநிலை இன்னும் வெளிநாட்டு மோகத்துக்கு அடிமையாகலாம். போவதானால் எம் உடலிலும் மனதிலும் தெம்பு இருக்கும் பொது அங்கு போவது எம்மை எதற்கும் ஈடுகொடுக்க வைக்குமே தவிர எழாத காலத்தில் அங்கு செல்வது கோயில் குளம் பார்த்துக்கொண்டு இருக்கவா. உண்மையில் எனக்குப் பெண் என்பதால் அங்கு சென்று வாசிப்பதில் பயம் இருக்கிறது. மற்றப்படி இங்கும் நாம் அடிமை வாழ்வை வசதியுடன் வாழ்கிறோம் என்பதுதான் உண்மை. இங்கு எழுதியவர்களில் பலர் வசதிவாய்ப்புக்களை அனுபவித்துக்கொண்டு இங்கு இருப்பதையே விரும்புவது நன்றாகத் தெரிகின்றது. உண்மையில் நாம் தேசம் பற்றிக் கதைப்பதற்கு எந்தத் தகுதியும் அற்றவர்கள்.

 

என் ஆசை ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களையும் ஈழத்துக்குப் பிடித்து அனுப்பிவிட வேண்டும். அப்போது நிட்சயமாய் எமக்கான ஒரு விடிவு ஏற்படலாம், எம் நாடும் மக்களும் கூட முன்னேறலாம்.

 

ஆண்டு என்பது ஒரு இலக்கு. நாளைக்கே போகலாம் என்று சொன்னால் எத்தனை பேரால் போகமுடியும். என்னால் கூட இயலாது. வீடு, கடனட்டை கட்டி முடிக்கவே வெறுத்துவிடும். உண்மையில் என் மண்ணுக்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்றால் என்ன விடயங்கள் தடுக்கின்றன என்பதை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்வதைப் பற்றிக் கொஞ்சமாவது நாங்கள் சிந்திக்க வேண்டாமா? ஆனால் இங்கு எழுதியவர்கள் யாருமே போய் வசிக்கலாம் என்ற மனநிலையில் கூட இல்லை. அப்படியிருக்கின்ற போது எப்படி மேற்குறித்தவை பற்றிக் கதைக்க முடியம்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணா, மற்றும் போக விரும்புவா்களுக்கு.... ஈழத்தின் இன்றும் விடுதலைப்போராட்டம் (ஆயுத) நடைபெற்றுக்கொண்டிருந்தால்.? அங்கு மக்கள் செத்துக்கொண்டிருந்தால்..? திரும்பிச் செல்வீா்களா? அப்படியானால் போராட்டத்தை வலுவாக்கா நாங்கள் அப்போராட்டம் மௌனிக்கும் முன் தாயகத்தில் நின்றிருப்போமே? ஏன் அதைச் செய்யவில்லை.? இப்போதும் சுயநலம் அப்போதும் சுயநலமே அனைவருக்கும் முன்னிற்க்கிறது..!////// சமயத்தில் ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்தால்.... என்ற கேள்விக்கு நான் ஆம் போவேன் என்று சொன்னால் அதை எப்படியான பதிலாக நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். சொல்லப் போனால் நடக்க முடியாத விடயங்களுக்கு எந்தவிதமான பதிலையும் சொல்லிக் கொள்ளலாம். அது பிரச்சனையான விடயமே அல்ல. ஆயுதப் போராட்டம் மௌனிக்கும்போது நின்றிருப்போம் என்றால், அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, " எல்லாமே தலைவர் பார்த்தக் கொள்வார் என்று" அனைவரும் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்... கொண்டிருந்தனர். ஒரு இழப்பின் வீரியத்தை அன்று புரிந்து கொள்கின்ற அளவுக்கு அறிவு இருந்ததில்லை. தீபன் அணஒ;ணா வீரச்சாவு அடைந்த படங்களைச் சிங்கள அரசு வெளியிட்டபோது கூட அதை ஒரு சிங்களப் போலிப் பிரச்சாரயுக்தியாகவே அனைவரும் எடுத்துக் கொண்டிருந்தோம். ஏன் தலைவர் பற்றிய விடயங்களைக் கூட கனகாலமாக என்ன கதைக்கப்பட்டது என்பது உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பல தடவை உங்களோடு அது பற்றி விவாதம் போயிருந்தது. மக்களின் இழப்புக்கள் பற்றி எப்போது கதைக்கவெளிக்கனர் என்றால் எல்லாமே முடிந்த பின்னர். ஒட்டாவாவில் செய்த போராட்டங்களில் மக்களின் இபழ்புக்களைப் புரிய வைக்க முனைந்தோமா? அதில் வந்தவர்கள் பலர் மற்றவர்கள் எங்கு ஹட்டல் பதிந்து தங்கியிருக்கின்றார்கள் என்று பார்க்கத் தானே வந்தார்கள். எனவே இப்போது வந்து மக்கள் செத்தழிந்தபோது ஏன் போகவில்லை என்று கேட்பது எல்லாம் நேர்மையான வாதமே இல்லை.

இதை விட, ஏன் இவ்வளவு காலமும் ஏன் போகத் தோன்றவில்லை என்று என்னுமொரு கேள்வி கேட்டு கடுப்பேத்தலாம். அல்லது என் வாயை மூட வைக்க முயற்சிக்கலாம். மனதில் எப்போது என்ன விடயம் தோன்றும் என்பதை உங்களுக்குப் பட்டியலிடத் தேவையில்லை. நாங்கள் அப்போது போகவிரும்பவில்லை. சுயநலம் தான்.. இப்போதும் போகவிரும்பாதவர்களுடைய செயலுக்கு என்ன பட்டம் கொடுப்பீர்கள்...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் தமிழ் நாட்டில்115 ஈழதமிழ் அகதி முகாம்கள் 100,000 மேற்பட்டோர் இருக்கிறார்கள் என நினைக்கிறேன் உன்மையே இவர்கள் வந்தால் போதுமே நில ஆக்கிரமிப்பை குறைக்கலாம் :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆண்டில் இருந்து மீண்டும்.. இரட்டை பிரஜா உரிமையாம்.

 

தமிழர்கள் இரட்டை பிரஜா உரிமை எடுப்பதை கண்டு பயந்த மகிந்த.. வத்திக்கான் போய்.. இத்தாலி போன வழியில்.. நீர்கொழும்பில் இருந்து படகுகளில்.. இத்தாலிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து குடியேறிய சிங்களவர்கள் மத்தியில்.. இந்த உத்தரவாதத்தை அளித்துச் சென்றுள்ளார்.

 

அதுமட்டுமல்ல.. இத்தாலிய சட்டவிரோத சிங்களக் குடியேற்றக்காரர்களின் நலன் பேண.. வங்கியும்.. தூதரகமும் அமைய உள்ளதாம்.

 

வெளிநாட்டில் என்றால் என்ன உள்நாட்டில் என்றால் என்ன.. தமிழர்கள் எந்த அளவில் சிறீலங்கா அரசால் வரவேற்கப்படுகிறார்கள் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆண்டில் இருந்து மீண்டும்.. இரட்டை பிரஜா உரிமையாம்.

 

தமிழர்கள் இரட்டை பிரஜா உரிமை எடுப்பதை கண்டு பயந்த மகிந்த.. வத்திக்கான் போய்.. இத்தாலி போன வழியில்.. நீர்கொழும்பில் இருந்து படகுகளில்.. இத்தாலிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து குடியேறிய சிங்களவர்கள் மத்தியில்.. இந்த உத்தரவாதத்தை அளித்துச் சென்றுள்ளார்.

 

அதுமட்டுமல்ல.. இத்தாலிய சட்டவிரோத சிங்களக் குடியேற்றக்காரர்களின் நலன் பேண.. வங்கியும்.. தூதரகமும் அமைய உள்ளதாம்.

 

வெளிநாட்டில் என்றால் என்ன உள்நாட்டில் என்றால் என்ன.. தமிழர்கள் எந்த அளவில் சிறீலங்கா அரசால் வரவேற்கப்படுகிறார்கள் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு..! :lol::icon_idea:

 

ஏன் இத்தாலியில் தமிழ் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் இல்லையா? ஏன் பலர தமிழர் படகுகளில் செல்லவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம், ஊர், நாடு இது சிலரிற்கு இலங்கை. சிலரிற்கு தமிழீழம். இதில் நீங்கள் எந்த வகை?

 

ஒரு காலத்தில் எனது நண்பனின் ஊரில் ஒரு உதைபந்தாட்க்கழகத்தை கட்டியெழுப்பி அதனை இங்கே வெளிநாட்டு கழகங்கள் போல் வழிநடத்தி ஆசியாவில் பேசப்படும் கழகமாக கொண்டுவர வேண்டும் என்பதே கனவாக இருந்தது.

நான் 7வயதில் ஊரைவிட்டு வெளியேறியிருந்தாலும் எனது ஊரை ஒரு குட்டி சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்றே ஆசை இருந்தது (எனது சொந்தப்பணத்தில் தான்). 

 

இனி எக்கால கட்டத்திலும் அந்த கொலைகார நாட்டிற்கு நான் போவதாக இல்லை. பல லட்சம் உயிர்கள் நிறைவேறாத லட்சியங்களுடன் இருக்கையில் என்னை தனது சொந்த குடிமகனாக கனவிலும் நினைக்கவிரும்பாத இன்னொருவனின் நாடான இலங்கைக்கு எந்த நேரத்திலும் செல்வதாக இல்லை. யாரையும் போக வேண்டாம் என்று தடுக்கப்போவதுமஇம் இல்லை. போகமலிருப்பதற்கான காரணங்களை சொல்லிக்கொண்டே இருப்பேன்.

 

இலக்கு ஒன்றே... அது தமிழீழம் தான் :wub:

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்

 

தும்பளையான் சொல்வது போல படித்து கொழும்பில் வேலை பாா்க்கும் ஆசை இருந்தால் அங்கு செல்லமுடியும். கொஞ்சம் சிங்களம், தமிழ் ஆங்கிலம் தொியும் என்ற ரீதியில் வாழ்க்கை சுமாராகவேணும்  போகலாம். ஆனால் மீண்டும் முரணான விடயம் அரசியல் சாா்ந்து எழுகின்றது. யாழ்ப்பாணத்திலிருப்பவா் கொழும்பில் நின்று பணிபுாியவேண்டும் என்றால் ஏன் வெளிநாடுகளில் செய்ய முடியாது? கொழும்பு யாழ்பாணப் பயணம் 7 மணி நேரம்....லண்டன் கொழும்பு 8 மணி  நேரம் என்று நினைக்கிறேன்.

 

 

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கொழும்பில் பணிபுரிவது பலகாலமாக நடக்கும் ஒன்று தான். யாழ்ப்பாணத்திலும் உரிய வருமானத்துடன் வேலை கிடைக்குமாயின் யாழ்ப்பாணத்தில் இருந்தே பணிபுரியலாம். தெற்குப் பகுதியைச் சேர்ந்த பலரும் தொழில் நிமித்தம் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வாழ்வது வழமையானது. லண்டனில்  கொழும்பு போவதும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போவதும் ஒன்றல்ல என்பது உங்களுக்கு விளங்கும் என நம்புகிறேன்.

 

 

 

 

இன்னோரு விடயம் தும்பளையான் அவா்களின் கருத்தில், இங்கு படிப்புக்கு ஏற்ற மாியாதை இல்லை என்று சொல்லும் அவா் இறுதியில் அங்கு சென்று படம் காட்டத்தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளாா். மாியாதை என்பதை என்ன கருத்தில் கூறினாா் என்று தொியவில்லை ஆனால் இங்கு முகாமையாளருக்கும்... சிற்றுளிா்களுக்கும் பதவி மட்டுமே வேறுபாடு...அதை நல்லவிடயமாகவே பாா்க்கிறேன். மாறாய் சிறிலங்கா போன்ற நாடுகளில் முகாமையாளா் என்றால் அவா் தன் பதவிக்கு மற்றவா்கள் மாியாதை செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு உண்டு. அவை இங்கு படித்து பணியாற்றிவா்கள் அங்கு சென்று பணிபுாியும் போது சாத்தியமா?

 

 

படிப்புக்கு ஏற்ற மரியாதை - தொழில் நிறுவனங்களில் மற்றைய சக வேலை செய்பவர்கள் தங்களை விட கூடிய பதவியில் இருந்தாலும் அதைக் கண்டு கொள்வதோ,  வேலை நிமித்தமான உதவிகளோ இருப்பதில்லை. சேர் எண்டோ மிஸ்டர் என்டோ கூப்பிட வேண்டும் என்றோ மரியாதை தர வேண்டும் என்றோ சொல்லவில்லை. சிலரை, சொன்ன வேலையை செய்ய வைப்பதே பெரும் கஷ்டமான விஷயம். இலங்கையில் அப்பிடியில்லை, ஒரு நிலைக்கு மேலே போனால் கீழே இருப்பவர்களுக்கு என்ன வேலையைச் சொன்னாலும் உடனடியாக முடித்து விடுவார்கள். இங்கு படித்தவர்கள் அங்கு போன சிறிது காலத்தில் மாறிவிடுவார்கள். அங்கிருந்து வருபவர்கள் சில மாதங்களில் மாறிவிடும் போது இங்கிருந்து போபவர்கள் மாறுவார்கள் தானே.

 

படம் காட்டுதல் - ஐயோ இந்த வெதர் சரியில்லை, தூசு சரிவராது, கிணத்தில குளிக்க ஏலாது, நடந்து திரிய மாட்டன், போன்ற பம்மாத்துக்கள்

 

 

 

அடுத்து 2000 ஆயிரம் டொலா்கள் சம்பளத்தில் சிறிலங்காவில் இங்கிருக்கும் வாழ்கைமுறையை கொண்டு நடாத்த முடியுமா? சாதாரண குடும்பம் ஒன்றுக்கு அது போதுமானதா? (பிள்ளைகளின் படிப்பு செலவு, காா், உணவு, வீடு, .இலன்சம், மற்றும் ஏனையவை)

 

 

 

எனக்கு AUD 2000 காணும் என்றே கூறியிருந்தேன். கீழ் இருப்பது தான் எனது கணக்கு. இது சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வாடகை என்னும் பெயரில் இன்னொரு 50,000/- - 80,000/- தேவைப்படலாம்.

AUD 2000 = 240,000/-

வீடு - இருப்பதால் வாடகை செலவில்லை

வாகனம் - எரிபொருள் இதர செலவுகள் - 30,000/-

மின்சாரம்/தண்ணீர்/தொலைபேசி/இணையம் - 40,000/-

உணவு மற்றும் இதர செலவுகள் - 100,000/-

வேறு செலவுகள் - 30,000/-

மொத்தம் - 200,000/-

மீதி - 40,000/-

 

பிள்ளைகள் இல்லை அத்துடன் இலங்கையில் இதுவரை லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவை  வந்ததில்லை.

 

 

 

அதுமட்டுமன்றி, இன்றைய அரசியல் நிகழ்வுகள் இன்றும் 10 அல்லது 20 ஆண்டுகளில் மாற்றமடையும் என்று யாரும் உறுதியாக நம்புகின்றீா்களா? அப்படி மாறினாலும் உங்கள் பாதுகாப்புக்கு புலம்பெயா்ந்து நீங்கள் வாழும் நாடுகளில் இப்போது இருப்பது போன்ற உறுதி கிடைக்குமா? இங்கு தமிழை மறந்து கலாச்சாரம் மாறுகின்றது என்று கவலைப்படுபவராக இருப்பின்... சா்வதேசப்பாடசாலைகளில் கல்விகற்று ஆங்கிலத்தையும் தொழிலுக்காய் சிங்களத்தையும் கற்று இங்கிருக்கும் கலாச்சாரங்களை பேணிவரும் கொழும்பு...(கிட்டத்தட்ட யாழ்பாணமும் இப்போது) வாழ்வில் எமது கலாச்சார அழிவு வராது என்பதற்க்கு என்ன உத்தரவாதம்.

 

 

அவுஸின் அரசியலே அடுத்த ஐந்து வருடங்களில் என்ன நடக்கும் என எதிர்வு கூற முடியாமல் இருப்பதால் இலங்கை பற்றி கூறுவது கடினம். ஆனால் மகிந்த சந்ததி அடுத்த பல வருடங்களுக்கு ஆளப்போகிறார்கள் என்பது உறுதி. UNP இப்போதைக்கு ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இல்லை. 

 

 

 

சொந்த நாட்டில் வாழ்ந்தோம் என்ற பெருமையைத் தவிர வேறென்னத்தை பொறமுடியும்? வந்து வாழும் நாட்டை எமது நாடாக கருத முடியாதா?

மாற்றினத்தவா்கள் எம்மை துவேசம் கொண்டு பாா்க்கிறாா்கள் என்பது உண்மையாக இருந்தாலும் அந்த துவேசம் எங்களுக்குள்ளும் இருக்கிறது. ”சப்பட்டை” கறுவல்” ”பாக்கி” ”வடக்கு” காப்பிலி” ”வெள்ளை” என்று மற்றவா்களை பாா்த்து நாமும் துவேசத்தை காட்டுகின்றோமே? அப்படியிருக்கையில் எப்படி அவா்களைக் குற்றம் சாட்டுவது?

 

 

 

அவுஸின் அரசியலே அடுத்த ஐந்து வருடங்களில் என்ன நடக்கும் என எதிர்வு கூற முடியாமல் இருப்பதால் இலங்கை பற்றி கூறுவது கடினம். ஆனால் மகிந்த சந்ததி அடுத்த பல வருடங்களுக்கு ஆளப்போகிறார்கள் என்பது உறுதி. UNP இப்போதைக்கு ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இல்லை.

சொந்த நாட்டில், சொந்த நிலத்தில் வாழ்வதற்காகத் தானே பல்லாயிரம் பேர் தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். நீங்கள் சொந்த நாட்டில் வாழ்வதைப் பெருமையாகக் கருதவில்லையா?

 

நாம் என்னதான் முக்கினாலும், வந்த நாடு ஒரு போதும் எமது நாடாகாது. எமது பரம்பரைகள் கூட அந்நியர்களாகத் தான் இருப்பார்கள். துவேசம் நாமும் காட்டுகிறோம், அவர்களும் காட்டுவார்கள். இந்தத் தாக்கமும் மறுதாக்கமும்  எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

 

இறுதியாய்...

தூயவன் அண்ணா, மற்றும் போக விரும்புவா்களுக்கு....

ஈழத்தின் இன்றும் விடுதலைப்போராட்டம் (ஆயுத) நடைபெற்றுக்கொண்டிருந்தால்.? அங்கு மக்கள் செத்துக்கொண்டிருந்தால்..? திரும்பிச் செல்வீா்களா? அப்படியானால் போராட்டத்தை வலுவாக்கா நாங்கள் அப்போராட்டம் மௌனிக்கும் முன் தாயகத்தில் நின்றிருப்போமே? ஏன் அதைச் செய்யவில்லை.? இப்போதும் சுயநலம் அப்போதும் சுயநலமே அனைவருக்கும் முன்னிற்க்கிறது..!

 

என்னைப் பொறுத்த வரை போராட்டம் நடந்து கொண்டிருந்தால் மீண்டும் போகமாட்டேன். இங்கு எத்தனை பேர் தாங்கள் போவார்கள் என்று மனதைத் தொட்டுச் சொல்லுவார்கள்? நான் சுயநலவாதிதான்,  இதை ஒத்துக்கொள்வதில் எதுவித வெட்கமோ தயக்கமோ இல்லை.

 

இல்லாவிட்டால் ஈழத்தமிழர்கள் தங்களிற்கென ஒரு நாட்டை உருவாக்க வேண்டுமென மிகக்குறிப்பிட்ட எண்ணிக்கையான இளைஞர்கள் போராடப் புறப்பட்ட சமயத்தில், அதனை சாக்காக வைத்து பெரும்பாலானவர்கள் அங்கிருந்து தப்பி வெளியேறியிருப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இத்தாலியில் தமிழ் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் இல்லையா? ஏன் பலர தமிழர் படகுகளில் செல்லவில்லையா?

 

இத்தாலியில் மட்டும் மகிந்தவுக்கு இரக்கம் வர என்ன காரணம். தமிழகத்தில் தமிழ் அகதிகள் இருக்குதுங்க.. அங்க அக்கறை வரேல்ல. மேற்குலக நாடுகள் எங்கும் இருக்குதுங்க.. அங்க அக்கறை வரேல்ல..!!! ஏன் உள்நாட்டில இருக்குதுங்க.. அங்க அக்கறை வரேல்ல. குறிப்பா இத்தாலியில் வரக் காரணம்.. அங்கு தான்.. அதிகம் சட்டவிரோத சிங்களக் குடியேற்றக்காரர்கள் உள்ளார்கள்.

 

இந்த வெளிப்படை உண்மையையே ஏற்றுக் கொள்ள முடியாத மனோநிலையில்.. நீங்கள் இருந்து கொண்டிருப்பது ஏனோ...??! :rolleyes::):icon_idea: :icon_idea:

ஒன்றும் இல்லை தூயவன் அண்ணே எனக்கு கொமட் பிரச்சினை அதை கட்டி முடித்த பின் போகலாம் என்று இருக்கிறேன் ... :icon_idea:

 

என் வாழ்வின் இறுதி காலத்தை என் ஊரிலே கழித்து மரணிக்க ஆசை பார்க்கலாம் அதுக்கு முன் மரணிக்கதவரை .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

போகணும் போயேதீரனும் அங்கு,  என் அப்பாவை எரித்த சுடலையில் என் கட்டை வேகனும் 

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் உங்கள் ஆதங்கம் புரிகிறது. யாழ் இணையத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளில் எல்லாம் தேசியத்துக்காக உயிர் கொடுக்க முனைபவர்கள் எல்லோருமே பச்சை சுயநலம் கொண்டவர்களே. மற்றவர்களுக்காக என்னவெல்லாம் நாட்டுக்காக, மக்களுக்காகச் செய்வதாக அவர்கள் புலம்பும் புலம்பல் வாசித்தால் சிரிப்பாக இருக்கும். ஆனாலும் அவர்கள் பற்றித் தெரிந்தும் வாய் மூடி இருக்கவேண்டி இருக்கிறது என்பதுதான் கொடுமை. உயிர் என்பது எல்லோருக்கும் முக்கியமானதுதான். ஆனாலும் எமக்கெல்லாம் உண்மையிலேயே எமது மண்ணின் மேலோ அல்லது  மண்ணின் சுதந்திரத்திலோகூட உண்மையான ஆசை என்பதே இல்லை. மற்றவர் எம்மை உயர்வாய்  எண்ணவேண்டும் என்னும் நோக்கமே தவிர வேறொன்றும் இல்லை. இதுவரை இங்கிருந்துவிட்டு அங்கு போய் எத்தனையோ பேர் வாழ ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு நாம் தலை வணங்க வேண்டும். எமது கோழைத்தனத்தையும் ஒத்துக்கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீங்கள் சுமோ.படிக்க என வந்து தேசியம் கதைப்பவர்களே திரும்பி போக மாட்டேன்கிறார்கள். அசேலம் அடித்தவர்களா திரும்பி போகப் போறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரை விட்டு வெளிக்கிட்டு 19 வருடங்கள்..இருபது வருடங்கள் என்று வைத்துக் கொள்வோமே...எனக்கு மிகவும் பிடித்த இடம் என்றால் யாழ்ப்பாணம் திருநெல்வேலி..அங்கு போகனும்,வாழனும் என்ற ஆர்வம் இருந்தாலும் நடக்காத காரியமும் தான்..எனக்கு என்று சில பிரச்சனைகள் எழும் போது கூட ஊரில் போய் இருந்து விட்டால் ஒரு சோலி சுரட்டும் இல்லை என்று எப்போதும் நினைத்துக் கொள்வதுண்டு..ஆனால் அவை பற்றிக் கதைத்தால் வீட்டில் பிடிக்காத விடையமும் தான்.ஏன் எனில் சில நடை முறைச் சிக்கல்கள் இருப்பதனால் அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலை.

ஊரில் உள்ள உறவுகள் இப்போ அடிக்கடி தொல்லை பேசியில் அழைத்து வர மாட்டீரா,பாக்க விருப்பமாக இருக்கு என்று எல்லாம் கேட்பார்கள்....அவர்கள் கேட்பதில் நியாயமும் இருக்கிறது..இப்போ வாறன்,அப்போ வாறன் என்று எல்லாம் பொய் எல்லாம் சொல்லிக் கொள்வதில்லை.வரமாட்டன் என்றும் சொல்லிக் கொள்வதுமில்லை..மனதில் என் கனவாக ஒன்றே ஒன்று தான் இருக்கிறது என்னால் முடிந்தவரைக்கு படிக்க வசதியற்ற மாணவர்களை படிப்பித்து விட வேண்டும்....கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளுக்குள் சில மாணவர்களோடு பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்ட போது இது யாயினி அக்கா காட்டிய வழி என்று  ஒருவர் எப்போதும் சொல்லுவார்..

 

என் உயிர் உள்ளரை படிக்க வசதியற்ற பிள்ளைகளை கல்வி ரீதியாக தங்கள் கால்களில் நிற்க வைக்க வேண்டும். அந்த ஒரு பணி செய்ய வேண்டும் என்ற ஆவல்..அந்த செயல்பாடு நான் ஊரில் இருந்தால் செய்ய முடியாத ஒன்று..நான் வெளி நாட்டில் இருந்தால் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று.ஆகவே கடந்து சென்ற இருபது வருடங்கள் என்ன இன்னும் இருபது வருடங்கள் தாண்டினாலும் என்னால் செய்ய முடிந்த உதவி செய்து,என் உடல் நிலையும் என்னோடு ஒத்துளைத்தால் பார்க்கலாம்.

 

மற்றப்படி சொல்லப் போனால் ஊரில் போய் நிறையப் பேர் மறுபடியும் வாழ முயற்சிக்கிறார்கள்,வாழ்கிறார்கள். அப்படிப் போனவர்கள் கடந்த சில வருடங்களுக்குள் தங்கள் பிள்ளைகளை மாற்றுக் கலாச்சாரச் வாழ்வோடு கலக்க விடாது ஏதோ ஒரு விதத்தில் வெளி நாடுகளில் வைத்துக் கொண்டு இருக்க விருப்பம் அற்றவர்களாகவும்,எங்கள் நாட்டு பழக்க,வழக்கங்களோடு வளர்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டு போனவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.அவ்வாறு போனவர்களுக்குள் தங்கள் நில,புலன்களை காக்க வேண்டும் என்ற ஆவலிலிருந்து நிறைய விடையங்கள் அடங்கி இருக்கிறது என்பது தான் உண்மை.சரியான பிரச்சனையான கால கட்டத்தில் ஊர் போனவர்கள் என்று யாரும் இருக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்...95,96 வயதை தாண்டியவர்களே ஊர் போகனும் என்று கேட்டு பிரச்சனைப்படுத்தும் போது இளையவர்களுக்கு எப்படி எல்லாம் விருப்பங்கள் இருக்கும்.இப்படி நிறைய எழுதலாம்..எல்லாவற்றையும் எழுதக் கூடிய தலைப்பு இது அல்ல...

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் தலைப்பு உங்களைத் தடுக்கும் என்று தொடங்குகிறது.திரியை தொடங்கினவர் தான் போய் அங்கு வாழ்வதானால் என்ன பிரச்சனைகள் சிக்கல்கள் வரும் என்று அறிய முற்பட்டுருப்பாராயின் அதற்கான விழக்கம் தும்பளையானின் கருத்தில் பதில் உள்ளது.எனினும் மற்றவர்கள் சிலர் தாங்கள் ஏன் அங்கு போகன் போகப்போவதில்லை என்றதற்க்கு சொன்ன காரணங்கள் அவர்கள் நிலையில் இருந்து சரியே.ஒவ்வரு மனிதனுக்கும் ஒவ்வொரு தேவையும் ஆசையும் ரசனையும் உண்டு.அதன் அடிப்படையிலேயே முடிவுகள் அமையும்.மற்றது எனது தனிப்பட்ட நிலை என்ன என்றால்.நான் ஏற்க்கனவே சமாதான காலத்தில் எனது மனைவியையும் பிள்ளைகளும் ஊருக்கு அனுப்பி பிள்ளைகள் அங்குள்ள பாடசாலையில் படிக்கதொடங்கினார்கள்.அப்ப பிள்ளைகளின் வயது அதற்க்கு இடம் கொடுத்தது.பின் நாட்டின் அசாதாரன நிலைமையால் இங்கு மீண்டும் வந்து படிப்பை சில சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்தார்கள்.இப்ப இங்கு இன்னும் 3 வருடங்களில் படிப்பை முடிக்கும் தறுவாயில் உள்ளார்கள்.எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த சொர்க்கத்தில் பல எனது சின்ன சின்ன ஆனால் ஆத்மாவுடன் ஊறிய ஆசைகளை நிறைவேற்றக்கூடிய வசதிகள் இல்லை.பிள்ளைகள் தங்களது சொந்தக்காலில் நிக்க தொடங்கியவுடன் நான் இங்கு இருக்க மாட்டேன்.ஊரில் வாழ எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாது.கற்றும்படி ஒன்றும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.